I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: March 2018

Monday, 26 March 2018

சத்தியமான உண்மை

சூது கவ்வ வருகிறது

இணைய தகவல்களின் மூலம் மிகப்பெரிய இயற்கை விழிப்புணர்வு பெருகி உள்ளது. ஆனால்,வரவர  வாட்ஸ் அப்,முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மூலிகை,இயற்கை,பாரம்பரியம் என்ற பெயரில் நிறைய பொய்யான தகவல்கள்
வலம் வர ஆரம்பித்து விட்டன.
இதை பலர் போட்டிப்போட்டு பகிர்கிறார்கள். இதனால், உண்மையான இயற்கை,மூலிகை மருத்துவ குறிப்புகளையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய அவலநிலை உள்ளது.

இயற்கை வழியில் பிணிப்போக்க நம்மைப் போன்ற இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்கள் சில முறைகளை கூறினால் சிலர் 'நீங்க டாக்டரா?' என்று கேட்கிறார்கள்; ஏனெனில் டாக்டர் சொன்னால் தான் நோய் குணமாகுமாம். அட, அடி முட்டாள்களே.! டாக்டர்கள் தான் நோயை உருவாக்குகிறார்கள். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலமே நோய்களை குணமாக்குகிறது. இந்த அடிப்படையை டாக்டர் சொல்லவே மாட்டார். தேங்காய் - கொழுப்பு,
பழம் - சக்கரை. சூரியகாந்தி எண்ணெய்,அயோடின் உப்பு, பிராய்லர் கோழி,நோய்க்கிருமிகளை உள் செலுத்தும் தடுப்பூசி போன்றவை மிகநல்லது; என்பதே டாக்டர்களின் ஏகோபித்த கருத்து. இது அவர்கள் கற்ற வியாபார கல்வியறிவு.  அனைத்து படித்த டாக்டர்களும் அமெரிக்க மருத்துவ வியாபாரத்தின் இடைத்தரகர்கள் மட்டுமே. அவர்களுக்கு அங்கிருந்து வரும் உத்தரவுகளையே செயல்படுத்துவார்கள். இந்தியாவை பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை மருத்துவ முறைகள் பெரிய அளவில் விழிப்புணர்வை பெற்று வருவதால். தற்போது படித்த மருத்துவர்களின் மூலம் இந்துப்பு கெட்டது,செக்கு எண்ணெயில் கிருமி உள்ளது,மூலிகைகள் ஆபத்தானது போன்ற தகவல்களை திட்டமிட்டு பரப்பி மக்களிடம் புதிய குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.!

நாம் கூறுவது என்னவென்றால் இந்துப்பு இயற்கைப்பொருள்,செக்கு எண்ணெயும் இயற்கைப்பொருள்,துளசி இலையும் இயற்கைப்பொருள் இதை சாப்பிட்டால் செத்து விடுவேன் என்று கூறும் முட்டாள்களே, மினரல் வாட்டர்,சுத்திகரித்த எண்ணெய்,சுத்திகரித்த உப்பு,இரசாயண மாத்திரையை சாப்பிட்டால் தான் உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் இயற்கையான உணவுப்பொருளிலோ,மூலிகையிலோ இருப்பது ஒரே விதமான,ஒத்திசைவான,எளிதாய் உடல் கிரகிக்கும் ஆற்றல் மிக்க சக்தி. ஆனால் 'இயற்கையோடு இரசாயணம் சேர்த்த உங்கள் உணவுப்பொருளும் மருந்துகளும் உடலை சிரமப்படுத்தி சிறுநீரக செயலிப்பை ஏற்படுத்தும் கொடிய விசங்கள்; என்பது எங்களுக்கு முழுதாய் தெரியும்'
என்று;கூறும் அளவிற்கு நாம் இயற்கையைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அல்லது  நம்மை மீண்டும் இரசாயண தாசர்களாய் மாற்றுவது உறுதி.!
உயிர் போகும் முன்பாவது உணர்வு பெறுபவர்கள் பாக்கியவான்கள்.!

ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)

aumherbals.blogspot.com

Friday, 23 March 2018

கொள்ளைப்போகும் இந்தியா

திசை திருப்ப மீண்டும் ஒரு முயற்சி...*நெருங்கும் பேரழிவு -தமிழகம்##.    *** சாகர்மாலா !****
------------------------------------------
முழுவதும் படிக்க.....🙏

*இதுவரை நாம் பார்த்த அழிவுத்திட்டங்களான Methane, Shale, Nutrino, Hydrocarbon, Gail, Ongc என இதில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கைக்கு சொந்தமான வளங்களை பெருநிறுவன முதலைகள் அறுவடை செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்போகும் திட்டத்திற்கு பெயர்தான் சாகர்மாலா.*
https://defence.pk/pdf/threads/1st-meeting-of-the-national-sagarmala-apex-committee-held.401539/

http://sagarmala.gov.in/

*சில தினங்களுக்கு முன்பு ஒரு அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து,தேசிய கீதம் பாடாமல் சமஸ்கிருத பாடல் பாடி துவக்கி வைக்கப்பட்டது என ஒரு பிரச்சினை வந்தது தெரியுமா?

**அந்த நிகழ்ச்சி சாகர்மாலா திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா....
மீண்டும் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் திசை திருப்ப பட்டது ....

*இந்திய வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமாக 8,00,000 கோடி செலவில்  துவங்கி வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் இது.*

http://modifying-india.blogspot.com/2015/11/sagar-mala.html

*இதற்கு இந்திய குடி மக்கள் ஒவ்வொருவரின் சட்டைப்பையில் இருந்து 6,400 ரூபாய், நம்மை கேட்காமலேயே எடுத்துள்ளார்கள்.*

https://www.google.co.in/amp/s/postcard.news/modi-milestones-sagarmala-project-will-promote-industrialization-trade-tourism-transportation/amp/

*7,500 km நீளமுள்ள இந்திய கடற்கரையில் ஒரு ஊர் அளவு பிரம்மாண்டமான 20 துறைமுகங்கள், 200 துணை துறைமுகங்கள் கட்டமைக்க உள்ளார்கள்.*

*இந்த துறைமுகங்கள் அனைத்தும் 7000 km நீளமும், 600 meter முதல் 200 meter வரை அகலமான சாலைகள், ரயில் தண்டவாளங்கள், ஆற்று வழிகள், குழாய்கள் மற்றும் வாணூர்தி மூலமாக இணைக்க மிகப்பிரம்மாண்ட கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளார்கள்.*

http://container-mag.com/2016/04/19/india-sets-out-maritime-strategy/

*இது சாதாரண சாலை அல்ல, இராணுவ பீரங்கி வாகனம் செல்லவும், இராணுவ விமானங்கள் இந்த சாலையில் தரை இறக்கும் அளவிற்கு மிகவலிமையாக கட்டமைக்கப்பட உள்ளார்கள். இராணுவ விமானங்களை இந்த சாலையில் தரை இறக்க நமது அன்பிற்குறிய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.*

https://www.dtnext.in/News/TamilNadu/2018/02/27113744/1063326/Sagarmala-Tamil-Nadu-to-get-Rs-25L-crore-projects.vpf

*நமது வளங்களை கொள்ளையடிக்க வெள்ளையன் தண்டவாளம் அமைத்தான், கொள்ளையடித்தது பற்றாது என்று, இந்த ரயில் பாதைகள் தற்போதைய Goods ரயில் பாதையை விட பத்து மடங்கு அகலமாக வடிவமைக்க உள்ளார்கள். இது அனைத்திற்கும் பெயர் தான் Smart City.*

http://theindianawaaz.com/shipping-rs-2302-05-crore-for-coastal-berth-scheme-of-sagarmala/

*ஆற்று வழித்தடங்களை துறைமுகங்களுடன் இணைக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் நதி நீர் இணைப்புத்திட்டம். இதை மோசடி ஆசாமியின் துணை கொண்டு செய்து வருகிறார்கள்.*

http://railanalysis.in/rail-news/new-projects-inaugurated-kamarajar-port-tamil-nadu/

