I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தியானம் செய்வோம்

Saturday, 23 October 2021

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம்

" உணர்வுநிலை உருவம்
உணர்வற்ற நிலை அருவம்
உணர்வு கடந்த உணர்வற்ற
நிலை தியானம் "

எப்பொழுதும் எதையாவது ஒன்றையோ பலதையோ
சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே மனதின் வேலை. மனம் என்பது எண்ணக்குவியல் தோன்றும்
இடத்தின் பெயர்.!
சூரியவெப்பம் விநாடிக்கு ஒரு லட்சத்து எம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமிக்கு வருவதாக
கண்டறிந்து விட்டனர். மனதின் வேகம் என்னவென்று இதுவரை
திட்டவட்டமாக கூற முடியவில்லை.!
மனதின் வேகம் மனிதனிற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே
இருப்பதாலேயே  அது
சாத்தியப்படவில்லை.!
நாம் உண்ணும் உணவில் உள்ள மிக நுண்ணிய சத்துப்பகுதிகளை மூளை தனது உணவாக எடுத்துக்கொண்டு எண்ணத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்கிவருகிறது.!
மனதில் தோன்றும் எண்ணம் ஒரு குரங்கிற்கு ஒப்பானது.! இந்த எண்ண அலைகளை நிறுத்திவிட்டால் இதற்காக உடல் இதுவரை செலவழித்து வந்த சக்தி உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்று உடலை, உள்ளுறுப்புகளை, நரம்புமண்டலங்களை பலப்படுத்தும்  வேலைக்கு பயன்படும்.!
எண்ணம் மூன்றுவிதமாக இடைவிடாது மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.! கடந்தகால நிகழ்வுகளின் தொடர்ச்சி, நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால
எதிர்ப்பார்ப்புகள் என்று இயங்கிக் கொண்டே இருக்கும்.! இதற்குள் ஏமாற்றம், பயம், அகங்காரம்,
நம்பிக்கை,  வெற்றி,உற்சாகம், சோர்வு போன்ற எண்ணற்ற உணர்வுகளின்  பதிவுகள் தொடர்ந்து மனதை ஏதோ ஒரு நிலையில் செலுத்திக் கொண்டே இருக்கும்.! விளைவு இரவில் உடல் உறங்கும்போது  ஏன் மனமே உறங்கும் போது கூட எண்ண அலைகள்  உறங்காது இடைவிடாது பணி செய்துகொண்டே இருக்கும்.!
இதனால் தான் தூக்கத்தில் உளறுதல், சிரித்தல். நாம் ஏதாவது பணியில் இருக்கும் போது எங்கோ கேட்ட பாடல் நமக்குள்ளே
ஒலித்துக் கொண்டிருத்தல், காரணமே இல்லாமல் தோன்றும் இனம் புரியாத பய உணர்வு, திடீர் மகிழ்ச்சி போன்ற பல்வேறு  உணர்வுகளும் எண்ணங்களும் நமக்குள் தோன்றுகின்றன.! இது போன்ற எண்ணங்களை முறைப்படுத்தி  எண்ணங்களை ஒரே இலக்கை நோக்கி செலுத்தவும், எண்ணம் கடந்த நிலையான ஒன்றுமில்லா ஒன்றில் நிலைக்க செய்யவும் நமக்கு இருக்கும் ஒரே வலிமையான கருவி தியானம் மட்டும் தான்.! பக்தி,
மந்திர உட்சாடனம்,சேவை செய்தல்,தனது கடமைகளை தவறாது செய்தல் போன்ற இன்னும் எண்ணற்ற வழிகள் மனதை ஒரே நேர்கோட்டில் செலுத்த உள்ளன. ஆனால், அவையாயும் தியானத்தை விட மிக கீழான நிலையில் உள்ள தந்திரங்களே.! ஏனெனில்,
