*உயிர் மீட்கும் மருத்துவம்*
56.உங்கள் கேள்வியும்
எனது பதில்களும்
"வாழ்வைத்தருவது அன்பு
அன்பைத்தருவது காதல்
காதலைத்தருவது ஆசை
ஆசையைத்தருவது தேவை
தேவையைத்தருவது கேள்வி
கேள்வியைத்தருவது ஞானம்.!"
இயற்கை எனிமா என்றால் என்ன?
திரு.செல்வராஜ்,நாகர்கோவில்
" 600 அல்லது 750 மில்லி நீர் பிடிக்கக்கூடிய ஒரு நெகுழி குடுவையில் நீர் நிறைத்து அதில் இருக்கும் குழாயின் முனையை ஆசனவாயில் சொருகிக்கொண்டு குனிந்து நின்று நீரை முழுவதும் ஆசனவாயின் வழியாக பெருங்குடலில் ஏற்றிவிட்டு ,
பிறகு சிறிது நேரம் கழித்து கழிவறை சென்று மலத்தை வெளியேற்றுவதே இயற்கை எனிமா எனப்படும்.
இதனால் மலக்கழிவு உடலில் தங்காமல் வெளியேறுவதால் நாள்ப்பட்ட நோய்கள் குணமாகும். இதற்கான குடுவை இயற்கை வாழ்வியல் மையங்களில் கிடைக்கும்.! "
உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள ஒரு எளிய வழியை கூறுங்கள் அய்யா?.
திருமதி.குமுதா,கரூர்.
தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்யுங்கள்,
தினமும் ஒருவேளை சமைக்காத உணவை மட்டுமே உண்ணுங்கள்.
மூன்று வேளை உணவைத் தவிர இடை வேளையில் எதையும் உண்ணாமல் நீர் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
பப்பாளிக்காய்,பப்பாளிப்பழம்,அண்ணாசிப்பழம் பாதாம்பருப்பு,பூண்டு,மஞ்சள்,மிளகு,கீரை வகைகள்,தேன்,
பனங்கற்கண்டு போன்ற வற்றையும் உணவில் அதிகமாக சேருங்கள், உடல் எடை சீராக இருக்கும்.!
அய்யா,நீங்கள் சிறுவயதிலேயே யோகா கற்றுக்கொண்ட போதும் நிறைய துன்பம் அனுபவித்துள்ளீர்களே?
திருமதி விஜயா மணிகண்டன் <யோகா ஆசிரியை> அபுதாபி
" கற்பவற்றை பிழையில்லாமல் கற்க வேண்டும். அது போலவே கற்றவற்றை விரித்துப் பூரணமாக கற்பிக்க வேண்டும்.என்று அய்யன் திருவள்ளுவர் கூறியுள்ளார்.எனது விசயத்தில் நான் ஒரு தேவைக்காக யோகம் கற்றேன். அது எனக்கு நிறைவேறியதும் அதன் அடிப்படையான இயற்கை வாழ்வியல் முறைகளை நான் தொடராமல் போனதே எனது தொடர் துன்பத்திற்கு முதல் காரணம்.! அதுபோலவே எனக்கு அடிப்படை யோகம் கற்பித்த சூரியச்சித்தர் வெங்கட்ரமணா,பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி,வேதாத்ரி மகரிசி அய்யா,போன்றவர்களும். இராமச்சந்திரா மிசன்,ஈசா யோகமையம் போன்ற அமைப்புகளும் எனக்கு முறையாக இயற்கை வாழ்வியலை கற்பிக்கவில்லை. அல்லது அவர்கள் கற்பித்ததை ,நான் எனது தீவினையின், காரணமாக மறந்துவிட்டேன்.!
இதன் காரணமாகவே நான் சில துன்பங்களை நீண்டகாலம் அனுபவிக்க வேண்டி வந்தது.இந்த விசயங்கள் தந்தப் படிப்பினைகளால் தான். நான்,எனது ஒவ்வெரு வகுப்பின் நிறைவிலும், இயற்கை வாழ்வியலின் அவசியம் பற்றி,பத்து நிமிடம் எனது மாணவர்களோடு கலந்துரையாடுகிறேன்.! நீங்களும் இந்த முறையை கடைபிடியுங்கள்.!
எனக்கு எப்பொழுதும் ஒரே கவலையாக இருக்கிறது,இது மாறுவதற்கு ஏதேனும் பயிற்சிகள் உள்ளதா?
திரு.சிவராமகிருஷ்ணன்,நாகர்கோவில்
" ஏதாவது ஒரு கடவுள் பெயரை வைத்தாலே அவர் காப்பாற்றுவர். ஆனால்,நீங்களோ மூன்று கடவுள்களின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளீர்கள். ஆனாலும்,கவலை வருகிறதென்றால்,மூன்றுபேருமே நீ காப்பாற்று,நீ காப்பாற்று என்று உங்களை மற்றவர்களிடம் தள்ளி
விடுகிறார்களோ? என்று தோன்றுகிறது.!சிரிங்க சிவா சிரிங்க.! வாழ்க்கைல எப்பவெல்லாம் வாய்விட்டு சிரிக்க வாய்ப்பு கிடைக்குதோ அப்பவெல்லாம் சிரிங்க. எதையும் மாற்றி யோசிச்சி
அதிலுள்ள நகைச்சுவையான பகுதியை கண்டுப்பிடிச்சி மனசுக்குள்ளயாவது சிரிங்க.!
அதுவே மகிழ்ச்சி பெருக வழிகாட்டும்.! நலம் பெருகட்டும் …
இயற்கை வாழ்வியலை எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்?
