I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உடல் சுருக்கும் வழி

Tuesday, 13 March 2018

உடல் சுருக்கும் வழி

உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்

1.எரிசக்தியும் உடல் அழகும்

சரசரியாக ஒரு நாளைக்கு நாம் உணவின் மூலம் 2500 கலோரிகளை உட்கொள்கிறோம்.
உடல் உழைப்பின் மூலம் 1500 கலோரிகளை இழக்கிறோம். மீதி உள்ள 1000 கலோரிகள் சேமிப்பில் இருக்கிறது. இதுபோன்று ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 7000 கலோரிகள் உடலில் அதிகமாக இருக்கிறது. உணவின் மூலம் எடுக்கும் கலோரிகளை குறைத்தால் உடல் சிக்கென இருக்கும். மற்றொரு வழி விளையாட்டு,உடற்பயிற்சி,தற்காப்புபயிற்சி,யோகா,நடனம்,நீச்சல்,குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை செய்து அதிகப்படியான கலோரிகளை  எரிக்க வேண்டும்.
இது கொஞ்சம் மெனக்கெட வேண்டிய வழிமுறை. ஏனெனில் ஒரு நாளைக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் சேர்ந்து இயங்கும் படியான ஒரு பயிற்சியை பத்தாயிரம் அசைவுகள் செய்தால் ஏறத்தாழ 500 கலோரிகள் மட்டுமே குறையும்.
நடைப்பயிற்சி என்றால் குறைந்தது இரண்டு மணி நேரம் வேகமாக வாய்மூடி நடந்தால் 500 கலோரிகளை எரிக்கலாம். விளையாட்டு உடற்பயிற்சி,நீச்சல்,நடனம்,தற்காப்புப் பயிற்சி எனில் ஒரு மணி நேரம் வரை ஓய்வில்லாமல் செய்தால் அதே அளவு கலோரிகள் காலியாகும்.யோகாவை பொறுத்தவரை சுத்திகரிப்பு பயிற்சி,ஆசனம்,மூச்சுப்பயிற்சியின் மூலம் ஒரு மணிக்கு 300 முதல் 600 கலோரிகள் வரை காலி செய்யலாம்.[பயிற்சியின் வேகத்தையும் நிலைத்தலையும் பொறுத்து அளவு மாறுபடும்]

உடல் உழைப்பு மற்றும்  இன்றைய உணவுப்பழக்கம் இவற்றை கடைப்பிடிக்கும் அனைவருமே உடல்பருமன்,சக்கரை,கர்ப்பப்பை பிரச்சனை,மனஅழுத்தம்,இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளில் வருந்த வேண்டியது விதி. இந்த விதியை வெல்ல நமது மதியை கொஞ்சம் செலவழிக்க வேண்டும்.  அதாவது தினமும் மூன்று வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். இடைவேளை டீ,காபி,நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடுத்து காலை 1 மணிநேரம் மாலை ஒருமணி நேரம் முறையான உடற்பயிற்சியை செய்து 1500 கலோரிகள் வரை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேராத காரணத்தால் உடல் சிக்கென மாறிவிடுவதோடு மற்ற  நோய்களும் குணமாகும். 

சரி இப்பொழுது இன்று செய்ய வேண்டிய பயிற்சிகள்

அரைமணி நேர வேக நடை அல்லது பத்து சுற்றுகள் மென் ஓட்டம்/24 சுற்றுகள் சூரிய ஆசனம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இன்று காலையும் மாலையும் தவறாது செய்யுங்கள். இதற்குப் பதிலாக அரைமணி நேரம் நடனம்,நீச்சல்,தற்காப்பு போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.ஆனால் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம்.
இடை வேளை உணவு முற்றிலும் தவிர்த்து நீர் மட்டும் அருந்த வேண்டும்.
மற்றவை நாளை.!

தொடரும் …

-ஏகப்பிரியன் D.Y.T

aumherbals.blogspot.com

DON'T SHARE IT

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...