I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: June 2018

Saturday, 30 June 2018

இயற்கை வாழ்வியல் வகுப்புகள்

ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் வழங்கும் யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சி வகுப்புகள்

1.AM YOGA TRUST
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்.3
நேரம்:காலை 6.20 மணி
முதல் காலை 7.20 மணி. திங்கள் முதல் வெள்ளி வரை.
யோகாசனம்,பிராணாயாமம்,கிரியை,தியானம் & இயற்கை வாழ்வியல் நுட்பங்கள். தொடர் வகுப்பு.!
கைப்பேசி:9629368389 (BSNL)
9629131089(AIRTEL)

2.அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி.
யோகாசனம்,பிராணாயாமம்,
கிரியை,தியானம் & இயற்கை வாழ்வியல் நுட்பங்கள்.
மாலை 4 மணி முதல்
5 மணி வரை.
சொவ்வாய்,வியாழன்,சனி.
கைப்பேசி:9629131089.

ஆதிமருத்துவம்

இயற்கை வாழ்வியல் முறைகள்,யோகா நுட்பங்கள்,வர்ம சிகிட்சை முறை,
பிராண சிகிட்சை நுட்பங்கள்,எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை, இயற்கை வழியில் நோய்களை நீக்கி ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள்.இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் முழுநாள் வகுப்பாகவோ அரைநாள் வகுப்பாகவும் தொடர்ந்து
நடந்து வருகிறது.
50 நபர்களும், அதற்கு மேலும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளக் கூடிய வகையில் நிகழ்வை ஏற்பாடு செய்தால்
சிறப்பாக, முழுமையான ஆதிமருத்துவ வகுப்பு நடைபெறும்.

இந்த மாதம் ஜூலை 13 வெள்ளியன்று ஆதிமருத்துவம்  பயிற்சி கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறுகிறது.

இடம்:
அரசு பாத சிகிட்சை மையம்
64 a. தாம்சன் தெரு,
(DPS அருகில்)
பேலஸ் சாலை,
நாகர்கோவில்.1
முன்பதிவிற்கு:
9487302268
9585917008.

இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்.!

தொடர்பிற்கு:
9629368389 (BSNL)
9629131089 (AIRTEL)
www.aumherbals.com

கட்டி கரைய

கட்டி கரைய வைத்தியம்

உடல் மேல் உண்டாகும் கட்டியை  கரைக்கும்...
         " திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்.!
மேலும் இந்த மூலிகை சாறுடன் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.!

இணையப்பகிர்வு

Wednesday, 27 June 2018

இயற்கை வாழ்வியல் வகுப்பு

ஆதிமருத்துவம்
(இயற்கை வாழ்வியல்)

நாகர்கோவில்

*இயற்கை மருத்துவ வரலாறு
*உடலியல் செயல்பாடு
*இயற்கை உணவுமுறை
*யோகாசனம்,தியானம்
*உடல் சுத்திகரிப்பு முறைகள் *வர்மப்புள்ளிகளை
இயக்கும் முறை
*எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
*பிராணசிகிட்சை
*அவசரகால முதலுதவி முறைகள்
*காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களை நீக்கும் இயற்கை
வாழ்வியல் நுட்பங்கள்.!

பயிற்சியாளர்: ஏகப்பிரியன் மு.இஸ்மாயில்DYT

நாள்: ஜூலை 13,
வெள்ளிக்கிழமை
நேரம்: 10 am and
4.00 pm
இடம்: பாத சிகிட்சை
புத்துணர்வு மையம்,
64 a,தாம்சன் தெரு
(DPS அருகில்)
பேலஸ் சாலை,
நாகர்கோவில்.1

நன்கொடை:301/-
(மதிய உணவு உட்பட)

தொடர்பிற்கு:9487302268
9585917008
www.aumherbals.com

*முன்பதிவு அவசியம்

Tuesday, 26 June 2018

நன்றி நட்பாளர்களே.!

மனதோடு பேசுகிறேன்

---ஏகப்பிரியன்----

23.அன்பால் ஆன இதயங்களே …

உங்களுக்கு என்ன வேண்டும்,உங்களுக்கு
நான் எப்படி உதவ முடியும்?
எனக்கு உங்கள் நூல்களில் ஒரு ஐந்து ஜோடிகளை உடனே எடுத்துத் தாருங்கள்.
என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளேன்.
எனக்கு சில மூலிகை தயாரிப்புகளை உடனே அனுப்பி வையுங்கள் பணம் செலுத்திவிட்டேன்.! மீண்டும் வகுப்புக்கு வருகிறேன், ஏன் இத்தனை விரக்தி, என்ன நடந்தது நண்பரே?

