*உயிர் மீட்கும் மருத்துவம்*
38.திருமணம் தரும்
ஒரு மனப்பந்தம்
<இல்லறம் சிறக்க
இனிய ஆலோசனைகள்>
" ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் கூடி
இரண்டறக் கலந்து
மூன்றாய் நான்காய்
பலதாய் மாறி பெருங்குடி
காத்து அறவழி நின்று
உலகை என்றும் சுழன்றிடச் செய்யும் இல்லறம் ஒரு
தவமெனக் கொள்ளு.! "
இன்றைக்கு உலகில் பெருகிவரும் விவாகரத்து, பெரும் வியாதிகள், காதல் தோல்வி, பணியிடத்தில் அழுத்தம், உறவுகளில் விரிசல், நட்பில் கயமை இதுமட்டுமல்ல இன்னும் நாம் சொல்லாமல் விட்ட எத்தனையோ விசயங்களுக்கு பின்னும் சுயநலம் என்னும் மாயக்குரங்கின் மதியாட்டம் மறைந்துள்ளது.
ஒரு கணவன் மனைவிக்கு
இடையிலோ அல்லது காதலன் காதலிக்கு நடுவிலோ கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதான்.
ஒவ்வெரு மனிதனும் வளர்ந்தவிதம், படித்தகல்வி, பணியின் தன்மை, சிந்திக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில்
தனக்குள்ளே ஒரு ஒளிவட்டத்தையும்,சுயசார்பையும் உருவாக்கி இருப்பார்கள்.
ஏதோ ஒரு காரணத்தினால் மற்றொருவர் அந்த பிம்பத்தில் கல்லெறியும் போது கவலைப்பட
ஆரம்பிப்பதோடு உடனே தன் சுயத்தை இழக்காமல் இருக்க எதிர்வினையும் புரிகிறார்கள்.
இப்படியே தொடர்ந்து வினையும் எதிர்வினையும் நடைப்பெற்று வர
அது எந்தவகை உறவாய் இருந்தாலும் அங்கு அன்பெனும் அடிப்படை குமைந்து விரிசல் என்னும் பிரிவினை உருவாகிவிடுகிறது.!
இந்தப் பிரிவினையை தவிர்க்க நினைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தன்னைப்போலவே தன்னை சேர்ந்தவர்களுக்கும்ஒரு சுயவெளி,சுயசிந்தனை,தேடல், ஏக்கம் அனைத்தும் இருக்கும்
என்பதை உணரவேண்டும். ஒரு உயிரில் இயங்கும் உடலின் பல்வேறு உறுப்புகள் ஒன்றுபோலவே இருப்பதும் இல்லை, செயல்படுவதும் இல்லை.!
அப்படி செயல்பட்டால் வாழ்வே இல்லை.!
இதுவே இயற்கையின் நியதி.! அதுபோலவே
ஒருமனிதன் எப்பொழுதும் ஒன்றுபோலவே சிந்திப்பது இல்லை
ஒவ்வெரு விசயத்திலும் ஒரு மனிதனுக்குள்ளேயே இருவேறு கருத்துகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும்,
இறுதியில் எது முக்கியத்துவமானது என்று ஒருவன் நினைக்கிறானோ
அதன்படியே செயல்படுவான்.
ஒரு உயிர் ,ஒரு மனதிலேயே பல்வேறு பிரிவுகளும் இருவேறு
சிந்தனைகளும் இருப்பது உண்மையாயின்
இரு உயிராய் இருக்கின்ற கணவன் மனைவிக்குள், காதலர்களுக்குள்
எப்படி எல்லா நேரமும் ஒருமித்த கருத்து உருவாகும்?
சிலர் சொல்வார்கள்
அவளுக்கு தேவையான, அவனுக்கு தேவையான அனைத்தையும் நான் செய்துகொடுத்தேன்.
ஆனாலும், அவள்/ அவன் நான் கூறுவதுபோல நடப்பதில்லை என்று
இங்கு நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.!
