I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: May 2017

Wednesday, 31 May 2017

இன்றைய வாழ்க்கை முறை

*உயிர் மீட்கும் மருத்துவம்*

27.ஆர்வக்கோளாறும்
அஜீரணக்கோளாறும்

" தேடுவதை நிறுத்து
தேடியது கிடைக்கும்.!
கண்களை மூடு
காட்சி தெரியும்.!
உன்னை இழ
உண்மையை அடைவாய்.! "

மிதமிஞ்சிய உணவுப்பழக்கத்தல் வரும் அஜீரணக்கோளாறைப் போலவே
மிதமிஞ்சிய அறிவுத் தேடலால் வருவதே அறிவுக்கோளாறு.!
எது நமக்குத் தேவையோ அதை கற்காமல் உலகில் என்ன வெல்லாம் கிடைக்கிறதோ அத்தனையையும்  கற்க முயலுவது ஒரு ஆர்வக்கோளாறு. நாம் நிறைவாக வாழ என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் தேடாமல் உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் வசதியையும் அடைந்துவிட நினைப்பது ஒரு வகை மனநோய்.  இதனால் பலரின் வாழ்க்கையில்  அமைதியின்மை முதல் மன அழுத்தம் வரை பல்வேறு உடல்,மனச்சிக்கல்கள் ஏற்படுவதோடு அவர்கள் சார்ந்த ஒரு நாடே வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்  சூழல் உருவாகிவிடும்.!
பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசு விவசாய கழகம் மண்ணிற்கு விசம்  வைக்க  கூறியபோது ஆசையில்  ஆர்வக் கோளாறாய் அதை செய்த விவசாயிகள் இன்று அஜீரணக் கோளாறால் தங்களுக்கு தாங்களே விசம் வைத்து அழிந்துபோகிறார்கள்.உண்மையில் இன்றைக்கு உள்ள அத்தனை தொழில் நுட்பங்களும் ஆராய்ச்சி அறிவும் பூமிக்கு தேவையற்றவை. அவற்றால் எந்த நன்மையும் விளையாது. என்பதை இன்று கண்டுகொண்டோம்.!கல்வி முறை, வாழ்க்கை முறை,ஆட்சி முறை அத்தனையிலும் இந்தியா இன்று தோற்று நிற்கிறது.!இது அத்தனையும் ஆள்வோர்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் ஆர்வக்கோளாறினால் ஏற்படுத்தப்பட்டு இன்று அஜீரணக் கோளாறில் முடிந்துவிட்டது.!நாம் கற்க தாய்மொழி கல்வி போதும், உழைக்க ஒரு வேலை போதும்,வாழ ஒரு துணை போதும், போக ஆறடி நிலம் போதும்.! ஏனெனில் பத்துநாள் பட்டினியாக இருந்தால் கூட ஒரே வேளையில் மூன்றுவேளை உணவையும் உண்ணமுடியாது.!
தினமும் நூறு நூலை கற்றாலும் அறிவால் சில கருத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும்.!
ஊரெல்லாம் ஆயிரம் இணைகளை  கவர்ந்தாலும் ஒரு  நாள் ஒரு துணையோடு மட்டுமே வாழ முடியும்.!
நமக்கு நான்கு வீடு இருக்கிறது என்பதற்காக கை,கால்,முண்டங்களை தனித்தனியாக ஒவ்வெரு வீட்டிலும் படுக்க வைக்கமுடியாது.!
பத்து ஜோடி செருப்பையும் ஆடையையும் ஒரே நேரத்தில் அணிந்துகொள்ள இயலாது.! மனித வாழ்க்கை  வரையறுக்கப்பட்டது.!
மனித மனமோ வரையறை இல்லாதது.! அன்று ஒன்றுமில்லாத காலத்திலேயே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவன் துறவி.!
இன்று எல்லாம் கிடைக்கும் காலத்தில் அத்தனைக்கும் ஆசைப்படு என்பவன் மோசடிக்கார வியாபாரி.! கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்பது பழமொழி.! கண்டதைப் படித்தால் பைத்தியமாகலாம் என்பதே புதுமொழி.!
அவரவர் தேவைக்கேற்ற கல்வி,தேவைக்கேற்ற வசதிகள்,குறிக்கோளிற்கு ஏற்ற உதவிகள்  கிடைத்தால் உயரலாம்.! இவை அனைத்தும் அதிகமாக கிடைத்தால்  உயர முடியாது.! ஏனெனில் இருப்பது இரண்டென்றால் நன்றான ஒன்றை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். இருப்பது நூறென்றால் நூறை ஆராய காலம் பிடிப்பதோடு தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.! இன்று மதக் கொள்கைகளை தவிர மீதி அனைத்தும் உலகில் மிகமிக அதிகமாகி விட்டன.! தமிழகத்தில் ஜாதிகளைப் போலவே அரசியல் கட்சிகளும் நூற்றிற்கும் மேலுள்ளன.!
இவைகளை முறைப்படுத்தாத வரை நம்மால் சரியான ஆட்சியை தேர்ந்தெடுத்து மீண்டும் நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியாது.!
