I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உயிர் வளர்க்கும் வழி

Wednesday, 14 March 2018

உயிர் வளர்க்கும் வழி

உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்

2.உணவும் உடல் திறனும்

கடந்தப் பகுதியில் உடல் எரிசக்தியை பற்றிய தேவையான தகவல்களை தெரிந்து கொண்டோம். இதில் சிலருக்கு ஒரு ஐய்யம் தோன்றி இருக்கலாம். 1500  எரிசக்திகளை ஒரு நாள் உடற்பயிற்சியில் குறைப்பது மிக கடினமான செயல் என்பதுதான் அது. உண்மைதான் ஆனால் அதே 1500 கலோரிகளை மிக எளிதில் ஒரு  வேளை உணவின் மூலமே எடுப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். இப்படி உழைக்க மறுப்பவர்கள்  உண்ண மறுப்பதில்லை. " உழைக்காதவனுக்கு உண்பதற்கு உரிமை இல்லை " என்பது பழைய கதை,உடற்பயிற்சி செய்யாதவனுக்கு சிறப்பான உணவை சீரணிக்கும் ஆற்றலே இல்லை என்பதே உடலியல் உண்மை.

அதனால் உணவில் மிக கவனமாக இருப்பது மிக அவசியம். காலை உணவாக அரைமூடி தேங்காய்,இரண்டு வாழைப்பழம் -சிறிது கருப்பட்டி அல்லது அவல் காய்கறி கலவை/கேழ்வரகு கூழ் - துவையல்/ இட்லி/பொங்கல் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பழைய உணவுகள்,அரைத்த பழைய மாவில் செய்த உணவுகள் பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிருங்கள். காலை எழுந்தவுடன் மூன்று முதல் ஐந்து டம்ளர் நீர் வரை குடிக்கலாம். தேன் -எலுமிச்சைச்சாறு கலவையும் நல்லது. காப்பி,தேநீர் தேவையில்லை. பழம்,தேங்காய் போன்றவற்றை முதலில் சாப்பிட்டுவிட்டு தேவையெனில் உடனே சிறிது சமைத்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம், எக்காரணம் கொண்டு உணவே எடுக்காமல் இருக்கவோ அல்லது முழு வயிற்றிலும் உணவை திணிக்கவோ வேண்டாம். உணவுடன் நீர் அருந்த வேண்டாம். தேநீர் நேரத்தில் நீர் அல்லது சீனி,எஸன்ஸ்,ஐஸ் சேர்க்காத பழச்சாறுகளை மட்டும் அருந்தலாம். அதனுடன் ஒருதுண்டு கடலையை  கூட உண்டுவிட வேண்டாம். மதியமும் இரவும் உங்களுக்கு பிடித்த வழக்கமான உணவை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவு ஏழுமணிக்குள் என்றால் மிகவும் நல்லது.நேரம் தவறிவிட்டால் வெறும் பழங்கள் அல்லது பழச்சாறுகள் மட்டும் போதும். பசித்தால் உணவு தாகம் எடுத்தால் தண்ணீர் என்பதெல்லாம் இந்த முறையில் கிடையாது. ஏனெனில் நாம் தினமும் 1500 கலோரிகள் வரை உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே குறைக்க உள்ளோம். அதில் முக்கால் பங்கை நாம் உணவின் மூலமும் நீரின் மூலம் எடுத்துக்கொள்ளப் போகிறோம். அதனால் பசித்தால் உணவு - தாகம் வந்தால் நீர் என்ற நோயாளிகளுக்கும் சோம்பேறிகளுக்குமான உணவு முறை நமக்குத் தேவைப்படாது.

ஜிம் பயிற்சிகள் உடலின் இறுக்கத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் தற்போது அதை செய்து வருபவர்கள் வேறு எளிய உடற்பயிற்சிகளுக்கு மாறிவிடுங்கள். நேற்றைய பயிற்சியோடு இன்று புதிதாக அர்த்த ஹலாசனம் 20 விநாடி விதம் 5 முறை அல்லது,10 விநாடி விதம் 10 முறை.அதோடு மட்ச்யாசனம் ஒரு நிமிடம்,சாந்தியாசனம் ஐந்து நிமிடம் மற்ற பயிற்சிகளோடு இந்தப் பயிற்சிகளையும் காலையும் மாலையும் தவறாது செய்வர்கள் மட்டுமே சாப்பிடுங்கள் மற்றவர்கள் தயவாய் சாப்பிட வேண்டாம்.

மற்றவை நாளை

-ஏகப்பிரியன்DYT

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

இந்தப்பகுதியில் வரும் தகவல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற உள்ளதால் மற்ற குழுக்களில் பகிர வேண்டாம். நமது "ஆதிமருத்துவம்"
இயற்கை மருத்துவ நூல் தேவைக்கு அணுகவும்:
M&W 9629368389.

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...