I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: October 2019

Tuesday, 22 October 2019

எளிய முறை லேகியம்

தீபாவளி_லேகியம்
செய்வதெப்படி?

1. சுக்கு                - 50 கிராம்
2. சித்தரத்தை  - 50 கிராம்
3. கண்டதிப்பலி  - 25 கிராம்
4. அரிசி திப்பிலி  - 5 கிராம்
5. ஓமம்                 - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை  - 50 கிராம்
7. மிளகு                              - 50 கிராம்
8. கிராம்பு                      - 20 கிராம்
9. ஜாதி பத்திரி             - 10 கிராம்
10. விரளி மஞ்சள்         * 10 கிராம்
11. வெல்லம்                 - 250 கிராம்
12. நெய்                          - 200 கிராம்
13. தேன்                         - 100 கிராம்

செய்முறை

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பிறகு எல்லாவற்றையும் சேர்த்து உரல் அல்லது மிக்ஸியில் பொடிதாக பொடித்து சலித்துக்கொள்ளவும். 

அடுப்பில் சட்டியை வைத்து வெல்லத்தை சிறிது நீர்விட்டு பாகாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும். பொடித்த சரக்குகளை வேறு ஒரு இரும்புச்சட்டியில் போட்டு வெல்லக்கரைசல்,தேன், நெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி அடி பிடிக்காமல் கிளறி வரவும் ஒரு அரைமணி நேரத்தில் அனைத்தும் திரண்டு லேகிய பக்குவத்திற்கு வந்ததும் இறக்கி சூடு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து  உணவிற்கு பின் காலை,மதியம் சாப்பிட்டு சிறிது சுடுநீர் அருந்திவர அஜீரணக்கோளாறு,உப்புசம்,ஏப்பம்
,வாய்வுப்பிடிப்பு நீங்கும்.

குறிப்பு: எவ்வளவு சுவையான பலகாரமாய் இருந்தாலும் முக்கால் வயிற்றுக்கு மேல் உண்பது பாதுகாப்பானது இல்லை. www.aumherbals.com

Saturday, 19 October 2019

மந்திர இரகசியங்கள்

என் வீட்டில் புத்தக அலுமாரியை இன்று சுத்தம் செய்யும் போது மிக பழைய "அகஸ்தியர் மந்திர வாள்" என்னும் நூல் கையில் தட்டியது. இன்று வரை மிக பெரிய மாந்திரிகர்களால் மட்டுமே ரகசியமாக கையாளப்படும் நூல் இந்த "அகத்தியர் மந்திர வாள்" என்னும் நூல். அதில் உள்ள மூல மந்திர ரகசியத்தை பகிர்கிறேன்.

புரிஞ்சி கொள்ள கூடியவங்க...
                  புரிஞ்சி கொள்ளுங்க......

மோகனம்
***********

ஓம் ரீங் மோகி மோகி

வசியம்
********

ஓம் ரீங் வசி வசி

ஸ்தம்பனம்
*************

ஓம் ரீங் ஸ்தம்பய ஸதம்பய

ஆகர்ஷணம்
**************

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய

கட்டிகள் கரைய
*****************

ஓம் ரீங் கசி கசி

மசிய வைத்தல்
*****************

ஓம் ரீங் மசி மசி

நோய் நீக்குதல்
*****************

ஓம் ரீங் நசி நசி

சத்ரு சம்ஹாரம்
*****************

ஓம் ரீங் மசி நசி நசி மசி

சகல செளபாக்கியம் பெற
*****************************                  ஓம் ரீங் சிவ சிவ.
         -சித்தர்களின் குரல்

கற்றாழை ஜூஸ்

https://youtu.be/SPjnCl04Ksk

பக்கவாதம் தீர பயிற்சிகள்

https://youtu.be/L_OZbMhvw60

கற்றாழை ஜூஸ்

https://youtu.be/SPjnCl04Ksk

பக்கவாதம் தீர பயிற்சிகள்

https://youtu.be/L_OZbMhvw60

Wednesday, 16 October 2019

புண்,தோல்நோய் மருந்து

ஆறாத_புண்ணை_ஆற்றும்
அதிசய_எண்ணெய்

500 மில்லி செக்கு தேங்காய் எண்ணெயில் 30 செவ்வரளிப்பூவை பிய்த்துப்போட்டு கலக்கி தினமும் ஐந்து மணி நேரம் விதம் 5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து பிழிந்து எண்ணெயை மட்டும் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு …

சக்கரை வியாதியால் ஆறாத புண்,படர்தாமரை,தேமல்,நாள்ப்பட்ட புண், சேற்றுப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீரில் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி துடைத்து விட்டு இந்த எண்ணெயை கையில் படாமல் மயிலிறகு அல்லது கோழி இறகில் எடுத்துப்போட்டு வர எவ்வளவு கடினமான புண்களும் 12 முதல் 48 நாளில் முழுமையாக ஆறிவிடும்.

