I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: அம்சமான தோற்றம் பெற

Wednesday, 17 May 2017

அம்சமான தோற்றம் பெற

உடல் எடை மற்றும்​
தொப்பை குறைய

*மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்) , கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து அதில் எலுமிச்சம்பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து , சின்ன வெங்காயம் (2) அரிந்து போட்டு , எல்லாவற்றையும் அரைத்துச் சாறு எடுத்து , காலை  உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்...*

*ஆளி விதையைப் பொடி செய்து  (100 கிராம்), அத்துடன் குங்கிலிய பஸ்பம் (10 கிராம்) சேர்த்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.*

*ஆலம் விழுது - 300 கிராம்.*
*அமுக்கரா பொடி - 150 கிராம்.*
*சுக்கு - 50 கிராம்*
*மிளகு - 25 கிராம்*

*மேற்கூறிய அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இவற்றை காலை மாலை ஏன இருவேளையும் 5 கிராம் அளவுக்கு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வரவும்.*

*வெந்தயம் , சுண்டைக்காய் வற்றல் , மிளகு - தலா 50 கிராம்  எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால்  உடல் எடை குறையும்.*

*சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் நறுக்கிபோட்டு சாப்பிட்டு வந்தால் பருமனான உடல் எடை குறையும்.*

*பூண்டு (2பல்) , ஒமம் (கால் ஸ்பூன்)  , மிளகு (5) இவை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் , வயிற்றுப் புழு சாகும். கொழுப்பு கரையும்  , உடல் பருமன் குறையும்.*

*வயிறு கரைய:-*

*ஒமம் , இஞ்சி  இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில்  48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருவயிறு குறையும்.*

*வெள்ளைப்பூண்டு (2 பல்) , மிளகு( 4 ) , கரிசாலங்கண்ணி ( சிறிதளவு) - மூன்றையும்  ஒன்றாகச் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் பெரு வயிறு ஒரே மாதத்தில் கரையும்.*

*கரிசலாங்கண்ணி கீரையை​ சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.*

*பாலக் கீரையுடன் வேப்பிலை , ஓமம்,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாகச் சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு குறையும்.*!

-இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...