உயிர்மீட்கும்
மருத்துவம்
41.உயிராற்றலை மேம்படுத்தும்
பத்துகுளியல் முறைகள்.!
" வானும் மண்ணும்
காற்றும் நீரும்
நெருப்பும் நிறமும்
உயிரும் உறவும்
தந்தவன் அவனன்றோ
அதை மறந்தால்
வாழ்வுண்டோ …! "
1.சூரியக் குளியல்
---------------------
கதிரவனின் வெப்பம் ஒருலட்சத்து அம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.!
உலகின் மலர்ச்சிக்கும் விடியலுக்கும் கதிரவனே காரணமாய் இருக்கிறது.!
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் இயக்கத்தில் மிக முக்கியமானது பித்தம் என்றழைக்கப்படும் சூரியசக்தி.!
மனித உடலில் பித்தத்தின் இயக்கம் சீராக இல்லையெனில்
மனிதன் கோழையாவான். பல்வேறு உடல் பிணிகள் ஏற்படும். இவ்வளவும் ஏன், சூடாக இயங்கும் உடலைத்தான் மனிதன் என்கிறோம்.! குளிர்ந்த உடல் பிணத்திற்கு சமம்.!
சூரியன் மூலம் வரும் வெப்ப சக்திக்கு இத்தனை வல்லமை இருந்தாலும், ஆதிகாலந்தொட்டே அதிக உஷ்ணசக்தியை கண்டு,உலக மனிதன் அஞ்சியே வாழ்ந்து வருகிறான்.!
ஆனால்,நமது பாரத முன்னோர்கள் சூரியநமஸ்காரம் என்ற ஒன்றை கண்டறிந்து, சூரியனின் ஆற்றலை உடலுக்குள் கிரகிக்கவும் அதன்மூலம் உடலில் உள்ளத் தேவையற்ற கழிவுகளை எரிக்கவும், கட்டிகளை கரைக்கவும், தோலை மெலனின் பகுதியால் உறுதியான கவசமாக்கவும், எலும்பை வலிமையான கேடயமாக்கவும், கதிரவனோடு இயைந்து வாழ்ந்து வந்தனர்.!
முன்னோர் ஞானம் போற்றி,போற்றி.!
இது போன்ற, பல்வேறு பலன்கள் சூரியக்குளியலில்இருப்பதை, தனது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்த வெளிநாட்டினர், சூரிய ஆற்றலை தன் உடலில் கிரகித்துக் கொள்வதற்காகவே, சூரியக்குளியல் என்ற ஒன்றை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.! இன்றைக்கும் உலகில் தட்பவெப்ப மாறுதல்களால் அதிகம் பாதிப்படையாமல் இயங்கும் நாடுகளில் நமது பாரதமே முதன்மையானது.! அமெரிக்கா, அரேபியா, ஆப்ரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெயில் என்றால் கொடுர வெயில், பனி என்றால் நடுநடுங்க வைக்கும் பனி , பனிகாலத்தில் வீட்டின் உள்ளேயே கூட கம்பளிகளைப் போட்டுக் கொண்டால்தான், வாழ முடியும்.! என்ற நிலை;ஆனால், நாமோ அதிகமான மார்கழிப் பனியில் அதிகாலையிலேயே பஜனை பாடிவிட்டு, சித்திரையின் சுட்டெரிக்கும் வெயிலில் தேர்த்திருவிழாவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.!
கதிரவன், வாயு, வருணன் அனைவரையும் தேவனாக்கி பலரும் பூஜையும் செய்துவருகிறார்கள்.! இது சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இவர்களா கடவுள்? என்று; எகத்தாளமாகவும் இருக்கிறது.! ஆனால், நமது நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வெரு அசைவிலும் பல ஆயிரம் உடல், மன, இயற்கையின் இரகசியங்கள் மறைந்திருக்கிறது!
