*உயிர் மீட்கும் மருத்துவம்*
39.பர்தாவும் பெண் பாதுகாப்பும்
" உண்டியுள் காப்பு உண்டு
உறுபொருள் காப்பு உண்டு
கண்ட விழுப்பொருள்
கல்விக்கு காப்பு உண்டு
பெண்டிரைக் காப்பது இலம்
என்று கண்டு மொழிந்தனர்
ஞாலத்து கற்றரிந்தோரே "
-வளையாபதி
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டதாக கூறப்படும் வளையாபதி காப்பியத்தில் இப்படி ஒரு பாடல் இருக்கிறது.! இதன் பொருள் உணவை பாதுகாத்து வைக்கலாம் சேர்த்த செல்வத்தை
பாதுகாத்து வைக்கலாம்
கற்ற கல்வியை பாதுகாக்கலாம்
பெண்களை பாதுகாத்து வைக்கமுடியாது என்ற உண்மையை
உணர்ந்தவர்களே உலகத்து அறிஞர்கள்.! இந்த பாடலை படித்து பலநாட்கள் நான் வியந்துள்ளேன்.!
சென்ற நூற்றாண்டின் நடுவில் பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்கள் தலை குணிந்தார்.
நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்ஞாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்.! போன்ற மகாகவி பாரதியின் பாடல்கள்
பெண் சுதந்திரத்தை பற்றி அதிகம் கூறி உள்ளதை அனைவரும் அறிவோம்.!
ஆனால்,இராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரம்,மணிமேகலை, வளையாபதி போன்ற ஐம்பெருங்காப்பியங்களில் பல்வேறு பெண்ணிய விடுதலை கருத்தை கூறியதோடு
மணிமேகலையில்காப்பியத்தலைவியாக ஒரு பெண்ணை அதுவும் பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவியின்
மகளை காப்பியத்தலைவியாக்கி
நல்லறம்,இல்லறம்,துறவறம்,சமய கொள்கைகள் என்று பல்வேறு தளத்தில் பயணிக்க வைத்த, மணிமேகலை காப்பியத்தை படைத்த சீத்தலை
சாத்தனாரை எண்ணும் போது
அவர் ஒரு வியப்பின் வரலாற்று
குறியீடு.! என்று மனம் உவகை
கொள்கிறது.!
இன்னும் சிலர் மதத்தின் பெயரையும் பண்பாட்டின் பெயரையும் கூறி பெண்கள் படிக்கக் கூடாது, முழுதாக காலிலிருந்து தலைவரை மூடிக் கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும். நெருங்கிய உறவினர் அல்லாத ஆண்களுடன் வெளியே போகக்கூடாது.!
போன்ற நடை முறைக்கு சாத்தியம் இல்லாத பலப்பல உத்தரவுகளை
போட்டு வருகிறார்கள்.!
இதற்கு அவர்கள் கூறும் காரணம்
பெண்களை சுதந்திரமாக விட்டால் அவர்கள் கற்பை இழந்துவிடுவார்கள்,தவறான வழிக்கு சென்றுவிடுவார்கள், இவர்களின் கவர்ச்சியில், ஆண்கள் பாலுணர்வு இச்சையால் தூண்டப்பட்டு தவறு செய்துவிடுவார்கள்.என்று;
கூறுகிறார்கள்.! இது ஒரு காலத்தில் மனிதன் படிப்பறிவில்லாமல்,காட்டுமிராண்டித்தனமாக நடந்துவந்த காலத்தில் வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம். அதுவும் அரேபியா,பாலஸ்தீன்,பெத்லகேம் போன்ற ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அந்த நாடுகளில் தான் தங்கள் சுயத்தை எளிதாக இழக்கும் மனிதர்கள் இருந்துள்ளனர்.!
அமெரிக்கா,இந்தியா,சைனா,இரஷ்யா,இங்கிலாந்து,ஜெர்மன் போன்ற நாடுகளின் மக்கள் என்றைக்குமே எளிதாக உடல் கவர்ச்சியை கண்டு
தங்கள் ஒழுக்க நிலையை மீறுபவர்களாக இருந்ததில்லை.!
