I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: May 2019

Sunday, 26 May 2019

இயற்கையின் தோழர்கள்


#கடைசி_துளிவரை #ருசியுங்கள் --ஏகப்பிரியன்--- வெளிநாட்டினரிடம் தற்போது ஒரு வாழ்க்கை முறை பிரபலமாகி வருகிறதாம்.(மினிமலிசம்) சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் ஆடைகளை பார்த்துள்ளீர்கள் தானே? மூட வேண்டிய பகுதிகளை மட்டும் சரியாக மூடியிருப்பார்கள். நம்மவர்கள் போல முழுக்கை சட்டை எடுத்து அதை அரைக்கையாக மடித்து போடும் பழக்கமோ அல்லது அரேபியன் அடிமைகளைப்போல ஐந்தடி பெண்ணுக்கு ஏழடியில் பர்தா தைத்துக்கொடுக்கும் பழக்கமோ அவர்களிடம் கிடையாது. இருந்தாலும் கூட தனது அலுவலகத்தேவைக்கும் தங்கள் வசதிக்காகவும் அவர்களும் ஆடைகள் முதல் இன்னும் பல்வேறு விசயங்களில் சற்று அநாவசிய செலவுகளை செய்து வந்தனர்.தற்போது அதை மாற்றும் பொருட்டு ஒரு சில ஐரோப்பியர்களின் மூளையின் உதித்ததுதான் குறைந்த அளவு வசதிகளை பயன்படுத்திக்கொண்டு அதிகப்பட்சம் மகிழ்வாக வாழும் கலை. ஒவ்வெருவரும் போடும் உடை முதல்,உணவு,போக்குவரத்து,விருந்து, பிறருக்கு செய்யும் உதவி என்று எல்லாவற்றுக்கும் குறைந்தப்பட்ச அளவிலான பணத்தை மட்டும் பயன்படுத்திவிட்டு மற்றவற்றை முழுவதும் சேமிக்கிறார்கள். ஆனால்,இதன் நோக்கம் சேமிப்பு மட்டுமல்ல வீண் ஆடம்பரத்தை தவிர்த்து மனித உணவிற்காக, வளர்ச்சிக்காக இயற்கையை சீரழித்து, உருவாக்கப்படும் உணவு,உடை,ஆடம்பர பொருள்கள்,இரசாயண பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியை குறைத்து இயற்கையை முடிந்தவரை பாதுகாக்கவே இதை செய்கிறார்கள். தங்கள் உணவிற்காக; இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களையும், பழம் காய்கறிகளையும் தங்கள் தேவையின் 80% மட்டுமே வாங்கியோ விளைவித்தோ பயன்படுத்துகிறார்கள். இந்த அணியில் உள்ள ஒருவர் தனக்கென்று நான்கு செட் உடை,ஒருஜோடி சப்பல்,ஒருஜோடி ஷூ போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துவார். இப்படி தங்களிடம் உள்ள உடையையும் சப்பல்களையும் இனிமேல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலைவந்து கந்தலாகும் வரும் வரைபயன்படுத்துவர்கள்.பிறகுதான் அதற்கு பதிலாக அடுத்த உடையையோ பொருளையோ வாங்குவார்கள். ஒரு வீட்டில் ஒரு கார் மட்டுமே வைத்துக்கொள்வார்கள். அதுவும் இயற்கையை மாசுபடுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த காரையே பயன்படுத்தும் வகையிலோ அல்லது ஒரு சிலர் பொது வாகனமான பேருந்து,இரயில் போன்றவற்றையும் பயன்படுத்தும் வகையிலோ தங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கிறார்கள். இரண்டு கார்,நான்கு பைக்,வருசத்துக்கு ஒரு புது வண்டி,ஆறுமாதத்திற்கு ஒரு செல்போன் என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை சமூக விரோதம்.! தங்கள் குடும்ப விழாக்களையும், விருந்துகளையும் தங்கள் இடத்திலேயே குறைந்தப்பட்ச உணவுடன் அதிகப்பட்ச மகிழ்ச்சியோடு கொண்டாடி கொள்கிறார்கள்.! இந்த அமைப்பில் உள்ளவர்கள் பல்வேறு நோய்களுக்கான இயற்கை மருத்துவ முறைகளையும் எளிய வெட்டுக்காயங்களுக்கு தானே தையல் போடவும் தெரிந்து வைத்துள்ளனர். குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் போதுமான இடவசதி உள்ள, எளியவீடுகளிலேயே