I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: April 2018

Friday, 27 April 2018

ஆதிமருத்துவம்

இயற்கை வாழ்வியல் முகாம்

*யோகா,தியானம்
*எனிமா சுத்தி
*மண்குளியல்
*வாழையிலை குளியல்
*இயற்கை உணவு
*வர்மக்கலை
*எளிய மூலிகை மருந்து

போன்றவற்றை பயன்படுத்தி ஆரோக்கியவாழ்வு நாள்ப்பட்ட நோய்களிலிலிருந்து விடுதலை

நாள்: மே 11,12,13.
இடம்:அன்னை ஆஸ்ரமம் ஆரல்வாய்மொழி
முன்பதிவிற்கு 9629368389
www.aumherbals.com

இயற்கை மருத்துவ நூல்கள்

இயற்கையின் இரகசியங்களைஉணர்த்தி
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்  இரண்டு தலை சிறந்த புத்தகங்கள்

1. ஆதிமருத்துவம்

இயற்கை மருத்துவக் கோட்பாடு முதல் உடல் சுத்திகரிப்பு முறைகள், யோகா,மூலிகை மருத்துவ குறிப்புகள்,இயற்கை குளியல் முறைகள்,வர்மசிகிட்சை,பிராணசிகிட்சை நுட்பங்கள் வரை அனைத்து இயற்கை வாழ்வியல் முறைகளும்  அடங்கிய  384 பக்க நூல்

நன்கொடை: 360 ரூபாய்

2.மஹாயோகா

யோகமந்திரம்,யோகாசனம், மூச்சிப்பயிற்சி,உடல் சுத்திகரிப்பு  கிரியைகள், நோய் தீர்க்கும் முக்கிய யோகாசனங்கள், தியான நுட்பங்கள் நிறைந்த ஹடயோகம் ராஜயோகம் இணைந்த முழுமையான யோகாநூல்.

268 பக்கங்கள்
நன்கொடை: 150 ரூபாய்.!

இரண்டு நூல்களுமே

இயற்கை வாழ்வியல் நிபுணரும் யோகாசன சாதனையாளருமான

ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
அவர்களால் இயற்றப்பட்டு பல்வேறு பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் பாராட்டப் பெற்றதோடு பல இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களையும் உருவாக்கிய அற்புத நூல்கள்.!

சென்னை,சின்ன சேலம்,நாகர்கோவில் போன்ற ஊர்களில் நேரடியாகவும் இந்தியாவில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தபாலிலும் பெற்றுக்கொள்ளலாம்.!

தொடர்பிற்கு: AM YOGA TRUST Regd 461/2012
பார்வதிபுரம்,நாகர்கோவில்.4 9629368389,9629131089
www.aumherbals.com

ஓர் அறிவிப்பு

நட்பாளர்களே,

மே 11,12,13 ஆரல்வாய்மொழி இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ள, நட்பாளர்கள் மே ஐந்தாம் தேதிக்குள்  நமது வங்கிக் கணக்கில் நபருக்கு 500 ரூ செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

அல்லாதவர்கள் முகாமில் கலந்துகொள்ள இயலாது.

Thursday, 26 April 2018

என்ன சாப்பிடுகிறீர்கள்?

இரசாயண மனிதர்கள் 🎂

உங்கள் மனைவி வீட்டில் சமையல் செய்துகொண்டே இருக்கும் போது திடீரென்று தலை சுத்தி மயங்கி விழுந்து விடுகிறார். உடனே உங்கள் வீட்டில் உள்ளவர்களும்  அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சேர்ந்து ஒரு வண்டியை பிடித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். மருத்துவர் நாடியைப் பார்த்துவிட்டு "எங்களால் முடியாது, வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்" என்று கூறுகிறார் அவர்களும் கொண்டு செல்கிறார்கள். அங்காவது உடனே அட்மிட் செய்து சிகிட்சை அளித்தால் கூட காப்பாற்றிவிட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த மருத்துவ மனையிலும் "எங்களால் முடியாது "என்று கையை விரித்துவிட; பக்கத்து நகரத்தில் உள்ள மற்றொரு  நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையே உங்களுக்கும் யாரோ தகவல் கூறி நீங்களும்  அங்கு செல்கிறீர்கள். அந்த மருத்துவ மனையில் உள்ள மருத்துவர் வந்து  உங்கள் மனைவியின் நாடியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு " இவர் இறந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. "என்று கூறுகிறார்; இப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நேற்று இரவு உங்கள் வீட்டில் பிராய்லர் கோழி பிரியாணி நீங்கள், மனைவி.  12, 9 வயதில் இரண்டு  பிள்ளைகள் நான்கு பேரும் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுகிறீர்கள். நடு இராத்திரி 2  மணிக்கு உங்கள் 9 வயது பெண் பிள்ளை வாந்தி எடுக்கிறது. உடனே உங்கள் மனைவி அவசரமாக பாத்ரூம் கூட்டிச்சென்று வாந்தி எடுக்க விடுகிறார். உங்கள் மகள் இரவில்  சாப்பிட்டதை முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுகிறார். உடனே நீங்கள் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனை கொண்டு செல்கிறீர்கள் அங்கு உடனே அவசர வார்டில் அட்மிட் செய்து குளுக்கோஸ் அடைக்கிறார்கள், ஆன்டிபயாடிக் மருந்து செலுத்துகிறார்கள். " உங்கள் குழந்தைக்கு  புட்பாய்சன் ஆகிவிட்டது. எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயலுகிறோம் " என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்களும் உலகில் உள்ள  கடவுள்களை எல்லாம் அழைத்து பிராத்தனை செய்கிறீர்கள். ஆனால், விடியகாலை ஆறுமணிக்கு எங்களால் முடிந்தவரை பார்த்தோம். உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று மருத்துவர் கூறுகிறார்; அழுகிறீர்கள் குமுறுகிறீர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

உங்கள் மனைவி ஏழுமாத கர்ப்பிணி நீங்கள் வழக்கமா செக்கப் செய்யும் மருத்துவரிடம் சென்று காட்டிவிட்டு மதியம் இரண்டு பேரும் பிரபல ஓட்டலில் சிக்கன் பிரியாணி,ஐஸ்கிரீம் எல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு  வீட்டிற்கு வருகிறீர்கள். வீட்டிற்கு வந்தது முதலே உங்களுக்கு வயிறு அடைத்தது போன்ற ஒரு உணர்வு வருகிறது. சரியென்று கொஞ்சம் ஓய்வெடுக்கிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் மனைவி வயிறு மிகவும் வலிப்பதாக கூறுகிறார். நீங்களும் மருத்துவமனைக்கு  தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்கள்.அங்கு உங்கள் மனைவியை பரிசோதித்த மருத்துவர்களோ; "குழந்தையின் தொப்புள் கொடி கழன்று விட்டதால் குழந்தை இறந்துவிட்டது. உடனே அறுவை செய்து இறந்த கருவை வெளியேற்ற வேண்டும். அல்லது தாய்க்கும் ஆபத்து என்கிறார்கள். " இப்பொழுது என்ன செய்வீர்கள்? அழுது அரற்றினாலும்,இறைவனை தொழுதாலும்  போன உயிர் திரும்ப வராது. என்ற உண்மையை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.!

உங்கள் பதினைந்து வயது பையனுக்கு கண்வலி வருகிறது
மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்து வாங்கிப் போட்டு வருகிறீர்கள் … ஆனால், அடுத்தநாள் முதல் உங்கள் மகனுக்கு சுத்தமாக கண்ணே தெரியல. அதன் பிறகு எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் போன ஒளிதிரும்ப வில்லை இப்ப என்ன செய்வீர்கள்?

மேலே கூறிய மூன்றும் கதையல்ல எங்கள் ஊரில் நடந்த நிஜம்.!

இது போன்று ஒரே நிமிடத்தில் நமது அன்பானவர்களின் வாழ்வை பறித்து நம்மை நிலை குலைய வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை நான் பார்த்ததே இல்லையே; என்று கூறுகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் அதிஷ்டசாலிதான். ஆனால், இந்த அதிஷ்டம் நீண்ட நாள் நிலைக்காது. வெகுவிரைவில் துயர துரதிஷ்டம் உங்களை அடைந்தே தீரும்.! ஆனால், இதிலிருந்து தப்ப ஒரு வழி உள்ளது. அந்த வழியில் சென்றால் மட்டும்தான் நீங்களும் உங்கள் குடும்பமும், இந்த நாட்டு மக்களும் பிழைக்க முடியும்.! சரி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்று ஆங்கில மருத்துவர்களை கேட்டால் "திடீர் ஹார்ட் அட்டாக், புட்பாய்சன், கரு பலவீனம், ஐகேன்சர், இரத்தஅழுத்தத்தை கவனிக்காமல் விட்டதால் வந்தது, சக்கரையை கட்டுப்பாட்டில் வைக்காததால் வந்தது , கொழுப்பை சாப்பிட்டதால் வந்தது, பிளட்லெட் குறைந்து விட்டதால், மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டதால் " என்று;பல காரணங்களை கூறுவார்கள். ஆனால், இது எதுவும் உண்மை இல்லை.! உண்மை காரணம் வேறு அது எந்த ஆங்கில மருத்துவருக்கும் தெரியாது; அல்லது தெரிந்தும் சொல்ல மறப்பார்கள்.! எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில மருத்துவரிடம் கேட்டேன்; "என்னங்க உயிர் போகும் நிலையில் அவசர சிகி்ச்சைக்கு வரும் நோயாளிகளை ஏன் உங்களைப் போன்ற சில மருத்துவர்கள் அட்மிட் செய்ய மறுக்கிறார்கள் " என்று; அதற்கு அவர் கூறினார்.  "தற்காலத்தில்  இயற்கை உணவுமுறை, வாழ்க்கை முறை என்று அனைத்தும்  சீரழிந்த நிலையில் உள்ளது. மக்களிடம் நாம் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு போன்ற சில நல்ல வழக்கங்களை கூறி கடைப்பிடிக்க சொன்னால், செய்ய மாட்டார்கள்; ஆனால் அவர்களின் உறவினரோ, குடும்பத்தினரோ நமது மருத்துவ மனையில்  உயிர்விட்டு விட்டால் இந்த  மருத்துவர்தான் எங்கள் உறவினரின் உயிரை கொன்றுவிட்டார். என்று பழியை நம்மீது போடுவதோடு ,  நமது மருத்துவ மனையைப் பற்றியும் தவறான வதந்திகளை பரப்புவார்கள்
. அதனால் தான்  சீரியஸாக இருக்கும் நபர்களை அட்மிட் செய்ய என் போன்ற சிறிய மருத்துவ மனை மருத்துவர்கள் தயங்குகிறார்கள்" என்றார்; அவர். அவர் கவலை அவருக்கு.! "நாம் மேலே கூறிய   வியாதிகள் மட்டுமல்ல திடீர் கிட்னி பெயிலியர், திடீர் பக்கவாதம், திடீர் உடல் உறுப்பு செயலிழத்தல் போன்ற  அனைத்து நோய்களுக்கும் காரணம்  ஒன்றே ஒன்றுதான். அது என்ன வெனில் உடல் நோய் எதிர்ப்பு  ஆற்றலின் சீரழிவு. அதற்கு காரணம் இரசாயண உணவுப் பழக்கம் மற்றும் கரு  உருவான நாள் முதல் தாய்க்கும் பிள்ளைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்ட இரசாயண மருந்துகளும் தான் அடிப்படை   காரணங்கள்.!  ஆங்கில மருத்துவம் கூறுவது போல உடலில்  உள்ள ஒவ்வெரு உறுப்புக்கும் தனித்தனி
சிகிட்சை கிடையவே கிடையாது. வாயில் விசம் வைத்தால் வாய் மட்டும் சாகாது. உடலும் சேர்ந்தே சாகும்.! நரம்பில் விச ஊசி குத்தினால் நரம்பு மட்டும் மரணமடையாது உயிரும் சேர்ந்தே உயிர்விடும்.!  வாயில் வைப்பது உணவா இரசாயண விசமா? என்பதிலும், நரம்பில் ஏற்றப்படுவது நோய்த்தீர்க்கும் மருந்தா அல்லது நோய்களை உண்டாக்கும் கிருமியா? என்பதையும்  உணராமல்
உபயோகப் படுத்தும் மூடத்தனம்
மட்டும் ஒழிந்தால் போதும் ,
உலகின் மிகப்பெரிய இரசாயண சந்தையான, இந்தியாவின்  குடிமக்களும்  ஆரோக்கியமாக வாழ முடியும்.!  இயற்கையை நோக்கி வாருங்கள் தங்கங்களே  … "

இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ
உங்கள் பிணி எதுவானாலும்
அதை இயற்கை வழியில் வெல்ல
அழையுங்கள்.!

ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் D.Y.T
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]

Mobile:9629368389,
9629131089
amyogatrust.com
Aum Herbals

நலம் பெருகட்டும் …

Tuesday, 24 April 2018

கீரை மோர் செய்வது எப்படி? பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் தேவையான அனைத்து சத்துக்களை பெறலாம். இன்று கீரையும், மோரும் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை - ஒரு கப், மோர் - ஒரு கப், மிளகு தூள் - தேவையான அளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு. செய்முறை : கீரை வகைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய கீரையை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். கீரை நன்றாக ஆறியதும் கீரையுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பருகலாம்.! -இணையப்பகிர்வு

Monday, 23 April 2018

ஆதிமருத்துவம்

🌅 இயற்கை
வாழ்வியல் முகாம்

🌿இயற்கை வாழ்வியல் கோட்பாடு
🍁எனிமா சுத்தி
☘கண்சுத்தி
🍁கபசுத்தி
🍁யோகா,தியானம்
🍁வாழை இலைக்குளியல்
☘மண்குளியல்
🍁எண்ணெய் குளியல்
🍁வர்மசிகிட்சை முறைகள்
🍁அவசரகால முதலுதவிகள்
🌅உடல் சுத்திகரிப்பு
🚹பிராணசிகிட்சை
🌿எளிய மூலிகை
மருந்து தயாரிப்பு
🌾இயற்கை உணவு

✅வழங்குபவர்:
ஆதிமருத்துவம்
ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)

🌷நன்கொடை: ரூ 2450/-
(உணவு,உறைவிடம் உட்பட)

நாள்:மே 11,12,13
வெள்ளி,சனி,ஞாயிறு

நேரம்: 6 am
and 6 pm

🌿இடம்:அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்

✅ *முன்பதிவு அவசியம்*

தொடர்பிற்கு:9629368389,
9629131089
aumherbals.com
amyogatrust.blogspot.com

எளிய மருந்து

வள்ளலார் அருளிய 
மூலிகை மருந்து

மூலிகை என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த வரங்களாகும்.

சாதாரணமாக சில மூலிகை மருந்துகளை செய்யவும்,வாங்கவும் நிறைய மெனக்கெடவும்,பணத்தை செலவிடவும்  வேண்டும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ ஒரு மூலிகை குறிப்பை
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பசும்பால் அல்லது  நீரில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும். சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.அனைத்து நோய்களும் குணமாகும்.
 வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.
பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து  சர்வ நிச்சயமாக பயன் பெறுவீர்கள்.

-இணையப்பகிர்வு

தியானம் செய்வது எப்படி? Video


Thursday, 19 April 2018

உயிர் வளர்க்கும் வழிகள்

உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்

6.உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும் சில முக்கிய வழிமுறைகள்

1.எண்ணெய் குளியல்

வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் இரண்டு நாட்கள் உச்சி முதல் பாதம் வரை, உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து,15 முதல் 30 நிமிடங்கள் இளம் வெயிலில் நின்று,பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உடல் எடை சீராவதோடு உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபத்தின் இயக்கமும் சீராகி இழுப்பு,தைராய்டு,இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் ஏற்படாமல் இருக்கும்.

2.எண்ணெய் மசாஜ்

உடல் பருமன், இரத்த அழுத்தம்,உடல் வலி,மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் முறையாக மசாஜ் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு வாரம் ஒருநாள் அல்லது மாதம் இருமுறை சதைக் கசக்குதல் என்று கூறப்படும் மசாஜ் செய்து கொள்வதால் இரத்தக்குழாய்களிலும் உடல் தோலை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள இறந்த செல்கள் வேகமாகி வெளியேறி உடல் எடை உள்ளிட்ட வியாதியை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு புத்துணர்வையும் புதிய பொலிவையும் தரும்.!

3.வாமண தௌதி/சூரண தௌதி

ஆறு டம்ளர் நீரை சூடாக்கி அதில் சுமார் ஐம்பது கிராம் கல்லுப்பைப் போட்டு நன்றாக கலக்கி ஒவ்வெரு டம்ளராக  நீரை வேகமாக குடித்துவிட்டு, அடிநாக்கில் விரல்களை வைத்து வாந்தி எடுங்கள். முதலில் தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யலாம்.பிறகு மாதத்திற்கு இரண்டு நாட்கள் இந்தப் பயிற்சியையோ அல்லது 6 டம்ளர் சுடுநீரில் பஞ்சமூலி சூரணம் அல்லது திரிபலா சூரணம் ஐந்து தேக்கரண்டி கலந்து கலக்கி வேகமாக குடித்துவிட்டு வாந்தி எடுக்கலாம்.
இதனால் உடலில் உள்ள அதிகப்படியான சளி,பித்தம் போன்றவை வெளியேறி விடுவதோடு நரம்பு மண்டலமும் தூண்டப்பட்டு, புத்துணர்வு பெறும்.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கமும் சீராகும்.!

4.மண்குளியல்,
வாழை இலைக்குளியல்

மாதத்திற்கு இருமுறை மண்குளியல்,வாழை இலைக்குளியல்,சூரியக்குளியல்,நீராவிக்குளியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து வந்தால் அதிகப்படியான எடை வேகமாக குறைவதோடு, உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்கும்.!

5.எனிமா குடுவை,பேதிமருந்து

மாதத்திற்கு இரண்டு முறை  எனிமா குடுவையில் 700 மில்லி வரை சுத்தமான நீரை நிறைத்து அதை ஆசன வாயில் சொருகி  பெருங்குடலை சுத்தம் செய்து வந்தாலோ அல்லது மாதத்திற்கு ஒருமுறை இரவு உணவு சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்னால் ஒருத்தேக்கரண்டி திரிபலா சூரணத்தை இரண்டுத் தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயில் குளப்பி சாப்பிட்டு விட்டு,ஒரு டம்ளர் சுடுநீர் குடித்துவிட்டு படுத்தால், அடுத்தநாள் காலையில் ஒரிரு முறை வயிற்றை கலக்கி உடலில் தேங்கிய நாள்ப்பட்ட கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் மலக்கட்டு,புளித்த ஏப்பம்,இரத்த சுத்தமின்மை,இடுப்பு வலி,முதுகுவலி,மூட்டுவலி,கழுத்துவலி,வாய்வுத்தொல்லை,தோல்நோய்கள் போன்றவை குணமாவதோடு  அதிகப்படியான உடல் எடையும் குறையும். மேற்கண்ட பேதி  முறைக்கு பதிலாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாட்டு மருந்துக் கடையில் விற்கும் பேதி மாத்திரையையும் வாங்கி பயன்படுத்தலாம்.!

குறிப்பு: பேதி மருந்து,பேதி மாத்திரை தவிர மீதம் உள்ள அனைத்து பயிற்சிகளையும் காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது எளிய பழச்சாறுகளை அருந்தி,அரை மணி நேரம் கழிந்தோ செய்யலாம். வெறும் வயிறு என்பது காலை எழுந்ததும் 3 முதல் ஐந்து டம்ளர் நீரை குடித்து காலைகடனை முடித்த பின் இருப்பது.!

இவை தவிர ஏற்கனவே நாம் கூறியுள்ள தினமும் இரண்டு வேளை யோகா, உடற்பயிற்சி,கிரியை,தியானம்,மாதம் ஒருநாள் காய்கனி விரதம்,தினமும் ஒரு வேளை சமைக்காத உணவு,எந்த இரசாயண உணவுகளையும் எடுக்காமல் இருத்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கடைபிடித்து வர  உடல் பருமன்,இரத்த அழுத்தம்,தைராய்டு,மன அழுத்தம் போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.!

*விழித்து எழுவதால் வெற்றி வருவதில்லை*
*விழுந்து எழுந்தாலும் வெற்றி கிடைப்பதில்லை சிறந்த முயற்சியும் தொடர்ந்த பயிற்சியுமே வெற்றியை விரைந்து வரவழைக்கிறது*

-ஏகப்பிரியன்

aumherbals.com

தொடரும் …

DO NOT SHARE

Tuesday, 17 April 2018

பெண்கள் சமாச்சாரம்

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.
இதற்கும் இதே சப்ஜா விதை தான்.
இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, , இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*

இயற்கை குடிநீர்

மூலிகை குடிநீர்
°°°~°~~~°°°°°°

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.
*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
*ஒருமுறை தயாரித்த நீரை
அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.!

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை💥 தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE & Whats app
9629368389

நலம் பெருகட்டும் …

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...