I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: January 2019

Wednesday, 30 January 2019

அழகு அழகு

#முகம்-உடல்-ஆரோக்கியம்

* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்

* முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்

* கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணாமல் போகும்.

* முகபரு, கரும்தழும்பு மாற புதினாசாறு 2 ஸ்பூன், எழும்பிச்சைசாறு 1 ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கல்ந்து போட்டால் கருந்தழும்பு மாறும்

* தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.!

  • -இணையப்பகிர்வு

Monday, 28 January 2019

பெண்களுக்கு மட்டும்

  • கர்பப்பை இறக்கம் சரியாக
    •  மருத்துவம் 5 வருடம் ஆன பழய புளியம்பழம் கொட்டை நார் நீக்கி 15 கிராம் எடுத்து மஞ்சள் கரிசலாங்கன்னி இலை 15 கிராம் சேர்த்து நன்கு மசிய அரைத்து காலை வெறும் வயிற்றில் 30 நாள் கொடுக்க சரியாகும் மாமிஷ உணவு கத்திரிக்காய் நீக்கவும் வெயிட் தூக்க கூடாது உடல் உறவு கூடாது மருந்து முடியும் வரை பத்தியம்.!

    • -இணையப்பகிர்வு

    Friday, 25 January 2019

    செம்பருத்தி மருத்துவம்

    *சுக வாழ்வுதரும் செம்பருத்தி நெய்*

    அடுக்கு செம்பருத்திப்பூ அல்லது நாட்டுச்செம்பருத்திப்பூ இடித்த சாறு 250 மிலி
    சுத்த ஆமணக்கெண்ணெய் 250 மிலி
    தேங்காய்ப்பால் 1 லிட்டர்
    சங்குகுப்பி இலை சாறு 125 மிலி

    இவற்றுடன் இரசகற்பூரம்,கிராம்பு,ஏலரிசி,மிளகு,கருஞ்சீரகம்,சீரகம்,சுக்கு,சாதிலிங்கம்,கார்போக அரிசி வகைக்கு 2 கிராம். மேற்கண்ட சரக்குகளை பொடித்து  அதோடு கொஞ்சம் தேங்காய்ப்பால்,செம்பருத்திசாறு விட்டரைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்கி அடுப்பேற்றி காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி வடித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!

    *பிறந்தது முதல் குழந்தைகளுக்கு வரும் சொறி,சிரங்கு,கரப்பன்,கரப்பன்கெட்டு,சிகப்பு,தடுப்பு,பொக்களம்,தொடை கரப்பான்,காதில் வரும் தடுப்பு,காது சீழ்வடிதல், விசகரப்பான்,தேக ஊறல், மலபந்தம் போன்ற வியாதிகளுக்கு வேளைக்கு 5 துளி  முதல் 20 துளி நெய்யை எடுத்து 3 மடங்கு தாய்ப்பால் அல்லது  சீரக கசாயத்தில் கலந்து நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் கொடுத்துவர 20 நாளில் பூரண குணம்.*
    *பெரியவர்கள் இதே நெய்யை இரண்டுத் தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் நாட்டுப்பசும்பால் அல்லது சீரக கசாயத்தில் கலந்து குடித்து வர  மேற்கண்ட கரப்பான் போன்ற  வியாதிகள் குணமாவதுடன் இதயபடப்படப்பு, மூலச்சூடு,பித்தம்,  கொழுப்படைப்பு,கொழுப்புகட்டி,பசியின்மை,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் குணமாகி பூரணமான ஆரோக்கியம் கிட்டும்*

    பத்தியம்: குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் தாய் அசைவம்,புளி,சேனைக்காய்,எண்ணைய் பலகாரங்கள் இரசாயணம் கலந்த உணவுகளை தவிர்க்கவும். மருந்துண்ணும் பெரியவர்கள் தானே இவற்றை தவிர்த்து அல்லது முடிந்தவரை குறைத்துக்கொள்ள பூரண குணம் கிடைக்கும்.!

    🌷இயற்கை மூலிகை
    மருத்துவ தகவல்களுக்கு🌿
    amyogatrust.blogspot.in

    🌾100% இயற்கை மூலிகை பொருட்களுக்கு
    AUM HERBALS 🌿
    Mobile & Whats app
    *9629368389*

    Thursday, 24 January 2019

    சுகப்பிரசவம் ஆகவழி

    நம்ம சமூக அமைப்பில.. தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது, என்கிற நம்பிக்கை ஆழமாய் வேரோடியிருக்கிறது.

    ஒவ்வொரு பிரசவமும் ஒரு பெண்ணிற்கு மறுபிறவியைப் போன்றது என்கிற பேச்சு வழக்கு காலகாலமாய் புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை.

    அலோபதி மருத்துவத்தின்படி பிரசவம் இரண்டு பெரும் கூறுகளாய் அணுகப்படுகிறது.

    யோனி வழிப் பிரசவம் (Normal vaginal Delivery).
    இது இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் முறை.

    சத்திர சிகிச்சை பிரசவம் (Caesarian Section).
    இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்யும் முறை.

    எதனால் இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாமல் போகிறது என்பதற்கு மருத்துவ ரீதியாக நிறைய காரணங்கள் முன் வைக்கப் படுகிறது.

    பெண்ணின் வயது மற்றும் உடல் அமைப்பு

    சூல் வித்தகம் கர்ப்பபையின் கழுத்துப்பகுதியை மறைத்திருத்தல் அல்லது மூடியிருத்தல் (Placenta praevia)

    தாய்க்கு ஏற்படும் அதிக குருதிப் பெருக்கு ( Severe antepartum haemorrhage)

    தாயின் குருதி அமுக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தல் (Severe pregnancy induced hypertention)

    cephalopelvic disproportion (CPD)

    Meconium or foetal distress

    Severe intrauterine growth retardation

    இது போன்ற தவிர்க்க இயலாத சூழல்களில் தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிட.. மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்கின்றனர். இந்த முறையை சிசேரியன் சத்திர சிகிச்சை (Emergency caesarian section) என்பர்.

    தற்போதைய அறிவியலுக்கு இவை எல்லாம் சரிதான், ஆனால் அலோபதி மருத்துவம் வளராத பல நூறு.. ஆண்டுகளுக்கு முன்பே.. நமது தாய்மார்கள் இது மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் நிச்சயம் எதிர் கொண்டிருப்பார்கள்.. அதற்கு நம் பெரியவர்கள் என்ன மாதிரியான தீர்வினை வைத்திருந்தார்கள்..?

    அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலின் குறிப்புகள்.

    காணடா பிறவியது னோக்குதற்கு
    கருவாக சுண்டையுடன் வடவேர்வாங்கி
    பூணடா சற்குருவை தியானம்பண்ணி
    புத்தியுடன் வளையமிட்டு மஞ்சள்சாத்தி
    பேணடா கால்விரலில் பூட்டினாக்கால்
    பிள்ளையது தான்பிறக்கும் பெருமையாக
    பாரப்பா யின்னமொன்று சொல்வேன்கேளு
    பரிதான பெரண்டைவேர் கொன்னைவேரும்
    நேரப்பா காடியிலே அரைத்துமைந்தா
    நீமகனே தாங்குடுக்க பிறவினோக்குங்
    காரப்பா அதிமதுரம் பொடியேசெய்து
    கருணையுடன் தேனதிலே கொடுத்துப்பாரு
    பாரப்பா பிறவியது தானேனோக்கி
    பிள்ளையுமே சுகமாகப் பெறுவாள்பாரே.

    - அகத்தியர்.

    சுண்டை என்னும் மூலிகையின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை எடுத்து வந்து.. குருவருளை வேண்டி வணங்கி, வளையமாக செய்து மஞ்சள் பூசி கருவுற்ற பெண்ணின் கால் விரலில் அணிந்தால் குழந்தை சுகமாக பிறக்குமாம்.
    அதே போல பிரண்டை வேரும் கொன்னை வேரும் காடி விட்டு அரைத்து கருவுற்ற பெண்ணுக்குக் கொடுக்க குழந்தை சுகமாக பிறக்குமாம்.

    அதிமதுரத்தை பொடி செய்து தேனில் குழைத்து கொடுக்க குழந்தை சுகமாக பிறக்கும் என்கிறார்.

    ஆச்சர்யமான அதே நேரத்தில் சுலபமான வழிமுறை..!

    -இணையப்பகிர்வு

    Sunday, 20 January 2019

    சித்த மருத்துவ தகவல்கள்

    சித்த மருத்துவ நூல்கள் கூறும் நோய்கள்
    மனித உடலுக்கு வயது ஆண்டு நூறு எனக் கணக்கிடப்படுகிறது.

    அதனை, மூன்று பாகங்களாகக் கொண்டு இளமைக் காலம், வாலிபக் காலம், முதிர்ந்த காலம் என மூன்று காலங்கள் பகுக்கப்படும். ஒவ்வொரு காலத்திற்கும் முப்பத்து மூன்று ஆண்டு, நான்கு மாதம் எனக் கொள்ளப்பட்டு இளமை ஐயகால மென்றும், வாலிபம் பித்த காலமென்றும், முதுமை வாத கால மென்றும் கணக்கிடப்படுகிறது.
    இம்மூன்று காலங்களையும் கொண்டு வாழ்வதே மனித உடல் வாழும் வாழ்நாளாகும்.