குறிப்பு;செவ்வரளிப்பூ கிடைக்காதவர்கள் வெள்ளை அரளியை
10  கூடுதலாக பயன்படுத்தி எண்ணெய்
தயாரிக்கலாம்.இது வியாதி உள்ளவர்கள் மட்டுமே மேல் பூச்சாக
பயன்படுத்த வேண்டிய மருந்து
மற்றவர்கள் கைகளில் தொடுவதை
தவிர்க்கவும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் www.aumherbals.com

Tuesday, 15 October 2019

மூளை இரத்தக்கட்டை கரைக்க

வீட்டு_வைத்தியம்

வெள்ளைப்பூண்டு 2 பல்.
சின்னவெங்காயம் 1.
கொத்தமல்லி விதை
ஒருத்தேக்கரண்டி,
மஞ்சள்தூள்
அரைத்தேக்கரண்டி
செம்பருத்திப்பூ 1.

இவற்றை  தட்டிப்போட்டு 700 மில்லி
நீர்சேர்த்து கொதிக்க வைத்து 350 மில்லி அளவாக சுருங்கியதும் இறக்கி
பிழிந்து வடிகட்டி காலை,மதியம்
உணவிற்கு பின் தொடர்ந்து 48 நாட்கள்
குடித்து வந்தால் உடல் வீக்கம்,மூளை
இரத்தக்கட்டு,இரத்தசுத்தமின்மை,
இரத்த அழுத்தம்,பக்கவாதம்,இதயநோய்
போன்றவை குணமாகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

கேப்சூல் கொடும

https://youtu.be/jdqpsHIt0_s

Wednesday, 9 October 2019

சளி அடைப்பு குணமாக

சைனஸ்_குணமாக
எளிய_வைத்தியம்

சின்ன வெங்காயம்,
இஞ்சி,பூண்டு தலா 25 கிராம்.மஞ்சள் தூள் கால்த்தேக்கரண்டி,கிராம்பு 5 இவற்றை நன்றாக வெட்டி 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அது அரைலிட்டராக சுருங்கியதும் எடுத்து வடிகட்டி காலை உணவிற்கு பின்,மதிய உணவிற்கு பின் இரண்டு வேளை சமஅளவாக பகிர்ந்து 12 முதல் 48 நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சுச்சளி,சைனஸ்,அடுக்குத்தும்மல்,இழுப்பு,தலைநீர்,தலைபாரம்,தலைவலி முழுதாக குணமாகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Sunday, 6 October 2019

தியானத்தின் திறவுகோல்

மிட்டாய்_தீட்சையும்
மெய்யுணர்வு_தியானமும்

---ஏகப்பிரியன்---

தியானம் என்பது உயிரை உணரச்செய்வதற்கான வழிமுறை மட்டுமல்ல உடலை முழு விழிப்புணர்வோடும் சக்தியோடும் இயங்க செய்வதற்கான கருவி. தற்காலத்தில் தியானம் பற்றிய தெளிவின்மையும் கற்பனையும் மக்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது.

சற்று எழுதும் திறன் கொண்டவர்களும் பேச்சாற்றால் உள்ளவர்களும் ஞானிகள் என்று அறியப்பட்டவர்களும் அதுபற்றிய கற்பனை கதைகள் பெருகுவதற்கு காரணமானவர்கள்.
முதன்முதலில் தியானம் பற்றிய தெளிவான புரிதல்களை வழங்கியவர்கள் பதஞ்சலி,கௌதம புத்தர்,சிவவாக்கியர் போன்றோர்களே.