இந்த நாடுகளில் இனயுத்தம்,மதயுத்தம்,ஏற்றத்தாழ்வுகளை சீராக்குவதற்கான யுத்தம்,சாதிசண்டை போன்றவையே நடைப்பெற்றுள்ளன.
பெண்களின் பழக்கங்கள் மற்றும் ஆடையின் பொருட்டு
எந்த யுத்தமும் நடைப்பெற்றதாக
தெரியவில்லை.!
உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதுவும்
இந்தியா போன்று அதிகமாக
பயங்கரவாத தாக்குதல்களில்
பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில்
பர்தா,தாடி போன்ற மத அடையாளங்களை வெளிப்படுத்துபவர்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.! அதுவும் தற்போதைய மத்திய அரசு ஜகீர்நாயக்,ஜவஹருல்லா போன்ற பல
இஸ்லாமிய தலைவர்களின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளது.! முன்பெல்லாம் இஸ்லாமியர்களை கைது செய்யும் போது
போது வெடிகுண்டு வைத்திருந்தான், துப்பாக்கி வைத்திருந்தான்,இந்த ஊரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவன் என்று கூறிதான் பலரையும் கைது செய்வார்கள்.தற்போது வெறுமனே
வெளிநாட்டு அமைப்போடு தொடர்புடையவன்,கணிணி வைத்திருந்தான்,சிம் வைத்திருந்தான்,
வெளிநாட்டு அமைப்பிலிருந்து ஈமெயில் வந்துள்ளது.என்றெல்லாம் கூறி எளிதாக பலரையும் கைது செய்து விடுகிறார்கள்.!
மததுவேசத்தை திட்டமிட்டு பல இடங்களில் பரப்புகிறார்கள்.!
இந்த நிலையில் சாதாரண உடையில் போகும் பெண்களை விட பர்தா போன்ற மத உடைகளுடன்
வெளியே செல்லும் பெண்களுக்கு
ஆபத்து அதிகரித்துள்ளது.!
இன்னொன்று குப்பாயம் போட்டு,
அன்னிய ஆடவர்களுடன் எந்தவித
தொடர்பும் இல்லாமல் இருப்பவர்கள் தான் உண்மையான
மதநேசர்கள் என்றால், அப்படி செய்யாத ஆனால், ஒழுக்கமாய் வாழும் மற்றவர்கள் எல்லாம்
தவறானவர்கள் என்று ஆகிவிடும்.!
அது உண்மையில்லை.!
அது மட்டுமில்லாமல் பெண்களை அடைத்து வைக்கும் கலாச்சாரம்
ஆண்மகன்கள் அத்தனை பேருமே
புரக்கிகள் அவர்கள் எப்பொழுதும் பெண்ணின் உடலையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். என்பது போல் ஆகிவிடும்.! இதுவும் உண்மையில்லை.!
அவனவனுக்கு ஆயிரம் வேல இருக்கு.! இப்படித்தான் ஒருநாள்
சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் மின்சார இரயிலுக்காக நடைபாதையின் ஓரத்தில் காத்து நின்ற ஒரு பர்தா போட்ட பெண் தாம்பரம் மின்சார இரயில் வரும் தண்டவாளத்தில் தவறி விழுந்து விட,அவரால் கையை ஊன்றி மேலே வர முடியவில்லை. அது ஒரு மதிய நேரம் என்பதால் நடைமேடையிலும் அதிக கூட்டம் இல்லை. நான் உடனே ஓடிப்போய் அந்த பெண்ணை சீக்கிரம் மேலே வர கூறி , உதவ கை கொடுத்தேன் … அந்த பெண்ணுக்கோ எனது கையைத் தொட்டால் கற்பு போய்விடுமோ … என்ற அச்சத்தில் மீண்டும் மீண்டும் அவரே ஏறிவிட முயல்கிறார் … ஆனால், அது முடியவில்லை … அந்த நேரம் பார்த்து தாம்பரம் செல்லும் இரயிலும் தூரத்தில் வந்துகொண்டிருந்தது …
இதை கவனித்த அருகில் இருந்த வேறு சிலரும் ஏம்மா, கையப்புடிச்சி மேல ஏறும்மா இரயில் வருது என்று சத்தமிட … பிறகு ஒரு வழியாய் இரயில் வந்து இடிப்பதற்கு ஒரு சில விநாடிகள் முன்பு சட்டென்று கையை நீட்ட மேலே தூக்கிவிட்டேன்.!
