I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: 2020

Monday, 26 October 2020

விசம் போக்க மருந்து

*விஷத்தை நீக்கும் கல் -

படிகாரம் - 30 g
துருசு - 30 g

* படிகாரத்தையும், துருசையும் தனிதனியாக நன்றாக பொடிக்கவும்ங்க.

* அடி கனமான பாத்திரத்தில் பொடித்த படிக்காரத்தை சேர்த்து உருக்கவும், உருகியதும் துருசைச் சேர்த்து உருக்கவும்.

* இரண்டும் சேர்ந்து வந்ததும்......அச்சில் தேங்காய் எண்ணை தடவி அதில் உருகிய கலவையை ஊற்றவும்ங்க. ஆறியதும் கல்லை எடுத்து தேங்காய் எண்ணையில் போட்டு வைத்திருக்கவும். தேவைப்படும் போது பயன்படுத்தவும்.

* பயன்படுத்தும் போது சிறிது தீயில் காட்டி லேசாக உருகியதும் கடிவாயில் வைக்கவும். விஷத்தை உறிஞ்சியதும் கல் நிறமானது கருப்பாகி தானாக விழுந்து விடும்ங்க.

* பின்பு ஒரு துணி கொண்டு அக்கல்லை எடுத்து பாலில் போட்டு வைக்கவும்ங்க. பின்பு அதை எடுத்து திரும்பவும் தேங்காய் எண்ணையில் போட்டு பத்திரப்படுத்தவும்ங்க.

* தேள், பூரான், எலி, பாம்பு கடிக்கு பயன்படுத்தலாம்ங்க.எல்லோர் வீட்டில் மிக மிக அவசியமாக இருக்க வேண்டிய கல்.

* * *மிகவும் விஷம் வாய்ந்தது. குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்கவும்ங்க. கண்,வாயில் (அ ) வெட்டு காயத்தில்  எக்காரணம் கொண்டும் வைக்க கூடாதுங்க.

* துருசு சுத்தி முறை - 24 மணி நேரம் நாட்டு மாட்டு தயிரில் போட்டு வைத்திருந்து எடுக்கவும்ங்க.

* * *துருசை உருக்கும் போது கண்ணுக்கு கண்ணாடியும்..... மூக்கு, வாய்க்கு துணி கட்டவும்ங்க. நல்ல கற்றோட்டமான இடத்தில் உருக்கவும்ங்க.

* துருசை (Copper Sulphate) எல்லோருக்கும் நாட்டு மருந்து கடைகளில் தரமாட்டார்கள்.

Wednesday, 30 September 2020

தொண்டை சதை,உதட்டு வெள்ளை குணமாகும்

அட_புற்று_நோய்க்கே
நம்மகிட்ட_மருந்திருக்கப்பா

சிற்றாமணக்கு எண்ணெய் 2 லிட்டர்.
வேம்பாடம் பட்டை,கழச்சி வேர்
கண்டங்கத்திரி வேர்,நன்னாரி வேர்,
வேலிப்பருத்தி வேர்,கிரந்தி நாயகம்,
பூதக்கரப்பான் பட்டை,,சுக்கு,திப்பிலி,
மிளகு,கடுக்காய் வகைக்கு 18  கிராம்
எடுத்து தூசு துரும்பு நீக்கி பசும்பால்
விட்டு மசாலா பதத்தில் அரைத்து
உருட்டி எண்ணையில் கலந்து
பழைய இரும்புச்சட்டியில் வைத்து கலக்கி
சிறு தீயாக நீரடங்கும் வரை காய்ச்சி
இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில்
பதனப்படுத்தி கொண்டு

காலை,மாலை
உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு
7 மில்லி அளவிற்கு எண்ணெயை
குடித்து வர வாய்,நாக்கு,தொண்டையில்
வரும் புற்றுநோய் குணமாகும்.
வாய்க்கிரந்தி,வாய்நாற்றம்,நாக்கு வெடிப்பு,
ஜிக்குவா ரோகம்,6 விதமான உதட்டு வெடிப்பு,
உதட்டு வெள்ளை,11 விதமான நாக்கு கொப்பளம்
உள்நாக்கு வளர்ச்சி,பல் ஈர்க்கட்டி,,ஈர் வீக்கம்,
சீழ்ப்பிடித்த புண்கள் குணமாகும்.

எண்ணெய் தீரும் வரை பயன்படுத்த  வேண்டும்.

