*யஇயற்கை வாழ்வியல் முகாமிற்கு இப்படி வாங்க
ஒரு பெட்சீட்,இரண்டு,டவ்வல்.யோகா செய்வதற்கு டிராக் பேன்ட்,டீசர்ட்/அல்லது தளர்வான ஆடைகள்.பெண்கள் இவற்றோடு சுடிதார்,மிடி,புடவை போன்ற மாற்று உடைகளை கொண்டுவரவும்.
ஆண்கள்: மேலும் 2 வேட்டி/லுங்கி.
மூன்று நாள்போடுவதற்கான உடை.
அனைவரும்: தேவையானால் ஏர்பில்லோ ஒன்றும் எடுத்து வரலாம்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் இரசாயண மாத்திரை,மருந்து,வெளி உணவுகள் எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை.பேஸ்ட்,சோப்பு,பவுடர்,பிஸ்கட்,ரொட்டி போன்ற எதையும் எடுத்து வரவேண்டாம்.!தேவையான சமைக்காத இயற்கை உணவு,பழச்சாறு,மூலிகை மருந்து,மூலிகை பல்பொடி,குளியல்பொடி இங்கு வழங்கப்படும்.!
லேப்டப்,செல்போன் போன்றவற்றை தேவையானால் ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நகைகள் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை அணிந்து வருவதை தவிர்க்கவும். முடியாதவர்கள் எளிய நகைகளை மட்டுமே அணிந்து இயல்பாக வருவது நல்லது. முக்கியமா;
இயற்கையை உணரும் மனநிலையோடு
எளிமையாக வாருங்கள்.!
வழித்தடம்: பெங்களூர்,சென்னை,கோவை,மதுரை என்று எந்த ஊரிலிருந்து நீங்கள் இயற்கை முகாமிற்கு இரயிலில் வருவதாய் இருந்தாலும் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் வழியில், நாகர்கோவில் வருவதற்கு சுமார் 40 கிலோ மீட்டருக்கு முன்பே, வள்ளியூர் என்ற ஊரில் இரயில் நிற்கும்.அங்கு இறங்கி, அங்கிருந்து ஆரல்வாய்மொழிக்கு பேருந்தில் வந்து,பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,ஆட்டோக்காரரிடம் சுப்ரமணியபுரம் அன்னைஆஸ்ரமம் என்று கூறினால் கொண்டு விட்டு விடுவார்கள்.!
பேருந்தில் வருவதாய் இருந்தால் நாகர்கோவிலிற்கு சுமார் 15 கிலோமீட்டர் முன்பாகவே, ஆரல்வாய்மொழி வரும். அந்த நிறுத்தத்தில்இறங்கி ஆட்டோவில் சுப்ரமணியபுரம் அன்னை ஆஸ்ரமம் என்று கூறினால் (சுமார் 2 கிலோமீட்டர்)கொண்டுவிட்டு விடுவார்கள்.!
மேற்கண்ட ஊர்களிலிருந்து தங்கள் சொந்த வாகனத்தில் வருபவர்கள். ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் இருந்து; நாகர்கோவில் வரும் வழியில் சுமார்,
600 மீட்டர் வந்தால் சாலையில் வலது பக்கம் சுப்ரமணியபுரம் வவ்வால்குகை முருகன் கோவில் ஆர்ச் தென்படும். அதில் திரும்பி நேராக உள்ளே கொஞ்சதூரம் வந்தால் மலைக்கோவிலிற்கு முன்னதாகவே இடது புறம் அன்னை சேவா ஆஸ்ரமம் உள்ளது.!
தொடர்பிற்கு;
9629131089
9629368389
www.aumherbals.com
வாழ்க வையகம்;
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment