*உயிர் மீட்கும் மருத்துவம்*
40.பெண்களின் ஆரோக்கியமும்
சுகப்பிரசவமும்
" தென்றலாய் நதியாய்
மொழியாய் நிலவாய்
தேவதையாய் தெய்வமாய்
மகளாய் தமக்கையாய்
தாரமாய் தாயாய்
அத்தையாய் சித்தியாய்
பாட்டியாய் பெண்மை எடுப்பது
ஆயிரம் பிறப்பு அவளின்
அன்பே என்றும்
உலகோர் சிரிப்பு.! "
பொதுவாக ஒரு ஆண் கற்றுகொண்ட எந்த நுட்பமான விசயங்களும், அவனுக்கு மட்டுமே பயன்படும்.! ஆனால்,ஒரு பெண் கற்றுகொள்ளும் எல்லா விசயமும்,
ஒரு தலைமுறைக்கே பயன்படும்.! என்று கூறுவார்கள்.!
அப்படி நமது பூட்டி, பாட்டி,அப்பத்தாக்கள் கற்றுகொண்டு தங்கள் தலைமுறைக்கு வழங்கி, அந்தத் தலைமுறையினர் அடுத்தத் தலைமுறைக்கு வழங்கி ,என்று; வாழையடி வாழையாக வந்ததுதான்.நமது மரபில் இன்னும் தொடரும் பாட்டி வைத்தியம்.! என்று கூறப்படுவது.! இது முன்புபோல் இப்பொழுது, அவ்வளவு செழுமையாக இல்லை.! அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஒருசிலர் மட்டுமே இதை கடைப்பிடித்து வருகிறார்கள்.! இதற்கு காரணம் என்னவெனில், பல வீடுகளில் இன்று பாட்டிகளே இல்லை.! ஒன்று தாத்தா பாட்டி தனியாக இருக்கிறார்கள் அல்லது ஏதேனும் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்.!இதில் எங்கிருந்து வைத்தியம் சொல்வது.! குழந்தை பிறந்தது முதல் பெண் ருதுவாவது, திருமணமாகி இன்னொரு வீட்டிற்கு சென்று, கரு உருவாகி குழந்தை பெறுதல்,குழந்தை வளர்ப்பு, பெரும்பாடு,மாதவிடாய் ஒழுங்கின்மை,சுகப்பிரசவம் போன்ற அனைத்திற்கும் பாட்டி வைத்தியத்தில் தீர்வு உண்டு.! இது இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போன காரணமும் சேர்ந்துதான், இன்று பல பெண்களுக்கு வரும் கருப்பைக் கோளாறு முதல் குழந்தை இன்மை வரை வரும் பல்வேறு சிக்கல்களாய் பரிணமித்துள்ளது.! இன்னொரு காரணம் இரண்டு தலை முறையினருக்கு முன்பே பாட்டிகள் சொல்வதை கேட்கக்கூடாது,
இரசாயண மருந்துகளே மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.!
பாட்டி வைத்தியம் செய்வது ஆபத்தானது.! என்று திட்டமிட்டு
ஆங்கில மருத்துவர்கள் பலர் மக்களிடம்
ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருந்தனர்.!
அதை நமது மக்களும் அப்பாவியாய் நம்பி விட்டார்கள்.! உண்மையில் சுக்கு,மிளகு,திப்பிலியிலோ,துளசியிலேயோ எந்த ஆபத்தும் இல்லை.! இரசாயண மருந்துகளிலும் உணவுகளிலும் தான் அத்தனை ஆபத்தும் உள்ளது.!
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது தங்கை கர்பமாய் இருந்த
காலத்தில் எனது பெரியம்மாவுடன்
பரிசோதனை க்காக, நாகர்கோவிலில் புகழ்பெற்ற ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றிருக்கிறார்…
அப்பொழுது அங்கிருந்த மருத்துவர் எனது சகோதரியை பரிசோதித்து விட்டு
எனது பெரியம்மாவிடம்,
"உங்கள் பெண்ணிற்கு இரத்தசோகை உள்ளது.அதனால்,ஒரு டானிக் மற்றும் சில விட்டமின்
மாத்திரை எழுதி உள்ளேன். வாங்கிக்கொடுங்கள்." என்று; கூறி உள்ளார் உடனே என் பெரியம்மா அந்த மருத்துவரிடம் "வீட்டில் தினமும் தினமும் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்தால் இரத்தசோகை மாறாதா? " என்று; கேட்க. மருத்துவரோ; "இலை தழைகளை சாப்பிட நாம என்ன ஆடுமாடா? பேசாம நான், சொன்னத செய்ங்க என்று கூறி விரட்டி உள்ளார்.!
இதை என் தங்கை என்னிடம் கூறியபோது … எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. ஏனெனில்,இரத்தசோகையைப் போக்க கீரைகள் உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.!
ஆனால்,அந்த மருத்துவர் அது
ஆடு மாடுகளுக்கான உணவு மட்டும்தான்.!
என்று; கூறியதைப் பார்த்தால் ஒன்று அந்த மருத்துவர் - ஒரு மங்குனி மருத்துவராக இருக்க வேண்டும்.! அல்லது, மருந்துகளை விற்பதற்காக இப்படி கூறி இருக்க வேண்டும்.!
எது உண்மை, என்று யோசித்தால், இரண்டாவது காரணமே சரியாகப்பட்டது.!
அதன் பிறகு எந்த மருத்துமனையிலும் பரிசோதனைக்கு செல்லாமலே கீரைகள்,பேரிச்சம்பழம்,வேர்க்கடலை,ஆப்பிள்,திராட்சை போன்ற உணவுகளை எடுத்துகொண்டே சுகப்பிரசவத்தில்
ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தாள், எனது சகோதரி.!
இது போன்ற சூழல் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.!
" வேர்களை இழந்துவிட்டல் விருட்சத்திற்கு வாழ்வில்லை.! " என்ற உண்மையை இப்பொழுது தான் நம்மில் பலரும் உணர்ந்து வருகிறோம்.! சரி.!இந்தப் பகுதியில் பெண்களுக்கு வருவதாக கூறப்படும் அத்தனை வியாதிகளுக்கும் எளிய பாட்டி வைத்தியங்களை வழங்குகிறோம்.!முதலில் கர்பமடைந்துள்ள பெண்கள் வீட்டிலேயே எளிய உணவு முறைகளை கொண்டே இரத்தசோகை,இரத்த அழுத்தம்,சக்கரை போன்ற வியாதிகளில் அழுந்தாமல் இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க சில ஆலோசனைகளை கூறுகிறேன்.!
கரு தங்கிய முதல் மாதம்,முதலே பெண்களுக்கு வயிற்றில் ஒரு சிறிய வலி இருக்கும். இது இயல்பானது தான். ஆனாலும்,முதல் மாதம் முதலே நாம் சில இணை உணவுகளை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்து வந்தால் ,
தாய்சேய் இருவரின் ஆரோக்கியமும் மேம்படும்.! முதலில் "குல்கந்து" தினமும் ஒருத்தேக்கரண்டி ரோஜா குல்கந்தை 200 மில்லி ஒரிஜினல் பசும்பாலில்
கலந்து இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன் குடித்துவந்தால் மழலை ஆரோக்கியமாக வளரும்.!
மூன்றாவது மாதம் முதல் " ஆப்பிள்,கேரட்,பீட்ரூட் சாறு "
அதாவது ஒரு கேரட்,பாதி ஆப்பிள், கால்துண்டு பீட்ரூட் இவற்றை சிறிது நீர்விட்டு அம்மி அல்லது மிக்ஸியில் அடித்து வடிகட்டி சிறிது தேன் கலந்து மதியம் உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு கொடுத்து வந்தால் … இரத்தசோகை, சோர்வு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.!
ஐந்தாம் மாதம் முதல் வேர்க்கடலை, பாதாம் பருப்பு, அத்திப்பழம் தலா 20 கிராம் எடுத்து
அரைத்து 200 மில்லி விதையுள்ள கருப்புத்திராட்சை இரசம் அல்லது
சுடுநீரில் கலந்து காலை உணவிற்கு அரைமணிநேரம் முன்பு கொடுத்துவர சக்கரை, இரத்த அழுத்தம்,மனபயம் போன்ற எந்தக் குறைபாடும் தோன்றாமல் இருக்கும்.!
ஏழாவது மாதம் முதல் தினமும் காலை உணவிற்கு பின் இரண்டுத் தேக்கரண்டி நெல்லிக்காய் தேனூறல் உண்டு வர சுகப்பிரசவம் ஆக எல்லா வாய்ப்புகளும் உருவாகும்.!