தியானத்தை தவிர மற்றவை அனைத்தும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணக்குவியல்களை மனதில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.!ஆனால், தியானத்தில் நிலைபெற்ற மனதில் எண்ணமே நின்று அதற்கடுத்த நிலையான சமாதிநிலை தோன்றும். சமாதி நிலையை கடக்கும் ஆற்றல் உள்ள மனமே சம்யமா என்னும் மறைபொருளை உணரும் உச்ச ஆற்றலை பெறுகிறது.!
தியானத்திற்கு பிறகு
சமாதி,சம்யமா என்ற இரண்டு நிலைகள் இருப்பது போலவே
தியானத்திற்கு முன்
பிரத்தியாகாரம், தாரனை என்ற இரண்டு நிலைகள் உள்ளன.!
அதாவது மனதை புலன்வழி செல்லாமல் தடுத்து அதை உள்முகமாக திருப்புதல் பிரத்தியாகாரம் எனப்படும்.
அப்படி உள்முகமாக திருப்பிய ஆற்றல் அதே நிலையில் 12 விநாடிகள் நிற்பது தாரனை.  12 தாரனையின் கால அளவு ஒரேப்பொருளை சிந்திப்பது தியானம். ஒரேப்பொருளை சிந்தித்த மனது, சிந்தனை இரண்டும் ஒன்றாகி ,லயித்து அப்படியே நின்றுவிடுவதே சமாதி. அப்படியே நின்றுவிட்ட ஆற்றல் பரம்பொருளான பிரபஞ்ச ஆற்றலுக்குள் நுழைந்து அதன் உண்மை தன்மையை கண்டறிவதே சம்யமம். இதுவே தியானத்தின் உச்சநிலை. இதுவே ஞானம்.! சிலர் இந்தநிலைக்கு செல்வதற்கான முயற்சியில் அரைகுறை ஞானத்துடன் மனப்பிரழ்வு ஏற்பட்டு மனநோயாளி ஆவதும் உண்டு.!
சரி நாம் அதற்குள் போக வேண்டாம். சிந்தனையை கடந்து
தியான நிலைக்கு போவதை மட்டும் பார்ப்போம்.! எந்த எண்ணம்
மனதில் உதித்தாலும் அதை 12 விநாடி நேரத்திற்குள் கடந்துவிட்டால் எண்ணம் நம்மை விட்டு போய்விடும். 12 விநாடிகள் கடந்தும் ஏமாற்றம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதை நாம் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்தாலும் அந்த எண்ணம் நமக்குள் ஆழமாக ஊடுருவி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிடும்.!
அதனால் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வெருவரும் வீணான எந்த
சிந்தனைகளையும் பனிரெண்டு 
விநாடிகளுக்குள் கடந்து  தங்களுக்கு பிடித்த கடவுள், இயற்கைகாட்சிகள்,மந்திரங்கள் போன்றவற்றையோ அல்லது மூக்கு நுனியையோ தொடர்ந்து  120 - 144 விநாடி முதல்  12 நிமிடம் வரை  மனக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தால் தியானநிலை உருவாகும்.! இப்படி ஒரேப் பொருளை நாம் நினைக்க
ஆரம்பிக்கும் போது இதுவரை பல எண்ணங்களில் செலவாகி வந்த நமது ஆற்றல் ஒரு முகமாவதால் 
பூரண ஓய்வு, உடல் ஆரோக்கியம், நரம்பு மண்டல ஆரோக்கியம், நாள்ப்பட்ட பிணியிலிருந்து விடுதலை எண்ணிய குறிக்கோளில் வெற்றி போன்றவற்றில் நாம்
விரும்பிய  எதையும் அடையலாம்.!   
இந்த உண்மையை உணர்ந்ததால் தான்  மகாகவி பாரதியார்
"தமிழா பலநாள் சாப்பிடாமல் இருந்தாலும் இரு. ஆனால், ஒருநாள் கூட தியானம் செய்யாமல் இருக்காதே "என்றார்;
வாருங்கள்,எண்ணங்களிலிருந்து விடுதலைப்பெற்று பூரண
அமைதி பெற சுகமாக தியானம்
செய்வோம்.!

---ஏகப்பிரியன் DYT----

யோகா & இயற்கை
மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் 💐

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...