I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வாழ்வோடு விளையாடும் விபரீத வைத்தியங்கள்

Sunday, 2 July 2017

வாழ்வோடு விளையாடும் விபரீத வைத்தியங்கள்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

32.உயிரோடு விளையாடும்
விபரீத மருத்துவர்கள்

" ஆடுகள் புல்லைத் திண்பதால் ஓநாய்கள் சைவத்திற்கு மாறாது.!
பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடாது.!
நேர்மறை எண்ணம் கொள்வதால்
காக்கை சிகப்பாகாது.!
தவசிகள் தவம் செய்வதால் மூடனுக்கு
ஞானம் வராது.!
அவரவருக்கு அவரவர் உலகம்,
இயல்பை மறந்தால்
வாழ்வே நரகம்.!

யோகாசனம் செய்யச்செய்ய உடல் உருகி உடலில் உள்ள தீயவை எல்லாம் கரைந்து போகவேண்டும். தியானம் செய்யச்செய்ய மனது உருகி மனதில் உள்ளதீயவை  எல்லாம் கரைந்து போய் மனம் தூய்மையாக விளங்க வேண்டும்.!  பெருந்தொப்பையுடன் ஆசனம் போடுவதில் வல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோலவே மன நோய் கொண்ட தியானிகளும் உள்ளனர்.!
இது பெரிய குற்றமல்ல. ஆனால், இது ஒரு முழுமையடையாத  அறிவு.! என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.! இது போன்று ஒரு விசயத்தில் முழுமையடையாத மனிதர்களைப் பார்க்கும் போது சிலருக்கும் ஏளனமும், எரிச்சலும், அச்ச உணர்வும் தோன்றுவது இயல்புதான்.! அதற்காக உடனடியாக சம்மந்தப்பட்டவரை குற்றம் காண முயலாமல் அவர் முழுமையடையாமல் போனதற்கான காரணம் என்னவென்று சிந்திப்பது நல்லது. அதுவே எனது வழக்கம்.! இப்படி ஒரு சிந்தனை என்னுள் வரக்காரணம் நான் சந்தித்த,சந்திக்கும் பல மனிதர்களே.!
முன்பொரு நாள் … உடல் பருமன் தொப்பைக்குறைய எளிய யோகாசனங்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்து ஒரு யோகா வகுப்பிற்கு போயிருந்தேன். ஒருநாள் பயிற்சி கட்டணம் 1500 ரூபாய். பணத்தை கட்டிவிட்டு பலரும் பயிற்சி செய்து தங்கள் உடல் பருமனையும் தொப்பையையும் கரைக்க ஆவலாய் காத்திருந்த போது … அனைவருக்கும் வணக்கம் என்றபடி குபேரன் சிலையைப் போன்ற பெருந்தொப்பையுடன் ஒரு மனிதர் எதிரில் வந்து நின்று தான் தான் பயிற்சியாளர் என்று அறிமுகப்படுத்தினார்.
அமர்ந்திருந்த அனைவருக்கும் இது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. ஏனெனில் நடிகர் சூர்யா போன்று சிக்ஸ் பேக்கோடு ஒருவர் வராவிட்டாலும் ரகுவரன் போன்றாவது  ஒல்லியாக ஒருவர் வருவார் என்றே அனைவரும் எதிர்ப்பார்த்தோம்.!
அது நடக்காமல் போனாலும் அவர் கூறிய பயிற்சியை கடைப்பிடித்த பலருக்கும் தொப்பை காணாமல் போனது உண்மை.! அந்தப் பயிற்சியாளருக்கு தொப்பை பெருத்து காணப்பட்ட காரணம் என்னவென்றால் அவருக்கு ஒரு விபத்தில் முதுகுத் தண்டுவடம் முறிந்து அறுவை செய்திருந்ததால் அவர் தனக்காக பலகாலமாக யோகாசனமே செய்வதில்லை.! ஆனாலும், வாயைக் கட்டாத காரணத்தால் வயிறு பெருத்துவிட்டது.!
