I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உயிரை வதைக்கும் அரசியல்

Friday, 18 August 2017

உயிரை வதைக்கும் அரசியல்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

43.ஆசையே துன்பத்திற்கு காரணம்

" ஆசையென்னும் நூல் பிடித்து அரசியலின் வால்பிடித்து
உச்சிதொட கனவு கண்டோம்
நனவில் நட்டாற்றில்
விழுந்துவிட்டோம்.! "

என்றைக்கு  விஞ்ஞானம், வளர்ச்சி என்று பேச ஆரம்பித்தார்களோ,
அன்றைக்குப் பிடித்ததுதான் நமது தேசத்திற்கு ஏழரை நாட்டுச்சனி.!
மெத்தப்படித்த மேதாவிகள் மட்டுமல்ல, எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த பாமரன் கூட விஞ்ஞானமும் வளர்ச்சியும் தேசத்தின் இரண்டு கண்கள் என்று பல நேரங்களில் மெய்சிலிர்த்து பேசினார்கள்.!
சரி மக்கள் தான் இப்படி.!
நம்மை ஆள்கின்ற
அரசு எப்படி இருந்தது, சமூகத்தின் மூன்றாவது கண்ணான ஊடகங்கள் எப்படி இருந்தது; என்று கூர்ந்துப் பார்த்தால் நமக்கு ஒரு உண்மை தெரியவரும்.! அது என்னவென்றால், மக்களின் மனநிலையை இப்படி மாற்றுவதற்காகவே அரசு தனது கைக்கூலியாக  ஊடகங்களையும், திரைப்பட, விளையாட்டு, ஆன்மீக  பிரபலங்களையும்  விஞ்ஞானம், வளர்ச்சி என்று பேச வைத்து தங்களை நம்பும் மக்களை மோசடி செய்து விட்டார்கள்; என்பது கண்கூடாகத் தெரியும்.!
அரசியல் வாதிகள் இப்படி நாட்டின் வளர்ச்சி,விஞ்ஞான வளர்ச்சி, எதிலும் தனியார் மயம் போன்ற கொள்கைகளை வகுப்பதற்கு முக்கியக் காரணம்.! உலக அரசியல் வாதிகளான இங்கிலாந்து, அமெரிக்கா,இரஷ்யா,சைனா போன்ற நாடுகளோடு இவர்கள் போட்ட ஒப்பந்தங்கள். இப்படிப்பட்ட ஒப்பந்தங்களில் இந்திய அரசியல் வாதிகள் கையொப்பம் இட பிரதான காரணம், வளர்ந்த நாடுகள் ஊடகங்களின் மூலமும் இடைத் தரகர்களின் மூலமும் செய்த பிரச்சாரம்.!
இந்திய அரசியல் வாதிகள் விலை போனதற்கு, இன்னொரு முக்கியக் காரணம் என்னவென்றால்  இந்திரா முதல் மோடி வரை அனைவருமே நமது நாட்டின்  வளத்தை கொண்டு, ஞானத்தை கொண்டு நாம் நிறைவாக வாழவே முடியாது, வெளிநாட்டினரின்   கடனும்,கருணையும், அறிவும், முதலீடும் இல்லையென்றால் நாம் வெறும் ஜடம் மட்டுமே என்று, இன்றுவரை நம்மை ஆளும்  அரசியல் தலைவர்கள் நம்புகிறார்கள்.!
நரசிம்மராவ் ஆட்சியில் தனது சுயரூபத்தை காட்டிய பன்னாட்டு சக்திகள், மன்மோகன் ஆட்சியில் நமது சுயசார்பை முற்றிலும் தகர்த்து, இன்று மோடி ஆட்சியில் தனது விஸ்வரூபத்தை எடுத்துள்ளனர்.!
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.!
இனி அப்படி ஒரு போராட்டத்தை
அரசியல்வாதிகள் நடத்தவே விடமாட்டார்கள்.!
இதற்கு முன்பே அய்யா நம்மாழ்வார் அவர்கள் முன்னெடுத்த இரசாயண, மரபணுமாற்ற விவசாய எதிர்ப்பு, விவசாய சங்கத்தினர் முன்னெடுத்த மீத்தேன் எதிர்ப்பு, அய்யா உதயகுமாரால் முன்னெடுக்கப்பட்ட அணு உலை எதிர்ப்பு போன்றவை மக்களிடம்
சரியான விழிப்புணர்வை தரவில்லை.!