ஆகையால், கொடை வெப்பத்தை பார்த்தோ அல்லது ஆரம்ப கட்டி,சிறுநீரக செயலிழப்பு போன்ற வற்றைப் பார்த்தோ யாரும் பயப்படவே தேவையில்லை.! அதிகாலையில் எழும் பழக்கமும் வெயிலில் உலாவும் பழக்கமும் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வரவே வராது.!
அதிகாலை இளம்வெயிலில் குறைந்த ஆடையுடன் தினமும் ஆறு முதல் பனிரெண்டு சுற்றுகள் வரை சூரியநமஸ்காரம் <யோகாசனம்> செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.!
இது மட்டுமல்லாமல் சிறுநீரகச் செயலிழப்பு, கிட்னிகல், பித்தப்பைகல், கண்கட்டி, தோல்நோய், புற்றுநோய்,இளநரை, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பிரச்சனை உள்ளவர் களுக்கு இந்த இந்த சூரியக் குளியல் ஒரு வரப்பிரசாதம்.! நல்ல மண்பானை நீரை மூன்று முதல் நான்கு டம்ளர் வரை குடித்துவிட்டு, வெறுமனே கடற்கரையிலோ,வீட்டு மொட்டை மாடியிலோ, தினமும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை உள்ள நேரத்தில் ஏதேனும் ஒரு 30 முதல் 60 நிமிடம் சூரியக் குளியல் செய்தாலே போதும்.உடலின் புதிய பரிமாணம் விளங்கும்.! அதைவிடுத்து வெயிலில் போகக்கூடாது,கோடைகாலம் என்றால் ஏசியிலேயே இருக்க வேண்டும், முகத்தில் கிரீம் போட்டுக்கொள்ள
வேண்டும்.
என்று இருப்பவர்க்கு மட்டுமே அத்தனை வியாதிகளும் வரும்.! கொடை வருவதற்கு முன்பே கோவா, கோவளம் , கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு பல வெளிநாட்டினர் வந்து குவிவார்கள்.!
அவர்களுக்குதான் வெயிலின் மகத்துவம் தெரியும்.! அது நமக்கும் தெரிந்தால் வாழ்வுவிடியும்.!
2.மண் குளியல்
--------------------------
பஞ்சபூத ஆற்றலில் முதலாவதாக குறிப்பிடுவது நிலத்தைதான்.! இந்த நிலத்தை வளப்படுத்துவதோடு, மனித உயிர்கள் வாழ்வதற்கு, தேவையான அனைத்து உணவுகளையும், உற்பத்தி செய்துதருவது மண்தான்.! மண்ணில் உயிரினங்களின் உடலின் உள்ளே இருக்கும் அத்தனை வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் குவிந்து கிடக்கின்றன.!
அதனால் தான், மண்ணில் விதைக்கும் எதுவும் நூறாக,ஆயிரமாக வளர்ந்து பயனளிக்கிறது.! அதோடு மண்ணில் வெறும் காலோடு நடந்தால் மண்ணில் உள்ள சக்தியை உள்ளங்காலின் ஆற்றல் மேல் நோக்கி இழுத்து தனது பிணிகளைப் போக்கிக் கொள்கிறது.!
தினமும் ஒரு மணிநேரம் உயிரோட்டம் உள்ள மண் தரையிலோ,புல்தரையிலோ நடந்து வந்தாலே பாத எரிச்சல் குதிகால்வலி, கண் சிகப்பு,மன அழுத்தம் போன்றவை குணமாகும்.!
மண் குளியலுக்கு செம்மண், நிலத்தில் உள்ளக் களிமண்,கரையான் புற்று மண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.! அல்லது நமது தோட்டப் பகுதியிலோ சுற்றுப்புறத்திலோ மண் எடுப்பதென்றால் ஐந்தடிக்கு கீழ் உள்ள மண்ணை தோண்டி எடுப்பது நல்லது.! ஏனெனில் அதில்தான் உயிராற்றல் நிறைந்திருக்கும்.!
இப்படி எடுக்கும் மண்ணை அல்லது, கறையான் புற்றை எடுத்து கொஞ்சம் காயவைத்து ,ஒரு அரிப்பை வைத்து அரித்து கீழ்வரும் மண்ணை எடுத்து,
ஒரு ஆளுக்கு இரண்டுகிலோ மண்ணோடு, நூறுகிராம் மூலிகை குளியல் பொடி, கையளவு வேப்பிலை, கையளவு குப்பைமேனி இலை இவற்றையும், சேர்த்து கொழகொழ பதத்தில் முதல் நாள் மாலையில் மூடிவைத்து விட்டு, அடுத்தநாள் காலையில் மண்ணை தேவையான பதத்தில் குழைத்து கொண்டு, இரண்டு காதிலும் சிறிய பஞ்சை வைத்து அடைத்து விட்டு, உடலெல்லாம் இந்தக் கலவையை பூசி அரைமணி நேரம் முதல் ஒரு மணிநேரம் வரை, வெயிலில் நின்று காய்ந்ததும் குளியல் பொடி போட்டுக் குளித்துவிடலாம்.! குளிர் பிடிக்காதவர் களுக்கு உடனே மண்ணை எடுத்து நீர்சேர்த்து அடுப்பில் லேசாக மண்ணை வேகவைத்து உடலில் பூசிக் கொள்ளலாம்.!
இதனால்,தோல்நோய்கள் குணமாகும்.! கல்லீரல் வீக்கம்,சிறுநீரக செயலிழப்பு,முதுகுவலி,மூட்டுவலி,உடல் வலி கழுத்துவலி, கைகால் வீக்கம் குணமாகும்.!
உடல் முழுவதும் மண் தேய்த்து குளிக்க முடியாதவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மண்ணை குழைத்துப் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளலாம்.! இதனால், அந்தந்த இடத்தில் உள்ள வலி,வீக்கம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.! குளிர்க்காய்ச்சல்,வலிப்பு போன்றவை இருப்பவர்களுக்கு சிறிது மண்ணை வேகவைத்து நெற்றியிலும் வயிற்றிலும் பட்டையாகத்தடவி காய்ந்ததும் கழுவி வந்தால் குளிர்காய்ச்சல்,வலிப்பு போன்றவை குணமாகும்.!நாள்ப்பட்ட புண்களின் மேலே ஒரு துணியை வைத்து அதன்மேல் வேகவைத்த மண்ணை வைத்து வெயிலில் அமர்ந்து வந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.! <நாள்ப்பட்ட புண்ணில் மண் நேரடியாக படக்கூடாது.>
3.வாழையிலை குளியல்;
----------------------
நன்றாக வெயில் உள்ள இடத்தில் காலை 10 மணிமுதல் 12 மணிவரை உள்ள வெயில் நேரத்தில் மொட்டை மாடியில் பாயை விரித்து அதன்மேல் ஐந்து வழை நாரை போட்டு அதற்கு மேல் நான்கு முதல் 6 பெரிய வாழை இலையை பரப்பிவிட்டு, வாழையிலை குளியல் எடுப்பவரை ஐந்து டம்ளர் நீரைக்குடிக்க செய்து,தலையில் ஒரு ஈர டவலை கட்டிக்கொள்ள வைத்து துண்டு அல்லது வெறும் உள்ளாடையுடன் வாழையிலையின் மேல் படுக்க வைத்து, காலிலிருந்து கழுத்து வரை இலையால் மூடிவிட்டு முகத்தை மூடும் இலையில் மட்டும் மூக்கின் அருகே காற்று போவதற்காக கொஞ்சம் கிழித்து விட்டு மூடிவிட்டு, முதலில் கீழே விரித்திருந்த நாரால் இடைவெளி இல்லாமல் சுற்றி சிறிது தளர்வாக கட்டிவிடவும்.!
இதே நிலையில் 15 முதல் 25 நிமிடம் வரை படுக்கவைத்த பின் மெதுவாக கட்டை அவிழ்த்து, மூன்றுமுறை மூச்சை இழுத்துவிட செய்து மெதுவாக எழுப்பிவிடலாம்.!
வாழையிலையின் உள்ளே இருக்கும் போது சிலர் அதிக சூடாக இருப்பதாக கூறினால், இலையின் மேலே சிறிது நீரை தெளிக்கலாம்.! குளியல் முடிந்து எழுந்ததும் தலையில் உள்ள ஈர டவலை வைத்து உடல் முழுவதையும் துடைத்து விட்டு, கொஞ்சம் எலுமிச்சை,தேன்,உப்பு கலந்த நீரை கொடுத்து பின் 15 நிமிடம் கழித்து குளிக்க வைக்கலாம்.!
இப்படி வாழையிலை குளியல் மேற் கொள்வதால் …
உடலில் கெட்டநீர் முழுவதும் வெளியேறி <சுமார் 3 லிட்டர்> இரத்தம் சுத்தமாகும்.!
உடல் பருமன் குறையும்.! தோல்நோய்கள் குணமாகும்.!
உள்ளுறுப்புகளின் செயல்திறன் அதிகரிக்கும்.!
பசியின்மை,அஜீரணக்கோளாறு நீங்கும்.!
ஜாதக ரீதியில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!
4.எண்ணெய் குளியல்;
----------------------
வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை மேம்படுத்தி,உடலில் தட்ப வெப்ப நிலை எப்போதும் சீராக இருக்கவும்,
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும்
உடலின் சளியை வெளியேற்றவும்,இழுப்பு,ஈஸ்னோஃபீலியா போன்ற வியாதிகளை குணப்படுத்தவும் உதவும் முக்கிய வழிமுறைகளில் ஒன்று எண்ணெய் குளியல்.!
சிறிது சூடாக்கிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையை உச்சந்தலை, காதுமடல்கள்,தொப்புள்,விரல் நகங்கள்,உள்ளங்கால்கள், முகம்,கைகால்கள் போன்ற இடங்களில் நன்றாக அழுத்தித் தேய்த்து,ஒரு அரைமணி நேரம் இளம் வெயிலில் நின்று விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்து விடலாம்.!
பொதுவாக ஆண்கள் சொவ்வாய்,சனிக்கிழமைகளிலும் பெண்கள் திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்வது மரபு.! ஆயினும்,மேற்கண்டப் பிரச்சனை உள்ளவர்கள், தங்களுக்கு வாய்ப்புள்ள நாளில் எண்ணெய் குளியல் செய்து தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.!
5.இடுப்புக்குளியல்;
------------------------------
ஒரு பெரிய நீண்ட குளியல் தொட்டியில் இடுப்பளவு நீர் ஊற்றிக் கொண்டு,
தலையில் ஒரு ஈர டவ்வலை சுற்றிக் கட்டிக் கொண்டு குறைந்தப்பட்ச ஆடை அல்லது ஆடையில்லாமல், கால்களை குளியல் தொட்டியின் வெளியே வைத்துக் கொண்டு
முதுகை சாய்த்து அமர்ந்துகொள்ள வேண்டும்.!
<இதற்கான டப் இயற்கை மருத்துவ மையங்களில் கிடைக்கும்>
இப்படியே 20 முதல் 60 நிமிடம் வரை அமர்ந்து வந்தால் கர்பபை நீர்க்கட்டி,கர்பபை பலவீனம்,கல்லீரல் அலர்ஜி,சிறுநீரகல்,பாங்கிரியாஸ் சீரின்மை,வயிற்றுவலி,பிறப்புறுப்பு புண்கள் புண்கள்,வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.!
2 மாதங்கள் வரை தினமும் அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் என்று தொடர்ந்து இந்தக் குளியலை மேற்கொள்ள வேண்டும்.!
6.பாதக்குளியல்;
-----------------------------
பாதஎரிச்சல்,பாதவெடிப்பு, பாதவலி,குதிகால் வலி,கைகால் வீக்கம்,கணுக்கால்குடைச்சல் பாதத்தில் வியர்த்தல்,கைகால் நடுக்கம்,உடல்சூடு,தூக்கமின்மை போன்றவற்றை நீங்கச் செய்யும்.!
கால் மணிக்கட்டு வரை நீர்வைக்கும் பாத்திரத்தில் சாதாரண நீரை வைத்து,அதில் கால்களை வைத்துக் கொண்டு
<தலையில் ஒரு ஈர டவ்வலை தலப்பா போன்று கட்டிக்கொள்வது நல்லது> 15 முதல் 30 நிமிடம் வரை அப்படியே வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.! இடையில் நீரில் உடல் சூடு இறங்கியதைப்போல் உணர்ந்தால் அதில் உள்ள நீரை மாற்றி விட்டு வேறு நீரை ஊற்றிக்கொள்ளலாம்.!
இதுபோலவே இரண்டு நிமிடம் சாதா நீரிலும் இரண்டு நிமிடம் சூடுநீரிலும் என்று காலை மாற்றி மாற்றி வைத்தும் எடுக்கலாம்.!இறுதியாக பச்சைத் தண்ணீரில் கால் வைப்பதோடு குளியலை முடித்து விடவேண்டும்.!
ஒரு தண்ணீரில் இருந்து அடுத்த தண்ணீருக்கு மாறும்போது, கால்களை துடைத்துக் கொள்வதோடு அந்தந்த நீரின் தன்மை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!
7.தலை குளியல்;
-------------------------------
உடலை நனைக்காமல் தலையில் மட்டும் தொடர்ந்து ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை குனிந்துநின்று நீரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.!
இப்படி செய்வதால் ஒற்றை தலைவலி,மூளைச்சுடு,மனஅழத்தம்,மூக்கில் மணம் தெரியாமை, நரம்புபலவீனம் போன்றவை குணமாகும்.!
8.முதுகுத்தண்டு குளியல்;
--------------------------
இதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்டப் போன்ற அகன்ற தொட்டியில் ஒருவர் படுத்தால், காது மாடலுக்கு அருகில் வரை நீர் படுமளவுக்கு நீரை நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு உள்ளாடை மட்டும் அணிந்து அப்படியே அந்த நீரில் சாந்தியாசன நிலையில் மல்லாந்து கால்கள் டப்பிற்கு வெளியே இருக்குமாறு வைத்து படுத்து கொள்ளுங்கள்.!இப்படியே 15 முதல் 60 நிமிடம் வரை படுத்துக் கொள்ளலாம்.! பிறகு மெதுவாக எழுந்து கொள்ளலாம். தேவையெனில் இளஞ்சூடான நீரையும் இதற்கு பயன்படுத்தலாம்.!சிலருக்கு முதுகுகுளியல் செய்யும் போது தூக்கம் வந்தால் அப்படியே தூங்கிவிட்டு விழிப்பு வந்ததும் எழும்பி விடலாம்.!
இது உடலுக்கும் மிகவும் நல்லது.!இதை செய்வதால் முதுகுவலி,கழுத்துவலி,இடுப்புவலி,ஆசனவாய் வலி,கால்வலி போன்றவை ஒரிரு நாளிலேயே குறைந்து விடும்.!
இடுப்புக் குளியல்,முதுகுக்குளியல் போன்றவற்றை கால்களை வெளியே வைத்து செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், குளியல் தொட்டியில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து இடுப்பளவு நீர்விட்டு இடுப்புக் குளியல் அல்லது முதுகு குளியல் செய்வது போல பாத் டப்பிலேயே செய்யலாம். தேவையெனில் அந்த நேரத்தில் அடிக்கடி ஒரு ஈரத்துணியை நனைத்து மேல் வயிற்றின் மேலும் போட்டுக் கொள்ளலாம்.!
9.நீராவிக்குளியல்
----------------------
நீராவிக்குளியல் செய்வதால் இரத்தம் சுத்தமாகும், வியர்வை சுரபியில் உள்ள கழிவுகள் வெளியேறும்,உடல்வலி,மனஅழுத்தம் குறையும்.!
நீராவி குளியலுக்கென்றே பிரத்யோக கருவிகள் வர்மா,ஆயூர்வேதா,இயற்கை மருத்துவ மையங்களில் வைத்திருப்பார்கள்.ஒரு பெரிய பெட்டி போன்ற அமைப்பில் உள்ள ஒரு இடத்தில் அமரவைத்து பக்க வாட்டில் மூலிகை கொதிநீரில் இருந்துவரும் ஆவியை சிறிய குழாய்வழியாக பெட்டிக்குள் அனுப்புவார்கள்.!
இதில் 20 முதல் 30 நிமிடம் வரை அமர்ந்து கொள்ளலாம்.!
இதை வீட்டில் செய்ய வேண்டுமெனில் நமது குளியல் அறையில் உள்ள காற்று வெளியேறாத வகையில் சுற்றிலும் மூடிவிட்டு இரண்டு பக்கெட் சூடுநீரில் யூகாலிப்டஸ் ஆயில் அல்லது புதினா தைலம் 20 சொட்டுக்கள் வரை கலந்து நமது குளியல் அறையின் தரையில் வெளியே நின்று கொண்டு ஊற்றிவிட்டு கதவை வெளிபுறமாக மூடி விட வேண்டும்.!
ஒரு 30 விநாடிகள் கழித்து திறந்தால் அங்கு வெந்நீரில் இருந்து கிளம்பிய ஆவி படர்ந்திருக்கும்,அதில் கதகதப்பு இருக்கும் வரை நின்றுவிட்டு 10 நிமிடம் கழித்து சாதாரண நீரில் குளித்து கொள்ளலாம்.!
இதே குளியலை குளியல் அறையை உள்ப்பக்கமாக அடைத்துக் கொண்டு ஒரு இரும்பு அல்லது மர நாற்காலியில் அமர்ந்துகொண்டு
தைல வெந்நீரை கொட்டிவிடலாம்.!
காலில் நீர் கொட்டி விடாமல் கவனமாக செய்ய வேண்டியது மிக அவசியம்.! முடியாதவர்கள் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடு நீரை வைத்து சிறிது துளசி,வேப்பிலை போன்றவற்றை போட்டு முகத்தை துணியால் மூடி ஆவி பிடித்துக்கொள்வது போல ஆசன வாயை ஆவியில் காட்டியபடி நின்றும், நாற்காலியில் அமர்ந்து பாதங்களை ஆவியில் காட்டியும் சளி,இருமல்,பிறப்புறுப்பு புண்கள்,பாதவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.!
இந்த குளியலை வாரம் இருமுறை அல்லது நோய்த்தாக்கம் உள்ள நேரத்தில் தினமும் ஒரு முறை செய்து நிவாரணம் பெறலாம்.!
10.அருவி குளியல்
------------------------
ஒரு மாத காலத்திற்கு தினமும் காலை,மாலை 20 முதல் 40 நிமிடம் வரை குற்றாலம், திற்பரப்பு,உலக்கையருவி போன்ற அருவியில் தலையில் ஒரே சீராக நீர் விழும் நிலையில் நின்று அல்லது அமர்ந்து குளித்து வந்தால் மனநோய்,மன அழுத்தம்,உடல்பருமன்,கொழுப்படைப்பு,தீராத தேகச்சூடு,உடல் அரிப்பு,சொரியாஸிஸ் போன்றவை மாறுவதோடு தேக ஆரோக்கியம் மேம்படும்.
இளமையான தோற்றம் கிடைக்கும்.!
இயற்கை அருவிக்கு செல்ல முடியாதவர்கள்- செயற்கை நீர்வீழ்ச்சி,பம்புசெட் போன்றவற்றில் குளித்தும் இதே பயனைப் பெறலாம்.!
இவை தவிர கழுத்துவரை நீரில் அமர்ந்து செய்யும் கழுத்து குளியல்,நிலவில் படுத்து செய்யும் நிலாக்குளியல்,மரங்கள் சூழ்ந்த பகுதியில் படுத்து செய்யும் பிராணக்குளியல் போன்ற பல குளியல் முறைகள் ஆதி இயற்கை மருத்துவத்தில் உள்ளன.!
குளியலுக்காக பயன்படுத்தும் நீரில் தேவைக்கேற்ப சிறிது யூகலிப்டஸ் தைலம்,எலுமிச்சைச்சாறு,உப்பு,தேன், புதினா தைலம் போன்றவற்றில் எதேனும் ஒன்றை கலந்து கொள்ளலாம்.! அதாவது உடல் வலி,பாதவலி இருந்தால் யூகலிப்டஸ் தைலம் போடலாம்.!
புத்துணர்வுக்காக எலுமிச்சை,தேன் போன்றவற்றையும்,தோலில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க உப்பு,புதினா தைலம் போன்றவற்றையும் கலந்து கொள்ளலாம்.!
ஏதேனும் ஒன்றை மட்டுமே ஓரிரு துளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பொருட்களை சேர்த்து பயன்படுத்துவது நல்லதல்ல.!
எந்த வகை குளியல் எடுப்பவர்களும் வெறும் வயிற்றில் நீர் அல்லது நீர் அதிகமுள்ள பழச்சாறுகளை மட்டுமே குடித்துகொண்டு குளியல் செய்ய வேண்டும் உணவு எடுத்துகொண்டால் குறைந்தது 4 மணிநேரம் கழித்தே குளியல் செய்ய வேண்டும்.!
இடுப்புக்குளியல்,முதுகுக்குளியல் செய்தவர்கள் தேவையெனில் ஒரு 10 நிமிடம் தலைக் குளியலோ அல்லது வழக்கமான உடல் குளியலோ செய்து கொள்ளலாம்.
அதிக இரத்த அழுத்தம்,இதயநோய்,மாரடைப்பு,தூக்கமின்மை, மனநோய் போன்ற ஆரோக்கியக் குறைபாட்டிற்காக மாத்திரை சாப்பிடுபவர்கள், பத்து நிமிடத்திற்கு மேல் எந்த குளியலையும் செய்ய வேண்டாம்.!
இந்த முறைகளை கடைப்பிடித்து வரும் நாட்களில் அசைவ உணவு,பகல்தூக்கம்,தாம்பத்ய உறவு,அதிகப்பணி போன்றவற்றை தவிர்த்து முடிந்தவரை ஒருவேளை பழம்,காய்கறி,சமைக்காத தானியங்களையும் இருவேளை சமைத்த எளிய உணவுகளையும் உண்டு இடை வேளையில் வெறும் நீர் அல்லது பழச்சாறுகளை மட்டுமே உண்டு வரவேண்டும்.!
நலம் பெருகட்டும் …
இது போன்றே யோகாசனம்,
தியானம்,மூலிகை மருத்துவ செய்முறை,வர்மக்கலை,
இயற்கை உணவு திட்டம் என்று பல்வேறு ஆரோக்கிய வாழ்வியல்
முறைகளை அறிந்து கொள்ள
நமது ஆதிமருத்துவம் நூலை
படித்து பயிலுங்கள்.!
நூல் தேவைக்கு : 9629368389
9629131089 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.!
www.aumherbals.com