அடிக்கடி சிறுநீர்கழித்தல் தீர
அடிக்கடி சிறுநீர் கழித்தலால் உடலுக்கு ஒரு களைப்புநிலை ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தின் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது.
1) வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.
2) ஆவாரம்பூ - 30 கிராம்
கடுக்காய் - 30 கிராம்
தென்னம்பூ - 30 கிராம்
மாதுளம்பூ - 30 கிராம்
கடுக்காய்பூ - 30 கிராம்
மஞ்சள் - 30 கிராம்
இவையனைத்தையும் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கு 2 கிராம் வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.
கருப்பு எள் - 5 கிராம் (1 ஸ்பூன்)
மஞ்சள் - 2 கிராம்
பருத்திவிதை - 5 கிராம் மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடி சிறுநீர் போதல் குணமாகும்.
4) நல்லெண்ணெய் 10 மி.லி அளவு எடுத்துக்கொண்டு அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் இறங்குதல் குணமாகும்.
5) படிகார பற்பத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, தயிரில் சாப்பிட, அடிக்கடி சிறுநீர் போதல் நிற்கும்.
No comments:
Post a Comment