மாரடைப்பு_வராமல்_தடுக்க
ஐந்து_ஆலோசனைகள்
1.தினமும் குறிப்பிட்ட அளவு
சரியான உடற்பயிற்சி செய்யுங்கள்.
(மென்ஓட்டம்,கைத்தட்டல் பயிற்சி,மிதமான யோகம் போன்றவை)
2.சரியான உணவு முறையை
வைத்துக்கொள்ளுங்கள்.
(தினமும் உணவில் 50 % சமைக்காத பழம், காய்கறி,சிறுதானியங்கள்,அவல்,தேங்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், இரசாயன உணவுகளை முடிந்தவரை தவிருங்கள்)
3.மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
(மனிதர்களின் இயல்பை புரிந்து கொள்ளுதல்,நேர்மறை எண்ணம்,தியானம்,மந்திரம் உச்சரித்தல், இயற்கையின் நியதியை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை)
4.தேவையான அளவு ஓய்வு எடுங்கள்.
(தேவையான தூக்கம், பணியின் இடையே வெறுமனே சிந்தையின்றி சிறிது நேரம் அமர்ந்து அல்லது படுத்து ஓய்வு எடுத்தல்)
5.திருப்தியான மனநிலையில் பிடித்த விசயங்களை செய்யுங்கள்.
(குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்,நண்பர்களோடு இருத்தல்,பிறருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தல்,அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்,இயற்கை இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றை அடிக்கடி செய்யுங்கள்.)
மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு சில வேண்டாத பழக்கங்களை முற்றிலும் விட்டுவிட்டால் உங்களை மாரடைப்பு நெருங்காது.முக்கியமாக நோய்களைப்பற்றியும் நோயாளிகளைப்பற்றியும் நினைத்து,பேசி கவலை கொள்ளும் பழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள். கவலைகளை வைத்து எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை குறையுங்கள்.
ஆசைக்கு உட்பட்டு, சபலத்திற்கு ஆட்பட்டு எந்த விசயத்தையும்
செய்யாதீர்கள்.
வயது,மனநிலை,வாழ்க்கை நிலைக்கு தகுந்தபடி உடற்பயிற்சி,வேலை,உணவுமுறையில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.!
ஏனென்றால்,உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் கூட பலர் மாரடைப்பு வந்து விழுந்து இறந்துள்ளனர்.
சமீபத்தில் ஒருவர் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும் முன்னமே மர உச்சியிலிருந்து மாரடைப்பால் இறந்து தலைகீழாக தொங்கி உள்ளார்.!
அப்துல் கலாம் அய்யாவைப்போல பேசிக்கொண்டிருந்த போது, கல்யாண விட்டில் சாப்பிட்டு மதியம் உறங்கிக்கொண்டிருந்த போது அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த போது,குளித்துக்கொண்டிருந்த போது என்று இப்பொழுதெல்லாம் பரவலாக பலருக்கும் திடீர் திடீர் மாரடைப்பு வருகிறது.!
'நாற்பதுக்கு மேல் உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது ' என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால்,அப்படி பரிசோதனை செய்து தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு கூட சில நேரம் திடீர் அட்டாக் வந்து விடுகிறது.
ஆறு மாதத்திற்கு முன்பு வரை ஒரு நோயும் இல்லை என்று சான்றிதழ் வாங்கி இருந்த எனது நண்பர் ஒருவர் கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது 92% அடைப்பு உள்ளதாக கூறி உடனே அறுவை செய்தும் இறந்து போனார்.!
நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நாட்டுமருந்துக்கடையில் சூப்பர்வைசராக வேலைப்பார்த்து வந்த நடுத்தர வயதுகொண்ட நல்ல மனிதர் ஒருவர்,சில மாதங்களுக்கு முன்னாள் திடீர் அட்டாக்கில் இறந்து விட்டார்.!
நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் (நடுத்தர வயது) பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் திடீர் அட்டாக்கால் இறந்துவிட்டார்.
இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது வாழ்க்கை முறை மாற்றத்தால் நாம் ஆரோக்கிய வாழ்வை இழந்ததை கண்கூடாக உணர முடிகிறது.!
இந்த உலகத்தில் மிகப்பெரிய முட்டாள் யாரென்றால் உடற்பயிற்சி செய்யாதவன், ஏமாளி யாரென்றால் செக்கு எண்ணெய்,கருப்பட்டி,கல்லுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவன் தான், அடிமடையன் யாரெனில் எப்பொழுதுமே சிடுசிடுவென்றிருப்பவன்.!
உலக கோமாளி யாரெனில் மூன்று வேளையும் சமைத்த உணவை வயிறு நிறைய உண்பவன்.!
இந்த வரிசையில் நீங்களும் இருந்தால், இந்த கெட்டப்பழக்கங்கள் உங்களுக்கும் இருந்தால் மாறிக்கொள்ளுங்கள் சகோதரர்களே.!
உண்மை,அன்பு,நன்மை இதுவே ஆரோக்கிய சூத்திரம் இதை மட்டும் கடைப்பிடியுங்கள்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:
Post a Comment