*இந்த துறைமுகங்களுக்கு மின் வசதி கொடுக்கத்தான் கூடன்குளம் அணு மின் நிலையம். இந்த சாகர்மாலா திட்டத்தை நிறைவேற்ற Roadway, Railway, Pipeline, Riverway, Airway, IT என பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவைப்படுகிறது. இது தான் Make In India.*
http://sagarmala.gov.in/media/gallery/vocpt-and-tangedco

*உலகிலேயே தரமான கருங்கற்கல் கிடைக்கும் ஒரே இடம் நம் தமிழகம். இதை சுரண்டி எடுத்து ஏற்றுமதி செய்யவே மலைகளை குடையும் Neutrino திட்டம்.*

*பூமிக்கடியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கைக்கு சொந்தமான வளங்களை எல்லாம் எடுக்கவே Hydrocarbon, Methane, Shale, ONGC திட்டம். இதை குழாய் மூலம் துறைமுகங்களுடன் இணைக்கவே Gail pipeline திட்டம்.*

*இதை எல்லாம் நிறைவேற்ற இப்பகுதியில் உள்ள வேளாண் மக்களை வேளாண்மையில் இருந்து விரட்டியடிக்கவே, நீண்ட வருடமாக நீளும் காவரி நீர் பங்கீட்டுப்பிரச்சனை. காவரியில் நீர் வராததிற்கும், காவரி மேலாண்மை வாரியம் அமைக்காததிற்கும் இதுவே காரணம்.*

*பிரம்மாண்ட துறைமுகங்கள் அமைக்க 3,600 கடற்கரை மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி, 25 கோடி மீனவ மக்களை அவர்களது மீன்பிடி தொழிலில் இருந்தும் விரட்டியடிக்க உள்ளார்கள்.*

*இதற்கு இவர்கள் வடிவமைத்த நாடகமோ ஏராளம் ஏராளம். எண்ணூர் எண்ணை கசிவு. கடற்கரை ஓர மீனவ கிராமங்களில் காவல்துறை அத்துமீறல், தமிழர்கள் மீது கச்சத்தீவு எல்லையில் இலங்கை இராணுவத் துப்பாக்கிச்சூடு. ஒகி புயல் அறிவிப்பின்மை. மீன்பிடிக்க சீன வலை. என நாடகம் நீளக்கடலை விட நீள்கிறது.*

*25 கோடி மக்கள் வயிற்றில் அடித்து இவர்களை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்த 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளார்கள் ஒரு ஊரளவு பிரம்மாண்ட துறைமுகங்களில் துப்புறவு தொழிலாலியாக கூட்டி பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய போன்ற அடிமை கூலி வேலைகளில் நம் மக்களை பணி அமர்த்த உள்ளார்கள்.*

*மேலும் 4120 சதுரக் கிலோ மீட்டர் மேங்ரூவ் காடுகள் அளிக்கப்பட உள்ளது, "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்பார்கள் அதுபோல் இறந்தும் கடலடியில் புதையுண்டு பவலப்பாறைகள் வசிப்பிடமாய் மாறிப்போன நமது முன்னோர்களின் வாழ்விடங்களில் அமைந்திருக்கும் மீன்கள் உற்பத்தியாகக்கூடிய இடமான பவலப்பாறைகள் முழுவதும் துறைமுக கட்டமைப்பின் போது அழித்தொழிக்கப்படும்.*

*உலகிலேயே அதிக பவலப்பாறைகள் கொண்டது நமது கடற்கறை என்பது குறிப்பிடத்தக்கது.*

*கடல் ஓரங்களில் உள்ள 1208 தீவுகளை தனியார் Corporate நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்போகிறார்கள். இதற்கும் தனுஷ்கோடி, மக்கள் வாழ தகுதியற்ற இடம் என்ற இந்திய அரசு அறிவிப்பிற்கும் தொடர்பு இல்லை என சொன்னால் முட்டாள் கூட நம்பமாட்டான்.*

*மற்றும் உலகிலேயே எங்கும் நடக்காத கூத்தாக சில துறைமுகங்களை தனியாருக்கு ஒப்படைக்க உள்ளார்கள். இந்த துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட உள்ளது.*

*இப்படி, தான் நினைத்த அனைத்தையும் Corporate கைக்கூலிகளான கூமுட்டை அரசியல் வியாதிகளை வைத்து திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது உலகவல்லாதிக்கம்.*

*இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 2035 ல் தமிழகம் வாழத்தகுதியற்ற பாலைவன பூமியாக மாறிப்போகும் என்கிறது ஒரு ஆய்வு.*

*சரி இந்த பேரழிவு வராமல் தடுக்க, நாம் செய்ய வேண்டிய முதற்கட்ட பணி என்ன ?*

*நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இந்த சாகர்மாலா திட்டத்தின் அபாயத்தை Phd Scholar முதல் பாமரன் வரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.*

*மக்கள் மட்டும் விழிப்படைந்துவிட்டால் எந்த சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.*

*தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழிவுத்திட்டங்களின் அபாயத்தை எளிமையாக கொண்டு சேர்க்க எனது யோசனை !*

*எந்த வசதியும் இல்லாத காலத்தில் பாமரனுக்கு இரமாயணம், மகாபாரதம் எல்லாம் எப்படி சென்றடைந்தது ? தெருக்கூத்து மூலம் அது போல் தான் இதுவும்.*

*சாகர்மாலா போன்ற அழிவுத்திட்டங்களை அழிக்கும் திட்டத்தின் பெயர்*

*தெரு விழித்திரை / Street Aware Screen !*
-----------------------------------------------------------

*தெருவிற்கு ஒரு விழிப்படைந்த இளைஞன் நிச்சயம் இருப்பான், நாம் நம் தெருவில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து  Projector, Screen, Speaker & Mike இதை சொந்தமாகவோ வாடகைக்கோ வாங்க வேண்டும்.*

*சாகர்மாலா போன்ற பேரழிவுத்திட்டத்தின் அபாயத்தை குறித்து விளக்கும் பல காணொளிகள் உள்ளது, அதை மாலை நேரங்களில் மக்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தும், இன்னும் பல குறும்படங்களை உருவாக்கி போட்டுக்காட்ட வேண்டும்.*

*இந்த தெரு விழித்திரை நிகழ்ச்சி தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தெருக்களிலும் நடைபெற வேண்டும்.*

*இதை பார்க்க பார்க்க மக்கள் இதை பற்றி சிந்திக்க துவங்குவார்கள், பேசத்துவங்குவார்கள், நாளை எதிர்க்க வேண்டிய நிலை வந்தால் மக்கள் அனைவரும் ஒருமித்த குரல் கொடுக்க இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.*

*இது தெருவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரை என்பதால் "தெரு விழித்திரை" என பெயர்.*

*கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி, இம்மண்ணில் வாழும் வரை எந்த கொம்பனாலும் இந்த மண்ணை ஒன்றும் செய்ய முடியாது.*

*Alex Collier என்னும் ஆராய்சியாளர் உலகில் முதல் முதலாக பேசப்பட்ட மொழி "தமிழ்" என்கிறார்.*

*UNESCO சொல்கிறது "TAMILIANS ARE REFERRED TO BE THE LAST SURVIVING CLASSICAL CIVILIZATION IN THE WORLD"*

*இவ்வுலகில் கடைசியாக வாழும் தொல் இனம் "தமிழினம்" என்கிறார்கள்.*

*நம்முடன் வாழ்ந்த சமகால தொல் இனங்கள் அனைத்தும் அழிந்துவிட்டது. நாம் மட்டும் இவ்வுலகில் நிலைத்திருக்க காரணம் ஒன்றுதான். அது நம்முடைய போர்குணம்.*

*இந்த நாசக்கார சாகர்மாலா திட்டத்தை மட்டும் நாம் தடுக்காமல் விட்டால், தமிழகம் அடுத்த சோமாலியாவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.*

*முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அது அத்தனையும் இத்திட்டத்திற்காகத்தான் என்பது உங்களுக்கு தெரியவரும்.*