வெளிநாட்டில் கட்சியும் மதமும் இரண்டொழிய வேறில்லை.!
அதுவே அவர்களின் அடிப்படை பலம்.!
அங்கும் கூட  வெளிநாட்டு தூண்டுதலின் பேரில் கொள்கை ரீதியில் சில குட்டி நாடுகள் தங்களுக்குள் மோதி  தனக்குத் தானே சவக்குளி வெட்டிக்கொள்கிறார்கள்.!ஆனாலும்,அமெரிக்கா,இங்கிலாந்து, சிங்கப்பூர்,ஜப்பான்,ஜெர்மன்,  சைனா,கிவ்பா போன்ற நாடுகளின் அரசியல் செயல்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாய் உள்ளன.!
நமது நாட்டை வளர்ந்த நாடுகள் தங்கள் குப்பைகளை விற்கும் இளிச்சவாய நாடாக ஆக்கி வைத்துள்ளனர்.!அரசு,விளம்பரப்பட நிறுவனங்கள்,சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்கி அவர்களின் மூலம் கேடான சட்டங்களைப் போட்டும்,  போலியான விளம்பரங்களை செய்தும் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றி கொள்கிறார்கள்.!
அதற்கு அரசிற்கு துணையாக  தங்கள் ஆன்மாவை உணராத மக்களில் பலரும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.!
உதாரணமாக உலகில் உள்ள அத்தனை மருத்துவ முறைகளும் இந்தியாவில் உள்ளன.! அவற்றை சாதி,மத பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.! சைனாவின் அக்குப்பஞ்சர் மருத்துவ முறையை இங்கு பல இஸ்லாமியர்களும்,கிறுஸ்தவர்களும் முன்னெடுத்து செல்கிறார்கள்.!ஆனால், இந்தியாவின் யோக மருத்துவ முறையை இந்தியர்களான இவர்களில் பலர் இன்னும் தெரிந்துகொள்ளவே தயங்குகிறார்கள்.!
அதை ஒரு மதச்சடங்கு என்று ஒதுக்கி விடுகிறார்கள்.!
இன்றும் கூட நமது கேப்பை கூழை கேலி செய்துவிட்டு பல இந்தியர்கள் பீட்சாவையும், கோக்கையும் சாப்பிட்டு  ஆகாவென கூறிக்கொள்கிறார்கள்.! அரசு நமது மூலிகைப் பொருட்களையும்,இயற்கை தானியங்களையும் ஏற்றுமதி செய்துவிட்டு மரபணு மாற்றிய விதைகளையும் இரசாயண மருந்துகளையும் இறக்குமதி செய்கிறது.!
உள்ளூரில் விவசாயம் செய்யவும் குடிக்கவும் நீரில்லாத போது வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கும் நீர் வழங்குகிறது.!
இலவச தாலியை வழங்கும் அரசே அதை அறுக்க குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை நடத்துகிறது.!
படித்தவர்கள் பலர் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியை கற்க பள்ளிகளுக்கு நன்கொடையாக இலட்சங்களை வழங்குகிறார்கள்.!
எளியவர்கள் பலரும் தேவையில்லாத பலப் பொருட்களை கடனுக்கு வாங்கிப் போட்டுவிட்டு
ஓய்வு நேரத்தில் கூட இன்னொரு பணியை செய்து அதிக வருமானம் பெற ஆலாய் பறக்கிறார்கள்.!
தாஜ்மகாலை மொகலாயன் கட்டினான்,இரயில்வேயை ஆங்கிலேயன் கொண்டுவந்தான்.! அவர்களின் அறிவோ அறிவு என்று சிலர் இன்னும் வியந்து போகிறார்கள்.!
தமிழர்களின் பாரம்பரிய கட்டிட ஞானத்தை மறந்துவிட்டு.!
இன்றைக்கு பலரும் உடை,உறைவிடம்,உணவு,வாழ்க்கை முறை,கல்வி,மருத்துவம் போன்ற அனைத்திலும் அன்னிய அடையாளங்களையே பின்பற்றுகிறோம்.!உண்மையில் நமது தேவை இதுவல்ல.! அன்பு,அமைதி, உணவு, இயற்கை சூழ்ந்த பாதுகாப்பான வாழ்க்கை முறை.! அதை நாம் அடைய வேண்டுமானால்.! எங்கும் தேட வேண்டாம் தேடுவதை நிறுத்தினால் போதும் நமக்குத் தேவையானவை அத்தனையும் நமது விவசாய நிலத்தில் கிடைக்கும்.!
அறிவை பெறுவதற்காக உலக ஊடகங்களை நாளெல்லாம் விழித்துப்பார்க்க வேண்டாம்.! கண்களை மூடி அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் போதும் இறைநிலை அகக் காட்சியின் மூலம் அனைத்து ஞானத்தையும் வழங்கும்.!
இந்தியாவின் ஆன்மாவை உணரும் முயற்சியில் நாம் நம்மையே இழந்தால்
உண்மையான பேரின்ப பெருவாழ்வை இப்பூமியிலேயே அடையலாம்.!
இதுவே இன்றைய அஜீரணக் கோளாறை நீக்க உள்ள ஒரேவழி.!
செய்வோமா,சகோதரர்களே?

