I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: July 2017

Wednesday, 26 July 2017

நேதிகிரியை

Hey check out this video I made with Quik: https://quik.gopro.com/v/nfxFnGzUV8/

Tuesday, 25 July 2017

ஜலதோசம் உடனடி நிவாரணம்

*ஒரு அதிசய மருத்துவம்*

ஒருகால் தேக்கரண்டி மஞ்சள் தூளில் பத்தில் ஒருபங்கு சுண்ணாம்பு சேர்த்து சிறிது நீர்விட்டு திருநீர் குழைப்பது போல் குழைத்து
நெற்றியில் மூன்றுவிரலால் பட்டைப்போடுவது போல் பூசிவிட்டு படுத்து ஒருமணிநேரம்
தூங்கி எழுந்தால்
ஜலதோசம் காணாமல் போகும்
அதிசயம் நடைபெறும்.!

*நான் செய்து பயனடைந்துள்ளேன்.!*

aumherbals.blogspot.in

Monday, 24 July 2017

உடலின் தானியங்கி இயக்கம்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

35.உடலின் அனிச்சை செயல்பாடுகள்

உடலை உயிர் இயக்குவதும்
இதயமும் நுரையீரலும்
சுருங்கி விரிவதும்
அழகை வியந்துப்பார்ப்பதும்
கழிவை வெளியேற்றுவதும்
திடீர் சோர்வும் எழுச்சியும் உறக்கமும்
உடலின் அனிச்சை மயக்கம்
இதன்றி நடக்காது உயிரியக்கம்.!

சுவாசிப்பது முதல் உயிர் வெளியேறுவது வரை உடலின் பல்வேறு செயல்களை நமது உடல் நமது
அனுமதியில்லாமல் தானே, செய்துவருகிறது.! என்பது அனைவருக்கும் தெரியும்.! ஒருவேளை இந்தப் பணிகளும்
வேலை செய்வது,ஓடுவது,வரைவது,எழுதுவது போன்று நமது கட்டுப்பாட்டில் இருந்தால் என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.!
அப்படி உடலில் உள்ள  அனைத்து இயக்கமுமே உயிர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால்
உலகில் மரணமே ஏற்படாது.!
மூளையை நிறுத்தி இதயத்திற்கு ஓய்வு கொடுத்து சிலநாட்கள்
வைத்துவிட்டு பிறகு மீண்டும் இயங்க செய்யலாம்.!
உடலின் ஏதேனும் ஒருபகுதி
செயலிழந்து விட்டால் கிழிந்த மிதிவண்டியின் இருக்கையை மாற்றுவதைப்போல தூக்கி
கடாசிவிட்டு அடுத்த உறுப்பை
வாங்கி நாமே மாற்றிக்கொள்ளலாம்.!
பெருநோய்கள்,மனஅழுத்தம் போன்ற எதுவும் மனித உயிர்களை
வதைக்காது.! மனிதர்கள் விரும்பும் நிலையில் மகிழ்ச்சியாக, சுகமாக வாழமுடியும்.!
உண்மையில் யோகாவின் நோக்கம்
அதுதான் " மரணமில்லாப் பெருவாழ்வு "
குடலின் இயக்கம் அனிச்சை செயலாய் இருக்கிறது. ஆனால், யோகாவில் உடலை என்றும் இளமையாய் வைக்க ஆசனங்கள் இருப்பதைப் போலவே குடலை இயக்க அக்னிசாராக் கிரியை,
நுரையீரலின் இயக்கத்தை நிறுத்த பிராணாயாமம், இதயத்தை நிறுத்த பிராணசம்யமா,எண்ணங்களை நிறுத்த தியானம்,செயல்களை நிறுத்த சமாதி என்று யோகநிலையில் உள்ள பல்வேறு படித்தரங்கள் நம்மை நித்ய நிலைக்கு மிக அருகில் அழைத்து செல்கிறது.!
இதன் காரணமாகதான் பாபா ஏழாயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்,வள்ளலார் ஒளி உடலாக இன்றும்  வாழ்ந்துவருகிறார், விவேகானந்தருடன் முந்தாநாள் இரவில் பேசிக்கொண்டிருந்தேன்,கடவுள்தான் எனக்கு வேதத்தை கற்பித்தார். என்றெல்லாம்;நாம் கேள்விபடும் அனைத்தின் உள்ளும் இறவாநிலை/ இறைநிலை - நிலைத்தவாழ்வு.! என்ற இயற்கையை தாண்டிய பேராசை வெளிப்படுகிறது.!
இன்னமும் இமய மலையில் தங்கள் இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டு பல ரிசிகள் வாழ்வதாக கூறுகிறார்கள்.!
சென்னையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ணமாச்சார்யா என்ற யோகி ஒரு முறை பல மருத்துவர்களின் முன்னிலையில் தன் இதயத்துடிப்பை சில விநாடிகள் முற்றிலும் நிறுத்திகாட்டியதாக கூறுகிறார்கள்.!
ஆனால், அவர் தனது பிரதான சீடர்களுக்கோ அல்லது தனது மகன் தேசிகாச்சார்யாவிற்கோ அதை கற்றுகொடுக்கவில்லை.! அதற்கு காரணம் இது ஆபத்தானப் பயிற்சி கொஞ்சம் பிசகினாலும் மரணம் நிச்சயம் என்று கூறியதாக அவரின் மகன் தேசிகாச்சார் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.! இதயத்தை நிறுத்தும் ஆற்றல் பெற்ற தனது தந்தை இறுதியில் தனது மனைவியின் பிரிவு தாளாமல் 106 வயதில் உணவை முற்றிலும் நிறுத்தி உயிர் துறந்ததாக தேசிகாச்சார் கூறியுள்ளார்.! எப்படி இருந்தாலும் கிருஷ்ணமாச்சார்யா உயிரை நீட்டும் ஒரு மந்திரத்தை தனது மகனிற்கு கற்றுக்கொடுத்துள்ளார் அந்த மந்திரத்தை வைத்துதான் கலைஞர் கருணாநிதி 96 அகவை கடந்து இன்னும் உயிர்வாழ்வதாக  நான் நினைக்கிறேன்.!
ஆமாம் கலைஞரின் யோகாகுரு  தேசிகாச்சார்தான்.!
<ச்சே, சசிகலா கொஞ்சம் தயவு காட்டியிருந்தா … ஜெயாம்மா கூட தேசிகாச்சாரிடம் யோகமெனும் உயிர் நீட்டும் மந்திரம் கற்று இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருப்பாங்க..
தமிழ்நாடும் கொஞ்சம் ஆசுவாசமா இருந்திருக்கும்.>
சரி,அரசியல் எதற்கு? நீயும் யோகா ஆசிரியர்தானே, உனக்குத் தெரிஞ்சா அந்த மந்திரத்தை  எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுய்யானு.!
கேட்டீங்கனா; அட,அததானே 35
பதிவுகளாக எழுதியிருக்கேன்.!
முடிஞ்சா படித்து பயின்று பயனடையுங்கள்.!
இந்தப் பதிவில உடல் தானியங்கி
தன்மையை மீறுவதால் உடலுக்கு ஏற்படும்
சில சிக்கல்களை மட்டும் பார்ப்போம்.!
முதலில் தூக்கம் இன்று உங்களுக்கு இரவு 9 மணிக்கு தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் வீட்டிலிருந்தால் உடனே தூங்க போய்விடுங்கள், அதிகாலை 5 மணிக்கு விழிப்பு வந்ததும் எழுந்துவிடுங்கள்.!
அதைவிடுத்து 6 மணிக்கு அலாரம் அடிக்கட்டும் எழலாம் என்று காத்திருக்காதீர். அதுபோலவே அலாரம் வைத்து விட்டோமே என்று பாதி தூக்கத்தில் எழுந்து அவசர அவரசமாக பணிக்கு கிளம்பாதீர்.!
அப்படி தூக்க இயல்பு நிலையை மீறினால்
உங்களுக்கு வருவது நடுக்குவாதம்,தூக்கமின்மை,எரிச்சல் போன்றவை.!
காலையில் எழுந்ததும் நீர் குடித்து காலை கடனை இயல்பாக கழிக்க வேண்டும். வரவில்லையெனில் வரும்போது போய்கொள்ளலாம் அதைவிடுத்து கழிவறையிலேயே முக்கிக் கொண்டே இருந்தால் மூலவியாதியும், வரும்போது போகாமல் அடக்கிவைத்தால்
மலச்சிக்கலும் தோல்நோயும் வரலாம்.!
பல்தேய்க்க வேப்பம் குச்சி,மூலிகை பல்பொடி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இரசாயண களிம்புகளை வைத்து தேய்ப்பதால்
சுவைமங்கல்,நோயெதிர்ப்பு ஆற்றல் குறைதல்,ஈறுகளின் மூலம் நரம்புகளில் இரசாயணம் சேருதல்,இளமையிலேயே பல் சொத்தையாதல் போன்றவை ஏற்படும்.!
குளிப்பதற்கு மூலிகை பொடி, பயத்தமாவு கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக சோப்பு,சேம்பு போன்றவற்றை போட்டு குளித்தால் வியர்வை குறைதல், தோல்நோய் போன்றவை ஏற்படும்.!
அதுபோல் வெளியில் போகும்போது வெறுமனே இயல்பான முகத்தோடு போக வேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டுக் கம்பெனி சூரியனை காட்டி மிரட்டி விற்ற மேல்ப்பூச்சு களிம்புகளைப் போட்டு போனால் எலும்பு அடர்த்திக்குறைவு,தோல்நோய் போன்றவை நிச்சயம்.!
காலை எழுந்ததும் பழைய நீராகாரம் அல்லது எலுமிச்சை,தேன் கலந்த நீரைப் பருக வேண்டும். காப்பி,தேனீர் குடித்தால் வருவது இரத்தசோகை,சத்துக்குறைபாடு போன்றவை.!
காலையில் பிராணாயாமம் செய்யும் போது மூச்சை எவ்வளவு நேரம் இயல்பாக உள் நிறுத்த முடியுமோ அதைவிட ஒரிரு விநாடிகள் அதிகமாக உள் நிறுத்தலாம் மாறாக 20 - 30 விநாடிகள் அதிகமாக உள்நிறுத்தி பயிற்சி செய்வதால் இழுப்பு, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும்.!
காலை உணவு அறுசுவையும் நிறைந்த நமது தட்ப வெட்பத்திற்கு ஏற்ற கேழ்வரகு,சோளம்,தினை,அரிசி,உளுந்து,காய்கறி  போன்றவற்றில் செய்த உணவாக இருக்க வேண்டும்.மாறாக விளம்பரத்தைப் பார்த்து நூடுல்ஸ்,பிஸ்கெட், பீட்சா,சாக்லேட் என்று இருந்தால்
அஜீரணத்தொல்லை முதல் குடல்புற்றுவரை வர வாய்ப்புள்ளது.!சிறுநீரை அடிக்கடி அடக்கினால் வருவது சிறுநீரககல்.!
சளி,ஜலதோசம்,தலைவலி,ஏப்பம்,
தூக்கமின்மை,காய்ச்சல்,மாதவிடாய் நிறுத்த என்று அடிக்கடி ஆங்கில மாத்திரையை எடுப்பதால் வருவது
சிறுநீரக செயலிழப்பு,கல்லீரல் வீக்கம்,பலவிதமான புற்றுநோய்கள்.!
இது போலவே ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,செயற்கை சத்துப்பொருட்கள், பாக்கெட் உணவுகள்,பாட்டில்குளிர்பானங்கள்,பாடிமாஸ் பவுடர்கள், விட்டமின் மாத்திரைகளை வழக்கமாக பயன்படுத்துவோருக்கும் சிறுநீரகம் காலியாவது உறுதி.!
சென்ற மாதம் ஒரு முகநூல் நண்பரொருவர் தனது 27 வயது மகனை நம்மிடம் அழைத்துவந்திருந்தார்… வந்தது முதலே அந்தப்பையன் பேய்ப்பிடித்ததாக நம்பப்படுபவர்கள் செய்வதைப்போல மூச்சை வேகமாக இழுத்து விட்டுக் கொண்டே இருந்தார்.!
என்னடா இது,ஒருவேளை சுடுகாட்டு சித்தனைப் பார்க்க வேண்டியவர்கள் இங்கு வந்துவிட்டார்களோ?
என்று நான் மிரண்டு  "என்னங்கய்யா  இழுப்புனு சொன்னீங்க, இது வேற மாதிரியில்லா இருக்கு?

" இழுப்பு தாங்க, மதுரைல ஒருவரிடம் வாசியோகம் படித்துவந்தார், சொவ்வாக்கிழமைவீட்டில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது முதல் இப்படி ஆகிவிட்டார். இது சரியாக எதேனும் வழி உள்ளதா,
மருத்துவமனைக்கு சென்று இரண்டு முறை ஊசியும் போட்டோம். ஊசி போட்டவுடன் மூச்சு மட்டுமல்லாது உடல் முழுவதும் மரத்துப்போனது போல் ஆகி விடுகிறான்.
அதனால் , பிறகு போடுவதில்லை "
என்ற பெரியவரும், அவரோடு வந்த சில உறவினர்களும் நான் எதாவது மாயம் செய்வேனா என்று பார்த்துக் கொண்டிருந்தனர் …
சரியாகிவிடும் என்றபடி  அவரை குப்புற கொஞ்ச நேரம் மக்கராசனத்தில் படுக்க வைத்தேன்.!
உச்சந்தலை வர்ம பகுதியை சிறிது
நேரம்  இடம் வலம் இடமாக தூண்டிவிட்டேன்.! கொஞ்சம் ஆசுவாசமானது போல் தோன்றியது.!
அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த போது …
எனது குருநாதர்களில் ஒருவரான புலவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா எப்பொழுதோ கூறிய
"ஒரு இயக்கத்தின் வேகத்தை குறைக்க அதன் எதிர் இயக்கத்தை தூண்ட வேண்டும் "
என்ற சூத்திரம் நினைவில் வந்தது.!
உடனே அறையில் இருந்த நீரில் இந்துப்போட்டு கலக்கி சுமார் ஒரு ஐந்து டம்ளர் நீரை  குடிக்க வைப்போம். என்று; கொடுத்தேன். இரண்டு டம்ளர் நீரை குடிக்கும் போதே  வ்வே வ்வேனு … சிலமுறை வாந்தியெடுத்தார் பிறகு வலுகட்டாயமாக அவ்வளவு நீரையும் குடிக்க வைத்தேன் …
அவ்வளவுதான் நான்கைந்து முறை வாந்தி பிறகு இரண்டு மூன்று முறை பேதியானது.!
பிறகு பனங்கற்கண்டு, எலுமிச்சை ,உப்பு கலந்த நீரை குடிக்க
கொடுத்து படுக்க வைத்தேன்.! குருவருளால் இழுப்பு முற்றிலும் நின்று விட்டது.!
பெரியவரும் அவருடன் வந்தவர்களும் இது எப்படிங்க நின்னுடுச்சி, ஆச்சரியமா இருக்கு.! பிறகு இழுப்பு வருமா, இனி வாசியோகம் பண்ணலாமா? என்றெல்லாம்;பல, கேள்விகளை கேட்டனர்.!
இன்னும் ஒரு இரண்டு மாதத்திற்கு எந்தப் பயிற்சியும் செய்யவேண்டாம்.!
மீண்டும் இழுப்பு வந்தால் மட்டும்  தூதுவளையை மை போல் அரைத்து சுண்டைக்காயளவு  காலை,மாலை அரைடம்ளர் பசும்பாலில் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.!
வாசியோகம் மட்டுமல்ல எல்லா யோகமும் பண்ணலாம்.!
ஆனால்,என்ன யோகம் செய்வதாய் இருந்தாலும் இயற்கையின் இயல்போடு இயைந்து மிக கவனமாக பயிற்சி செய்வது மிக முக்கியம்.!
அல்லது இது போல் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.!
கவனம்.! கவனம்.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

100% 🌿இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🍃
AUM HERBALS
Mobile & Whatsapp
9629368389

amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

Friday, 21 July 2017

சிறுநீரக கல் கறையும்

*சிறுநீரக கற்கள் கரைய*

கிட்னி கல் 12 mm வரை இருந்தால்
சிருங்கி பற்பம், நண்டுக்கல் பற்பம்,பவளபற்பம் மூன்றையும் தலா மூன்று சிட்டிகை எடுத்து அரை டம்ளர் பசுமோரில் காலை,மாலை உணவிற்கு பின் குடித்துவர 3 நாளில் கரையும்.!

aumherbals.blogspot.in

Wednesday, 19 July 2017

இதயம் காப்போம்

*இயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்*

இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை வைத்தியத்தைக் காண்போம் இங்கே...

* தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். நெல்லிக்காயில் அரிநெல்லி வேண்டாம். நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று ஊருக்கு ஊர் பல பெயர்களில் சொல்லக்கூடிய, அளவில் பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

* பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும். கல்லீரல், கணையத்தைப் பாதுகாக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது இந்த நெல்லிக்காய். ஏன்... எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும் என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் முறையைப் பொறுத்துதான் நோய் குணமாகும்.

* இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்.

* நம் வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாத சமையலே கிடையாது. ஆனாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். அதிலும் முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.

* அதேபோல் பூண்டும் ரத்த அழுத்தத்தை சரிபண்ணக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!

-இணையப்பகிர்வு

Monday, 17 July 2017

நிற்பதுவே நடப்பதுவே

*உயிர் மீட்கும் மருத்துவம்*

34.நிலைக்குமா நிலையாமைகள்?

" குழந்தையாம் பருவம் கடந்து
மழலையாம் பருவம் பெற்றோம்.!
மழலையாம் பருவம் கடந்து
வாலிபமாம் பருவம் பெற்றோம்.!
வாலிபமாம் பருவம் கடந்து
இளமையாம் பருவம் பெற்றோம்.!
இளமையாம் பருவம் கடந்து
முதுமையாய் முற்றுபெறுவோம்.!
வாழ்வென தோன்றும் பாதை …
மரணத்தில் முடியும் கீதை.!
சாதியின் சடங்கு
மாயை …
மதத்தின் விலங்கு மாயை …
அன்னையின் அன்பு மாயை …
அறிந்த நல்கல்வி மாயை …
காதலின் இன்பம் மாயை …
பதவியின் சுகமும் மாயை …
பண்ணிய தியாகம் மாயை …
தேடிய செல்வம் மாயை …
வாடிய நொடியும் மாயை  …
பாடிய கடவுளும் மாயை  …!
இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் போவது  மாயை.!
ஆயின்,
இருக்கின்ற பூமி தன்னை நலமாக  வாழச்செய்து செய்து
இயற்கையை காத்தல்
இன்பம்.!
இளையோருக்கு அளித்தல் இன்பம்.!
அதுவே நிரந்தரம்
உயிர் வாழும் வரம்தரும்.!
மரமில்லா பூமித்துண்டு
- மரணத்தின் இறுதிச்சங்கு.!
தூய நீரில்லா பூலோகம் -
பகை கொண்ட எமலோகம்.!
காற்றை விசமாக்கும்
விஞ்ஞான வளர்ச்சி
- உலகை அழிக்கும்
பலமான முயற்சி.!
அமுதூறும் விளைநிலத்தில் அமிலம் எடுக்கும் திட்டம்
-தாயை விற்று பாலை வாங்குவதைப் போன்ற மட்டம்.!
சுயநல கத்திக்கொண்டு … இயற்கையை
வெட்டிக்கொன்று  …
மாயையில் மயங்கித்
திரியும் மானிடா,
திடங்கொள்ளு.!
தீமையை விட்டுத்தள்ளு …!
இருக்கின்ற பூமிதன்னை இதமாக வாழச்செய்து  … இயற்கையை
காத்தல்
செய்வோம் …!
இளையோருக்கு ஈந்து செல்வோம்.!
அதுவே நிரந்தரம்  …
உயிர் வாழ்வு நிலைபெறும்.!

-ஏகப்பிரியன் DYT

எதைப்பற்றியோ எழுத முனைந்தேன். ஆனால்,அதில் தற்கால  அரசியல் வியாதிகளின் பிண அரசியல் நாற்றம் வயிற்றைப் புரட்டியதால் இந்த அளவில்  இதை முடித்துக் கொண்டேன்.!

நலம் பெருகட்டும்  …

தொடரும் …

100%🌿 இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு 
AUM HERBALS
Mobile & whatsapp
9629368389

amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

Youtube - amyogatrust
yoga for all

Saturday, 15 July 2017

ஆரோக்கிய பிராணாயாமம்

திருமூலர்  அருளிய ஒரு அற்புத
பிராணாயாமம்

🚩நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இடது நாசியில் மூன்று எண்ணிக்கை காற்றை இழுத்து 12 எண்ணிக்கைகள் இரண்டு மூக்கையும் மூடி உள்நிறுத்தவும் அந்த நேரத்தில் ஆசனவாயையும் இறுக்கிக் கொள்ளவேண்டும்
பிறகு  ஆசனவாயை விட்டு ஆறு எண்ணிக்கைகள் வலது நாசியில் காற்றை வெளிவிடவேண்டும். <3,12,6 >இது ஒரு சுற்று இதுபோல் பத்து சுற்றுகள் செய்ய வேண்டும். அதாவது இடதில் இழுத்து , உள்நிறுத்தி , வலதில் வெளிவிடுவது ஒருசுற்று.! <வலது நாசியில் மூச்சை வெளிவிடலாம். ஆனால், வலதுநாசியில் இழுக்கலாகாது.!
அதுபோல் இடதுநாசியில் இழுக்கலாம் ஆனால், வெளிவிடக்கூடாது>
அடுத்து  கையை மாற்றி இடது நாசியில் 3 எண்ணிக்கை இழுத்து
வலதுநாசியில் 6 எண்ணிக்கை வெளியேவிட்டுவிட்டு பிறகு இரண்டு மூக்கு மற்றும் ஆசனவாயை இறுக்கி 12 எண்ணிக்கைகள் காத்திருக்கவும். இது ஒருசுற்று. பிறகு மீண்டும் 3,6,12 என்ற விதத்தில் இதுபோல் 5 சுற்றுகள் செய்து பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும்.!
நாளைக்கு காலை, மாலை என இரண்டுவேளை செய்யலாம்.!

🚺பயன்கள்

1.உடலில் உள்ள கெட்டக்காற்றுகள் வேகமாக வெளியேறும்
2.நுரையீரலின் இயங்கு சக்தி அதிகமாகும்
3.உடல் மிதக்கும் சக்தி ஏற்படும்
4. இரத்தஅழுத்தம் சீராகும்
5.இளமையான தோற்றம் கிடைக்கும்
6.உடல் எடை சீரான நிலையில் பாதுகாக்கப்படும்
7. குண்டலினி ஆற்றல் மேம்பட்டு ஆன்ம விழிப்பு நிலை ஏற்படும்
8.கவனகுவிப்பு திறன் மேம்படும்
9.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீராகும்
10.அதிக நேரம் தியானம் செய்யும் ஆற்றல் வளரும்.!

♨இது ஆரம்ப நிலையினருக்கு கொஞ்சம் கடினமான பயிற்சியாக தெரியும். ஆனால், தொடர்ந்து பிராணாயாமம் பயில்பவர்களுக்கு மிகவும் சுலபமாக செய்ய வருவதோடு நீடித்த ஆரோக்கியத்தையும் வழங்கும் அற்புத பயிற்சி இது.!

🍁http//amyogatrust.blogspot.in
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Thursday, 13 July 2017

உடல் பருமன் குறைய

தொப்பை குறைக்க..!

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது.

செய்முறை:
முன்னாள் இரவே ஒரு ஐம்பது கிராம் கொள்ளை தண்ணிரில் கழுவிய பிறகு 750 மிலி தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் வேகவைத்து அதை வடிகட்டி அந்த தண்ணீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை குறையும். உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பு நீங்கும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் -

பழமொழி.

இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.!

-இணையப்பகிர்வு

Tuesday, 11 July 2017

சொரியாஸிஸ் குணமாகும்

சொரியாசிஸ் நோய்க்கு இலவசமாக மருந்து:பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் மதுரை பாத்திர வியாபாரி
சொரியாசிஸ் நோயைக் கட்டுப் படுத்தலாம். முழுவதுமாகக் குணப் படுத்த முடியாது என பரவ லாக கருதப்படுவதால், இந்நோயால் பாதிக்கப்பட்டோர் அச்சமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், அச்சமே அவர்களுக்கு பெரிய நோயாக உருமாறிவிடுகிறது.

மதுரையில் வெப்பாலை மூலிகை மர இலை தைல மருந்தை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, இந்நோயில் இருந்து மீண்ட கீழவாசல் பாத்திரக்கடை வியாபாரி தினகரன்(50), தான் பெற்ற பயனை மற்ற நோயாளிகளும் பெற, அவர்களுக்கு மூலிகை தைலத்தை அவரே தயாரித்து இலவசமாக விநியோகம் செய்துவருகிறார்.