*இத்திட்டம் வராமல் தடுப்பது, இம்மண்ணில் விளைந்த அரிசிப் பருக்கையை உண்ணும் ஒவ்வொருவரது கடமை. இக்கடமையை நாம் செய்யத்தவறினால், தன் சொந்த மண்ணையும், இனத்தையும் காக்காத பெரும்பாவத்திற்குள்ளாகி, ஈனப்பிறவிகள் என வரலாற்றில் இடம் பிடிக்கும் அவல நிலை ஏற்பட வாய்புள்ளது.*

*உடனே இந்நாசக்கார சாகர்மாலா என்னும் அழிவுத்திட்டம் ஏற்படுத்தப்போகும் பேராபத்தை மக்களுக்கு உணர்த்த "தெரு விழித்திரை / Street Aware Screen" என்னும் திட்டத்தை நாம் செயல்படுத்துவோம்.*

*இயற்கையை இறைவனாக வழங்கிய நாங்கள், எங்கள் கண்முன்னே இயற்கை வளங்கள் கொள்ளை போவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.*

Wednesday, 14 March 2018

உயிர் வளர்க்கும் வழி

உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்

2.உணவும் உடல் திறனும்

கடந்தப் பகுதியில் உடல் எரிசக்தியை பற்றிய தேவையான தகவல்களை தெரிந்து கொண்டோம். இதில் சிலருக்கு ஒரு ஐய்யம் தோன்றி இருக்கலாம். 1500  எரிசக்திகளை ஒரு நாள் உடற்பயிற்சியில் குறைப்பது மிக கடினமான செயல் என்பதுதான் அது. உண்மைதான் ஆனால் அதே 1500 கலோரிகளை மிக எளிதில் ஒரு  வேளை உணவின் மூலமே எடுப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். இப்படி உழைக்க மறுப்பவர்கள்  உண்ண மறுப்பதில்லை. " உழைக்காதவனுக்கு உண்பதற்கு உரிமை இல்லை " என்பது பழைய கதை,உடற்பயிற்சி செய்யாதவனுக்கு சிறப்பான உணவை சீரணிக்கும் ஆற்றலே இல்லை என்பதே உடலியல் உண்மை.

அதனால் உணவில் மிக கவனமாக இருப்பது மிக அவசியம். காலை உணவாக அரைமூடி தேங்காய்,இரண்டு வாழைப்பழம் -சிறிது கருப்பட்டி அல்லது அவல் காய்கறி கலவை/கேழ்வரகு கூழ் - துவையல்/ இட்லி/பொங்கல் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பழைய உணவுகள்,அரைத்த பழைய மாவில் செய்த உணவுகள் பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிருங்கள். காலை எழுந்தவுடன் மூன்று முதல் ஐந்து டம்ளர் நீர் வரை குடிக்கலாம். தேன் -எலுமிச்சைச்சாறு கலவையும் நல்லது. காப்பி,தேநீர் தேவையில்லை. பழம்,தேங்காய் போன்றவற்றை முதலில் சாப்பிட்டுவிட்டு தேவையெனில் உடனே சிறிது சமைத்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம், எக்காரணம் கொண்டு உணவே எடுக்காமல் இருக்கவோ அல்லது முழு வயிற்றிலும் உணவை திணிக்கவோ வேண்டாம். உணவுடன் நீர் அருந்த வேண்டாம். தேநீர் நேரத்தில் நீர் அல்லது சீனி,எஸன்ஸ்,ஐஸ் சேர்க்காத பழச்சாறுகளை மட்டும் அருந்தலாம். அதனுடன் ஒருதுண்டு கடலையை  கூட உண்டுவிட வேண்டாம். மதியமும் இரவும் உங்களுக்கு பிடித்த வழக்கமான உணவை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவு ஏழுமணிக்குள் என்றால் மிகவும் நல்லது.நேரம் தவறிவிட்டால் வெறும் பழங்கள் அல்லது பழச்சாறுகள் மட்டும் போதும். பசித்தால் உணவு தாகம் எடுத்தால் தண்ணீர் என்பதெல்லாம் இந்த முறையில் கிடையாது. ஏனெனில் நாம் தினமும் 1500 கலோரிகள் வரை உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே குறைக்க உள்ளோம். அதில் முக்கால் பங்கை நாம் உணவின் மூலமும் நீரின் மூலம் எடுத்துக்கொள்ளப் போகிறோம். அதனால் பசித்தால் உணவு - தாகம் வந்தால் நீர் என்ற நோயாளிகளுக்கும் சோம்பேறிகளுக்குமான உணவு முறை நமக்குத் தேவைப்படாது.