இன்னும் நதிநீர் மாசுபடுத்தல்,கனிமவளங்களை சுரண்டுதல், மருத்துவக் கொள்ளை, தனியார் கல்விக் கொள்ளை, இரசாயண மருத்துவ எதிர்ப்பு, கச்சத்தீவு மீட்பு, டாஸ்மாக் எதிர்ப்பு போன்ற பல்வேறு எதிர்ப்புகள்  முனை முறிந்து தொங்கிக் கொண்டுள்ளது.!
இதற்கெல்லாம் முக்கிய சூத்திர தாரியாய்  விளங்குவது அரசிற்கும் அதிகாரத்திற்கும்  ஊழலும்,லஞ்சமும்.!
நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு ஆசையும்,  நானும்  என்னைச் சார்ந்தவர்களும் என்றும் சுகமாக வாழவேண்டும் என்ற சுயநலமும் தான்.! ஆனால்,அதற்கு மனிதன்  மேற்கூறிய  இவ்வளவு அழிச்சாட்டியங்களையும் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.!
கறுப்புப்பணத்தை மீட்டு ஒவ்வெருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடுவோம். என்ற ஆசை மொழியில் விழுந்த தேசமக்கள் இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் GST வரை தனது சொந்த சேமிப்பை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.!
ஆள்வோர் செய்யும் அட்டகாசங்களுக்கு,அடுத்த தேர்தலிலாவது பதில் சொல்லலாம்.! என்றால் … தொடர்ந்து ஓட்டு இயந்திரத்திலும் மோசடி செய்யும்  தகவல்கள் வெந்தப் புண்ணில் வேலாய் பாய்கிறது.!
சிந்தித்து பார்க்கும் வேளையில்,ஏதோ ஒன்றை சாதிப்பதற்காக நாம்,  அடித்துப்பிடித்து, ஓடி ,அலைந்தது அத்தனையும் வீண்.!  சொர்க்கம் நமது காலடியிலேயே புதைந்திருந்திருக்கிறது.! என்ற உண்மை புரிகிறது.!
"உன் வீட்டு வாசலில் இரண்டு மாமரங்களை வைத்துக்கொள், இரண்டு வாழை மரங்களை வைத்துக்கொள்,சில கொய்யா மரங்களையும், இரண்டு தென்னை மரங்களையும் வைத்துக்கொள். முடிந்தால் சில பப்பாளி மரங்களையும் வைத்துக் கொள்; இப்படி செய்தால் உனது குடும்பத்தினரின் உணவிற்கு பஞ்சமே வராது. " என்கிறார்; நம்மாழ்வார் அய்யா.!
இந்த உணவைப் பெறவா மண்ணிற்கு விசம் வைக்கிறோம்?
"வாதம்,பித்தம்,கபம் இந்த மூன்றையும் ஒழித்து கழிவில்லாமல் உடலை பாராமரிக்கத் தெரிந்தால்  கொல்ல வரும் காலனும் உன்னைப் பார்த்து  ஓடிவிடுவான் என்கிறார் அகத்தியமுனி"  இந்த மருத்துவத்தைப் பெறவா  உடலுக்கு விசம் வைக்கிறோம்?
திடீர் மாரடைப்பு, இரத்தஅழுத்தம், சக்கரை,டெங்கு, சிறுநீரகச் செயலிழப்பு, சிக்கன்குன்யா என்று பலப்பல வியாதிகளுக்கு பயந்து பயந்து சாகிறோம்?
"வன்தமிழையும் வள்ளுவனையும்  நான், படித்து அறிந்ததைவிட
எனது பட்டப்படிப்பில்  வெறொன்றையும் நான் பெரிதாக அறிந்துகொள்ளவில்லை.! என்றார்  பேரறிஞர் அண்ணா " இந்தக் கல்வியைப் பெறவா,நமது மொழி ஞானத்திற்கு விசம் வைக்கிறோம்?
"வாழ்நாளில் பாதிநாள் தானே நூற்றுத் தானே உடுத்தி அகிம்சை வழியில்
அன்னை நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் மகாத்மா காந்தி." அவர் கட்டிய கதரை விட உயர்ந்த உடையை உற்பத்தி செய்யவா நதிநீருக்கு விசம் வைக்கிறோம்?
