I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: October 2017

Thursday, 26 October 2017

கல்லீரல் பலமாகும்

கல்லீரல் நோய்கான எளிய மருத்துவம்

காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும்.

செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும்.

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும்.

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும்.!

-இணையப்பகிர்வு

Wednesday, 25 October 2017

சிறுநீரகத்தொற்று குணமாகும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு இளநீரில் மொத்தம் பத்து கிராம் அளவிற்கு கடுக்காய் பொடியைப்போட்டு கலக்கி குடித்துவிட்டு ஒரு மணி நேரம் உணவு நீர் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் 12 முதல் 24 நாளில் சிறுநீரகத்தொற்று,சிறுநீரகப்புண்,உடல்சூடு,குடல்புண் போன்றவை குணமாகும். தினமும் ஒருவேளை சமைக்காத காய்கறி,பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.!

வெறும் வயிறு என்பது காலை எழுந்து இரண்டு டம்ளர் நீர் அருந்தி காலைகடன் கழித்தபின் இருப்பது.!

aumherbals.blogspot.com

Saturday, 21 October 2017

இயற்கை மூலிகை தயாரிப்பு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

17.A எளிய மூலிகை மருந்துகள்  தயாரிக்கும் முறை

நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து  பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!

இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய  நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம்  பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.! இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல்  அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.!

1.மூலிகை பல்பொடி

1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு   50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய்  20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர்  5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்

இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர  பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!

2.மூலிகை குளியல் பொடி

1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து  பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து  முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!

3.இயற்கை ஊட்டச்சத்து மாவு

1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்

இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து  காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!

4.துளசி மாத்திரை

கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!

5.அமுக்ரா மாத்திரை

1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி  25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்

மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது  வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து  எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!

6.பஞ்சமூலி சூரணம்

1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை  தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம்  முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!

7.மூலிகை தேனீர்

1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்

மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!

8.புதினா தைலம்

1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!

9.நிலவேம்பு குடிநீர்

1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு  100 கிராம்

இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு  திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி  உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!

எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!

இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

*பகிரவேண்டாம்*

Saturday, 14 October 2017

உண்ணும் முறை

*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய 30 தகவல்கள்*!!

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*

*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.!

*இணையப்பகிர்வு*

Thursday, 12 October 2017

இயற்கை முகாம்

தற்காப்பு இரகசியங்கள்

உயிர் மீட்கும் மருத்துவம்

22 A. தற்காப்பு கலையும்
ஆரோக்கிய வாழ்வும்

" அழகின் அடிப்படை
உயற்வின் ஊற்று
வாழ்வின் வசந்தம்
ஒழுக்கத்தின் ஓசை
அறிவாளிகளின் முதல் தேடல்
முட்டாள்களின் இறுதி புகலிடம் -
கலை மனிதனின் மேன்மை.! "

உலகில் மிகப்பழமையான கலைகள் மூன்று.