இது தவிர ஐந்தாம் மாதம் முதலே
எளிய முறை பாத்ராசனம், உபவிஷ்ட கோணாசனம்,தண்டாசனம், சயனாசனம்,சாந்தியாசனம்,எளிய முறையிலான
நாடிசுத்தி,அஸ்வினி முத்ரா பிராணாயாமம்,ஓம்கார பிராணாயமம்,அல்லது பராமரி பிராணாயாமம் போன்ற எளிய
யோகாப் பயிற்சிகளையும் தினமும் அரைமணி நேரம் செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆவது உறுதியாகிவிடும்.!
அதோடு,கரு உருவான மூன்றாம் மாதம் முதலே தாய் அமைதியான மன நிலையில் இருத்தல், இயற்கை சூழலில் உலாவுதல்,நல்ல
மெல்லிசையை கேட்பது, செஸ் விளையாடுதல்,நல்ல இலக்கியங்களை படித்தல், கணித புதிர்களை விடுவித்தல் போன்றவற்றை செய்துவந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதுடன் புத்திசாலி குழந்தையாகவும் இருக்கும்.!
பிரசவ தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னேயே, தினமும் ஒரு வெற்றிலையில் சிறிது புணுகு அல்லது சிறிது விளக்கெண்ணெய் தடவி ஏதேனும் ஒருவேளை உணவிற்கு பின் உண்டு வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.!
இன்றைக்கு ஹீலர் பாஸ்கரின் மனைவி போன்ற சிலர் வீட்டிலேயே, சுகமான முறையில் குழந்தையை பெற்றுள்ளனர்.! இதற்கு மிகுந்த மன வலிமையும் தைரியமும் வேண்டும்.! வீட்டில் பிரசவிக்க கர்ப்பிணி பெண்ணின் கணவனுடன் வேறு ஒரு பெண்ணும் உதவிக்கு இருக்க வேண்டும்.! குத்த வைத்து அமர்ந்த நிலை அல்லது கொஞ்சம் சாய்வாக கால்அகட்டி படுத்த நிலையில் மேலே தொங்கவிடப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு தாய் முடிந்தவரை குழந்தையை வெளிநோக்கித் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும் … இந்த
நிலையில் பணிக்குட நீர்,இரத்தப்போக்குடன் சேர்ந்து குழந்தையின் தலை வெளிவரும்,
பிறகு மெதுவாக இன்னும் கொஞ்சம் தலை வெளியே வந்ததும், மெதுவாக உதவிக்கு இருப்பவர் குழந்தையை தலையைப் பிடித்து
உடலோடு சேர்த்து வலது அல்லது இடதுப்பக்கம், எந்தப்பக்கம் எளிதாக திரும்புகிறதோ அந்தப்பக்கமாய் சரித்து பிள்ளையை வெளியே எடுக்க வேண்டும்.!உடனே தயாராக வைத்துள்ள துணியில் துடைத்துவிட்டு, தொப்புள் கொடியை இரண்டு அங்குலம் அளவிற்கு விட்டுவிட்டு கத்தி அல்லது பிளேடால் வெட்டி விட்டு ஒரு துணியை சுற்றி தாயிடம்
பால் குடிக்க நெஞ்சின் அருகே வைத்துவிடலாம்.!
சிறிது நேரம் கழித்து குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டலாம்.!
வீட்டில் பிரசவம் செய்பவர்கள், எனிமா கேனை பயன்படுத்தி முதலிலேயே மலத்தை வெளியேற்றி விட்டோ அல்லது 50 மில்லிவரை விளக்கெண்ணெயை 200 மில்லி திராட்சை இரசத்தில் கலந்து குடித்தோ மலத்தை முழுவதும் வெளியேற்றிவிட்டால் நல்லது.!
ஒரு வேளை இதனால் மலம் வராவிட்டால் கூட ஆசன வாயும் பிறப்புறுப்பும் சுருங்கி விரிவதால் பிரசவம் எளிதாகும்.!
குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறெந்த உணவும் வழங்கக் கூடாது.!
தாய்க்கு முதலில் தேன்,உப்பு கலந்த நீர்,சாத்துக்குடிச்சாறு போன்றவற்றை கொடுத்து விட்டு பிறகு உணவளிக்கலாம்.!
