*உயிர் மீட்கும் மருத்துவம்*
49.மனிதனும் நாகரீகமும்
" நான் ஆன்மா …
நான் உயிர் …
நான் மனிதன் …
நான் தமிழன் …
நான் இந்தியன் …
நான் ஒரு மதத்தை
பின்பற்றுபவன்.! "
உயிர்களும்,ஜடப் பொருள்களும், அனைத்தும் மூலப் பொருளான ஆன்மாவில் இருந்தே முதலில் தோன்றின.! இறுதியில் ஆன்மாவிலேயே அவை முற்று பெறுகின்றன.!தாயக நிலத்தையும் மொழி தந்த ஞானத்தையும் மறந்துவிட்டால்
மனிதன் மீண்டும் குரங்கு.! தேசமும் மதமும் அப்படி குரங்கான மனிதனின் காதில் சொருகியப் பூக்கற்றை மட்டும் தான், இது சிறிது வாசனையை கொடுக்கும் வாழ்வளிக்காது.!
வாழ்வு பெற வேண்டுமெனில் முதலில் குரங்கு மனிதனாக மாற வேண்டும்.! அதற்கு கீழ்கண்ட 100 ஆலோசனைகள் வழிகாட்டும் …
1.பொது இடங்களில் எச்சில்
துப்பாதீர்கள்!
2.கண்ட இடங்களில் சிறுநீர்
கழிக்காதீர்கள்!
3.ஆண், பெண், யாரையும் காரணமின்றி
உற்றுப்பார்க்காதீர்கள்!
4.வாஷ்பேசனில்
மூக்கை சிந்தவோ,
காறித்துப்பவோ செய்யாதீர்கள்.!
<அப்படி செய்யும் சூழல் வந்தால்
நிறைய நீர் ஊற்றி நீங்களே சுத்தம்
செய்து விடுங்கள்!
5.வாஷ்பேசனில்
கை கழுவி வாய்க்
கொப்பளித்ததும் கொஞ்சம்
நீரைவிட்டு அந்த இடம் சுத்தமாக
இருக்க உதவுங்கள்!
6.உணவக கை கழுவும் இடத்தில்
தலை வாராதீர்கள்!
7.கை கழுவியதும்
கையை உதறாதீர்கள்!
8.பிறர் அருகில் அமர்ந்திருக்கும்
போது <அடுத்ததாக> கால்மேல்
கால்போட்டு அமராதீர்கள்.!
9.பொது இடங்களில் உரக்க கத்திப்
பேசாதீர்கள்!
10.அடுத்தவர்
அமைதியை கெடுக்கும்
வகையில் உங்கள் பக்தியையோ,
விழாவையோ கொண்டாடா தீர்கள்!
11.உணவு பறிமாறும்
போது தலையை சொறிவது,
உடலை சொறிவது,
மூக்கை நோண்டுவது போன்ற
செயல்களை செய்யாதீர்கள்!
12.பிறர் பேசிக் கொண்டிருக்கும்
போது இடைமறித்து பேசாதீர்கள்!
13.பொது இடங்களில் தும்மல்
வந்தால்
தலையை தாழ்த்தி தும்முங்கள்,
அடிக்கடி சளி பிடிப்பவர்கள்
கையில் கர்ச்சீப் வைத்துக்
கொள்ளுங்கள்!
14.பொது இடங்களில்
சந்திப்பவர்களிடம் கவனமாகவும்,
நாகரீகமாகவும் பழகுங்கள்!
15.இரயில் பயணத்தின்
போது யாரிடமும் எதுவும்
வாங்கி சாப்பிடுவதும் இல்லை,
கொடுப்பதும்
இல்லை. என்ற பழக்கத்தை
தவறாது கடைபிடியுங்கள்!
16.வரிசையாக செல்ல வேண்டிய
இடத்தில் அதை சரியாக
கடைப்பிடித்து பிறருக்கும்
உதவுங்கள்!