அந்த வகுப்பு மிக நகைச்சுவையாக பயனுள்ளதாக  இருந்தது.! எனக்கு பெரிய தொப்பை இல்லாவிட்டாலும்,ஏற்கனவே யோகாசனங்கள் தெரிந்திருந்தும் கூட நான் அந்தப் பயிற்சி வகுப்பிற்கு சென்றதின் மூலம் சூழ்நிலை எப்படி இருந்தாலும்  அதை நமது திறமையால் மாற்றி  பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எவ்வாறு பயனளிக்க வேண்டும் என்பதை  அந்த மனிதரிடம் தான் கற்றுகொண்டேன்.!
இதற்கு கொஞ்சம் பொறுமை அவசியம்.!
நான் எடுக்கும் யோகா வகுப்பிற்கு வரும் சிலர் முதல் நாளோடு ஓடிவிடுகிறார்கள்.! ஒன்று உடல் வலி காரணமாக இருக்கும். அல்லது அவர்கள் எதிர்ப்பார்த்த ஏதோ ஒன்று இங்கு கிடைக்காது. என்று கணித்து சென்றுவிடுவார்கள்.!
இது அவர்களின் தவறான எண்ணம். "திடீரென்று பழக்கமில்லாத நிலையில் சில நிமிடங்கள் சும்மா நின்றால் கூட உடல்வலிக்கும்.
உலகில் யோகா,இயற்கை வாழ்வியல், மூலிகை மருத்துவம், உணவியல் முறையில் என்னென்ன நுட்பங்கள் உள்ளதோ அவை அனைத்தும் எனக்குத் தெரியும்.!
புதிய மொந்தையில் சிலர் பழைய கள்ளை வைத்து விற்பார்கள்" அதைப்பார்த்து சிலர் மயங்கிவிடுகிறார்கள்.! "
நான் இதுவரை கற்றவற்றில் கற்றுக்கொண்டிருப்பவற்றில் 30 %
கூட என்னை நாடி வந்தவர்கள் கற்றுச்சென்றதில்லை.!
அதற்கு
பல ஆண்டுகள் மாணவர்களின்  உடலும் மனமும் ஒத்துழைக்க
வேண்டும்.! அதற்கான சூழ்நிலையும் அமைய வேண்டும்.!
எனது வகுப்பில் சிறுவர்கள்,இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் என்று பலரும் ஒரே வகுப்பில் வருகிறார்கள்.!
இப்படி ஒரு யோகா வகுப்பிற்கு நான் சென்றதில்லை.! அதிகப்பட்சம் வாலிப வயதினரும் முதியோர்களும் வரும் வகுப்பையே பார்த்துள்ளேன்.!
எனக்கு வாய்த்தவர்கள் அவ்வளவுதான்,சிறுவர்கள் 2, இளைஞர்கள் 4, முதியவர் ஒன்று,பெண் ஒருவர் இப்படியே பல பொழுதும் அமைகிறது. அதிலும் ஒரு சக்கரை நோயாளி, ஒருவர் ஆஸ்துமாகாரர் என்று கூட சிலநாள் அமைந்துவிடும்.! இவர்களை தனித்தனியாக பிரித்து வகுப்பெடுக்க நேரமும் போதிய எண்ணிக்கையில் மாணவர்களும் இல்லை.! தனித்தனியாக பயிற்சி செய்தால்தான்  சிறந்தப் பலனை பெறமுடியும்.
அது நமக்கு பல பொழுதில் அமைவதில்லை.
நோயாளிகளுக்கான தனிப்பயிற்சி
வகுப்பு மற்றும் வீட்டிற்கு சென்று வகுப்பெடுத்தல் போன்றவற்றிலேயே
நான் கற்றதை கொஞ்சமேனும்
கற்றுக்கொடுத்து பிறருக்கு பயனளிக்க முடிகிறது.! என்னுடைய மற்ற நேரங்களை நான்
மூலிகை மருந்துகளை தயாரித்தல்,
வலைதளத்தில் ஆலோசனை கூறுதல்,பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சியளித்தல், வெளியூர் சென்று பயிற்சியளித்தல் போன்றவற்றை செய்து நான் கற்றதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.!
இது தெரியாமல் நமது மாணவர்களிலேயே கூட
சிலர் தங்கள் பல்வேறு உடல் ஆரோக்கியக் குறைபாடுகளைப் போக்க
பல்வேறு வைத்திய முறைகளை தேடி  சன்டிவி வைத்தியர்,கார்ப்பரேட் சாமியார், நவீன் பாலாஜி போன்ற பலரையும் தேடி ஒரு  பெரிய மருத்துவ சுற்றுப்பயணம் செய்துவிட்டு மீண்டும்  நோயோடு நம்மையே தேடி வருகிறார்கள்.!
<என்ன ஒரு அறியாமை>
நாமும் நமது குடும்பத்தினரும் கடந்தப் பல வருடங்களாகவே எந்த மருத்துவ முறைகளையும் கடைப்பிடிக்காமலே எங்களுக்கு வந்த எல்லா ஆரோக்கியக் குறைபாடுகளையும் போக்கி வருகிறோம். இனி வரும் ஆரோக்கியக் குறைபாடுகளையும் அவ்வாறே போக்கிக் கொள்வோம்.!
அந்த இரகசியம் நமக்குத் தெரியும்.
நாம் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் தங்கள் பல்வேறு நாள்ப்பட்ட நோயிலிருந்து மீண்டுள்ளனர்.! ஆனாலும் சிலர் இன்னும் விளக்கைத் தேடி மடியும் விட்டில்களைப்போல  முரட்டு வைத்தியம் செய்து மடிகிறார்கள்.!
பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறி உடல் எடையைக் குறைக்க தனது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மரணத்திற்கே ஒரு டிவி புகழ்  மூலிகை மருத்துவர் காரணமாகிவிட்டார்.! மூன்று நாள் சாப்பிடாவிட்டாலே உடலில் உள்ள அனைத்து மெட்டபாலிசமும் பாதிக்கப்படும் அதன்பிறகு பசித்து உணவு உண்டால் கூட உணவு வாந்தியாகிவிடும்.! பிறகு ஒன்று சாத்துக்குடிச் சாறு/ உப்பு சக்கரை கரைசல் போன்றவற்றை கொடுத்து உடலில் குளுக்கோஸை ஏற்படுத்திவிட்ட பிறகே உண்ண வேண்டும். அல்லது செயற்கை  குளுக்கோஸ் ஏற்றிய பின்தான்  படிப்படியாக உணவு உண்ண வேண்டும்.! இந்த அடிப்படையை மீறினால், நீங்கள் சாப்பிடும் எதுவும் வாந்தியாகிக் கொண்டே இருக்கும்.!
ஆனால்,பசித்தால் மட்டும் சாப்பிட்டால் போதும் அல்லது 90 நாட்கள் வரை சாப்பிடாமல் இருக்கலாம்.  என்று; ஓசோ போன்றோரின் பெயரில் இணையத்தில் பல தகவல்கள் உலவுகிறது.!
நம்மை சந்திக்கும் சில சக்கரை, இரத்த அழுத்த நோயாளிகள் சிலர் சாப்பிட்டு பத்து நாள் ஆகிறது. பசியில்லை, எந்தப் பரிசோதனையும் செய்வதில்லை. ஆனால்,ஆரோக்கியமாக இருக்கிறேன். என்று கூறுகிறார்கள்.! உண்மையாக கூறினால் இவர்கள் நோய்நீங்குவதற்கல்ல உயிரை நீக்குவதற்கே முயலுகிறார்கள்.!
இதை சில மூடர்கள் மாற்று மருத்துவம் என்ற பெயரில் கற்றுகொடுக்கிறார்கள்.! அப்படித்தான் நவீன் பாலாஜி மருத்துவமனையில் உடல் எடையைக் குறைக்கச் சென்ற பெண் உயிரையே கொடுத்துவிட்டார்.! விரதம் எப்படி அனுசரிக்க வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து மதக் கோட்பாடுகளிலும் மிகமிகத் தெளிவாக கூறி உள்ளனர்.! அதிலும் இந்திய தத்துவத்தில் மனம்,உடல் ஏன் விதியையே மாற்றும் அளவிற்கு வலிமையான அதேநேரம் ஆபத்தில்லாத விரதமுறையை நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.! அதை கடைப்பிடிக்காமல்  கிறுக்குச் சாமியார்கள் கூறுவதையும் உடலின் அடிப்படையே தெரியாத முட்டாள்கள் கூறுவதையும் கடைப்பிடிப்பது ஆபத்தானது.!
இந்த வைத்தியர்களில் பலர் அக்கு ஹீலர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்ற போர்வையில் பிறர் உயிரை வைத்து பரிசோதனை செய்கிறார்கள்.! அப்படியானால் சித்தர்கள்,முனிவர்கள்,யோகிகள் பலர் காற்றை சுவாசித்து,சூரிய ஆற்றலை கிரகித்து உயிர் வாழ்கிறார்களே? என்று சிலர் வினவலாம்.! அவர்கள் படிப்படியான பயிற்சியின் மூலம் ஆண்டுகணக்காக முயன்று அந்த நிலைக்கு வருகிறார்கள்.! ஏற்கனவே நோய் வந்து இறந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களுக்கு   இது சாத்தியமே இல்லை.!
இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் மாற்று முறை மருத்துவர்கள் என்று கூறும் பலரும் யோகா செய்ய வேண்டாம், உடற்பயிற்சி கூட காலையில் செய்ய வேண்டாம். என்று ஆலோசனை கூறுகிறார்கள்.!
இவர்கள் முழு கோமாளிகள் என்பதற்கு இதுவே போதுமான சான்று.!
மாற்று முறைகளை கடைப்பிடித்து பலரும் நோயிலிருந்து மீண்டதாக கூறுகிறார்கள் என்றால், அதற்கு மனித உடலில் உள்ள  இயற்கை நோயெதிர்ப்பு ஆற்றலே காரணமே அல்லாது இவர்கள் செய்த வைத்தியம்  காரணமல்ல.!
இவ்வளவும் ஏன், சிவசைலம் இயற்கை  நல்வாழ்வு ஆஸ்ரம நிறுவனர் புலவர் இராமகிருட்டிணன் அவர்களும் இப்படி ஒரு விபரீத விரத பரிசோதனையை செய்தே உயிர் நீத்தார். அதாவது முதலில் அவர் படிப்படியாக முழுநேர இயற்கை சமைக்காத உணவை சாப்பிட்டு தனக்கு வந்த தொழுநோயை குணப்படுத்திக்கொண்டார்.! பிறகு மாதக்கணக்கில் நீர் மட்டும் அருந்தி வாழ்ந்து வந்தார். நிறைவாக இனி பசியெடுத்தால் மட்டும் நீரோ,உணவோ எடுத்துக்கொள்ளலாம். என்று; முடிவு செய்து அவ்வாறே பல நாட்கள் உணவு,நீர் எதையும் உண்ணாமல் காற்றே போதும் வாழ என்று கூறி அதன்படி வாழ ஆரம்பித்த சில நாளிலேயே மரணத்தை தழுவினார்.! இயற்கை உணவாளனின் ஆயுள் 120 ஆண்டுகள். ஆனால்,இராமகிருஷ்ணன் அய்யா 60 வயதிலேயே தனது விபரீத விளையாட்டால் உயிரையே விட்டுவிட்டார்.!
இதுபோன்று பசித்தால் சாப்பிடலாம், தாகமெடுத்தால் குடிக்கலாம் என்று காத்திருந்த பல ஞானிகளையே காலன் கவர்ந்து சென்றுள்ளான். எனும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்.!
இராமகிருஷ்ணன் அய்யா இந்த விபரீத முயற்சியை மேற்கொள்ளாது போயிருந்தால் இன்னும்  வாழ்ந்து இலட்சக்கணக்கான மக்கள் இயற்கை முறைகளை கையாண்டு பிணியை வெல்ல பெருதவி புரிந்திருப்பார்.!
சில நாட்கள் ஒருவருக்கு பசியே இல்லை உணவே எடுக்கவில்லை என்றால் உடலில்  உள்ள சேமிக்கப்பட்ட ஆற்றல் தீர்ந்ததும் உடலில் உள்ள செல்கள் தனது உணவுத் தேவைக்காக உடலில் உள்ள மற்ற செல்களை  அரித்து உண்ண ஆரம்பிக்கும்.இதன்  இறுதி கட்டத்தில் மரணம் நிச்சயம்.! அதனால்,ஆபத்தில்லாத வகையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தி, முன்னோர் ஞானத்தையும்,விஞ்ஞானத்தையும், புறக்கணிக்காமல் இயற்கை மருத்துவ முறைகளை செய்வதே நலமானது.!
அப்படி முடியாவிட்டால் ஆங்கில மருத்துவரிடம் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மயக்க மருந்தை வாங்கி சாப்பிட்டு மெதுவாக சாகலாமே.! எதற்கு கொலைப் பட்டிணியாக இருந்து சடுதியில் போக வேண்டும்?
யோசித்து செயல்படுங்கள் அறிவாளிகளே.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

🌿100 % இயற்கை
மூலிகை 🍁
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whats app
9629368389

http//aumherbals.blogspot.in
amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...