வாழ்கிறார்கள். முடிந்தவரை தங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூலமாகவும் சூரிய ஒளியின் மூலமாகவும் மின்சாரத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தங்கள் வீட்டில் 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்து விடுகிறார்கள். புதிதாக எந்தப்பொருளை வாங்குவதாய் இருந்தாலும் இது நமக்கு 100% பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே வாங்குகிறார்கள்.! இவர்கள் இப்படியெல்லாம் வாழ்வதற்கு வாழாமலே இருக்கலாம். என்று சிலர் கூறலாம்.உங்க கஞ்சத்தனத்திற்கு அளவே இல்லையாடா?என்று கூட சிலர் கேட்கக்கூடும்.! உண்மையில் இவர்கள் தான் வாழ்கிறார்கள்.ஆமாம், இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழும்,பிரச்சாரம் செய்யும் எவரும் பணத்திலோ அறிவிலோ குறைந்தவர்கள் அல்ல அனைவருமே பெரும்பெரும் பணக்காரர்கள்,மேதைகள்.! அதனால்,பணம் இல்லாததால் எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியவில்லையே,என்னால் நினைத்தபடி மகிழ்ச்சியாய் வாழ முடியவில்லையே;என்று அங்கலாய்க்கும் நம்மைப்போன்ற சாதாரணர்கள் இவர்கள் அல்ல.! இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போதுதான் இன்றைய உற்பத்தி உலகில் நாம் இயற்கைக்கு புறம்பாக எத்தனை அழிச்சாட்டியம் செய்துவருகிறோம் என்பது புலப்படும். பிரியாணி என்ற உணவை கண்டறிந்ததே இந்தியர்கள் தான். எதற்கு தெரியுமா? ஐந்து குழம்பு எட்டுக்கூட்டு,பழம்,பப்படம்,ஊறுகாய் என்று இத்தனை விதமான உணவையும் சமைத்து நேரத்தையும்,பணத்தையும், உணவையும் விரயம் செய்யாமல் எளிய முறையில் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய உணவை பெறவே இந்த தந்திரம் கையாளப்பட்டது. இன்றைக்கு பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குருமா,அப்பளம்,ஊறுகாய்,ஐஸ்கிரீம் என்று புதிய பட்டியலை உருவாக்கி விட்டன சில நவீன விற்பனை மங்கிகள். கடலிலும்,நதியிலும்,ஓடையிலும் எங்கும் குப்பை,எதிலும் குப்பை,எளியவனின் வீட்டில் கூட ஒருவனுக்கு மூன்று ஜோடிசெருப்பிருக்கும்.உண்க,சுத்தம் செய்ய, உண்ணாமல் எச்சில் செய்து என்று ஒரு நாள் இந்தியாவில் உள்ள நம்மைப்போன்றவர்கள் போட்ட குப்பைகளே இங்கு பல்வேறு புதிய மலைகளையும் சாக்கடை நதிகளையும் உருவாக்கி வருகிறது. காந்திதேசத்து மாந்தர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு நெசவாளியால் கூட தனது மேலுடம்பை மறைக்க துணி நெய்ய முடியவில்லையே? என்று வருந்திய காந்தி மகான் … இன்றுமுதல் நானும் மேலாடை அணியப்போவதில்லை என்று கூறியதோடு;தனது வேட்டிக்கிழிந்தால் அதை மேல்த்துண்டாகவும் துண்டு கிழிந்தால்தலையணைஉறையாகவும், உறையும் கிழிந்தால் அதை,கைக்குட்டையாகவும் இறுதி வரை ஒரு பொருளை பயன்படுத்தி அதை முழுவதும் உபயோகமாக்கிக் கொண்டதோடு, வாழ் நாளெல்லாம் நோம்பு நோற்று தாய்நாட்டிற்கு விடுதலையும் வாங்கித்தந்து;தன் உயிரைக்கூட மதவெறியின் உச்சம் உணர்த்த பயன்படுத்திக் கொண்ட ,மகாத்மா தேசத்தில் பிறந்த நாம் இன்று;வெள்ளையார்களால் கைவிடப்பட்ட குப்பைசேர் வாழ்க்கை முறையில் உழன்று வருகிறோம்.மீண்டும் விழிப்புணர்வு பெறுவோம், இயற்கையோடு இயைந்து நல்வாழ்வை நமதாக்கிக்கொள்வோம்.! வாழ்க வளமுடன்.! நலம் பெருகட்டும் …