திரு.கண்ணன்,மதுரை
சில உண்மை சம்பவங்களை கூறுகிறேன்.நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
உங்கள் மனைவி வீட்டில் சமையல் செய்துகொண்டே இருக்கும் போது திடீரென்று தலை சுத்தி மயங்கி விழுந்து விடுகிறார். உடனே உங்கள் வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சேர்ந்து ஒரு வண்டியை பிடித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். மருத்துவர் நாடியைப் பார்த்துவிட்டு எங்களால் முடியாது வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறுகிறார் அவர்களும் கொண்டு செல்கிறார்கள். அங்காவது உடனே அட்மிட் செய்து சிகிட்சை அளித்தால் கூட காப்பாற்றிவிட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த மருத்துவ மனையிலும் எங்களால் முடியாது என்று கையை விரித்துவிட பக்கத்து நகரத்தில் உள்ள மற்றொரு நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையே உங்களுக்கும் யாரோ தகவல் கூறி நீங்களும் அங்கு செல்கிறீர்கள். அந்த மருத்துவ மனையில் உள்ள மருத்துவர் வந்து உங்கள் மனைவியின் நாடியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. என்று கூறுகிறார்; இப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நேற்று இரவு உங்கள் வீட்டில் சிக்கன் பிரியாணி நீங்கள், மனைவி. 12, 9 வயதில் இரண்டு பிள்ளைகள் நான்கு பேரும் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுகிறீர்கள். நடு இராத்திரி 2 மணிக்கு உங்கள் 9 வயது பெண் பிள்ளை வாந்தி எடுக்கிறது. உடனே உங்கள் மனைவி அவசரமாக பாத்ரூம் கூட்டிச்சென்று வாந்தி எடுக்க விடுகிறார். உங்கள் மகள் இரவில் சாப்பிட்டதை முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுகிறார். உடனே நீங்கள் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனை கொண்டு செல்கிறீர்கள் அங்கு உடனே அவசர வார்டில் அட்மிட் செய்து குளுக்கோஸ் அடைக்கிறார்கள், ஆன்டிபயாடிக் மருந்து செலுத்துகிறார்கள். உங்கள் குழந்தைக்கு புட்பாய்சன் ஆகிவிட்டது. எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயலுகிறோம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்களும் உலகில் உள்ள கடவுள்களை எல்லாம் அழைத்து பிராத்தனை செய்கிறீர்கள். ஆனால், விடியகாலை ஆறுமணிக்கு எங்களால் முடிந்தவரை பார்த்தோம். உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று மருத்துவர் கூறுகிறார்; அழுகிறீர்கள் குமுறுகிறீர்கள் வேறு என்ன செய்ய முடியும்?
உங்கள் பதினைந்து வயது பையனுக்கு கண்வலி வருகிறது
மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்து வாங்கிப் போட்டு வருகிறீர்கள் … ஆனால், அடுத்தநாள் முதல் உங்கள் மகனுக்கு சுத்தமாக கண்ணே தெரியல. அதன் பிறகு எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் போன ஒளிதிரும்ப வில்லை இப்ப என்ன செய்வீர்கள்?
மேலே கூறிய மூன்றும் கதையல்ல எங்கள் ஊரில் நடந்த நிஜம்.!
இது போன்று ஒரே நிமிடத்தில் நமது அன்பானவர்களின் வாழ்வைப்பறித்து நம்மை நிலை குலைய வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை நான் பார்த்ததே இல்லையே. என்று கூறுகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் அதிஷ்டசாலிதான். ஆனால், இந்த அதிஷ்டம் நீண்ட நாள் நிலைக்காது. வெகுவிரைவில் துயர துரதிஷ்டம் உங்களை அடைந்தே தீரும்.! ஆனால், இதிலிருந்து தப்ப ஒரு வழி உள்ளது. அந்த வழியில் சென்றால் நீங்களும் உங்கள் குடும்பமும், இந்த நாட்டு மக்களும் பிழைக்க முடியும்.! சரி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்று ஆங்கில மருத்துவர்களை கேட்டால் திடீர் ஹார்ட் அட்டாக், புட்பாய்சன், ஐகேன்சர், இரத்தஅழுத்தத்தை கவனிக்காமல் விட்டதால் வந்தது, சக்கரையை கட்டுப்பாட்டில் வைக்காததால் வந்தது , கொழுப்பை சாப்பிட்டதால் வந்தது, பிளேட்லெட் குறைந்து விட்டதால், மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டதால் என்று பல காரணங்களை கூறுவார்கள். ஆனால், இது எதுவும் உண்மை இல்லை.! உண்மை காரணம் வேறு அது எந்த ஆங்கில மருத்துவருக்கும் தெரியாது. அல்லது தெரிந்தும் சொல்ல மறப்பார்கள்.! எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில மருத்துவரிடம் கேட்டேன். "என்னங்க உயிர் போகும் நிலையில் அவசர சிகி்ச்சைக்கு வரும் நோயாளிகளை ஏன், உங்களைப் போன்ற சில மருத்துவர்கள் அட்மிட் செய்ய மறுக்கிறார்கள் " என்று; அதற்கு அவர் கூறினார். தற்காலத்தில் உணவுமுறை, வாழ்க்கை முறை என்று அனைத்தும் சீரழிந்த நிலையில் மக்களிடம் நாம் சில நல்ல வழக்கங்களை கூறி கடைப்பிடிக்க கூறினால் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களின் உறவினரோ, குடும்பத்தினரோ நமது மருத்துவ மனையில் உயிர்விட்டு விட்டால் இந்த மருத்துவர்தான், எங்கள் உறவினரின் உயிரை கொன்றுவிட்டார். என்று பழியை நம்மீது போடுவதோடு , நமது மருத்துவ மனையைப் பற்றியும் தவறான வதந்திகளை பரப்புவார்கள்