எங்கு பிறந்த குழந்தையாய் இருந்தாலும், அந்தக் குழந்தையை
படுக்க வைக்கும் தொட்டில் சரியாக பூமியிலிருந்து, தாயின் தொப்புள் அளவு வரை தான் இருக்க வேண்டும்.! ஏனெனில்,குழந்தைக்கு அப்பொழுதுதான் கர்பபையில் இருந்த அதே உணர்வு ஏற்பட்டு அமைதியாக தூங்கும். அதுபோலவே குழந்தை இருக்கும் அறையில் மிதமான வெளிச்சமும் மிதமான காற்றும் மட்டுமே இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.!
இயற்கை முறையில் பிறந்த குழந்தைக்கு எந்தவிதமான தடுப்பூசியும் போடத் தேவையில்லை.!
வீட்டிலே பிள்ளைப் பெற்றுக் கொள்வதென்றால் கணவன்,மனைவி குடும்பத்தினர் என்று அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.!
அல்லது அரசு மருத்துவமனையிலோ உங்களுக்கு மிகவும் நம்பகமான வேறு மருத்துவமனையிலோ பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம்.! ஆனால்,கரு உருவான நாள் முதல் எந்த இரசாயண உணவையும்,இரசாயண மருந்தையும் எடுக்க மாட்டேன்.!
என்பதில் தாய் மிக உறுதியாக இருந்தால்,ஆரோக்கியமான தலைமுறை உருவாகும்.!
இயற்கை குழந்தைகளுக்கு நோய்வராமல் தடுக்க பிறந்த குழந்தைக்கு முதல் ஒரு மாதம் வரை தினமும் குளிக்க வைக்கும் முன் உடலிலும் தலையில் சுத்தான தேங்காய் எண்ணெயை தேய்த்து 15 நிமிடம் வரை இளம் வெயிலில் வைத்துக் கெண்டு பிறகு குளிப்பாட்ட வேண்டும்.! குளித்து முடித்ததும் சிறிது மலைத்தேனை
கொஞ்சம் வெந்நீரோடு கலந்து
அரை பாலாடையளவு அளவு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகும்.!
முதல் மாதம் முடிந்தபின், இரண்டு வேப்பம் கொழுந்து ஒரு மிளகு 5 சீரகம் சேர்த்து அம்மியில் அரைத்து எடுத்து பாலாடையில் வைத்து சிறிது வெந்நீரில் கலந்து தினமும் தலை குளித்தவுடன் கொடுத்துவர வேண்டும்.!
குழந்தைக்கு நீர் இறங்காமல் இருந்தால் வெள்ளரிவிதையை எடுத்து
சிறிது நீர்விட்டு அரைத்து குழந்தையின் தொப்புளைச்சுற்றி
தடவினால் சிறுநீர் இறங்கும்.!
குழந்தை மலம் கழியாது இருந்தாலோ அல்லது தாய்ப்பாலை
வாந்தி எடுத்து வந்தாலோ 4 மிளகு 10 சீரகம் இவற்றை எடுத்து மைய்யாக அரைத்து சிறிது வெந்நீர் கலந்து பாலாடையில் வைத்து புகட்டினால் மலம் வெளியேறும். வாந்தி நிற்கும்.!
இந்த முறையை நாளைக்கு ஒரு முறை விதம் அதிகப்பட்சம் மூன்றுநாள் மட்டும் செய்தால் போதும்.!
குழந்தைக்கு பேதி நிற்காமல் போனால், வசம்பை சுட்டு, உரைத்து விரலில் தொட்டெடுத்து சிறிது தேனில்
தொட்டு குழந்தையின் நாக்கில் தடவி விட பேதி நிற்கும்.!
அல்லது 4 கிராம் அளவிற்கு ஓமத்தை எடுத்து 80 மில்லி நீரில் கொதிக்க வைத்து 40 மில்லியானதும் வடிகட்டி இரண்டுவேளை 20 மில்லி விதம் கொடுக்க பேதி நிற்கும்.! வயிறு மந்தம் நீங்கும்.!
குழந்தை நெஞ்சுச்சளியால் மூச்சுவிட சிரமப்பட்டால், இரண்டு வெற்றிலையை தணலில் வாட்டி குழந்தையின் நெஞ்சில் போட்டு விட்டால் கபம் இளகி வெளியேறும். உள்ளுக்குள் ஒரு கற்பூரவல்லி இலையை கசக்கி, எடுத்தச் சாறுடன் சிறிது தேன் கலந்து இரண்டு வேளை கொடுக்க சளி வெளியேறும்.!