--ஏகப்பிரியன் D.Y.T

தொடரும் …

100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

🌿AUM HERBALS🌿
Mobile & Whats app
9629368389

http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in

Saturday, 27 May 2017

முகாமிற்கு தேவையானவை

*இயற்கை வாழ்வியல் முகாமிற்கு வர இருப்பவர்கள் கொண்டு வர வேண்டியப் பொருட்கள்.!*

மே 28 ஆரல்வாய்மொழியில் நடைபெறும் இயற்கை வாழ்வியல் முகாமிற்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் 27 ஆம் தேதி இரவு எழு மணி முதல் 28 ஆம் தேதி காலை 6 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் ஆஸ்ரமத்திற்கு வந்து விடலாம்.!

ஆண்கள்:
ஒரு டிராக்சூட்,டீசர்ட்,ஒரு லுங்கி அல்லது வேட்டி,ஒரு டவ்வல்,ஒரு பெட்சீட் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு வாருங்கள்.!

பெண்கள்: டிசர்ட்,டிராக்சூட் அல்லது சுடிதார் ஒரு பெட்சீட் ஒரு வேட்டி ஒரு டவ்வல் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டுவாருங்கள்.!

சிறுவர் சிறுமிகளுக்கும் யோகா மற்றும் குளிப்பதற்கு
தேவையான ஆடைகளுடன் வந்துவிடுங்கள்.!

நீண்ட காலம் அலோபதி மாத்திரைகளை பயன்படுத்துவோர் அந்த மாத்திரைகளை கையோடு எடுத்துவாருங்கள்.!
சித்தா, ஆயுர்வேதா,யுனானி,ஹோமியோபதி, இயற்கை மூலிகை மருந்துகளை பயன்படுத்துவோர்
அவற்றை எடுத்துவர வேண்டாம்.!
புத்தகங்கள்,லேப்டப்,உணவுப் பொருட்கள்,சோப்பு,சேம்பு,எண்ணைய் போன்ற எதையும் கொண்டு வர வேண்டாம்.!
தேவையற்றப் பொருட்கள்  எதையும் கொண்டு வருவதை தவிருங்கள்.! எளிய நகைகளை மட்டும் அணிந்து வாருங்கள்.!