. அதனால் தான் சீரியஸாக இருக்கும் நபர்களை அட்மிட் செய்ய என் போன்ற சிறிய மருத்துவ மனை மருத்துவர்கள் தயங்குகிறார்கள்" என்றார்; அவர். அவர் கவலை அவருக்கு.!நாம் மேலே கூறிய வியாதிகள் மட்டுமல்ல திடீர் கிட்னி பெயிலியர், திடீர் பக்கவாதம், திடீர் உடல் உறுப்பு செயலிழத்தல் போன்ற அனைத்து நோய்களுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது என்ன வெனில் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலின் சீரழிவு. அதற்கு காரணம் இரசாயண உணவுப் பழக்கம் மற்றும் கரு உருவான நாள் முதல் தாய்க்கும் பிள்ளைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்ட இரசாயண மருந்துகளும் தான் அடிப்படை காரணங்கள்.! ஆங்கில மருத்துவம் கூறுவது போல உடலில் உள்ள ஒவ்வெரு உறுப்புக்கும் தனித்தனி
சிகிட்சை கிடையவே கிடையாது. வாயில் விசம் வைத்தால் வாய் மட்டும் சாகாது. உடலும் சேர்ந்தே சாகும்.! நரம்பில் விச ஊசி குத்தினால் நரம்பு மட்டும் மரணமடையாது உயிரும் சேர்ந்தே உயிர்விடும்.! வாயில் வைப்பது உணவா இரசாயண விசமா? என்பதிலும், நரம்பில் ஏற்றப்படுவது நோய்த்தீர்க்கும் மருந்தா அல்லது நோய்களை உண்டாக்கும் கிருமியா? என்பதையும் உணராமல்
உபயோகப் படுத்தும் மூடத்தனம்
மட்டும் ஒழிந்தால் போதும் ,
உலகின் மிகப்பெரிய இரசாயண சந்தையான, இந்தியாவின் குடிமகன்களும் ஆரோக்கியமாக வாழ முடியும்.! இதனால் தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே இயற்கையை நோக்கி வாருங்கள்.!
என்று அழைக்கிறோம்.!
எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒரு அமைதியே இல்லாமல் இருக்கிறது.ஏதோ சூனியம் வைத்தது போல் உள்ளது, இதற்கு ஏதேனும் எளியத் தீர்வு உள்ளதா?.
திரு.தாமோதரன்,திருச்சி
1.வெண்கடுகு 250 கிராம் 2.நாய்க்கடுகு 250 கிராம் 3.மருதாணிவிதை 250 கிராம் 4.சாம்பிராணி 250 கிராம் 5.அருகம்புல் 50 கிராம் 6.வில்வ இலைப்பொடி 50 கிராம் 7.வேப்ப இலைப்பொடி 50 கிராம் இவற்றில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்துகொண்டு மீதியுள்ள 6 பொருட்களுடன் கலந்து வைத்துக் கொண்டு சொவ்வாய்,வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் விதம் காலை, மாலை 48 நாட்கள் தொடர்ந்து அடுப்புக்கரியில் 5 நிமிடம் தூபம் போட்டுவர பில்லி சூனியம்,ஏவல்,செய்வினை, கண்திருஷ்டி மற்றும் எல்லா எதிர்மறை ஆற்றல்களும் தெரித்து ஓடும்.! தூபம் போடும் நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியம்.!
குடிப்பழக்கத்தினால் எனக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பை நீக்க மருத்துவம் கூறுவீர்களா அய்யா?
கீழாநெல்லி, குப்பைமேனி இலைகளை சமமாக எடுத்து கழுவி அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் உணவிற்கு முன் ஒரு டம்ளர் மோரில் 48 நாட்கள் குடித்துவந்தால் கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை,கல்லீரல் கொழுப்பு, உடல்சோர்வு, குடியினால் ஏற்பட்ட கல்லீரல் புண் போன்றவை குணமாகும்.!
அக்குப்பஞ்சர் மருத்துவத்தில் மிகவும் பயனுள்ள பகுதி என்று எதை கூறுவீர்கள்?
திரு.சேக்மைதீன்,நாகர்கோவில்
அடியேன் எதற்காகவும் அக்குப்பஞ்சர் மருத்துவ முறையை பயன்படுத்தியது இல்லை. ஏனெனில்,நான் ஒரு முழுமையான தமிழன் என்பதால்,சைனாவின் வைத்தியமான. அக்குப்பஞ்சர் எனக்கு எதற்காகவும் தேவையில்லை. என்று; நினைத்தேன். இன்னொன்று அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் மக்களுக்கு நிறைய இயற்கை விழிப்புணர்வை வழங்கினாலும்,யோகாவைப் பற்றி அவர்கள் எங்கும் பேசுவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. எனினும் எனக்கு சில நேரம் கீழ்க்கண்ட அக்குப்பஞ்சரின் உடல் கடிகாரம் பயனளித்துள்ளது.!
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
யோகா செய்யவும் தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்
பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் போய்விடும்.!
இந்த உடல் கடிகாரம்
மிகவும் பயனுள்ளது.
அய்யா,எங்களுக்கு பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. எங்களைப் போன்ற தம்பதிகள் இன்று அதிகமாக பெருகி வரக் காரணத்தையும் தீர்வையும் கூறுங்கள்.
