I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: August 2017

Wednesday, 30 August 2017

இயற்கையும் நானும்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

53.நானும் இயற்கை வாழ்வியலும்

சுடுமணல் நெடும்பயணம்
கண்ணிருட்டி நாவறண்டு
உயிர்போகும் நேரம்
பெருமழையாய் வந்தாய் 
உயிர் மீட்டுத்தந்தாய் "

சிறுவயதில் எனக்கு கடுமையான மலச்சிக்கல் இருந்தது. மாதத்திற்கு அதிகபட்சம் மூன்றுநாள் மலம் கழிப்பதே எனது வழக்கம். சிறுவயதில்
பெரிய உணவு கிடைத்துவிடாது. என்றாலும் கூட, பள்ளியில் மதிய உணவு உட்பட மூன்று வேளையும்
ஏதோ ஒன்றை உள்ளே தள்ளிக் கொண்டேதான்  இருந்தேன். ஆனால்,கழிவைவெளித்தள்ளும் இயக்கம் மிகவும் மந்தமாக இருந்ததால் கடுமையான வியர்வை,சிரங்கு,மந்தப்புத்தி,மஞ்சள்காமாளை போன்ற பல கோளாறுகளால் பிடிக்கப்பட்டிருந்தேன்.கழிவு வெளியேறும் நாளில், ஆசனவாயில் கடுமையான வலி இருக்கும். கழிவு இறுகி இரத்தக் கசிவுடன் துண்டுத்துண்டாக வந்து விழும்.இஞ்சிச்சாறு,விளக்கெண்ணெய்,கடுக்காய் பொடி போன்ற எந்த வழிமுறையும் எனக்கு  அப்பொழுது மலச்சிக்கலில் இருந்து முழு தீர்வை தரவில்லை.அதிகப்பட்சம் 17 நாட்கள் வரை நான் மலம் வெளியேறாமல் அவதிப்பட்டுள்ளேன்.இறுதியில் யோகாசனம் செய்தால் இதிலிருந்து விடுபடலாம்.என்று ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலின் படி, எனது பதிமூணாவது வயதில், கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தில் இருந்த சூரியச்சித்தர் சுவாமி வெங்கட் ரமணா அவர்களிடம் , யோகசனப் பயிற்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே  இந்த சிக்கல் சீரானது. ஆனாலும், இப்பவும் ஒருநாள் யோகாசனம் செய்யாவிட்டால் கூட ,மலம் முழுவதும் வெளியேறாத உணர்வு வந்துவிடும்.என்னைப் பொருத்தவரை இது ஒரு பரம்பரை வியாதி. எனக்கு முன்பு,எனது தந்தைக்கும் தற்போது எனது மகனுக்கும் கூட இந்த மலச்சிக்கல் வியாதியின் தன்மைகள் உள்ளன. தனூராசனம்,மட்ச்யாசனம்,யோகமுத்ரா போன்ற ஆசனங்கள், ஆசனவாய் கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடியவை.ஆனால்,நான் என் குருவிடம் முதன்முதலில் கற்றது சிரசாசனமும் சர்வாங்காசனமும் தான்.இன்றுகூட இந்த  ஆசனங்களை 10 நிமிடம் செய்தால் போதும் இரண்டாவது முறையாக , வயிற்றில் தேங்கியுள்ள கொஞ்சநஞ்ச கழிவுகளும், உடனே நான் வெளியேறி விடுகிறேனே, என்று கெஞ்சும்.
உண்மையில் யோகத்தை நான் அறியாது போயிருந்தால் ஒரு தலைமுறையே இந்த நோயால் நாறிப்போயிருக்கும்.என்பதே மறுக்க முடியாத உண்மை.!
அதுபோல், எனது 15 வது வயதில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில்  வைத்து, நான் நடந்து சாலையை கடக்க முயன்றபோது, ஒரு ஆட்டோ வேகமாக வந்து தனது முன் சக்கரத்தை என் வலது படங்காலில் ஏற்றி நிறுத்திவிட்டது.!
ஓட்டுனர் பதறி வண்டியை எடுக்க, எனது கால் சதைந்த காய்போல் நைந்து இரத்தம் கொட்டியது.நான் ஓவென்று கதறி  அழ,என்னைச்சுற்றி  ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது  … பிறகு ஒருவழியாக  பஞ்சாயத்து எல்லாம் முடிந்து எனக்கு முதலுதவி செய்து வீட்டில் இறக்கி விட்டதோடு ஆட்டோ ஓட்டுனர் ஓடிவிட்டார்.
அதன்பின் தினமும் அரசு மருத்துவமனையில் போய்கட்டு போடுவது, மருந்து,மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் புண் ஆறாததோடு விரல்களுக்கும் கணுக்காலுக்கும் நடுப்பட்ட பகுதியில் ஒரு பெரிய குழியும் விழுந்து வருத்தியது. அதில் ஒரு மூன்று தேக்கரண்டி எண்ணெய் விடுவதற்குறிய அளவில் பள்ளம் வந்துவிட்டது. நாகர்கோவிலில் உள்ள அரசு, தனியார்  மருத்துவர்கள் எல்லாம் கால் முழுவதும் அழுக ஆரம்பித்துவிட்டது. காலை எடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று அச்சப்படுத்திய நிலையில் , நான் குணப்படுத்துகிறேன் என்று, நம்பிக்கை அளித்த ஒரு பெண் மருத்துவர். என்னையும்,என் தாயையும் திருநெல்வேலி, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருக்க வைத்து,ஒரு மாதம் வரை  பென்சிலின் ஊசியைப்போட்டே எனது காலை காப்பாற்றி தந்தார்.! ஒர் அலோபதி மருத்துவத்தாய்.!
எங்கள் வறுமை நிலையை உணர்ந்த அவர், மருத்துவத்திற்காக  எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம். என்று கூறியதோடு மேலும் பல உதவிகளை செய்து தந்தார்.!
காலம் அவரின் பெயரை மறந்துவிட செய்துவிட்டது. ஆனால்,
எனது வலது காலில் கருணையின் தழும்பாய் அந்த மருத்துவரின் முகம் இன்றும் பதிந்துள்ளது.!
இதுபோல நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள மீனா கிளினிக் Dr.இராமலிங்கம் அவர்கள் பலமுறை  எங்கள் குடும்பத்திற்கே பொருள் கருதாது சேவை புரிந்துள்ளார்.ஒரு முறை ,ஒரு  மத வெறிக்கும்பல் நடத்திய வன்முறை தாக்குதலில் சிக்குண்டு எனது கீழுதடு நாடிவரை கிழிந்து விட்டது.
ஏதோ ஒரு நம்பிக்கையில் உதட்டை வாயோடு சேர்த்துப்பிடித்துக் கொண்டே, மீனா கிளினிக்கை நோக்கி ஓடினேன். அவர் அன்று அந்த இடத்தில் ஒரு எட்டு தையலும் எனக்கே தெரியாமல் உச்சந்தலையில் இருந்த காயத்தில் உள்ள முடியை வெட்டிவிட்டு அதில் ஒரு ஆறு தையலும் போட்டுவிட்டார்.!
இந்தத் தாக்குதலில் பலரும் படுகாயம் அடைய நாகராஜன் என்ற ஒரு நண்பர் தனது வலதுகையை இழந்தார். இவர்தான் இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் தான் தெரிந்தது.
இராமனுக்கு கோவில் கட்டுங்க,பாபருக்கு மசூதி கட்டுங்க
இல்லனா இரண்டையும் இடிச்சி பள்ளிக்கூடம் கட்டுங்க. அத விட்டுட்டு அப்பாவிகள ஏன்டா வெட்ட வாறீங்க, பின்னால் நீங்களே ஏன்டா வீணா சாகுறீங்க?
இப்படி ஒரு கேள்வி அப்பவே எனது மனதில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
<இது 1993ஆண்டு வாக்கில் கோட்டார் சௌராஷ்ட்ரா - இஸ்லாமியர் மோதலில் நடந்தது.>
அய்யோ,எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய்ட்டேன் பாருங்க.! ஒரு முறை நாசி வலியென்று கோட்டார் DVD பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு காது,மூக்கு,தொண்டை நிபுணரிடம் நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றிருந்தார். மருத்துவர் மூக்கை பரிசோதித்து பார்த்து வலது மூக்கு எலும்பு வளைந்துள்ளது, உடனே அறுவை சிகிட்சை செய்வது நல்லது. என்று கூறி; தற்போது இதை சாப்பிடு என்று சில மாத்திரைகளை தந்து அனுப்பினார். பிறகு அடுத்த நாள் மீனா கிளினிக் டாக்டரிடம் நாசியை சோதித்ததில் வளைவு ஒன்றும் இல்லை,வெறும் சளிதான் அடைத்துள்ளது. என்று கூறினார்,நானும் நண்பரும் மீண்டும் அவரை பல சந்தேகங்களை கேட்க "அப்படினா, ஒரு எக்ஸ்ரே எடுத்துவா " என்று எழுதி தந்தார். பிறகு அதைப் பார்த்துவிட்டு,"நான் கூறியதைதான், எக்ஸ்ரேவும் கூறுகிறது. இங்கே பார் எவ்வளவு சளி உள்ளது பார். எலும்பு சரியாகத்தான் இருக்கு " என்று கடிந்து அனுப்பினார். அன்றுதான், சில மருத்துவர்கள் பணத்திற்காக தேவையில்லாத அறுவை சிகிட்சையை பரிந்துரைப்பார்கள் என்ற உண்மையை தெரிந்துகொண்டேன்.!