நலம் பெருகட்டும் …

--ஏகப்பிரியன் DYT
Mobile & Whats App
*9629368389*

மற்றொரு எண்: ஆஸ்ரம
நிர்வாகி சுகுமாரன் அய்யா
9715279979.!

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

Thursday, 25 May 2017

அனைவருக்கு ஏற்ற உணவு

*உயிர் மீட்கும் மருத்துவம்

26.உணவும் விரதமும்

ஐயிரண்டு திங்கள் மையிருட்டில் தவம் செய்து ஒடுங்கி நெளிந்து
ஓம்கார வடிவாகி பிறந்து வளர்ந்து
பின் சுவைக்காக
நஞ்சுண்டு பறந்து திரியும்  மானிடப் பிண்டங்கள் … பிணிவரும் முன்னே
தன் உடலை காத்திட …
பிணிவந்த காலத்தில்
உயிரை மீட்டிட …
ஒரு வழியுண்டு அதுவே இயற்கைவழி.! அதுவே இறைவழி.! வள்ளுவன் சொன்ன வழி …
கீதையும் உரைத்த வழி …
ஏசுதேவனும் மாநபியும் மகிழ்வாய் சென்ற வழி.!
அது பழம்  உண்ணும் பெருவழி  விரதமெனும் அருள்மொழி.!