    இது, நோய் நொடியற்று வாழும் வாழ்க்கை யைக் குறிப்பிடும். வாழும் நாளில் உணவாதிகளாலும், பழக்க வழக்கங் களினாலும், மரபு வழிகளாலும் நோய்கள் உருவாகி மரணம் நேர்வதும் உண்டு.
    இயற்கையாக நூறு ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் உடலின் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்போது, இடையில் மரணம் எற்படுவது ஏன்? எக்காரணத்தினால் மரணம் ஏற்படும்? என்பதற்கு, தாய் தந்தை செய்த வினையால், பல நோய்களால், பஞ்ச பூதங்களால், போர் முறைகளான விபத்துகளினால், கருவிகளினால், வெட்டுக் குத்துக் காயங்களினால், நஞ்சினால், கடிகளினால், மிருகங்களால், புழுப்பூச்சிகளால், மேலும் பல காரணங்களினால் வயது குறைய மரணம் நேரும் என்பர்.

    நூறு வயதை அடையாமல் மரணத்தைச் சந்திக்கின்ற அனைவரும் இயற்கை மரணத்தை அடைந்தார்கள் எனக் கருத முடியாது. அவர்கள் அனைவரும் செய்வினைகளினாலும், செயற்கையாகவும் மரணத்தை அடைந்தவர்கள் என்று சித்த மருத்துவம் கருதுகிறது.

    நோய்களுக்குக் காரணங்கள்
    காரண காரியத் தத்துவத்தின்படி வினைகள் என்னும் காரணத்தி னால் நோய்களென்னும் காரியம் தோன்றுகின்றன என்பது சித்த மருத்துவச் சிந்தனையாகும். எந்த நோயும் இயற்கையாக வந்ததில்லை என்பர்.
    மனித உடல், ஏழுவகையான உடற் தாதுக்களால் அமைந்தது. அவற்றுக்கு, ஒழுங்கீனமான உணவு வகைகளை உணவாக அளிப்பது; வளி, அழல், ஐயம் என்னும் மூன்று உடல்சக்திகள் குறையவும், மிகவும் காரணமாகின்ற தொழில்களைச் செய்தல்; உணவு முறைகளால் உடல் சக்திகள், உடலுக்குள்ளிருந்து போராடச் செய்தல்; ஆகாத உணவு முறைகளால் தாதுக்களையும், உடல் சக்திகளையும் பழுதடைய செய்தல்; தாதுக்களின் செயலையும் சக்திகளின் செயலையும் மாறுபடச் செய்தல் போன்ற குற்றங்களினால் உடலில் தோன்றும் குணங்களின் காரியமே ‘நோய்’ எனப்படுகிறது.

    "" தன்வினை புறவினை தாழினும் மிகினும்
    உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே''
    என்னும் மருத்துவக் குறிப்பும் இதனையே வலியுறுத்தும்.
    விந்து கெட்டால் வரும் நோய்கள்
    உடல் தாதுகளில் ஒன்றான விந்து, மனித உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘விந்து கெட்டால் நொந்து போவான்’ என்னும் பழமொழி விந்தின் சிறப்பைக் குறிப்பிட்டுக் காட்டும். விந்து உடலில் இருக்கும் வரை உடலில் உயிரும் இருக்கும் என்பர். அத்தகைய விந்து அழிந்து விட்டாலோ அல்லது ஆற்றல் குறைந்து நீர்த்துப் போனாலோ மேக நோய் வந்தடையும். விந்து அழிந்தால் உடல் மிகுந்த வெப்பத்தை அடையும். அதனால் வாயு வரும். பின்னர் வாயு நோய் வரும். அதனைத் தொடர்ந்து சூலை, குட்டம், கிரந்தி, புற்று, ஒட்டியப்புண், கரப்பான், சிரங்கு, குன்மம், நீர்க்கட்டு, மலக்கட்டு, இளைப்பு நோய், இருமல், கொடிய   பேதி, கிராணி, பாண்டு, காமாலை, பீனிசங்கள் ஆகியவற்றுடன் மேலும் பல நோய்களும் வந்து சேரும். அல்லது உடலைத் தாக்கி அழிக்கும். மேக நோயுடன் கபமும் பித்தமும் சேர்ந்தால் கண்களைத் தாக்கக் கூடிய கண்ணோய்கள் அனைத்தும் உண்டாகும். பித்தம் அதிகமானால் காய்ச்சல் வரும். மேகநோய் வந்தடைந்தால் அதன் துணை நோய்களான குடல் வாதம், திமிர்வாதம், குண்டல வாயு, கழல் வாதம், பச்சை வாதம்,உள் நடுக்கம், நரித்தலை வாயு, பலவித புண்கள் எல்லாம் வந்தடையும்.

    வாத பித்த ஐய நோய்கள்
    வாதம், பித்தம், ஐயம் என்னும் மும்மூலங்களினால், பொறியிலும் சிரசிலும் சூடுண்டாகும். அதனால் கனன்று எழுகின்ற வாயுவினால் சூலை நோய் உண்டாகும். வாதத்தினால் மேகநோய், விரணம், சுரமும் வரும்; பித்தத்தினால் கிராணி நோய் வரும்; வாய்வினால் குன்ம நோய் உண்டாகும். போதைப் பொருள்களினாலும், அளவு கடந்த போகத்தாலும் மேக நோய் தோன்றும். மேக நோய் இருபத்தொன்றும் அதனைத் தொடர்ந்து   பிறநோய்களும் நீரிழிவு நோயும் உண்டாகும். பித்தம், வெப்பமான நோய்களும் வாதம், சீதளம் தொடர்பான நோய்களும் ஐயம், கபம் தொடர்பான நோய்களும் வாயுவின் விகற்பத்தினால் இம்மூன்று வகை நோய்களும் உண்டாகும் என்றதனால், நோய் உண்டாவதற்கான அடிப்படையாக அமைகின்ற காரணங்கள் உரைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்பால் தொடரும் பெரு நோய்த் தொகைகள் அறியப்பட்டன.

    நோய்களின் எண்ணிக்கை
    வாத, பித்த, ஐயங்கள் அவற்றினால் உண்டாகும் நோய்களும் அவை அல்லாத வேறு பல காரணங்களினால் உண்டாகும் நோய்களும் தொகுத்துக் கூறப்படுகின்றன.
    "" குறியுல கேத்தி தானே குறித்தநா லாயிரத்தி
    நறிவரு நானூற்று நாற்பத் தெட்டன""
    என்று, மனித உடலில் தோன்றக் கூடிய நோய்களின் தொகை, 4448 என சித்த மருத்துவம் கண்டறிந்துள்ளது.

    உடம்பின் நீளம் எட்டுச் சாண் அளவு, அல்லது தொண்ணூற்று ஆறு அங்குலம் எனவும், உடம்பில் அமைந்துள்ள நாடிகள் எழுபத்திரண் டாயிரம் எனவும் உடம்பில் உற்ற நோய்களின் சுருக்கம் எண்ணூற்றுத் தொண்ணூறு எனவும் அதை ஐந்தால் பெருக்கினால் (890 து 5 = 4450) நாலாயிரத்து நானூற்று ஐம்பது என நோயின் தொகையும் உரைக்கப்பட்டுள்ளன.

    உறுப்புகளும் நோய்களும்
    மருத்துவ நூலார் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

    1. தலை                             307                          
    2. வாய்                                18      
    3. மூக்கு                              27      
    4. காது                                 56      
    5. கண்                                 96        
    6. பிடரி                               10    
    7. கன்னம்                           32    
    8. கண்டம்                             6      
    9. உந்தி                              108  
    10. கைகடம்                      130
    11.குதம்                             101
    12.தொடை                          91
    13.முழங்கால் கெண்டை    47
    14.இடை                            105
    15.இதயம்                          106
    16.முதுகு                              52
    17.உள்ளங்கால்                    31
    18.புறங்கால்                         25
    19.உடலுஉறுப்பு எங்கும 3100
                                            _________
                                      ஆக 4448
                                           _________
    என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
    உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

    கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
    குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
    கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
    குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

    குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய   உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
    கிருமிகள் உருவாகக் காரணம்
    கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
    அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு  போன்ற நோய்களும் உண்டாகும்.

    நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
    கண் நோய் :
    கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
    பொதுக் காரணங்கள் :
    வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
    சிறப்புக் காரணம் :
    சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
    காசநோய் :
    கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
    வெள்ளெழுத்து
    கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
    முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து   சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

    கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
    தலைநோய் :
    உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூ<ற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
    தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
    ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு,  அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது,  ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து,  நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு,  கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
    கபால நோயின் வகை :
    வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
    தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

    அம்மை நோய் :
    அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
    மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
    அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
    இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
    அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
    சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
    1. பனை முகரி 2. பாலம்மை
    3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
    5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
    7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
    9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
    11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
    13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
    என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள்உ தோன்றுவதைக் கொண்டும், அம்மைஉ நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

    -இணையப்பகிர்வு
    www.aumherbals.com

    Saturday, 19 January 2019

    நன்றி நட்பாளர்களே

    மனமெல்லாம்
    மகிழ்ச்சிப்பூ

    (ஆதிமருத்துவம் நூலை
    வாங்கியவர்களுக்கு  நன்றியும் வாழ்த்துகளும் சலுகையும்.)

    ஆரோக்கிய வாழ்விற்கான எளிய உணவு முறையை
     சொல்லுங்கள் அய்யா?

    'ஆதிமருத்துவம்
     பக்கம் 27-30 பாருங்கள்'

    தியான பயன்களை
    விரிவாக கூற முடியுமா?

    "ஆதிமருத்துவம்
    பக்கம் 90-102"

    இயற்கை மூலிகை மருத்துவமனைகள்,ஆரோக்கிய மையங்கள் எங்கள் ஊரின் அருகே எங்கே உள்ளது?

    "ஆதிமருத்துவம்
    பக்கம் 372-373"

    என் நோய்களை நீக்கும் இயற்கை முறைகளை
    கூற முடியுமா?

    "ஆதிமருத்துவம்
    பக்கம் 332-348"

    தற்கொலை எண்ணத்தை தடுப்பது எப்படிங்க?

    'ஆதிமருத்துவம்
    பக்கம் 34-37 படிங்க'

    மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறைகளை கூறுங்களேன்?

    'ஆதிமருத்துவம்
    பக்கம் 76-83 படிங்க'

    கர்ப்பகாலத்தில்
    கடைப்பிடிக்கும்
    வழிமுறைகளை
    கூறுங்கள் அய்யா?

    'ஆதிமருத்துவம்
    பக்கம் 210-218 பாருங்க'

    தினமும் செய்ய எளிய யோகா நுட்பங்களை கூறலாமா அய்யா?

    "ஆதிமருத்துவம்
    பக்கம் 285-292 படிங்க

    வாழை இலைகுளியல்
    எப்படி செய்றதுங்க?

    'ஆதிமருத்துவம்
    பக்கம் 224 பாருங்க'

    மூலிகைச்சாறு எப்படி
    தயார் செய்வது?

    "ஆதிமருத்துவம்
    பக்கம் 308-311"

    மேலே கூறியது அத்தனையும் என்னிடம் முகநூல்,வாட்ஸ் அப் நண்பர்கள் கேட்ட கேள்வியும்
    பதில்களும்.இன்னும் பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகள்,
     உடல் பருமனை
     சீராக்கும் உணவுத்திட்டம்,
    எளிய வர்மசிகிட்சை,பிராண
    சிகிட்சை முறைகள் என்று எத்தனையோ இயற்கை
    வாழ்வியல் முறைகளை எனது ஆதிமருத்துவம் நூலில்
    எழுதியதற்காக மிகமிக
    மகிழ்ச்சி கொள்கிறேன்.!
    நீங்கள் கூறிய இயற்கை  முறைகளை கடைப்பிடித்து நலமடைந்தேன். என்று கூறும்
    ஒவ்வெருவரும் என்னை
    சிறிது பெருமை கொள்ள
    செய்கிறார்கள்.!

    எனது மஹாயோகா, இயற்கை வழிகாட்டி நூல்களை படைத்த போது எனக்கு கிடைக்காத
    ஆத்ம திருப்தியையும் பொருள் வரவையும்  ஆதிமருத்துவம் அள்ளி அள்ளி வழங்கி உள்ளது.!

    அதோடு இன்று, பொதுமக்கள் பல மருத்துவ
    மனைகளை காற்றாட
    விட்டுவிட்டு,இயற்கை
    வாழ்வியல் மையங்கள்,
    செக்கு எண்ணெய் கடைகளில் அலைமோதுவதை பார்த்துப்பார்த்து
    இதற்கு நாமும் ஒரு சிறிய காரணமாக இருக்கிறோம் என்பதை நினைத்து மனமெல்லாம்
    மகிழ்ச்சிப்பூ பூத்து மணம்
     வீசுகிறது.🍁🍁🍁

    நன்றி நட்பாளர்களே.!
    ஆதிமருத்துவம் நூல்
    வெளியீட்டில் உதவியவர்கள்,
    முன்பதிவு செய்து நூலை
    வாங்கியவர்கள்,தங்கள் இயற்கை மையங்களில் வைத்து விற்பனை செய்தவர்கள், நூலை வாங்கி,
    பயின்று,பயனடைந்த அனைத்து நல் ஆன்மாக்களுக்கும்
    இதயங்கனிந்த நன்றிகளும்
    வாழ்த்துகளும்.!

    முன்பதிவு செய்தும் நூல்
    வெளியீட்டிற்கு வந்தும்
    ஆதிமருத்துவம் நூல்
    வாங்கியவர்களுக்கு இன்று
    மற்றொரு சலுகை
    வழங்குகிறோம்.
    உங்களிடம் நூல் பிரிந்து,
    வடிவமில்லாமல்
    ஆதிமருத்துவம் பழைய புத்தகம் ஏதேனும் இருந்தால் புத்தகத்தில் உள்ள எனது முகவரிக்கு  அனுப்பி வையுங்கள். சிறப்பாக வடிவமைப்பு செய்து திரும்ப
    அனுப்பி வைக்கிறோம்.!

    அதோடு ஏற்கனவே
    ஆதிமருத்துவம் நூல்
    வாங்கியவர்களுக்கு மீண்டும் புத்தகம் தேவையெனில் 360 ரூபாய் மதிப்புள்ள நூலை 260 ரூபாய்க்கு வழங்குகிறோம்.!

    இது உங்களுக்கு அடியேனின்
    சிறிய கைம்மாறு.
    இன்னும் 94 நூல்கள் மட்டுமே உள்ளதால் விரைவாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்
    கொள்ளுங்கள்.!!!!

    நன்றி நட்பாளர்களே.!
    வாழ்க வளமுடன்.!
    நலம் பெருகட்டும் …

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
    www.aumherbals.com

    Friday, 18 January 2019

    பாரம்பரிய மருத்துவம் காப்போம்

    *இன்று பாரம்பரிய மருத்துவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை செய்ய தடைகள் பல போடும் அரசு...

     மக்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள், அலோபதி மருத்துவர்கள், அவர்களுக்கு துணைபோகும் அரசு இவர்களின் உண்மை முகம் வெளிப்படுத்தும் விதம் சில உண்மைகள் சொல்கிறேன் ஒரு நிமிடம் பாருங்கள்...

     ஒரு தகப்பன் நிஜமானால் அவன் மகன் நிஜம் சரிதானே...மகன் வளர்ந்த பின்பு தகப்பன் போலியாவது எப்படி??? என்னால் உருவான வித்து நீ நிஜம் என்றால் நான் உன்னை உருவாக்கியவன். நான் எப்படி போலியானேன்?
     இது கார்பரேட் மருந்து கம்பெனிகள் சதிதிட்டம். அது திட்டம் வகுத்து கொடுத்து அரசு மூலமாகவே இந்த அநியாயச் செயலில் ஈடுபட்டு வருகிறது!

    தமிழ்நாட்டில் பரம்பரை பாரம்பரிய மருத்துவர்களுக்கு சுதந்திரத்திற்குப் பின் இருமுறை மட்டுமே அரசுபதிவு வழங்கப்பட்டுள்ளது! கிராம சூழலில் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களுக்கு  சரியான முறையில் பதிவுசெய்து சான்று வழங்கப்படவில்லை!! கிராம வைத்தியர் சான்று Vvc! Rimp,rsmp,esmp போன்ற எந்த வித சான்றும் பெற முடியாமல் பதிவுக்காக காத்திருக்கும் வைத்தியர்களை போலிகள் என்று கைது செய்தும்!!  ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்பாரம்பரிய சித்தமருத்துவக்கலையை அழிக்க பல தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியும் வருகின்றன!!

     பாரம்பரிய மருத்துவர்களால் உருவாகிய பட்டதாரிகளே!!இதற்கு துணைபுரிகின்றனர்!! சிந்தித்து பாருங்கள் மக்களே பாரம்பரிய முறையில் பல நெடுங்காலமாக வழி வழியாக வந்த கலையை போலியென்றால் அவர்களால் பாடத்திட்டம் உருவாகி அதன் மூலம் படித்துவிட்டு அனுபவ அறிவே அறவே இல்லாமல் இன்று பட்டபடிப்பை மட்டுமே நம்பிவரும்  நீங்கள் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்களா?

     கற்று கொடுத்தவர்கள் போலிகள் என்றால் எங்களின் ஒரு சில வைத்திய முறைகள் மட்டுமே கற்றறிந்த நீங்கள் மருத்துவ மேதைகளோ? ஆலோபதியார்களே நீங்களே வந்தேறிகள்...

     நாங்கள் பூர்வீக குடிகள். நீங்கள் இந்திய மருத்துவர்கள் என்றும் நாங்கள் மாற்று மருத்துவர்கள் என்றும் இப்போது போலிகள் என்றும் புறந்தள்ளப்படுகிறோம். உங்களால் கை விடப்பட்ட எத்தனையோ வியாதிகளை எங்களின் சித்த பாரம்பரிய மருத்துவர்கள் குணமாக்கி நோயோடு வந்தவர்களை  வாழ வைத்துள்ளார்கள். உங்கள் அலோபதி மருத்துவத்தால் 51 நோய்களில் எதற்கும் நிரந்தர தீர்வு இல்லை என WHO வால் SCHEDULE J RULE NO106 ல் அறிவிப்பு செய்யப்பட்ட பின்பும்

    அதே மருத்துவத்தில் அதே நோய்க்கு சிறப்பு மருத்துவர்  நீங்கள் என்றும் சிறப்பு மருத்துவமனை உங்களது என்றும் நீங்கள் மருத்துவம் பார்க்க அனுமதித்தது யார்? போலிகள் நீங்களா? அல்லது நாங்களா? அல்லது உங்களை தொடர்ந்து மருத்துவம் செய்ய அனுமதித்த இந்த அரசா?

    முந்தைய அரசும் தற்போதைய அரசும் அரசு பதிவு வழங்காததால் டிப்ளமோ கல்வி! குருகுலக்கல்வி! அனுபவக்கல்வி முறையில் பயின்று கிராமங்களில் குறைந்த கட்டணத்தில் பெரிய நோய்களை குணமாக்கி வரும் பாரம்பர்ய மரபுவழி மருத்துவர்கள் நாங்கள் போலிகளா ??????

    பாரம்பரிய மருத்துவர்களுக்கு சட்டம்! அரசியல்!  ஏமாற்றுதல்!  தெரியாது!!! இதைப்படிக்கும் உண்மை உணர்வாளர்கள்!!!! பாரம்பரியம் காக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்திடுங்கள்!! தமிழனின் கலை கண் முன்னே அழிகிறது!!! பொதுநலவழக்கு!!! கையெழுத்து ஆதரவு!!! கண்டனக்கூட்டம்!!!
     முதலமைச்சருக்கு கடிதம்!!! கிராமசபை தீர்மானம் செய்து மக்களின் ஆதரவை மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள பாரம்பர்ய மருத்துவர்களுக்கு தெரிவியுங்கள்...

     ஏனைய பாரம்பரிய விளையாட்டு!!!! பாரம்பரிய உணவுகள்!!! பாரம்பரிய உடைகள்!!!! பாரம்பரிய மாடுகள்!!! கேட்கும் தமிழனுக்கு இனம் காத்த பாரம்பரிய மருத்துவம் வேண்டாமா????????

     ஜல்லிக்கட்டுக்கு தந்ததுபோல ஆதரவு கொடுங்கள்!!!!!! பாரம்பரியம் நமது பிறப்புரிமை!!!! உங்கள் செல்போனில் உள்ள அனைத்து எண்களுக்கும்!!  குரூப்களுக்கும் கட்டாயம் சேர் செய்து தமிழ்கலை காக்க உதவுங்கள்!!!!*

    -மண்ணின் மைந்தன்

    Thursday, 17 January 2019

    அரிப்பு தீர

    இந்து தமிழ் இணையப்பகுதியின் கட்டுரை:

    #அரிப்பு_ஏன்_ஏற்படுகிறது#
    டாக்டர் கு. கணேசன்

    அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

    இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

    எதிர்ப்புப் புரதம்

    அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

    மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

    பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

    இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

    என்ன காரணம்?

    அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

    வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

    குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

    குளிரும் ஆகாது!

    சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

    தொடை இடுக்கு அரிப்பு

    காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

    அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    வயதானால் வரும் அரிப்பு

    முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

    எச்சரிக்கும் நோய்கள்

    உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

    தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

    உணவும் மருந்தும்

    நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

    மனப் பிரச்சினைகள்

    அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

    ‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக சில வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும்.

     நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.! சில தடுப்பு மருந்துகள், கல்லீரல் நோய்களுக்கான மருந்துகளின் பக்க விளைவுகளினாலும் கூட நாள்ப்பட்ட அரிப்பு ஏற்படலாம். அதனால் எதிலும் கவனம் தேவை.!

    அரிப்பை நீக்க உடனடி நிவாரணமாக சுத்தமான தேங்காய் எண்ணெயை அரிப்புள்ள இடத்தில் தேய்த்தால் சிறிது நேரத்தில் அரிப்பு நிற்கும்.
    மலச்சிக்கல் இல்லாமல், மனச்சிக்கல் இல்லாமல், சரியான உணவுமுறை வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க எத்தகைய அரிப்பும் விரைவில் குணமாகும்.

    -Dr. R.சீனிவாசன் MD

    எளிய வைத்தியங்கள்

    மூட்டு வலியா?*மூட்டு வலி குறைய...இத்தனை வழி இருக்கா..?*

    👉சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.

    👉பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.

    👉முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

    👉குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.

    👉கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.

    👉முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

    👉வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    👉இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

    👉வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

    👉நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

    👉நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.

    👉நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

    👉கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

    👉கைப்பிடி உடைமர இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

    👉அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

    👉காரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.

    👉வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.

    👉கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.

    👉பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

    👉புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.

    👉அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

    👉குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,
    எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.

    👉குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.

    👉செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.

    👉மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.

    👉அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.

    👉கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.

    👉எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய்,
    சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.!

    -இணையப்பகிர்வு

    Tuesday, 15 January 2019

    நமக்கு நாமே

    தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

    உங்கள் வாழ்க்கை முழுவதும் பயன்படுத்த
    தேவையான பொருட்களை
    நீங்களே தயாரித்து கொள்ளுங்கள்.

    *மூலிகை மாத்திரை
    *மூலிகை தைலம்
    *மூலிகை லேகியம்
    *மூலிகை பல்பொடி
    *மூலிகை குளியல்பொடி
    *இயற்கை குளியல் சோப்பு
    *இயற்கை சலவை சோப்பு
    *இயற்கை ஷாம்பு
    *இயற்கை நாப்கின்
    *இயற்கை உரம்
    *இயற்கை பூச்சிக்கொல்லி

    மேற்கண்ட அனைத்தையும்
    இயற்கை முறையில் நீங்களே உங்கள் வீட்டில்
    எளிதில் செய்து பயன்படுத்துவதோடு
    இயற்கை ஆர்வலர்களுக்கும்
    விற்று பொருளிட்டலாம்.!

    நாள்: பிப்ரவரி 10
    ஞாயிற்றுக்கிழமை
    நேரம்:7.00 am
     and 5.00 pm

    இடம்:அன்னை ஆஸ்ரமம்
    சுப்ரமணியபுரம்
    ஆரல்வாய்மொழி
    கன்னியாகுமரி மாவட்டம்.

    நன்கொடை:
    1500 ரூ

    பள்ளி கல்லூரி மாணவ
    மாணவிகள்,
    மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணத்தில்  சலுகை வழங்கப்படும்.!

    முன்பதிவு அவசியம்.

    தொடர்பிற்கு:
    9629368389
    9629131089
    www.aumherbals.com

    Sunday, 13 January 2019

    நான் கடவுள்

    மனநலம்

    எது மிகப்பெரிய வெற்றி.

    எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி.

    எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    கயவர்களை, திருடர்களை, கொள்ளைக்காரர்களை ஏமாற்றுபவர்களை நினைக்கும் போதும் அப்படி புன்னகை செய்ய முடியுமா?

    வெற்றி பெற்றவர் செய்ய முடியும். நலமாய் திருந்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய முடியும். கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது.

    கொடுமை இருப்பதால்தான் உதவிகள் மிக உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது.

    எவ்வளவு நாள் அடக்கி ஆள முடியும்? எவ்வளவு கொடுமை செய்ய முடியும்? ஏதோ ஒரு கணம், வாழ்க்கை மல்லாக்கத் தள்ளி தொண்டைக் குழியில் கால் வைத்து அக்கிரமம் செய்பவரை உதைக்கத் தொடங்கி விடும்.

    கொடுமைப்படுத்துபவரை நினைத்து மெல்லியதாய் புன்முறுவல் செய்து நான் இருக்கிறேன் என்று உதவிக்கு போகிற நிலையே மிகமிக உன்னதமான வெற்றி.

    எல்லா உயிர்களையும் நேசிக்கிற ஒரு மனப்பக்குவம் தனிமையில் இருக்கும்போது வரும். யோகா என்ற உடற்பயிற்சி, தியானம் என்ற மனப்பயிற்சி செய்வதற்கு முன்பே தனிமையில் மௌனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

    மனம் என்ன செய்கிறது என்று பாருங்கள். மனம் பெருங்குரலோடு பேசத் தொடங்கும். எந்த அர்த்தமுமின்றி, எந்தப் பயனுமின்றி, எந்தவித குறிக்கோளுமின்றி அது குதிப்பதை உற்றுப் பார்க்க பேச்சு குறையும்.

    பேச்சு குறையும்போது, மெல்ல அது நிற்கும்போது மூச்சு மாறுவதை நீங்கள் கவனிக்க முடியும். சிலநேரம் மூச்சுவிடுதலும் கூட நின்று அடர்த்தியாகி பின்பு தடுக்கென்று ஓடத் தொடங்கும்.

    இதுதான் பேச்சு மூச்சற்று உள்ளே ஆழ்ந்து விடுவது. இது மிக மிக முக்கியமான விஷயம். பேச்சு நிற்க மூச்சு நிற்கும். மூச்சு நிற்க பேச்சு நிற்கும். அதுவே ஒரு தனித்த ஓட்டத்தைக் கவனித்துக் கொள்ளும்.

    உள்ளுக்குள்ளே உங்களை கவனிக்கத் தொடங்குகிறபோது ஏற்படுகிற நம்பிக்கை தான் பல்வேறு இடங்களில் செயலாக வெளிப்படுகிறது. நம்பிக்கையினால் ஏற்படுகிற அமைதி எதிரில் இருப்பவரை சரியாக உற்றுப் பார்க்கிறது. மிகத் துல்லியமாக பதிலளிக்கிறது.

    எப்போது எதிரே இருப்பவரை புரிந்து கொண்டு அவருக்கு சரியானபடி எதிரொலிக்கத் தெரிந்துவிட்டதோ அப்போது உங்களுடைய செயல்களும் மிகத் துல்லியமாக இருக்கும்.

    அமைதிதான் ஒருவருக்கு அற்புதமான சொத்து. தனித்து அமர்ந்து தனிமையை உணர்ந்து ஆழ்ந்து அவதானிக்கிற கலை எளிதில் வருவதன்று. திரும்ப திரும்ப முயற்சி செய்ய ஒரு நேரத்தில் இது பிடிபட்டுவிடும்.

    ஏதோ ஒரு கணத்தில் சறுக்கினால் போல் மனதிற்குள் இறங்கி நீங்கள் பார்த்துவிடக்கூடும். யாருக்கு எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடியாகவும், சிலருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகும் நேரும்.

    ஆனால் நேரும் வரை தன்னை இடையறாது உற்றுப் பார்த்துக் கொண்டு தனிமையில் அமர்வது என்பதுதான் தவம். இப்படி உட்காருவதற்கு முயற்சிக்கிறீர்களே அதுதான் வரம்.

    வரம் வாங்கி வந்தவர்களால்தான் இப்படி தனிமையில் தன்னை உற்று கவனிக்க முடியும். கவனித்து மேம்பட முடியும்.

    -- எழுத்துச் சித்தர்,
     பாலகுமாரனின்
     "வெற்றி வேண்டுமெனில்"
    கட்டுரையிலிருந்து.
    www.aumherbals.com

    Friday, 11 January 2019

    நம்பினால் நம்புங்கள்

    இடு மருந்து தோஷம் என்பது வசியம் செய்வது. வசிய மருந்து கொடுப்பது ஆகிய குறுக்கு வழிகள் மாந்திரீகர்கள் தயவால் தலைவிரித்தாடுகிறது.

    ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சாப்பாட்டில் வசிய மருந்து கலந்து கொடுத்து வசியப்படுத்தி விடுவார்கள்.
    கோரைப்புல் கிழங்கு, பேன், மரிக்கொழுந்து, பெண்களின் தீட்டுத் துணி ஆகியவற்றை வைத்து தயாரிக்கிறார்கள். இதை இடுமருந்து எண்கிறார்கள். இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

    1. வெள்ளை பூசணிக்காய் -100 கிராம்.
    2. மிளகுத் தூள் -10 கிராம்.
    3. பசும்பால் -100 மில்லி.
    4. தேங்காய்ப்பால் -100 மில்லி.
    5. காய்ந்த மிளகாய் விதை -10 மட்டும்.

    இவற்றை ஓன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க கூழ்போல் வந்து விடும்.
    இந்த கூழை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் வயிற்றில் காலை வேளையில் கொடுத்து வந்தால் மலத்துடன் வசிய மருந்து வெளியேறி விடும். இதை போல ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இடு மருந்து தோஷம் விலகி விடும்.

    -இணையப்பகிர்வு

    Thursday, 10 January 2019

    இயற்கை நலம்

    #டாக்டர்_கேசவன்
    #நாயருக்கு_நன்றி

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

    நமது பழைய யோகா மாணவர் ஒருவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல மருத்துவ
    பரிசோதனை செய்தபோது …

     'நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடியாது.உங்கள்
    நுரையீரலில் இரண்டு பெரிய
    காயத்தழும்புகள் உள்ளது' என்று கூறி திரும்ப அனுப்பிவிட்டனர்.

    அதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே,சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அனைத்தையும் செய்தபின் அங்குள்ள நுரையீரல் மருத்துவர்

    'நீங்கள் மிக ஆபத்தான
    கட்டத்தில் உள்ளீர்கள். உடனடியாக அறுவை செய்தே
    தீரவேண்டும். நுரையீரல் அடிப்பகுதியில் காற்று அடைத்து கொப்பளம் போல் உள்ளது. இப்படியே விட்டால்
    உயிருக்கே ஆபத்து. இதை
    சரிசெய்ய மருந்து மாத்திரை
    எதுவும் கிடையாது.' என்று;
    கூறி உடனே அட்மிட் ஆக
    வலியுறுத்தி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்து போன, நமது மாணவர் என்னை  கைப்பேசியில்  தொடர்புகொண்டு  ஆலோசனை கேட்டார்.!

    நான் இந்த நுரையீரல் கொப்பள
    வியாதியைப்பற்றி இதுவரை
    கேள்வியே படாததால் 'நீங்கள்
    திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள
    நுரையீரல் சிறப்பு மருத்துவரை பாருங்கள்' என்று; கூறி ஆலோசனை கூறினேன்.

    இவர் உடனே கிம்ஸ் மருத்துவமனைக்கு போன் செய்து சிறப்பு மருத்துவரை சந்திக்க நேரம் வாங்கி சந்தித்துள்ளார்.

    அங்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர். கேசவன் நாயர்
    இவரின் பழைய பரிசோதனை முடிவுகளை பார்த்ததோடு
    மீண்டும் ஒரு எக்ஸ்ரே எடுத்து வரச்சொல்லி அதையும்
    பார்த்துவிட்டு 'அறுவை செய்யும் அளவிற்கு ஒன்றும் ஆபத்து இருப்பதாக தெரியவில்லை. நான் ஒரு சில மாத்திரைகள் தருகிறேன்.பதினைந்து நாள் அதை சாப்பிடுங்கள். தினமும் யோகாவில் உள்ள காற்றை வெளியேற்றும் பயிற்சியையும் செய்யுங்கள். அதோடு ஒரு
    ஏர்பில்லோ வாங்கி காலை,
    மதியம்,மாலை மூன்று வேளையும் இருபது இருபது முறை வேகமாக ஊதி பயிற்சி செய்யுங்கள். இதில் ஒன்று நுரையீரலில் கொப்பளமாக உள்ள காற்று முழுவதும்
    வெளியேறும் அல்லது குறையும்.
    அறுவை என்பது இதில் எதுவும் நடக்காவிட்டால் செய்ய வேண்டியது வரலாம்.'
    என்று கூறி;அனுப்பிவிட்டார்.

    இவரும், பதினைந்துக்கு இருபது நாட்களாக ஒரு வேளை சமைக்காத உணவு,காலை ஒரு மணிநேரம் எளிய யோகாசனம்,
    கிரியா,மூச்சிப்பயிற்சி,மூன்று வேளையும் ஏர்பில்லோ ஊதல் என்று தொடர்ந்து விட்டு நேற்று
    மீண்டும் கிம்ஸ் மருத்துவமனை சென்று டாக்டர் கேசவன் நாயரை சந்தித்தார் அவர் மீண்டும் எக்ஸ்ரே உள்ளிட்ட
    பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, கொப்பளம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இப்பொழுது
    தெரியவில்லை.' என்று
    கூறியதோடு;

    'இனி நீங்கள்
    தைரியமாக வெளிநாடு செல்லலாம்.எல்லாம்
    யோகா மற்றும் பில்லோ
    பயிற்சியின் மகிமை'

    என்று கூற,இவர் உடனே, 'உங்களால் தான் சார் அறுவை சிகிட்சையில் இருந்து தப்பியதோடு, வெளிநாடு போகும் வாய்ப்பையும் பெற்றுவிட்டேன். என்று கூறி கண்கலங்க;
    'இது எனது வேலையின் ஒரு பகுதிதான். முதலில் உங்கள் யோகா ஆசிரியருக்கு நன்றி கூறுங்கள்' என்று சொல்ல, நமது மாணவர் மருத்துவமனையில் இருந்தே என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசயத்தை கூறி மிகமிக நன்றி
     மாஸ்டர் என்றார்.!

    "நான் எனது கடமையை தானே செய்தேன்,பிணியை நீக்கியது
    இறையின் செயல்"

    என்று கூறி, மகிச்சியோடு 'நலமெல்லாம் பெற்று  வளமுடன் வாழ்க' என்று வாழ்த்தி வைத்தேன்.!

    எதற்காக இதை கூறுகிறேன் … என்றால் யோகா,
    ஏர்பில்லோ உள்ளிட்ட பயிற்சியில் நுரையீரலில் கொப்பளம் போல புடைத்து நிற்கும் காற்றை
    வெளியேற்ற முடியும். என்ற உண்மை நாகர்கோவிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவ மனையில் பணிபுரியும் நுரையீரல் மருத்துவருக்கு தெரியாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை,
    இருந்தாலும்
    நம்பித்தொலைகிறேன்.!
    டாக்டர் கேசவன் நாயர் போன்றோரின் சேவையை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்.!

    ஏனென்றால் இதுபோன்ற மருத்துவர்களே, இயற்கையோடு இயைந்து, வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டும் அறுவையை
    பரிந்துரைக்கும் உண்மையான மருத்துவப்பணியை
    செய்கிறார்கள்.!
    இதை அனைத்து அலோபதி மருத்துவர்களும் பின்பற்றினால் உண்மையிலேயே எங்கும் ஆரோக்கியம் மிளிரும் செய்வார்களா?

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
    www.aumherbals.com

    Wednesday, 9 January 2019

    தொடர் விக்கல்,வாய்வு,தொண்டைக்கட்டு

    உடனடி நிவாரணம் தரும்
    மருத்துவங்கள்

    50 மில்லி தேங்காய் எண்ணெயில் 10 கிராம் அளவு கற்பூரம் சேர்த்து சூடாக்கி ஆறியதும் நெஞ்சி சளி இருப்பவர்கள் நெஞ்சி, தொண்டைக்குழி போன்ற இடத்தில் தடவி வந்தால் சளிபோகும். இந்த எண்ணெயையை தூங்கும் போது கைகால் உடலில் தேய்த்து படுத்தால் கொசுக்கடிக்காது.
    கால் வெடிப்பில் இந்த எண்ணெயை பூசி வந்தால் வெடிப்பு மறையும்.

    சுக்கு,வால்மிளகு,ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து லேசாக  வறுத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட தொண்டைக்கட்டு,
    தொண்டை கரகரப்பு நீங்கும்.!

    நான்கு நெல்லிக்காயை  இடித்து சாறு பிழிந்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நிற்கும்,உடல்சூடு தணியும்,இரத்தம் சுத்தமாகும்.!

    கருவேப்பிலை,கல்லுப்பு,
    சீரகம்,சுக்கு ,ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட
     அஜீரணம் குணமாகும்,
     புளித்த ஏப்பம் மாறும்.!

    வேப்பம்பூவை உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொண்டு அரைத்தேக்ககரண்டி பொடியை கால் டம்ளர் சுடுநீரில் கலந்து காலை உணவிற்கு பின் உட்கொள்ள வயிற்றுப்புண் ஆறும்.!

    சிறிது வெந்தயத்தை நெய்யில் வறுத்து அரைத்து வைத்துக்கொண்டு அரைத்தேக்ககரண்டி பொடியை அரைடம்ளர் மோரில் கலந்து குடிக்க  வயிற்றுவலி நீங்கும்.!

    புதினா இலையை நிழலில் உலர்த்தி இந்துப்பு சேர்த்து பொடித்து பல்துலக்கி வந்தாலோ புதினாவை அடிக்கடி மென்று வந்தாலோ பல்கூச்சம்
     விரைவில் மாறும்.!

    30 கிராம் வசம்பை சுட்டு
    கரியாக்கி அதனுடன்
    தலா 50 மில்லி நல்லெண்ணெய்,
    ஆமணக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய் கலந்து அடிவயிற்றில் தேய்த்து வர வயிற்றுப்பெருமல் புளித்த ஏப்பம் தீரும்.!

    ஒரு சிறிய துண்டு வெல்லத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்து குழப்பி வேனல் கட்டியில் தடவி ஒரு வெற்றிலை துண்டை மேலே ஒட்டிவிட்டால் கட்டி பழுத்து உடைந்துவிடும்.!

    சுக்கு,மிளகு,திப்பிலி,தாமரை இதழ் சம அளவாக எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு ஒருத்தேக்கரண்டி எடுத்து ஒன்றரை டம்ளர் நீரில்
    கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் இறக்கி வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்குவதற்கு ஒரு
    மணிநேரம் முன்பு குடித்து வந்தால்  இரத்த கொழுப்பு குறையும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.!

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
    www.aumherbals.com

    Tuesday, 8 January 2019

    நோயின்றி வாழவழி

    மாரடைப்பு_வராமல்_தடுக்க
    ஐந்து_ஆலோசனைகள்

    1.தினமும் குறிப்பிட்ட அளவு
     சரியான உடற்பயிற்சி செய்யுங்கள்.
    (மென்ஓட்டம்,கைத்தட்டல் பயிற்சி,மிதமான யோகம் போன்றவை)

    2.சரியான உணவு முறையை
    வைத்துக்கொள்ளுங்கள்.
    (தினமும்  உணவில் 50 % சமைக்காத பழம், காய்கறி,சிறுதானியங்கள்,அவல்,தேங்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், இரசாயன உணவுகளை முடிந்தவரை தவிருங்கள்)

    3.மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
    (மனிதர்களின் இயல்பை புரிந்து கொள்ளுதல்,நேர்மறை எண்ணம்,தியானம்,மந்திரம் உச்சரித்தல், இயற்கையின் நியதியை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை)

    4.தேவையான அளவு ஓய்வு எடுங்கள்.
    (தேவையான தூக்கம், பணியின் இடையே வெறுமனே சிந்தையின்றி சிறிது நேரம் அமர்ந்து அல்லது படுத்து ஓய்வு எடுத்தல்)

    5.திருப்தியான மனநிலையில் பிடித்த விசயங்களை செய்யுங்கள்.
    (குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்,நண்பர்களோடு இருத்தல்,பிறருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தல்,அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்,இயற்கை இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றை அடிக்கடி செய்யுங்கள்.)

    மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு சில வேண்டாத பழக்கங்களை முற்றிலும் விட்டுவிட்டால் உங்களை மாரடைப்பு நெருங்காது.முக்கியமாக நோய்களைப்பற்றியும் நோயாளிகளைப்பற்றியும் நினைத்து,பேசி கவலை கொள்ளும் பழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள். கவலைகளை வைத்து எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை குறையுங்கள்.

    ஆசைக்கு உட்பட்டு, சபலத்திற்கு ஆட்பட்டு எந்த விசயத்தையும்
    செய்யாதீர்கள்.

    வயது,மனநிலை,வாழ்க்கை நிலைக்கு தகுந்தபடி உடற்பயிற்சி,வேலை,உணவுமுறையில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.!

    ஏனென்றால்,உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் கூட பலர் மாரடைப்பு வந்து விழுந்து இறந்துள்ளனர்.

    சமீபத்தில் ஒருவர் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும் முன்னமே மர உச்சியிலிருந்து மாரடைப்பால் இறந்து தலைகீழாக தொங்கி உள்ளார்.!

    அப்துல் கலாம் அய்யாவைப்போல பேசிக்கொண்டிருந்த போது, கல்யாண விட்டில் சாப்பிட்டு மதியம் உறங்கிக்கொண்டிருந்த போது  அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த போது,குளித்துக்கொண்டிருந்த போது  என்று இப்பொழுதெல்லாம் பரவலாக பலருக்கும் திடீர் திடீர் மாரடைப்பு வருகிறது.!

    'நாற்பதுக்கு மேல் உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது ' என்று சிலர் கூறுகிறார்கள்.

    ஆனால்,அப்படி பரிசோதனை செய்து தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு கூட  சில நேரம் திடீர் அட்டாக் வந்து விடுகிறது.

    ஆறு மாதத்திற்கு முன்பு வரை ஒரு நோயும் இல்லை என்று சான்றிதழ் வாங்கி இருந்த எனது நண்பர் ஒருவர் கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது 92% அடைப்பு உள்ளதாக கூறி உடனே அறுவை செய்தும் இறந்து போனார்.!

    நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நாட்டுமருந்துக்கடையில் சூப்பர்வைசராக  வேலைப்பார்த்து வந்த நடுத்தர வயதுகொண்ட நல்ல மனிதர் ஒருவர்,சில மாதங்களுக்கு முன்னாள் திடீர் அட்டாக்கில் இறந்து விட்டார்.!

    நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் (நடுத்தர வயது) பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் திடீர் அட்டாக்கால் இறந்துவிட்டார்.

    இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது வாழ்க்கை முறை மாற்றத்தால் நாம் ஆரோக்கிய வாழ்வை இழந்ததை கண்கூடாக உணர முடிகிறது.!

    இந்த உலகத்தில் மிகப்பெரிய முட்டாள் யாரென்றால் உடற்பயிற்சி செய்யாதவன், ஏமாளி யாரென்றால் செக்கு எண்ணெய்,கருப்பட்டி,கல்லுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவன் தான், அடிமடையன்  யாரெனில் எப்பொழுதுமே சிடுசிடுவென்றிருப்பவன்.!
    உலக கோமாளி யாரெனில் மூன்று வேளையும் சமைத்த உணவை வயிறு நிறைய உண்பவன்.!

    இந்த வரிசையில் நீங்களும் இருந்தால், இந்த கெட்டப்பழக்கங்கள் உங்களுக்கும் இருந்தால் மாறிக்கொள்ளுங்கள் சகோதரர்களே.!

    உண்மை,அன்பு,நன்மை இதுவே ஆரோக்கிய சூத்திரம் இதை மட்டும் கடைப்பிடியுங்கள்.!
    வாழ்க வளமுடன்.!
     நலம் பெருகட்டும் …

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
    www.aumherbals.com

    Monday, 7 January 2019

    வாய்ப்புண் குணமாகும்

    கையளவு ஆவாரம்பூவை எடுத்து  இரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் இறக்கி நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் குடித்துவந்தால் தொண்டை புண்,வாய்ப்புண்  போன்றவை நான்கு நாளில் குணமாகும்.!

    amyogatrust.blogspot.in

    Saturday, 5 January 2019

    சிற்றின்ப மருந்துகள்

    ஆண்மைக் குறைவு நீங்க

    அரசம்பழம், அரசம் வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து தேக்கரண்டி அளவு பொடியை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் இரவு உணவிற்கு பின் குடித்து வர ஆண்மைக் குறைவு நீங்கும்.                                                                                                                                                                                                                                                                                          
    விந்து விருத்தியாக

    தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் விதம்  தினமும் மதிய உணவிற்கு முன் அருந்தி வர விந்து விருத்தியாகும்.

    வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்.                                                                  
    குழந்தையின்மை

    நாட்டுக் கோழி (வீட்டில் வளர்க்கும் கோழி) முட்டையை  தினமும் காலையில் பச்சையாகவோ அல்லது லேசாக சூடாக்கியோ சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

    www.aumherbals.com

    Friday, 4 January 2019

    *கண் குறைபாடு நீங்கும்*

    கீழாநெல்லி,
    கரிசலாங்கண்ணி,
    கண்டங்கத்திரி
    இலையை சம அளவாக
    எடுத்து (சிறுதுண்டு)

    அதனுடன் ஒரு
    சிறிய கல்லுப்பு துண்டையும்
    எடுத்து உள்ளங்கையில் வைத்து கசக்கினால் சாறு வரும்.

    இந்தச்சாற்றை
    அப்படியே தூரப்பார்வை
    கிட்டப்பார்வை,
    நிறக்குருடு,கண்புரை,
    மாலைக்கண் நோய் கொண்டவர்களை
    படுக்க வைத்து
    வலது கண்ணிலும்
    இடது கண்ணிலும்
    (கண்பூழை சேரும் பகுதியில்)
    மூன்று மூன்று துளிகள் விதம்
    தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு
    முறை விதம் மூன்று மாதங்கள்
    விட்டு வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் குணமாகும்.

    கண்ணில் மேற்கண்ட மருந்தை விட்டதும் சிறிது எரிச்சல் வரும் அதைப்பொருட்படுத்தாது வலம் இடமாக மூன்று  மூன்று சுற்றுகள் கண் இமைகளை சுழற்றி அப்படியே கண்களை
    மூடி 3 நிமிடம் படுத்திருந்து
    பின்னர் மெதுவாக
    எழுந்து விடலாம்.!

    இதை தொடர்ந்து 12 வாரங்கள்
    கடைப்பிடிப்பதோடு உணவாக
    விதையுள்ள
    கருப்புத்திராட்சை,
    உலர் திராட்சை,
    நெல்லிக்காய்,
    தேங்காய்,செவ்வாழைப்பழம்,
    பேரீச்சம் பழம்,பாதாம் பருப்பு,
    கைக்குத்தல் அவல்,கருப்பட்டி,இயற்கை ஊட்டச்சத்து மாவு
    போன்றவற்றில் முடிந்ததை
    தினமும் ஒரு வேளை உணவாக சமைக்காமல் எடுத்துக்கொள்ள
    வேண்டும்.!

    கீழாநெல்லிக்கீரை,
    வெண்பூசணிக்காய்,
    முருங்கைக்கீரை,
    கரிசலாங்கண்ணி,
    பொன்னாங்கண்ணி
    கீரைகளை சமையலில்
    சேர்த்துக்கொள்ள வேண்டும்.!

    தினமும் 10 நிமிடம்  கண்களை சுருக்கி விரித்து சுழற்றி
    கண்பயிற்சிகளையும்  செய்து
    வந்தால் வேகமாக நிவாரணம்
    பெறலாம்.!

    ஏற்கனவே மேற்கண்ட காரணங்களுக்காக  அறுவை
    சிகிட்சை செய்துள்ளவர்கள்
    கண்ணில் மூலிகைச்சாற்றை
    விட வேண்டாம்.!
    உணவு முறையையும் கண்
    பயிற்சியையும்  செய்யலாம்.!

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

    • www.aumherbals.com

    Thursday, 3 January 2019

    *உடலை காக்க இது போதுமே*

    (இப்பகுதி
    அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற  நூலின் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது)

    மூளைக்கு வல்லாரை
      முடிவளர நீலிநெல்லி
    ஈளைக்கு முசுமுசுக்கை
       எலும்பிற்கு இளம்பிரண்டை

    பல்லுக்கு வேலாலன்
      பசிக்கு சீ  ரகமிஞ்சி
    கல்லீரலுக்கு  கரிசாலை
      காமாலைக்கு கீழாநெல்லி

    கண்ணுக்கு நந்தியாவட்டை
      காதுக்கு சுக்குமருள்
    தொண்டைக்கு அக்கரகாரம்
      தோலுக்கு அருகுவேம்பு

    நரம்பிற்கு அமுக்குரான்
      நாசிக்கு நொச்சிதும்பை
    உடல் உரத்திற்கு  முருங்கைப்பூ
    ஊதலுக்கு நீர்முள்ளி

    முகத்திற்கு சந்தனநெய்
      மூட்டுக்கு முடக்கறுத்தான்
    அகத்திற்கு  மருதம்பட்டை
      அம்மைக்கு வேம்புமஞ்சள்

    உடலுக்கு  எள்ளெண்ணை
      உணர்ச்சிக்கு  நிலப்பனை
    குடலுக்கு ஆமணக்கு
       கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

    கருப்பைக்கு அசோகுபட்டை
      களைப்பிற்கு சீந்திலுப்பு
    குருதிக்கு அத்திப்பழம்
      குரலுக்கு  தேன்மிளகே!

    விந்திற்கு ஓரிதழ்தாமரை
      வெள்ளைக்கு கற்றாழை
    சிந்தைக்கு  தாமரைப்பூ
      சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

     கக்குவானுக்கு
     வசம்புத்தூள்
      காய்ச்சலுக்கு நிலவேம்பு                        
    விக்கலுக்கு மயிலிறகு
       வாய்ப்புண்ணிற்கு
    மணத்தக்காளி

    நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
      நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
    வேர்க்குருவிற்கு
     பனைநுங்கு நீர்
       வெட்டைக்கு சிறுசெருப்படையே

    தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
      சீழ்காதுக்கு நிலவேம்பு
    நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
       நஞ்செதிர்க்க அவரிஎட்டி

    குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
        குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
    பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
      பெருவயிறுக்கு மூக்கிரட்டை

    கக்கலுக்கு  எலுமிச்சை ஏலம்
      கழிச்சலுக்கு தயிர்சுண்டை
    அக்கிக்கு வெண்பூசனை
      ஆண்மைக்கு பூனைக்காலி

    வெண்படைக்கு
     பூவரசு கார்போகி;
       விதைநோயா
     கழற்சிவிதை
    புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
      புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

    கால்வெடிப்பா
     மருதாணி கிளிஞ்சல்
      கரும்படை வெட்பாலை சிரட்டை;
    கால்சொறிக்கு
    வெங்காரபனிநீர்
      கானாகடிக்கு
     குப்பைமேனி
     உப்பே

    உடல்பெருக்க
     உளுந்துஎள்ளு
      உளம்மயக்க
     கஞ்சாகள்ளு
    உடல்இளைக்க
     தேன்கொள்ளு
      உடல் மறக்க
     இலங்கநெய்யே

    அருந்தமிழர் வாழ்வியலில்
      அன்றாடம் சிறுபிணிக்கு
    அருமருந்தாய் வழங்கியதை
      அறிந்தவரை உரைத்தேனே!!

    *உணர்ந்தவர்கள் போற்றிக்கொள்க.!!*

    🙏🏻நன்றி
    பதிவேற்றியவருக்கு

    🌳100 % இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

     🍁AUM HERBALS🍁
    Mobile 9629368389 www.aumherbals.com
    #இயற்கை_சோப்பு
     #தயாரிக்கும்_முறை

    செக்குத்தேங்காய் எண்ணெய்
    900 மில்லி (750 கிராம்)
    சோற்றுக்கற்றாளை
     ஜெல் 50 கிராம்
    சந்தனத்தூள் 50 கிராம்
    செம்பருத்திப்பூ 10 எண்ணம்
    வேப்பிலை 2 கொத்து
    காஸ்டிக் சோடா 150 கிராம்

    முதலில் சோற்றுக்கற்றாளை
    வேப்பிலை செம்பருத்தி மூன்றையும் சிறிதாக வெட்டி
    கொஞ்சம் நீர்விட்டு
    அம்மி அல்லது மிக்சியில்
    லேசாக அரைத்து பின்  அதில் 450 மில்லி நீர்விட்டு அடுப்பில் லேசாக சூடாக்கி இறக்கி வடிகட்டியச்சாறு 450 மில்லி
    எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    இந்தச்சாறு நன்றாக ஆறியதும் ஏதேனும் ஒரு வாய் நீண்ட பாத்திரத்தில் ஊற்றி அதில் 150 கிராம் காஸ்டிக் சோடாவைப் போட்டு மெதுவாக கலக்கவும்
    இப்படி செய்யும் போது பாத்திரம் சூடாகி லேசாக ஆவியும் ஒரு வாடையும் வரும். (ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த வேலையை செய்ய வேண்டாம்)
    தேவையானால் கையுறையும் முகமூடியும் அணிந்து கொள்ளலாம்.

    காஸ்டிக் சோடா மூலிகை நீருடன் கலந்து சூடு கொஞ்சம் ஆறியதும் அதோடு 900 மில்லி  தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக 20 முதல் நாப்பது நிமிடங்கள் கலக்கிக்கொண்டே இருந்தால் அனைத்தும் சேர்ந்து தோசை மாவு பதத்தில் வரும் அதில் 50 கிராம் சந்தனத்தூளையும் போட்டு நன்றாக மீண்டும் கலக்கி சோப்பு அச்சி அல்லது சிறிய பேப்பர்  கப்பில் ஊற்றி தனியாக வைத்து விட்டு 15 முதல் 24 மணி நேரம் கழித்துப்பார்த்தால்  நன்றாக இறுகி இருக்கும் பிறகு அதை தட்டியோ அல்லது பேப்பர் கப்பை வெட்டியோ எடுத்துக் கொண்டு மேலும் 15 முதல் 21 நாட்களுக்குப் பிறகு உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம்.! துணி துவைக்கவும் பாத்திரம் தேய்க்கவும் கூட இதையே பயன்படுத்தலாம்.!

    15 நாள் வைக்காமல் உடனே உடலில் தேய்த்து குளித்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை,அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.!

    இதில் காஸ்டிக் சோடா என்பது ஒரு இரசாயணம் ஆயிற்றே, இதை இயற்கை சோப்பில் பயன்படுத்தலாமா?  என்று சிலர் கேட்கலாம்;

    இன்று கடைகளில் கிடைக்கும் 100 % இயற்கை என்று விளம்பரம் செய்யப்படும் அத்தனை சோப்பு சேம்பு  போன்றவற்றிலும் காஸ்டிக் சோடா,சோடியம்,எசன்சியல் ஆயில் போன்ற பல இரசாயணங்கள் 50 % வரை கலந்தே வருகிறது.

    ஆனால் நாம் கூறியுள்ள முறையில் மொத்தக்கலவை நீரூம் சேர்ந்து  தோராயமாக 1500 கிராம்.

    அதாவது இதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இரசாயணம் கலந்துள்ளது.

    நாம் ஏற்கனவே கூறிய 100 % இயற்கை சோப்பை விட இது பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.!

    100 % இயற்கை என்ற பெயரில் உலாவும் இயற்கை சோப்பு  தயாரிப்பாளர்கள் இது போல் தங்கள் மூலப்பொருட்களையும் செய்முறையையும் பதிந்தால் மட்டுமே அவர்களின் நம்பகத்தன்மை உலகிற்கு தெரியும்.!

    -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
    www.aumherbals.com
    *AUM HERBALS இயற்கை*
    *மூலிகை தயாரிப்புகள்*
    ******************

    🌿நிலவேம்பு குடிநீர்

    விசக்காய்ச்சல்,மூட்டுவலி,
    உடல்வலி,தோல் அரிப்பு,உடல்வீக்கம்,சிறுநீரக பலவீனம் நீக்கும் ஒப்பற்ற மருந்து.!

    நிலவேம்பு,மிளகு,பற்பாடகம்
    சந்தனச்சீவல் போன்ற ஒன்பது மூலிகைகளின் கலவை.!

    250 கிராம் 200 ரூபாய்.!

    🍁தலைகுளி பொடி
    சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

    *முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

    950 கிராம், 600 ரூபாய்

    🌿பஞ்சமூலி சூரணம்

    *உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

    நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
     100% இயற்கையானது.!

    950 கிராம் 500 ரூபாய்

    🌅மூலிகை தேனீர்

    ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

    *உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

    950 கிராம் 600 ரூபாய்/-

    🏺அதிசய மூலிகை எண்ணைய்

    நாட்டுத்தேங்காய்,இயற்கை எள்ளு, இயற்கை வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

    *உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
    *கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
    *ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

    விலை: 500 மிலி
    500 ரூபாய்/-

    🎿மூலிகை பல்பொடி

    வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

    *பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

    950 கிராம் 600 ரூபாய்/-

    🌹மூலிகை குளியல் பொடி

    ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

    *உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

    950 கிராம்,600 ரூபாய்/-

    🍁இயற்கை குளியல் சோப்

    முல்தானிமட்டி,
    பூந்திக்கொட்டை,புதினா தைலம் கலந்து தயாரித்த தோல் வியாதிகளை போக்கும்  100 % இயற்கை சோப்

    65 முதல் 70 கிராம் 30 ரூ

    💧தேங்காய் எண்ணெய் சோப்

    செக்கு எண்ணெய்,செம்பருத்தி,
    சந்தனத்தூள்,கற்றாளை கலந்து மிக குறைந்த அளவு காஸ்டிக் சோடா கலந்து
    தயாரிக்கப்பட்ட உடலுக்கும் தலைக்கும் புத்துணர்வு அளிக்கும் அற்புதமான சோப்பு

    75 முதல் 80 கிராம் 45 ரூ

    🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

    கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

    *உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

    6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

    விலை:950 கிராம்
    300 ரூபாய்/-

    🎨சக்கரை வியாதி சூரணம்

    *உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

    சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை,ஆவாரம்பூ, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

    🍄அமுக்ரா  மாத்திரை & லேகியம்

    அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய அமுக்ரா மாத்திரை மற்றும் லேகியம்

    *நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
    *ஆரோக்ய மாத்திரை*

    மாத்திரை 100,
     300 ரூபாய்.
    லேகியம் 500 கிராம்,450 ரூபாய்.

    🌿புதினா தைலம்

    தலைவலி,மூக்கடைப்பு,சோர்வைப்போக்கும் புதினா தைலம்.

    புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட இயற்கை தயாரிப்பு.!

     சிறிய பாட்டில்
    20 ரூ/-

    🌫 கற்பூரத்தைலம்

    பாதவெடிப்பு,உடல் ஊறல்,கொசுக்கடியைப் போக்கும்  அற்புத தைலம்.!

    பச்சைக்கற்பூரம்,தேங்காய் எண்ணெய்,கற்றாளைச்சாறு கலந்து தயாரிக்கப்பட்டது.!

    சிறிய பாட்டில் 30 ரூபாய்.!

    🔰மஹாயோகா புத்தகம் & ஆழ்நிலை யோகா வீடியோ

    *சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
    *மற்றும் குறுந்தகடு*
    *இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*

     ❄இன்சுலின் ஆவணப்படம்

    *சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

    *ஆதிமருத்துவம்*
    🍁🍁🍁🍁🍁

    தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த இயற்கை மருத்துவ நூல்

    🌿இயற்கை மருத்துவ வரலாறு
    🍁உடல் சுத்திகரிப்பு முறைகள்
    🌿முக்கிய
    யோகாசனம்,பிராணாயாமம்,
    தியான நுட்பங்கள்
    🍁மூலிகை மருத்துவ குறிப்புகள்
    🌿வர்மசிகிட்சை நுட்பங்கள்
    🍁பிராணசிகிட்சை
    🌿இயற்கை பிரசவ முறை விளக்கம்
    🍁பெண்கள்,
    குழந்தைகளுக்கான எளிய மருத்துவ உதவிகள்
    🌿இயற்கை குளியல் முறைகள்
    🍁ஆரோக்கியமாய்
     வாழ கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை
    🌿ஒன்பது முக்கிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
    💥தடுப்பூசிகளின் உண்மை
    🌿ஆபத்து காலத்தில் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி முறைகள்
    💐இல்லறம் இனிக்க இனிய ஆலோசனைகள்
    ☘உடல்பருமன் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கு ஒருங்கிணைந்த
    இயற்கை சிகிட்சை முறை

    போன்ற இயற்கை வாழ்வியல் நுட்பங்கள் அனைத்தும் இணைந்த முழுமையான இயற்கை மருத்துவ நூல் இதுபோன்ற ஒரு புத்தகம் இதற்கு முன் தமிழில் வெளிவரவில்லை. இயற்கை மருத்துவ நுட்பங்களை முழுவதும் கற்க உதவும் அருமையான நூல்.ஒவ்வெரு வீட்டிலும் இயற்கை மருத்துவ மையங்களிலும் இருக்க வேண்டிய அற்புதப்படைப்பு.

    🍁ஆசிரியர்,
     ஏகப்பிரியன்
    மு.இஸ்மாயில்DYT
    [இயற்கை வாழ்வியல் நிபுணர்]

    384 பக்கம் - 360 ரூ

    வெளியீடு:
    💥AM YOGA TRUST
    16/89.தைக்கா தெரு,
    திட்டுவிளை.
    கன்னியாகுமரி மாவட்டம்
    629852
    கைப்பேசி:9629368389
    aumherbals.blogspot.com
    amyogatrust.blogspot.com

    💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …

    வாழ்க வளமுடன்.!
    நலம் பெருகட்டும் …

    தியானம் செய்வோம்

    சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...