" குட்டியாடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்கு சொந்தம் குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம் தட்டுகெட்ட மனிதன் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படிப் பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
என்றாரே <பா>பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் " இந்த எட்டடியை பெறுவதற்காகவா  உலக மயமாக்கல்
கும்பலுக்கு கோசம் போட்டு தேசத்திற்கே தீவைத்தோம்.!
விஞ்ஞானத்தை மறுத்துக் கொண்டு இன்னும் மாட்டுவண்டியிலா பயணிப்பது?
விஞ்ஞான மருத்துவம் செய்யாமல் இன்னும் பிரசவத்தில் உயிரைவிட முடியுமா?
இன்னும் ஆடை அணியாமல்,
முடியை வெட்டாமல் என்று சில அறிவாளிகள் கேட்க கூடும்.!  நான் கூறுகிறேன், கால் வண்டியில் போனாலே அவரவர் தேவை கிடைத்துவிடும் என்றால், நமக்கு  மாட்டுவண்டியே வீண் ஆடம்பரம் தான்.!
பிள்ளைப் பேறின் போது மரணமடைந்தவர் களை விட ,பத்துப் பிள்ளைகளை கூடப் பெற்று ஆரோக்கியமாக வளர்த்தவர்கள் பலர் அன்றிருந்தனர்.! அதற்கு சான்றுதான் இன்றைய மக்கள் தொகை பெருக்கம்.! ஆனால், இன்று ஒன்றைப் பிள்ளைக்கே வக்கில்லாமல்  தற்கொலை செய்பவர்கள், மழலையில்லாதவர்கள் பெருகி வருவதோடு ,
உலகிலேயே செயற்கை முறையில்
குழந்தைப்  பெறுபவர்கள் அதிகம் உள்ள நாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.!
இத்தகைய விஞ்ஞான வளர்ச்சி எதிர்கால சந்ததியினரின் புதைகுழி இல்லையா?
ஆடையை கட்டி உடலை அவிழ்த்துவிடும்  வக்கிரமும், முடியை  நெட்டக் குத்த நீட்டிவிடும் கோமாளித்தனமும்
இன்று இந்தியாவில் பெருகி வருகிறது.!
இந்தியர்களுக்கு நாங்கள் தான் நாகரீகத்தை கற்றுக் கொடுத்தோம் என்று கூறுகிறார்கள் …சில வெளிநாட்டு அடிமைகள்.! கோட்,பூட்ஸ், பற்பசை,சோப்பு, இரசாயண மருந்து, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவக் காப்பீடு திட்டம், கல்விமுறை, பூச்சிக்கொல்லி,தேயிலை,  சிகரெட் குளிர்பானம்,  ஊட்டச்சத்துப் பானம், வாசனை திரவியம் போன்ற  எதையும்  அவர்கள் சும்மா நாகரீகத்தைப் பெருக்கவோ அல்லது மக்களுக்கு   நன்மை செய்யவோ கண்டறிய வில்லை.! இவற்றை உலகெலாம் விதைத்து தங்கள் ஆளுமையையும் வியாபாரத்தையும்  நிலைநிறுத்தவே கண்டறிந்தனர்.!
ஆனால்,பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே …
கல்வி,உணவு,மருத்துவம், வானியல்,ஆட்சிமுறை என்று எல்லாவற்றிலும் தமிழர்களுக்கென்று  நீண்டநெடிய வரலாறு உண்டு.! அந்த வரலாற்றை சிதைத்து
இன்று நம்மை சுயசார்பற்ற பிண்டமாக மாற்றுவதில் பெருமளவு பன்னாட்டு சக்திகள் வெற்றிப் பெற்றுள்ளன  என்பது உண்மை.! இன்னும் மொழியும், சடங்கும், மூலிகைகளும் ,  உணவில் ஒரு பகுதியும் மட்டுமே முழுவதும் அழியாமல் போராடி வருகிறது.! இப்பொழுதும்  எஞ்சியதை அழிக்க பன்னாட்டு எமன்
வளர்ச்சி,பாதுகாப்பு, விஞ்ஞானம், மருத்துவம், என்று  பல்வேறு போர்வையில் வந்து கொண்டே இருக்கிறது.!
இதை முறியடிப்பது நமது கடமை.!
