அத்திக்காய் கூட்டு
தேவையானவை:
அத்திக்காய் - 15,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்),
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
*செய்முறை*
அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும்.
குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும். இதை பெண்கள் அடிக்கடி சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கும்.
No comments:
Post a Comment