அடிமையின் நாடு
நெஞ்சி பொறுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட ஆட்சியை நினைந்து விட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார்- இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனை பேய்களிடம் தன்மானத்தை தாராளமாய் தாரை வார்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார் கண் தூங்காது அவர்களுக்கு சேவை செய்வார்…
அவர் நம் விளை நிலத்தில் விசம் புதைத்து வைப்பார் - இவரோ
இதுபோல நன்மை உண்டா என்பார்?
விவசாயி சாவது தகுமோ என்றால் - அதுதான் அரசாங்க விதியே என்பார்… ஸ்டெர்லைட் ஆலையால் வியாதி என்றால் - ஆகா அதுதான் வளர்ச்சி என்பார் …
நீட்டென்ற காலனை கள்வர் நீட்டினாலோ
நீடூழி வாழ்க நீங்கள் என்பார் …
காவேரி மேம்பாட்டு ஆணையம்
வேண்டும் என்றால் - இவரும்
வேண்டுமென்றே பகல் வேசம் கொள்வார் - பின்பு தனியே விரோதியை தெய்வம் என்பார்…
சொந்த மக்கள் எழுச்சியை கண்டால் - காவல் குண்டர்களை கொண்டு எலும்புடைப்பார் …
கல்லூரி உரிமையில் லஞ்சம்
கற்றவருக்கு பணி கொடுக்க லஞ்சம் சாலையை செப்பனிட லஞ்சம்
இலவசப் பொருட்களை வாங்க லஞ்சம்
மருத்துவக் காப்பீட்டில் மலை போல் ஊழல்
குழந்தைகளை தடுப்பூசிப்போட்டு
சிதைக்க இவர்தான் ஏவல் …
இப்படிப் பண்ணிய பாவங்கள் ஒரு கோடி தேறும்
இவன் குடுமி சிக்கியதால் கார்ப்பரேட் மோடிக்கே லாபம்
தன் நாட்டுக்காக ஒரு தெலுங்கன் பேசயில் " உன் மிரட்டலுக்கு பணிய நான் ஊழல் தமிழன் அல்லவே " என்று மோடியின் முகத்தில் காறித் துப்பியது சோகம்
அந்த எச்சியில் எரிந்ததோ தமிழரின் தேகம் …
முல்லைக்குத் தேரை கொடுத்தவன் தமிழன்
தன் தறுதலை பிள்ளையின் தலையை வெட்டியவன் தமிழன்
அறமது வழுவாமல் வாழ்ந்தவன் தமிழன் அவன் தரமதை வீழ்த்திய அரசியல் வேசிகளே, உங்கள் பலவேச மனத்தால் தமிழர் நிறம் அழிந்தது அதன் கொடும் எதிர் வினையால் உங்கள் இனம் வீழ்ந்தது …
இந்த மானங்கெட்ட மாபாதக
அரசை நினைக்கையிலே
நெஞ்சி பொறுக்குதில்லையே
அது சீராக இன்று துடிக்குதில்லையே …!
-ஏகப்பிரியன்
No comments:
Post a Comment