இப்படி பல்வேறு உதவிகளும் விசாரிப்புகளும் ஒரிரு நாட்களாக தொடர்ந்து என்னை வந்து சேர்ந்து கொண்டே உள்ளன.! 
உண்மையில் இது எதையும் எதிர்ப்பார்த்தோ அல்லது மிகவும் விரக்தியான மன நிலையிலோ அந்தப் பதிவை நான் போடவில்லை.

ஏதோ தோணிச்சி எழுதினேன். அதன் மூலம் என்னைச் சுற்றி உள்ள எத்தனை பேர் என்னை,எனது மனநிலையை பின் தொடர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். உடுக்கை இழந்தவன் கை போல எத்தனை எத்தனை, வேகமாக என்னைத் தூக்கி நிறுத்த எனது நட்பாளர்கள் முயல்கிறார்கள்? என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டேன். தூய அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட, உங்கள் அத்தனை  இதயத்தின் ஒசைகளையும் கேட்டு நான் நெகிழ்ச்சிக் கொள்கிறேன், இருமாந்துப் போகிறேன்.!

நன்றி நட்பாளர்களே,
மிக மிக நன்றி.!
இந்த வார்த்தையை இதயத்திலிருந்து கூறுகிறேன்.!
உங்களைப்போன்று பிரிதொரு ஜீவனின் வதை கண்டு துடிக்கும்  இதயத்தை விட உயர்ந்த உதவியோ, பொருளோ இந்த  உலகத்தில் எங்கும் இல்லை.!

எனது தேவை பணமோ, பொருளோ, ஆறுதலோ  அல்ல; எனது பாதைக்கு விளக்கும் எனது கலைக்கு களமும் வேண்டும்.

இயற்கையை கற்க வரும் ஒவ்வெரு வரும் எனது பாதையை பலப்படுத்துகிறீர்கள்.இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஒவ்வெருவரும்  எனக்கு நம்பிக்கையை தருகிறீர்கள். ஆனால்; எனக்கு இப்பொழுது நான்  கற்றவற்றை உலகமெல்லாம் விதைக்க உதவுகின்ற, இயற்கை நேசர்கள்  தேவை.!

ஒவ்வெரு ஊரிலும் எங்கெல்லாம் ஒரு சிறுகூட்டம் கூடுகிறதோ,அங்கெல்லாம் இயற்கை வாழ்வியலின் அவசியத்தை உணர்த்த வேண்டும். என்றும்; அதன்மூலம் இந்த வர்த்தக உலகின் இரும்புப்பிடியில் சிக்குண்டு உடல் நோயாலும், மனநோயாலும் பாதிக்கப்பட்டுள்ள கோடான கோடி மக்கள் மீண்டு,அவர்கள் அனைவரும் இயற்கையின் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் உணர்ந்து என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
என்பதும் தான் எனது தேவை.!

என்னை,எனது நம்பிக்கையை உங்களால் உணர முடிகிறதா? எனது குறிக்கோளை அடைய உங்களால் எனக்கு உதவமுடியுமா?

அப்படியானால் உங்கள் பகுதியில்  நமது " ஆதிமருத்துவம் " [இயற்கை வாழ்வியல்] பயிற்சி வகுப்புகளை நடத்திட ஏற்பாடு செய்யுங்கள்.

இதுவரை சென்னை,திருப்பூர்,அரியலூர்,திருச்சி,ஒசூர்,திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களில் சிறப்பாக " ஆதிமருத்துவம் "
வகுப்பு நடைப்பெற்று, பலரின் ஆரோக்கிய குறைப்பாட்டைப் போக்கி இயற்கை மனிதர்களாய் மாற்றி உள்ளது.
வகுப்பில் இயற்கை வாழ்வியல் வரலாறு,உணவு முறை,எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை,முக்கிய யோகா நுட்பங்கள், சிறப்பான வர்மக்கலை நுட்பங்கள்,பிராண சிகிட்சை நுட்பங்கள் போன்றவை தெளிவாக கற்பிக்கப்படும்.!
உங்கள் ஊரிலும் இந்த வகுப்பை ஏற்பாடு செய்யுங்கள் அதுவே எனக்கு நீங்கள் செய்யும் ஆகப்பெரிய உதவியாய் இருக்கும்; இயற்கை வரலாறும் உங்களை காலமெல்லாம் வாழ்த்தும் … !