இவர்கள் துறவிகளாக இருந்ததும் பிற்காலத்தில் தோன்றிய இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமச்சந்திரர்,இரமணர்,
விவேகானந்தர் போன்ற தியானிகளும் அப்படியே தோன்றியதாலும் தியானம் என்பது எதோ மடத்து மந்திரவாதம்,துறவு வாழ்க்கையின் முதல்படி என்றெல்லாம்
பலரும் பயந்திருந்த காலத்தில் அமெரிக்கா சென்று இல்லறவாசிகள்,புலால் உண்பவர்கள்,அரசியல்வாதிகள்,
தொழில் வல்லுனர்கள்,வாலிபர்கள் என்று பலருக்கும் தியானத்தை கற்பித்து
அதை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வழிகாட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

அதே வழியில் அதன்பிறகு  வந்த ஓஷோ,பரஞ்சோதி மகான்,வேதாத்ரி மகரிசி போன்ற ஞானிகளும் தியானம் மீதிருந்த அச்சத்தைப் போக்கி தியானம் என்பது உயிர்களின் அடிப்படைத்தேவை என்பதை உணர்த்தி கண்ணில் படுவோர்க்கெல்லாம் கற்பிக்க ஆரம்பித்தனர்.

இதன் பிறகு ஆசிரியர்கள், விளையாட்டு,கலைகளை கற்பிப்பவர்கள்,திரைப்படக்கலைஞர்கள் என்று பலரும் தங்கள் துறை சார்ந்த விசயங்களில் தியானத்தை ஒரு பகுதியாக இணைத்து விட்டனர்.இப்பொழுது உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் தங்கள் சமயோசிதம் போல தியானத்திற்கும் வாழ்க்கைக்கும் புதுப்புது விளக்கங்களை கூறி மக்களிடம் மீண்டும் குழப்பத்தை விதைக்கிறார்கள்.

தியானம் செய்வதால் நமது நாடித்துடிப்புகள் சீராகி மனம் முழுமையாக அமைதியாகி
விடுவதால் உடல் சக்திவிரயம் தடுக்கப்படுகிறது.இதன் காரணமாக இதுவரை இடைவிடாத எண்ணங்களால் சோர்வுற்று நலிவடைந்திருந்த மனமும் உடலும் புதிய ஆற்றலுடன் செயல்பட்டு தங்கள் தேவைகள் எதுவாய் இருந்தாலும் அதை அடைய தேவையான முழுமையான ஆற்றலை பெறுகிறது.நான் கூறுவது  தியானம் பற்றி மருத்துவ விஞ்ஞானம் கூறும் ஆரம்ப பயன்.

தியானம் பற்றிய பெரிய புரிதல் இல்லாவிட்டாலும் கூட பலரும் சங்கடமான சூழலில்,உத்வேகம் தேவையான நேரத்தில் சிறிது நேரம் கண்மூடி இருப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவே பெரிய சக்தியை வழங்குவதை அவர்கள் உணருவார்கள்.இப்படி ஆரம்பிக்கும் தியானம் அதன்பிறகு பல்வேறு வழிமுறைகளை கடந்து நம்மை மாபெரும் வெற்றியாளனாகவோ, மடத்து அடிமையாகவோ,அல்லது உண்மை ஞானியாகவோ ஆக்கும். இந்த ஞானம் என்பதில் மட்டும் இன்னும் கற்பனைகள் அதிகமாக தோன்றிக்கொண்டே உள்ளது.ஞானியானால் காட்டுக்கு சென்றுவிடுவான்,குடும்பத்தை விட்டுவிடுவார்கள்,குருபக்தியில் திளைத்து அழிந்து விடுவார்கள் என்றெல்லாம் பல கற்பனைகள் இன்றும் நிலவுகிறது. இதற்கு உரமிட்டு வளர்ப்பவர்கள் பலர்.ஆனால் இதில் உண்மை மிக குறைவு.ஞானியானவன் எல்லாம் குடும்பத்தை விட்டு தனியாக போவதில்லை.சிலர் போயிருப்பார்கள்.தன்னை உணர்ந்தும்,ஞானியாய் இருந்தும் தங்கள் தொழில்களிலேயே நீடித்து இல்லறத்தை நடத்துபவர்கள் பலர் உள்ளனர். ஆகையால் தியானம் ஞானத்தின் திறவுகோலாய் இருப்பதாலோ அல்லது பல சித்தர்களும் ஞானிகளும்;எல்லாம் துறந்து காட்டை நோக்கி போனார்கள் என்பதாலோ தியானம் செய்வது ஆபத்தானது,ஒரு குருவிடம் தீட்சை வாங்குவது பெரிய முட்டாள்த்தனம் என்று கூற முடியாது.

ஏனெனில் தியானம் என்பது மனிதனின் பிறப்புரிமை, ஞானம் மனிதனின் பெருமை.தியானத்தின் மூலம் மனிதனுக்குள் ஏற்படும் பலகட்ட மாற்றத்திற்கு பிறகே ஒருவன் ஞானியாகிறான்.தியானியாக இல்லாதவன் கூட மனவெளியில்
தடுக்கி விழுந்து திடீர் ஞானியாக நேரிடலாம்.இதில் அச்சப்படவோ,இனியும் ஆராய்ச்சி செய்யவோ ஒன்றுமே இல்லை.

புத்தன் முதல் வேதாத்ரி மகரிசி வரை  எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் போதுமான அளவு உணர்ந்து,முயன்று,வழிகாட்டி முக்தியடைந்து விட்டார்கள்.தியானமும் ஞானமும் இந்தியாவின் பாரம்பரியச்சொத்து.குறிப்பாக தமிழனின் மரபணுவிலேயே தியானம் பினைந்துள்ளது.அதை நினைவுப்படுத்தி தூண்டிவிட மட்டுமே குரு தேவைப்படுகிறார்.

நான் எனது 15 வயதிலேயே தியான உணர்வைபெற்றுவிட்டேன்.பல தியான குருமார்களிடமும் தீட்சை வாங்கி உள்ளேன்.05/10/2019 அன்று எனது மகன் இஜாஸ் தனது 22 வது வயதில்; மெய்ஞ்ஞானி பரஞ்சோதி.
ஞானப்பிராகாசரிடம் மிட்டாய் தீட்சையும் குண்டலினி மெய்யுணர்வு தியானமும் பெற்றுக்கொண்டான்.அவனோடு நானும் மேலும் பலரும் தியான தீட்சை பெற்றோம்.இந்த பயிற்சியில் எடுத்த வீடியோவை பார்த்த ஒருசில முகநூல் நண்பர்கள் பிழைப்பை பாருங்க நண்பரே தியானத்தில் நீங்கள் தொலைந்தது போல் உங்களை சார்ந்தவர்களையும் தொலைத்து விடாதீர்கள்.என்ற ரீதியில் கைப்பேசியில் அழைத்து கர்ஜித்தனர்.அட அறிவாளிகளே,
விவேகானந்தர்,பாரதி,பரஞ்சோதி
மகான்,வேதாத்ரி மகரிசி என்று எத்தனை யோ ஞானிகள் தங்கள் விழிப்புணர்வால் மெய்யுணர்வை உணர்த்திச்சென்றாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் தியானம் ஆபத்தானது என்று ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.

#எனது புதிய அனுபவம் பரஞ்சோதி மகானின் உலக சமாதான ஆலயத்தின் குண்டலினி தீட்சையாக மூலாதாரத்திலிருந்து ஆறாதாரத்திற்கு  கைகளால் தூண்டி  மிட்டாயைவழங்கினார்கள். கண்மூடி அமர்ந்து அதன் சுவையை நெற்றியில் உணர வேண்டும்.நெற்றியில் குளிர்ந்த நீரை தடவிவிட உணர்வு அந்த இடத்தில் நிலைக்கும்;அடுத்து வெங்கல மணியை அடிக்க நெற்றியில் அதன் ஓசை ஆழமாக ஊடுருவிச்சென்றதையும் மனம் பல கணங்கள் மனமற்று இயங்கியதையும் என்னால் முழுமையாக உணர முடிந்தது.

20 நிமிடம் போனதே தெரியவில்லை.புத்தரின் விழிப்புணர்வு தியானமான விபசனாவிற்கும் பரஞ்சோதி மகானின் மெய்யுணர்வான குண்டலினி தியானத்திற்கும் ஒரு சிறிய நூலிலை வித்தியாசம் தோன்றியது.அதை ஆராய்ந்து அனுபவித்து வருகிறேன்.

இந்த கணத்தில் நானே மெய்யுணர்வாகவும் பரஞ்சோதி மகானாகவும்  இருக்கிறேன்.! சிலர் இன்னும் மகான் கூறிய கருத்தில் உள்ள  ஐயங்களையும் மகானின் வாழ்க்கை முறையில் சில கேள்விகளையும் எழுப்புகிறார்கள். அதன் விடை தெளிந்த நீரோடையின் அடியில் மிளிரும் வடிவ கற்கள்  போல எனக்கு தெளிவாக தெரிகிறது.தேவைப்படின் அதை பின்னர் விளக்குவோம்.!வாழ்க வளமுடன்.!

🍁🍁சந்தோசம்🍁🍁
www.aumherbals.com

Thursday, 3 October 2019

குண்டலினி தியானம்

*பரஞ்சோதிமகான்*
*குண்டலினி_தியானம்*

குண்டலினி சக்தி என்பது ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் மறைபொருளாக
இயங்கும் கருவாற்றல். ஒரு குருவின்
தீட்சையால் தான் விழிப்படைய செய்ய
முடியும். விழித்தால் என்ன நன்மை?

"உங்கள் வாழ்க்கையில் நிதானம்
உண்டாகும்.எது நமக்கு தேவை
என்பது புரியும்.உடல் நோயிலிருந்து
தப்பும்.சிலருக்கு மரண பயம் நீங்கும்.
வாழ்க்கை சீராகும்.மறைபொருள்
விளங்கி மெய்ஞ்ஞானம் வெளிப்படும்."

குண்டலினி சக்தி தவத்தின்
மூலமாகவே செயல் படும்.
தவத்தை பழகுவதற்கான வகுப்பை
மெய்ஞ்ஞானிபரஞ்சோதி.
ஞானப்பிரகாசம் நடத்துகிறார்.

நடைபெறும் நாள்:
அக்டோபர் 5 சனிக்கிழமை.

நேரம்: 9am and 5 pm.

இடம்:அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணிய புரம்,ஆரல்வாய்மொழி.
முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே
கலந்து கொள்ளலாம்:9629131089.
www.aumherbals.com

மகிழ்ச்சியில் திளைத்து
ஆனந்தத்தில் மலருங்கள் …

வெள்ளைப்படுதலை நீக்கும் மூலிகை

வெள்ளருகு – மருத்துவ பயன்கள்
வெள்ளருகு முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; பசியை அதிகமாக்கும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

வெள்ளருகு சிறுசெடி வகையைச் சார்ந்தது. நிமிர்ந்த வளரியல்பு கொண்ட, பல்லாண்டுகள் உயிர்வாழும் தாவரம். வெள்ளருகு தண்டுகள் 4 கோணமானவை, வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்டவை.

வெள்ளருகு இலைகள், ஈட்டி போல நீண்டு உருண்டை வடிவமானவை. வெள்ளருகு பூக்கள் 5 இதழ்களுடன் கூடியவை, வெண்மையானவை, தொகுப்பானவை, கணுக்களில் அமைந்தவை. ஆண்டு முழுவதும் மலர்கள் காணப்படும்.

வெள்ளருகு கரிசல் நிலத்தில் இயல்பாக வளர்கின்றது. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகளில், தரிசு நிலங்களில், ஆற்றுப் படுகைகளில் பரவலாகக் காணப்படுகின்றது. வெள்ளருகு முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

விஷக்கடி நஞ்சு வெளியாக வெள்ளருகு முழுத்தாவரத்தையும் இடித்து, சாறு எடுத்து, 50 மி.லி. அளவு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். இரண்டு முறைகள் வரை, 3 மணி நேர இடைவெளியில் தரலாம். கடுமையான வாந்தி ஏற்பட்டு நஞ்சு வெளியாகும். உப்பு இல்லாத உணவையே உட்கொள்ள வேண்டும்.

ஒரு கைப்பிடி அளவு வெள்ளருகு முழுத்தாவரம், 3 மிளகு, ஒரு பல் பூண்டு, இவற்றை ஒன்றாக அரைத்து, பசையாக்கி, ஒரு டம்ளர் மோருடன் கலந்து, காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 10 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட வெள்ளைபடுதல் குணமாகும்.

சொறி, சிரங்கு, தோல் நோய்கள், ஊறல் ஆகியவை கட்டுப்பட வெள்ளருகு முழுத்தாவரத்தையும் தேவையான அளவு அரைத்து, பசையாக்கி, வெந்நீரில் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து, கழுவ வேண்டும்.
டெங்குக்காய்ச்சலுக்கு
_______________________
வெள்ளருகுசெடி வேருடன் பிடுங்கி தண்ணீரில் அலசி ஒரு செவ்விளநீரைச்சீவி அதனுள் இட்டு மூடிவைத்து 8 மணிநேரம் ஊறியபின் எடுத்து அந்த இளநீர்த் தண்ணீரிலேயே அரைத்துக் குடிக்கவும்.6 மணிநேரம் கழித்து இதுபோல் தயாரித்தக் கலவையை மீண்டும் குடிக்கவும். அடுத்த அரைமணி நேரத்திலேயே தட்டணுக்கள் (Platelets) லட்சக்கணக்கில் கூடிவிடும்..

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...