I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: November 2017

Monday, 27 November 2017

உள்ளதை சொல்கிறேன்

மனதோடு பேசுகிறேன்

1.மனதின் பிம்பங்கள் …

"என்னை உயிரை ஒளியை
தேடி அலைந்தேன் …
உடலை மனதை ஆன்மாவை
கடந்து போனேன் …
கண்ணில் வந்தது
இறைவனின் பிம்பம் …
அவன் கரத்தில் தெரிந்தது கருணையின் அம்பு.!"

பால் சுவைக்கு தாயின் மடி தேடியழுத மழலைப்பருவமும்
அறிவுப்பசிக்கு ஆசானாய் தந்தையின் நேசம் வேண்டிய  சிறுமைப்பருவமும்  சட்டென்று போய் விடும். ஆனால்,பிறந்த இடத்தை நாடுகிறதே பேதை மனம் பிறந்த இடத்தை நாடுகிறதே என்று பித்துப்பிடித்தலையும் வாலிபப் பருவம் யாருக்கும் சட்டென்று போகாது.இந்த  பருவத்திலேயே கல்வியையும் வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தையும்  பெற வேண்டிய நிர்ப்பந்தம் வேறு இருக்கிறது.ஆண் - பெண் ஈர்ப்பென்பது - உடுக்கை இழந்தவன் கை போல வேகமாக செயல் படும் அனிச்சை செயல். அதை வெறுமனே விட்டு விட்டால் அதுவே மெதுவாக போய்விடும். அதை அடக்க நினைத்தாலோ,இடையூறு கொடுத்தாலோ வீறு கொண்டெழுந்து வேண்டாததை எல்லாம் செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. அதிலும் சிலருக்கு உடல் மயக்கம் உடலை பிறர் தூக்கி சுமக்கும் காலம் வரை போகாது.

குழந்தை பருவம் முதல் ஒவ்வெரு பருவத்திலும்  மனித மனம் எப்படி இருக்கிறது,அது எப்படி இருந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் தனக்கே கூட உபயோகமாக இருக்கும்? என்பதை பற்றியே இந்த தொடரில் பேசப்போகிறோம்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதார் என்று மழலை மொழியின் இனிமை பற்றி வள்ளுவப் பெருந்தகை எத்தனை இனிதாக கூறிவிட்டார். மழலை மொழி மட்டுமல்ல மழலை மனம் கூட தேனினும் இனிது. மழலையின் செயல்களோ தடையான பெரும் பாறைகளை எல்லாம் கடந்து ஓடும் நதிநீரைப் போன்றது. உலகில் உள்ள எல்லா பாலுட்டி உயிர்களுமே  இயல்பாகவே அமுதை தேடி தாய்மடியை நோக்கி நகரும். இது ஒரு அனிச்சை செயல்.ஆனால், ஒரு குழந்தை பேசும் மொழியும் செய்யும் செயலும் தாய்,தந்தை,உறவினர்கள் மற்றும் நண்பர்களின்  செயல்களே.  குழந்தைகளிடம் நாம் அம்மா சொல்லு,அப்பா சொல்லு,  டாட்டா சொல்லு,கொன்று சொல்லு, இதை எடுத்துக்கொடு, தரமாட்டேன் சொல்லு, போப்பானு சொல்லு என்று பல வார்த்தைகளை பேசவும். நட,நில்,திரும்பு எழுந்திரு,சாப்பிடு, மின் விளக்கைப்போடு, பந்தை எடுத்துட்டு வா என்று பல செயல்களையும்  செய்ய கற்பிக்கிறோம். இதன் மீட்சியை பிற்பாடு பள்ளியிலும் கல்லூரியிலும் கற்க அனுப்புகிறோம். அதாவது நாம் நமக்கு தெரிந்தவற்றை அறிந்தவற்றை பிழைப்பதற்கு தேவையானவை என்று நாம் நினைப்பவற்றை  பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். ஒரு சர்க்கஸ்காரர் ஒரு வயதிலேயே பிள்ளையின் உடலை திருகி, எதிர் காலத்தில் தன்னைப்போல தன் பிள்ளையை ஆக்க முயலுகிறார். கணக்கு வாத்தியார் இரண்டு வயதிலேயே எளிய கணக்கை கற்பிக்க முடியுமா என்று பார்க்கிறார். ஐந்து வயதிலேயே ஆயிரம் திருக்குறளை சொல்வது, எட்டு வயதிலேயே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடி பரிசுபெற வைப்பது,பத்து வயதிலேயே பட்டி மன்றங்களில் பேச வைப்பது, பள்ளியில் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்க வைப்பது. என்று எத்தனையோ விதத்தில் நம் பிள்ளைகளை நாம் நினைத்த இடத்திற்கு நகர்த்துகிறோம். ஒரு நாட்டு வைத்தியன் எதிர் காலத்தில் தன் மகன் ஒரு படித்த மருத்துவனாக வரவேண்டும் என்றும் ஒரு தொழிலாளி தன் மகள் முதலாளி ஆகவேண்டும் என்றும் கூறிக்கூறியே வளர்க்கிறார்கள். இது சரியா? பிள்ளையிடம் தாய் இதுதான்  அப்பா பாரு, என்று சொல்வதை விட அப்பா என்றால் யார், அவரின் முக்கியத்துவம் என்ன? என்று படிப்படியாக கற்பிக்க வேண்டும். மின் விளக்கை போடு என்று சொல்வதை விட மின் விளக்கை போட்டால் இருள் போகும் ஒளி வரும் நமது வேலைகளை தெளிவாக செய்ய முடியும் என்று கற்பிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பலரும் உன் தந்தை கோபக்காரர், உன் மாமன் ஏமாற்றிவிட்டான், இந்த கம்பை எடுத்து உங்க தாத்தாவிற்கு இரண்டு அடிபோடு என்றெல்லாம்  கூறி மனிதர்களை வெறுக்க கற்பிக்கிறோம். குறளையும் ஆட்டத்தையும் கற்பித்து அதை பெருமிதம் கொள்ள செய்து பல பரிசுகளை வாங்க வைக்கிறோம். ஆனால்,குறளின் பொருளை மனதில் பதித்து அதை நடை முறையில் கடைப்பிடிக்க செய்யவில்லை. இங்கிருந்து தான் சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை களாக வெற்று மனப்பாட மக்குகளை உருவாக்கும் வெள்ளையனின் மெக்கல்லோ கல்வி முறைக்கு ஆள் சேர்க்கிறோம்.
நமது பிள்ளைகளுக்கு திருக்குறள் தெரியாது. ஒருவேளை  அப்படியே திருக்குறளையும்,  தமிழ் இலக்கிய ஞானங்களையும் அவர்களுக்கு கற்பித்தாலும் அதன் படி வாழ்ந்தால் நீ முட்டாளாக ஆக்கப்படுவாய் என்று கூறியே வளர்த்து வருகிறோம். எப்படியாவது அடித்துப்பிடித்து எல்லாவற்றிலும் நீ முதன்மையாக வர வேண்டும். என்று; கூறிக்கொண்டே மனித உடலின்  அடிப்படையான உடல் சுத்திகரிப்பு முறையான யோகா,மூலிகை ஞானம் போன்றவற்றின் அறிவையும் உண்மையையும் கற்பிக்காமல் அதையும் பத்தோடு பதினொன்றாக தெரியும். என்ற அளவில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி உண்மை என்ற பொய்யை நம்பி  நமது பிள்ளைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகளையும் போட்டு வருகிறோம். விஞ்ஞானம்  பொய்யா என்று நீங்கள் கேட்கலாம். விஞ்ஞானம் பொய்யல்ல மாறிக்கொண்டே இருப்பது. அதனால்,அது நிலையான உண்மை இல்லை.
என்று நான் கூறினால் அதை மறுக்கும் திராணி எவருக்கும் கிடையாது. அடுத்து எதெல்லாம் வியாபாரம் ஆகிவிட்டதோ அவை எல்லாம் விஞ்ஞானம் இல்லை. ஒரு சிலரின் பிழைப்பிற்கான வழி. சில தடுப்பூசிகளை இலவசமாய் தானே போடுகிறார்கள் என்றால்; ஆமாம் உங்களுக்கு  இலவசம் தான். ஆனால்,அரசாங்கம்  மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோடியை கொட்டியதாய் கணக்கு காட்டியே எந்த திட்டத்தையும் அறிவிக்கும். அதில் பெரும்பகுதி ஆள்வோருக்கும் அதிகாரிகளுக்கும் ஏன் எதிர் கட்சியினருக்கு கூட போகும். இது போன்ற திட்டம் இல்லை என்றால் இந்திய அரசியல் எத்தர்களுக்கு பிழைப்பே  இல்லை. இது போன்ற விசயங்களில் இருந்து நாம் விடுபட்டு நமது தலைமுறையை வாழ்வாங்கு வாழ செய்ய வேண்டுமானால் நமது பண்டைய வாழ்வியல் முறை,கல்வி முறை,யோகா போன்ற அனைத்தையும் முழுமையாக கற்பிக்க வேண்டும். கல்வி,மருத்துவம் இவை இரண்டும் இயற்கையானதாய் இலவசமானதாய் இருக்க ஆள்வோர்களை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்.நாம் வெளிநாட்டு கல்வி முறையையும் மருத்துவ முறையையும் மொழியையும் கற்றால் தானே வெளிநாட்டு சமூகத்தோடு இயைந்து உலக சந்தைக்கு போக முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.  உலகில் நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை கொண்ட இந்தியாவிற்கு  அவர்கள் வேண்டுமானால் பிழைக்க வரட்டும். மருந்து முதல் உணவு வரை உள்ள தங்கள் குப்பைகளை இங்கு விற்க வரவேண்டாம். அதற்கு யாரும்  தரகு வேலையும் செய்ய வேண்டாம்.
நமது வளங்களையும் ஞானங்களையும் சுரண்டி நாம் வாழ்வையே வியாபார பொருளாய் மாற்றிய உண்மையை நமது பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்போம்.

இன்னும் பேசுவேன்  …

-ஏகப்பிரியன் DYT

Sunday, 26 November 2017

அமுக்ரா சூரணம்

உடல்எடைகுறைய

சிறுநாகன் பூ - 5 கிராம்  ஏலம் - 10 கிராம்  கிராம்பு - 20 கிராம்  திப்பிலி - 40 கிராம்
மிளகு - 80 கிராம்  சுக்கு - 150 கிராம்  அஸ்வகந்தா(அமுக்கரா) - 320 கிராம்

அப்படியே இதற்கு சம எடை பனங் கற்கண்டு சேர்த்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பொடியை கால் டம்ளர்  சூடு நீரில் கலந்து குடித்துவர உடல் எடை குறையும்.

-இணையப்பகிர்வு

Tuesday, 21 November 2017

இணையில்லா இயற்கை வாழ்வியல் நூல்

*ஆதி மருத்துவம்*
[புத்தக சுருக்கம்]

தினமும் காலையில் எழுந்ததும் இரண்டு முதல் மூன்று டம்ளர் மண்பானை நீர் குடியுங்கள்.!

தினமும் ஒருமணி நேரம் யோகா/ உடற்பயிற்சி செய்யுங்கள்.!

மைதா,சீனியில் செய்த உணவுகள்,வண்ணப்பொடி,சுவைப்பொடி சேர்த்த உணவுகள்,காப்பி,தேநீர்,பிராய்லர் சிக்கன்,பிராய்லர் முட்டை,ஐஸ்மீன்,குளிர்பானம்,இரசாயண ஊட்டச்சத்து பானம்,சாக்லேட்,பேக்கரி உணவுகள்,
பாக்கெட் உணவுகள்,சுத்திகரித்த உப்பு,சோடாப்பு போன்றவற்றில் செய்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.!

சமையலுக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக செக்கு கடலை,தேங்காய்,நல்லெண்ணெய்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.! புதிது புதிதாக வரும் ஆலிவ் எண்ணெய்,பாதாம் எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்,அரிசி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய்களையும் பயன்படுத்தாதீர்கள்.!