-ஏகப்பிரியன்

உணவு மருந்தாக செயல் புரியவும்  மருத்துவ குணமுள்ள உணவுப் பொருட்களை உணவாக உட்கொள்ளவும்  பயிற்றுவிக்கப்பட்ட  மனிதர்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள்.!
ஆனால், இன்றைய  விளம்பர உலகு அந்த பண்பட்ட கல்வியின் மீது ஒரு இரும்புத்திரையை போட்டு மூடிவிட்டு சின்னத்திரையின் மூலமும் பெரிய திரையின் மூலமும்  பன்னாட்டு குப்பைகளை  நம் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டனர்.!!
பல் தேய்க்கும் பசையில் தொடங்கி ஹார்லிக்ஸ்,பூஸ்ட், பிஸ்கெட்,சாக்லேட், மரபணு மாற்றிய  உணவுப்பொருட்கள் என்று  நாம் பயன்படுத்தும் அத்தனையிலும்  90%
இரசாயண நச்சுக்களே நிறைந்துள்ளன.!
மேல் தோல் நீக்கிய அரிசியில், தானியங்களில் செய்த உணவுகளை சாப்பிடுவது உடலை வதைக்கும் ஒரு பாவச்செயல்.!
இதனால் மலச்சிக்கல் முதல் பல்வேறு நோய்கள் உருவாகும்.! இன்னும் மைதா,சீனி,மரபணுமாற்றிய காய்கனி மற்றும் நெல் இரகங்களைப் பற்றி கேட்டாலே  நமக்கு நெஞ்சம் பதறுகிறது.!
ஆனால், அரசும் ,அரசு விவசாய கழகமும் இந்த  மாபாதகச் செயலை  செய்வதற்காகவே பல நாடுகளோடு ஒப்பந்தம்  போட்டுள்ளனர்.!
அரசு ரேசன் கடையில் இரசாயண முறையில் விளைவிக்கப்பட்ட தீட்டிய அரிசி,தேயிலை, சீனி,மைதா போன்ற விசப்பொருட்களை கூசாமல் வழங்கி வருகிறார்கள்.!
அரசு விவசாய கழகத்தில் இரசாயண உரம் வாங்க மானியம் வழங்குவதோடு மரபணு  மாற்றிய காய்கறி,மிளகு, தென்னை இரகங்களை  விவசாயிகளுக்கு வழங்கி, மக்களின் ஆரோக்கியத்திற்கு சாவு மணி அடித்து வருகிறார்கள்.!
தனது சொந்த வரலாறு தெரியாத மக்களில் பலர் பற்பசையையும் சோப்பையும் கோக்,பெப்ஸி,முகபசை, இரசாயண மருந்துகள் தடுப்பூசி போன்றவற்றை பயன்படுத்துவது தான் நாகரீகம் என்று கருதி தங்கள் உடல்,மன ஆரோக்கியத்தை சீர்கெடுத்து கொள்வதோடு தங்கள்
சந்ததிகளின் வாழ்வையும் இந்த போலி கவுரவத்திற்கு பலியாக்கி விடுகிறார்கள்.!
உணவுப்பொருள்,நீர்,உப்பு,எண்ணைய் போன்ற அனைத்தும்  சத்துக்கள் நீக்கப்பட்ட குப்பைகளாகவே கடையில் விற்கப்படுகிறது.!
இதோடு போதாக்குறைக்கு நீர்நிலையை மாசுப்படுத்தல்,கனிமவளங்களை கொள்ளையடித்தல்,புதிய புதிய கொள்கைகளை வகுத்து அரசியல், அதிகாரப் போர்வையில்  நாட்டின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குதல் போன்ற  பல்வேறு பணிகள் இன்று தேசமெங்கும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.!
இந்நிலையில் நோய்களின் பெருக்கத்தையும் இளவயது மரணங்களையும் தடுப்பது யாராலும் இயலாத காரியமாகவே ஆகிவிட்டது.!
ஆயினும்  மனம் தளராமல் தமிழ் முன்னோர்களும் உலக தீர்க்கத் தரிசிகளும்  வகுத்து தந்துள்ள இயற்கை வாழ்வியல்  முறைகளை கடைப் பிடித்துவர  ஆரோக்கியமாக வாழ்வதுடன் எத்தகைய நாள்ப்பட்ட உயிர்க்கொல்லி  பிணிகளையும்  குணப்படுத்த முடியும்.!
அதற்கு நாம் செய்ய வேண்டிய  இரண்டு முக்கியக் காரியங்கள் என்னவெனில் ஒன்று  முடிந்தவரை இயற்கையான இரசாயண கலப்பில்லாத உணவுகளை  அளவோடு உண்பது.! இரண்டு உணவின் கழிவுகளை உடலில் சேர விடாமல்  உடல்நிலைக்கு தகுந்தவாறு  மூலிகைகளை எடுத்துக் கொள்வது மற்றும் அடிக்கடி உண்ணா நோன்பு, பழச்சாறு விரதம்,நீர்விரதம் போன்றவற்றை கடைப்பிடிப்பது.! இவைகளை மிகச்சரியாக திட்டமிட்டு செய்பவர்கள் புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு,மூளைக்காய்ச்சல், அடிக்கடி நோய்வாய்ப் படுதல், சக்கரை,இரத்த அழுத்தம்,மன அழுத்தம், உடல்பருமன்,வைரஸ் நோய்கள் போன்ற  எத்தகைய பிணியால் துன்பப்படுபவர்களாக இருந்தாலும்  இந்த இரண்டு வழிமுறைகளையும்   சரியாக
கடைப்பிடித்தால் எத்தகைய வியாதியிலிருந்தும் விடுபடலாம்.!