எனது 23 வது வயதில் நான் நுரையீரலில் சுருக்கம் மற்றும் இதயநோயால் பிடிக்கப்பட்டு  ஒருசில நாட்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தேன். அப்பொழுது நாகர்கோவிலிலேயோ உள்ள பெரிய மருத்துவமனைக்கு செல் என்று எனக்கு சிலர் வழிகாட்ட  நானும் போனேன்.அங்கு எல்லா பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர்கள். இனி யோகா,உடற்பயிற்சி,எடை தூக்குதல் கடின பணிகள் எதையும் செய்யக்கூடாது. அப்படி மீறிச்செய்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும், ஆறுமாதம் வரை நாங்கள் கொடுக்கும் மாத்திரை,மருந்துகளை சாப்பிடுங்கள்.அதில் முன்னேற்றம் இல்லாவிட்டால் இரண்டு அறுவை சிகிட்சை செய்ய வேண்டி வரலாம். என்று கூறி அனுப்பினர்.  இது எனக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்ததால் , எனது முதல் யோககுரு சூரியச்சித்தரின் வழிகாட்டுதலின் படி மாத்திரை,மருந்து அத்தனையையும் தூக்கி கடலில் வீசிவிட்டு யோகா,உடற்பயிற்சி,தற்காப்புகலை போன்றவற்றை அதிகமாக செய்தேன். இதன் பலனாக எனது நுரையீரல் சுவாசப்பிரட்சனை
ஒரு மாதத்திலேயே சீராகிவிட்டது.!
அதன் பிறகு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளும் பெற்றாயிற்று இப்ப மூத்தவன் நேச்சுரோபதி டாக்டருக்கும் இளையவன் கப்பல் இன்ஜினியரிங்கிற்கும் படித்து வருகிறான்.அதன்பிறகு ஒரு சுவாச குறைபாடும்
வரவில்லை.நான் சிறு வயதிலேயே யோகா,சித்தா வகுப்புகளுக்கு போயிருந்தாலும் யாரும் என்னிடம் இயற்கையைப் பற்றியே,மருத்துவ உண்மைகள் பற்றியோ எதுவும் கூறவில்லை. இதனால், யோகா செய்துகொண்டே கண்ட இரசாயண உணவுகளையும்  உண்டு வந்தேன். இதனால் அடிக்கடி தலைவலி,பல்வலி,காய்ச்சல்,காலரா,மலேரியா,டைபாய்டு போன்ற பல்வேறு நோய்களால் பிடிக்கப்பட்டு அவதிப்பட்டேன்.! சிக்கன் பிரியாணி,
புரோட்டா,கோக்,டீ,ஐஸ்கிரீம் போன்றவையே எனது முக்கிய உணவு. அதுவும் சென்னை போன்ற பெரு நகரில் வசித்ததால் பல பொழுதும் ஓட்டல் சாப்பாடுதான்.!
வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறை ஏதாவது ஒரு நோய்க்காக நாகர்கோவில் வந்து ஒரு மருத்துவமனையில் தங்கி,பத்துநாள் பதினைந்து நாள் என்று சிகிட்சை எடுத்துக் கொள்வேன்.அப்பொழுது எனக்காக எனது மனைவி,பிள்ளைகள் உறவினர்களும் வந்து மருத்துவமனை அறைகளில் தவம் கிடப்பார்கள்.! இப்படியே தான் நான் சென்னையில் பணிபுரிந்த பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டு கழிந்தது.
மீதி இரண்டு ஆண்டுகள் மற்றவர்களுக்கு ஆரோக்கியம் கற்பிக்கும் ஆசானாய் மாறிவிட்டேன்.   சென்னையில் நான் சில திரைப் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். ஆனால்,அங்கு எப்பொழுதும் வேலை இருக்காது. அதனால்,கேட்டரிங் வேலை,ஏர்டெல் கம்பெனியில் கலெக்சன் வேலை, தனியார் திரைப்படக்கல்லூரியில் லெக்சர் வேலை என்று பல தளங்களில் ஒரே நேரத்தில்
இயங்கி உடலை சல்லடையாய் வதைப்பேன். பகல் முழுவதும் பணி செய்த களைப்பிருந்தாலும் இரவில் தங்கும் அறைக்கு வந்து குளித்துவிட்டு மீண்டும் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பில் ஏதேனும் ஒரு திரைப்பட இணை இயக்குனர் நடத்தும் கதை விவாதத்திலும் கலந்து கொள்வேன்.குறிக்கோள் உள்ள மனிதன் அத்தனை பேருமே அக்னிகுஞ்சுகள் தான். அதுவும், சினிமாவை குறிக்கோளாய்  கொண்டவனை உழைப்பாலும் சரி,தவத்தாலும் சரி மற்ற எவராலும் மிஞ்சமுடியாது.! இப்படி உடலை சல்லடையாய் வதைத்துப் பிழிவதோடு,இரசாயண மருந்தின் கேட்டையும் தொடர்ந்து ஊட்டியதன் விளைவாக ஒருநாள் குளித்து கொண்டிருந்த போது இரண்டு கையளவு சளி வாந்தியாய் வந்து வாஷ்பேசனில் கரைந்து போனது. பயங்கர குமட்டலுடன் காலையில் குடித்த  பிஸ்கெட்டும் தேநீரும் கூட வெளியே வந்ததோடு, நான்கைந்து முறை பேதி வேறு போய் உடல் நடுங்க ஆரம்பித்தது. பிறகு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சில மாத்திரைகளை வாங்கிப்போட்டேன்.அதிலும் வாந்திபேதி சரியாகாமல் போக பயணச்சீட்டு இருந்தும் ஆரோக்கியம் இல்லாததால்,கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கழிவறை பக்கத்திலேயே  அமர்ந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தேன்.