திரு.கண்ணன், சென்னை
இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும் இரசாயண உணவு முறையும் தான் முக்கியக்காரணம் என்பது உங்களுக்கும் தெரியும். ஆண், பெண் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது கூட குழந்தை பெறும் வாய்ப்பை குறைக்கும். அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லுதல்
குடும்பப் பிரச்சனைகள் போன்றவை, மன அழுத்தம், சரிவிகித உணவின்மை, உடல் குறைபாடு, கற்பபையில் கோளாறு, விந்தணுக்குறைபாடு போன்ற காரணங்களாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருமணமாகி ஒரு ஆண்டுவரை குழந்தை இல்லாவிட்டால் உடனடியாக ஆண்,பெண் இருவரும் உடல் பரிசோதனையை செய்து கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிகொள்ள வேண்டும். முதலில் யோகா, உணவு முறை, இயற்கை வாழ்க்கை முறையை பயின்று உடலை சீர்செய்து கொண்டு
மண்பானையில் சமைத்து சாப்பிடுதல், எந்த இரசாயண உணவையும் சாப்பிடாமல் தவிர்த்தல், தினமும் ஆண்,பெண் இருவருமோ அல்லது பெண் மட்டுமாவது இரண்டு மணி நேரம் இடுப்புக்குளியல் செய்ய வேண்டும். அதாவது இடுப்பளவு நீர் நிறைந்த ஒரு பெரிய டப்பில் தினமும் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருக்க வேண்டும். ஆண் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.!
மாதவிடுமுறை கழிந்து 5 முதல் 20 நாட்களுக்குள் இல்லறத்தில் ஈடுபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மாதவிடுமுறை முடிந்ததும் வரும் மாதத்தில் முதல் பத்து இறுதி பத்து நாட்களை கழித்து நடுவில் உள்ள நாட்களில் உறவு கொள்வது. மிக நல்ல பயனை கொடுக்கும்.
அசைவ உணவுகளை குறைத்துக்கொண்டு இயற்கை தானியங்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.
குழந்தை உருவாவதற்கு ஏற்ற சில உணவுகள்
15 பேரீச்சம் பழத்தை விதை நீக்கி ஒருமண் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் பசும்பாலும் ஊற்றி கிளறி வரவும் நன்றாக பாலும் பழமும் கலந்து இறுகும் நேரம் இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து இறக்கி நன்றாக ஆறும் முன் இதமான சூட்டில் வாயகன்ற கண்ணாடிப்பாத்திரத்தில் போட்டுவைத்து தினமும் இரண்டு வேளை, வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி விதம் தம்பதிகள் இருவரும் உண்டுவரலாம்.
தினமும் கம்பு, வரகு,குதிரைவாலி,கேழ்வரகு,பாதாம்,பிஸ்தா,முந்திரி,வேர்க்கடலை போன்றவற்றை 100 கிராம் வரை நேரடியாக அல்லது இதையெல்லாம் சேர்த்து இயற்கை ஊட்டச்சத்து மாவாக தயாரித்து தினமும் ஒருவேளை மதியத்திற்குள் உண்டுவருவது மிகுந்த பயனை கொடுக்கும். அதோடு வாழைப்பழம்,சாத்துக்குடி,கருப்பு விதையுள்ள திராட்சை,அத்திப்பழம்,பீட்ரூட், கொத்தமல்லிகீரை, முருங்கைகீரை,பசலிக்கீரை,கேரட்,நாட்டுத்தக்காளி,பீட்ரூட் போன்றவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது அவசியம்.!
இதோடு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளவர்கள் கொள்ளு, பப்பாளிக்காய், எள்ளு போன்றவற்றை வாரத்தில் மூன்று நாட்கள் நாளுக்கு 50 முதல் 100 கிராம் வரை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.!
ஆண்கள் அமுக்ரா மாத்திரை,சூரணம்,லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் நெல்லிக்காயளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.!
பற்பசை,சோப்பு, அதிக உடலுழைப்பு, ஆங்கில மருந்து மாத்திரைகளை முற்றிலும் தவிர்த்து மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்திட அனைவரும் இயற்கை வழியில் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்வோடு வாழலாம்.
குறிப்பு: கர்பபை மற்றும் விந்தணுக்குறைபாடு எத்தகைய நிலையில் இருந்தாலும் முதலில் இயற்கை,யோகா,மூலிகை, உணவு வழிமுறைகளை பின்பற்றிவிட்டு முடியாத பட்சத்தில் மட்டுமே பல்வேறு விதமான இரசாயண மருந்துகள். செயற்கை கருத்தரித்தல் போxx
ன்ற முறைகளுக்கு செல்ல வேண்டும். முதலிலே செயற்கை முறைகளை பார்த்துவிட்டு அங்கு கைவிடப்பட்ட பின் இயற்கை முறைக்கு திரும்பினால் குழந்தை பேறடையும் வாய்ப்பு குறைந்து விடும்.!
நலம் பெருகட்டும் …
உலர் திராட்சையை முறைப்படி உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.
திரு.டேவிட்,அருமனை
இரத்த சிவப்பணு அதிகரிக்கும் உடல் சோர்வு போகும்.! முதல்நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு மூன்றாம் நாள் மூன்று இப்படி பத்துநாள் வரை ஒவ்வென்றாக அதிகமாக்கி இறுதியில் 9, 8,7 என்று குறைத்து ஒன்று வந்தவுடன் நிறுத்த வேண்டும்.! தினமும் இரவில் சிறிது நீரில் உலர்திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.!
இது போன்ற பல முறைகள் இணையம் எங்கும் பரந்து கிடக்கிறது. நமது amyogatrust.blogspot.in & aumherbals.blogspot.in
என்ற தளங்களிலும் நிறைய மருத்துவ தகவல்கள் உள்ளன.!
அய்யா,தேசத்தையும் ஆட்சியாளர்களையும் பேயே,நாயே என்றெல்லாம் திட்டுவது
நன்றாகவா இருக்கிறது?.
திரு.ஜான்பிரதீப்,நாகர்கோவில்
ஏன்?. பேயும்,நாயும் எங்களை எப்படி இந்த மகா பாவிகளுடன் ஒப்பிடலாம்? என்று; கோபித்துக்கொள்ளுமோ?
