I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வியாதியே இல்லாத வாழ்வு

Monday, 2 October 2017

வியாதியே இல்லாத வாழ்வு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

55.உங்கள் கேள்வியும் எனது பதில்களும் தொடர்ச்சி …

கேள்வி: டெங்கு காய்ச்சல் எளிதாய் குணமாகவும் வராமல் தடுக்கவும் வழி இருக்கிறதா?.

நவீன மருத்துவத்தின் படி டெங்கு காய்ச்சலை கொசு இருக்கும் காலம் வரை ஒழிக்க முடியாது.!
ஆனால்,பூமியில் மனிதன் இருக்கும் காலம் வரை கொசுவும் இருக்கும்.! பின் எப்படி இதிலிருந்து தப்ப முடியும்?. நமது அரசு தனி குழுவை அமைத்துள்ளது. கொசுவை அழிக்கவும் மனிதனை காக்கவும்.மங்குனி அமைச்சர்கள் என்று கூறுவதற்கு மிக பொருத்தமான அமைச்சர்கள் பலர் தற்போதைய எடப்பாடி அரசில் நிறைந்துள்ளனர்.!
உண்மையில் எந்தக் குறிப்பிட்ட கொசு கடிப்பதால் மட்டும் யாருக்கும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் வருவதில்லை.! நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், ஏடிஎஸ் கொசு கடித்தால் மட்டுமே டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வரும்.! நோயெதிர்ப்பு சக்தி ஏன் ஒரு சிலருக்கு மட்டும்  இல்லாமல் அல்லது,மிக குறைந்துப் போகிறது  என்றால், அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் சரியில்லை என்பதால் தான்.! அதை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அதோடு குழந்தைகளுக்கு தேவையில்லாத தடுப்பூசிகளை போடாதீர்கள், டெங்கு வரவே வராது.! கிருமி இயலின் தந்தையான லூயி பாயிஸ்டரே தனது இறுதி காலத்தில்  "கிருமிகளில் ஒன்றும் இல்லை விளைநிலத்தில் தான் எல்லாம் உள்ளது."என்று கூறி மறைந்துவிட்டார்.! ஆனாலும் இந்த வர்த்தக மருத்துவத்துறையிர் கிருமிகளை வில்லானாக்கியே தங்கள் பித்தலாட்டத்தை இன்றும் தொடருகிறார்கள்.!
எளிமையாக சொல்வதென்றால் சுத்திகரித்த தண்ணீர், மரபணு மாற்றிய காய் கனிகள், இரசாயண விளைச்சலில் வந்த  காய் கனிகள்,பாக்கெட் பால்,சீனி,மைதா,சுத்திகரித்த எண்ணெய், சாக்லேட்,பிராய்லர் கோழி,பிராய்லர் முட்டை,கேக்,பாக்கெட் உணவுகள், இரசாயண மருந்து மாத்திரைகள், கொசு அழிப்பு மருந்துகள், செயற்கை வாசனைப் பொருட்கள்,செயற்கை வண்ணப்பொடிகள்,எஸன்ஸ்,சுவைப்பெடிகள், பாட்டில் குளிர்பானங்கள் போன்றவற்றை பயன்படுத்தாத, மூன்று ஆண்டுகளாக எந்த தடுப்பூசியும் போடாத  எவருக்கும் டெங்கு உள்ளிட்ட எந்த வைரஸ் நோய்களும் வராது.!  இந்த விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது இதெல்லாம் ஆகுற காரியமில்லை என்பவர்களுக்கோ  எல்லா நோய்களும் வரும்.! ஏன் திடீர் மரணம் கூட ஏற்படலாம்.!  எத்தனை சதவீதம் நஞ்சை தெரிந்தே எடுத்துக் கொள்கிறீர்களோ அத்தனை சதவீதம் ஆபத்து உறுதி.!
அல்லது,நல்ல உணவு - கெட்ட உணவு. நல்லப்பழக்கம் - கெட்டப்பழக்கம். இவற்றை சமன் செய்து வாழும் திறமை வேண்டும்.
அந்தத் திறமை சில செல்வந்தர்களிடமும் பல மருத்துவம் படித்தவர்களிடமும் உள்ளது.! ஏழைகளும் ஏமாளிகளும்,முட்டாள்களும்  வர்த்தக உலகில் வாழும் தகுதியை இழந்து வருகிறார்கள்.!
100 பேருக்கு காய்ச்சல் வந்தால் அதில் 10 பேருக்கு டெங்கு உள்ளதாம். நூறு பேருக்கு டெங்கு இருந்தால் பத்து பேருக்கு  மரண யோகம்  கிட்டும்.! நாம் நம் உடல் நிலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் 100 % பாதுகாப்பு.அல்லது பாதிக்குப்பாதி மட்டுமே வாய்ப்பு.!
மற்றபடி நிலவேம்பு குடிநீர்,பப்பாளி இலைச்சாறு,பீர்க்கங்காய்ச்சாறு,அமுக்ரா மாத்திரை கற்றாளைச்சாறு போன்றவற்றில் நில வேம்பையும் அமுக்ரா,பப்பாளி,கற்றாளை, போன்ற  மற்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தொடர்ந்து கொடுத்து வந்தால் விதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்க்கொல்லி வியாதிகள் குணமாகும்.!
இயற்கை வாழ்வியல் முறைகளோடு தினமும் கற்றாளைச்சாறு தேன் கலந்து குடித்துவந்தாலோ அல்லது  அமுக்ரா மாத்திரையை தினமும் இரண்டு உண்டுவந்தாலோ டெங்கு உள்ளிட்ட வைரஸ்  வியாதிகள் வரவே வராது.! நாம் கூறுவது 100 % உண்மை.! டாக்டர் ஆல்பர்ட் பீச்சாம்ப் அன்றைக்கு கூறியது போலவே அடியேன் இன்றைக்கு கூறுகிறேன் மங்குனி அமைச்சர்களே, வர்த்தக மருத்துவ விஞ்ஞானிகளே, உங்களிடம் உள்ள டெங்குவை பரப்பும் கிருமிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். என் உடலில் செலுத்துங்கள் கிருமிகள் வாழ்ந்து நான் இறந்தால் உங்கள் கருத்து உண்மை என்று உலகமே ஏற்கும். கிருமிகள் அழிந்து நான் வாழ்ந்தால் கழிவு உணவுகளின் தேக்கமில்லாத,இரசாயண மருந்துகளின்  தேக்கமில்லாத தூய உடலுக்கு என்றும் அழிவில்லை. என்பதை வரலாறு இன்றெரு முறை குறித்துக்கொள்ளட்டும்.! அதோடு சுத்தம்,பாதுகாப்பு,சுலபம்  என்ற பெயரில் உலகைச்சுரண்டி கொளுக்கும் உங்கள் கொடிய வர்த்தகம் அழியட்டும்.!