1.மல்யுத்தம்
2.யோகா
3.பரதநாட்டியம்

இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் இந்த மூன்று கலைகளுமே நமது நாட்டின்
சொத்து.! இதன் பிறகு உலகில் தோன்றிய பலநூறு  கலைகளுக்கும் இந்த மூன்று கலைகளுமே சாரம்.!
மனிதன் தனது அறிவின் மூலமும் உழைப்பின் மூலமும் ஒரு விசயத்தை ஒழுங்கு படுத்தும்போது
அது கலையாகப்பிறக்கிறது.!
கலையே மனிதன்  மகிழ்வாக வாழவும், மகானாக மலரவும்
வழிகாட்டுகிறது.!
தற்காப்புக்கலை என்பது மனிதன் தனது உடலையும் பொருளையும்
தன்மானத்தையும் காத்துக்கொள்ள
உருவாக்கப்பட்ட ஒரு அரியக்கவசம்.!
யோகம்,நடனம், இசை போன்றவற்றில் உள்ள அனைத்து நுட்பங்களும் கச்சிதமாக ஏற்கனவே வடிவமைக் கப்பட்டுள்ளதால்
அவற்றை பயில்கின்றவர்களுக்கு
எத்தகைய ஆபத்தும் இல்லை என்பதோடு நொடியில் முடிவெடுத்து
செயல்பட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு கிடையாது.!
ஆனால், தற்காப்புக்கலையை பொறுத்தவரை வடிவமைக்கப்பட்ட நுட்பங்களை மட்டுமே சார்ந்திருந்தால் வெற்றிபெற முடியாது.
நொடியில் முடிவெடுக்கும் திறனும்
ஆபத்தில் சிதறாத மனநிலையும்
தற்காப்பு கலை பயில்பவர்களுக்கு
மிக முக்கியத்தேவை.!
இந்த ஒரு காரணத்தாலேயே
மற்ற எல்லா கலைகளை விடவும்
தற்காப்புக்கலை உடல்,மன ஆற்றலை அதிகப்படுத்துவதில் முதன்மையாய் விளங்குகிறது.!
சரியாகத்தான் கூறுகிறேன். யோகத்தின் நிறைவுப்பகுதியில் பிரபஞ்ச ஆற்றல் முழுவதையும்
தனதாக்கிக் கொள்ளும் உடல்,மன,ஆன்மா இணைப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஆபத்து நிறைந்த ஒரு பயிற்சி முறை. இந்த நிலையில் பலருக்கும் மூளை குழம்பிப்போக வாய்ப்புள்ளது.என்பதால் இந்த நுட்பங்களை பல குருமார்கள், யாருக்கும் கற்பிப்பதில்லை. ஆனால்,தற்காப்பில் அப்படி இல்லாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் சரியான காலத்தில் 
அனைத்து நுட்பங்களுமே எல்லோருக்கும் கற்பிக்கப்படுகிறது.!
அதையும் தாண்டி பாய்வது
அவரவர் தனித்திறனைப் பொறுத்தது.!

யோகாவில் உள்ள பலநுட்பங்கள் மல்யுத்தம் போன்ற பழைய தற்காப்புக்கலை முதல் கராமர போன்ற புதிய தற்காப்பு முறையிலும் நிறைந்துள்ளது. அவை மனம் குவித்தல்,பிராண சக்தியை அதிகரித்தல்,கழிவு நீக்கம் போன்ற பல தலைப்புகளில் பாடமாக உள்ளது.!
உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பூட்டிய அறைகளில் பல இயந்திரங்களுக்கு மத்தியில் செய்யப்படும் உடற்பயிற்சிகளை விட  திறந்த வெளியில்  பயிலப்படும் தற்காப்புக்கலை பத்து மடங்கு அதிக ஆரோக்கியத்தை வழங்கும். அனைத்து தற்காப்பு கலை பயிலகங்களிலும் உடல் தகுதிக்காக எளிய விளையாட்டு உடற்பயிற்சிகளும் கற்பிக்கப்படுகிறது.!
வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் தினமும்  இரண்டு மணி நேரம் மல்யுத்தம்,வர்மக்கலை,களரி,குத்துவரிசை,சிலம்பம்,ஜூடோ,குத்துச்சண்டை,கராத்தே,டேகுவண்டோ,குங்ஃபூ,தாய்ஃஷி,கராமர  போன்ற தற்காப்புக்கலைகளில் ஏதேனும் ஒன்றை பயின்று வந்தால் உடல் திறன் அதிகரிப்பதுடன் கவனக்குவிப்புத்திறன்,நோயெதிர்ப்பு ஆற்றல், உள்ளுறுப்புகளின் பலம், இரத்தசுத்தி போன்றவையும் ஏற்படுவதோடு புகைப்பிடித்தல், தாழ்வு மனப்பான்மை,மனஅழுத்தம்,மதுகுடித்தல்,தவறான சேர்க்கை, உடல் பருமன்,உடல் பலவீனம்,தற்கொலை சிந்தனை போன்ற பல உடல், மன சீர்கேடுகள் குணமாகும்.!

கராத்தே,குங்ஃபூ,குத்துச்சண்டை போன்ற கலைகளில் உள்ள சிறிய பின்னடைவு என்னவென்றால் இவற்றை ஒரு 35,40 வயதிற்கு மேல் புதிதாக கற்றுக்கொள்வதற்கான உடல் தகுதி பலருக்கும் இருப்பதில்லை.
அதுபோலவே வெறுமனே காற்றில் வேகமாக குத்துதல்,உதைத்தல் போன்ற  நுட்பங்களை இந்த தற்காப்பு பயிற்சியில்  மிக அதிகமாக செய்யப்படுவதால் உடல் இணைப்பு பகுதிகளில் சிலருக்கு வலி ஏற்படும்.! தற்காப்புக்கலைகளில் உள்ளதைப்போன்ற கைகால்களை நீட்டல்,குதித்தல்,சுழலுதல் போன்ற பல நுட்பங்கள் நடனக்கலையிலும் உள்ளது. ஆயினும் நடனம் கற்பதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.! தாய்ச்சி தற்காப்புக்கலையில் வேகமாக குத்துதல்,வேகமாகஉதைத்தல்,வேகமாக சுழலுதல் போன்றவை இல்லாததால் இது உடலுக்கு உறுத்தலை வழங்காமல்
சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாய் இருக்கிறது. நமது மல்யுத்தம்,வர்மம்,களரி,சிலம்பம்,குத்துவரிசை போன்ற தற்காப்புக்கலைகள் உடலை அதன் போக்கிலேயே விட்டு புவியீர்ப்பு விசையின் இயக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு
உடல்,மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆபத்தான நேரத்தில் எளிதாக தற்காத்துக்கொள்ளவும் பேருதவி புரிகிறது.!
நான் எனது பதினைந்தாவது வயதில் நாகர்கோவில் மின்னல் திரவியம் ஆசானின் சீடர் பறக்கன்கால், வேல் முருகன் அண்ணனிடம் கொஞ்சம் நாட்கள் சிலம்பம் கற்றுக்கொண்டேன். நான் கற்ற பல நுட்பங்களை மாட்டுக்காரவேலன்,தாய் சொல்லை தட்டாதே போன்ற சில எம்ஜிஆர் படங்களில் கண்டு மிகவும் மகிழ்ந்துள்ளேன்.! ஆனாலும் என்னால் தொடர்ந்து சிலம்ப வகுப்பிற்கு செல்ல முடியவில்லை. ஏனெனில்,இன்றுபோல்  கலையை மட்டுமே கற்றுக்கொடுக்கின்ற ஆசான்கள் அன்று இல்லை. பல்வேறு பணிகளுக்கு இடையில்
தான் வேல்முருகன் அண்ணன்,நான் உள்ளிட்ட  ஒரு சிலருக்கு பயிற்சி கொடுத்துவந்தார். பிறகு மாணவர்கள் வரத்து குறைந்ததால் அவர் வகுப்பெடுப்பதை விட்டுவிட்டார்.! அதன் பிறகு கோட்டாரில்  பழனிமுருகன் மாஸ்டரிடம்  ஆலன் திலக் சிட்டோரியோ கராத்தே வகுப்பில் சேர்ந்து சென்சாய் சசிதரன் மாஸ்டரிடம் பிளாக்பெல்ட்  வரை பெற்றேன்.! யோகாவின் மூலம் எனது பல பிணிகள் குணமாகி இருந்தாலும்.மனித உடல் மற்றும் மனதின் ஆற்றலை நான் நேரடியாக தரிசித்தது கராத்தே வகுப்பில் தான். நான் கலந்துகொண்ட முதல் கராத்தே போட்டியில் எனது எடைப்பிரிவில் <குமித்தே> எனது சீனியர் தெங்கம்புதூர் கண்ணனை தோற்கடித்து இரண்டாம் இடம் பிடித்தேன். அதன் பிறகு திருச்சூர்,சென்னை,பெங்களூர் போன்ற  பல மாநிலங்களில்  நடந்த அகில இந்திய அளவிலான தற்காப்புக்கலை போட்டிகளிலும் கலந்துகொண்டு  டேகுவாண்டோ,குங்ஃபூ போன்ற பல தற்காப்புக்கலை மாணவர்களுடனும் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளேன்.!
எனக்கு 23 வயதில் வந்த நுரையீரல் அடைப்பு  நோயை விரட்டுவதற்கு யோகாவைப் போலவே தற்காப்புக்கலை பயிற்சியும் மிகமிக உதவிகரமாய் இருந்தது. நுரையீரல் அடைப்பு இருந்த போது முதலில் பயிற்சி  செய்யும் போது களைப்பு,தூக்க உணர்வு,இழுப்பு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இரண்டு மூன்று மாத  பயிற்சிக்கு பின் அவை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதை நினைத்தால் இன்றும் கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது.!
அது போலவே நான் கற்ற தற்காப்புப்பயிற்சியால்  பல முறை எனக்கு வந்த ஆபத்துகளில் இருந்து எளிதாக தப்பியுள்ளேன்.!
சில பலவீனர்களையும் குழந்தைகளையும் ஆபத்திலிருந்து  காப்பாற்றியும் இருக்கிறேன்.!
மது,புகை,தீய எண்ணங்கள் போன்ற கெட்டப்பழக்கங்கள் என்னை இன்றும் தீண்டாமல் இருப்பதற்கு நான் கற்ற தற்காப்புப் பயிற்சிகளும் மிக முக்கியக்காரணம்.! எனது திருமணத்திற்கு பின்  பணி நிமித்தமாக சென்னை வந்து விட்டதால் பல கலைகளையும்  பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.!
ஆனாலும், தற்காப்புக்கலை தந்த அடிப்படை
ஆரோக்கியமும் பாதுகாப்பும் என் உயிரோடு கலந்து இன்றும் உறவாடி வருகிறது.! இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் மகன் இஜாஸ் +2 முடித்தவுடன் அவனிடம் " மேற்கொண்டு என்ன படிக்கப் போற? " அப்டின்னு கேட்டேன்; அவன் குங்ஃபூ படிச்சி பெரிய மாஸ்டர் ஆகப்போறேன்னு சொன்னான்.! பாருடா?
இதுதான்,விட்டகுற தொட்டக்குறனு சொல்றது போல.! நான் விட்ட இடத்திலிருந்து நீ தொடங்கி நடப்பதை விட ஒரு பத்தடி முன்னாடிப்போக முயற்சி பண்ணு அப்படின்னு சொல்லி இயற்கை மருத்துவக்கல்லூரில அவனை சேர்த்துவிட்டேன்.! அங்க படிச்சிகிட்டே ஓய்வு நாளில் திட்டுவிளை ஷேக் மாஸ்டரிடம் ஊசூ [குங்ஃபூ] வகுப்பிற்கும் போய் வருகிறான்.!
ஆண் பிள்ளைகளைப்போலவே இன்றைக்கு பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. வருடக் கணக்கில் பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு கூட ஒரிரு நாளில் ஒரு சில முக்கிய தற்காப்பு, ஆரோக்கிய இரகசியங்களை  கற்பித்தால் கூட வாழ்வு நலமாக அமையும்.! இந்த நோக்கத்தோடு எனது கொடைகால இயற்கை வாழ்வியல் வகுப்பில் வர்மக்கலை,சிலம்பம்,கராத்தே,குங்ஃபூ போன்ற கலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 முக்கிய தற்காப்பு யுக்திகளை பயிற்றுவிப்பதாய் ஒரு விளம்பரம் செய்தேன். கற்க வந்தது இரண்டு பேர்.அதில் ஒருவர் "ஆயிரம் ரூபாய் கட்டணம்  என்பது அதிகம் "என்றுகூறி ஓடிவிட்டார். இன்னொருவர் பணத்தைக் கட்டிவிட்டு அடி  தாங்க முடியாமல் அடுத்த நாள்முதல் வரவேயில்லை.அதன் பிறகு குமரியை சேர்ந்த ஒரு பேட் மிண்டன் வீராங்கனைக்கு ஒரு மாதம் தற்காப்புக்கலை பயிற்சியளித்தேன்.
மிக எளிதாக இருப்பதாக கூறி இப்பொழுதும் பயிற்சிகளை நினைவில் வைத்துள்ளார்.!
நமது ஆதி மருத்துவ முறையில் இந்த  தற்காப்பு நுட்பங்களையும் சேர்க்க வேண்டும்.!
முடிந்தவர்கள் ஏதேனும் ஒரு  தற்காப்பும்  பயின்று, ஆரோக்கியமும் தற்சார்பும்  மிக்கவர்களாய் வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …

ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.com

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...