நெஞ்சு_சளி
எதனால்_ஏற்படுகிறது
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரியாகி விடும்.
நாள்பட்ட நெஞ்சு சளியின் அறிகுறிகள்
உடனே தெரிவதில்லை.
மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம்,காசநோய்,ஆஸ்துமா
போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
நாம் உண்ட உணவை ஜீரணம் செய்யும் போதும்,உணவு ஜீரணத்தின் பின் ஏற்படும் கழிவுமே சளியாக மாறுகிறது.சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒன்றாக சாப்பிடாமல் இருப்பதோடு அன்றாட உணவில் பாதி சமைக்காத பழம்,காய்கறி,அவல் போன்றவற்றை மட்டும் ஒரிரு வேளை உணவாக எடுத்துக்கொண்டால் சளி உற்பத்தி வெகுவாக குறைந்து நாள்பட்ட சளியும் கரைந்து வெளியேற ஆரம்பித்துவிடும்.
தட்ப வெப்ப மாறுபாடு,நீர் மாறுபாடு,உடல் வெப்ப அளவு மாறுபடுதல்,புகை,தூசு,மாசு நிறைந்த பணிச்சூழல்,புகைப்பிடிப்பது,
புகைபுடிப்பவர்களோடு உடனிருத்தல்,
ஒவ்வாத கிருமிகள் உடலில் தங்குதல் போன்ற காரணங்களாலும் சளி ஏற்படும்.
தேவையான போது உண்ணா நோன்பு இருப்பது.ஜங்க் உணவுகளை தவிர்த்து தேவையான சத்தான உணவை எடுப்பது.பூண்டு,மிளகு,மஞ்சள்
போன்றவற்றைஎடுத்துக்கொள்வது,தினமும் காலையில் குளிப்பது,முறையான உடற்பயிற்சி செய்வது இவற்றின் மூலம் இந்த வகை சளியை வேகமாக வெளியேற்ற முடியும்.
நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
உடனடி நிவாரணமாக தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் படிப்படியாக குணப்படுத்தி விடலாம்.
நாள் பட்ட நெஞ்சு சளியை உடனே நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்தால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.
எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பனங்கற்கண்டு பசும்பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் காலை உணவிற்கு அரைமணி முன்பு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
2 துளசி, 2 கற்பூரவல்லி இலைகளோடு 3 குறுமிளகு சேர்த்து சதைத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை உணவிற்கு அரைமணி முன்பு உண்டுவர சளி,இருமல்,தலைவலி காணாமல் போகும்.
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
No comments:
Post a Comment