மனதோடு பேசுகிறேன்
---ஏகப்பிரியன்----
23.அன்பால் ஆன இதயங்களே …
உங்களுக்கு என்ன வேண்டும்,உங்களுக்கு
நான் எப்படி உதவ முடியும்?
எனக்கு உங்கள் நூல்களில் ஒரு ஐந்து ஜோடிகளை உடனே எடுத்துத் தாருங்கள்.
என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளேன்.
எனக்கு சில மூலிகை தயாரிப்புகளை உடனே அனுப்பி வையுங்கள் பணம் செலுத்திவிட்டேன்.! மீண்டும் வகுப்புக்கு வருகிறேன், ஏன் இத்தனை விரக்தி, என்ன நடந்தது நண்பரே?
இப்படி பல்வேறு உதவிகளும் விசாரிப்புகளும் ஒரிரு நாட்களாக தொடர்ந்து என்னை வந்து சேர்ந்து கொண்டே உள்ளன.!
உண்மையில் இது எதையும் எதிர்ப்பார்த்தோ அல்லது மிகவும் விரக்தியான மன நிலையிலோ அந்தப் பதிவை நான் போடவில்லை.
ஏதோ தோணிச்சி எழுதினேன். அதன் மூலம் என்னைச் சுற்றி உள்ள எத்தனை பேர் என்னை,எனது மனநிலையை பின் தொடர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். உடுக்கை இழந்தவன் கை போல எத்தனை எத்தனை, வேகமாக என்னைத் தூக்கி நிறுத்த எனது நட்பாளர்கள் முயல்கிறார்கள்? என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டேன். தூய அன்பினால் மட்டுமே படைக்கப்பட்ட, உங்கள் அத்தனை இதயத்தின் ஒசைகளையும் கேட்டு நான் நெகிழ்ச்சிக் கொள்கிறேன், இருமாந்துப் போகிறேன்.!
நன்றி நட்பாளர்களே,
மிக மிக நன்றி.!
இந்த வார்த்தையை இதயத்திலிருந்து கூறுகிறேன்.!
உங்களைப்போன்று பிரிதொரு ஜீவனின் வதை கண்டு துடிக்கும் இதயத்தை விட உயர்ந்த உதவியோ, பொருளோ இந்த உலகத்தில் எங்கும் இல்லை.!
எனது தேவை பணமோ, பொருளோ, ஆறுதலோ அல்ல; எனது பாதைக்கு விளக்கும் எனது கலைக்கு களமும் வேண்டும்.
இயற்கையை கற்க வரும் ஒவ்வெரு வரும் எனது பாதையை பலப்படுத்துகிறீர்கள்.இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஒவ்வெருவரும் எனக்கு நம்பிக்கையை தருகிறீர்கள். ஆனால்; எனக்கு இப்பொழுது நான் கற்றவற்றை உலகமெல்லாம் விதைக்க உதவுகின்ற, இயற்கை நேசர்கள் தேவை.!
ஒவ்வெரு ஊரிலும் எங்கெல்லாம் ஒரு சிறுகூட்டம் கூடுகிறதோ,அங்கெல்லாம் இயற்கை வாழ்வியலின் அவசியத்தை உணர்த்த வேண்டும். என்றும்; அதன்மூலம் இந்த வர்த்தக உலகின் இரும்புப்பிடியில் சிக்குண்டு உடல் நோயாலும், மனநோயாலும் பாதிக்கப்பட்டுள்ள கோடான கோடி மக்கள் மீண்டு,அவர்கள் அனைவரும் இயற்கையின் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் உணர்ந்து என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
என்பதும் தான் எனது தேவை.!
என்னை,எனது நம்பிக்கையை உங்களால் உணர முடிகிறதா? எனது குறிக்கோளை அடைய உங்களால் எனக்கு உதவமுடியுமா?
அப்படியானால் உங்கள் பகுதியில் நமது " ஆதிமருத்துவம் " [இயற்கை வாழ்வியல்] பயிற்சி வகுப்புகளை நடத்திட ஏற்பாடு செய்யுங்கள்.
இதுவரை சென்னை,திருப்பூர்,அரியலூர்,திருச்சி,ஒசூர்,திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களில் சிறப்பாக " ஆதிமருத்துவம் "
வகுப்பு நடைப்பெற்று, பலரின் ஆரோக்கிய குறைப்பாட்டைப் போக்கி இயற்கை மனிதர்களாய் மாற்றி உள்ளது.
வகுப்பில் இயற்கை வாழ்வியல் வரலாறு,உணவு முறை,எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை,முக்கிய யோகா நுட்பங்கள், சிறப்பான வர்மக்கலை நுட்பங்கள்,பிராண சிகிட்சை நுட்பங்கள் போன்றவை தெளிவாக கற்பிக்கப்படும்.!
உங்கள் ஊரிலும் இந்த வகுப்பை ஏற்பாடு செய்யுங்கள் அதுவே எனக்கு நீங்கள் செய்யும் ஆகப்பெரிய உதவியாய் இருக்கும்; இயற்கை வரலாறும் உங்களை காலமெல்லாம் வாழ்த்தும் … !
வாழ்க வளமுடன்
நலம் பெருகட்டும் …
தொடர்பிற்கு;9629131089
9629368389
www.aumherbals.com
No comments:
Post a Comment