ஜிம் பயிற்சிகள் உடலின் இறுக்கத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் தற்போது அதை செய்து வருபவர்கள் வேறு எளிய உடற்பயிற்சிகளுக்கு மாறிவிடுங்கள். நேற்றைய பயிற்சியோடு இன்று புதிதாக அர்த்த ஹலாசனம் 20 விநாடி விதம் 5 முறை அல்லது,10 விநாடி விதம் 10 முறை.அதோடு மட்ச்யாசனம் ஒரு நிமிடம்,சாந்தியாசனம் ஐந்து நிமிடம் மற்ற பயிற்சிகளோடு இந்தப் பயிற்சிகளையும் காலையும் மாலையும் தவறாது செய்வர்கள் மட்டுமே சாப்பிடுங்கள் மற்றவர்கள் தயவாய் சாப்பிட வேண்டாம்.

மற்றவை நாளை

-ஏகப்பிரியன்DYT

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

இந்தப்பகுதியில் வரும் தகவல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற உள்ளதால் மற்ற குழுக்களில் பகிர வேண்டாம். நமது "ஆதிமருத்துவம்"
இயற்கை மருத்துவ நூல் தேவைக்கு அணுகவும்:
M&W 9629368389.

நலம் பெருகட்டும் …

Tuesday, 13 March 2018

உடல் சுருக்கும் வழி

உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்

1.எரிசக்தியும் உடல் அழகும்

சரசரியாக ஒரு நாளைக்கு நாம் உணவின் மூலம் 2500 கலோரிகளை உட்கொள்கிறோம்.
உடல் உழைப்பின் மூலம் 1500 கலோரிகளை இழக்கிறோம். மீதி உள்ள 1000 கலோரிகள் சேமிப்பில் இருக்கிறது. இதுபோன்று ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 7000 கலோரிகள் உடலில் அதிகமாக இருக்கிறது. உணவின் மூலம் எடுக்கும் கலோரிகளை குறைத்தால் உடல் சிக்கென இருக்கும். மற்றொரு வழி விளையாட்டு,உடற்பயிற்சி,தற்காப்புபயிற்சி,யோகா,நடனம்,நீச்சல்,குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை செய்து அதிகப்படியான கலோரிகளை  எரிக்க வேண்டும்.
இது கொஞ்சம் மெனக்கெட வேண்டிய வழிமுறை. ஏனெனில் ஒரு நாளைக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் சேர்ந்து இயங்கும் படியான ஒரு பயிற்சியை பத்தாயிரம் அசைவுகள் செய்தால் ஏறத்தாழ 500 கலோரிகள் மட்டுமே குறையும்.
நடைப்பயிற்சி என்றால் குறைந்தது இரண்டு மணி நேரம் வேகமாக வாய்மூடி நடந்தால் 500 கலோரிகளை எரிக்கலாம். விளையாட்டு உடற்பயிற்சி,நீச்சல்,நடனம்,தற்காப்புப் பயிற்சி எனில் ஒரு மணி நேரம் வரை ஓய்வில்லாமல் செய்தால் அதே அளவு கலோரிகள் காலியாகும்.யோகாவை பொறுத்தவரை சுத்திகரிப்பு பயிற்சி,ஆசனம்,மூச்சுப்பயிற்சியின் மூலம் ஒரு மணிக்கு 300 முதல் 600 கலோரிகள் வரை காலி செய்யலாம்.[பயிற்சியின் வேகத்தையும் நிலைத்தலையும் பொறுத்து அளவு மாறுபடும்]

உடல் உழைப்பு மற்றும்  இன்றைய உணவுப்பழக்கம் இவற்றை கடைப்பிடிக்கும் அனைவருமே உடல்பருமன்,சக்கரை,கர்ப்பப்பை பிரச்சனை,மனஅழுத்தம்,இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளில் வருந்த வேண்டியது விதி. இந்த விதியை வெல்ல நமது மதியை கொஞ்சம் செலவழிக்க வேண்டும்.  அதாவது தினமும் மூன்று வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். இடைவேளை டீ,காபி,நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடுத்து காலை 1 மணிநேரம் மாலை ஒருமணி நேரம் முறையான உடற்பயிற்சியை செய்து 1500 கலோரிகள் வரை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேராத காரணத்தால் உடல் சிக்கென மாறிவிடுவதோடு மற்ற  நோய்களும் குணமாகும். 

சரி இப்பொழுது இன்று செய்ய வேண்டிய பயிற்சிகள்

அரைமணி நேர வேக நடை அல்லது பத்து சுற்றுகள் மென் ஓட்டம்/24 சுற்றுகள் சூரிய ஆசனம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இன்று காலையும் மாலையும் தவறாது செய்யுங்கள். இதற்குப் பதிலாக அரைமணி நேரம் நடனம்,நீச்சல்,தற்காப்பு போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.ஆனால் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம்.
இடை வேளை உணவு முற்றிலும் தவிர்த்து நீர் மட்டும் அருந்த வேண்டும்.
மற்றவை நாளை.!

தொடரும் …

-ஏகப்பிரியன் D.Y.T

aumherbals.blogspot.com

DON'T SHARE IT

Friday, 9 March 2018

இயற்கை வாழ்வியல்

*ஆதி மருத்துவம்*

☘இயற்கை வாழ்வியல் முகாம்

*இயற்கை மருத்துவக்கோட்பாடு
* உடலியல் செயல்பாடுகள்
*எழு முக்கிய யோகாசனங்கள்
*தியான முறைகள்
*உடல் சுத்திகரிப்பு
நுட்பங்கள்
*இயற்கை எனிமா
*கண்சுத்தி
*நாசிசுத்தி
*கபசுத்தி
*வாழை இலைக்குளியல்
*12 முக்கிய வர்ம நுட்பங்கள் துண்டும் முறையும் பயன்களும்
*பிராணசிகிட்சை நுட்பங்கள்
* இயற்கை உணவுகள்
*எளிய மூலிகை மருந்துகள்
தயாரிக்கும் முறை
*இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்

நிறைந்த முழுமையான இயற்கை வாழ்வியல் முகாம்.!

பயிற்சியளிப்பவர்:
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]

நாள்: 18/03/2018 ஞாயிறு
நேரம்: 7am and 6pm

இடம்: அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்.

*முன்பதிவு அவசியம்*

Mobile & Whats App 9629368389
E-mail herbalsaum@gmail.com

நன்கொடை ரூ 1200/-
[பயிற்சி சான்றிதல்,
பயிற்சி உபகரணங்கள்,
ஆதிமருத்துவம்
பயிற்சிப்புத்தகம் உட்பட]

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

🌿இயற்கையோடு இயைந்து இன்ப்புற்று வாழ்வோம்.!

AM YOGA TRUST NGL 461/2012

Thursday, 8 March 2018

அதி மூத்திரம் குணமாக

தினமும்  வெறும் வயிற்றில் கையளவு  ஆவாரம்பூவில் இரண்டு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி குடித்துவந்தால் அதிமூத்திரம்,வாய்ப்புண்,உடல் எரிச்சல்  சரியாகிவிடும். தொடர்ந்து 10 நாட்கள் குடிக்க வேண்டும்.

Monday, 5 March 2018

பூண்டு தேனூறல்

நீன்ட நாள் நல் ஆயுளேடு வாழ ரகசிய உணவு(மருந்து)

*இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!

-இணையப்பகிர்வு

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...