கேள்வி:குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய அவசியத்தையும் குளிக்கும் முறையையும் கூறுங்களேன்?.

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.!

மனிதர்களுக்கு உள்ள 70% நோய்களுக்கு  அதிகப்படியான உடல் வெப்பமே முதல் காரணம்.!

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் மற்றும் பல்வேறு இறந்த செல்கள்  தேங்கியிருக்கும்.
கண்களில் பூழையாகவும் வாயில் கோழையாகவும் நாசியில் சளியாகவும் உடல் அசதியாகவும் இருப்பதற்கும், எழுந்த உடன் சிறுநீர் வருவதற்கும் முக்கியக்காரணமே  இறந்த செல்கள் தான்.!
இரவு ஓய்வில் உடல் தேவையான அளவு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்த வேலை அதிகாலை விழிப்பு வரும்வரை நடைபெறுகிறது. சரியான தூக்கம் இல்லாத மனிதன் என்றால் ஒன்று அவனுக்கு பெரிய நோய்கள் இருக்கும். அல்லது இனி புதிய வியாதிகள் வர உள்ளது. என்பதை புரிந்து கொள்ளலாம்.!

காலை எழுந்ததும் இந்த இறந்த செல்களை வெளியேற்ற, உடலை சுத்திகரிக்க,உடல் நோயை குணப்படுத்த மேலும் இதற்காக உடலில் அதிகரித்த வெப்பத்தையும்  உடலிலிருந்து நீக்குவதற்காகவே நாம் குளிந்தநீரில் குளிக்கிறோம்.!

குளிர் காலங்களிலும் ஏன் குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் கூட  வெந்நீரில் குளிக்க கூடாது.! ஏனெனில் வெந்நீர் குளியலின் போது உடலில் உள்ள இரத்தக் குழாய்களின் எதிர் தள்ளும் இயக்கம் நடைபெறாது. இது நடைபெறவில்லை எனில் வியர்வை சுரப்பியில் படிந்துள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறாது என்பதோடு உடல் வெப்பமும் போதிய அளவிற்கு குறையாது.!

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.!
குளிர் பிரதேசத்தில் வசிப்பவர்கள் வேண்டுமானால் நீரை மக்கில் எடுத்து பத்து இருபது முறை மாற்றிமாற்றி நீரில் ஊற்றிக் கொண்டே இருந்தால் அது சற்று வெதுவெதுப்பாக மாறும். அல்லது  சிறிது வெயிலில் நீரை வைத்து பின் குளிக்கலாம்.!
குழந்தைகள்,பெண்கள், பெரியவர்கள் என்று  யாராய் இருந்தாலும் குளிர்ந்த நீரிலேயே குளிக்க வேண்டும். அதிகாலையில்  பச்சைத் தண்ணீரில் குளிப்பதால் சிலருக்கு நெற்றியில் உள்ள சைனஸ் பகுதி வீங்கி தலைவலி,தும்மல்,மூக்கடைப்பு போன்றவை ஏற்படும். அவர்கள் எழுந்ததும் ஓரிரு நிமிடம் சிறிய உடல் பயிற்சிகளை செய்துவிட்டு கீழ்க்கண்ட முறையில் குளித்தால் மேற்குறித்த  உபாதைகள் தோன்றாது.!

குளிர்ந்த நீரை  அப்படியே வாரி தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.!