17.எப்பொழுதும்
முகத்தை கடினமாக வைத்துக்
கொள்ளாதீர்கள்!
18.பொது இடங்களில் விபத்து,
ரகளை போன்றவை நடக்கும்
போது அவசர
உதவி நம்பரை அழைத்து
தகவல் கூறுங்கள்!
19.பொது இடங்களில் உங்கள்
பணத்தையும் பொருட்களையும்
பிறர் யூகிக்க முடியாத அளவில்
பத்திரமாக வைத்துக்கொள்
ளுங்கள்!
20.அறிமுக மில்லாத நபர்கள்
சினிமா, பீச்
என்று எங்காவது அழைத்தால்
செல்லாதீர்கள்!
21.பேருந்தில் காலை மிதிப்பது,
தவறுதலாக
மேலே இடிப்பது போன்றவற்றை பெரிதுபடுத்தாதீ
ர்கள், நீங்களும்
பிறரை தொந்தரவு செய்து விடாமல்
கவனமாக இருங்கள்!
22.உங்கள்
பழக்கத்தையோ பணத்தையோ பயன்படுத்தி
பிறருக்கு சேர வேண்டிய
வேலையையும்
உரிமைகளையும் பறிக்காதீர்கள்!
23.உங்கள் சவுகரியத்திற்கான
பிடித்த
ஆடைகளை அணிந்துகொள்ளுங்
கள். ஆனால், பிறரை வலிந்துப்
பார்க்க
தூண்டுமாறு மாடல்களை போன்றோ,
நடிகர்களை போன்றோ
ஆடை அணியாதீர்கள்!
24.பொது நிறுவனங்களுக்கு
செல்லும் வழியை
அடைத்து நின்றுக்
கொண்டோ அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ நண்பர்களோடு
உரையாடிக் கொண்டிருக் காதீர்கள்!
25.கைப்பேசியில்
பேசிக்கொண்டே
இரயில் தண்டவாளத்தையோ
சாலையையோ கடக்காதீர்கள்!
26.நண்பர்கள் ,உறவினர்களை
பொது இடத்தில் பார்த்தால்
பேசுங்கள் அல்லது புன்
முறுவலாவது செய்யுங்கள்!
27.தகுந்த காரணமின்றி பொது இடத்தில் யாரையும்
திட்டவோ,
அடிக்கவோ பாயாதீர்கள்!
28.நிறைய பணம், நகை, ஆடம்பரம்
என்று ஏழ்மையை ஏங்கவைக்குமாறு நடக்காதீர்கள்!
29.வியாபாரத்தையும்
சேவையையும்
நேர்மையாக செய்யுங்கள்!
30.வங்கி, அரசு அலுவலகம்,
மருத்துவமனை போன்ற இடங்களில்
பணிபுரியும் நண்பர்களிடம்
சென்று வெட்டியாக பேசிக்
கொண்டு அமராதீர்கள்! 31.தேவையின்றி யாரிடமும்
கைப்பேசியிலோ
இணையத்திலோ அதிகமாக
உறவாடாதீர்கள்!
32.குளிக்காமல்,
அழுக்கு ஆடைகளுடனோ அல்லது அடர்த்தியான
வாசனைப் பொருட்களை போட்டுக்
கொண்டோ பொது இடங்களில்
உலவாதீர்கள்!
33.பயணத்தில்
முடிந்தவரை இயற்கையான பழம்,
காய்கறி, பழச்சாறு,
இளநீர்,
நொங்கு போன்றவற்றையே அதிகமாக
உண்ணுங்கள்!
அசைவ உணவுகளை முற்றிலும்
தவிருங்கள்!
34.பேருந்தில் பயணம் செய்யும்
போது
அடுத்தவர்களின் இடத்தையும்
ஆக்ரமித்து அமராதீர்கள்!
