I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: November 2019

Friday, 29 November 2019

நீரழிவு குணமாக தோசை

நீரிழிவு குணமாக வரகு தோசை

வரகு – 200 கி.

வெந்தயம் – 25 கி.

உளுந்து – 50 கி.

வாழைப்பூ – 200 கி. (சுத்தம் செய்து நறுக்கியது)

குடமிளகாய் – 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

புதினா, இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி இந்துப்பு – தேவையான அளவு

     வரகு, உளுந்து, வெந்தயம் இவைகளை முளைக்க வைத்து நீர்விட்டு ஓரளவு கெட்டியாக அரைக்கவும். வாழைப்பூவில் உள்ள நரம்புகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி குடமிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு போன்றவற்றை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்த மாவில் சேர்த்து நன்கு பிசையவும். தோசைக் கல்லில் சிறிது மாவை தோசை வடிவில் பரப்பி இரு புறமும் வேகவிட்டு எடுத்து சாப்பிடவும். இதனை அடிக்கடி சாப்பிட நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கல் கரையும்.

குரல் கம்மல் குணமாகும்

அதிமதுரம் 250 கிராம் ஆடாதோடை
இலை 250 கிராம் இது இரண்டையும்
சேர்த்து  பொடித்து வைத்துக்கொண்டு

காலை,இரவு உணவிற்கு பின்
ஒருத்தேக்கரண்டி பொடியை
தேனில் குழைத்து தின்றுவர  நெஞ்சிச்சளி,இழுப்பு,வாய்ப்புண்,
வயிற்றுப்புண்,தொண்டைக்கட்டு,
மூக்கடைப்பு,குரல்கம்மல்
குணமாகும்.!இவ்வாறு 12
முதல் 48 நாட்கள்
செய்ய வேண்டும்.

ஒரு வெற்றிலை,பத்து நல்லமிளகு
இவற்றை மென்று சாப்பிட்டு அரைடம்ளர்
சுடுநீர் அருந்த மூன்று வேளை மருந்தில்
தேள்கடி,பூரான்கடி விசம் அகலும்
கடிவாயில் சிறிது மஞ்சள் தூளில்
கொஞ்சுண்டு சுண்ணாம்பு
நீரில் குழைத்து பூச வேண்டும்.!

பத்து துளசி இலை ஐந்து குறுமிளகு
இவற்றை மென்று உணவிற்கு பின்
சாப்பிட தலைவலி, உடல் அயர்ச்சி
நொடியில் மறையும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Tuesday, 12 November 2019

யூரியா குறைய வைத்தியம்

வெங்காயம்

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

கருப்பை கட்டி கரைய

கருப்பைக் கட்டி கரைய

தான்றிக்காய் தோல் – 100 கிராம்

கடுக்காய் தோல் – 100 கிராம்

சுக்கு – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

திப்பிலி – 100 கிராம்

குமட்டி உப்பு – 100 கிராம்

          (1 லிட்டர் குமட்டிச்சாறு, அரைபடி கறிஉப்பு இரண்டையும் அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். சாறு சுண்டி கடைசியில் உப்பாக மாறும். இதை நன்கு தூள் செய்து காற்று புகாதபடி அடைத்து வைக்கவும்.)
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, குமட்டி உப்பைக் கலந்து வைத்து கொள்ளவும்.

இதில் ஐந்து கிராம் அளவில் அதிகாலையில் பெண்கள் சாப்பிட்டுவர கருக்குழி சுத்தியாகி, குழந்தைப்பேறு உண்டாகும். கருப்பையில் உண்டாகும் கட்டிகள் முழுவதும் கரையும். எமது அனுபவ மருந்து.

கருப்பை கோளாறு நீங்க

அத்திக்காய் கூட்டு

தேவையானவை:

அத்திக்காய் - 15,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்),
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
தேங்காய் எண்ணெய்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.

*செய்முறை*

அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு  துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும்.

குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும். இதை பெண்கள் அடிக்கடி சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கும்.

அதிமூத்திரம் குணமாக

அடிக்கடி சிறுநீர்கழித்தல் தீர

அடிக்கடி சிறுநீர் கழித்தலால் உடலுக்கு ஒரு களைப்புநிலை ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தின் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது.

1) வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

2)              ஆவாரம்பூ                   -  30 கிராம்
                கடுக்காய்                    -  30 கிராம்
                தென்னம்பூ                  -  30 கிராம்
                மாதுளம்பூ                  -  30 கிராம்
                கடுக்காய்பூ                  -  30 கிராம்
                மஞ்சள்                     -  30 கிராம்

                இவையனைத்தையும் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கு 2 கிராம் வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

                கருப்பு எள்            -  5 கிராம் (1 ஸ்பூன்)
                மஞ்சள்               -  2 கிராம்
                பருத்திவிதை         -  5 கிராம்    மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடி சிறுநீர் போதல் குணமாகும்.

4) நல்லெண்ணெய் 10 மி.லி அளவு எடுத்துக்கொண்டு அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் இறங்குதல் குணமாகும்.

5) படிகார பற்பத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, தயிரில் சாப்பிட, அடிக்கடி சிறுநீர் போதல் நிற்கும்.

காரணமும் தீர்வும்

நெஞ்சு_சளி
எதனால்_ஏற்படுகிறது

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரியாகி விடும்.
நாள்பட்ட நெஞ்சு சளியின் அறிகுறிகள்
உடனே தெரிவதில்லை.

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம்,காசநோய்,ஆஸ்துமா
போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நாம் உண்ட உணவை ஜீரணம் செய்யும் போதும்,உணவு  ஜீரணத்தின் பின் ஏற்படும்  கழிவுமே சளியாக மாறுகிறது.சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒன்றாக சாப்பிடாமல் இருப்பதோடு அன்றாட உணவில் பாதி சமைக்காத பழம்,காய்கறி,அவல் போன்றவற்றை மட்டும் ஒரிரு வேளை உணவாக எடுத்துக்கொண்டால் சளி உற்பத்தி வெகுவாக குறைந்து நாள்பட்ட சளியும் கரைந்து வெளியேற ஆரம்பித்துவிடும்.

தட்ப வெப்ப மாறுபாடு,நீர் மாறுபாடு,உடல் வெப்ப அளவு மாறுபடுதல்,புகை,தூசு,மாசு நிறைந்த பணிச்சூழல்,புகைப்பிடிப்பது,
புகைபுடிப்பவர்களோடு உடனிருத்தல்,
ஒவ்வாத கிருமிகள்  உடலில் தங்குதல் போன்ற காரணங்களாலும் சளி ஏற்படும்.
தேவையான போது உண்ணா நோன்பு இருப்பது.ஜங்க் உணவுகளை தவிர்த்து தேவையான சத்தான உணவை எடுப்பது.பூண்டு,மிளகு,மஞ்சள்
போன்றவற்றைஎடுத்துக்கொள்வது,தினமும் காலையில் குளிப்பது,முறையான உடற்பயிற்சி செய்வது இவற்றின் மூலம் இந்த வகை சளியை வேகமாக வெளியேற்ற முடியும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.  நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

உடனடி நிவாரணமாக தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் படிப்படியாக குணப்படுத்தி விடலாம்.

நாள் பட்ட நெஞ்சு சளியை உடனே நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்தால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை  பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.

எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பனங்கற்கண்டு பசும்பாலுடன்  கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் காலை உணவிற்கு அரைமணி முன்பு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

2 துளசி, 2 கற்பூரவல்லி இலைகளோடு 3 குறுமிளகு சேர்த்து சதைத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை உணவிற்கு அரைமணி முன்பு உண்டுவர சளி,இருமல்,தலைவலி காணாமல் போகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...