வாழ்க வளமுடன்
நலம் பெருகட்டும் …

தொடர்பிற்கு;9629131089
9629368389
www.aumherbals.com

Sunday, 24 June 2018

மேகநோய் நீங்குவதற்கு

வெள்ளை நோய் ,உடல்சூடு,கண்
எரிச்சல் குணமாக

           பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு முழுவதும் வைத்து  மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் காலை வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.

குளியலுக்கு….

மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க

சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!

🥦இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
www.aumherbals.com
Mobile 9629131089
9629368389

Saturday, 23 June 2018

அரசின் மந்தம்

தனியார் மயவேகம்

நேற்று திடீரென்று எனது BSNL sim "9629368389" தனது
அனைத்து சேவையையும்  நிறுத்திவிட்டது.
இன்று
மற்றொரு எண்ணான 9629131089 எண்
(AIRTEL) net கார்டு
போட்டதும்  வேகமாக
செயல்படுகிறது.
*என்னமோ நடக்கிறது*
மூலிகைப் பொருட்கள் தேவையான நண்பர்கள் புதிய எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

www.aumherbals.com

Friday, 22 June 2018

இயற்கை இரகசியம்

இயற்கையில் முழுமையாக நுழைந்து விடுங்கள்

காலை எழுந்ததும்  பயன்படுத்தும் பற்பசை முதல் இரவு உபயோகப்படுத்தும் கொசு திரவம் வரை தவிர்த்த பின்; செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால்,கம்பு,வரகு,கைக்குத்தல் அரிசி போன்ற உணவுப்பொருள்களை எடுத்துக் கொண்டு தொடர் உடற்பயிற்சிகளையும் செய்து, சரியான மூலிகை மருந்தையும் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாகி, நோயின் தாக்கம் குறைந்து  ஆரோக்கியம் மேம்படும். அடிப்படையை மாற்றாமல் செக்கு எண்ணெய்,நாட்டு மாட்டுப்பால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் எந்த பயனும் விளையாது. ஏனென்றால் செக்கு எண்ணெய்,கம்பு,கைக்குத்தல் அரிசி, மூலிகை,உடற்பயிற்சியால் சேரும் ஆரோக்கியத்தை விட பத்து மடங்கு அதிகமான தீங்கு பற்பசையிலும்,மினரல் வாட்டரிலும்,தேநீரிலும்,சோப்பிலும்,பிஸ்கெட்,ரொட்டி,கொசுமருந்து போன்றவற்றிலும் உள்ளது.
இயற்கையில் முழுமையாக நுழையாத வரை ஆரோக்கிய மாற்றம் சாத்தியமில்லை.

"ஆதிமருத்துவம்"முழுமையான இயற்கை வாழ்வியல் நூல் தேவைக்கு அழைக்கவும்
கைப்பேசி:9629368389

-ஏகப்பிரியன்
{இயற்கையின் தோழன்}
www.aumherbas.com

Thursday, 21 June 2018

சில நேரத்தில் சில சிந்தனைகள்

நீங்க அதுக்குத்தான் சரிப்பட்டு வருவீங்க போல …

நான் இயற்கை வாழ்வியல் வகுப்பை இலவசமாக எடுத்தாலும் கூட வரமாட்டீங்க?

கட்டண வகுப்பென்றாலோ தொகை அதிகம் என்பீர்கள்.

பல நாள் தவம்  செய்து பலநூல் கற்றாய்ந்து நான் எழுதிய நூலையும் வாங்கிப் படிக்கமாட்டீர்கள்.!

பல்வேறு வாழ்வியல் ஆரோக்கிய வழிமுறைகள் பற்றி நான் எழுதிய எனது பதிவுகள் எதையும் முறையாக படித்து சிந்தித்து
கடைப்பிடிக்க மாட்டீர்கள்.