இன்னொரு முக்கிய விசயம் என்னவென்றால் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை  மனிதானாய் பிறந்த ஒவ்வெரு வரும் தினமும் பழக வேண்டும்.! ஏனெனில் உணவிலுள்ள சத்துப் பொருட்களை உள்ளுறுப்புகளும் நரம்பு மண்டலங்களும் சேகரித்துக் கொள்ள தேவையான உந்துதலை திட்டமிட்ட உடற்பயிற்சி,மூச்சிப்பயிற்சி, சுத்திகரிப்பு பயிற்சிகள் போன்றவற்றாலேயே வழங்க முடியும்.!
இதை தவிர புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கும்  பேலியோ டயட்,செயற்கை விட்டமின் மாத்திரைகள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை தீராத துன்பத்தையே தரும்.!
உணவில் முதல் தரமான உணவு எதுவெனில் இயற்கையில் விளைந்த  தேங்காய், வாழை,கொய்யா, மா,பலா,கிழங்குகள், பப்பாளி, கேரட்,பீட்ரூட், கீரைகள், சாத்துக்குடி,திராட்சை  போன்ற காய்கனிகளே இந்த உணவில் அப்படி என்ன உள்ளது என்றால் இதில் தான் விட்டமின்களும், பிராண சக்தியும் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.! அடுத்து சிறுதானியங்கள்,பருப்பு,உலர் கொட்டைகள் இவற்றில் கொஞ்சம் கொழுப்பும் நிறைய புரதச்சத்தும் மாவுச்சத்தும்  உள்ளன.!
ஆக  கடைசியில்  உள்ளவை தான் மாமிச உணவு,முட்டை,பால்,தயிர், எண்ணெய் போன்றவை இவற்றில்  மிருக கொழுப்பு,புரதம், விட்டமின் சி, பி 12 போன்ற சத்துகள் நிரம்பி உள்ளன.!
மனித உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும் சுறுசுறுப்பாக இயங்கவும்  அதற்கு முதல் தேவை அன்றன்று பறித்த காய்கனிகள் மட்டுமே.!
உடல் வளர்ச்சிக்கும் உடல்  வெப்ப சக்தி இயக்கத்திற்கும் தானியங்கள் மற்றும் தாவர மற்றும் மிருக கொழுப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன.!
மாமிச உணவுகளான மீன்,முட்டை,இறைச்சி போன்றவற்றை மாவும் சக்கரையும் நிறைந்துள்ள அரிசி,கோதுமை, மைதா,சிறு தானியங்கள்  போன்றவற்றோடு சேர்த்து உண்ணும் போது மனிதன்  அளவிற்கு அதிகமாக உண்டு விடுகிறான்.!
இதனாலேயே உடல் பருமன்,சக்கரை,இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற  பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறான்.!
இதற்கு மாற்றாக பேலியோ பார்ட்டிகள் தானியங்களை எடுக்காமல் மாமிச உணவு மற்றும் காய்கனிகளை மட்டும் உண்டு ஆரோக்கிய மாக வாழ்வதோடு எடையையும் குறைக்கலாம் என்கிறார்கள்.!
இது தேவையில்லாமல் எலியை பிடிக்க பாம்பை வளர்க்கும்  கதை.! ஏனெனில் உடல் சக்தியை  சீரழிக்காமல்  உணவின் சக்தியை உள்வாங்கிக் கொண்டு உடலை  சீராக இயங்க வைக்கும் ஆற்றல் காய்கனிகளுக்கு மட்டுமே உண்டு.!
சமைத்த சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் இந்த ஆற்றல் மிக குறைந்த அளவு மட்டுமே உள்ளது.!   மாமிச உணவு மற்றும் பால், தயிர் போன்ற  உணவுகளுக்கு  தனது சக்தியை மட்டும் தன்னை உண்ட உடலுக்கு வழங்கிவிட்டு கழிவுகளை  தானே வெளியேற்றும் சக்தி கிடையாது.! இந்த காரணத்தினாலேயே மாமிச உணவையும் தானிய உணவுகளையும் அதிகமாக  உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல்,வாய்வுத்தொல்லை,மாரடைப்பு,இதய நோய், உடல் பருமன்,சக்கரை,இரத்த அழத்தம் போன்ற  வியாதிகள் அதிகமாக வருகிறது.! அதோடு இந்த உணவின் எச்சங்களே உடலில் வியர்வை நாற்றம், ஊறல், சிடுசிடுப்பு, போன்றவற்றையும் தருகிறது.!
உணவின்  இன்னொரு  முக்கியத்தீங்கு மசாலாப் பொருட்கள் வத்தல்,பச்சமிளகு,  சமையல் உப்பு,புளி, சோடாப்பு,அஜினாமோட்டோ,ரீபைண்ட் ஆயில், கலர்ப்பொடிகள்  போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும்  அத்தனை உணவுப் பொருட்களும் மனித உடலுக்கு தீங்கை மட்டுமே  செய்யும்.!
வெங்காயம்,பூண்டு,மிளகு,கொத்தமல்லி,மஞ்சள், இந்துப்பு போன்றவற்றையும் அளவோடு பயன்படுத்தினால்  ஆரோக்கியம் தரும்.!
அளவிற்கு மிஞ்சினால் இதுவும் துன்பம் தரும்.!
மேற்கத்திய நாட்டினரும் அரேபிய பாலை வனத்தினருமே  மாமிச உணவுகளை தொன்றுத்தொட்டே அதிகமாக தின்று வருகிறார்கள்.! இந்த எச்சங்களை எரிக்கவே கிறுஸ்தவர்கள் பழ உணவு விரதத்தையும் இஸ்லாமியர்கள் இரமலான் விரதத்தையும் மேற்கொள்கிறார்கள்.!
இந்திய தத்துவங்களைப் பொறுத்த வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலர் தனது அசைவ உணவுப் பழக்கத்தை கடந்து வந்துவிட்டனர்.!
ஆயினும் மாவுப் பொருட்கள், பால்,தயிர்,வெண்ணைய் போன்றவற்றை  தொடர்ந்து உண்பதால் உடலிலும் மனதிலும் தோன்றிடும் சலிப்பைப் போக்கவும், கழிவை நீக்கவும் நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும்  உண்ணாநோன்பு, நீர்விரதம், மவுன விரதம்,செயல்விரதம் போன்ற பல்வேறு விரதங்களை கையாண்டு வெற்றி கண்டனர்.!
நாளடைவில் அனைத்து விரத முறைகளையும் பலர் கேலிக்குறியதாக மாற்றிவிட்டனர்.!
இப்பொழுது இரமலான் விரத காலத்தில் தான் இஸ்லாமியர்கள் அதிக இறைச்சி உணவுகளை உண்கிறார்கள்.!
அதை தவிர்த்து இரமலான் முழுவதும் பழ உணவுகளையும் சைவ உணவுகளையும்  மட்டுமே உட்கொண்டால்  நோன்பின் நோக்கம் நிறைவேறுவதோடு உடலிலும் புதிய உத்வேகம் பிறக்கும்.!
இன்று இந்திய மக்களில் பலருக்கு விரதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.!
எத்தகைய உடல்,மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களும் ஒரு நாள் பழ உணவு விரதம்
மறு நாள் நீர் விரதம் என்று தொடர்ந்து 10 நாட்கள் கடைப்பிடித்தால் அந்தந்த நோய்களின் தாக்கம் 80% வரை குறைந்துவிடும்.!
இதுகூட முடியாதவர்கள் இடையுணவு விரதம் அதாவது மூன்று வேளை உணவைத்தவிர இடையில் எதையும் உண்ணாது நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.! அல்லது உணவில் 60%வரை இயற்கை காய்கனிகளை மட்டுமே உண்டு  அதிக இயற்கை உணவு விரதம் இருக்கலாம்.!
அனைவருமே உணவில் எப்பொழுதும் மாமிச மற்றும் தானிய உணவை குறைத்துக் கொண்டு முறையான  உடலியல் பயிற்சிகளை கடைப்பிடித்து வந்தால் வாய்வுத்தொல்லை, உடல் பருமன்,சக்கரை போன்றவற்றை எளிதில் குணப்படுத்துவதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு போன்ற எந்த வியாதியும் நெருங்காத ,வயிறு என்ற ஒன்றே  இல்லாத மனிதனைப் போல் லேசாக உணரலாம்.!
செய்வோமா சகோதரர்களே?

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

☘ 100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
Mobile & Whatsapp

http/amyogatrust.blogspot.in
http/aumherbals.blogspot.in

Wednesday, 24 May 2017

குழந்தை வைத்தியம்

குழந்தைக்கு மலச்சிக்கலா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல  தேனை  ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன்உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால் தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளக்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தயின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

நாட்டுமருந்து கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும் போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துகொள்ளவும். குழந்தையை குளிப்பட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில  குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வட்டிக்கட்டி ஊற்றினால் வாந்தி சற்றென்று நின்று விடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்ல உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு பிசைந்து வடிகட்டி சங்களவு புகட்டினால் ஒரு மணி நேரத்தில் கழிவு வெளியேறிவிடும்.!
மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம்.

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...