Monday, 20 May 2019

மருத்துவ உண்மைகள்


உயிர்நீட்டும்_மாமருந்து

 -ஏகப்பிரியன் 

 ஊசியையும் மருந்தையும் உள்ளுக்கு அனுப்பினால் எல்லாம் சுகமாகும்; பக்க விளைவுகளை தவிர்க்க முடியாது,என்பது ஒரு முறை. கழிவை நீக்கி மூலிகைகளை தின்றால் ரோகம் நாசம் என்றது சித்தஞானம். மனதை குவி,மந்திரம் சொல்லு, உடலை வளை,உணவைப்பேணு உயிரை வளர்த்தென்றது யோகநெறி. இயற்கை காய் கனிகளை தின்று கால் கைகளை ஆட்டு போதும் உணவே மருந்தென்றது இயற்கை வாழ்வியல் வழி. இதெல்லாம் பழையன; புதிய பம்மாத்து கேளுங்கள் … உழுந்தவடை தின்றால் பித்தப்பை கல் கரையுமாம்,கோவைக்காய் என்றாலே கொழுப்பு காலியாம்,மிருகங்களை மட்டும் தின்றால் உடல் எடை கரைந்து விடுமாம். உணவே இல்லையென்றாலோ சக்கரை,முதல் இரத்த அழுத்தம் வரை சர்வமும் நாசமாம்,பாதத்தில் அழுத்தினால் பார்வை தெரியுமாம்,கைகளை பிசைந்தால் கல்லீரல் கொழுப்பு கரையுமாம்,மீனை உயிரோடு முழுங்கினால் இழுப்பு நின்று விடுமாம்,மாதம் முழுவதும் மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் புறமுதுகிட்டு ஓடிவிடும்.இதுவரை இல்லாத புதிய உடற்பயிற்சியாக தரையில் படுத்து சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் கைகால்களை உதறினால் மாரடைப்பு முதல் சிறுநீரக செயலிழப்பு வரை எல்லாம் காலி,எட்டில் சுற்றிச்சுற்றி நெளிந்து நடந்தால் நாலாயிரம் நோய்கள் நாலு தலைமுறைக்கும் வராதாம்,புரோட்டாவையும்,பர்கரையும் கூட பசித்து ருசித்து தின்றால் அமிர்தமாகி சர்வரோகங்களையும் போக்கி விடுமாம். ஹஹ் ஹா… உடலையும்,உணவையும், பேணத்தெரியாத அறிவிலிகள் உடல் சீர்கெட்ட பின்னே எத்தை தின்றால் பித்தம் தணியும் என்று ஆலாய் பறக்கிறார்கள்.அல்லோபதியின் பக்க விளைவிற்கும் பண அழிவிற்கும் தாக்கு பிடிக்க முடியாமல்,ஹீலர் என்ற ஹில்லர்களிடமும்,நியூட்ரிசியன், டயட்டீசியனிமும், தொழியோடு வைத்தியனிடமும், சிமோகா மடத்திலும் தஞ்சமடைகிறார்கள். நானே கடவுள் என்றவனும்; இறை ஏகன் என்பவனும் அவன் அனேகன் என்பவனும்;எவனும் இல்லை என்றவனும், எல்லாம் எல்லாம் வெற்று இயந்திரங்களையும், வெறும் அளவீடுகளையும்,அமெரிக்க ஆராய்ச்சியையும், ஆண்டியப்பன் சொன்னதையும் வைத்து மூத்திரம் பிடித்து,மலத்தை சுமந்து,இரத்தம் பிழிந்து,கதிர்வீச்சில் குளித்து நித்தம் நித்தம் சத்தை இழந்து சாவை நோக்கும் சரித்திர மடையர்களாய் வாழ்கிறார்கள். " உயிர் நீட்டும் வழி இரண்டு ஒன்று சரியான உணவு,மற்றொன்று முறையான உடற்பயிற்சி" இவை தவிர்த்த காரணத்தாலேயே இன்று வதைப்பிடித்து அலைகிறாய். மீண்டும் கவனம் கொள்; எதை திண்ண வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி வாழவேண்டும்? என்பதை மட்டும் கற்றுக்கொள்,தினமும் நல்ல உணவை உண்பதைப்போலவே உடலையும்,நல்யோகம் செய்யப்பழக்கு; இதுவே என்றும் மாறாத, தலைமுறைகளையும் தாண்டி வாழும் ஆரோக்கியச்சூத்திரம்.! மற்றெல்லாம் உன் நோய்நீட்டி பிறர் வாழக்கண்டறிந்த தந்திரங்கள்.! www.aumherbals.com

Wednesday, 15 May 2019

எளிய இயற்கை உணவு செய்முறை


*சத்து நிறைந்த இயற்கை உணவு* கார அவல் செய்முறை தேவையான அளவு இயற்கை சம்பா அவலை லேசாக அலசி நீரை வடியவைத்து அதனுடன் தேவையான அளவு கேரட் துருவல்,நான்கைந்து சின்னவெங்காயம் வெட்டிப்போட்டு சிறிது புதினா, கொத்தல்லி,கருவேப்பிலை இலைகளையும் நறுக்கி சேர்த்து சிறிது குறுமிளகுதூள்,சீரகத்துள், இந்துப்பு தூள் கலந்து வைத்துக்கொண்டு தொட்டுக்கொள்ள தேங்காய்,கடலை சட்னியோடு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.! சமைக்காத உணவில் மட்டுமே அனைத்து வகை சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனால்,பழம்,காய்கறி போன்றவற்றை எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சிலருக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படாது. ஆனால், வேகவைக்காத அவலில் செய்கின்ற எல்லா வகை உணவும் சாப்பிட்ட திருப்தியை தருவதோடு நீண்ட நேரம் பசியை தாங்கவும் போதுமானதாக அமைகிறது.! www.aumherbals.com

Thursday, 2 May 2019

ஆஸ்துமா தீர பயிற்சியும் மருந்தும்


இயற்கை முகாம் வழிகாட்டி


*யஇயற்கை வாழ்வியல் முகாமிற்கு இப்படி வாங்க ஒரு பெட்சீட்,இரண்டு,டவ்வல்.யோகா செய்வதற்கு டிராக் பேன்ட்,டீசர்ட்/அல்லது தளர்வான ஆடைகள்.பெண்கள் இவற்றோடு சுடிதார்,மிடி,புடவை போன்ற மாற்று உடைகளை கொண்டுவரவும். ஆண்கள்: மேலும் 2 வேட்டி/லுங்கி. மூன்று நாள்போடுவதற்கான உடை. அனைவரும்: தேவையானால் ஏர்பில்லோ ஒன்றும் எடுத்து வரலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் இரசாயண மாத்திரை,மருந்து,வெளி உணவுகள் எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை.பேஸ்ட்,சோப்பு,பவுடர்,பிஸ்கட்,ரொட்டி போன்ற எதையும் எடுத்து வரவேண்டாம்.!தேவையான சமைக்காத இயற்கை உணவு,பழச்சாறு,மூலிகை மருந்து,மூலிகை பல்பொடி,குளியல்பொடி இங்கு வழங்கப்படும்.! லேப்டப்,செல்போன் போன்றவற்றை தேவையானால் ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். நகைகள் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை அணிந்து வருவதை தவிர்க்கவும். முடியாதவர்கள் எளிய நகைகளை மட்டுமே அணிந்து இயல்பாக வருவது நல்லது. முக்கியமா; இயற்கையை உணரும் மனநிலையோடு எளிமையாக வாருங்கள்.! வழித்தடம்: பெங்களூர்,சென்னை,கோவை,மதுரை என்று எந்த ஊரிலிருந்து நீங்கள் இயற்கை முகாமிற்கு இரயிலில் வருவதாய் இருந்தாலும் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் வழியில், நாகர்கோவில் வருவதற்கு சுமார் 40 கிலோ மீட்டருக்கு முன்பே, வள்ளியூர் என்ற ஊரில் இரயில் நிற்கும்.அங்கு இறங்கி, அங்கிருந்து ஆரல்வாய்மொழிக்கு பேருந்தில் வந்து,பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,ஆட்டோக்காரரிடம் சுப்ரமணியபுரம் அன்னைஆஸ்ரமம் என்று கூறினால் கொண்டு விட்டு விடுவார்கள்.! பேருந்தில் வருவதாய் இருந்தால் நாகர்கோவிலிற்கு சுமார் 15 கிலோமீட்டர் முன்பாகவே, ஆரல்வாய்மொழி வரும். அந்த நிறுத்தத்தில்இறங்கி ஆட்டோவில் சுப்ரமணியபுரம் அன்னை ஆஸ்ரமம் என்று கூறினால் (சுமார் 2 கிலோமீட்டர்)கொண்டுவிட்டு விடுவார்கள்.! மேற்கண்ட ஊர்களிலிருந்து தங்கள் சொந்த வாகனத்தில் வருபவர்கள். ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் இருந்து; நாகர்கோவில் வரும் வழியில் சுமார், 600 மீட்டர் வந்தால் சாலையில் வலது பக்கம் சுப்ரமணியபுரம் வவ்வால்குகை முருகன் கோவில் ஆர்ச் தென்படும். அதில் திரும்பி நேராக உள்ளே கொஞ்சதூரம் வந்தால் மலைக்கோவிலிற்கு முன்னதாகவே இடது புறம் அன்னை சேவா ஆஸ்ரமம் உள்ளது.! தொடர்பிற்கு; 9629131089 9629368389 www.aumherbals.com வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.! நலம் பெருகட்டும் …

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...