இயற்கை வாழ்வியல்,யோகா பற்றிய விளம்பரங்களை நான் போட்டால்
அதை நீங்கள் வேறு குழுவில்
பகிரகூட மாட்டீர்கள்.

எனது வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவதற்கும் நான் உங்களை தாங்க வேண்டும் இல்லையா?

எனென்றால்? "பட்டினி கிடந்தால் எல்லா நோய்களும் போய்விடும், கொய்யா தின்றால் புற்றுநோய் வராது, சுவைத்து சாப்பிட்டால் பித்தப்பை கல் கரையும், குண்டலினியை ஏற்றினால் குபேரனாகலாம்,மாட்டுக்கறி தின்றால் சொர்க்கம் கிடைக்கும். போன்ற;எந்த  கவர்ச்சிகரமான தத்துவங்களையும் நான் கூறுவதில்லை.
அதனால் மந்திரத்தில் மாங்காய் விழவைப்பேன் என்று கூறும் பலரையும் போற்றிப்புகழ்ந்து விட்டு, என்னிடம் வந்து சளிக்கும் முகப்பருவிற்கும் சடுதியில் மருந்து கூற கேட்கிறீர்கள்.

போங்கய்யா,போய் நோய்களை காட்டி மிரட்டும் புனித மருத்துவனிடம் சென்று மருந்தை வாங்கிக்குடித்து உடலுக்கு விசம் வைத்துக் கொல்லுங்கள். நீங்கள் இயற்கை வாழ்வியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீர்கள்.

நான் இனி,ஒரே நாளில் ஆண்மை விருத்தியடையலாம், பெண் உடலின் புண்ணிய பகுதிகள்,நாலே மாதத்தில் பிள்ளைப் பெற்றுக்கொள்ளலாம், நோயே தாக்காமல் 200 ஆண்டுகள் வாழலாம் போன்ற
தலைப்புகளோடு உங்களிடம் நெருங்கி வர முயல்கிறேன்.
அதோடு வேண்டுமானால் மதனகாம லேகியமும் விற்றுப் பிழைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.!

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
(இயற்கையின் தோழன்)
www.aumherbals.com

Tuesday, 19 June 2018

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

மனதோடு பேசுகிறேன்

---ஏகப்பிரியன்---

22.இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்

ஆராய்ச்சியும் வளர்ச்சியும் நலத்திட்டங்களும், பாதுகாப்பும் மக்களுக்காகவா, அல்லது அரசியல் ஏஜன்டுகளும் வெளிநாட்டு பெருமுதலாளிகளும்  மக்களை ஏமாற்றுவதற்காக இந்த வார்த்தைகளை மக்களிடம் பரவ விடுகிறார்களா?

விடை உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாய் இருக்கிறது. ஆனாலும், 300 ரூபாய் தினக்கூலிக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் RSS சிந்தாந்தத்திற்கும் ஆதரவாக முகநூலில் பதிவிடும் பலரும் இதுபோல திட்டங்களை, இதுவரை இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் கொண்டு வந்ததே இல்லை.  இதனால் இந்தியா இப்பொழுதே வல்லரசு ஆகிவிட்டது,கடனெல்லாம் அடைந்து விட்டது. என்று பல்வேறு மாயப்பொய்களை மக்களிடம் பரப்புவதை முழு நேர பணியாக வைத்துள்ளனர்.

மேற்கண்ட கட்சியினரும் எடப்பாடி அதிமுகவில் மாட்டிக்கொண்ட பல வட்ட,மாவட்ட கட்சி அடிமைகளும் சேலம் உருக்காலை மூடுதல் முதல் எட்டு வழிச்சாலை வரை அனைத்தையும் வளர்ச்சி என்ற போர்வையில், மறைக்க பிரயத்தனப்படுகிறார்கள். 

ஊழல் உப்பைத்திண்ண ஜெயலலிதா தண்ணீர் குடித்தது போல - நீங்களும் குடித்து விட்டு அந்த அம்மையார் அளவிற்காவது தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களை எதிருங்கள் பாவிகளே, பாவிகளே.! நீங்கள் தின்ற ஊழல் உப்பிற்கு தமிழகத்தையே நாவறட்சியில் உழல வைப்பது சரியா?