இங்கு இறங்கும் போதே காய்ச்சல் உச்சத்தில் இருந்ததால் உடனே அருகில் உள்ள சுபம் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பத்து நாள் கிட்டத்தட்ட 120 இராசயண மாத்திரைகள் பத்துபாட்டில் குளூக்கோஸ்,எண்ணற்ற ஊசி மருந்துகள்.
உடல் ஒருவாறு தேறி,நாளை வீட்டுக்குப்போகலாம் என்றிருந்த ஒரு மாலை வேளை சென்னையில் இருக்கும் போது வந்தது போல் - ஒரு குமட்டல் அதோடு என்னாலேயே நிதானிக்க முடியாத அளவிற்கு நான்கைந்து முறை படுக்கை அருகே இருந்த ஒரு பாத்திரத்தில் வாந்தியெடுத்தேன் … அதில் ஒரு ஐந்து கையளவு இரத்தம்  கொட்டி,இதுவே உனது சரீரம். உனது  அந்திமகாலம் ஆரம்பித்துவிட்டது. என்றுகூறி என்னைப் பார்த்து சிகப்பு பல் காட்டியது. என் மனைவி கதறுகிறாள் … சில நர்சும் மருத்துவர்களும் ஓடி வந்தார்கள்,
மருத்துவர் உடனே ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, இனிமேல் பயமில்லை.என்று; வாயைத்திறப்பதற்குள் ,அடுத்தடுத்து நான்கைந்து முறை வாந்தியெடுத்து, படுக்கையையும் பக்கத்தில் நின்ற செவிலியரின் உடையையும் சிவப்பாக்கினேன்.
மருத்துவர் பதற்றமுடன் இவரை உடனே ஜெயசேகரன் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்று விடுங்கள். என்று என் மனைவியிடம் கூற, இந்த நேரத்தில் ஏன் இரத்தவாந்தி வருகிறது, என்று; யோசித்துக் கொண்டிருந்த என் சிறுமூளை அதற்கான விடையை கூறியது. அதாவது இரசாயண மருந்து வேண்டாம்,வேண்டாம் கொடுக்காதே. என்று,பலமுறை நமது கல்லீரல்  எச்சரித்தும் அதைக்கேளாமல் தொடர்ந்து அவற்றை கொடுத்து வந்ததால் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகமாகி, மண்ணீரல் வீங்கி உடலில் சேர்ந்துவிட்ட அத்தனை கழிவுகளையும் வெளியேற்ற உடல் முனைந்து செயல்படுகிறது. இதனாலேயே இரத்தவாந்தி வருகிறது. இப்படி ஒரு சிந்தனை எனக்குள் ஓட, நான்  மருத்துவரிடம் " அய்யா, எனக்கு ஏற்கனவே மாத்திரை அலர்ஜி உண்டு. இந்த மாத்திரைகளின் ஒவ்வாமையால் தான், இரத்தம் வருகிறதுனு நினைக்கிறேன். இதுவரை சாப்பிட்ட மாத்திரைகள் அத்தனையும் வயிற்றைப் புண்ணாக்கி இரத்தமாக வந்து விட்டது. இனி மாத்திரை கொடுக்காவிட்டால்,இரத்த வாந்தி வராது. அச்சப்பட ஒன்றுமில்லை. என்று;நான் கூறியதும் நிலமை சற்று சீரானதை உணர்ந்த, மருத்துவரும் இதை முதலிலேயே கூறி இருக்கலாம். என்றபடியே அங்கிருந்த மாத்திரை மருந்துகளை  எடுத்துவிட்டு மீண்டும் வெறும் குளுக்கோஸை மட்டும் ஏற்றிவிட்டு சென்றார்.!
பிறகு இரண்டு நாளில் குணம்பெற்று வீடு திரும்பிவிட்டேன்.! புத்தனுக்கு அரச மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல எனக்கு  மருத்துவ மனையில் ஞானம் கிடைத்தது. அன்றைக்கு என்னைவிட்டு ஓடிய இரசாயண அரக்கன், அதன் பிறகு என்னை தீண்டவே இல்லை,
இனி தீண்டப்போவதும் இல்லை.!
2008 ஆண்டு முதல் முழு இயற்கை விரும்பியாய் மாறிவிட்டேன். அசைவ உணவு,இரசாயண உணவு,பாட்டில் பானங்கள் மற்றும் இரசாயண மருந்து மாத்திரை போன்ற எல்லவற்றையும் விட்டுவிட்டேன். பல் தேய்க்க,குளிக்க,குடிக்க,குணப்படுத்த வேண்டிய அத்தனை இயற்கை மூலிகை தயாரிப்புகளையும் நானே தயாரித்து பயன்படுத்துகிறேன்.!2010 ஆண்டு முதல் யாம்பெற்ற இன்பம் அனைவரும் பெருக என்ற நோக்கில் யோகா & இயற்கை வாழ்வியல் முறைகளை பலருக்கும் கற்பித்து இயற்கையின் அற்புதத்தை பகிர்ந்து வருகிறோம்.!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழைநாளில் பாதாள சாக்கடைக்காக, தோண்டியிருந்த குழியில் இருசக்கர வாகனத்தோடு விழுந்து அடி பட்டதால், சிலமாதங்கள் கடுமையான வலியில் ஆசனங்கள் பண்ண முடியாமல் அவதிப்பட்டேன். அதன்பிறகு நாபியாசனம்,புஜங்காசனம்,சக்கரவாகாசனம் போன்றவற்றை செய்தும், நமது இயற்கை ஊட்டச்சத்து மாவை தினமும் சாப்பிட்டும் இரண்டு மாதத்திலேயே பூரணகுணம் பெற்றேன்.!