உறவுகளுக்குள் நிகழ்வது ஒரு வளர்ப்பு பிராணிக்கும் நமக்கும் நடக்கும் நட்பைப்போல அல்ல,
ஒரு இயந்திரத்திற்கும் நமக்குமான தொடர்பைப்போல அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
கணவனையோ மனைவியையோ கழுத்தில் ஒரு வளையத்தைகட்டி நம்மால் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல முடியாது.
குக்கரை திறந்து வைத்து நீர், அரிசி, காய், எண்ணையை சேர்த்து அடுப்பில் வைத்தால்
பிரியாணியாய் வருவது போல மனிதர்களிலும் நடக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதே ஒரு வித முட்டாள்தனம் இல்லையா.!
அன்பில் கரைந்து ஒருவருக்குள் ஒருவர் காணாமல் போவதுவேறு
அந்த நிலை வாய்க்க வேண்டுமானால் இருவரின் சுயமும் இயல்பாகவே கரைந்து இருவருக்கும் பொதுவான ஒரு
தனிசுயம் உருவாக வேண்டும்.!
அந்த நடுமையம்
ஒருவருக்காய் ஒருவர் தன்னை இழப்பதாகவோ, பிள்ளைகளாகவோ அல்லது இருவரின் வேறு ஏதேனும் ஒருமித்த கனவாகவோ இருந்தால் சுயம் கரைந்து அன்பில் இருவர் ஒருவராகும் இறைநிலை வரும்.!
இன்றைக்கு அப்படிப்பட்ட உன்னத மனநிலையை நாம் இழந்துவருகிறோம்.என்பதே; உண்மை.!
நாம் அனைவரும் நமது துணைக்கு
சுயலாபத்திற்காக நிபந்தனையின் அடிப்படையிலான சில உரிமைகளை மட்டுமே வழங்க முன் வருகிறோம்.!
நிபந்தனையற்ற அன்பை வழங்க யாரும் முன் வருவதில்லை.!
இருவரில் ஒருவர், மற்றவர் தான் சொல்வதை உடனுக்குடன் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று பலநேரங்களில் மாற்றி மாற்றி, திரும்பதிரும்ப
நினைக்கிறோம்.
ஆனால், நாம் கூறும் நல்ல விசயம் அவர்கள் மனதில் பதிந்து, அதை அவர் உணர்ந்து, உள்வாங்கி, நமது கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்படவோ, நிராகரிக்கவோ
போதிய கால அவகாசம் வழங்காமல் ஒரு புதுமொழியின் எழுத்துருவே சரியாக அறியாதவளின்/ அறியாதவனின் முன்னால் ஒரு நூறுபக்க புத்தகத்தை வைத்து இன்றைக்குள் படித்துக்காட்டு என்று அவசரப்படுத்துகிறோம்.!
அம்மொழி நமக்குள் புகுந்து நம்மை சீராக்க பல மாதங்கள் வருடங்கள் ஆனது.!
அதுபோன்றே அவர்களுக்குள்
அந்த விசயம் முளைவிட பல மாதங்கள் ஆகும்.!என்பதை மறந்து,
விடிந்ததும் விடைகூறு என்று அவசரப்படுத்துகிறோம்.!
💕 தம்பதிகளின் ஒற்றுமையை குலைத்து பிரிவினை ஏற்படுத்தும்
காரணங்களில் சில …
1.தனது அறிவிற்கும் தகுதிக்கும் இவர்/ இவள் குறைந்தவர் என்று நினைப்பது
2.தனது துணை தான் சொல்வது போல் தான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவது.
3.இருவருமே இல்லற வாழ்வில் திருப்தி இல்லாமல் இருப்பது.
4.ஒருவரின் வருமானத்தை மற்றவர் அவரின் அனுமதியின்றி ஆடம்பரமாக செலவு செய்தல்.
5.எதிர் பாலினத்தாருடன் நெருக்கமான/ அந்தரங்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
6.கணவன் அல்லது மனைவியின் குறிக்கோளை விட்டு வெளியேற வற்புறுத்துவது
7.ஒருவருக்கு விருப்பமில்லாத நிலையில் மற்றொருவர் தொடர்ந்து தனிக்குடித்தனம் போக வற்புறுத்தல்.
8.தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னால் தனது துனையை பற்றிக் கேவலமாக சித்தரித்தல்.
9.அடிக்கடி மதுவை அருந்திகொண்டு மனைவி பிள்ளைகளை அடித்து துன்புறுத்துதல்.
10.எப்பொழுதும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேலைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது.
11.குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான அளவு வருமானம் இல்லாதிருத்தல்.
12.தான் விரும்பும் விசயத்தை இடைவிடாமல் தொடர்ந்து கூறிக்கொண்டே இருத்தல்.
13.தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்றாகவும் மற்றவரின் உறவினர்கள் நண்பர்களிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்ளுதல்.
14.துணையின் ஆலோசனைகளை கேட்காமலேயே முக்கிய விசயங்களில் முடிவு எடுப்பது.
15.தனது அந்தரங்க விசயங்களை மருத்துவரல்லாத மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது.
16.தொடர்ந்து எல்லா விசயத்திலும் தான் சொல்வதை மட்டுமே
தனது இணை கேட்டு செயல்பட வேண்டும்
என்று நினைப்பது.!
17. தனது இல்லற துணைவியை கண்டிப்பாக வேலைக்குப்போகவேண்டும் என்றோ அல்லது வேலைக்கே போகக்கூடாது என்றோ தொடர்ந்து வற்புறுத்துவது.
18.தனது துணைக்கு பிடிக்காத வகையில் தொடர்ந்து உடை உடுத்துவது. 19.வீட்டுத்தேவைகளை சரியாக நிறைவேற்றாமல் இருப்பது.
20. இருவரில் ஒருவர் நோயால் அவதிப்படும் போது மற்றவர் சரியாக கவனிக்காமல் இருப்பது.
இது போன்ற காரணங்களினாலேயே இல்லற வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க
அறமான-அதாவது நல்லவை என்று முன்னோர்கள் வரையத்துக்கூறிய உண்மையின் பக்கம் கணவன் மனைவி இருவரும் நிற்பதே
இல்லற நெறியாகும்.!
அதை இருவரில் ஒருவர் மீறும்போது மற்றவர் தகுந்த அவகாசம் வழங்கி, தன்னையும் சீர்த்தூக்கிப் பார்த்து
தன்நிலையை உணர்த்தி அன்பால் தனது வழிக்கு கொண்டுவருவதே
இருமனம் இணைந்த
திருமணவாழ்விற்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும்.
அல்லது கமலஹாசன், கவுதமியைப்போல - இருக்கு ஆனால் இல்லை என்று வெற்றுப்பிழைகளாய் இருவரும் உலவ வேண்டியாதாகிவிடும்.!
ஏன் கமலின் அந்தரங்க வாழ்வை உதாரணப்படுத்துகிறேன், என்றால் எதையும் பிரபலங்களை வைத்து சொன்னால் தான் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
மனதையும் உடலையும் சீராக வைத்துக்கொள்ள யோகா எப்பொழுதும் கைகொடுக்கும்.!
தினமும் 30 நிமிடம் பர்வட்டாசனம்,ஜானுசீராசனம், தண்டாசனம், விபரீத கரணி, மட்ச்யாசனம், சாந்தியாசனம், சுகப்பிராணாயாமம் போன்ற யோகநுட்பங்களை பயின்றுவந்தால் மனநிலையில் நல்ல உணர்வுகள் மேலோங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகும்.! பொதுவாக ஆண்களை விட பெண்கள் மன உறுதி மிக்கவர்கள். பெண்களை விட ஆண்கள் உடல் பலமிக்கவர்கள்.!
இதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.! காதலிக்கும் பருவத்தில் தான் விரும்பி பழகும் ஒரு நபர் தனக்கு ஏற்றவர் இல்லை என்று ஒரு பெண் நினைத்தால் உடனே அதிலிருந்து சுலபமாக வெளிவருவது ஒரு பெண்ணுக்கு எளிதான காரியம்.! ஆனால், ஆண்கள் அப்படி சுலபமாக விட மாட்டார்கள்.!
ஒரு பெண் ஒருவரிடம் பழகிவிட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிச் செல்வது அவரின் உரிமை.! ஆனால்,இதை எல்லா ஆண்களாலும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.! ஏனெனில்,தன்னால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் தன்னைவிட்டு பிரிந்து செல்வதை பெரும்பாலான ஆண்கள்,தனக்கு அது பெரிய இழுக்கு. என்று; கருதி கவலை கொள்கிறார்கள்.!
அதனால் தான் காதலில் பாதிக்கப்பட்ட ஆண் - தற்கொலை செய்வது, பெண் முகத்தில் ஆசிட் அடித்தல், அவதூறுகளை பரப்புதல் போன்ற கீழான செயல்களில் ஈடுபடுகிறான்.! ஒரு சில ஆண்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தாலும் கூட மனதளவில் குறிப்பிட்ட பெண்மீது ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்யும்.!
ஆனால்,பெண்ணை பொறுத்தவரையில் தனது காதல் இழப்புகளையும் வலியையும் பெரிதும் பொருட்படுத்தாமல் எளிதில் இயல்பு நிலைக்கு வந்துவிட முடியும்.!
அதுவே திருமணத்திற்கு பின் பிரிவது என்றால் ஆணை விட பெண்ணெ மிகவும் கவலை கொள்ளுவாள்.!
இது இரு பாலினருக்கும் உள்ள மனரீதியான வேறுபாடு.! இதனடிப்படையில் தான் சில விரக்தி அடைந்த ஆண்கள் "பெண்களை உண்மையாக நேசிப்பவர்களுக்கு அவர்கள் தூரோகம் செய்வார்கள்.! ஆனால், சும்மா ஒரு போகப் பொருளாய் பெண்களை நினைப்பவர்களுக்கு அவர்கள் நன்மை செய்வார்கள்.! " என்று கூறுவார்கள்.! இதில் கொஞ்சம் உண்மை உண்டு எப்படியெனில் ஒரு பெண்ணுக்கு பல்வேறு நிலையில் ஒரு ஆணின் உதவி தேவைப்படும். அதற்காக அவர்கள் சிலரிடம் நெருங்கி பழகுவார்கள்.! அதை சிலர் தவறாக பயன்படுத்த முயல்வார்கள்.! அது அந்தப் பெண்ணுக்கு தெரியும் போது முடிந்தவரை ஒதுங்கி விடுவார்கள்.! இதனால்,பெரும்பாலும் இருவருக்குமே பிரச்சனை இல்லை.! ஆனால், ஒரு பெண்ணிடம் எனக்கு நீதான் வேண்டும் அல்லது செத்துவிடுவேன், திரவாகத்தை வீசுவேன் என்றெல்லாம் கூறும்போது அது பெரிய சிக்கல் நிறைந்த உறவாக மாறிவிடுகிறது.!
இன்றைய வாழ்க்கை முறையில் ஆணும் பெண்ணும் பாகுபாடு இல்லாமல் சேர்ந்து செயல் படுவது காலத்தின் கட்டாயம்.! எல்லா இடங்களிலுமே ஒருவரின் உதவி மற்றொருவருக்கு மிகவும் தேவையாகவே இருக்கிறது.! அதிலும் பெண்களுக்கு ஆண்களின் உதவி மிகமிக அவசியமாக உள்ளது.! அவசரத்திற்கு வெளியே போக ஆட்டோ ஓட்டுனர் தொடங்கி காய்கறி விற்பவர்,சிலிண்டர் டெலிவரி செய்பவர், பல்வேறு வீட்டு மரமாத்து பணிகளை செய்பவர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள், அக்கம் பக்கத்து மனிதர்கள் என்று என்று வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பல ஆண்களின் உதவி தேவையாய் இருக்கிறது.! எனும் போது பணிபுரியும் பெண்களைப் பற்றி கூறவே வேண்டாம்.! ஒரு பெண், தான் ஒரு பெண் என்பதையே பல நேரங்களில் மறந்து விடும் அளவிற்கு சமூகத்தோடு கலந்து பணிபுரியும் சூழல் உருவாகிவிட்டது.!
இதை சிலர் தவறாகப் பயண்படுத்த முனையும் போது இல்லறத்தில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.!
படித்த பெண்கள் வேலைக்கு போவதால் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவும் சொந்தக்காலில் நிற்பதால் தன்னம்பிக்கை யையும் பெறுகிறார்கள்.! என்பதெல்லாம் மிகவும் உண்மை.! ஆனால்,திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற பின்பும், கணவன் மனைவி இருவருமே தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து பணிபுரிய செல்வதால் பிள்ளைகள் மற்றும் பெற்றோரை நன்றாக கவனித்துகொள்ள முடிவதில்லை.! அதனால்,இருவரில் ஒருவர் தங்கள் அலுவலக பணியை விட்டுவிட்டு வீட்டை நிர்வாகிப்பது மிகுந்த நன்மையை தரும்.!
ஒரு மனிதனுக்கு நிறைவு என்பது மனதில் இருப்பதுதான்.! அளவிற்கு மீறிய ஆசையும்,ஆடம்பரமும் என்றைக்குமே நிறைவைத் தாராது.! அதைவிடுத்து எனது பெற்றோருக்காக,எனது பிள்ளைகளுக்காக நான் சில ஆசைகளை தியாகம் செய்துள்ளேன். என்ற எண்ணமே நமக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.!
உடல் பலம்,மன பலத்தில் ஆண் பெண் இருவருக்கும் நேர்மாறான தன்மை இருப்பது போலவே பேசுவதிலும் புரிந்துகொள்வதிலும் கூட ஆண், பெண் இருவருக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு.! ஒரு ஆணைவிட மூன்று மடங்கு அதிகமான வார்த்தைகளை ஒரு பெண் பேசுவதாக ஒர் ஆய்வு கூறுகிறது.! ஒரு ஆண்மகனை தண்டிக்க வேண்டுமானால் அவனது பணியை கெடு, ஒரு பெண்ணை தண்டிக்க வேண்டுமானால் அவளின் பேச்சை தடு என்று கூறுவார்கள்.!
இதெல்லாம் இன்று மாறிவருகிறது.! குழந்தைகளைப் பெற்றபின்பும் ஆண்,பெண் இருவருமே இன்று பணிக்கு செல்வதோடு இருவருமே ஒரே மாதிரியான உடல் மன பலத்தை பெற முயல்கிறார்கள்.! இது உண்மையில் இயற்கைக்கு புறம்பான,இயல்பிற்கு மாறான ஒரு விசயமாய் இருப்பதால், அதனால் வரும் பல பக்க விளைவுகளை நாம் தாங்கித்தான் ஆகவேண்டும்.!
கணவன் மனைவிக்கு இடையில் சில பிரச்சனைகள் விஸ்பரூபம் எடுப்பதற்கு முக்கியக் காரணமே ஆணின் செயல்பாடும் பெண்ணின் பேச்சு மாகத்தான் இருக்கும்.!
சில இடத்தில் இது அப்படியே மாறியும் இருக்கலாம்.! இருவருமே ஒருவருக்கொருவர் அதை சீரமைத்துக் கொண்டால் இல்லறம் இனிய வரமாக ஆகிவிடும்.!
*நலம் பெருகட்டும்…*
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
☘AUM HERBALS
Mobile & whatsapp
*9629368389*
No comments:
Post a Comment