நீரை எடுத்து முதலில் நான்கு முறை வாயை நீரால் கொப்பளித்து துப்பிவிட்டு  ஐந்தாவது கொப்பளித்து நீரை வாயிலேயே அடக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மூன்று முதல் ஐந்து முறை காலில் ஊற்ற வேண்டும். பின் இதுபோலவே முழங்கால், இடுப்பின் பின் முதுகுத்தண்டு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலையில் நீர் ஊற்றியதும் வாயில் உள்ள நீரை துப்பிவிட்டு வழக்கமான முறையில் குளிக்க வேண்டும்.!

எதற்கு இப்படி?
வாயை கொப்பளிக்கும் போது தலையில் உள்ள வெப்பம் குறையும்.
காலில் இருந்து  நீர் ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி வந்து, தலையில் நீர் ஊற்றிய உடன் வாயில் உள்ள நீரை வெளியே துப்பும் போது, வாய்வழியாகவும்  விழி மற்றும் காது வழியாகவும், உடலின் வெப்பம் எளிதாக  வெளியேறும்.!

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.!
இந்த முறையில் குளித்தால் நீரை மாற்றி குளிப்பதாலோ அல்லது உடல் நோயோலோ ஏற்படுகின்ற எந்த தொந்தரவும் ஏற்படாது.!

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.

குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். இதனால் காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி வரும்,இறுதியில் தலை முங்கும் முன் நன்றாக வாயைக் கொப்பளித்து துப்பிவிட்டு  பிறகு சிறிது நீரை தலையில் தெளித்து விட்டு முங்கிக்குளிப்பார்கள். இப்படி செய்வதால்  கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடுவதோடு அதிகப்படியான குளிர்ச்சி உடலை தாக்கமலும் இருக்கிறது.!

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.! நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.!

குளித்து விட்டு உடனே  தலையை துவட்டாமல் 3 முதல் 10 நிமிடம் ஈரத் துணியோடு இருந்துவிட்டு பிறகு துவட்டுவது மிக நல்லது. ஆறு,குளம்,அருவி போன்ற இடங்களில் குளிப்பவர்கள் ஈரத்துணியோடு அப்படியே வீடுவரை வந்தால் உடல் தானே காய்ந்துவிடும் இது மிக நல்ல முறையில் உடலை குளிர்விக்கும்.! என்பதோடு உடலின் வெப்பசக்தி இயல்பாக அதிகரிக்கவும் இந்த முறை உதவும்.!

இதனால் பித்தமும் இறந்த செல்களும் முழுமையாக நீங்கி பிராணவாயு அதிகரித்து அனைத்து நோய்களும் ஓடிவிடும் என்பதோடு வாழ்நாளில் சளி,காய்ச்சல்,தலைவலி போன்றவை ஏற்படவே செய்யாது.!
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.!
மேல் தேய்க்க மூலிகை குளியல் பொடி பயத்தம் மாவு கஸ்தூரி,மஞ்சள்,சீகக்காய்  போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சோப்பை உடலில் தேய்த்து குளிக்கும் போது உடலில் உள்ள கழிவை வெளியேற்ற முக்கியப் பங்காற்றும் வியர்வை சுரபிகள் அடைத்துவிடும். இதனால் உடல் கழிவுகள் முழுவதும் வெளியேற முடியாமல் போவதோடு வெப்ப ஆற்றலை உடல் கிரகித்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாகவே  தோல்நோய்கள் எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பல வியாதிகள் வருகிறது.!
ஒரு மனிதன் காலை எழுந்ததும் நீரருந்தி காலை கடன் கழித்து, குளிப்பதையே முதல் பணியாக வைத்திருக்க வேண்டும். அதுவும் சமையல் செய்யும் தாய்மார்கள் குளித்துவிட்டே அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.! அல்லது அந்த குடும்ப ஆரோக்கியம் காலாவதி ஆவது நிச்சயம்.!

குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது.நினைத்த வேளையில், குளியல் அறையில் ஹீட்டர் வேறு வைத்துக்கொண்டு, சுடு தண்ணீரில் சோப்பையும் ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வருபவர்கள், நோயாளியாவது உறுதி.!

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு இரண்டு மணிநேரம்  முன்னும்,உதித்து இரண்டு மணிநேரம் வரை மட்டுமே.!மற்ற நேரத்தில் குளிப்பது தவறான குளியல் பழக்கமாகும்.!

குளிக்க மிகச் சிறந்த நீர்  பச்சைத் தண்ணீர்.!
குளித்தல்  குளிர்வித்தல் என்பதில் மூலம் உடலை ஆரோக்கியப்படுத்த முன்னோர் கூறியுள்ள இந்த வழியை கடைபிடியுங்களேன்.!

இறைநிலை ஆற்றலால் உருவான இந்த உடல் மீது உங்களுக்கு உண்மையான அக்கறையும், உங்கள்  குடும்பத்தினர் மீது உண்மையான பாசமும் இருந்தால் இயற்கை குளியல் முறைக்கு மாறிவிடுங்களேன்.! நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.com

இலவச இயற்கை மருத்துவ
ஆலோசனைகளுக்கு
*9629368389*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...