அவர் கையில் ஒரு சான்றிதல் வைக்கும் பை இருந்தது, கண்களை தவிர முகம் முழுவதுமே எதோ தடை செய்யப்பட்ட பகுதியைப் போல மூடி இருந்தது உடலும்தான்.
இரண்டு மூன்று முறை அவரே ஏறி வர முயன்றதில் கையில் சிரிய உராய்வுகள் தெரிந்தது, அப்பதான் கவனிச்சேன், அவரின் ஒரு காலில் செருப்பை காணவில்லை.!
அதற்கிடையே இரயில் வந்துவிட ஒரு பெண்மனி ஓடிவந்து கொஞ்சம் தண்ணி குடிம்மா என்று வாஞ்சயாய் கொடுக்க வேண்டாம் என்று கூறியதோடு தனது இன்னொரு கால் செருப்பை கழற்றி எறிந்து விட்டு பெண்கள் பெட்டியில் ஏறிப் போனாள்.! நான் உடனே ஓடிப்போய் சற்று தள்ளி இருந்த பொதுப்பெட்டியில் ஏறிக் கொண்டேன்.!
இந்த சம்பவம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது ஆபத்து நேரத்தில் கூட ஆணின் கையை தொட இத்தனை தயங்கும் இந்தப் பெண், கையில் ஏதோ சான்றிதல் எல்லாம் வைத்துள்ளாள், நாளைக்கு ஏதேனும் நிறுவனத்தில் பணிக்கு சென்றாலும் இதுபோல் தான் இருப்பாளோ, யாராவது கையை தொட்டாலோ,முகத்தைப் பார்த்தாலோ அய்யோ தொட்டுட்டான் … பார்த்துட்டான், பார்த்துட்டான் என்று ரிக்சா மாமா கவுண்டமணி போல கத்துவாளோ?
எல்லாம் பெற்றோர் வளர்ப்பு.! தமது மத கோட்பாடு களை கூறி இந்த அளவிற்கு பெண்ணை ஒரு ஒளித்து வைக்க வேண்டிய பண்டமாய் உருவாக்கிய பெற்றோர்கள், நமது தாய்மொழி தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பெண்களை உறுதியானவர்களாக,நீதி கூறுபவர்களாக,சமய தலைவர்களாக உருவாக்கிய நமது பண்பாட்டின் மேன்மையை உணர்ந்து பெண்மையை போற்றுதலுக்குரிய ஜீவனாய் மதிக்க மாட்டார்களா …!
என்று பலவாறு எண்ணம் ஓடியது.! அதற்கு எனக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.!
கெட்டுப்போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஏழு கடலுக்குள் ஒளித்து வைத்தாலும் பெண் கெட்டுப் போவாள்.!
ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் விபச்சார விடுதியில் கூட ஒழுக்கமாக இருப்பாள்.!
அதுபோல் பெண்ணை பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்த முனைபவர்கள்
எந்த உடையில் இருந்தாலும் தங்கள் வேலையை காட்டவே செய்வார்கள்.!
பிறகெதற்கு
இந்த மாறுபட்ட வேடம்.!
பிறர் கண்ணை உறுத்தாமல் கண்ணியமாய் உடை உடுத்தினாலே போதுமே.!
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
aumherbals.blogspot.in
No comments:
Post a Comment