35.எதிர் இருக்கையில்
கால்களை வைத்துக்
கொண்டு பயணம் செய்யாதீர்கள்!
36.பேருந்தில் பெண்களுக்கான
இருக்கைகள் அவர்களுக்காக
ஒதுக்கப்பட்டது, ஆண்கள்
இருக்கைகள் அனைவருக்கும்
பொதுவானது. ஆகையால் இதன்
பொருட்டு யாரோடும் விவாதம்
செய்யாதீர்கள். பேருந்தில்
பெண்களின்
அருகில் உட்கார வேண்டிய
நிலை வந்தால் அவர்களிடம்
அனுமதி பெற்றே உட்கார
வேண்டும். ஆனால், பேருந்தில்
ஆண்கள் அருகே,
அமர
பெண்களுக்கு அனுமதி வேண்டாம்.!
ஏனெனில் அது அவர்களின் உரிமை.!
இதை சரியாகப் புரிந்து
கொள்ளுங்கள்.! எனினும்
இருபாலரும்
சற்று விட்டுக்கொடுத்து
நடந்துகொள்ளுங்கள்!
37.யாரையும் அதிகமாக
தொட்டுத்தொட்டு பேசாதீர்கள்!
38.குடும்ப
உறுப்பினர்களை பற்றி மற்றவர்களிடம்
முறையிடாதீர்கள்!
39.பிறரை கேலி செய்து,
மனதை நோகடித்து சுகம்
காணாதீர்கள்!
40.தேவையின்றி பிறரிடம் சாதி, மத
விபரங்களை கேட்காதீர்கள்!
41.லஞ்ச ஊழலில் ஈடுபடாதீர்கள்,இயற்கை வளங்களையோ நாட்டின்
சொத்துக்களையோ சுரண்டி வாழாதீர்கள்!
42.கட்சி, சினிமா, கொள்கை, சாதி,
மதங்களுக்கு அடிமையான
மனிதர்களுடன் விவாதம்
செய்யாதீர்கள்!
43. மருத்துவம், ஒழுக்கம்,
கல்வியை பரப்ப
சேவை செய்பவர்களுக்கு
உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.!
44.பிறர்
பொருளை கண்டெடுத்தால் …
உடனே உரியவர் களிடமோ,
அல்லது காவல் துறையினரிட
மோ ஒப்படைத்து விடுங்கள்!
45.காமிரா உள்ள செல்போனை பொது இடத்தில்
பயன்படுத்தும்
போது பிறருக்கு அச்சுறத்தல்
இல்லாமல்
கேமிராவை மூடியே பயன்படுத்து ங்கள்,குறிப்பாக பெண்கள் அருகில்
இருக்கும் போது மிகவும்
கவனமாக இருங்கள்! கைப்பேசியில்
அனுமதியின்றி யாரையும்
படம் எடுக்காதீர்கள்!
அனுமதி கொடுத்தால்
கூட பெண்களின் கவர்ச்சியான
படங்களையோ வீடியோவையோ எடுக்காதீர்கள்!
46.எந்த நண்பர்களிடமும்
தொழில் முறையிலோ,
அந்தரங்கமாகவோ முக்கிய
விசயங்களை கைப்பேசியில்
பேசாதீர்கள்!
47.எதிர் பாலினர்
மற்றும் சில
ஒவ்வாத மனிதர்கள்
நடத்தும்,இரவு பார்ட்டிகளில்
கலந்து கொள்ளாதீர்கள்!
48.எதிர்பாலின
கவர்ச்சியில் யாரையும் பின்
தொடராதீர்கள்!
49.எதிர்
பாலினரோடு பேசும்போது அவர்களின்
முகத்தை நோக்கியே பேசுங்கள்.
அவர்களின் உடல் அங்கங்களில்
பார்வையை செலுத்தாதீர்கள்!
அது ஒரு அத்துமீறல்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!
50.சந்தேகப்படும் நபர்களிடம் மிக
எச்சரிக்கையாக இருங்கள்!