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் ஒரு துணியில் வெதுவெது நீரை நனைத்து நெற்றியில் தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை பற்றிட்டு வர ஐந்தாறு முறையில் காய்ச்சல் குறையும்.! அதோடு துளசிச்சாறு அரை பாலாடை அளவுடன் சிறிது தேனும் கலந்து இருவேளை கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.!
இதே காய்ச்சல்,பேதி மருந்துகளை சிறுவர் சிறுமிகளுக்கும் பெரியவர்களுக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ப சற்று அதிகமாக கொடுத்து வந்தால் குணமாகும்.!
தாய்க்கோ, குழந்தைக்கோ, மற்றவர்களுக்கோ கால்கை வீக்கம் தென்பட்டால் 10 நொச்சி இலைகளை பறித்து 200 மில்லி விளக்கெண்ணெயில் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஓரிரு வேளை காலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சிறிது வெண்ணீர் ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும்.!
தாயோ குழந்தையோ உடல்வலி,முதுகுப்பிடிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டால் பத்து நொச்சியிலையை பிச்சிப்போட்டு ஒருலிட்டர் நீரில் கொதிக்க வைத்து பின் அந்த நீரால் 10 நிமிடம் வரை மென்மையாக பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் பிடிப்பு, வலி குணமாகும்.!
பிரசவத்திற்கு பின் வரும் உடல் பருமன் ,தொப்பை போன்றவற்றை தடுக்கவும் இழந்த சக்தியை திரும்பப் பெறவும் " பேற்று லேகியம், பேற்று மருந்து என்று; நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதை வாங்கி தினமும் மூன்று வேளை கொடுத்து வந்தால் பிரசவத்தினால் ஏற்பட்ட அத்தனை குறைபாடுகளும் நீங்கும்.!
வயது வந்த பெண் பூப்படையாமல்… இருந்தால் இளம் அரசு இலை, மருதாணி இலை, மிளகு தலா 5 எடுத்து பனங்கற்கண்டு 10 கிராம் சேர்த்து மைய்யாக அரைத்து உருண்டையாக்கி காலை, மாலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு கொடுத்து வந்தால் மூன்றுநாளில் பெண் ருதுவாவாள்.!தவறினால் பத்து நாள் விட்டு மீண்டும் மருந்தை இருமடங்காக காலை,மாலை தனித்தனியாக தயாரித்து கொடுக்க நிச்சயம் பூப்படைவாள்.!பெண் கர்பபை குற்றம் நீங்கி பிள்ளைப் பேறடைய அரசன் வேர்ப்பட்டை 15 கிராம்,அத்திப்பழம் 10 கிராம், வெள்ளைப்பூண்டு 5 கிராம் இவற்றை சதைத்து போட்டு அதை 600 மில்லி நீரில் கொதிக்க வைத்து 300 மில்லியாக வற்ற வற்றவைத்து வடிகட்டி,இரண்டு பங்காக பிரித்து காலை,மாலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன் தொடர்ந்து,பெண் மாதவிடாய் ஆனா முதல் நாள் முதல் பத்து நாள் வரை கொடுத்துவிட்டு பதினொறாம் நாள் முதல் இல்லறத்தில் ஈடுபட கர்பபை நீர்க்கட்டி, கர்பபை பலவீனம் போன்றவை நீங்கி கரு தங்கும்.!
முதல் மாதம் கருப்பிடிக்காது போனால் அடுத்த மாதமும் இதுபோல் செய்ய மூன்று மாதத்தில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.!
பெண் கருக்குழாய் அடைப்பு,ஆண் விந்துப்பை அடைப்பு, விந்தணுக்குறைபாடு போன்றவற்றை நீக்க நமக்குத் தெரிந்த வரை பாட்டி வைத்தியத்தில் தீர்வு கூறப்படவில்லை. இது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடிச் செல்லும் போது, இந்த துறையில் முன்னோடியாக இருக்கும் கமலா செல்வராஜ் போன்ற நீண்ட நாள் அனுபவம் கொண்டவர்களை, தேடிச்செல்வது நல்லது.! ஏனெனில், இப்பொழுது செயற்கை கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் ஊருக்கு ஒன்றை திறந்து வைத்துகொண்டு பல அலோபதி மருத்துவர்கள் இருக்கிறார்கள்.! இதில் 80% போலியானவர்கள்.! இதில் பணத்தை கொடுத்து அங்கீகாரம் பெற்றவர்களும் உள்ளனர், அங்கிகாரம் இல்லாமலேயே உள்ளது என்று மோசடியாக கூறி வைத்தியம் செய்யும் மருத்துவர்களும் உள்ளனர்.! இது போலவே கர்பபை செயலிழந்த, விந்தணுவே இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தையை பெறுவதற்கு அதிகப்பட்சம் 3 லட்சம் வரை மட்டுமே கட்டணம் ஆகும்.! ஆனால், இன்றைக்கு பலரும் படிப்படியாக பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்று கட்டணம் வசூலித்து மோசடி செய்கிறார்கள்.!
அதுபோலவே, சில சித்தா டாக்டர்கள் இரண்டு லட்சம் மட்டும் கட்டுங்கள். கருப்பை அடைப்பு, விந்தணுக்குறைபாடு என்று எதுவாய் இருந்தாலும் நான் கொடுக்கும் மருந்தில் சரியாகி விடும்.!என்று;கூறி பலரையும் மேசடி செய்கிறார்கள்.!
கவனமாக இருப்பது மிகமிக முக்கியம்.! சில பேருக்கு மாதவிடாய் பத்து நாட்களுக்கு ஒரு முறை வரும்,வேறு சிலருக்கோ இரண்டு மாதம்,மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் வரும்.! இன்னும் சிலருக்கு வெள்ளைப்படுதல்நோய்,தூக்கத்திலோ, தும்மும் போதோ தங்களை அறியாமலேயே சிறுநீர் கழியும் நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளது. இவை கர்பபை பலவீனம், நரம்புத்தளர்ச்சி, சரியான ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களாலேயே வருகிறது.!
இதை தடுக்க தினமும் மூன்று நாட்டுச் செம்பருத்திப்பூவை பறித்து அரைத்து அரை டம்ளர் பசு மோரில் கலந்து தொடர்ந்து பத்து முதல் 30 நாட்கள் வரை காலை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பு குடித்துவருவதோடு, குய்ய பாதாசனம், பத்ராசனம்,மூலபந்தாசனம்,உட்டியான பந்தம் போன்ற யோகப் பயிற்சிகளையும் செய்து வரவேண்டும்.!
அதோடு தினமும் ஒரு வேளை சமைக்காத பழ உணவு, ஒருவேளை கைக்குத்தல் அரிசிச்சோறு, இன்னொரு வேளை சமைத்த சிறுதானிய உணவு.! என்று உண்பதை வழக்கப்படுத்திக் கொண்டு, காப்பி,தேனீர் ,சீனி,மைதா,பிராய்லர்,சிக்கன்,முட்டை,சாக்லேட்,பிஸ்கெட் ரொட்டி போன்ற இரசாயண உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.! இது இறுதியாக கூறிய நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பொருந்தும்.!
அதோடு ஒரு வேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் இடையில் உண்ணும் நொறுக்குத் தீணிகளை அனைவருமே தவிர்க்க வேண்டும்.! வெறும் தண்ணீர் அல்லது சீனி,எஸன்ஸ் போன்ற எதுவும் கலக்காத வெறும் பழச்சாறு,இளநீர்,நொங்கு போன்றவற்றை மட்டுமே குடிக்க வேண்டும்.!
பெண்கள் சமையலுக்கு இயற்கையில் விளைந்த காய்கறி, பழங்கள்,கைக்குத்தல் அரிசி, தோல்நீக்காத தானியங்கள், செக்கு எண்ணெய்,மசாலாவை பொடிகளாய் வாங்காமல் முழுதாய் வாங்கிப்பொடித்து பயன்படுத்தல் போன்றவற்றையும் செய்துவர பெண்களின் ஆரோக்கியத்தோடு ஒவ்வெரு குடும்பத்தினரின் ஆரோக்கியமும் மேம்படும்.!
ஏகப்பிரியன் DYT
தொடரும் …
100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு💐
AUM HERBALS
Mobile & Whats app
9629368389
aumherbals.blogspot.in
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment