*உயிர் மீட்கும் மருத்துவம்*
25 எனிமா ஒரு இனிய அனுபவம்
"ஓதுகின்ற மலக்கட்டை
ஒழித்து விட்டால்
கொல்ல வரும் காலனையும்
வெல்லலாம் என்றவன்
தமிழ்ச்சித்தன் அகத்திய முனி …
கழிவுகளின் தேக்கமில்லாத
உடலில் கிருமிகள் புகுந்தால்
கிருமிகளே சாகும்
தூய உடல் சாகாது என்றவன்
அயல்நாட்டு ஆல்பர்ட் பீச்சாம்ப் …
கழிவை நீக்க வாமண தௌதி
பஸ்தி போன்ற பல யுக்திகளை
கண்டறிந்தவன் தமிழன்
பதஞ்சலி முனிவன் …
இஞ்ஞானம் உணராத
மனிதன் பிணிகளின்
தேவன் குப்பைகளின்
தலைவன்.! "
பதஞ்சலி யோகச்சூத்திரத்தில் உள்ள ஆறு கிரியைகளை
கடைப்பிடிக்கும் மனிதனின் உடல்
ஆரோக்கியத்தின் அட்சயப் பாத்திரம்.! அதையே ஒளி உடல் என்று விடலாம்.! தலைக்குப் பின்னால் ஒளியைத் தேடி அலையும் மனிதர்களை மறந்து விட்டால் ஒன்றுமில்லை.!
ஆனால், தன் உடலையே
அற்புத ஒளியாக மாற்றிய மகா மனிதர்களை மறந்து விட்டால்
தமிழர் ஆரோக்கிய வரலாற்றையே
மறந்தவர்களாகி விடுவோம்.!
அதை செய்ய வேண்டாமே.!
*ஒரு விசயம் இருக்கிறது அதை செய்தால் உடலில் விசம் ஏறாது,தோல்வியாதிகளே வராது,மன அழுத்தம்,இரத்த அழுத்தம்,சக்கரை ஏன் புற்றுநோய் கூட வராது.!* ஆனால்,விசயம் என்னவென்றால் அதை செய்யும் சக்தியை நவீன மனிதன் இழந்துவிட்டான்.!
அதன் பெயர் பஸ்தி.! அந்த வைரத்தை இழந்தாலும் கூட அதுபோன்றே ஒரு பிளாஸ்டிக் கல்லை நவீன மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.!
அதுதான் எனிமா கேன் இதைப் பயன்படுத்தி பெருங்குடலில் எங்கும் கழிவு மலம் இல்லாமல் செய்துவிட்டால் நோய்களே தாக்காது.!
எந்த நோய்ப் பிடித்தவரையும் காப்பாற்றிவிடலாம் பக்கவாதம், பைத்தியம்,மனநோய், வைரஸ் காய்ச்சல்,மரடைப்பு போன்ற வியாதிகளை எல்லாம் எனிமா போய் வாம்மா என்று நொடியில் விரட்டிவிடும்.!
இதைப்பற்றி உங்களுக்கு இதுவரை ஒன்றுமே தெரியாது என்றால் தயவு செய்து சத்தமிட்டு அழுங்கள் அல்லது எனது வங்கிக் கணக்கில் உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை மாற்றிவிடுங்கள்.!
அப்பொழுதுதான் நீங்கள் செய்த பாவம் தீரும்.! இதை கற்று உங்கள் வீட்டில் ஏதேனும் நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கும் எனிமா கேனை பயன்படுத்தி பெருங்குடல் கழிவை நீக்க கற்றுக் கொடுங்கள்.!
அன்னயாவிலும் புண்ணியம் கோடி பெறுவீர்கள்.!
எதோ மிகைப்படுத்திக் கூறுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.! மிக குறைத்துதான் கூறுகிறேன்.!
பெருங்குடலில் ஒரு துளி கழிவு கூட இல்லாத ஒரு காலையை எனிமா குடுவை தருவது போல் வேறு யாராலும் உங்களுக்கு தந்துவிட முடியாது.!
அந்த ஆனந்தத்தை உணர்ந்து பாருங்கள்.!
எனக்கொன்றும் மலச்சிக்கல் இல்லை தினமும் இருவேளை கழிவறை செல்கிறேன்.! அதனால்; என் குடலில் கழிவுகளே இல்லை என்று முட்டாய்தனமாக நம்பிக்கொண்டிராதீர்கள்.! நாளெல்லாம் பத்து தடவை முக்கிமுக்கி போனாலும் சுருட்டுக் குடலில் சுருண்டுகிடக்கும் கழிவுகள் வெளியேறாது.!
நன்றாக மலம் கழிக்கும் ஒவ்வெரு வரும் தினமும் தங்கள் உடல் இயங்கு திறனிற்கேற்ப 30 முதல் 80 % வரை மட்டுமே கழிவை வெளியேற்றுகிறார்கள்.! மற்றவை சேமிப்புக் கணக்கில் நாற்றமெடுத்துக் கொண்டுள்ளது என்பது புனே யோகாசன ஆராய்ச்சி மையைத்தின் ஆய்வு முடிவு.! இதை தெரிந்துதான் முன்னோர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது விளக்கெண்ணை, இஞ்சிச்சாறு,பேதிமாத்திரை போன்றவற்றை பயன்படுத்தி வயிற்றைக் கழுவிவந்தனர்.! இன்றும் காவல்துறை,இராணுவம் போன்றவற்றில் பணிபுரிவோர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதாக கூறுகிறார்கள்.!
பண்டைய யோகிகள் சிறிய முங்கில் குச்சி,பப்பாளித்தண்டு போன்றவற்றை ஆசனவாயில் சொருகிக் கொண்டு ஆற்றில் அமர்ந்து தங்கள் ஆசனவாயை மேல் நோக்கி இழுத்து பெருங்குடல் முழுவதும் நீரை நிரைத்துக் கொண்டு நௌலி சலனக்கிரியா,அக்னிசாராக் கிரியா போன்ற பயிற்சியை செய்து குடலில் உள்ள ஒவ்வெரு மடிப்பிலுமுள்ள கழிவையும் முற்றிலும் வெளியேற்றி தங்கள் பெருங்குடலை தூய்மை செய்தனர்.!
அதன் பிறகு வந்த சாதாரண நம்மைப் போன்ற சம்சார யோகிகளின் குடல் அந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டது.!
இப்பொழுது இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் எனிமா குடுவை சிறுவர்கள், பெரியவர்கள், நோயாளிகள் என்று அனைவரும் பயன்படுத்தி பயனடையும் வகையில் எளிய வடிவில் இருக்கிறது.!
இயற்கை விரும்பிகளில் ஒரு சிலர்
பசியெடுத்தால் சாப்பிடுங்கள்,
தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள் என்பதைப் போலவே
கழிவு வந்தால் வெளியேற்றுங்கள்
மற்றபடி குடுவையில் நீர் நிரைத்து பெருங்குடலை சுத்திகரிக்க வேண்டாம் அதே பழக்கமாகிவிடும் என்கிறார்கள்.! அவர்கள் கூறுவது தவறு.! போதுமான இடைவெளியில், நன்றாக உழைத்த பின் பசிக்காவிட்டாலும் உணவருந்தலாம்.!
நிறைய வியர்வை,சிறுநீர் வெளியேறிய பின் தாகம் எடுக்காவிட்டாலும் நீர் அருந்த வேண்டும்.!
மயங்கி விழுந்த பின் கூட அருந்தலாம்.! என்றிருப்பது முட்டாள் தனம்.! உடல் இழந்த கலோரிகளை உடனே ஈடு செய்ய வேண்டும்.!
உடல் எடையை குறைக்க,பருமனை குறைக்க,நோயை நீக்க முயற்சி செய்பவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் குறைந்த அளவு கலோரிகளை உணவின் மூலமும் நீரின் மூலமும் எடுத்துக்கொள்ளலாம்.!
இதைவிடுத்து ஒன்றையுமே சாப்பிடாமல் பசிக்காகவும் தாகத்திற்காகவும் காத்திருப்பது ஆபத்தான வேலை.! அது போலதான் 80% வரை கழிவு இயல்பாகவே போய்விடுகிறதே மீதமுள்ளவை இயல்பாக என்றேனும் ஒருநாள் பேதியாக போய்விடும்.! என்று காத்திருப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.!
வாந்தி பேதியில் உயிரே போனவர்கள் ஏராளம்.!
அதைவிட கேடு என்னவென்றால் கழிவாக தேங்கியுள்ள மலம் அடிப்பகுதியில் இறுக்கப்பட்டு அவற்றில் உள்ள நீர்ச்சத்து கல்லீரல் வழியாக மீண்டும் இரத்தத்தில் கலந்து ஆரம்பத்தில் பல்வேறு விதமான தோல் வியாதிகள்,மூட்டுவலி,வாய்வுத் தொல்லை,வியர்வை நாற்றம் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.! இறுதியில் புற்றுநோய்,மஞ்சள் காமாளை,இதயநோய்,பக்கவாதம் போன்ற பல்வேறு கடினமான நோய்கள் உடலில் உருவாக தேங்கிய மலமும் ஒரு முக்கியக் காரணமாகி விடுகிறது.!
அதனால் தான் வருமுன் காக்கவும், வந்த நோயை நீக்கவும் நீர்க்குடுவையை பயன்படுத்தி மலம் நீக்குவது அவசியமானதாய் இருக்கிறது.!
பள்ளிப் பருவம் முதலே யோகாவின் அடிப்படையான காற்றை சுத்திகரிக்கும் கபாலபதி,கண்களை சுத்தப்படுத்தும் திராட்டகா,
கபத்தை சுத்திகரிக்கும் வாமணதௌதி,
பெருங்குடலை சுத்திகரிக்கும் பஸ்தி உள்ளிட்டப் பயிற்சிகளை அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும்.!
40 வயதை கடந்தவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் நேதி குடுவை, எனிமா நீர்க்குடுவை,கண்குடுவை போன்றவற்றை பயன்படுத்தி தங்கள் உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள தெரியாமல் இருந்தால் அதுவும் ஒரு குற்றம் என்று அறிவித்து அனைவருக்கும் இந்தப் பயிற்சிகளையும் கருவிகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்க வேண்டும் இப்படிச் செய்தால் பேதி போகவில்லை என்று மருத்துவமனையில் அனுமதித்து பராமரிக்க வேண்டிய நிலை வராது.! அதுபோலவே சுவாசம் இயல்பாக நடைபெற வில்லை என்று படத்தில் இருப்பவரைப் போல வீட்டிலேயே ஆக்ஸிஜன் என்று கூறப்படுவதை வைத்து சுவாசிக்கும் துர்பாக்கிய நிலையும் வராது.!அதோடு மக்கள் ஆரோக்கியத்திற்காக சுகாதாரத் துறை செலவிடும் தொகை வெறும் 20% மாக குறைந்துவிடும்.!
இன்று அதிகாலையில் நான் மூன்று முறை எனிமா குடுவையை பயன்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தி விட்டு காலை 9 மணி வரை நீர் மட்டும் அருந்தினேன்.!
வழக்கமாக கொஞ்சம் வாய்வு நர்த்தனமாடும் எனது வயிறு இன்று முழுவதும் இல்லாதது போல் ஆகிவிட்டது.! இப்பொழுது மூன்று நாட்களாக நான் தொடர்ந்து எனிமா குடுவையை பயன்படுத்தி வருவதால் முதலில் வெக்கையில் உடலில் தோன்றிய சிறு கொப்புளங்கள் எல்லாம் இப்பொழுது காய்ந்துவிட்டன.!
சிறு வயதில் யோகம் பயில ஆரம்பித்த முதல் மாதத்தில் உடலில் தோன்றிய புத்துணர்வும் உடல் மிதக்கும் நிலையையும் மீண்டும் இப்பொழுது உணர்கிறேன்.!
சரி எனிமா குடுவையை எப்படி பயன்படுத்துவது, எங்கு வாங்குவது என்று கேட்கிறீர்களா?
எல்லா இயற்கை மருத்துவமனை மற்றும் இயற்கை வாழ்வியல் மையம். ஒரு சில யோகா மையங்கள் அனைத்துப் பெரிய ஆங்கில மருந்துகடைகளிலும் எனிமா கேன் கிடைக்கும்.!
நீங்களும் வாங்கி பயன்படுத்தி உங்கள் வீட்டிலுள்ளப் பெரியவர்களுக்கும் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்களேன் … !
தமிழ் சித்தன் பெற்ற ஆனந்தம் இவ்வையகம் பெறட்டும் …!
--ஏகப்பிரியன் DYT
தொடரும் …
🌾100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
AUM HERBALS
Mobile & Whats App
9629368389
http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in
No comments:
Post a Comment