என்று மனம் வெதும்பி கேள்வி கேட்டால்  உடனே "திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அவர்களோடு கூட்டணி வைத்த அத்தனை கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது." என்ற உண்மையை ஆளும் தரப்பினர் முன் வைக்கிறார்கள். அவர்கள் செய்யாத நன்மைகளையும் சேர்த்து செய்வீர்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் தானே,மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்?  ஆனால்,துரோகத்திற்கு பிறந்த புண்ணியர்களேநீங்களோ, அவர்கள் விற்காமல் விட்டுச்சென்ற மிச்ச நலங்களையும் கார்ப்பரேட்டுக்கு பட்டா போட்டு கொடுக்குறீர்களே? 

மக்களும் அமைப்பு ரீதியில் இருப்பவர்களும்  ஒன்றினைந்து செயல்பட்டால்  மட்டுமே இன்றைய விற்பனை இந்தியா நிலையில் இருந்து நாம் மீள முடியும்.

ஆனால்,பல்வேறு அழிவுத்திட்டங்களால் நேரடியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகள் மீனவர்கள்,அரசு ஊழியர்கள் மட்டுமே தங்கள் கழுத்தை நெறிக்கும் அதிகார கும்பலின் பிடியிலிருந்து விடுபட போராடுகிறார்கள். ஒரு சில மாணவ அமைப்புகள் மற்றும் சில சமூக அமைப்புகளும் இதில் கலந்து கொள்கின்றன. இன்னும் பெரும்பாலான மக்கள் தங்கள் கட்சி அடிமைகளாகவும்,போராடுவதே சமூக விரோத செயல் என்று கூறும்,ஆளும் விற்பனை சக்திகளுக்கு ஆதரவான நடிகனுக்கும், தன் குடும்பத்தையே முறையாக பாதுகாக்கத்  தெரியாமல் தோற்றுப்போன நடிகனுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்கள் வந்து ஆணியை புடுங்குவார்கள். என்று தேவுடு காக்கிறார்கள்.

இன்னும் பல ஜந்துக்கள், மது,மாது, மதம்,சாதி,சூதாட்டம்,நேர்மறை சிந்தனை, ஆன்மீக நாட்டம்,சமூக ஊடக மயக்கம்,செய்தி ஊடக நம்பிக்கை என்று எத்தனையோ பொழுதுப்போக்கில் சிக்கி தனக்கும் தனது சந்ததிக்கும் தேவையான காற்றும் நீரும் இருப்பிடமும் களவாடப்படுவதை உணராமல் அரை மயக்கத்தில் உழல்கிறார்கள்.

நடென்ன செய்தது
எனக்கு,என்று; கேள்விகள் கேட்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு.!

நான்,என்ன செய்தேன்?

"அடியேன் எந்த வெளிநாட்டு உணவுப்பொருளையும் இரசாயணப் பொருளையும் வாங்கிப்பயன்படுத்துவது இல்லை.
இதுவரை ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்த, இருக்கின்ற எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. வெளிநாட்டு மருந்து,மாத்திரை,ஊசி,ஊட்டச்சத்து நச்சுகளை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும்  கடந்த பத்து வருடமாக நான் பயன்படுத்தவே இல்லை. இனியும் மயக்க மருந்து இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை வந்தால் கூட அடியேன் அந்த இரசாயண அரக்கனின் தோளில் சாயப் போவதில்லை.
எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையான இயற்கை ஊட்டச்சத்து உணவுகளையும் மூலிகை மருந்துகளையும் நானே தயாரித்துக் கொள்கிறேன்.
மின்சாரம்,பெட்ரோல்,தொலைக்காட்சி,சமூக ஊடகங்களை எனது அடிமையாகவே வைத்துள்ளேன்.!
அடம்பர வசதி வேண்டுமா, இயற்கை காற்று வேண்டுமா?
என்று என்னிடம் கேட்டால் கண்ணில் ஒற்றி இயற்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.
வெளிநாட்டு ஐடி கம்பெனியில் நிறைய சம்பளத்தில் மேனேஜர் உத்தியோகம்,உள்ளூரில் எளிய விவசாயம் இரண்டில் எது என்றால்;எனக்கு விவசாயமே போதும்.!

என் சந்ததிகளை, எந்த  சுயம்சேவக்கும் அமெரிக்க அடிமையாக வாழவைக்க வேண்டாம்.
நாங்கள் கற்கால இந்தியர்களாக இயற்கையோடு இயைந்து, இங்கேயே வாழ்ந்து கொள்கிறோம்.
இந்திய வளங்களை விற்கும்  கோமகன்களே, எல்லாம் எனது நன்மைக்கு என்ற பொய்யை இனியும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள்.!
எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு விற்று விட்டு அவர்களின் தயவில் இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்ய முயலுகிறோம். என்ற; உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்.! அப்படி செய்யாவிட்டாலும் அது எங்களுக்கு தெரியும்.!

இந்த தேசத்தில் இடைத்தரகன்,மோசடி இரசாயண வியாபாரிகள்,இரசாயண மருத்துவர்கள்,மருந்து கம்பெனிகள், திருடன்,நயவஞ்சகன்,கொள்ளைக்காரன்,கொலைகாரன்,சாதிமத அடிமைகள், ஊழல் அரசியல் வாதிகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், ஒவ்வெரு ஊரிலுமுள்ள நல்ல மனிதர்களும், இயற்கை ஆர்வலர்களும், உண்மையை பேசுபவர்களும் ஆளுக்கொருப் பக்கம்  தனித்தனியே பயணிக்கிறார்கள்.

இதோ,என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்.!

இருபதாயிரம் பேருக்கு மேல்  யோகா & இயற்கை வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்துள்ளேன். மஹாயோகா,இயற்கை வழிகாட்டி, ஆதிமருத்துவம் போன்ற நூல்களையும் எழுதி உள்ளேன்.
எனது நூலிலேயே இருபதிற்கும் மேற்பட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.ஆனால் இதுவரை, "இந்த இயற்கை ஆர்வலர் உங்களைப் பற்றி சொன்னார்." என்று;என்னைத் தேடி யாரும் வந்ததில்லை.
இவ்வளவும் ஏன், நான் இலவசமாக விளம்பர படுத்திய இயற்கை பயிற்சியாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நான் எழுதிய ஆதிமருத்துவம் நூலை கூட வாங்கிப் படிக்கவில்லை.

"ஆதிமருத்துவம் நூலை கிட்டத்தட்ட அறுபது அத்தியாயங்களாக நான் எழுதி வெளியிட்ட,  இருநூறு உறுப்பினர்கள் கொண்ட  எனது இயற்கை இரகசியம்  குழுவில் வெறும் இருபது பேர்கள் மட்டுமே, இதுவரை இந்த நூலை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். 360 ரூபாய் விலை அதிகம்,நீங்கள் சிலை பக்கத்தில் இருப்பது ஷிர்க்,இதை தான்; நான் தொடராக படித்து விட்டேனே, bdf  இருந்தால் நல்லது, நீங்க மருத்துவர் இல்லையே,எனக்கு படிக்க நேரமில்லை. போன்று எத்தனையோ காரணங்கள் ஒவ்வெருத்தருக்கும் இருக்கிறது.
ஆனால்,என்னைப் பொறுத்தவரை  இதற்கு ஒரே காரணம், என்னவென்றால் இயற்கை வாழ்வியலைப் பற்றி என் மூலம் அறிந்துகொள்ள பெரும்பாலான இயற்கை இரகசியம் குழு உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதுதான்.
சரி போகட்டும், இனி இந்த குழுவில் மட்டுமல்லாது எந்த வாட்ஸ்அப் முகநூல் குழுவில் உள்ள நண்பர்களும் இயற்கை வாழ்வியல் முறைகளைப் பற்றி என்னிடம் கேட்டாலும் முதலில் ஆதிமருத்துவம் நூலை வாங்கிப் படியுங்கள். அல்லது நமது ஆதிமருத்துவம் an therapy  youtube  பக்கத்தைப் பார்த்து தேவையான தகவலை அறிந்து கொள்ளுங்கள். என்று மட்டுமே கூறப்படும்.

கைப்பேசியிலும் யாருக்கும் எளிய ஆலோசனை கூட வழங்கப்படாது.
நமது நூலை வாங்காத, இயற்கை ஆர்வலர்கள் பற்றிய விளம்பரமும் நூலில் இருந்து நீக்கப்படும்.

இந்த நூலில் 5 நூல்களை வாங்கி தனது நட்பளார் களுக்கும் நூலகங்களுக்கும் வழங்குபவர்களின் பெயர்களை அடுத்தப் பதிப்பில் வெளியிட்டு " இயற்கை வாழ்வியல்  ஆதரவாளர்கள் " என்று கௌரவிக்கப்படும்.

ஆமாம்,இப்படி ஒரு முடிவு எடுப்பது மிக முக்கியம்.  எனது நூல் இயற்கை வாழ்வியலின் கவசம்.இதை  படித்து பயன்படுத்த முடியாதவர்கள். இயற்கையின் கருணையால் எத்தனை ஆரோக்கிய வெற்றிகளை பெற்றிருந்தாலும் கூட  சட்டென்று வரும் சளியை நிறுத்த முடியாமல் திணறுவார்கள்.
இது சாபமல்ல வரம்.! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!

இயற்கைக்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகளை முறியடிக்க நாம் அனைவரும் ஒருவருக் கொருவர் தங்கள் அறிவையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு;
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.!

*ஆதிமருத்துவம்நூலில் என்ன உள்ளது? என்றால்; ஒரு இயற்கை வாழ்வியல் பயிற்சியாளருக்கும் இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்த முயல்பவர்களுக்கும் தேவையான அனைத்தும் இதில் உள்ளது.*

நூல் தேவைக்கு அழைக்கவும்
ஏகப்பிரியன்
கைப்பேசி:
9629368389.
www.aumherbals.com

Friday, 15 June 2018

யோகா & இயற்கை வாழ்வியல்

இயற்கை மூலிகை தயாரிப்புகள்

AUM HERBALS  இயற்கை
மூலிகை தயாரிப்புகள்
*****************

🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.தலைமுடியை சுத்தப்படுத்தும் உடலிலும் தேய்த்து குளிக்கலாம்.

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

950 கிராம், 600 ரூபாய்

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழுமையான ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 600 ரூபாய்/-

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுத்தேங்காய்,இயற்கை எள்ளு, இயற்கை வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணெய்.!*
*கெழுப்பு,கருப்பை கட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
500 ரூபாய்/-

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 500 ரூபாய்/-

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம்,600 ரூபாய்/-

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இயற்கை ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை,ஆவாரம்பூ, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

🍄அமுக்ரா  மாத்திரை & லேகியம்

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும்  அமுக்ரா மாத்திரை மற்றும் லேகியம்

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*

மாத்திரை 100,
300 ரூபாய்.
லேகியம் 500 கிராம்,450 ரூபாய்.

🌿புதினா தைலம்

தலைவலி,மூக்கடைப்பு,சோர்வைப்போக்கும் புதினா தைலம்.

புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட இயற்கை தயாரிப்பு.!

சிறிய பாட்டில்
20 ரூ/-

🌫 கற்பூரத்தைலம்

பாதவெடிப்பு,உடல் ஊறல்,கொசுக்கடியைப் போக்கும்  அற்புத தைலம்.!

பச்சைக்கற்பூரம்,தேங்காய் எண்ணெய்,கற்றாளைச்சாறு கலந்து தயாரிக்கப்பட்டது.!

சிறிய பாட்டில் 30 ரூபாய்.!

🌈 *ஆதி மருத்துவம் புத்தகம்*

இயற்கை மருத்துவக்கோட்பாடு,அடிப்படை உடலியக்க செயல்பாடுகள்,யோகா,தியானம்,
வர்மா நுட்பங்கள். பிராண சிகிட்சை, அவசர சிகிட்சை, உளவியல் ஆலோசனைகள், இயற்கை உணவு முறை,நோய் நீக்கும் குளியல் முறைகள்,உயிர் தரும் மூலிகை மருத்துவக் குறிப்புகள்
பெண்கள்,குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவக்குறிப்புகள்,தடுப்பூசிகளைப் பற்றிய உண்மைகள் அடங்கிய, முழுமையான இயற்கை மருத்துவ நூல்

384 பக்கங்கள், 360 ரூபாய்

🔰மஹாயோகா புத்தகம் & ஆழ்நிலை யோகா வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
❄இன்சுலின் ஆவணப்படம் 

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை நிகழ்வின் ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

☘AUM HERBALS Regd சரோஜா டவர்,
பார்வதிபுரம்,
நாகர்கோவில்-4

MOBILE:9629131089
M&W 9629368389

வெளியூரில் உள்ளவர்களுக்கு இரண்டு நாட்களில் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...