வார்த்தைகள் இருப்பது உணர்வை வெளிப்படுத்தவே. நீட் தேர்வு,GST,ஹைட்ரோ கார்பன்,ரேசன் பொருட்கள் இல்லை போன்ற திட்டங்களை நம்மீது திணித்து அனிதா போன்ற பல மாணவ,மாணவிகளும்,விவசாயிகளும்,பொதுமக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துவரும் நிலையைப் பார்த்தும், பாராமல் இருக்க நாம் ஒன்றும் தமிழ்நாடு பினாமி அரசு இல்லையே.! சோழ,பாண்டிய,பாரதி வழியில் வந்தக் கருப்புத் தமிழர்கள் நாம். நமக்கும் கொஞ்சம்
உணர்ச்சி இருக்காத்தானே செய்யும்?.
கல்லீரலின் ஆற்றலை மேம்படுத்த சில உணவுகளை பரிந்துரைக்க முடியுமா?
திரு.பிரகாஷ் குமாரசாமி,
சென்னை.
நெல்லிக்காய்,மாதுளை, கருப்புத்திராட்சை,ஆப்பிள்,அருகம்புல்,துளசி,
திரிபலா,கீழாநெல்லி,மணத்தக்காளி, தேன்,கருப்பட்டி. மோர், நிஜ பசும்பால், கேழ்வரகு,பாதாம்பருப்பு, கைக்குத்தல் அரிசி, கேரட், அத்திக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு மஞ்சள் காமாளை,கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் சுருக்கம் போன்ற எத்தகைய கல்லீரல் நோயும் குணமாகும்.! மேற்கண்ட அனைத்தையும் பயன்படுத்த முடியாதவர்கள் கீழநெல்லி,நெல்லிக்காய்,மோர், கேரட்,திராட்சை, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மட்டுமாவது உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டு உப்பு,புளி, அசைவ உணவுகள், இரசாயண கலவைகள் உள்ள உணவுகளை தவிர்த்துவந்தால் கல்லீரல் பலப்படும்.!
போலி மருத்துவர் கைது என்று அடிக்கடி பத்திரிகையில் செய்தி வருகிறதே,போலி மருத்துவர்னா யாருன்னு சொல்ல முடியுமா?
திரு.ராமநாதன் அரியலூர்
பொதுவா ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருந்து,மாத்திரை,ஊசிப்போட்டு வைத்தியம் செய்பவர்களை போலி மருத்துவர்கள். என்று கூறுகிறார்கள். இப்பொழுது சித்தா,ஆயூர்வேதா,ஹோமியோபதி போன்ற படிப்புகளையும் ஆங்கில மருத்துவத்தைப் போலவே ஐந்தரை ஆண்டுகாலம் கல்லூரியில் கற்பித்து வருவதால்,பாரம்பரிய மருத்துவர்களுக்கான சான்று இல்லாமல் வைத்தியம் பார்ப்பவர்களையும் சிலர் போலி மருத்துவர்கள் என்று கூறுகிறார்கள். பொதுவாக மருந்தில்லா மருத்துவ முறையான யோகா,இயற்கை,ரெய்கி,அக்குப்பஞ்சர்,வர்மா போன்றவற்றின் மூலமும் உணவு முறையை சீரமைப்பதின் மூலமும் நோய்களை குணப்படுத்துபவர்களை தெரபிஸ்ட் என்று கூறுவார்கள். என்ன உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நான் போலி மருத்துவன் இல்லை. யோகா தெரபிஸ்ட் அதோடு சேர்த்து பஞ்சமூலி சூரணம் சளியை வெளியேற்றும் என்பதையும் கடுக்காய் சூரணம் பேதியை புடுங்கும் என்றும் கூறுவேன்.!
அதை யாரும் தடுக்க முடியாது.!
மத்திய அரசில் பதிவு செய்துவிட்டு சில எளிய மூலிகைப்பொருட்களையும் தயாரித்து வருகிறேன்.!
பயன்படுத்தப் பயன்படுத்த தேய்வது தானே எல்லாப் பொருள்களின் இயல்பும். பின், எப்படி கைகால் களை நீட்டி,மடக்கி,நெளித்து, குதித்துப்பயிற்சி செய்தால் உடலுக்கு நல்லது என்று சொல்கிறீர்கள்?.
திரு.வேல்முருகன்,ஒசூர்.
மிகச்சிறந்த வினா.! உடல் இயக்கம் நடைபெற்றால் மட்டுமே நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் புதிய இரத்தம் உற்பத்தி ஆகும். உடலை நீட்டி,வளைத்து பயிற்சி செய்யும் போதுதான் உடல் தசைகளும்,எலும்புகளும் முழு வளர்ச்சி யடைவதுடன் வலிமையாகவும் மாறும்.! 20 -25 வயதிற்கு மேல் உடலின் வளர்ச்சி நின்றுவிட்டால் கூட உடற்பயிற்சியின் மூலம் தசைகளும் எலும்புகளும் தொடர்ந்து வலிமையாகி வருகின்றன.! நாற்பது வயதிற்கு மேல் பொதுவாகவே உடலின் இயங்கு திறன் குறைவதோடு எலும்புகளில் சிறிய அளவிலான இறுக்கமும் இணைப்புகளில் ஒருவித தளர்வும் ஏற்படும். இந்த நேரத்திலும் கூட முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை கடைப்பிடித்தால் அதை தள்ளிபோட முடியும்.! அதனால் முறையான பயிற்சியால் எந்த பாதிப்பும் வராது,நிறைய நன்மைகளே கிடைக்கிறது.!
அய்யா,காதுக்குள்ஒரு இரைச்சல் சத்தம் கேட்கிறது. இதை எப்படி நிறுத்துவது?
திரு.கணேஷ்.ஆவரைக்குளம்.
தினமும் காலையிலும் மாலையிலும் பராமரி பிராணாயாமம் பத்து முறை செய்துவாருங்கள் சரியாகிவிடும். தேவையெனில் 100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒருதுண்டு சுக்கைத்தட்டிப் போட்டு லேசாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, தினமும் இரவில் தூங்கும் போது ஓரு துளி எண்ணெயை காதில் விட்டுத் தூங்கலாம்.!
நீச்சல் பயிற்சி செய்யும் போது நிறைய மூச்சு வாங்குவதை தவிர்க்க ஏதேனும் யோசனை உள்ளதா?
திருமதி.லதா,லண்டன்.
இருக்கிறதே,இல்லாமல் என்ன?
தினமும் காலையில் கையளவு ஊறவைத்த கொண்டைக்கடலையை சாப்பிட்டு வருவதோடு காலை,மாலை இருநேரமும் இடகலை நாடிசுத்தி 10 சுற்றுகள் செய்து வந்தால் நீச்சல்,ஓட்டம்,தற்காப்பு பயிலுதல் போன்ற நேரங்களில் வரும் அதிகப்படியான மூச்சு வாங்கல் குணமாகும்.!
ஐயா,வணக்கம். சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஒவ்வெரு நிலையிலும் எத்தனை விநாடிகள் நிற்க வேண்டும்?.
திரு.அருண்,துபாய்.
வணக்கம் வாழ்க வளமுடன்.!
ஒவ்வெரு நிலையில் குறைந்தது 5 விநாடி முதல் அதிகப்பட்சம் 15 விநாடிகள் வரை நிற்கலாம்.!
எனது அக்காவிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது.சமீபத்தில் புற்றுநோய் என்பது ஒரு நோயே அல்ல.அது விட்டமின் B17 என்ற விட்டமின் கோளாறால் தான் வருகிறது.என்று ஒரு வீடியோவில் பார்த்தேன். இது உண்மையா?
இது பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை.தனது மனைவியை புற்றுநோயால் இழந்தபின் புற்றுநோய் பற்றி பல ஆய்வுகளை செய்துவரும்.எனது நண்பர் பலராமன் அவர்களின் பதிலை கீழே தந்துள்ளேன். படியுங்கள்.!
B17 என அழைக்கப்படும் இந்த பொருளை, பலர் வைட்டமின் க்ரூப்பிலேயே சேர்ப்பதில்லை
Mandelonitrile Beta D, Gentiobiosidemandelonitrile Beta, GlucuronidelaevorotatoryPurasinamygdalinanitriloside என பல பெயர்களில் அழைக்கப்படும் இவை leatrile வகையைச் சார்ந்தவை. இந்த முரணால்தான் B17 மாத்திரை வடிவில் கிடைக்காது. மீதி எல்லா விட்டமின்களும் மாத்திரைகளாகக் கிடைக்கும்.
B17 என்பது, சயனைட் க்ரூப்பைச் சார்ந்த ஒரு விஷம். இதை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும்போது, சிறந்த antioxidant ஆக வேலை செய்கிறது. அதாவது, B17 with Vit C &Vit E, சிறந்த நச்சு நீக்கி.
எல்லா anti oxidants களும் ஒவ்வொரு வகை புற்றுநோயின் 'தாக்கத்தை' குறைக்கும் வல்லமை உடையது. B17 is also a better anti oxidant. அதன் வலிமையை நம் மருந்துகளோடு ஒப்பிட்டால், அசோக மரப்பட்டை,வில்வமரப்பட்டை, சோற்றுக் கற்றாளை ஆகியவைகளைச் சொல்லலாம்.
ஆனால் எவ்வளவு அளவு B17 கொடுக்க வேண்டும் என்பதை தீர்மாணிக்க இயலவில்லை. ஒருவருக்கு கான்ஸர் நிவாரணியாக இருக்கும் அளவுகள், மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் அளவுகளாகிவிடுகிறது.
பரிசோதனைச் சாலைகளில் ஒரே அளவிலான கான்ஸர் ஏற்படுத்தப் பட்ட எலிகளுக்கு, ஒரே அளவிலான B17 கொடுத்துப் பார்த்ததில் ஒன்றுக்கு நிவாரணமும், மற்றொன்றுக்கு மரணத்தையும் ஏற்படுத்தியது.
மிக நீண்ட ஆராய்ச்சிகள் கூட, தீர்மானமாக குணப்படுத்துகிறது அல்லது குணப் படுத்தாது என arrive. பண்ணவே முடியவில்லை.
தீர்மானமாக முடிவெடுக்க முடியாததாலும், முரண்பட்ட முடிவுகளைக் கொடுத்ததாலும் FDA , B17 ஐ தடைசெய்து விட்டது.
மாற்று மருத்துவ முறைகள் B17 பயன்படுத்திப் பார்த்தும் அவர்களால் முடிவாக எதையும் சொல்லமுடியவில்லை.
ஆனால், ஆரம்ப நிலை மூளை, கல்லீரல் புற்றுநோய்களை B17 கட்டுக்குள் வைத்தது.
முற்றிய புற்றுநோய்களுக்கு B17 தீர்வாக அமையவில்லை.
இதுதான் இன்றைய நிலை.
ஆனால், என் தனிப்பட்ட கருத்து கோலாக்கள், அனைத்துவகை ஃபாஸ்ட் ஃபுட்களைத் தவிர்த்தல், சர்க்கரை, வெல்லம், க்ளுகோஸ், கோதுமை, பாலிஷ் செய்யப் பட்ட அரிசி, பாக்கட் பால், அனைத்து ப்ராஸஸ்டு ஆயில்கள் ஆகியவற்றை முற்றாக நீக்கி,
சிறு தானியங்கள், நாட்டு மாட்டுப்பால்,
செக்கு நல்லெண்ணை,
செக்கு தேங்காயெண்ணை,
நெய், நாட்டு காய்கறிகள்,
பதாம், நல்ல கொழுப்புகளை சேர்த்துக்கொள்ளுதல் (நாட்டுக் கோழி முட்டை போன்றவை),
சோலார் நூன் நேரமாகப் பார்த்து (அநேகமாக 1130 முதல் 1400 hours வரை) வெயிலில் பத்து நிமிடம் நிற்றல், கால்சியம் மாத்திரைகளைத் தவிர்த்தல், பசித்தால் மட்டுமே உண்ணுதல்,
பத்து மணிக்கு தூங்குதல், கடைகளில் உண்ணாதிருத்தல் - முக்கியமாக பரோட்டா, வீட்டில் மட்டுமே உண்ணுதல், இஞ்சி, பச்சைப் பூண்டு, பட்டை, வீட்டில் அரைத்த மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய், ப்ராணாயாமம்,கபாலபதி ஆகியவற்றைப் பழகுதல்......
(என்ன மூச்சு வாங்குகிறதா?) ஆகியவற்றைச் செய்தால் கான்ஸர் அண்டாது.
நன்றி, பலராமன் கடலூர்.
உங்களைப் போன்ற பலரும் தடுப்பூசிகளை கண்மூடித்தனமாக
எதிர்ப்பது ஏன்?.
ஒன்று மனித உடலில் உள்ள இயற்கை நோய் எதிர்ப்பு ஆற்றலை
அது பாதிப்பதால்.
இரண்டு தடுப்பூசிப்போடுவது மிகப்பெரிய வர்த்தகமாகிப்போனதால்.
மூன்று பிறந்தது முதல் குழந்தையை இயல்பாக ஒரு நொடிகூட இயற்கையோடு விளையாட அனுமதிக்காமல் தொடர்ந்து தடுப்பூசிகளைப் போடுவதையே ஒரு வியாபாரமாய் செய்து வருவதால்.
தடுப்பூசியைப் போட்ட விநாடியே பல குழந்தைகள் மரணமடைவதை நேரில் பார்த்ததால். நான்றாக யோசித்துப் பாருங்கள் நீங்களும் நானும் குழந்தையாய் இருக்கும் போது வெறும் இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 15 ஊசிகளை போடுகிறார்கள். இது முழுக்கக் முழுக்க
வியாபாரம்.பார்த்துச் செய்யுங்க. கீழே ஏற்கனவே ஒரு நண்பரோடு தடுப்பூசிப் பற்றி விவாதித்ததையும் சேர்த்துள்ளேன். படித்து நல்ல முடிவை எடுங்க.!
தடுப்பூசி சந்தேகங்கள்
தடுப்பூசி மட்டுமல்ல;சாதாரண Bcomplex injection கூட ஒவ்வாமையை உண்டாக்கும் மரணம் சம்பவிக்கும். எனவே, த.ஊ க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
அக்காலத்தில், அம்மை நோய், காலரா, டிப்தீரியா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கி கும்பல் கும்பலாக இறந்தவர்களை அறிவேன். கொள்ளை நோய் தாக்கிய காலத்தில், தினம் பத்து பாடைகள் தயாராகும். அவையல்லாம் எப்படி ஒழிந்தது? பாம்பு கடித்தே செத்தவர் லட்சக் கணக்கில்.
சுருக்கமாக கொள்ளை நோய் நோய் ஒழியக் காரணம் த.ஊசிகளே! இன்றைக்கு துணிந்து ஒரே குழந்தையோடு நிறுத்திக் கொள்ளும் நம்பிக்கையை அளித்தது த.ஊசிளும், நவீன மருந்துகளுமே!
இயற்கை வழிமுறைகள், மிக நல்ல வாழ்வுமுறை. அதற்காக தடுப்பூசிகளை எதிர்பது குழந்தைகட்கு செய்யும் துரோகம். நவீன மருத்துவ முறைகளால்தான், 1947 ல், 24 ஆக இருந்த இந்தியனின் சராசரி ஆயுட்காலம், தற்போது 64 ஆக உயர்ந்துள்ளது.
நவீன விஞ்ஞான மருத்துவம் வளர்ந்து மனித குலத்திற்கு பயன் பட்டது போல, வேறெந்த சிஸ்டமும் வளரவில்லை. அல்லோபதி ஆராய்ச்சிகளின் வீச்சின் அளவு பற்றி, மற்ற சிஸ்டங்கள் கனவுதான் காண முடியும்.
பிரச்சினை என்னவென்றால், அது கண்மூடித்தனமாக வணிக மயமாகிவிட்டதுதான்.!
அய்யா, 1947 இல்
24 வயதுதான் ஆயுளா,
இது என்ன விந்தை பிறகு? மகாத்மா காந்தி, நேரு, சித்தரஞ்சன் தாஸ், வஉசி,உவேசா எல்லாம் எப்படிங்க, ஆவிகளாகவா வாழ்ந்தார்கள்?
சராசரி ஆயுளை கூட்டினோம் என்று ஆங்கில மருத்துவர்களே தங்களுக்காக விளம்பரம் செய்கிறார்கள். அது உண்மையல்ல.
விஞ்ஞானம் வேறு அலோபதி மருத்துவம் வேறு.இரண்டையும் சேர்த்துக் குழம்ப வேண்டாம். வள்ளுவன், தொல்காப்பியன் இளங்கோ, சாத்தனார்,கம்பர் எல்லாம் பூரணமாக வாழ்ந்தவர்கள் தானே.!
எனது பாட்டன் கூட மூன்று மனைவியை கட்டி 18 பிள்ளைகளை பெற்றாரே அதெல்லாம் பொய்யோ.!
காலரா, போலியோ,தட்டம்மை போன்றவை ஒரு காலத்தில் பரவி பின் மறைந்த நோய்கள் இன்றும் அதை தடுப்பதாக கூறி அமெரிக்காவில் இருந்து அந்த நோய் ஏற்படுத்தும் நோய்கிருமிகளையே தடுப்பூசியாக நமது பிள்ளைகளுக்கு போட வேண்டிய அவசியம் என்ன?
தடுப்பூசி அமெரிக்காவில் கூட கட்டாயமல்ல.! இங்கும் அதுபோல் விளைவுகளை அரசே கூறி தேவையானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுவது தானே முறை?.
அதை விடுத்து நான்தான் உனது வயதை கூட்டினேன்,நான்தான் போலியோவை ஒழித்தேன், நான்தான் மக்களை ஆரோக்கியமாக வைத்துள்ளேன் என்று ஆங்கில மருத்துவ முறை ஏன் பொய்கூற வேண்டும்.!
ஆங்கில மருத்துவமுறையை பெயரளவிற்கு மட்டுமே பயன்படுத்தும் சைனா, ஜப்பான்,சவுதி அரேபியா போன்ற
நாடுகளில் இருப்பவர்கள் ஆங்கில முறையை முக்கிய மருத்துவமாக பயன்படுத்தும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் வாழ்பவர்களை விட அதிககாலம் வாழ்கிறார்கள் அதற்கு என்ன செய்வது.!பலராமன் அய்யா, ஆங்கில மருத்துவ முறையினர் கூறுவதை கேளுங்கள், பாரம்பரிய முறையினர் கூறுவதையும் கேளுங்கள் பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வீணாக மக்கள் உயிரோடு பலர் விளையாடுவதாக நீங்கள் நினைப்பதை விடுங்கள்.
எனக்கு தெரிந்து தடுப்பூசி போடாத பல சிறுவர்கள் தடுப்பூசி போட்டவர்களை விட ஆரோக்கியமாக உள்ளனர்.
நலம் பெருகட்டும் …
<தடுப்பூசியைப் பற்றிய மேலதிக உண்மைகளை அறிய, தமிழ்வாணன் அவர்களின் இயற்கை வைத்தியம் என்ற நூலைப்படியுங்கள்.>
எட்டு நடை, முத்திரை,குண்டலினி தியானம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே?
திரு.கோபிநாதன்,திருப்பூர்.
எட்டு நடையைப் பற்றி எந்தப் பழமையான நூலிலும் குறிப்பிடவில்லை.பொதுவாக எட்டு நடைப்பயிற்சியை இரத்த அழுத்தம்,பித்தம் அதிகம் உள்ளவர்கள் செய்வது ஆபத்தானது. குண்டலினியைப்
பற்றி பல நூல்களில் குறிப்புள்ளது.ஆனால்,அதைப்பழகும் உடல் திறன் நவீன மனிதனுக்கு இல்லை. மீறி பழகினால் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும்.
அதனால்,இதுவும் ஒரு ஆபத்தானப் பயிற்சிதான்.முத்திரை என்பதை கையில் செய்யப்படும் ஆசனங்கள். என்று கூறுவார்கள்; ஆனால்,உடலில் தினமும் யோகம் செய்து சேர்த்த ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே முத்திரை வேலை செய்யும். சும்மா வெறுமனே முத்திரையைப் பிடித்து தினமும் அரைமணி நேரம் அமர்ந்தால் விரல்வலி முதல் புற்றுநோய் வரை வரும் வாய்ப்புள்ளது.ஆகையால் இதுவும் ஆபத்தான ஒருப் பயிற்சியாகும்.!
உண்மைதான்,இந்தப் பயிற்சிகளை செய்து கடினமான பின் விளைவுகளை அடைந்தப் பலரையும் நான் சந்தித்துள்ளேன்.!
கவனம் சகோதரரே கவனம் கவனம்.!
புற்றீசல்கள் போல் கிளம்பி வரும் புதிய முறைகள் எளிமையாய் இருப்பதால் அவற்றைப் பயின்று நமது பாரம்பரிய ஞானமான இயற்கை வாழ்வியலையும் யோகத்தையும் மூலிகைகளையும் மறந்துவிடாதீர்கள்.!
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் சாப்பிடலாம்" என்கிற பழமொழிகேற்ப சமைத்த உணவு, இயற்கை உணவு, தினம் உணவுக்கு பிறகு ஐந்து மிளகை சாப்பிடலாமா சார்?
திரு.பாலாஜி,குஜராத்.
தினமும் ஏதேனும் ஒருநேரம்
ஐந்து மிளகு,ஐந்து பச்சை வேர்க்டலைப் பருப்பு,ஐந்து விதையுள்ள கருப்புத்திராட்சை
ஆகியவற்றை உணவிற்கு முன்
உண்டுவாருங்கள்.!
<உலர் திராட்சை மற்றும் மிளகை மொத்தமாக வாங்கி தனித்தனியாக கால் மணிநேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின் ஒரு மணிநேரம் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.>
இந்த முறையை கடைப்பிடிப்பதால்
உடல்சூடு குறையும்,ஹீமோகுளோபின் அதிகரிக்கும். மூச்சுவாங்குவது குறையும்,மலச்சிக்கல் நீங்கும். ஒருமாதம் வரை தொடர்ந்து இந்த முறையை கடைப்பிடித்து உங்கள் ஆரோக்கியத்தை ஆராய்ந்து பதில் தாருங்கள்.! நலம் பெருகட்டும் …
உயிர் மீட்கும் மருத்துவம்
நிறைவுற்றது.!
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
No comments:
Post a Comment