உணவாக கைக்குத்தல் அரிசிக்கஞ்சி,கேழ்வரகு கூழ்
அவல்,ஆவியில் வேகவைத்த காய்கறிகளை மட்டுமே
சாப்பிட வேண்டும்.உப்பு,புளி,காரம்,அசைவம்
தவிர்ப்பது நலம்.

#ஆதாரம்_நம்நாட்டு_வைத்தியம் 
பக்கம் 426

100 இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
#AUM_HERBALS
(M)9629131089
(W)9629368389

வாழ்க வளமுடன்!
நலம் பெருகட்டும் …

Monday, 28 September 2020

தலை நீர் குணமாகும்

கபால_நோய்_நீக்கும்
இஞ்சித்தைலம்

நன்றாக விளைந்த இஞ்சி 300 கிராம்
எடுத்து மேல் தோல் நீக்கி வெட்டி அம்மி
அல்லது மிக்சியில் போட்டு நீர் ஊற்றாமல்
அரைத்து பிழிந்து  சாறெடுத்து சிறிது நேரம்
ஒரு பாத்திரத்தில் கசடு தங்க வைத்திருந்து
தெளித்து ஒரு  பழைய மண்பாண்டத்தில்
விட்டு சாற்றின் அளவு காய்ச்சாத பசும்பால்
விட்டு இவை இரண்டும் சேர்ந்த அளவிற்கு
நல்லெண்ணெய் விட்டு சிறு தீயாக எரித்து
காய்ச்சி நீரடங்கி தைலப்பதத்திற்கு வந்ததும்
இறக்கி ஆறியதும்  வடிகட்டி பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு …

வாரம் இருமுறை
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து
குளித்து வர நீர் பீனிசம்,தலைநீர்,தலைபாரம்,
அடுக்குத்தும்மல் ஜலதோசம்,பித்த மயக்கம்,
ஜன்னி,கழுத்து நரம்பு பாதிப்பால் வரும்
தலைச்சுற்று போன்றவை நீங்கும்.

100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
9629368389
9629131089

Monday, 31 August 2020

முருங்கை மகத்துவம்

🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.

🌿முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.🌿

Wednesday, 26 August 2020

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கான சளி மருந்து

சுக்கு
மிளகு
திப்பிலி
ஓமம்
கிராம்பு
பொரித்த வெங்காரம்
சாதிலிங்கம்(சுத்தி செய்தது)

மேற்கண்ட சரக்குகள் வகைக்கு அரைப்பலம்

இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழம் சாறு விட்டு நன்றாக அரைத்து பாசிப் பயிறு முதல் மிளகு அளவு உருட்டி நிழலில் உலர்த்தி குளிகைகள் ஆக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், சுரம், வாந்தி, அஜீரணம், அஜீரண பேதி, முதலிய வியாதிகளுக்கு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்

பிறந்த குழந்தை 15 நாட்களிலிருந்து இந்த மருந்தை உபயோகப்படுத்தலாம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறேன், அனுபவத்தில் இது நல்ல பலனை தருகிறது.

Saturday, 22 August 2020

கலிகால அரசாங்கம்

கொரோனா_நோயாளி_என்று_
கூறப்படுபவர்களே…

---ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்------

நீங்கள் பரிசோதனைக்கு
சென்றதே தவறு.
இங்கு கொரோனாவும்
இல்லை ஒன்றும் இல்லை.
சும்மா சளி பிடித்தவர்களை
பிடித்து கொரோனா கணக்கு
காட்டுகிறார்கள்.பல்வேறு
உடல் உபாதையால்
மரணமடைந்தவர்களை
கொரோனா கணக்கில்
ஏற்றுகிறார்கள்.

உண்மையான கொரோனா
இருக்குமானால் திடீரென்று
வீட்டில் இருந்தவர்கள்,
சாலையில் நடந்து வருபவர்
எல்லாம் மயங்கி சாய்ந்து
இறப்பார்கள்.ஆனால் இவர்கள்
மருத்துவமனையில் சிலரை
ஊசிப்போட்டு கொல்வதாக
தகவல் வருகிறது.

முதலில் சுகாதார பணியாளர்கள்
வீட்டில் சும்மா இருப்பவர்களை
பரிசோதனை செய்து  சளி இருக்கிறது.
மேல் பரிசோதனைக்கு வாருங்கள்.
என்று அழைத்து செல்வதை
அந்தந்த பகுதியினர் தடுக்க
வேண்டும்.அல்லது இன்னும்
இந்த நாடகம் தொடரும்.

கொரோனாவும் இல்லை ஒன்றும்
இல்லை.இங்கே இருப்பது
வெறும் சளிதான்.ஜலதோசம்
சளி ஒருவருக்கு பிடித்தால்
நோயாளியின் பக்கத்தில் இருப்பவர்
சளி பட்டவர்,அவரின் துணியை
தொட்டவர் எல்லோருக்கும் சளி பிடிக்கும்.

இதை கொண்டு சளி உள்ள ஒருவரை
கொரோனா என்று பிடித்து சென்றால்
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும்
சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிசோதனை சென்றால் அவர்களையும்
பிடித்து உள்ளே போடுவார்கள்.

இராமர் கோவில் அடிக்கல் நாட்டு
விழாவில் ஆயிரக்கணக்கான
சங்கிகள் கூட்டமாக கலந்து கொண்டனர்.
அதில் ஒரு சிலருக்கு சளி பிடித்துள்ளதால்
கொரோனா என்று பிடித்து சென்றுள்ளனர்.
அதில் பங்குபெற்ற மற்றவர்களுக்கு
ஒன்றும் செய்ய வில்லை.

ஆனால்,இங்கு விநாயகர் சதூர்த்தி
கொண்டாட தடை செய்துள்ளனர்.

இப்படி இல்லாத கொரோனாவை காட்டி
பீதியை கிளப்புவதாலேயே பலரும்
மரணமடைகிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
கொரோனா கிருமி 14 நாட்கள் தான்
வாழுமாம்.அதுவும் தொற்று பாதித்த
ஒருவரிடம் இருந்தே மற்றவர்களுக்கு
பரவுமாம்.அப்படியானால் ஊரடங்கு போட்ட
அதிகப்பட்சம் ஒரு மாதத்திலேயே
உண்மையான கொரோனா மாண்டிருக்கும்.
ஆனால்,நமது அக்கம் பக்கத்திலோ
வீட்டில் உள்ளவர்களிலே யாருக்கும்
கொரோனா தொற்று இல்லாமலேயே
ஒருவருக்கு அது எப்படி வருகிறது.?
என்று யோசியுங்கள்.

கொரோனா பெயரில் நடந்த
வியாபாரங்கள்,ஒப்பந்தங்கள்,
தனியார் மயமாக்கல் அழிவுத்திட்டங்கள்
எத்தனை எத்தனை என்று கணக்கு
பார்த்தால் தலையே சுற்றும்.

ஒரு கொரோனா நோயாளியின் பெயரில்
உலக வங்கி கொடுக்கும் பெருந்தொற்று
நிதி 1 இலட்சம்.மரணமடைபவர்களுக்கு
மூன்று இலட்சம் என்று கூறுகிறார்கள்.
இந்திய அரசு இந்த பணத்தை வாங்கி
மாநில அரசுகளுக்கு கொடுக்கிறது.
அதில் முககவசம்,டெஸ்ட் கிட்,கிருமி நாசினி
போன்ற பலதையும் வாங்கியதாகவும் கொரோனா
நோயாளிகள் பராமரிப்பு செலவு செய்ததாகவும்
6000 கோடியை ஏற்கனவே தமிழக அரசு
கணக்கு காட்டியுள்ளது.மத்திய அரசு இந்த வியாதியின்
பெயரில் மக்களிடம் வசூலித்த மொத்த பணத்தையும்
ஆட்டையை போட்டு விட்டது.

ஒன்றை மட்டும் செய்யுங்கள் உங்கள் பகுதியில்
உள்ள ஒரு நூறுபேர் ஒன்றினைந்து
எங்கள் பகுதியில் சும்மா இருப்பவர் யாரையும்
வீடுவீடாக வந்து பரிசோதனை செய்ய
வேண்டாம்.என்று எதிர்ப்பு காட்டுங்கள்.
காய்ச்சல் என்றாலோ,சளி என்றாலோ
நாங்களே மருத்துமனைக்கு வருகிறோம்.
அப்பொழுது வேண்டுமானால் கொரோனா
செக்கப் செய்யுங்கள்(அது கூட தவறுதான்.
வந்த வியாதிக்கு வைத்தியம் செய்தால் போதும் )
அதுவரை சும்மா இருப்பவர்களை அச்சுறுத்தி
இழுத்து செல்வதை அனுமதிக்க மாட்டோம்.
என்று பொதுமக்கள் விழித்துக்கொண்டால்
கொரோனா தொற்று நாளையே
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.! aumherbal.blogspot.com