இன்று விஞ்ஞான மருத்துவம் என்று கூறப்படும், அலோபதி வைத்தியத்தில் டைப் 1 வகை சக்கரை கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் போட வேண்டும்.! அல்லது உணவே உண்ண முடியாது. என்கிறார்கள்; இது மிகப்பெரிய தவறு, உடலை  அனுஅனுவாக பிளந்து ஆராய்ந்து இந்த வியாதியை குணப்படுத்த முடியாது.! என்று ஒரு மருத்துவ முறையால்,மருத்துவரால் கூற முடிகிறது.! ஆனால், உடலின் இயங்குதிறன் ஒருவரிடம் அப்படி கூறவே கூறாது.! ஒரு துளி விந்திலிருந்து கண்,மூக்கு இதயம் என்று அத்தனையையும் படைத்தது இயற்கையின் திறன்.! இத்தனையையும் செய்த உடல் இயங்கு திறனுக்கு தனது கணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு குறைபாடை சரிசெய்ய முடியாதா? என்று; சிந்தித்தால் நிச்சயம் விடை தெரியும்.! ஆனால்,எலி,குரங்கு,பன்றிகளை வைத்து ஆராய்ந்து பார்த்த இந்த மருத்துவ முறையோ அது சாத்தியமே இல்லை.! என்று உறுதியாக கூறுகிறது.! இது மட்டுமல்ல சில குழந்தைகளுக்கு எலும்பு மஞ்ச்சையில் இரத்தம்  சரியாக உற்பத்தி ஆகவில்லை.!என்று கூறி,வாழ்நாள் முழுவதும் இரத்தம் அடைத்து தான் ஆகவேண்டும்.! என்று கூறுவதோடு அடைக்கப்படும் இரத்தத்தை உடல் ஏற்றுக்கொள்ள வேறு சில மாத்திரை மருந்துகளையும் சேர்த்து வழங்குகிறார்கள்.!
70 % செயலிழந்துள்ள சிறுநீரகத்தை மேலும் மாத்திரை மருந்து, டயாலிசிஸ் என்று கூறி முழுவதும் சிதைத்து விடுகிறார்கள்.!
வைரஸ் நோய்க்கு மருந்தில்லை,கொழுப்பு கட்டிக்கு மருந்தில்லை,சக்கரைக்கு மருந்து இல்லை, இரத்த அழுத்தத்திற்கு மருந்தில்லை.! ஆனால்,வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும். என்கிறது; இந்த மருத்துவ முறை.!
உடலின் இயற்கை இயங்கு திறனை, ஏற்றுக்கொள்ளாத இதுபோன்ற மருத்துவ முறையால்,எண்ணற்ற விதவிதமான மருந்துகளை பல குறைபாடுகளுக்கு வழங்க முடியும்.! ஆனால், இயற்கையை  நம்புகின்ற ஒரு மனிதனால் மட்டுமே,தனக்கு வரும் ஆரோக்கிய குறைபாட்டிற்கு  இயற்கை வழியில் முழு நிவாரணம் பெற முடியும்.! இப்படித்தான் … பித்தப்பையில் பித்த நீர் ஒழுங்காக சுரக்காத காரணத்தால் வாழ்நாள் முழுக்க  செயற்கை பித்தநீரை உடலுக்கு மருந்தாகவும் மாத்திரையாகவும் கொடுத்தால் தான்  வாழ்வு என்ற நிலையில் இருந்த ஒருவர் என்னை காண வந்திருந்தார் … " அய்யா,நான் ஒரு இயற்கை விரும்பி.! ஆனால்,அலோபதிமருந்தை உட்கொள்ளாமல் ஒரு சாத்துக்குடி பழத்தை தின்றால் கூட, வயிற்றை கட்டையால் அடைத்தது போல் இருக்கும்.! சிறிது நேரத்தில் வாய்வு வயிற்றிலிருந்து உருண்டு உருண்டு மேல்நோக்கிக் கிளம்பும் … நெஞ்செரிச்சல் வேறு வதைக்கும்.!
அதுவே இரசாயண மருந்தை எடுத்துக்கொண்டு மீன் குழம்பு வைத்து சோறு சாப்பிட்டாலும் கூட ஒன்றும் செய்யாது.!