தேவைப்பட்டால் காவல்
துறையிடம் புகார் செய்யுங்கள்!
51.ஆபத்து காலத்தில் எதிரில்
இருப்பவர் யாராக இருந்தாலும்
மனிதாபிமான
அடிப்படையில்
அவருக்கு உதவுங்கள்!
52.பெரியவர்களை மதிப்பதோடு,
பெண்கள், குழந்தைகள்,மாற்
றுத்திறனாளிகளின்
உரிமைகளுக்கும்
மதிப்பளித்து நடந்துகொள்ளுங்கள்!
53.எதிர்
பாலினரோடு பழகும்போது எல்லா
இடத்திலும்,சில
வரையறைகளை கடைபிடியுங்கள்,
வீண் யூகங்களுக்கு இடம்
தருமாறு நடந்துகொள்ளாதீர்கள்!
54.நாட்டின்
சட்டங்களை மதித்து நடவுங்கள்,
காவல் துறையினரின்
சரியான விசாரனைகளுக்கு
முறையான பதிலை கூறுங்கள்!
55.ஆண், பெண் அந்தரங்க
பகுதிகளை பொருளாக்கி பேசாதீர்கள்!
56.சாப்பிடும்
போது வலது ஓரத்தில்
இருந்து மெதுவாக
சாப்பிடுங்கள்,
நீங்கள் சாப்பிட்ட பகுதி சுத்தமாக இருக்க உதவுங்கள், சாப்பிட்டதும் பிறர் திரும்பும் அளவிற்கு சத்தமாக ஏப்பம்
விடாதீர்கள்.!
57.பிறரால் எதிர்பாராமல் நடக்கும்
இழப்புகளுக்காக யாரையும்
கடிந்துகொள்ளாதீர்கள்!
58.அசைவ உணவு, மற்றும்
எண்ணெய் பிசுக்குள்ள
உணவை உட்கொண்டதும்
கைகளை குளியல்
பொடி அல்லது சோப்புப்
போட்டு கழுவிவிடுங்கள்!
59.எந்தப் பொருளையும்
பணத்தையும், ஏன்
ஒருதுளி நீரைக்கூட வீண் விரயம்
செய்யாதீர்கள்!
60.பொது இடத்திலுள்ள
கழிப்பறைகளை கொஞ்சம்
வேகமாக
பயன்படுத்தி
பிறருக்கும் உதவுங்கள்! 61.கழிப்பறை சென்று முடிந்ததும்
கழிவு மேலே
தெரியாதவாறு நீர் தெரியும்
படி,சுத்தமாக்கி வெளியேறுங்கள்,
சிறுநீர் கழித்தாலும் நிறைய
நீரை ஊற்றிவிட்டே வெளியேறுங்கள்!
62. பொது கழிப்பறை சென்றுவந்ததும்
சோப்பு, மண் அல்லது
சுவற்றில் உள்ள
சுண்ணாம்பை யாவது
தேய்த்து கையை நன்றாக
கழுவிவிடுங்கள்!
63. யாருடைய சாதியையும்
தொழிலையும் இழிவாக
பேசாதீர்கள்!
64.பொது வெளியில் பணத்தை சிதற விட்டோ,
எச்சிலை உமிழ்ந்தோ,
திட்டியோ யாரேனும் உங்கள்
கவனத்தை கவர்ந்து திசைத்திருப்ப
முயன்றால் காணாதது போல்
சென்றுவிடுங்கள்!
65.எப்பொழுதும் அவசர
உதவி எண்களை < 112, 108 >
அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.!
66. அவசர உதவியை நாடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யும் போது
போது முதலில் சம்பவம் நடக்கும்
இடத்தின்
முகவரி மற்றும் லேண்ட்
மார்க்கை குறிப்பிட்ட பிறகே
நடக்கும் நிகழ்வை விளக்க
வேண்டும்!
67.வியாபாரத் திலும்
.சேவையிலும் எளியவர்கள் கூட
சுலபமாக புரிந்து கொள்ளும்
படிதெளிவாக பதில் கூறுங்கள்!
68.பணி செய்யும் இடங்களில்
சொந்தக் கதைகளை பேசிக்கொண்டோ அல்லது அடிக்கடி கைப்பேசியில்
பேசிக்கொண்டோ இருக்காதீர்கள்!
69.வாகனம் ஓட்டும்
போது பாதுகாப்பு பெல்ட்,ஹெல்மட் போன்றவற்றை அணிந்து கொள்ளுங்கள்,பிறரை, அச்சுறுத்தும்
படி வாகனம் ஓட்டாதீர்கள்,
உங்கள் வாகனத்தை அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலோ அல்லது பிறருக்கு இடையூறு இல்லாத இடத்திலோ மட்டும் நிறுத்தி வையுங்கள்.!
70.உங்களுக்கு தெரியாத
விபரங்களை, பிறரிடம்
கேட்கும் போது அதை,தொகுத்து சுலபமாக புரிந்து,
பதிலளிக்குமாறு கேள்விகளை கேளுங்கள்!
71.லுங்கி கட்டியவன் பாமரன்,
தழும்பு இருப்பவன் ரௌடி,
கோட்டு சூட்டு போட்டவர்கள்
மேதைகள், ஆங்கிலம் பேசினால்
ஆபிசர் என்று எண்ணாதீர்கள்!
72.யாருடைய பேச்சையும் நம்பி
பெரிய காரியங்களில்
ஈடுபடாதீர்கள்!
73. உங்களுக்கு சரியாக
அனுபவமில்லாத விசயங்களில்
பிறருக்கு
ஆலோசனைகளை கூறாதீர்கள்!
74.மனஇச்சையால், ஆசையால் உந்தப்பட்டு எந்த
முடிவுகளையும் எடுக்காதீர்கள்!
75. பொது இடங்கள் மற்றும் உறவினர்
இல்லங்களில் புகைப்பிடிக்கவோ,
பான்
மசாலாக்களை சுவைக்கவோ,
மது அருந்தவோ செய்யாதீர்கள்!
76.குப்பை களையும்,
கழிவு நீரையும் சாலையிலோ,
ஆறுகளிலோ,
பாதையோரங்களிலோ கொட்டாமல்
அதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தில்
மட்டுமே கொட்டுங்கள்!
77.எவ்வளவு அவசரமாக
இருந்தாலும் இரயிலிலும்
பேருந்திலும் படிக்கட்டில்
தொங்கியவாறு பயணம்
செய்யாதீர்கள்!
78.பொது நலனுக்கும் மனித
உரிமைகளுக்கும் எதிரான எந்த
செயல்களிலும் பொது இடங்களில்
மட்டுமல்ல எங்கேயும்
ஈடுபடாதீர்கள்!
79.நேரந் தவறாமையை எப்பொழுதும்
சரியாக கடைபிடியுங்கள்!
80.பயணங்களுக்கு தயாராகும்
போது நீர், எளிய
இயற்கை உணவுகளை முதலிலேயே தயார்
செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஊர்தி புறப்படும்
நேரத்திற்கு,ஒரு மணி நேரம்
முன்பாகவே
வண்டி கிளம்பும்
இடத்திற்கு வந்துவிடுங்கள்!
81.நமது தாய்நாடும்,
தாய்மொழியுமே நமது அடையாளத் தையும்,
வளர்ச்சியையும்
நாகரீகத்தையும், வாழ்வியல்
முறைகளையும்
பாதுகாக்கிறது, என்பதை எப்பொழுதும்
நினைவில் கொள்ளுங்கள்!
82.பிறரை குற்றம் சாட்டும் சூழல்
வந்தால் தெளிவான
ஆதாரங்களுடன் மட்டுமே குற்றம்
சாட்டுங்கள்!