Tuesday, 11 August 2020

ஆரோக்கிய பானம்

நோயெதிர்ப்பு_ஆற்றல்_அதிகரிக்க

துளசி இலை  250 கிராம்
ஆவாரம் பூ 250 கிராம்
சுக்கு 125கிராம்
அதிமதுரம் 125கிராம்
கருஞ்சீரகம் 80 கிராம்
மிளகு 80 கிராம்
மஞ்சள் 80 கிராம்

அனைத்தும் காய்ந்ததாக சேகரித்து
கொண்டு நன்றாக சதைத்து
மிக்ஸியில் போட்டு பொடித்து
வைத்துக்கொண்டு ஒரு ஆளுக்கு
20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி
நீரில் கொதிக்க வைத்து அது 75 மில்லி
அளவாக குறுகியதும் வடிகட்டி
காலை,மதியம்  இரவு  உணவிற்கு பின் அல்லது
உணவிற்கு முன் மூன்று வேளையும்
குடித்து வர நோயெதிர்ப்பு
ஆற்றல் வலுவாகி உடல் ஆரோக்கியம் பெறும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
aumherbalsblogspot.com

Tuesday, 28 July 2020

கொரோனா சித்த மருத்துவ முகாம்கள்

#தமிழகத்தில்_இயங்கிவரும்_கொரோனா
#சிகிச்சைக்கான_சிறப்புbest_சித்தமருத்துவ
#மையங்கள்*  [29.07.2020]

*சென்னை மாவட்டம்* :
1. Dr.அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி [225]
வியாசர்பாடி, சென்னை-600 039.

2. ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரி [425]
54, கலைஞர் தெரு, காவேரிரங்கன் நகர்,
சாளிகிராமம், சென்னை-600 093.

*வேலூர் மாவட்டம்* :
3. தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி [100]
தொரப்பாடி.

*திருப்பத்தூர் மாவட்டம்* :
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரி [50]
அக்கரகாரம்,நாட்ரம்பள்ளி (அருகில்)

*ராணிப்பேட்டை மாவட்டம்* :
5. ஆற்காடு மஹாலட்சுமி கல்லூரி [70]
ராணிப்பேட்டை.

*திருவண்ணாமலை மாவட்டம்* :
6. பழைய அரசு மருத்துவமனை [60]
திருவண்ணாமலை.

7. அண்ணா யுனிவர்சிட்டி [80]
தச்சூர்,ஆரணி தாலுக்கா.

*கோவை மாவட்டம்*
8. கொடிசியா காம்ப்ளக்ஸ் | Codissia Complex [28]
அவினாசி ரோடு.

*தேனி மாவட்டம்* :
9. மேரி மாதா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் [100]
பெரியகுளம் (அருகில்).

*தென்காசி மாவட்டம்* :
10. நல்லமணி யாதவா கலை & அறிவியல் கல்லூரி [150]
ஆயக்குடி.

*விழுப்புரம் மாவட்டம்* :
11. அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதி [155]
பெரும்பாக்கம்.

*நெல்லை மாவட்டம்* :
12. அரசு சித்தமருத்துவக் கல்லூரி [200]
  பாளையங்கோட்டை.

13. SCAD காலேஜ் [200]
  பொன்னாகுடி.
 
*சிவகங்கை மாவட்டம்* :
14. ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை [100]
திருப்பத்தூர்.

*கன்னியாகுமரி_மாவட்டம்* :
அரசு ஆயுர்வேதா மருத்துக்கல்லூரி[150]
கோட்டார்,நாகர்கோவில்

குறிப்பு :
முழுமையாகவும் இலவசமாகவும் *சித்தமருத்துவத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை* பெறநினைப்பவர்கள் இந்த மையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.

    தங்களின் மாவட்டங்களில் சித்தமருத்துவ மையங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட , அருகிலுள்ள, மாவட்ட  மையங்களில் சிகிச்சை பெறலாம். மொத்தமுள்ள படுக்கை வசதிகள் ['அடைப்புக்குறிக்குள்'] கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, 12 July 2020

ஆன்லைன் யோகா சிகிட்சை

*யோகா_தெரபி*

சக்கரை வியாதி
இரத்த அழுத்தம்
ஆஸ்துமா
தைராய்டு
உடல் பருமன்
மனஅழுத்தம்
கர்பப்பை கோளாறு

போன்ற குறைபாடு கொண்டவர்களுக்கு
10 நாட்கள் யோகா தெரபி வகுப்பு
ஆன்லைனில் நடைபெறுகிறது.

உடற்பயிற்சி,யோகாசனம்,உடல் சுத்திகரிப்பு,
சுவாசப்பயிற்சி,தியானம்,வாழ்க்கை முறை,
உணவு முறை மாற்றம்,மற்றும் மூலிகைகளின்
மூலம் நிரந்தர தீர்வு.

இதுவரை பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களை
ஆரோக்கியப்படுத்திய அற்புத வழிமுறைகள்.

ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் DYT
(யோகா,இயற்கை வாழ்வியல் நிபுணர்)

தொடர்பிற்கு:
9629368389 (W)
9629131089  (M)

Saturday, 6 June 2020

தொட்டால் ஆறும்

* முள் இல்லா தொட்டால் சுருங்கி பார்த்திருங்கீங்களா? *
" நமஸ்காரி " எனும் தொட்டால் சுருங்கியின்  மருத்துவப்பயன்கள்-:
‘’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். Extra sense. (extrasensory power) ESP.
இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.
   
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.

குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்புண்ணில் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.
   உங்கள் நலங் கருதி.

Monday, 1 June 2020

எளிய வைத்தியம்

அஜீரணம்குணமாக

சுக்கு,மிளகு,திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிட்ட உடன்  ஒரு ஐந்து கிராம் அளவு கலவையை எடுத்து வாயில் போட்டு கால் டம்ளர் சுடுநீர் குடித்து வந்தால் அஜீரண வாய்வுத்தொல்லை தீரும்.!

🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
Aum Herbals
Mobile & Whats app
9629368389

சளி,இருமல்,காய்ச்சல் போக்கும் காப்பி

கசாயப்பொடி (அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !!!

கசாயப்பொடி.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

Thursday, 14 May 2020

யோகா தெரபி வகுப்பு

ஆன்லைன்_யோகா_தெரபி

சக்கரை வியாதியால்
பாதிக்கப்பட்டவர்களை
100 % இயற்கை மூலிகை
உணவு மற்றும் யோகா
பயிற்சியின் மூலம்
ஆரோக்கியப்படுத்துகிறோம்.

#மூன்று_வேளையும்
தேவையான ஆரோக்கிய
உணவு தயாரித்தல்
#உடற்பயிற்சி_யோகாசனம்
மூச்சிப்பயிற்சி,தியானம்
#தினமும்_இருவேளை
இயற்கை மூலிகை மருந்து

இவற்றோடு ஒருங்கிணைந்த
ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

நாள்:  மே 21 புதன் முதல்
31 ஞாயிறு வரை.

பயிற்சியாளர்:
ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் D.Y.T
(யோகா,இயற்கை வாழ்வியல் நிபுணர்)

முன் பதிவிற்கு:
9629131089
9629368389. aumherbals.blogspot.com

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

Sunday, 3 May 2020

பாத எரிச்சல் நீங்கும்

மூட்டு வலி, வீக்கம் தீர எளிய எண்ணெய்

தேவையான பொருட்கள்:

1.நல்லெண்ணெய் 200 மில்லி

2.எலுமிச்சம் பழச்சாறு 100 மில்லி

3.சிறிது வெடியுப்பு.

மூன்றையும் சிறு  தீயாக எரித்து கொதிக்க
வைத்து எடுத்து வைக்கவும்,

தீரும் நோய்கள்

பாத எரிச்சல் வீக்கம்.
ரத்தகட்டு
மூட்டு வலி, வீக்கம். தோல் பட்டை வலி வீக்கம்.
கனு சூலை, வலி. இந்த எண்ணெய்யை வெளிப்பிரயோகமாக தடவிவர மேற்கூறிய
அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் .

Thursday, 9 April 2020

மூலிகை குடிநீர் தயாரிப்பு.

மூலிகைநீர்....!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன.

உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.!!!

குறிப்பிட்ட எதேனும் ஒரு மூலிகையை தேவையான  அளவிற்கு எடுத்து  (25 முதல் 50 கிராம்) ஐந்து லிட்டர்
நீரில் போட்டு கொதிக்க வைத்து நாள் முழுக்க
குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

1. #ஆவாரம்பூ நீர்

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

2. #கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது.

மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

3. #செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

4. #நன்னாரி நீர்

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம்.

நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

5. #துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்துகொள்ளலாம்.

தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

6. #வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள்.

வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும்.

இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்!!!!

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...