வீட்டுக்குத்தேவையான மசாலாப்பொருட்களையும் மாவுக்கான பொருட்களையும் நீங்களே நேரடியாக வாங்கி சுத்திகரித்து அரைத்து பயன்படுத்துங்கள்.! முடியாவிட்டால் உங்கள் அருகிலேயே எளிய முறையில் இவைகளை தயாரிப்பவர்களிடம் வாங்கி பயன்படுத்துங்கள். பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்கி ஏமாறாதீர்கள்.!
அதோடு I.S.I,I.S.O  சான்றிதழ்களும் விருதுகளும்  பணம் கொடுத்தால் இன்று அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
என்பதை மறக்காதீர்கள்.!

வீட்டில் முடிந்தவரை சிறிய நாட்டு இரக காய்கறி,கீரைகளை பயிரிடுங்கள்.!
இரசாயண உரமிட்டு விளைவித்த
உணவுப்பொருட்கள் மற்றும் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை முடிந்தவரை தவிருங்கள்.!

தினமும் ஒருவேளை தேங்காய்,வாழைப்பழம்,கருப்பட்டி,அவல்,ஊறவைத்த தானியங்கள்,பச்சை காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுங்கள்.
இன்னொரு வேளை கைக்குத்தல் அரிசியில் செய்த உணவு,மற்றொருவேளை கேழ்வரகு தோசை,சிறுதானிய கஞ்சி போன்றவற்றை உண்ணுங்கள்.
இதற்கு இடைப்பட  வேளைகளில்  உண்பதை முழுவதும் தவிருங்கள். தேவைப்பட்டாலோ பசி இருந்தாலோ மண்பானை நீர்,பழச்சாறு,பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் உண்ணுங்கள்.!

தினமும் ஒரு வேளையாவது பசி வந்த பின்பு உண்ணுங்கள்.உணவு உண்ணும் முன்பு குளித்து அல்லது கைகால் கழுவிய பின் உண்ணுங்கள்.
உணவை நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து, மெதுவாக ஒரே மனநிலையில் உண்ணுங்கள்.!
உணவிற்கு அரைமணி நேரம் முன்போ அல்லது அரைமணி நேரத்திற்கு பின்போ நீர் குடியுங்கள். உணவோடு கூடவே நீர் குடிக்காதீர்கள்.!

மனதை எப்பொழுதும் மகிழ்வாக நேர்மறை எண்ணத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.!

நெகுழித்தாள்,நெகுழி டம்ளர்,காகித டம்ளர் போன்றவற்றில் பரிமாறப்படும் எந்த சூடானப் பொருளையும் உண்ணவோ குடிக்கவோ செய்யாதீர்கள்.!

தினமும் ஒரு முறையாவது கழிவறை செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நோயாளிகள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது மூலிகை மருந்து,எனிமா கேன் போன்றவற்றை பயன்படுத்தி பெருங்குடலை சுத்திகரிப்பதை வழக்கமாக்குங்கள்.!

யோகாவில் உள்ள கபாலபதி [தலைசுத்தி] நேதி [மூக்குசுத்தி]சூரண தௌதி [உணவுப்பாதை சுத்தி]திரட்டகா,[கண்சுத்தி]அக்னிசாரா கிரியை [பெருங்குடல் சுத்தி] போன்ற உடல் சுத்திகரிப்பு பயிற்சிகளை தெரிந்து வைத்துக் கொண்டு மாதத்திற்கு இரு முறையோ அல்லது தொற்று நோய்கள் பரவும் வேளையிலோ தொடர்ந்து செய்து வாருங்கள்.!

நம்நாட்டு மூலிகை மற்றும் உணவுப்பொருட்களின் பயன்களை அறிந்து பயன்படுத்துங்கள்.!

இரசாயண மருத்துவத்தை அவசர சிகிட்சை மற்றும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே பயன்படுத்துங்கள்.!

கொசுமருந்து, குக்கர் போன்றவற்றை பயன்படுத்தாது இயற்கை கொசுவிரட்டி மண்பானை போன்றவற்றை பயன்படுத்துங்கள்.!