83.புதியவர் களுடன்
தொலைபேசியில்தொடர்பு கொள்ளும் போது முகமன், உங்கள் பெயர் அல்லது உங்கள் நிறுவனப் பெயரை கூறிவிட்டே உரையாட
ஆரம்பியுங்கள்!
84.நண்பர்கள், உறவினர்கள்,
புதியவர்களை சந்திக்கும்
போது வணக்கம்
அல்லது வாழ்த்துகளை பறிமாறிக்
கொண்டே பேச ஆரம்பியுங்கள்!
85.ஆலயம், கல்வி நிலையம்,
நூலகம், மருத்துவ மனைகளில்
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க
விதிகளை தவறாது கடைபிடியுங்கள்!
86.பொது இடங்களில் உள்ள
இருக்கையில் உங்கள்
உடமைகளை வைக்காதீர்கள்.
அப்படியே யாரேனும் தங்கள்
பொருளை வைத்திருந்தால்
அவர்களின்
அனுமதி பெற்றே அதை எடுக்கவோ,
தள்ளி வைக்கவோ வேண்டும்!
87.பேருந்து இருக்கை ஒதுக்கீடு போலவே வேலை வாய்ப்பு,
அரசியல் அதிகாரங்களில்
பெண்களுக்கு இட
ஒதுக்கீடு வழங்கும்போது,
எதிர்காலத்தில் ஆண்கள் தங்கள்
வாய்ப்புகளை இழக்க
வேண்டி வரும். ஆகையால்
இதுபோன்ற விசயத்தில்
யாருக்கும் பாதிப்பு வராவண்ணம்
செயல்படுவது மிக அவசியம்!
<ஏனெனில் பெண்கள்
தங்களுக்கு ஒதுக்கிய
இடத்திற்கு மட்டுமல்ல
பொது இடத்திற்கும்
போட்டியிட முடியும்>
88.ஆணுக்கு பெண் சரிநிகர்
சமானம் என்பது உரிமைகள்
விசயத்தில் மட்டும் தான். உடல்
மற்றும் மனரீதியிலான
விசயங்களில்
இருவருக்கும் பெரிய
வேறுபாடுகள் உண்டு.
இதை உணர்ந்து கொள்ளுங்கள்!
89. தொடர்ந்து மாணவ,
மாணவிகளை யாரேனும் பின்
தொடர்ந்தால் அவர்களைப் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ புகார்
தெரிவிக்க வேண்டும்!
90.எந்த சேவையையும் பெற்றபின்
நன்றி என்று
கூறியே விடைபெறுங்கள்!
வலைத்தள நாகரீகங்கள்
---------------------------
91.சமூக வலைத் தளங்களில்
குறிப்பிட்ட குறைந்த நேரம்
மட்டுமே உலவுங்கள்!
92.சமூக வலைத்தளங்களில் நாம்
பதியும் கருத்து, மற்றும்
படங்களை
பிறர் பயன்படுத்தும் வாய்ப்புகள்
மிக அதிகம். என்பதால் அந்தரங்கமான
பதிவுகளையோ,
படங்களையோ
வலைத் தளங்களில் பதியாதீர்கள்!
93.சமூக வலைத்தளங் களில் பலர்
போலியாகவும், பலர் தங்கள்
நிறுவனங் களுக்காகவும்
இயங்குகிறார்கள்.
என்பதை மறக்காதீர்கள்!
94.காணவில்லை, மரண அறிவிப்பு,
மதக்கலவரம் போன்ற தகவல்கள்
வரும்போது அதை பலமுறை உறுதிசெய்த
பின்னால் பதிவு செய்த நாள்,தேதி,
கைப்பேசி எண் போன்றவை இருந்தால் மட்டுமே பகிருங்கள்!
ஏனெனில் இதுபோன்ற
செய்திகளை பரப்பி உலகில்
பதட்டத்தை உருவாக்கமும்,
பிறரை அவமானப் படுத்தவும்
வலைத்தளங்களில் ஒரு பெரிய
கூட்டமே இயங்கி வருகிறது!
95.வலைத் தளங்களில்
பதிவிடும்போது பிறரின் பொது வெளிப்பாடு மற்றும் அரசியல் நிலைகளையே விமர்சனம்
செய்யுங்கள்!
தனிப்பட்ட முறையிலான
தாக்குதல்களை தொடுக்கவோ,
அதுபோன்ற
பதிவுகளை விரும்பவோ,
பகிரவோ செய்யாதீர்கள். ஏனெனில்
அரசியல், மதரீதியிலான
பூசல்களை உருவாக்கவென்றே பல
நிறுவனங்கள்
இங்கு செயல்படுகிறது!
96.பிறர் அனுமதியின்றி குரூப்
சாட்டில் இணைக்கவோ, டாக்
செய்யவோ செய்யாதீர்கள்.!
எதிர்பாலின கவர்ச்சியில்
யாரையும் பின்தொடரவோ
எந்த முக்கிய விபரங்களையும்
பறிமாறிக்
கொள்ளவோ செய்யாதீர்கள்!
97.சமூக வலைத்தளங்களில் உலவும்
இலவச ரீசார்ஜ் ஆஃபர், மொபைல்
போன் ஆஃபர்
போன்றவை 99% போலியானவை.
உங்கள் கம்யூட்டர்,
கைப்பேசியிலுள்ள நண்பர்களின்
லிஸ்ட் மற்றும் உங்களிடம் உள்ள
முக்கியத் தகவல்களை டவுன்லோட்
செய்துகொள்ளவே இதுபோன்ற
ஆஃபர்கள் வழங்கப்படுகிறது!
98.முகநூலில் புதிய நண்பர்களை இணைக்கும்
போது அவர்களின்
பதிவுகளை ஆய்வு செய்தே இணையுங்கள்!
99.பொருந்தாத
நண்பர்களை விரைந்து நீக்கிவிடுங்கள்.!
100.ஒவ்வெரு வாட்ஸ் அப் குழுவிற்கும் ஒருநோக்கம் இருக்கும்,குழுவின் விதிமுறைகளை பின்பற்றுங்கள்.!
101.வலைத்தளங்களில் வரும்
மருத்துக் குறிப்புகளில்
பக்கவிளைவுகள் இல்லாத, எளிய
வழிமுறைகளை மட்டுமே
செய்துபாருங்கள்!
102.இணையத்தில் உணவுப் பொருட்கள்,மூலிகைப் பொருட்களை ஆர்டர்
செய்து வாங்கிப் பயன்படுத்தும்
போது குறிப்பிட்ட
உணவு,மூலிகை போன்றவை சரியாக
வியாதியை தீர்க்கும்
தன்மையுடையதா.! என்று; இணையத்தில்
சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
வணக்கம் நட்பாளர்களே!
இதுவரை இந்த வழிகாட்டுதல்
பதிவை படித்த உங்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்.! இந்த
வழிமுறைகளை முறையாகக்
கடைப்பிடித்தால்
அது உங்களுக்கு
மட்டுமல்லாமல்
உங்கள் உறவினர்கள்,
நட்பாளர்கள், எதிர்
கால சந்ததியினர்
அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.!
என்பதோடு நாம் நிறைநிலை அடையவும் இது உதவும்.! இந்த குறிப்புகளில் உள்ளவற்றில்
80 முதல் 100 %
வழிகாட்டுதல் வரை, ஏற்கனவே கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் லேசாக தாங்களுக்கு தங்களே தட்டிக் கொடுத்து கொள்ளுங்கள்.! ஏனெனில்,நாம் மனிதனாக மாறிவருகிறோம்.!
-ஏகப்பிரியன் D.Y.T
தொடரும் …
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment