I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: December 2018

Friday, 28 December 2018

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஆண்டே

*மனதோடு பேசுகிறேன்*

---ஏகப்பிரியன்---

31.இறைநிலையின்
இனிய வரங்கள்

" தமிழில் பாடி புகழ் பெற்றவர்கள் நூறு
தமிழையே பாடும்
வரம் பெற்றது என்பேறு.! "

ஒகிப்புயல் சேதத்தில் ஆரம்பித்த 2018 ஆம் ஆண்டு கஜாவின் கர்ஜனையில் நிறைவடைந்து வருகிறது ….!

 ஆண்டுக்கு இருமுறை
தொற்று வியாதி பயங்களை உலகில் விதைத்து பல மரணங்களை அறுவடை செய்துவரும்
நவீன உலகம் இப்பொழுது
புதிதாக புயல் மரணங்களையும்
சேதங்களையும் ஆண்டுக்கு பலமுறை நிகழ்த்தி வருகிறது.!

இது இயற்கையின் இயல்புதான் என்றே பலரும் கருதுவதால்
அதைப்பற்றி இங்கு பேச
விரும்பவில்லை.!

இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு எனக்குத்தந்த சில வரங்களைப்பற்றி மட்டுமே பேசப்போகிறேன்.!

எனது ஆதிமருத்துவம் நூல் ஜனவரியில் சிறப்பாக வெளிவந்து  சில நூறு இதயங்களுக்கு நமது முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும் பயிற்சி முறைகளையும் கொண்டு
சேர்க்க உதவியது.

 அதோடு  இதன் மூலம்
கிடைத்த நிதியில் ஒகிப்புயலில் பாதிக்கப்பட்ட இரு
விவசாயிகளுக்கு 20,000
நிதியும் கொடுக்கும் வரம் பெற்றது; இறைநிலை
எனக்கீந்த அருள்மழை.!

சென்னை,திருச்சி,நாகர்கோவில்,திருநெல்வேலி போன்ற சில ஊர்களில் ஒருங்கிணைந்த ஆதி மருத்துவக்கலை  முகாம்
நடத்திட உதவியது;சமூக ஊடக நண்பர்கள் மூலம் சித்த நிலை எனக்கு வழங்கிய அருமையான வாய்ப்புகள்.!

முற்றும் முடிவு பெறாத எனது மொட்டை மாடி வகுப்பில் தனது யோகாசனப் பயணத்தை தொடங்கிய என் மாணவி நவ்யாவிற்கு  இந்திய அளவிலான  யோகாசனப்போட்டியின் வெள்ளிப்பதக்கம் வழங்கி வாழ்த்தியது; எனது யோகக் குருமார்களின் உன்னத அன்பு.!

நீங்கள் கூறிய முறைகளை கடைப்பிடித்தேன் தலைவலி போனது,சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது,மனம் இப்பொழுது அமைதியாக இருக்கிறது, உங்கள் மூலிகைப் பொருட்கள் சிறப்பாக பயனளித்தது என்றெல்லாம் கூறிய மனிதர்கள் அனைவரும்; எனது பிராத்தனைக்கு பிரபஞ்ச ஆற்றல் கொடுத்த பேரொளிகள்.!

இத்தனை இருந்தாலும்
இலக்கியம் இல்லாத வாழ்வில் இன்பமும் ஞானமும் ஏது? "மனவளக்கலை பேராசிரியர்
சங்கீதா முதல் தமிழ்
 பேராசிரியர் பர்வீன் சுல்த்தானா வரை பல்வேறு ஆன்மீக இலக்கிய ஆளுமைகளை
 எனக்கு அறிமுகப்படுத்தி கற்றலில் கேட்டல் இன்பம் என்பதை மீண்டும் நினைவுப்படுத்தியது;
முகநூல் எனக்கு  கோடையில் வழங்கிய பனங்கள்ளு.! "

பாரதி,பட்டுக்கோட்டைகளின் பாட்டைக்கேட்டு   …

அதை சமகால குரலாய்
 மாற்றியமைத்து "கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு
நம்மாழ்வார் வாக்கியம் தெளிவு அதைக் கடைப்பிடித்துப் பழகு"
என்ற;எனது உணவு விழிப்புணர்வு பாடலைக்கேட்டு  மகிழ்ந்து;

கண்ணா,தமிழில் எழுதி புகழ் பெற்றவர்கள் நூறு;
தமிழையே எழுதும் வரம் பேறுவதே பேறு.! என்று; என்னை வாழ்த்தியது தமிழன்னையின் பெருங்கருணை.!

அந்தக் கருணையின் ஒளியில்

" பிறந்து சிறந்த மொழிகளில்
 சிறந்தே பிறந்த தமிழ்மொழி
நான் இறந்து மீண்டும்
பிறப்பினும் என் நாவில்
மலர்ந்து ஒளிகொடு "

என்ற உன்னத பாடலை எழுதி தாய் மொழியில் என்
இதழ் பதித்தேன்;
தமிழ் உலகில் என்
தடம் பதித்தேன்.!

இன்னும் ஒரிரு நாளில் இந்தப்பாடல் பல அற்புதமான படக்காட்சிகளுடன் நமது Adhimaruthuvam you tube
https://youtu.be/cMoxkxskJ8w

 சேனலிலும் முகநூலிலும்
வெளிவர உள்ளது.!

இன்னும் இந்த 2018 ஆம் ஆண்டில் - வீட்டிலேயே இயற்கை சோப்பு முதல் நாப்கின் வரை செய்வதற்கும் கற்றுக்கொண்டேன். இந்த ஆண்டு இன்னும் பல அற்புதங்களை செய்துள்ளது. அவற்றையும் பட்டியலிட்டால் இன்றெல்லாம் முடியாது.!

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் ஆண்டே.!

இதற்கு பின்னால்
இறைநிலையின் பேராற்றலும் எனது மாணவர்கள்,ஆசிரியர்கள்,
நட்பாளர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரின்  ஒத்துழைப்பும் நிறைந்துள்ளதை உணர்ந்து நெகிழ்ந்து
பிராத்தனை செய்கிறேன்.!
நலம் பெருகட்டும் …

அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துகளை முன்னதாகவே கூறுவதில்
பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

"எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும்
மேன்மையடைக … "

தொடர்ந்து பேசுவோம் …

www.aumherbals.com

நரைமுடி தீர்வு

நரை முடி காரணமும் தீர்வும்

தலையில் முடி கருகரு என்று கருப்பு நிறத்தில் வளரக் காரணம் நம்தோலில் இருக்கும் மெலனின் என்ற சுரப்பிதான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதனால் கருமையான முடி வளர்ந்து வருகிறது.

அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பிக்கும்போது முடி வெள்ளையாக வளர ஆரம்பிக்கிறது. மெலனின் சுரப்பி குறைவாக ஏன் சுரக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். அதிக வயதானவர்களுக்கு ஹைட்ரஜன் பேராக்சைடு முடியில் அதிகமாக உற்பத்தியாவதை கண்டு பிடித்தார்கள். இந்த ஹைட்ரஜன் பேராக்சைடுதான் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது என்றும் கண்டு பிடித்தார்கள். சிலருக்கு வாலிப வயதிலேயே நரைப்பதற்ககும் ,சிலருக்கு வம்சா வழியாகவே நரைப்பதற்கும் இந்த அடிப்படைச் சமாச்சாரமே காரணமாகும். சரியான உணவுகளை சாப்பிடாமல் போவதாலும் முடி நரைக்கலாம். கவலை மனசோர்வு காரணத்தாலும் இப்படி முடி நரைக்கலாம்.

நரை முடி குறைய

1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலையை
மென்றுதின்று ஒருடம்ளர் தண்ணீர் குடித்து வரலாம் நரை முடி

2. சீயக்காய், கடுக்காய், பயத்தம்பருப்பு, நெல்லிக்காய் ஆகியவற்றை
அரைத்து மாவாக்கி கொண்டு அதை தேய்த்து குளிக்கலாம் நரை முடி.

3. இரும்பு சத்து உணவுபொருட்களை சேர்த்துகொள்ளலாம் நரை முடி.

4. மருதாணி, கருவேப்பிலை, செம்பருத்தி இவைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம் நரை முடி.

5. மருதாணிஇலை வெந்தயம் கொஞ்சம்,ஒரு எலுமிச்சை சாறு இவைகளை அரைத்து தினமும் குறித்து வந்தால் நரைமுடி போய்விடும்.

6. கீரை, காய்கறி, பால், முட்டை, மீன் முதலியவைகளை உண்ணலாம்.

7. வைட்டமின் b12 உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

8. காபி டீ பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

9. தினமும் கருவேப்பிலை துவையல் சாப்பிடலாம்.

10. கருவெப்பிலை சாறு எடுத்து, அதே அளவு தேங்காய் எண்ணெயையும் எடுத்து இரண்டையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்.!

-இணையப்பகிர்வு

Saturday, 15 December 2018

இயற்கை நாப்கின்
 தயாரிக்கும் முறை

கேன்வாஸ் பேப்பர் கிளாத் என்று டெய்லரிங் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும்.

அதில் ஒரு மீட்டர் வாங்கி ஒரு நாப்கின் அளவில்  இரு பகுதியாக  மடிக்கும் படி சுமார் 16 துண்டுகளாக வெட்டிக்கொண்டு கிளாத்தில்
மினுமினுப்பாக உள்ள பகுதியை உள்பக்கமாக மடித்து நடுவில் தேவையான அளவு
(சுமார் 20 கிராம்)
மருந்து கடையில் கிடைக்கும்
பஞ்சை வாங்கி வைத்துக்கொண்டு …

மடித்து நான்கு ஓரங்களையும் சூடான தேய்ப்பு பெட்டியில் தேய்த்தால் நான்கு ஓரங்களும் ஒட்டிக்கொள்ளும்.

பேப்பர் பொருட்கள் விற்கும்
கடையில் டபுள் சைட் செல்லோ டேப் என்று
கிடைக்கும். அதில் பெரிய டேப் ஒன்றை வாங்கி நாப்கினின் பின்புறம் ஒரு சைடை ஒட்டிக்கொண்டால் பிறகு தேவைப்படும் போது மேலிருக்கும் பேப்பரை கிழித்து உள்ளாடையில் ஒட்டிக்கொள்ளலாம்.

இது இயற்கையானது. கடையில் விற்கும் நாப்கினை தொடர்ந்து பயன்படுத்தினால் பிறப்புறுப்பு  புண்கள்,புற்று,கர்பப்பை கற்கள்
போன்றவை ஏற்படும்.

அதனால்
இந்த இயற்கை முறைக்கோ அல்லது ஆதி முறைப்படி மீண்டும் பழைய
 துணிகளையோ பயன்படுத்தும் படி பெண்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.!
நலம் பெருகட்டும் …

ஆதிமருத்துவம்_ஏகப்பிரியன்
www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...