ஏசி அறைகளில் இருக்காமல் இயற்கை காற்றோட்டம் உள்ளப்பகுதியில் வாழுங்கள்.!

தடுப்பூசி,இரசாயண மருந்துகளின் தீங்குகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.!

பற்பசை,சோப்பு,முக பசை போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.விளம்பரம் செய்யும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்காதீர்கள்.!

உள்ளூர் இயற்கை பொருள் உற்பத்தியாளர்கள்,எளிய மூலிகை மருந்துகளை தயாரிப்பவர்கள்,
சிறு வியாபாரிகளை தொடர்ந்து ஆதரியுங்கள். ஏனெனில் மக்கள் ஆதரவு இல்லாத பட்சத்தில் இந்தத்தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.!
இயற்கையை பற்றிய விழிப்புணர்வை பரப்பியவர்கள் நம்மாழ்வார்  போன்ற எளிய மனிதர்களும் இயற்கை பொருள் உற்பத்தியாளர்களும் தான்.இவர்களை போன்றவர்களின் உழைப்பை பெரு நிறுவனங்கள் சுரண்டி கொழுக்க அனுமதிக்காதீர்கள்.!

வாழையிலை குளியல்,மண்குளியல்,சூரியக்குளியல் போன்ற பயிற்சிகளையும் தேவையான போது செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.!

மதம்,சாதி அரசியல் அமைப்புகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள்.!
ஆசையால் உந்தப்பட்டு எந்த பெரிய விசயங்களையும் செய்யாதீர்கள்.!

முடிந்தவரை கடன் வாங்காமல் இருப்பதை கொண்டு மகிழ்வாய் வாழுங்கள்.!

மாதத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.!

தினமும் தியானம் செய்வதையும் பிராத்தனை செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.!

மருத்துவம் என்பது ஒன்று யோகா,பிராணசிகிட்சை,மூலிகை மருத்துவம், தொடு சிகிட்சை,வர்ம வைத்தியம்,மனசிகிட்சை,நம்பிக்கை வைத்தியம்  போன்று  இயற்கையை சார்ந்தது.மற்றது இரசாயணத்தை சார்ந்தது. இவை தவிர புதிது புதிதாக வரும் எந்த மருத்துவ முறையையும், பயிற்சி முறைகளையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஆராய்ச்சி உண்மை என்று கூறுனாலும் கடைப்பிடிக்க வேண்டாம்.
ஏனெனில் சமீப காலமாக பல்வேறு புதிய மருத்துவ முறைகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.!

இயற்கை முறையில் நோய்கள் குணமாக மூன்று நாள் முதல் 24 மாதம் வரை காலம் பிடிக்கலாம். அதுவரை பொருமையாக வாழ்வியல்  முறைகளை தொடர்ந்து  கடைப்பிடியுங்கள்.நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட அலோபதி மருத்துவ நிபுணர்களிடமும் இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களிடமும் ஆலோசனை செய்த பின்பே முக்கிய முடிவை எடுங்கள்.!

நாம் மேலே கூறியுள்ள கருத்தை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை முழுவதும் படியுங்கள். நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற விதத்தில் பிரித்து, கருத்துகளை உள் வாங்கி பயிலுங்கள்.அப்படி செய்தால் மட்டுமே இயற்கை வழியில் உங்களுக்கு உள்ளிருந்து வந்த எந்த வியாதியும் குணமாகும். கதை புத்தகம் போன்று வேகமாக படிப்பதால் சரியான பயன் கிடைக்காது போகலாம்.!

சந்தேகமாகவும் அச்சமாகவும் உள்ள எந்த மருத்துவ முறைகளையும் பயன்படுத்தாதீர்கள்.!

ஆதி மருத்துவ முறைகள் பற்றிய ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கைப்பேசியில் [9629368389[ தொடர்புகொள்ளுங்கள்.!
உங்கள்
அனுபவங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.!

உங்கள் பகுதியில் ஒருங்கிணைந்த ஆதி மருத்துவக்கலை வகுப்பை நடத்தி மக்கள் தாங்கள் இழந்த முன்னோர் வாழ்க்கை முறையையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் பெற உதவி புரியுங்கள்.!
அதன் மூலம் உங்கள் தலைமுறை இம்மண்ணில் வாழ்வாங்கு வாழும் வரம் பெறுங்கள்.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன் DYT

ஆதி மருத்துவம் 382 பக்கம்
நன்கொடை 360 ரூ/-
உங்கள் தேவைக்கு அழைக்கவும்
Mobile & Whats App
9629368389

aumherbals.blogspot.in
amyogatrust.blogspot.in

Sunday, 19 November 2017

Friday, 17 November 2017

பெருங்குடல்,மலவாய் வீக்கம்,குடல்வால் குணமாக

பெருங்குடல், மலவாய் வீக்கம் குடல்வால் மற்றும் புண்  குணமாக

தினமும் காலையில் எனிமா கேனை பயன்படுத்தி வெதுவெது நீரில் இயற்கை  எனிமா எடுத்துக்கொள்வதோடு  தினமும் காலையில் உணவிற்கு பின் 10 கிராம் திரிபலா சூரணத்தை சிறிது பசுநெய்யில் கலந்து 12 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். அதோடு தினமும் இரண்டு வேளை சமைக்காத உணவு கொய்யா,பப்பாளி,அத்திப்பழம்,தேங்காய்,பூவன் வாழைப்பழம்,வெண்பூசணிச்சாறு,கற்றாளைச்சாறு போன்றவற்றை உண்பதோடு ஒரு வேளை கைக்குத்தல் அரிசிக்கஞ்சியை குடித்து வந்தால் சரியாகிவிடும். இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக்கொண்டுஒன்பது மணிக்குள் உறங்க வேண்டும்.
அர்த்த ஹலாசனம் (60 டிகிரி)  10  எண்ணிக்கை விதம் 4 முறை. மட்ச்யாசனம் 50 எண்ணிக்கை ஒரு முறை செய்தால் விரைந்த குணம் கிடைக்கும்.
நலம் பெருகட்டும் …

aumherbals.blogspot.com

ஒரு குருவின் கதை

*கற்பவனுக்கு ஆயிரம் குரு*

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில்
ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர்
கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த
கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று
கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர்,
நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள்,
இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை
மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு
ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு
பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று
பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை
நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு
இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன.
கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான்
விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில்
உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே
ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி
ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.
ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு
எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.

நான் கொஞ்சம் ஒரு வினாடி
தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது
ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச
வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன்.
நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன்,
மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு
இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்,
தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார்.
அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும்
கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும்
அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும்
கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர்
நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும்
எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள்
கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன்
சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில்
எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும்
நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை,
எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் –
அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள்
விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி
செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு
நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும்
ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி
நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள்
என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே
விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம்
அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல்
குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய்.
நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க்
கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது.
அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய்
இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது
குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே
திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது,
தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால்
தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை
குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது.
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி
வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும்
என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து
விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப்
பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது
எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது.
ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது
மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு
குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை
ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக
ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது
அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை
ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி
எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது,
நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து
வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு,
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று
பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான்.
என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த
வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன்
என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி
கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும்
பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.

ஆம், அது உண்மை. எனக்கு
ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள்
இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.

நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன்
என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற
ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி,
தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது
அவசியம்.

சீடனாக இருப்பது இந்த பாதையில்
மிக அவசியமான ஒரு விஷயம்.

சீடனாக இருப்பது என்றால் – கற்க
முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு
குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக்
கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட
ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக்
கொள்கிறாய்.

குரு என்பவர் இந்த இயற்கையின்
சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம்,
அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம்
ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக
இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும்.
குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு
வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை
கடந்து செல்ல உதவுபவர்.!

-இணையப்பகிர்வு

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...