முதல் யோகா தினத்தன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக 32 நிமிடங்கள் சிரசாசன நிலையில் நின்று கொண்டே யோகா வகுப்பெடுத்து சாதனை புரிந்தேன்.!
அப்பொழுது கூட சில அலோபதி மருத்துவ நண்பர்கள், தலைகீழாக நின்று 40 நிமிடங்கள் பேசிக் கொண்டே இருந்தால் மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் வெடித்து விடும். ஆபத்திருக்கிறது.
என்று; எச்சரித்தனர்.  " நானோ நாள்ப்பட்ட பயிற்சியின் மூலம் செய்யும் எந்த முயற்சியும் ஆபத்தானது அல்ல. " என்று கூறி வெற்றிகரமாக அதை நிரூபித்துக் காட்டினேன்.!

ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு  அடி வயிற்றில் ஓரத்தில் ஒரு சிறிய புடைப்பு போல் இருந்தது. அதை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திப்பார்த்த போது அது குடலிறக்கம் என்றும் மேலும் பித்தப்பையில் கல்,கல்லீரலில் கொழுப்பு போன்ற மொத்தம் நான்கு வியாதி உள்ளது. இவற்றை எல்லாம் யோகாவாலோ இயற்கையாலோ குணப்படுத்தவே முடியாது. அதனால்,உடனே அறுவை செய்துவிடுங்கள்.இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார்கள்.! அதை நானும் பார்க்கிறேன், அறுவை சிகிட்சை செய்யமாட்டேன் என்று கூறவில்லை.எதற்கு முடியாத பட்சத்தில் இறுதி தீர்வாய் ஒருவேளை அதுவே இருக்கட்டும்.
ஆனால்,உயிருக்கு பயந்து வேண்டாத சிகிட்சைகளை மேற் கொள்வோரில் நானில்லை. என்பதை தெளிவாக கூறி வந்துவிட்டேன். இப்போது குடலிறக்கம் படிப்படியாய் சீராகி வருவதை என்னால் உணரமுடிகிறது. வழக்கமா மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் காய்ச்சல் மூன்று ஆண்டுகளுக்கு பின் முந்தாநாள் <26/08/17> வந்தது இன்றைக்கு முழுதாய் குணமாகிவிட்டது.!
ஆனா,இன்னும் சில நண்பர்கள் டெங்கானு செக் பண்ணுங்க  அப்டின்னு தகவல்கள் அனுப்புகிறார்கள்.!
டெங்கு போன்ற நோய்கள் எனக்கு இந்த ஜென்மத்தில் வராது.அப்படியே வந்தாலும் அதை இரண்டு நாளில் குணப்படுத்தும் வழி நமக்குத் தெரியும்.!
இதுவன்றோ, இயற்கையின் பேரருள்.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

*பகிரவேண்டாம்*

Monday, 28 August 2017

இயற்கை மருத்துவக்கோட்பாடு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

1.மருத்துவக் கோட்பாடும்
மருத்துவ மேதைகளும்

" ஆதியின் அருளே காப்பு
ஞானத்தின் பொருளே காப்பு சான்றோரின் வாழ்வும் காப்பு
வாழ்வோரின் வாழ்த்தும் காப்பு.! "

இயற்கை மருத்துவம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமூகத்தை மண்ணில் வாழ்வாங்கு
வாழச்செய்து வரும் அற்புதகலை.
சளி,காய்ச்சல்,கட்டி போன்றவை நோய்கள் அல்ல.அவை நோயை குணப்படுத்த உடலே செய்யும் மருத்துவம்.!
உணவே உன்னுடைய மருந்தாய் இருக்கட்டும் மருந்தே உன்னுடைய உணவாய் இருக்கட்டும்.!
கழிவுகளின் தேக்கமே நோய்
கழிவுகளின் நீக்கமே நல்வாழ்வு.!
உணவும், விரதமுமே மனிதனின்
வாழ்நாளை நீட்டுகின்றன.!
என்ற வாக்கியங்களை முதன் முதலாக பயன்படுத்திய கிரேக்க நாட்டின் ஹிப்போ கிரேடஸ் என்பவரே இயற்கை மருத்துவத்தின் முன்னோடி.! ஆஸ்திரியாவின் Dr.பெனடிக் பென்ஸ்.Dr.ஜோஹனஸ் ஸ்க்ராத். கிரேக்கத்தை சேர்ந்த Dr.பீச்சாம்ப் போன்ற பல அறிஞர்களின் பெயர்களும் இயற்கை மருத்துவ வரலாற்றில் பதிவாகி உள்ளது.
எனக்கென்னவோ நமது திருவள்ளுவர்
தான் இயற்கை மருத்துவக் கோட்பாட்டின்  "ஆதிபகவன் " என்று தோன்றுகிறது.அவர் "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப்படும். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு " போன்ற குறள்களில் நோய்க்கான முதல் காரணியையும், உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் என்ற குறளிலும், உற்றவன் தீர்ப்பான்  மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற்  கூற்றே மருந்து என்ற குறளிலும் மருத்துவம் எப்படி செய்ய வேண்டும்? மருத்துவம் எத்தனை பகுதிகளை கொண்டது என்பதையும் தெளிவாக கூறி உள்ளார்.!
இதில் சிறப்பு என்னவென்றால்,திருவள்ளுவர்; மருந்து என்று தலைப்பிட்ட அதிகாரத்தில் மருந்தைப் பற்றி எதுவும் கூறாமல், உணவைப்பற்றி மட்டுமே கூறிச் செல்வது நமது சிந்தனையை தூண்டுவதாய்  உள்ளது. <இந்தக் குறள்களின் பொருளை நான் சொல்லாமல் போவது கூட உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கு தான்.>இயற்கை மருத்துவம் என்பது விஞ்ஞானம் வளராத காலத்தில் வந்தது. இன்றைக்கு எப்படி வேலை செய்யும் என்று ஐய்யம் தோன்றுபவர்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்கிறேன் கேளுங்கள்.! உலக முழுவதும் தடுப்பூசிகளையும்,மருந்து மாத்திரைகளையும்,பரிசோதனை கருவிகளையும்  அனுப்பிவைக்கும் அமெரிக்கா.தமது சொந்த நலத்திற்கு பெரிதும் இயற்கை மருத்துவத்தைதான் பயன்படுத்தி வருகிறது.! அதோடு தமிழ்நாட்டில் Dr. பஸ்லூர் ரகுமான்.
அயல்நாட்டினரான Dr Jackson,Dr.Trall,Dr Kellogg  போன்ற பல அலோபதி மருத்துவர்கள், தாங்கள் வருந்தி கற்ற ஆங்கில மருத்துவ முறையை கைவிட்டு விட்டு இயற்கை மருத்துவ முறையில் வைத்தியம் செய்தனர்,இன்னும் செய்து வருகிறார்கள்.!
Dr.பஸ்லூர் ரகுமான் அவர்கள் மருத்துவம் படிக்கும் காலத்தில் தனது விரிவுரையாளரிடம்  " எல்லா நோய்களையும் இரசாயண மருந்துகள் தான் குணப்படுத்தும் என்றால், நோய் எதிர்ப்பு மண்டலம் என்ன செய்து
கொண்டிருக் கிறது?
"என்ற வினாவை எழுப்ப; "அதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம் " என்று கூறியுள்ளார் அந்த விரிவரையாளர்.!
அதானே, யோசித்தால் எப்படி மருத்துவம் செய்ய முடியும்?

இது போலவே  Dr பீச்சாம்ப் வாழ்வில் நடந்த  திடுக்கிடும் சம்பவம் நமது நெஞ்சை உலுக்குவதாய் உள்ளது.

அதாவது பீச்சாம்ப்  என்ற கிரேக்கத்து  இயற்கை மருத்துவரும்,லூயி பாயிஸ்டர் என்ற  ஆய்வக  ஊழியரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள்.
நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்.
அதனால் நோய்க் கிருமிகளை  அழிக்கின்ற ஆண்டிபயோடிக் மருந்தை ஊசி மூலமாக  உடலில் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடும். மனிதன் நோயிலிருந்து விடுபடலாம். என்பது லூயி பாயிஸ்டரின் தத்துவம்.!

ஆனால், பீச்சாம்ப்பின் கருத்து என்னவென்றால்  நோய் வருவதற்கு நோய்க்கிருமிகள் முதல் காரணமல்ல. உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நேய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. அதுவும் கிருமிகள் உருவாவதே  கழிவுகளை சுத்தப்படுத்தத்தான்.  அதனால் கிருமிகளை கொல்வதால் எந்தப் பலனும் இல்லை. அதோடு கிருமிகளை கொல்ல வைத்தியம் செய்வதால், மனிதன் இரண்டு விதத்தில்  பாதிக்கப்படுவான்.
ஒன்று அவன் உடலில் இயற்கையாக நடக்கும் சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. இரண்டு இப்பொழுது தரப்பட்ட ஆண்டிபயோடிக் குப்பைகளால்  இயற்கையான நோய் எதிர்ப்பு திறனும் குன்றி விடுகிறது. அதனால் நோயை நீக்க வேண்டுமானால் உடலில் தேங்கியுள்ள, ஜீரணமண்டலத்தில் தேங்கியுள்ள, இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலும் நீக்கிவிட்டால் போதும். எந்த நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்றார் பீச்சாம்ப்.

இது " ஓதுகின்ற மலக்கட்டை யொழித்து விட்டால் உடம்பிலுள்ள வாதையெலாம் ஒடுங்கிப் போகும் தாதுற்ற சிறுநீரை தெளியவைத்தால்  சடலத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து
போகும் கோதுற்ற உமிழ் நீரை முறியவைத்தால் கூட்டிலுள்ள பகையெலாம் குலைந்து போகும் கோதடர்ந்த இவை மூன்றும் களங்கமற்றால் கொல்ல வரும் காலனையும் வெல்லலாமே "

என்ற,அகத்தியரின் கூற்றை மெய்ப்பிப்பதாய் இருந்தாலும். பீச்சாம்ப்  பல புதுமைகளை  செய்தார்.அதாவது, சித்தர்கள்
தங்கள் உள்ளுணர்வையும் நோயாளிகளையும் அடிப்படையாக வைத்தே பல நோய்களுக்கு பரிகாரம் கண்டறிந்தனர். ஆங்கில மருத்துவர்களோ எலியையும், குரங்கையும், இன்னும் பல உயிரினங்களையும் இறந்த மனிதனின் உடலையும் வைத்து ஆராய்ந்தே, இன்றும் பரிகாரம் காண்கிறார்கள் … ஆனால்,பீச்சாம்ப்போ தன் உடலையே தனது ஆராய்ச்சிக்களமாக பயன்படுத்தினார்.! எனெனில் இயற்கை உணவு நோயாளிக்கு மருந்து மற்றவர்களுக்கு அதுவே விருந்தாய் அமையும்.  என்பதே அவரின் கண்டுப்பிடிப்பாய் இருந்தது.!
பழ உணவுகளில் வாழ்ந்து வந்த பீச்சாம்ப்   " கிருமிகளே நோய்களை உருவாக்குகின்றன " என்ற ஆங்கில மருத்துவ மேதைகளை சவாலுக்கு அழைத்தார்.!  அவர்களின் முன்னிலையில் நோய்க்கிருமிகளை குடித்து காண்பித்தார். ஊசியின் மூலம் தன் உடலில் நோய்க்கிருமிகளை செலுத்தச் சொன்னார். ஆனாலும், அவருக்கு எந்தநோயும் வரவில்லை.  அன்றே, கழிவுகளின் தேக்கமில்லாத  தூய்மையான
உடலில் எந்த நோய்க்கிருமிகள் செலுத்தப்பட்டாலும் கிருமிகளே அழியும். தூய உடலுக்கு அழிவில்லை.! என்று நிரூபித்தார் இயற்கை மேதை பீச்சாம்ப்.

இது மட்டுமின்றி ஒரு முறை தன் கையையே கீறி எந்த மருந்தும் போடாமலே குணப்படுத்தினார்! பிறகு மற்றொரு முறை அசைவ உணவுகளையும் ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தி  கொண்டே … கைகளை  கீறி சோதனை செய்தார். அப்பொழுது புண் சீழ்ப்பிடித்து துர் நாற்றம் வீசியது. பிறகு இயற்கைக்கு திரும்பி கையை குணப்படுத்திக் காட்டினார்.!

இதைப்பார்த்த மக்கள் அவரை பின்பற்றி நோய்களிலிருந்து குணமடைந்தார்கள். 
இதனால் லூயிபாயிஸ்டர் போன்ற ஆங்கில மருத்துவ துறையினரும் மருந்து விற்பனையாளர்களும் சேர்ந்து அந்த இயற்கை மாமேதையை மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றார்கள்.!
<சிலர் அவர் காணாமல் போய்விட்டார் கொல்லவில்லை என்கிறார்கள்>
எப்படி இருந்தாலும், அந்த இயற்கை மேதை மறைந்தாலும் அவரின் தத்துவம் வென்றுவிட்டது …! இந்தியாவின் மகாத்மா காந்தியைப் போலவே உலகெங்கிலும் கோடிக்கான மக்கள் பீச்சாம்பை  பின்பற்றினார்கள்.! இன்றும்  பின்பற்றி வருகிறார்கள்.!
உடலில் நோயென்று எதுவுமில்லை.!
கழிவின் தேக்கமே நோயாக காட்சியளிக்கிறது.!
தன் உடலை சுத்திகரிக்கத் தெரிந்தவனுக்கு  எந்த வெளிநாட்டு குப்பையும் தேவையே இல்லை.!
இதுவே இயற்கை கோட்பாடு.!

அடிப்படை உடலியக்க  செயல்பாடுகள் …

செல்கள்:
        செல்கள் என்பவை உடலின் அடிப்படை செயல்பாட்டு அலகுகள் (Structural and functional unit) ஆகும். அதாவது உடல் என்பது கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பு எனப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு செல்களின் செயல்பாடு மிகவும் இன்றியமையாதது. அவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது புற்று நோய்(CANCER) வைரஸ் தொற்று போன்ற பல்வேறு அபாயகரத்தை உண்டாக்கும்.
மைக்ரோஸ்கோப் மூலமாக உடலில்  உள்ள தலைமுடிமுதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்பைப்பார்த்தாலும் வெறும் செல்கள் மட்டுமே தெரியும். பலகோடிக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்தால் அதை திசுக்கள் என்று கூறுவார்கள். பல ஆயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்தால்  அது ஒரு உறுப்பாகும்.
உறுப்புகள் ஒன்று சேர்ந்தால் மண்டலம் எனப்படும்.இரத்த ஓட்ட மண்டலம்,ஜீரண மண்டலம்,நரம்பு மண்டலம்,எலும்பு மண்டலம்,நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவைகள் உறுப்புகளின் தொகுப்பு.இந்த மண்டலங்கள் ஒன்று சேர்ந்தால் மனித உடம்பு.எனவே, மனித உடலில் பல்வேறு விதமாக தோன்றுவது அத்தனையும் வெறும் செல்கள் மட்டுமே. ஒரு செல்லை கால்பந்து போல போல கற்பனை செய்தால் கால் பந்தின் மேல் தோல் -மெம்பரைன் என்ற ஜவ்வு படலம்.உள்ளே சைட்டோபிளாசம்,புரோட்டோபிளாசம் இருக்கும்.அனைத்து செல்களுக்குள்ளும் நியூக்ளியஸ் என்
ற உட்கரு இருக்கும்.அதுபோலவே அனைத்து செல்களுக்குள்ளும் DNA,ஜீன்ஸ் எனப்படும் RNA ஆகியவை இருக்கும்.
இந்த அடிப்படை உண்மையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உறுப்புகள் தனித்தனியாக இருப்பது போல் செல்கள் தனித்தனியாக இல்லை. உருண்டை வடிவ செல்,தட்டை வடிவ செல் அமீபா என்று  செல்களை பலப் பெயர்களை வைத்து அழைத்தாலும் அனைத்தின் உள்கட்டமைப்பும் ஒன்று தான்.ஒரு ஆணின் விந்தும் பெண்ணின் கரு முட்டையும்  செல்களாய் தான் முதலில் தோன்றுகின்றன  பிறகு அதற்கு கிடைக்கும் ஊட்டம்,பாதுகாப்பு,தகுந்த சூழல்  இவற்றின் மூலமே ஒவ்வெரு உறுப்பாக மாறி பின் குழந்தையாக பிறக்கிறது.குழந்தை பிறப்பதற்கான வேலை ஆரம்பித்தது முதல் நிறைவடைவது வரை. விந்தணு,கருமுட்டையோடு பல்வேறு புதிய செல்கள்  உற்பத்தியாகி, தேய்ந்து, மறைந்து, வெளியேறி என்று தொடர்ந்து தனது பணியை செவ்வன செய்து வருகிறது.
ஒரு செல் வளர்ந்து தன் பணியை சிறப்பாக செய்ய அதற்கு முதல் தேவையாக சக்கரையும் அடுத்ததாக காற்றும் வேண்டும். இந்த சக்கரையையும் காற்றையும்  நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு கிடைக்கும் பொருளிலிருந்து செல் சேகரித்து கொண்டு தனக்குள் உருவாகும் மைட்டோ காண்டீரியா என்ற அடுப்பில் வைக்கிறது. அங்கு சக்கரை என்ற  விறகோடு காற்றும் சேர்ந்து எரியும்போது, செல்லுக்குள் தீ உருவாகிறது.இந்தத் தீயினால் வெப்ப ஆற்றல் உருவாகிறது.அதுவே இயக்க ஆற்றலாக மாறுகிறது.இந்த இயக்க ஆற்றலுக்கு பெயர்தான் பிராணசக்தி அல்லது உயிராற்றல்.
செல்லுக்கு தூய உணவும் தேவை, அதை உடல் கிரகித்துக்கொள்ள பிராண ஆற்றலும் தேவை. நமது உணவு,சுற்றுபுறம்,உடலியக்கம் போன்றவை சரியாக இல்லாத போது இரத்தம் கெட்டுப்போவதோடு, இரத்தத்திலிருந்து  தனது உணவை எடுத்துக்கொள்ளும் செல்களும் நோயுறுகின்றன. நோயுற்ற செல்கள் உடலில் கழிவு பொருள்களோடு சேர்ந்து அழுக்கு விதைகளாகப் <பாக்டீரியா > பெருகி ஒன்றை, ஒன்றுக்கொன்று வளர்ந்து, இறுதியில் கழிவு காலியானதும் அவையும் மடிந்து விடும்.! உடலில் புதிய கழிவுகள் சேர்வதற்கான வழியை அடைத்து விட்டு,பழைய கழிவுகளையும் முற்றிலும் வெளியேற்றிவிட்டால் செல்கள் முழுவதும் ஆரோக்கியமாகி விடும்.
இதனால்,ஒருவருக்கு உடலில் எங்கு எந்த ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் முதலில் உணவையும் இரண்டாவது வெப்பசக்தியை உற்பத்தி செய்யும் உடலியக்கத்தையும் நாம் சீர் செய்ய வேண்டும்.என்ற உண்மையை  புரிந்து கொள்ளலாம்.!