ஆனால்,ஒருவேளை மருந்தை நிறுத்தினாலும் வயிறு முழுவதும் அடைப்பதோடு மூச்சுக்குழாயும் பலவீனமாகி விடுகிறது,இது மிகமிக துன்பமாக இருக்கிறது.! இயற்கையில் ஏதாவது தீர்வு உள்ளதா? என்று அவர் கேட்டதும்
" தினமும் பழங்களை மட்டும் இருவேளை உணவாக உண்ணுங்கள்.! அதோடு … பஸ்திமோத்தானாசனம்,சலபாசனம்,மயூராசனம், மட்ச்யாசனம்,நாடிசுத்தி பிராணாயாமம்  போன்றவற்றையும் செய்து வாருங்கள் என்று கூறியதோடு, அலோபதி மருந்தை ஒரு வேளை விட்டு ஒருவேளை சாப்பிடுங்கள். " என்று கூறி அனுப்பி வைத்தேன்.!மீண்டும் ஒரு வாரத்திலேயே திரும்பி வந்து " உங்கள் முறை ஒன்றும் வேலை செய்யவில்லை, மருந்து குடித்தால் மட்டுமே உணவு உண்ண முடிகிறது.
அல்லது பழச்சாறு,நீர் என்று எதை குடித்தாலும் ஏப்பத்தோடு வயிறு வேதனையும் வந்துவிடுகிறது " என்றார்.!
இப்படியே பல்வேறு இயற்கை முறைகளையும் மூலிகைச்சாறுகளையும் கொடுத்தும், எதுவும் அவருக்கு வேலை செய்யவில்லை.!ஒருநாள் பேச்சு வாக்கில் விரதம் இருக்கும் நாட்களில் மட்டும் மாலை வேளையில் மருந்து குடிக்காமலேயே பசி வருகிறது.!அந்தநேரத்தில் … எவ்வளவு சாப்பிட்டாலும், வாய்வுபுரட்டல்,ஏப்பம்,நெஞ்சுஎரிச்சல் போன்ற எதுவும் வருவதில்லை.! என்று; கூறினார்.!
அப்படிவா வழிக்கு, என்று மனதில் மகிழ்ந்தவாறு " இனி நீங்கள்,தினமும் ஒருவேளை அதுவும், பசித்தால் மட்டும் உங்கள் மனதுக்கு பிடித்த உணவை அளவாக சாப்பிட்டு வாருங்கள்.! என்றுகூறி அனுப்பிவைத்தேன்.! இப்பொழுது அவர் யோகிகளைப் போல தினமும் ஒருவேளை மட்டுமே உணவை உண்டு வருவதோடு, யோகா, மண்குளியல்,இயற்கை எனிமா போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு அலோபதி மருந்துகளை நிறுத்தி ஆரோக்கியமாக வாழ்கிறார்.ஓரிரு மாதத்தில் உங்களால், இரண்டுவேளை பிடித்த உணவை உண்ணமுடியும் என்று கூறி உள்ளேன்.!
நமக்கு எவ்வளவு பித்தநீர் சுரக்கிறதோ அவ்வளவுக்கு மட்டும் உணவை  எடுத்துக்கொண்டு உடல் பூரண குணமான பின்பு நிறைய சாப்பிடுவது தானே முறை.! அதை விடுத்து ஏற்கனவே சாப்பிடும் உணவையே ஜீரணிக்கப் போராடும் மனிதனுக்கு மேலும் இரசாயண மருந்துகளை கொடுத்தால் அதையும் சேர்த்து ஜீரணம் செய்ய கல்லீரல் எத்தனை பாடுபடும்.! என்ற,அடிப்படை உண்மையை யோசிக்காமல் எல்லா நோயாளிகளும் மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.!
பத்தியமும் கிடையாது.! என்று ஆசைகாட்டி, கூடவே நாங்கள் தரும் மருந்தையும் சாப்பிடுங்கள்.! நோய் குணமாகும் என்று; கூறுவது வேடிக்கையான விஞ்ஞான அறிவு.!அதனால் தான் கூறுகிறேன்.! ஆசையால் உந்தப்பட்டு எதையும் செய்யாமல், மெய்ஞ்ஞானம்  சிதையாமல், விஞ்ஞானம் வளர்ப்போம் என்று.!

- ஏகப்பிரியன் DYT

தொடரும் …

amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...