இதற்காக பிரத்யேகமாக இயந் திரங்களை வாங்கி, தனது கடையின் ஓர் அறையில் வெப்பாலை மருந்து தயாரிப்புக் கூடத்தை உருவாக்கி உள்ளார். உள்நாட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் வெப்பாலை தைலத்தை எந்தப் பிரதிபலனும், விளம்பரமும் இல்லாமல் அனுப்பி வைக்கிறார். இந்த மனிதநேய செயல்பாட்டால் 2,000-க்கும் மேற் பட்டோர் பலனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தினகரன் கூறிய தாவது: 1994-ம் ஆண்டு தலையில் சொரியாசிஸ் ஏற்பட்டது. 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் காட்டி யும் கடந்த 20 ஆண்டுகளாக நோய் குணமாகவில்லை. ஒருகட்டத்தில் உடல் முழுவதும் பரவி மிகவும் அவதிப்பட்டேன். ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. இதனால், வியாபாரத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. 2014-ம் ஆண்டு கடைக்கு பாத்திரம் எடுக்க வந்த சித்த மருத்துவர் ஒருவர் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, ‘வெப்பாலை மூலிகை மர இலையை 4, 5 நாள் வெயிலில் காய வைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு உடம்பில் தேய்த்தால் குணமாகிவிடும்’ என்று சொன்னார்.

நானும், அவர் சொன்னதைச் செய்தேன். இரண்டு, மூன்று நாட் களிலேயே குணமானது. நீர், ரத்தக் கசிவு நின்றது. ஆச்சரிய மடைந்த நான், அதன்பின் அந்த மருத்துவர் சொன்ன வெப்பாலை இலைகளை பறித்து வந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்க்க ஆரம்பித்தேன்.

தனது கடையில் உருவாக்கியுள்ள வெப்பாலை தைலம் தயாரிப்புக் கூடத்தில் தினகரன்.

தற்போது 2 ஆண்டுகளாக எந்த பிரச்சினையுமின்றி நிம்மதியாக தூங்குகிறேன். எப் போதாவது ஒருமுறை லேசாக பாதிப்பு வரும். தைலத்தைத் தேய்த் தால் உடனே குணமாகிவிடும். எனது கடைக்கு தினமும் ஏராளமானோர் வருவார்கள். அவர்களில் சிலருக்கு சொரியாசிஸ் இருக்கும். நான் அவர்களுக்கு மூலிகை தைலத்தை இலவசமாக வழங்குகிறேன். இதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றார்.

நோயாளிகளே தயாரிக்கலாம்

மதுரை மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: வெப்பாலை மூலிகை தைலம் சொரியாசிஸுக்கு நல்ல மருந்துதான். 95 சதவீதம் குணமாகி விடும். மீதி 5 சதவீதம் எங்காவது ஒரு இடத்தில் இருக்கத்தான் செய்யும். உணவு பழக்கவழக்கம் மற்றும் மற்ற மருந்து, மாத் திரை சாப்பிடும்போதும், சுற்றுச் சூழலாலும், பக்க விளைவு ஏற்பட் டாலும் மீண்டும் சொரியாசிஸ் வரும். குறிப்பாக எதனால் இந் நோய் வருகிறது என கண்டு பிடிக்கப்படவில்லை. வெப்பாலை தைலத்தை சொரியாசிஸ் வந்த இடங்களில் தடவலாம். குளிக்கவும் செய்யலாம் என்றார்.

திருநெல்வேலி மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் விக்ரம் குமார் கூறியதாவது: இந்தத் தைலத்தை நோயாளிகளே தயாரிக் கலாம். வெப்பாலை மர இலைகளை பறித்து சிறிது சிறிதாக நறுக்கி, தேவையான அளவு தேங்காய் எண்ணெயைப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய வெப்பாலை இலைகளை போட்டு 7 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைக்க வேண்டும். அதன்பின், இந்த எண்ணெயை வடிகட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி இளம் வெயிலில் நின்றால் சொரியாசிஸ் நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு சித்த மருத்துவர் வெங்கட்ராமன் கூறும்போது, “வெப்பாலை தைலத்தைப் பாதிக்கப்பட்ட இடங் களில் மருத்துவர் ஆலோசனை இல்லாமலேயே தடவலாம். சாப்பிடு வதாக இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே சாப்பிட வேண்டும்” என்றார்.!

இணையப்பகிர்வு

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...