இரத்தம்:
   இது உடலின் இணைப்புத்திசு(Connecting tissue) ஆக செயல்படுகிறது.
உடலின் ஒட்டுமொத்த செல்களுக்கும் ஊட்டத்தை(Nutrition) அளித்து வளர்ச்சிதை மாற்றத்தை(metabolism) ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளையணுக்கள் ஆக்சிஜன் பரிமாற்றத்திற்க்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும் இன்றியமையாதவை. Platelets எனப்படும் செல்களானது தேவையற்ற பொருட்களை ரத்தத்திலிருந்து செயலிழக்க செய்கிறது.
இரத்த உற்பத்தி நமது உடலில் உள்ள எலும்பு மஞ்ஜையில் உருவாகிறது.
நாம் உண்ணும் உணவிலிருந்தே இரத்தத்தில் காணப்படும்  அத்தனை மூலக்கூறுகளும் ,விட்டமின்களும் உருவாகின்றன.ஆனால்,உணவால் இரத்த உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. உடலுழைப்பு மற்றும் சீரான உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகும். இரத்தத்தில் வெள்ளையணுக்கள் குறைந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் பாதிக்கப்படும்.சிவப்பணுக்கள் குறைந்தால் சோர்வு, தலைவலி, போன்றவை ஏற்படும்.தட்டையணுக்கள் <பிளேட்லெட்> குறைந்தால் ஈரில் இரத்தம் வருதல் பல் பொடிதல் போன்றவை ஏற்படும்.
ஆரோக்கியமான செல்கள்,இரத்தத்தின் ஊட்டம், உடலுழைப்பு இவையே மனித ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கின்றன. மனித குடலில் விட்டமின் K என்ற ஒரு திரவம் உற்பத்தி ஆகி இரத்தத்தில் கலக்கிறது. இதுவே இரத்தக் காயம் ஏற்படும் காலத்தில் இரத்தம் வடிவது சில நிமிடங்களில் நிற்கவும், ஒழுங்காக ஜீரண இயக்கம் நடைபெறவும் உதவுகிறது. விட்டமின் கேயை உணவின் மூலம் நேரடியாகப் பெற முடியாது.காலிபிளவர்,சோயாபீன்ஸ்,உலர்ந்த துளசி இலை போன்றவை குறிப்பிட்ட நேரம் வரை, பெருங்குடலில் தங்கி  இருந்து புளித்தால் மட்டுமே  விட்டமின் K உருவாகும். இரசாயண மருந்து மற்றும்  இரசாயண உணவு முறை போன்றவற்றை பயன்படுத்தும்  போது விட்டமின் கேயை குடலால் உற்பத்தி செய்ய முடியாமல் போய் விடுவதோடு இதன் தன்மையும் மாறி பல ஆபத்துகளை உண்டாக்கும். இரத்தத்தில்  கழிவுப்பொருட்கள்(Toxins) அதிகமாக சேரும்போது அவை செல்களையும், இரத்தக் குழாய்களையும்,
உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது.!

இதயம்:
       இது அனைத்து உடல் உறுப்புகளுக்கும் நல்ல இரத்தத்தை(Oxigenated blood) அனுப்பி கெட்ட இரத்தத்தை(Deoxygenated blood) திரும்பப்பெறும் உறுப்பாக செயல்படுகிறது. இவற்றின் ரத்தநாளங்களை கொழுப்புகள்(fat) அடைப்பதால் இதய நோய்கள் உண்டாகிறது.

நுரையீரல்:
          இது சவாச உறுப்பாகும். சவாசத்தின் மூலமாக ஆக்சிஜனை ரத்தத்திற்கு அளிக்கிறது. அதிகப்படியான சளி மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகிறது.

சிறுநீரகம்:
        ரத்தத்திலுள்ள தேவையில்லாத பொருட்களை சிறுநீராக வெளியேற்றும் பணியை செய்கிறது. அதிகமாக மது அருந்துதல்,அடிக்கடி இரசாயண மருந்துகளை எடுத்துக்கொள்வது மற்றும் தவறான உணவுப்பொருட்களால் அதன் நாளங்கள் பாதிக்கப்பட்டால் சிறுநீரக செயலிழப்பில் முடியும்.

கல்லீரல்:
       வளர்ச்சிதை மாற்ற உறுப்பாக செயல்படுகிறது. பித்தத்தை சுரந்து சீரணத்திற்கு உதவுகிறது. அவற்றின் செல்கள் பாதிக்கப்படும் போது அதிகப்படியான பித்தம் ரத்தத்தில் நேரடியாக கலந்து மஞ்சள் காமாலையை (Joundice) உண்டாக்குகிறது.

மண்ணீரல்:
      இது நிணநீர் உறுப்பு ஆகும். ரத்த வெள்ளையணுக்களை உண்டாக்கி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்:
        இது மண்ணீரல், தைமஸ், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை T and B lymphocytes எனும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்து உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை அழிக்கிறது. மேற்கூறிய உறுப்புகள் பாதிக்கப்படும்போது நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு செயல்பாடானது செல் விழுங்குதல்(Phagocytosis-Engulfing) மற்றும் எதிர் பொருட்கள்(Anti body production) உற்பத்தி போன்றவற்றால் நோய் காரணிகளை(antigen) அழிக்கிறது. ஒவ்வொரு நோய் காரணிகளையும் அழிப்பதற்கு தனிப்பட்ட எதிர் பொருட்களை(anti body) உற்பத்தி செய்யும். இந்த நோயெதிர்ப்பு சக்தியானது இயற்கையாகவே உடலில் இருக்கும். தடுப்பூசிகளால் இந்த இயற்கை நோயெதிர்ப்பு சக்தியானது(Innate immunity) பாதிக்கப்படுகிறது.இதனால் தான்  இயற்கை  மருத்துவ முறையில், தடுப்பூசிகளை போட வேண்டாம்.
என்று எச்சரிக்கிறார்கள்.!
இன்னும் உடலில் எலும்பு மண்டலம்,நரம்பு மண்டலம்,ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம்,செல்களின் செயல்பாடு,நாளமில்லா சுரபிகளின் இயக்கம் போன்ற பல நுட்பங்கள் உள்ளது. இவற்றை பற்றிய ஞானத்தை விளக்கும் புத்தகங்கள்  ஒவ்வென்றும் 10 கிலோ வரை எடை  இருக்கும். இவற்றை முழுவதும் படிப்பதற்குள் உடலின் இயற்கை  இயங்கு ஆற்றல் முழுவதும் பாதிப்படையும். இதனால் தான் பல மருத்துவர்களும், மருத்துவக்கல்லூரி மாணவர்களும் நோயாளிகளாக  காட்சியளிக்கிறார்கள். அதோடு, அவர்கள் உடலின் அடிப்படை இயங்கு திறனை மறந்து அந்தந்த உறுப்பில் ஏற்படும் குறைபாட்டை சீராக்க  அந்தந்த பகுதியில் ஆராய்ச்சி செய்வதும் டிரக் எனக்கூறப்படும் போதைப் பொருளை மாத்திரை, மருந்துகளாக நோயாளிக்கு வழங்குவதை, வாடிக்கையாக வைத்துள்ளதற்கும் இந்த மித மிஞ்ஞிய  ஆய்வுகளே காரணம்.! ஆராய்ச்சியைப் பெருக்கி நோயையும் பெருக்கி உள்ளதே இவர்களின் சாதனை.  மருத்துவர்கள் உடலின் அடிப்படையை மறந்து மருத்துவம் செய்வதற்கு முக்கியக்காரணம் என்னவெனில், மருத்துவம் என்பது பல்லாயிரம் கோடிகள் புளங்கும் தொழிலாகி விட்டது தான். அப்படியானால்,இதுவரை செய்த அத்தனை மருத்துவ ஆராய்ச்சிகளும் வீணா என்று, நீங்கள் கேட்டால் இல்லை. இந்த மருத்துவ ஆராய்ச்சிகள் தான் … மருத்துவ உபகாரணங்களையும், மருந்து,மாத்திரைகளையும், மருத்துவத்தையும்,மருத்துவக்கல்வியையும்  வைத்து உலகத்தையே சிலர் தனது அடிமையாக வைக்க உதவியுள்ளது. உலகை ஆள்பவை இரண்டு ஒன்று மதம்,மற்றொன்று மருத்துவம். உயிர் போனபின்பு நன்றாக வாழவேண்டும் என்பதற்காக மனிதன் மதத்தையும்,உயிரே போகாமல் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக மருத்துவத்தையும் மனிதர்கள் நம்புகிறார்கள்.!
ஆனால்,மதத்தை கல்லூரி வைத்து கற்றுக்கொடுக்கிறேன் என்றால், யாரும் வரமாட்டார்கள். அதுவே மருத்துவத்தை கற்பிக்கிறேன் என்றால் கோடிகள் குவிகிறது.கல்லூரி நன்கொடை,புத்தகம்,கருவிகள்,மருந்துகள் என்று உலகில் இன்று  மருத்துவம் முதன்மையான வியாபாரமாய் விளங்குவதற்கு இந்த மருத்துவ ஆராய்ச்சிகளே அடிப்படைக் காரணம்.! மற்றபடி மிதமிஞ்சிய மருத்துவ ஆராய்ச்சியாலோ, மருத்துவ அறிவாலோ  இதுவரை உலகில்  உள்ள எந்த வியாதிகளையும் அழிக்கவே  முடியவில்லை.
ஒரிஜினல் இயற்கை மருத்துவக் கோட்பாட்டின் படி, ஒவ்வெரு உறுப்புக்கும் தனித்தனி வைத்தியம் கிடையாது. இரத்த சுத்திகரிப்பு,கழிவு நீக்கம், உடலியல் பயிற்சி,தூய உணவு,தேவையான ஓய்வு,இவற்றின் மூலம் சக்கரை, மூட்டுவலி,முதுகுவலி,கழுத்துவலி,கல்,கட்டி, இரத்த அழுத்தம்,தைராய்டு,உடல்பருமன்,ஆரம்பநிலை புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு,பக்கவாதம்,மனஅழுத்தம்,பார்வைக்குறைபாடு,மனநோய்,நரம்பு முடிச்சு, கர்பபைக்கோளாறு,மாரடைப்பு,கொழுப்படைப்பு,மஞ்சள்காமாளை,வைரஸ்நோய்கள் போன்ற எத்தகைய ஆரோக்கியக் குறை பாடுகளையும் குணப்படுத்தலாம்.!
மேலே எதற்காக, "ஒரிஜினல் இயற்கை மருத்துவக் கோட்பாட்டில் என்று கூறி உள்ளேன் என்றால்,அதிக ஆராய்ச்சி மருத்துவத்துறை, தற்போது இந்தியாவில் இயற்கை, சித்தா, ஆயூர்வேதா,ஹோமியோ,யுனானி போன்ற அத்தனை மருத்துவ முறையிலும்  மிதமிஞ்சிய ஆராய்ச்சி முறைகளை திட்டமிட்டு புகுத்திவிட்டனர்.!
இனி இந்த மருத்துவ முறைகளும் பணம் குவிக்கும் இன்னொரு மருத்துவ வியாபாரமாய் பெருகி,நோய்களையும் பெருக்குமே தவிர சாதாரண தலைவலியை கூட முழுதாக குணப்படுத்தாது.!
அதனால்,அடிப்படையை தெரிந்து மருத்துவம் செய்வது மட்டுமே " உண்மை இயற்கை மருத்துவம் " ஆராய்ச்சி அறிவையும், கொஞ்சம் மயக்க மருந்தையும் சேர்த்துக் கொண்டோம் என்பதெல்லாம் போலியானது.!

வணக்கம் நட்பாளர்களே.! இந்தப்பகுதியில் உண்மையான இயற்கை மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படையை தேவையான அளவு தெரிந்துகொண்டோம்.!
அடுத்தடுத்தப் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளையும், மருத்துவ மோசடிகளையும் பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம் …

-ஏகப்பிரியன் DYT

தொடரும்  …

aumyogatrust.blogspot.in

*பகிரவேண்டாம்*

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...