I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: 2018

Friday, 28 December 2018

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஆண்டே

*மனதோடு பேசுகிறேன்*

---ஏகப்பிரியன்---

31.இறைநிலையின்
இனிய வரங்கள்

" தமிழில் பாடி புகழ் பெற்றவர்கள் நூறு
தமிழையே பாடும்
வரம் பெற்றது என்பேறு.! "

ஒகிப்புயல் சேதத்தில் ஆரம்பித்த 2018 ஆம் ஆண்டு கஜாவின் கர்ஜனையில் நிறைவடைந்து வருகிறது ….!

 ஆண்டுக்கு இருமுறை
தொற்று வியாதி பயங்களை உலகில் விதைத்து பல மரணங்களை அறுவடை செய்துவரும்
நவீன உலகம் இப்பொழுது
புதிதாக புயல் மரணங்களையும்
சேதங்களையும் ஆண்டுக்கு பலமுறை நிகழ்த்தி வருகிறது.!

இது இயற்கையின் இயல்புதான் என்றே பலரும் கருதுவதால்
அதைப்பற்றி இங்கு பேச
விரும்பவில்லை.!

இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு எனக்குத்தந்த சில வரங்களைப்பற்றி மட்டுமே பேசப்போகிறேன்.!

எனது ஆதிமருத்துவம் நூல் ஜனவரியில் சிறப்பாக வெளிவந்து  சில நூறு இதயங்களுக்கு நமது முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும் பயிற்சி முறைகளையும் கொண்டு
சேர்க்க உதவியது.

 அதோடு  இதன் மூலம்
கிடைத்த நிதியில் ஒகிப்புயலில் பாதிக்கப்பட்ட இரு
விவசாயிகளுக்கு 20,000
நிதியும் கொடுக்கும் வரம் பெற்றது; இறைநிலை
எனக்கீந்த அருள்மழை.!

சென்னை,திருச்சி,நாகர்கோவில்,திருநெல்வேலி போன்ற சில ஊர்களில் ஒருங்கிணைந்த ஆதி மருத்துவக்கலை  முகாம்
நடத்திட உதவியது;சமூக ஊடக நண்பர்கள் மூலம் சித்த நிலை எனக்கு வழங்கிய அருமையான வாய்ப்புகள்.!

முற்றும் முடிவு பெறாத எனது மொட்டை மாடி வகுப்பில் தனது யோகாசனப் பயணத்தை தொடங்கிய என் மாணவி நவ்யாவிற்கு  இந்திய அளவிலான  யோகாசனப்போட்டியின் வெள்ளிப்பதக்கம் வழங்கி வாழ்த்தியது; எனது யோகக் குருமார்களின் உன்னத அன்பு.!

நீங்கள் கூறிய முறைகளை கடைப்பிடித்தேன் தலைவலி போனது,சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது,மனம் இப்பொழுது அமைதியாக இருக்கிறது, உங்கள் மூலிகைப் பொருட்கள் சிறப்பாக பயனளித்தது என்றெல்லாம் கூறிய மனிதர்கள் அனைவரும்; எனது பிராத்தனைக்கு பிரபஞ்ச ஆற்றல் கொடுத்த பேரொளிகள்.!

இத்தனை இருந்தாலும்
இலக்கியம் இல்லாத வாழ்வில் இன்பமும் ஞானமும் ஏது? "மனவளக்கலை பேராசிரியர்
சங்கீதா முதல் தமிழ்
 பேராசிரியர் பர்வீன் சுல்த்தானா வரை பல்வேறு ஆன்மீக இலக்கிய ஆளுமைகளை
 எனக்கு அறிமுகப்படுத்தி கற்றலில் கேட்டல் இன்பம் என்பதை மீண்டும் நினைவுப்படுத்தியது;
முகநூல் எனக்கு  கோடையில் வழங்கிய பனங்கள்ளு.! "

பாரதி,பட்டுக்கோட்டைகளின் பாட்டைக்கேட்டு   …

அதை சமகால குரலாய்
 மாற்றியமைத்து "கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு
நம்மாழ்வார் வாக்கியம் தெளிவு அதைக் கடைப்பிடித்துப் பழகு"
என்ற;எனது உணவு விழிப்புணர்வு பாடலைக்கேட்டு  மகிழ்ந்து;

கண்ணா,தமிழில் எழுதி புகழ் பெற்றவர்கள் நூறு;
தமிழையே எழுதும் வரம் பேறுவதே பேறு.! என்று; என்னை வாழ்த்தியது தமிழன்னையின் பெருங்கருணை.!

அந்தக் கருணையின் ஒளியில்

" பிறந்து சிறந்த மொழிகளில்
 சிறந்தே பிறந்த தமிழ்மொழி
நான் இறந்து மீண்டும்
பிறப்பினும் என் நாவில்
மலர்ந்து ஒளிகொடு "

என்ற உன்னத பாடலை எழுதி தாய் மொழியில் என்
இதழ் பதித்தேன்;
தமிழ் உலகில் என்
தடம் பதித்தேன்.!

இன்னும் ஒரிரு நாளில் இந்தப்பாடல் பல அற்புதமான படக்காட்சிகளுடன் நமது Adhimaruthuvam you tube
https://youtu.be/cMoxkxskJ8w

 சேனலிலும் முகநூலிலும்
வெளிவர உள்ளது.!

இன்னும் இந்த 2018 ஆம் ஆண்டில் - வீட்டிலேயே இயற்கை சோப்பு முதல் நாப்கின் வரை செய்வதற்கும் கற்றுக்கொண்டேன். இந்த ஆண்டு இன்னும் பல அற்புதங்களை செய்துள்ளது. அவற்றையும் பட்டியலிட்டால் இன்றெல்லாம் முடியாது.!

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் ஆண்டே.!

இதற்கு பின்னால்
இறைநிலையின் பேராற்றலும் எனது மாணவர்கள்,ஆசிரியர்கள்,
நட்பாளர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரின்  ஒத்துழைப்பும் நிறைந்துள்ளதை உணர்ந்து நெகிழ்ந்து
பிராத்தனை செய்கிறேன்.!
நலம் பெருகட்டும் …

அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துகளை முன்னதாகவே கூறுவதில்
பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

"எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும்
மேன்மையடைக … "

தொடர்ந்து பேசுவோம் …

www.aumherbals.com

நரைமுடி தீர்வு

நரை முடி காரணமும் தீர்வும்

தலையில் முடி கருகரு என்று கருப்பு நிறத்தில் வளரக் காரணம் நம்தோலில் இருக்கும் மெலனின் என்ற சுரப்பிதான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதனால் கருமையான முடி வளர்ந்து வருகிறது.

அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பிக்கும்போது முடி வெள்ளையாக வளர ஆரம்பிக்கிறது. மெலனின் சுரப்பி குறைவாக ஏன் சுரக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். அதிக வயதானவர்களுக்கு ஹைட்ரஜன் பேராக்சைடு முடியில் அதிகமாக உற்பத்தியாவதை கண்டு பிடித்தார்கள். இந்த ஹைட்ரஜன் பேராக்சைடுதான் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது என்றும் கண்டு பிடித்தார்கள். சிலருக்கு வாலிப வயதிலேயே நரைப்பதற்ககும் ,சிலருக்கு வம்சா வழியாகவே நரைப்பதற்கும் இந்த அடிப்படைச் சமாச்சாரமே காரணமாகும். சரியான உணவுகளை சாப்பிடாமல் போவதாலும் முடி நரைக்கலாம். கவலை மனசோர்வு காரணத்தாலும் இப்படி முடி நரைக்கலாம்.

நரை முடி குறைய

1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலையை
மென்றுதின்று ஒருடம்ளர் தண்ணீர் குடித்து வரலாம் நரை முடி

2. சீயக்காய், கடுக்காய், பயத்தம்பருப்பு, நெல்லிக்காய் ஆகியவற்றை
அரைத்து மாவாக்கி கொண்டு அதை தேய்த்து குளிக்கலாம் நரை முடி.

3. இரும்பு சத்து உணவுபொருட்களை சேர்த்துகொள்ளலாம் நரை முடி.

4. மருதாணி, கருவேப்பிலை, செம்பருத்தி இவைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம் நரை முடி.

5. மருதாணிஇலை வெந்தயம் கொஞ்சம்,ஒரு எலுமிச்சை சாறு இவைகளை அரைத்து தினமும் குறித்து வந்தால் நரைமுடி போய்விடும்.

6. கீரை, காய்கறி, பால், முட்டை, மீன் முதலியவைகளை உண்ணலாம்.

7. வைட்டமின் b12 உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

8. காபி டீ பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

9. தினமும் கருவேப்பிலை துவையல் சாப்பிடலாம்.

10. கருவெப்பிலை சாறு எடுத்து, அதே அளவு தேங்காய் எண்ணெயையும் எடுத்து இரண்டையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்.!

-இணையப்பகிர்வு

Saturday, 15 December 2018

இயற்கை நாப்கின்
 தயாரிக்கும் முறை

கேன்வாஸ் பேப்பர் கிளாத் என்று டெய்லரிங் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும்.

அதில் ஒரு மீட்டர் வாங்கி ஒரு நாப்கின் அளவில்  இரு பகுதியாக  மடிக்கும் படி சுமார் 16 துண்டுகளாக வெட்டிக்கொண்டு கிளாத்தில்
மினுமினுப்பாக உள்ள பகுதியை உள்பக்கமாக மடித்து நடுவில் தேவையான அளவு
(சுமார் 20 கிராம்)
மருந்து கடையில் கிடைக்கும்
பஞ்சை வாங்கி வைத்துக்கொண்டு …

மடித்து நான்கு ஓரங்களையும் சூடான தேய்ப்பு பெட்டியில் தேய்த்தால் நான்கு ஓரங்களும் ஒட்டிக்கொள்ளும்.

பேப்பர் பொருட்கள் விற்கும்
கடையில் டபுள் சைட் செல்லோ டேப் என்று
கிடைக்கும். அதில் பெரிய டேப் ஒன்றை வாங்கி நாப்கினின் பின்புறம் ஒரு சைடை ஒட்டிக்கொண்டால் பிறகு தேவைப்படும் போது மேலிருக்கும் பேப்பரை கிழித்து உள்ளாடையில் ஒட்டிக்கொள்ளலாம்.

இது இயற்கையானது. கடையில் விற்கும் நாப்கினை தொடர்ந்து பயன்படுத்தினால் பிறப்புறுப்பு  புண்கள்,புற்று,கர்பப்பை கற்கள்
போன்றவை ஏற்படும்.

அதனால்
இந்த இயற்கை முறைக்கோ அல்லது ஆதி முறைப்படி மீண்டும் பழைய
 துணிகளையோ பயன்படுத்தும் படி பெண்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.!
நலம் பெருகட்டும் …

ஆதிமருத்துவம்_ஏகப்பிரியன்
www.aumherbals.com

Thursday, 22 November 2018

🍃 வெற்றிலை.  1
துளசி.              10 இலை
வேப்பிலை.      2 இலை
மஞ்சள்தூள்    1 spoon
சீரகம்.                1 spoon
குருமிளகு.        10

இவைகளை 1   டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிட்டு இளஞ்சூட்டில் குடிக்கவும். தினம் 3 வேளையாக  3 நாள் குடித்துவந்தால்  எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.
டெங்கு, மலேரியா, ப்ளூ, வைரஸ், காய்ச்சல். மர்மக், காய்ச்சல். எதுவாக... இருந்தாலும் சரி, ஆகிவிடும்.
காய்ச்சல் இருக்கும் வரை தொடர்ந்து குடித்து வரவும்.

  • உடல் பருமன் தொப்பை குறைய


 இரண்டு கிலோ அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் ஓமத்தை பொடி செஞ்சு அதில் போட்டு நல்லா கிளறி இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு …

 நீர் ஒரு லிட்டர் அளவிற்கு வற்றியதும் ஆறவைத்து  அதைப் பிழிஞ்சு சாறு எடுத்து  அதோடு அதே அளவு சுத்தமான தேன் கலந்து மண்பானை அல்லது குளிர்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு …

தினமும் 50 மில்லி கலவையுடன் 50 மில்லி நீர் சேர்த்து  காலையில்  உணவிற்கு ஒருமணி நேரம் முன்பு   தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 40 நாளில் தொப்பை உடல் பருமன் கரைந்து சிக்கென காட்சியளிக்கலாம்.

அன்னாசி பித்தக் கோளாறுகளான மயக்கம்,தலைச்சுற்றல்,அதிக தாகம் போன்றவற்றையும் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து மிக அதிகம், இதனால் மலச்சிக்கல் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவையும் ஏற்படாமல் இருக்கும்.

*ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்*
www.aumherbals.com

Monday, 12 November 2018

*AUM HERBALS இயற்கை*
*மூலிகை தயாரிப்புகள்*
******************

🌿நிலவேம்பு குடிநீர்

விசக்காய்ச்சல்,மூட்டுவலி,
உடல்வலி,தோல் அரிப்பு,உடல்வீக்கம்,சிறுநீரக பலவீனம் நீக்கும் ஒப்பற்ற மருந்து.!

நிலவேம்பு,மிளகு,பற்பாடகம்
சந்தனச்சீவல் போன்ற ஒன்பது மூலிகைகளின் கலவை.!

250 கிராம் 200 ரூபாய்.!

🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

950 கிராம், 600 ரூபாய்

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 500 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 600 ரூபாய்/-

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுத்தேங்காய்,இயற்கை எள்ளு, இயற்கை வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
500 ரூபாய்/-

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 600 ரூபாய்/-

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம்,600 ரூபாய்/-

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை,ஆவாரம்பூ, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

🍄அமுக்ரா  மாத்திரை & லேகியம்

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய அமுக்ரா மாத்திரை மற்றும் லேகியம்

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*

மாத்திரை 100,
 300 ரூபாய்.
லேகியம் 500 கிராம்,450 ரூபாய்.

🌿புதினா தைலம்

தலைவலி,மூக்கடைப்பு,சோர்வைப்போக்கும் புதினா தைலம்.

புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட இயற்கை தயாரிப்பு.!

 சிறிய பாட்டில்
20 ரூ/-

🌫 கற்பூரத்தைலம்

பாதவெடிப்பு,உடல் ஊறல்,கொசுக்கடியைப் போக்கும்  அற்புத தைலம்.!

பச்சைக்கற்பூரம்,தேங்காய் எண்ணெய்,கற்றாளைச்சாறு கலந்து தயாரிக்கப்பட்டது.!

சிறிய பாட்டில் 30 ரூபாய்.!

🌈 *ஆதி மருத்துவம் புத்தகம்*

இயற்கை மருத்துவக்கோட்பாடு,அடிப்படை உடலியக்க செயல்பாடுகள்,யோகா,தியானம்,
வர்மா நுட்பங்கள். பிராண சிகிட்சை, அவசர சிகிட்சை, உளவியல் ஆலோசனைகள், இயற்கை உணவு முறை,நோய் நீக்கும் குளியல் முறைகள்,உயிர் தரும் மூலிகை மருத்துவக் குறிப்புகள் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல்

248 பக்கங்கள், 275 ரூபாய்

🔰மஹாயோகா புத்தகம் & ஆழ்நிலை யோகா வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
 ❄இன்சுலின் ஆவணப்படம்

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

*ஆதிமருத்துவம்*
🍁🍁🍁🍁🍁

தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த இயற்கை மருத்துவ நூல்

🌿இயற்கை மருத்துவ வரலாறு
🍁உடல் சுத்திகரிப்பு முறைகள்
🌿முக்கிய
யோகாசனம்,பிராணாயாமம்,
தியான நுட்பங்கள்
🍁மூலிகை மருத்துவ குறிப்புகள்
🌿வர்மசிகிட்சை நுட்பங்கள்
🍁பிராணசிகிட்சை
🌿இயற்கை பிரசவ முறை விளக்கம்
🍁பெண்கள்,
குழந்தைகளுக்கான எளிய மருத்துவ உதவிகள்
🌿இயற்கை குளியல் முறைகள்
🍁ஆரோக்கியமாய்
 வாழ கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை
🌿ஒன்பது முக்கிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
💥தடுப்பூசிகளின் உண்மை
🌿ஆபத்து காலத்தில் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி முறைகள்
💐இல்லறம் இனிக்க இனிய ஆலோசனைகள்
☘உடல்பருமன் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கு ஒருங்கிணைந்த
இயற்கை சிகிட்சை முறை

போன்ற இயற்கை வாழ்வியல் நுட்பங்கள் அனைத்தும் இணைந்த முழுமையான இயற்கை மருத்துவ நூல் இதுபோன்ற ஒரு புத்தகம் இதற்கு முன் தமிழில் வெளிவரவில்லை. இயற்கை மருத்துவ நுட்பங்களை முழுவதும் கற்க உதவும் அருமையான நூல்.ஒவ்வெரு வீட்டிலும் இயற்கை மருத்துவ மையங்களிலும் இருக்க வேண்டிய அற்புதப்படைப்பு.

🍁ஆசிரியர்,
 ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில்DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]

384 பக்கம் - 360 ரூ

வெளியீடு:
💥AM YOGA TRUST
16/89.தைக்கா தெரு,
திட்டுவிளை.
கன்னியாகுமரி மாவட்டம்
629852
கைப்பேசி:9629368389
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

Sunday, 28 October 2018

உயிர்மீட்கும்
மருத்துவம்

41.உயிராற்றலை மேம்படுத்தும்
பத்துகுளியல் முறைகள்.!

" வானும் மண்ணும்
காற்றும் நீரும்
நெருப்பும் நிறமும்
உயிரும் உறவும்
தந்தவன் அவனன்றோ
அதை மறந்தால்
வாழ்வுண்டோ …! "

1.சூரியக் குளியல்
---------------------
கதிரவனின் வெப்பம் ஒருலட்சத்து அம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.!

உலகின் மலர்ச்சிக்கும் விடியலுக்கும் கதிரவனே காரணமாய் இருக்கிறது.!
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் இயக்கத்தில் மிக முக்கியமானது பித்தம் என்றழைக்கப்படும் சூரியசக்தி.!

மனித உடலில் பித்தத்தின் இயக்கம் சீராக இல்லையெனில்
மனிதன் கோழையாவான். பல்வேறு உடல் பிணிகள் ஏற்படும். இவ்வளவும் ஏன், சூடாக இயங்கும் உடலைத்தான் மனிதன் என்கிறோம்.! குளிர்ந்த உடல் பிணத்திற்கு சமம்.!

சூரியன் மூலம் வரும் வெப்ப சக்திக்கு இத்தனை வல்லமை இருந்தாலும், ஆதிகாலந்தொட்டே அதிக உஷ்ணசக்தியை கண்டு,உலக மனிதன் அஞ்சியே வாழ்ந்து வருகிறான்.!
ஆனால்,நமது பாரத முன்னோர்கள் சூரியநமஸ்காரம் என்ற ஒன்றை கண்டறிந்து, சூரியனின் ஆற்றலை உடலுக்குள் கிரகிக்கவும் அதன்மூலம் உடலில் உள்ளத் தேவையற்ற கழிவுகளை எரிக்கவும், கட்டிகளை கரைக்கவும், தோலை மெலனின் பகுதியால்  உறுதியான கவசமாக்கவும், எலும்பை வலிமையான கேடயமாக்கவும், கதிரவனோடு இயைந்து வாழ்ந்து வந்தனர்.!
முன்னோர் ஞானம் போற்றி,போற்றி.!

இது போன்ற, பல்வேறு பலன்கள் சூரியக்குளியலில்இருப்பதை, தனது  ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்த வெளிநாட்டினர், சூரிய ஆற்றலை தன் உடலில் கிரகித்துக் கொள்வதற்காகவே, சூரியக்குளியல் என்ற ஒன்றை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.! இன்றைக்கும் உலகில் தட்பவெப்ப மாறுதல்களால் அதிகம் பாதிப்படையாமல் இயங்கும் நாடுகளில் நமது பாரதமே முதன்மையானது.! அமெரிக்கா, அரேபியா, ஆப்ரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளில்  வெயில் என்றால்  கொடுர வெயில், பனி என்றால் நடுநடுங்க வைக்கும் பனி , பனிகாலத்தில்  வீட்டின் உள்ளேயே கூட கம்பளிகளைப் போட்டுக் கொண்டால்தான், வாழ முடியும்.! என்ற நிலை;ஆனால், நாமோ அதிகமான மார்கழிப் பனியில்  அதிகாலையிலேயே பஜனை  பாடிவிட்டு, சித்திரையின் சுட்டெரிக்கும் வெயிலில் தேர்த்திருவிழாவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.!

கதிரவன், வாயு, வருணன் அனைவரையும் தேவனாக்கி பலரும் பூஜையும் செய்துவருகிறார்கள்.! இது சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இவர்களா கடவுள்? என்று; எகத்தாளமாகவும் இருக்கிறது.! ஆனால், நமது நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வெரு அசைவிலும் பல ஆயிரம் உடல், மன, இயற்கையின்   இரகசியங்கள் மறைந்திருக்கிறது!
ஆகையால், கொடை வெப்பத்தை பார்த்தோ அல்லது ஆரம்ப கட்டி,சிறுநீரக செயலிழப்பு போன்ற வற்றைப் பார்த்தோ யாரும்  பயப்படவே தேவையில்லை.! அதிகாலையில் எழும் பழக்கமும் வெயிலில் உலாவும் பழக்கமும்  இருப்பவர்களுக்கு எந்த   நோயும் வரவே வராது.!
அதிகாலை இளம்வெயிலில்  குறைந்த ஆடையுடன் தினமும் ஆறு முதல் பனிரெண்டு சுற்றுகள் வரை  சூரியநமஸ்காரம் <யோகாசனம்> செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.!

இது மட்டுமல்லாமல் சிறுநீரகச் செயலிழப்பு, கிட்னிகல், பித்தப்பைகல், கண்கட்டி, தோல்நோய், புற்றுநோய்,இளநரை, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பிரச்சனை உள்ளவர் களுக்கு இந்த இந்த சூரியக் குளியல் ஒரு வரப்பிரசாதம்.! நல்ல மண்பானை நீரை மூன்று முதல் நான்கு டம்ளர் வரை குடித்துவிட்டு, வெறுமனே கடற்கரையிலோ,வீட்டு மொட்டை மாடியிலோ, தினமும் காலை 7 மணிமுதல்  மாலை 5 மணிவரை  உள்ள நேரத்தில் ஏதேனும்  ஒரு 30 முதல் 60 நிமிடம் சூரியக் குளியல் செய்தாலே போதும்.உடலின் புதிய பரிமாணம் விளங்கும்.! அதைவிடுத்து வெயிலில் போகக்கூடாது,கோடைகாலம் என்றால்  ஏசியிலேயே இருக்க வேண்டும், முகத்தில் கிரீம் போட்டுக்கொள்ள
வேண்டும்.

என்று இருப்பவர்க்கு மட்டுமே  அத்தனை வியாதிகளும் வரும்.! கொடை வருவதற்கு முன்பே கோவா, கோவளம் , கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு பல வெளிநாட்டினர் வந்து குவிவார்கள்.!
அவர்களுக்குதான் வெயிலின் மகத்துவம் தெரியும்.! அது நமக்கும் தெரிந்தால் வாழ்வுவிடியும்.!

2.மண் குளியல்
--------------------------
பஞ்சபூத ஆற்றலில் முதலாவதாக குறிப்பிடுவது நிலத்தைதான்.! இந்த நிலத்தை வளப்படுத்துவதோடு, மனித உயிர்கள் வாழ்வதற்கு, தேவையான அனைத்து உணவுகளையும், உற்பத்தி செய்துதருவது மண்தான்.! மண்ணில் உயிரினங்களின் உடலின் உள்ளே இருக்கும் அத்தனை வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் குவிந்து கிடக்கின்றன.!

 அதனால் தான், மண்ணில் விதைக்கும் எதுவும் நூறாக,ஆயிரமாக வளர்ந்து பயனளிக்கிறது.! அதோடு மண்ணில் வெறும் காலோடு நடந்தால் மண்ணில் உள்ள சக்தியை உள்ளங்காலின் ஆற்றல் மேல் நோக்கி இழுத்து தனது பிணிகளைப் போக்கிக் கொள்கிறது.!

தினமும் ஒரு மணிநேரம் உயிரோட்டம் உள்ள மண் தரையிலோ,புல்தரையிலோ நடந்து வந்தாலே பாத எரிச்சல் குதிகால்வலி, கண் சிகப்பு,மன அழுத்தம் போன்றவை குணமாகும்.!
மண் குளியலுக்கு செம்மண், நிலத்தில் உள்ளக் களிமண்,கரையான் புற்று மண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.! அல்லது நமது தோட்டப் பகுதியிலோ சுற்றுப்புறத்திலோ மண் எடுப்பதென்றால் ஐந்தடிக்கு கீழ் உள்ள மண்ணை தோண்டி எடுப்பது நல்லது.! ஏனெனில் அதில்தான் உயிராற்றல் நிறைந்திருக்கும்.!
இப்படி எடுக்கும் மண்ணை அல்லது, கறையான் புற்றை எடுத்து கொஞ்சம் காயவைத்து ,ஒரு அரிப்பை வைத்து அரித்து கீழ்வரும் மண்ணை எடுத்து,
ஒரு ஆளுக்கு இரண்டுகிலோ மண்ணோடு, நூறுகிராம் மூலிகை குளியல் பொடி, கையளவு வேப்பிலை, கையளவு குப்பைமேனி இலை இவற்றையும், சேர்த்து கொழகொழ பதத்தில் முதல் நாள் மாலையில் மூடிவைத்து விட்டு, அடுத்தநாள் காலையில் மண்ணை தேவையான பதத்தில் குழைத்து கொண்டு, இரண்டு காதிலும் சிறிய பஞ்சை வைத்து அடைத்து விட்டு, உடலெல்லாம் இந்தக் கலவையை பூசி அரைமணி நேரம் முதல் ஒரு மணிநேரம் வரை, வெயிலில் நின்று காய்ந்ததும் குளியல் பொடி போட்டுக் குளித்துவிடலாம்.! குளிர் பிடிக்காதவர் களுக்கு உடனே  மண்ணை எடுத்து நீர்சேர்த்து அடுப்பில் லேசாக மண்ணை வேகவைத்து உடலில் பூசிக் கொள்ளலாம்.!
 இதனால்,தோல்நோய்கள் குணமாகும்.! கல்லீரல் வீக்கம்,சிறுநீரக செயலிழப்பு,முதுகுவலி,மூட்டுவலி,உடல் வலி கழுத்துவலி, கைகால் வீக்கம் குணமாகும்.!
உடல் முழுவதும் மண் தேய்த்து குளிக்க முடியாதவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மண்ணை குழைத்துப் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளலாம்.! இதனால், அந்தந்த இடத்தில் உள்ள வலி,வீக்கம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.! குளிர்க்காய்ச்சல்,வலிப்பு போன்றவை இருப்பவர்களுக்கு சிறிது மண்ணை வேகவைத்து நெற்றியிலும் வயிற்றிலும் பட்டையாகத்தடவி காய்ந்ததும் கழுவி வந்தால் குளிர்காய்ச்சல்,வலிப்பு போன்றவை குணமாகும்.!நாள்ப்பட்ட புண்களின் மேலே ஒரு துணியை வைத்து அதன்மேல் வேகவைத்த மண்ணை வைத்து வெயிலில் அமர்ந்து வந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.! <நாள்ப்பட்ட புண்ணில் மண் நேரடியாக படக்கூடாது.>

3.வாழையிலை குளியல்;
----------------------
நன்றாக வெயில் உள்ள இடத்தில் காலை 10 மணிமுதல் 12 மணிவரை உள்ள வெயில் நேரத்தில் மொட்டை மாடியில் பாயை விரித்து அதன்மேல் ஐந்து வழை நாரை போட்டு அதற்கு மேல் நான்கு முதல் 6 பெரிய வாழை இலையை பரப்பிவிட்டு, வாழையிலை குளியல் எடுப்பவரை ஐந்து டம்ளர் நீரைக்குடிக்க செய்து,தலையில் ஒரு ஈர டவலை கட்டிக்கொள்ள வைத்து துண்டு அல்லது வெறும் உள்ளாடையுடன் வாழையிலையின் மேல் படுக்க வைத்து, காலிலிருந்து கழுத்து வரை இலையால் மூடிவிட்டு முகத்தை மூடும் இலையில் மட்டும் மூக்கின் அருகே காற்று போவதற்காக கொஞ்சம் கிழித்து விட்டு மூடிவிட்டு, முதலில் கீழே விரித்திருந்த நாரால் இடைவெளி இல்லாமல் சுற்றி சிறிது தளர்வாக  கட்டிவிடவும்.!

இதே நிலையில் 15 முதல் 25 நிமிடம் வரை படுக்கவைத்த பின் மெதுவாக கட்டை அவிழ்த்து, மூன்றுமுறை மூச்சை இழுத்துவிட செய்து மெதுவாக எழுப்பிவிடலாம்.!
 வாழையிலையின் உள்ளே இருக்கும் போது சிலர் அதிக சூடாக இருப்பதாக கூறினால், இலையின் மேலே சிறிது நீரை தெளிக்கலாம்.! குளியல் முடிந்து எழுந்ததும் தலையில் உள்ள ஈர டவலை வைத்து உடல் முழுவதையும் துடைத்து விட்டு, கொஞ்சம் எலுமிச்சை,தேன்,உப்பு கலந்த நீரை கொடுத்து பின் 15 நிமிடம் கழித்து குளிக்க வைக்கலாம்.!
இப்படி வாழையிலை குளியல் மேற் கொள்வதால் …

 உடலில் கெட்டநீர் முழுவதும் வெளியேறி <சுமார் 3 லிட்டர்> இரத்தம் சுத்தமாகும்.!
உடல் பருமன் குறையும்.! தோல்நோய்கள் குணமாகும்.!
உள்ளுறுப்புகளின் செயல்திறன் அதிகரிக்கும்.!
பசியின்மை,அஜீரணக்கோளாறு நீங்கும்.!
ஜாதக ரீதியில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

4.எண்ணெய் குளியல்;
----------------------
வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை மேம்படுத்தி,உடலில் தட்ப வெப்ப நிலை எப்போதும் சீராக இருக்கவும்,
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும்
உடலின் சளியை வெளியேற்றவும்,இழுப்பு,ஈஸ்னோஃபீலியா போன்ற வியாதிகளை குணப்படுத்தவும் உதவும் முக்கிய வழிமுறைகளில் ஒன்று எண்ணெய் குளியல்.!
சிறிது சூடாக்கிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையை உச்சந்தலை, காதுமடல்கள்,தொப்புள்,விரல் நகங்கள்,உள்ளங்கால்கள், முகம்,கைகால்கள் போன்ற இடங்களில் நன்றாக அழுத்தித் தேய்த்து,ஒரு அரைமணி நேரம் இளம் வெயிலில் நின்று விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்து விடலாம்.!

பொதுவாக ஆண்கள் சொவ்வாய்,சனிக்கிழமைகளிலும் பெண்கள் திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்வது மரபு.! ஆயினும்,மேற்கண்டப் பிரச்சனை உள்ளவர்கள், தங்களுக்கு வாய்ப்புள்ள நாளில் எண்ணெய் குளியல் செய்து தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.!

5.இடுப்புக்குளியல்;
------------------------------
ஒரு பெரிய நீண்ட குளியல் தொட்டியில்  இடுப்பளவு நீர் ஊற்றிக் கொண்டு,
தலையில் ஒரு ஈர டவ்வலை சுற்றிக் கட்டிக் கொண்டு குறைந்தப்பட்ச ஆடை அல்லது ஆடையில்லாமல், கால்களை குளியல் தொட்டியின்  வெளியே வைத்துக் கொண்டு
முதுகை சாய்த்து அமர்ந்துகொள்ள வேண்டும்.!
 <இதற்கான டப் இயற்கை மருத்துவ மையங்களில் கிடைக்கும்>

இப்படியே 20 முதல் 60 நிமிடம் வரை அமர்ந்து வந்தால் கர்பபை நீர்க்கட்டி,கர்பபை பலவீனம்,கல்லீரல் அலர்ஜி,சிறுநீரகல்,பாங்கிரியாஸ் சீரின்மை,வயிற்றுவலி,பிறப்புறுப்பு புண்கள் புண்கள்,வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.!
2 மாதங்கள் வரை தினமும் அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் என்று தொடர்ந்து இந்தக் குளியலை மேற்கொள்ள வேண்டும்.!

6.பாதக்குளியல்;
-----------------------------
பாதஎரிச்சல்,பாதவெடிப்பு, பாதவலி,குதிகால் வலி,கைகால் வீக்கம்,கணுக்கால்குடைச்சல் பாதத்தில் வியர்த்தல்,கைகால் நடுக்கம்,உடல்சூடு,தூக்கமின்மை போன்றவற்றை நீங்கச் செய்யும்.!
கால் மணிக்கட்டு வரை நீர்வைக்கும் பாத்திரத்தில் சாதாரண நீரை வைத்து,அதில் கால்களை வைத்துக் கொண்டு
<தலையில் ஒரு ஈர டவ்வலை தலப்பா போன்று கட்டிக்கொள்வது நல்லது> 15 முதல் 30 நிமிடம் வரை அப்படியே வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.! இடையில் நீரில் உடல் சூடு இறங்கியதைப்போல் உணர்ந்தால் அதில் உள்ள நீரை மாற்றி விட்டு வேறு நீரை ஊற்றிக்கொள்ளலாம்.!
இதுபோலவே இரண்டு நிமிடம் சாதா நீரிலும் இரண்டு நிமிடம் சூடுநீரிலும் என்று காலை  மாற்றி மாற்றி வைத்தும் எடுக்கலாம்.!இறுதியாக பச்சைத் தண்ணீரில் கால் வைப்பதோடு குளியலை முடித்து விடவேண்டும்.!

 ஒரு தண்ணீரில் இருந்து அடுத்த தண்ணீருக்கு மாறும்போது, கால்களை துடைத்துக் கொள்வதோடு அந்தந்த நீரின் தன்மை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!

7.தலை குளியல்;
-------------------------------
உடலை நனைக்காமல் தலையில் மட்டும் தொடர்ந்து ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை குனிந்துநின்று நீரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.!
இப்படி செய்வதால் ஒற்றை தலைவலி,மூளைச்சுடு,மனஅழத்தம்,மூக்கில் மணம் தெரியாமை, நரம்புபலவீனம் போன்றவை குணமாகும்.!

8.முதுகுத்தண்டு குளியல்;
--------------------------
இதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்டப் போன்ற அகன்ற தொட்டியில் ஒருவர் படுத்தால், காது மாடலுக்கு அருகில் வரை நீர் படுமளவுக்கு நீரை நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு உள்ளாடை மட்டும் அணிந்து அப்படியே அந்த நீரில் சாந்தியாசன நிலையில் மல்லாந்து கால்கள் டப்பிற்கு வெளியே இருக்குமாறு வைத்து படுத்து கொள்ளுங்கள்.!இப்படியே 15 முதல் 60 நிமிடம்  வரை படுத்துக் கொள்ளலாம்.! பிறகு மெதுவாக எழுந்து கொள்ளலாம். தேவையெனில் இளஞ்சூடான நீரையும் இதற்கு பயன்படுத்தலாம்.!சிலருக்கு முதுகுகுளியல் செய்யும் போது தூக்கம் வந்தால் அப்படியே தூங்கிவிட்டு விழிப்பு வந்ததும் எழும்பி விடலாம்.!
இது உடலுக்கும் மிகவும்  நல்லது.!இதை செய்வதால் முதுகுவலி,கழுத்துவலி,இடுப்புவலி,ஆசனவாய் வலி,கால்வலி போன்றவை ஒரிரு நாளிலேயே குறைந்து விடும்.!

இடுப்புக் குளியல்,முதுகுக்குளியல் போன்றவற்றை கால்களை வெளியே வைத்து செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், குளியல் தொட்டியில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து இடுப்பளவு நீர்விட்டு இடுப்புக் குளியல் அல்லது முதுகு குளியல் செய்வது போல பாத் டப்பிலேயே செய்யலாம். தேவையெனில் அந்த நேரத்தில் அடிக்கடி ஒரு ஈரத்துணியை நனைத்து மேல் வயிற்றின் மேலும் போட்டுக் கொள்ளலாம்.!

9.நீராவிக்குளியல்
----------------------
நீராவிக்குளியல் செய்வதால் இரத்தம்  சுத்தமாகும், வியர்வை சுரபியில் உள்ள கழிவுகள் வெளியேறும்,உடல்வலி,மனஅழுத்தம் குறையும்.!

நீராவி குளியலுக்கென்றே பிரத்யோக கருவிகள் வர்மா,ஆயூர்வேதா,இயற்கை மருத்துவ மையங்களில் வைத்திருப்பார்கள்.ஒரு பெரிய பெட்டி போன்ற அமைப்பில் உள்ள ஒரு இடத்தில் அமரவைத்து பக்க வாட்டில் மூலிகை கொதிநீரில் இருந்துவரும் ஆவியை சிறிய குழாய்வழியாக பெட்டிக்குள் அனுப்புவார்கள்.!
இதில் 20 முதல் 30 நிமிடம் வரை அமர்ந்து கொள்ளலாம்.!
இதை  வீட்டில் செய்ய வேண்டுமெனில் நமது குளியல் அறையில் உள்ள காற்று வெளியேறாத வகையில் சுற்றிலும் மூடிவிட்டு இரண்டு பக்கெட் சூடுநீரில் யூகாலிப்டஸ் ஆயில் அல்லது புதினா தைலம் 20 சொட்டுக்கள் வரை கலந்து  நமது குளியல் அறையின் தரையில் வெளியே நின்று கொண்டு ஊற்றிவிட்டு கதவை வெளிபுறமாக மூடி விட வேண்டும்.!

ஒரு 30 விநாடிகள் கழித்து திறந்தால் அங்கு வெந்நீரில் இருந்து கிளம்பிய ஆவி படர்ந்திருக்கும்,அதில் கதகதப்பு இருக்கும் வரை நின்றுவிட்டு 10 நிமிடம் கழித்து சாதாரண நீரில் குளித்து கொள்ளலாம்.!
இதே குளியலை குளியல் அறையை உள்ப்பக்கமாக அடைத்துக் கொண்டு  ஒரு இரும்பு அல்லது மர நாற்காலியில் அமர்ந்துகொண்டு
தைல வெந்நீரை கொட்டிவிடலாம்.!
காலில் நீர் கொட்டி விடாமல் கவனமாக செய்ய வேண்டியது மிக அவசியம்.! முடியாதவர்கள் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடு நீரை வைத்து சிறிது துளசி,வேப்பிலை போன்றவற்றை போட்டு முகத்தை துணியால்  மூடி ஆவி பிடித்துக்கொள்வது போல ஆசன வாயை ஆவியில் காட்டியபடி நின்றும், நாற்காலியில் அமர்ந்து பாதங்களை ஆவியில் காட்டியும் சளி,இருமல்,பிறப்புறுப்பு புண்கள்,பாதவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.!

 இந்த குளியலை வாரம் இருமுறை அல்லது நோய்த்தாக்கம் உள்ள நேரத்தில் தினமும் ஒரு முறை செய்து நிவாரணம் பெறலாம்.!

10.அருவி குளியல்
------------------------
ஒரு மாத காலத்திற்கு தினமும் காலை,மாலை 20 முதல் 40 நிமிடம் வரை குற்றாலம், திற்பரப்பு,உலக்கையருவி போன்ற அருவியில் தலையில் ஒரே சீராக நீர் விழும் நிலையில் நின்று அல்லது அமர்ந்து குளித்து வந்தால் மனநோய்,மன அழுத்தம்,உடல்பருமன்,கொழுப்படைப்பு,தீராத தேகச்சூடு,உடல் அரிப்பு,சொரியாஸிஸ் போன்றவை மாறுவதோடு தேக ஆரோக்கியம் மேம்படும்.
இளமையான தோற்றம் கிடைக்கும்.!

இயற்கை அருவிக்கு செல்ல முடியாதவர்கள்- செயற்கை நீர்வீழ்ச்சி,பம்புசெட் போன்றவற்றில் குளித்தும் இதே பயனைப் பெறலாம்.!

இவை தவிர   கழுத்துவரை நீரில் அமர்ந்து செய்யும் கழுத்து குளியல்,நிலவில் படுத்து செய்யும் நிலாக்குளியல்,மரங்கள் சூழ்ந்த பகுதியில் படுத்து செய்யும் பிராணக்குளியல் போன்ற பல குளியல் முறைகள் ஆதி இயற்கை  மருத்துவத்தில்  உள்ளன.!
குளியலுக்காக பயன்படுத்தும் நீரில் தேவைக்கேற்ப சிறிது யூகலிப்டஸ் தைலம்,எலுமிச்சைச்சாறு,உப்பு,தேன், புதினா தைலம் போன்றவற்றில் எதேனும் ஒன்றை  கலந்து கொள்ளலாம்.! அதாவது உடல் வலி,பாதவலி இருந்தால் யூகலிப்டஸ் தைலம் போடலாம்.!
புத்துணர்வுக்காக எலுமிச்சை,தேன் போன்றவற்றையும்,தோலில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க உப்பு,புதினா தைலம் போன்றவற்றையும் கலந்து கொள்ளலாம்.!
ஏதேனும் ஒன்றை மட்டுமே ஓரிரு துளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பொருட்களை சேர்த்து பயன்படுத்துவது நல்லதல்ல.!
எந்த வகை குளியல் எடுப்பவர்களும் வெறும் வயிற்றில் நீர் அல்லது நீர் அதிகமுள்ள பழச்சாறுகளை மட்டுமே குடித்துகொண்டு குளியல் செய்ய வேண்டும் உணவு எடுத்துகொண்டால் குறைந்தது 4 மணிநேரம் கழித்தே குளியல் செய்ய வேண்டும்.!

இடுப்புக்குளியல்,முதுகுக்குளியல் செய்தவர்கள் தேவையெனில் ஒரு 10 நிமிடம் தலைக் குளியலோ அல்லது வழக்கமான உடல் குளியலோ செய்து கொள்ளலாம்.

அதிக இரத்த அழுத்தம்,இதயநோய்,மாரடைப்பு,தூக்கமின்மை, மனநோய் போன்ற ஆரோக்கியக் குறைபாட்டிற்காக மாத்திரை சாப்பிடுபவர்கள், பத்து நிமிடத்திற்கு மேல் எந்த குளியலையும் செய்ய வேண்டாம்.!
இந்த முறைகளை  கடைப்பிடித்து வரும் நாட்களில் அசைவ உணவு,பகல்தூக்கம்,தாம்பத்ய உறவு,அதிகப்பணி போன்றவற்றை தவிர்த்து முடிந்தவரை ஒருவேளை பழம்,காய்கறி,சமைக்காத தானியங்களையும் இருவேளை சமைத்த எளிய உணவுகளையும் உண்டு இடை வேளையில் வெறும் நீர் அல்லது பழச்சாறுகளை மட்டுமே உண்டு வரவேண்டும்.!
நலம் பெருகட்டும் …

இது போன்றே யோகாசனம்,
தியானம்,மூலிகை மருத்துவ செய்முறை,வர்மக்கலை,
இயற்கை உணவு திட்டம் என்று பல்வேறு ஆரோக்கிய வாழ்வியல்
முறைகளை அறிந்து கொள்ள
நமது ஆதிமருத்துவம் நூலை
படித்து பயிலுங்கள்.!

நூல் தேவைக்கு : 9629368389
9629131089 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.!
www.aumherbals.com
*அருகம் புல்லின்*
*அரும் குணங்கள்*

கையளவு அருகம் புல்லை எடுத்து கழுவி சிறிதாக வெட்டி அதில் பதினைந்து மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து வடிகட்டி கிடைக்கும் சாறுடன் அதே அளவு நீர்விட்டு காலை உணவிற்கு ஒன்று முதல் மூன்று மணி நேரம் முன்பாக குடித்து விட்டு காலை உணவு  நேரம்  வரை உணவு நீர் எதுவும்  அருந்தாமல் இருந்தால்

மலச்சிக்கல்,தோல் வியாதிகள்,சக்கரை,இரத்த அழுத்தம்,கட்டி,கல்,இரத்தசோகை,இரத்த சுத்தமின்மை, கல்லீரல் அலர்ஜி,கல்லீரல் வீக்கம்,மாதாந்திர பிரச்சனைகள்,கர்பப்பை நீர்க்கட்டி,பித்தப்பை கல்,உடல் ஊரல்,உடல் பருமன்,சளி,இழுப்பு,இரத்தசோகை போன்ற 500 க்கும் மேற்பட்ட
நோய்கள் குணமாகும்.

48 நாட்கள் தொடர்ந்து அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிக்க வேண்டும். எந்த நோயும் இல்லாதவர்கள் கூட வாரம் ஒருமுறை அருகம்புல் சாறை குடித்து இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.!

உணவில் உப்பு,
புளி,காரம் மற்றும் அசைவ உணவுகளை
குறைத்து இரசாயண உணவுகளை முற்றிலும்
தவிர்க்க வேண்டும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Thursday, 4 October 2018

*இரத்த விருத்தி ஆண்மை அதிகரிக்க*

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தையும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
சிறிது குங்குமப்பூ
செய்முறை: ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்

 இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் ஒரு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

  இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.

இது போன்றே அத்திப்பழ தேனூறலும் செய்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் – அரைக்கிலோ
சுத்தமான தேன் – அரைக்கிலோ
சிறிதுகுங்குமப்பூ பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும்.

 அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

 அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

  அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்.

இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிப்பு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.
(இரண்டும் முடியாது என்பவர்கள் ஏதேனும் ஒரு கலவையை மட்டுமே உண்டும் பயனடையலாம்)

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.!

-இணையப்பகிர்வு
www.aumherbals.com

Saturday, 29 September 2018

*யோகத்திற்கு நன்றி*

ஒரு 55 வயது பெரியவருக்கு திடீரென்று உணவுப்பாதை மூடி இறுக்கம் தளர்ந்து உணவு உள் செல்ல முடியாத நிலை.
(முழுங்க முடியாது உள்ளே நாம் முயன்று   உணவையோ
 நீரையோ செலுத்தினால் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து அனைத்தும் வெளியாகி
விடும்.) மருத்துவர்கள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவ மனையில் வைத்துவிட்டு நாசியோடு இரைப்பைக்கு நேரடியாக ஒரு குழாயை வைத்து திரவ உணவை மட்டும்
நன்றாக கரைத்து கொடுக்க வலியுறுத்தியதோடு வேறு ஒன்றும் செய்ய இயலாது. என்று கூறிவிட்டனர்.!

நான் ஒரு பத்துநாள் அவருக்கு, வீட்டில் சென்று தொண்டை பகுதி தளர்வை சரிசெய்யும் சில யோக நுட்பங்களை கற்றுக்கொடுத்து வந்தேன். தொடர்ந்து அவரும் தினமும் பயிற்சிகளை தனது பிள்ளைகளின் துணையுடன் செய்து வந்தார். (சுமார் இரண்டு மாதம்) புதன்கிழமை முதல் அவர் நேரடியாக "உணவை சாப்பிடுவதாகவும்

நாசி வழி குழாயை எடுத்து விட்டதாகவும் "
அவரின் மகள்; என்னை இன்று  கைப்பேசியில் தொடர்புகொண்டு யோகத்திற்கு நன்றி
என்று கூறினார்.!

நானும் அதையே கூறுகிறேன்.!
யோகத்திற்கு மனம் நிறைந்த
நன்றிகள் ஆயிரம்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Tuesday, 18 September 2018

*உயிர் மீட்கும் மருத்துவம்*

--ஏகப்பிரியன்---

53.மூலிகை குடிநீரும்
 மூலிகைச்சாறும்

" தன்னுயிர் தந்து
 மண்ணுயிர் ஏந்தும்
மூலிகை மருந்தே
விளங்குது சிறந்தே.! "

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைத்தேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காய் தோடை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் மூன்று நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு கரைத்து வடிகட்டி குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர் சிகிட்சையை செய்யக்கூடாது.!
ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
ஒருமுறை தயாரித்த நீரை
அதிகபட்சம் ஆறு மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.!
மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயன்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயன்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்த நீரோ தேவையில்லை.!

தினம் ஒரு மூலிகைச்சாறு

திங்கள் - வாழைத்தண்டு

ஒரு சிறிய வாழைத்துண்டை வெட்டி ஒரு டம்ளர் அளவு வாழைத்தண்டுடன் 10 மிளகைப்போட்டு  சிறிய தட்டு உரலில் இடித்து, சாறெடுத்து வடிகட்டி அதோடு, ஒருத்தேக்கரண்டி தேனும் ,சாறளவு நீரும் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்,சிறுநீரகம் பலப்படும்.!

சொவ்வாய் -செம்பருத்தி

நான்கு செம்பருத்திப்பூவை பறித்து 10 சீரகம் சேர்த்து தட்டுக்கல் அல்லது மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொண்டு அந்த கலவையுடன் ஒருத்தேக்கரண்டி தேன் மற்றும் ஒருடம்ளர் நீர் கலந்து குடித்து வந்தால் இதயம் பலப்படும்.இதயநோய்,பெண்கள் மாதந்திர பிரச்சனைகள் குணமாகும்.!

புதன் - புதினா

இரண்டு கையளவு புதினா இலையோடு ஒருத்தேக்கரண்டி கொத்தமல்லி, 10 மிளகு,சிறிது இந்துப்பு போட்டு இடித்து சாறெடுத்து அல்லது அரைத்து அதோடு இரண்டு பங்கு நீர்சேர்த்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம்,மன அழுத்தம் குணமாகும்.!

வியாழன் - தூதுவளை

5 தூதுவளை இலையுடன் 10 மிளகு சேர்த்து நன்றாக இடித்து  300 மில்லி நீர் சேர்த்து வடிகட்டி, இரண்டுத் தேக்கரண்டி பனங்கற்கண்டு தூள் சேர்த்து குடித்துவந்தால் சளி,இருமல்,சுவாசகாசம் நீங்கும்.!

வெள்ளி -வல்லாரை

 கையளவு வல்லாரை கீரையுடன் ஒருத்தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து இடித்து சாறெடுத்து அத்துடன் ஒருத்தேக்கரண்டி பனை வெல்லம் மற்றும் ஒரு டம்ளர் நீர் சேர்த்து குடித்து வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். உடல் இறுக்கம் குறையும்,மூளை வலுவடையும்.!

சனி - கீழாநெல்லி

இருகையளவு கீழாநெல்லி இலையை பறித்து மைய்யாக அரைத்து 300 மில்லி பசுமோர் அல்லது நீர் கலந்து குடித்துவர கல்லீரல் பலமாகும்.கண்பார்வை தெளிவடையும்.!

ஞாயிறு - பலகீரை

சிறிது முடக்கத்தான், சிறிது முருங்கை,சிறிது பசலி,சிறிது அகத்தி அல்லது உங்களுக்கு கிடைக்கும் வேறு ஏதேனும் மூன்று நான்கு கீரைகளை மொத்தமாக அரைத்து, அதனோடு தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உடல் வலி,எலும்பு தேய்மானம்,தலை சுற்றல் குணமாகும்.!

கற்றாளைச்சாறு

சோற்றுக்கற்றாளையை கழுவி தோல் நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் ஒரு டம்ளர் அளவிற்கு சிறிதாக வெட்டி எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சைச் சாறு பிழிந்து ,இரண்டு கிராம்பு தட்டிப்போட்டு, நான்கைந்து  தேக்கரண்டி தேன்கலந்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து <10 நாட்கள்> குடித்துவந்தால் இறந்த செல்கள் வெளியேறும்,உடல் சூடு,தூக்கமின்மை,சிறுநீரக சோர்வு போன்ற வியாதிகள் குணமாகும்.!

எலுமிச்சை சாறு

ஒரு எலுமிச்சை பழச்சாறுடன், ஒருத்தேக்கரண்டு இஞ்சிச்சாறு, இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து 200 மில்லி நீர் கலந்து உணவிற்கு அரை மணிநேரம் முன்பு <10 நாட்கள்> குடித்து வந்தால் பித்த மயக்கம்,இரத்தசோகை ,உடல்சோர்வு போன்றவை மாறும்.!
குறிப்பிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான மூலிகை சாறையே தினமும் குடித்து  வரலாம்.! மூலிகைச்சாற்றை  காலை உணவிற்கு குறைந்தது அரைமணி முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பு குடித்துவிடுவது நல்லது.!
பச்சை மூலிகை கிடைக்காதவர்கள் காய்ந்த மூலிகைகளை இதே முறையில் கசாயமாக வைத்தும் குடிக்கலாம்.!
ஒரு தடவை தயாரித்த சாற்றை
4 மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.!
நலம் பெருகட்டும் …

இது போன்ற ஆரோக்கிய வழிமுறைகள் யோகா,தியானம்,மூலிகை மருத்துவ நுட்பங்கள்,வர்மக்கலை  அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் ஆதிமருத்துவம்

384 பக்கம் 360 ரூ

உங்கள் தேவைக்கு
 அழைக்கவும்
9629368389
9629131089
www.aumherbals.com

Friday, 14 September 2018

யோகம் தரும் சுகம்

யோகா தெரபி

இழுப்பு,நீரழிவு,இரத்த அழுத்தம்,
மனஅழுத்தம்,உடல் பருமன்
போன்ற நோய்களை
 யோகாவின் மூலம் பத்து நாட்களில்
கட்டுப்படுத்துகிறோம்.!

குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு
 வீட்டில் வந்தும் வகுப்பு எடுக்கிறோம்.

Eghaprian
m. Ismail D.Y.T
9629131089
9629368389
AM YOGA TRUST 461/2012
சுவீஸ் பேக்கரி பில்டிங்
பார்வதிபுரம் ஜங்சன்
நாகர்கோவில்-3
www.aumherbals.com

மருந்துகள் தயாரிப்பு முறை

உயிர் மீட்கும் மருத்துவம்

17.A எளிய மூலிகை மருந்துகள்  தயாரிக்கும் முறை

நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து  பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!

இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய  நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம், பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.!

இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல்  அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.!

1.#மூலிகை பல்பொடி

1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
 100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு   50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய்  20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர்  5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்

இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர  பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!

2.மூலிகை #குளியல்பொடி

1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து  பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து  முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!

3.இயற்கை #ஊட்டச்த்துமாவு

1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்

இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து  காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!

4.#துளசிமாத்திரை

கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!

5.அமுக்ரா மாத்திரை

1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி  25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்

மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது  வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து  எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!

6.பஞ்சமூலி சூரணம்

1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை  தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம்  முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!

7.மூலிகை தேனீர்

1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்

மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!

8.புதினா தைலம்

1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!

9.நிலவேம்பு குடிநீர்

1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 1 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு  100 கிராம்

இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு  திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி  உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!

எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!

இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

இது போன்ற பல்வேறு மூலிகை மருந்து தயாரிப்புகள் இயற்கை வாழ்வியல் முறைகள் யோகா,தியான நுட்பங்கள்,வர்ம புள்ளிகள் இயக்கம் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் " *ஆதிமருத்துவம்*  "

384 பக்கம்
360 ரூ
 தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுங்கள்.

www.aumherbals.com
Mobile & Whats App
9629368389
9629131089

மூலிகை பயன்கள்

*ஆவாரையின் குணம்*

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக்  கொள்ளுங்கள். இந்தப்பொடியை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.

புதிய ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு  நீரில் கலக்கி தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போகும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கற்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.!

🙏🏻நன்றி
பதிவேற்றியவருக்கு

www.aumherbals.com

Saturday, 8 September 2018

இசையோடு எனது பயணம்


மனதோடு பேசுகிறேன்

28.புதையல் மேல் அமர்ந்து
 யாசகம் கேட்டவன்  …

அதிகாலையில் யோகா வகுப்பிற்காக எனது எளிய வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சில நாட்களில் எனக்குள்ளே ஒரு பாடல் கேட்கும். அது ஏற்கனவே வந்த திரைப்பட பாடலாக இருக்காது. இயற்கை,தமிழ்,யோகா,இறைநிலை உணர்வு என்று ஏதோ ஒரு தளத்தில் அது இராகமெடுத்து எனது பயிற்சியகம் வந்த பின்னே அடங்கும்.

முதலில் " உடலெனும் பொருள் கடந்து மனமெனும் கடல் கடந்து அருளெனும் ஆதியில் நுழைந்தேன் "

என்ற பாடலும் அதன் பின் " தேடுவதை நிறுத்து தேடியது கிடைக்கும் "

" கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு "

என்று பல்வேறு பாடல்கள் எனது இதய வீணையை மீட்டிக்கொண்டே வரும். இந்த பாடல்களை ஓய்வு நேரத்தில் சற்று ஒழுங்குப்படுத்தி  கைப்பேசியில் எனது குரலிலேயே பாடி பதிவு செய்து வைப்பேன்.

 இப்படியே ஒரு ஆறு பாடல்கள் சேர்ந்ததும் ஒரு சில எளிய இசையமைப்பாளர்களை நாடி இதை நானே பாடி வெளியிட வேண்டும். என்ற எனது எண்ணத்தை சொன்னதும் ஆளாளுக்கு ஒரு விலையை கூறினார்கள். சிலர் மட்டும் நேர்மையாக "நீங்க பாடினா யாரு கேட்பார்கள்? "
என்று கூறி மறுத்துவிட்டனர்.

அங்கே இங்கே சுத்தி நிறைவில் ஒருநாள் எனது பார்வதிபுரம் பயிற்சிமையம் அருகே இசை பள்ளி வைத்திருக்கும் ஜெபாவிடம் இதுபற்றி கூறியதும்.

"தாராளமா பண்ணலாம் " என்றதோடு; "எவ்வளவு ஆகும்" என்ற எனது அடுத்த கேள்விக்கும்; "பார்த்துக்கலாம்" என்ற இன்னொரு ஆறுதல் வார்த்தையும் கூறினார்.

அப்போது;
"ஒருவேளை நம்மை வைத்து ஏதாவது சிரிப்பு கிரிப்பு செய்து விடுவாரோ?" என்ற அச்ச உணர்வும் ஏற்பட்டது.  பிறகு அவர் ஏற்கனவே இசையமைத்து புஷ்பவனம் குப்புசாமி அய்யா பாடியுள்ள "என்னடா பழக்கம் தம்பி தம்பி அன்னைத் தமிழும் உன்னை நம்பி "  பாடலை கேட்டதும் தான் முழு உற்சாகம் ஏற்பட்டது.உடனே பணிகளை ஆரம்பித்து விட்டோம்.

நேற்று- முதல் பாடலாக " கண்ணே பாப்பா கேளு " பாடலை படக்காட்சியுடன் youtube சேனலில் வெளியிட்டு விட்டோம்.

பாடலும் காட்சியும் வெகு அருமையாக வந்துள்ளது.

இப்படி ஒரு பாடலையும் காட்சியையும் வேறு யார் எடுப்பதாய் இருந்தாலும் குறைந்தது ஒரு லட்சம் தேவைப்படும்.
அடியேன் அதில் பத்து சதவீதம் கூட செலவழிக்கவில்லை.

என்னோடு பாடிய இரு பாடகிகளான அக்சரா,அரோன் பெஃரின் இருவருமே பணம் வேண்டாம். என்றதோடு  பயணச்செலவை கூட பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

அரோன் பெஃரின் என்னோடு  தான் பாடிய வரிகளில் சிலவற்றுக்கு வீடியோவில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்தப் பாடலில் நடித்ததோடு இதற்கு நடனமும் அமைத்து கொடுத்த எனது யோக மாணவி இயற்கை குழந்தை ரிதன்யா. என்னோடு நடித்த யோகாசன சாம்பியன் நவ்யா,திவ்யா, அனு, ராகேஷ் போன்ற பலரும் மிக அருமையாக இந்தப் பணியில் ஒத்துழைத்துள்ளனர்.

ஒளிஓவியர் சகோதரர் தினேஷ் மிக அழகான காட்சி கோணங்களை அமைத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இடையில் அவர் குடும்பத்தில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டது அந்த பாதிப்பும் கூட பாடலில் சில  துண்டுக்காட்சியில் பதிவாகி உள்ளதை பாடலை பார்த்தாலே தெரியும்.

அது போலவே அன்னை ஆஸ்ரமம் சுகுமாரன் அய்யா அவர்களும் மிக கனிவாக பாடல் காட்சி பதிய தனது இடத்தை தந்து உதவினார். இப்படி பலரும் அருமையான முறையில்  உதவியதாலேயே இந்தப் பணி எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

நிறைவு பகுதியில் பாடலுக்கான சில காட்சிகள் எடுக்க இயலாமல் போன போது தனது கல்விக்கு விடுமுறை விட்டு வந்து காட்சிகளை எடுத்து தந்த எனது மகன் இஜாஷ். மற்றும் நடித்துள்ள பல்வேறு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என்று  அனைவருக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள்.!

தலைப்பிற்கு வருகிறேன் இசையமைப்பாளர் ஜெபாவிடம் "நான்  கேட்டது இசை யாசகம் அவர் எனக்கு கொடுத்துள்ளதோ பெரும் இசைப்புதையல் " உண்மையில் அவர் ஒரு சகலகலா வித்தகர்; பாடலின் சில வரிகளை  நீக்கி, சில வாக்கியங்களை சேர்த்து,எழுத்தை அழுத்தி, அழகாக்கி என்று தனது பணிகளில் மிக திறமையாக இயங்கி உள்ளார்.
இசை கோர்ப்பு பணிகளில் உள்ள  அத்தனை ஆழங்களிலும் அநாயசமாக புகுந்து வந்து ஜாலம் செய்ததோடு
காட்சி தொகுப்பிலும் பல வித்தைகள் செய்துள்ளார்.!

இதோ,எங்களது அடுத்த பாடலும் தயாராகி விட்டது.

" பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழே நான் இறந்து மீண்டும் பிறப்பினும் என் நாவில் மலர்ந்து ஒளி கொடு "

இந்த அற்புத படைப்போடு விரைவில் வருகிறோம்.

அதுவரை; "கண்ணே பாப்பா கேளு உணவில் இருக்கு வாழ்வு" பாடலை எனது, ஆதிமருத்துவம் youtube சேனலிலும் ஜெபாவின், JE publication you tube சேனலிலும் கண்டு மகிழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.!
நன்றியும், வாழ்த்துகளும் … இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ பிராத்தனைகளும் …!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Thursday, 6 September 2018

இயற்கை வரம்

இயற்கை வாழ்வியலின் இணையற்ற படைப்பு

100 % இயற்கை முறையில்  குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ இந்த மூன்றுக்கும் ஒரே முறையிலான இயற்கை சோப்பை நான் தயாரித்து விட்டேன்.!

என்ன கொஞ்சம் விலை அதிகமாக ஆகிறது.  இதற்கான மூலப்பொருட்களான பூந்திக்கொட்டை,எலுமிச்சைச் சாறு,செக்கு தேங்காய் எண்ணெய், கார்போக அரிசி,அதிமதுரம் போன்ற அனைத்தும் உன்னதமான பொருட்கள்.

அரைக்கிலோ
மூலப்பொருட்களுக்கு 200 ரூபாய் ஆகிறது. ஐந்து சோப்புகள் தயாரிக்கலாம். மற்றொரு விசயம்.இது வேகமாக கரைந்து விடுகிறது.

 அதனால் தற்போது விற்பனைக்கு இல்லை.
இதற்கான செய்முறையை நமது ஆதிமருத்துவம் youtube சேனலில் விரைவில் பகிர உள்ளோம்.!

*இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்*

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

mobile 9629368389
www.aumherbals.com

Wednesday, 15 August 2018

அரசியல் வரலாறு

ராஜயோகச்சுருக்கம்

ஆலயத்திற்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது.  உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண்.
-
மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால்  நல்லது, அதை வரவேற்கலாம். மனம் பக்குவமடைந்துவிட்டல் புறச்சடங்குகள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் .
-
பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
-
யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை.
-
நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.
-
முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி.
-
ரிஷிநிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும்.
-
அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும்.
-
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது.
-
ஒன்றுக்கு ஒன்று முரணானவை போன்றும் சண்டையிடுபவை போன்றும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான்.
-
எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். 
-
நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.!

-சுவாமி விவேகானந்தர்

www.aumherbals.com

Tuesday, 7 August 2018

தமிழ் இதயத்திற்கு அஞ்சலி

தமிழ்த்தாயின்  இளையமகன்  கலைஞரின் மறைவையொட்டி
நமது யோகா & இயற்கை வாழ்வியல் வகுப்புகள் அனைத்தும் மூன்று தினங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
AM YOGA TRUST
சுவீஷ் பேக்கரி பில்டிங்,
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்-4
www.aumherbals.com

Sunday, 5 August 2018

பாரம்பரியம் மீட்போம்

எதிர்க்கும்உண்மை
வலுக்கும்

நோயில் பல தரங்கள் உண்டு 90% நோய்களுக்கு அலோபதி மருந்து தேவையில்லை.
10 % நோய்க்கே அலோபதி மருத்துவம் தேவை.

சென்ற ஆண்டு உலக மருத்துவக்கழகமே இந்தியாவில் எளிய நிலையில் உள்ள  நோய்களுக்கு கூட 60 %  இரசாயண மருந்துகளை அதிகம் வழங்குவதாக கூறி இருந்தது.

உண்மையில் பிரசவம்
என்பது நோய் அல்ல அது
ஓர்  இயற்கை நிகழ்வு.
அதற்கு தேவையான வாழ்க்கை
முறை பயிற்சியையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதே அரசின் முக்கிய கடமை. ஆனால்.
அதை வியாபாரம் ஆக்கியதில் அரசின் பங்கு முக்கியமானது.
இன்று தங்கள் வருமானம் பாதிப்பதால் அலோபதி மருத்துவ வர்த்தகர்களும் அரசும் சேர்ந்து ஹீலர் பாஸ்கர் போன்றோரை அழிக்க முயல்கிறார்கள்.!

எதிர்க்கும் உண்மை வலுக்கும்.! நிறைவில் இயற்கையே வெல்லும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Thursday, 2 August 2018

பழம் தரும் பலம்

ஆரோக்கியம் தரும் மருந்து

பலம் தரும்
பற்ப சூரணம்

நாட்டு அமுக்குரா, சீமை அமுக்குரா,பால்மோதிக்கிழங்கு,நிலப்பனங்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு,சீந்தில் கொடி,பூனைக்காலி விதை,நெருஞ்சி முள்,தோல்நீக்கிய நெல்லிவத்தல்,அதிமதுரம்,
ஏலரிசி,சாதிக்காய்,கிராம்பு வகைக்கு 60 கிராம் சேகரித்து சுத்தம் செய்து பொடித்து லேசாக மண்சட்டியில் வறுத்து சல்லைடையில் மூன்றுமுறை  சலித்து

இவற்றுடன் அயச்செந்தூரம்,சிருங்கி பற்பம்,ஆமையோட்டு பற்பம்,கற்பூர சிலாசத்து பற்பம்,சோழிபற்பம்,
சங்குபற்பம் வகைக்கு 30 கிராம் சேர்த்து

கூடவே  அரைத்தெடுத்த 900 கிராம் நயம் பனங்கற்கண்டு, சேர்த்து கலக்கி சல்லடையால் சலித்து எடுத்து, கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு; ஒருத்தேக்கரண்டி பொடியை அதே அளவு பசுநெய்யோடு கலந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டுவர இரத்தக்குறைவு,
உடல் சூடு,சோர்வு,உடல் நடுக்கம்,ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும்.

இதே அளவு பொடியை மதிய உணவிற்கு பின் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவர சளி,இருமல், எலும்புருக்கி நோய்,காசநோய்,இழுப்பு,நுரையீரல் புண்,உடல் வெடிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.

இதே அளவு பொடியை இரவு உணவிற்கு பின் சிறிது சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வுத்தொல்லை,மலச்சிக்கல்,உடல்வீக்கம்,அஜீரண ஏப்பம்,புளித்த ஏப்பம்,தூக்கமின்மை,மூட்டுவலி,குதிகால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.!

தொடர்ந்து 24 முதல் 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே பொடியை பயன்படுத்த வேண்டும்.!

அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்த்து, இரசாயண உணவுகளை முழுவதும் நீக்கிக் கொள்வதோடு உப்பு,புளி,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே சூரணத்தை கால்த்தேக்கரண்டி மேற்கண்ட துணை மருந்துடன் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு அரைத்தேக்கரண்டி பொடியை அதே அளவு நெய்,தேன்,சுடுநீர் போன்றவற்றில்கலந்து கொடுக்கலாம்.!

*🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*

AUM HERBALS
M&W:9629368389
9629131089

www.aumherbals.com

Saturday, 28 July 2018

தமிழறிவோம் தங்கங்களே

தமிழ் ஞானம்
அறிவோம்

இறை ஒன்று:
பரம்பொருள்.

இனம் இரண்டு:
ஆண்-பெண்.

தமிழ் மூன்று

1.இயல்
2.இசை
3.நாடகம்

திசை நான்கு

1.கிழக்கு
2.மேற்கு
3.தெற்கு
4.வடக்கு

அறம் ஐந்து
(வாழும் முறை)

1.நல்லோர் அறம்
2.இல்ல அறம்
3.துறவு அறம்
4.மன்னர் அறம்
5.உயிர் அறம்

நற்குணம் ஆறு

1.நிறைமனம்
2.பொறுமை
3.ஈகை
4.கற்புநெறி
5.சமநோக்கு
6.மன்னிப்பு

சுரம் ஏழு

1.ச - சட்சம்
2.ரி - ரிடபம்
3.க - காந்தாரம்
4.ம - மத்திமம்
5.ப - பஞ்சமம்
6.த - தைவதம்
7.நி - நிடாதம்

விடை எட்டு

1.சுட்டு
2.மறை
3.நேர்
4.ஏவல்
5.எதிர் வினா,
6.உற்றது உரைத்தல்,
7.உறுவது கூறல்,
8.இனமொழி.

கோள்கள் ஒன்பது

1.கதிரவன்
(ஞாயிறு)
2.சோமன்
(சந்திரன்)
3.நிலமகன்
(சொவ்வாய்)
4.அறிவன்
(புதன்)
5.சீலன்
(வியாழன்)
6.கங்கன்
(வெள்ளி)
7.காரி
(சனி)
8.கருநாகன்
(இராகு)
9.செந்நாகன்
(கேது)

உடைமை பத்து

1.மானப் பெருமை
2.குலப்பெருமை
3.கல்விவன்மை
4.அறிவுடமை
5.தானமுடைமை
6.தவமுடைமை
7.முயற்சியுடைமை
8.தாளாண்மை
9.இனிமையுடைமை
10.இல்லறமுடைமை.

தொகுப்பு:
ஆதிமருத்துவம்
ஏகப்பிரியன்

☘இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
9629368389
9629131089

www.aumherbals.com

Tuesday, 24 July 2018

செயலிகளின் கதை

மனதோடுபேசுகிறேன்

--ஏகப்பிரியன்---

26.நேரம் கொல்லும் செயலிகள்

"பழகுவதற்கு ஒரு செயலி
பகிர்வதற்கு ஒரு செயலி
பணத்தையும் பொருளையும் பரிமாற ஒரு செயலி
பாடுவதற்கு ஒரு செயலி
பலானதை பார்ப்பதற்கு
ஒரு செயலி
படுக்கையை பகிரவும் ஒரு
செயலி உள்ளதாம்
பாளும் அரசாங்கம் கூட
அரிசியை இறக்கும் ஒரு
செயலியை தேடுதாம்"

இப்படி மனித தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற எத்தனையோ செயலிகளை இறக்கி விட்டுள்ளது
நவீன உலகம்.

எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெறத்துடிக்கும் சோம்பல் இது போன்ற கணிணி வசதிகளை பயன்படுத்தி ஆனந்தம் கொள்கிறது.

விளையாட,உடற்பயிற்சி செய்ய,யோகா செய்ய எதிர் பாலினத்தின் அழகை இரசிக்க அரசியல் கட்சி தொடங்க என்று எல்லா தளத்திலும்  செயலி வேகமாக செயல்படுகிறது.

என்னது, செயலினா என்னவா?  நல்லா கேட்டீங்க போங்க.! சரி தமிழில் சொல்றேன். செயலி என்றால் APP.  நமது ஆரோக்கியத்திற்கும் நேரத்திற்கும் நாமே வைக்கும் ஆப்பு.இது என்றால் அது மிகையாகாது.

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சில APP கள் மனிதர்களுக்கு பல உதவிகளை செய்வது உண்மைதான்.

ஆனால்,சமீபகாலமாக நிறைய,நிறைய செயலிகள் வந்து கொண்டே உள்ளன.

ஒரு செயலியை வடிவமைத்து அதை லட்சக்கணக்கானவர்களை பயன்படுத்த வைத்து விட்டால் அதை தயாரித்தவர்களுக்கு கோடிகளில் வருமானம் குவிய வாய்ப்புள்ளது.

ஆனால், இதனால்  அப்பாவி மக்களில் பலரும் கணிணி அடிமையாகவும் நோயாளிகளாகவும் மாறிவருகிறார்கள். ப்ளுவேல் போன்ற அப்களால் பலரும் தற்கொலை கூட செய்துள்ளனர்.

சைனா போன்ற ஒரு சில நாடுகளில் வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற சாதாரண செயலிகளை கூட எல்லோரும் பயன்படுத்த முடியாதபடி தடுத்து முறைப்படுத்தி உள்ளனர்.

உலக குப்பைகளை விலை கொடுத்து கொட்டச் சொல்லும் நமது இந்தியாவில் வலை இணைப்பு மட்டும் இருந்தால் போதும். எல்லா அப்புகளையும் மடியில் கட்டிக்கொள்ளலாம்.

இதெல்லாம் ஒரு பெரிய காலக் கொடுமை. மக்கள் பெரும்பாலும் அப்பாவிகள். தங்களுக்கு என்னப் பிடிக்குமோ அவை எல்லாவற்றுக்கும் ஒரு  செயலி இருப்பதால் அனைவரும் அதில் இயல்பாகவே இணைந்து விடுவதோடு  தங்கள் நேரத்தையும் இழந்து,உடல் நலத்திற்கும் பெரிய கெடுதலை செய்து கொள்கிறார்கள்.

சூதாட்ட அப்பில் சேருபவர்கள் இதோடு இலட்சக்கணக்கில் பணத்தையும் இழக்கிறார்கள்.

பாட்டுப்பிடிக்காத, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்காத மனிதர்களை  காண்பது அபூர்வம். இப்படிப்பட்டவர்களுக்காகவே smule என்ற பெயரில் பிரபலமான ஒரு செயலி இருக்கிறது.

ஆன்ராய்டு கைப்பேசியில் இலவசமாக தரவிறக்கம் செய்து  கொள்ளலாம். பிறகு தேவையானால் சிறிய தொகையை கட்டினால் vip  ஆக்கிவிடுவார்கள். நாட்டில் நீங்கள் ரெம்ப முக்கியமான நபராக மாறனும்னா பல சாதனைகளையோ, கோல்மால்களையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ பண்ணணும். ஆனா,ஸ்மூல்  ஆயிரத்து நூறு கட்டினா உங்களை ஒரு வருசம் முக்கிய பிரமுகர வைக்கிறது.

ஒரு வருசம் கழிச்சிப்பார்த்தால்  உங்கள் SPB குரல் கூட MR.ராதா  குரலா மாறி இருக்கும் வாய்ப்புண்டு.!

ஆமாங்க,தினமும் உங்களை ஐம்பது பேர் பாட கூப்பிடுவாங்க. (அப்பில்) நீங்களும் அய்யோ சித்ரா,கூப்டுறாங்க,ஜானகி கூப்டுறாங்க, ஜேசுதாஸ் கூப்பிடுறாருன்னு தினமும் குறைந்தது பத்து பாடலாவது பாடுவீங்க. இதுல G.V.பிரகாஷ், சின்மயி எல்லாம் தனியா பாடின டிராக் இங்க போன உடனேயே உங்க தளத்தில் வரும். தேவைனா அவங்களோடவும் நீங்க பாடி உங்கள் நண்பர்களிடம் காட்டி பெருமை பட்டுக்கலாம்.

இதுபோக தமன்னா,எலியானா,நயன்தாராவை  விட அழகழகான பொண்ணுங்க  சிங்கப்பூர்,மலேசியா,இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இருந்து வந்து உங்களை ப்ளீஸ் ஜாய்ன்னு சொல்லி பாடக் கூப்பிடுவாங்க.!
(ச்சே அவசரப்பட்டு இளமையிலேயே கல்யாணம் பண்ணிட்டமோ?)

அட, உண்மைதாங்க.! இளம் பெண்கள் மட்டும் இல்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் வயதான பாட்டிகள் எல்லாம் கூட "என்னோட பாடுங்க, என்னோட பாடுங்கனு " உங்களத் துரத்துவாங்க போங்க.!

பெண்களையும் இப்படி பலரும்  விரும்பி பாட கூப்பிடுங்க. அவங்க ஏற்கனவே பாடின வீடியோவை எடுத்து நாமளும் பாடினா அப்படியே இரண்டும் ஒன்றாகி நமக்கு வந்து விடும்.

ஒவ்வெரு பொண்ணுக் கூடவும்  கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சேர்ந்து  பாடின பாடல் எல்லாம்  இங்க சாதாரணமா கிடைக்கும்.

உங்கள் இளவயது  பொண்ணோ,பையனோ பல ஜோடிகளோடு சேர்ந்து  மன்மத ராசா மன்மத ராசானு பாடுன வீடியோ ஒவ்வென்றையும் தனித்தனியா பார்த்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.!

வெளியில பர்தா போட்டு முகத்தை மூடிட்டுப் போற பல இஸ்லாமிய பெண்கள் கூட ஸ்மூலில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடானு ஒரு நூறு பேரோட சேர்ந்து பாடின வீடியோ இங்கன கிடக்கு.!

என்ன ஒரு சவுகரியம்னா, அவங்க வீட்டில் உள்ளவர்களோ உறவினர்களோ யாராவது ஸ்மூலில் இருந்தால் தான் இது வெளிய தெரியும். (அந்த தாடி வாலக்கள் தான் இங்கன வரமாட்டாய்ங்களே)

இங்கனக்குள்ள இப்படி பாடிட்டு, பாடுனவன் கூட ஒடுனதுகளும் உண்டு. கணவனுக்கு பாடத் தெரியலைனு நல்லாப் பாடுனவனோட கூடுனதும் உண்டு.உள்ளே (இன்பாக்ஸ்) தனியாக பேசுதல்,வழிதல் அழுதல் எல்லாம் இங்கு சகஜம்.!

ஒரு அம்மா என்கிட்ட சொல்லுது.
"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்னு, நான் உள் கதவை மூடிட்டி  வேற ஒருத்தி புருசனோட  பாடிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த என் புருசன் கதவை வெளிப்புறமா பூட்டிவிட்டு மூன்று மணி நேரம் கழிச்சிதான் திறந்துவிட்டார்." அப்படின்னு; அப்புறம் என்னாச்சினு நான் கேட்டா " வெறென்ன,இன்னும் நாலஞ்சி பாடல் பாடிட்டு வந்து அந்த பாவத்துக்கு சோறுபோட்டு குடுத்தேன்னு சொல்லுது.!
(பொண்ணு பாக்கும் போது ஸ்மூலில் பாடுவியானு கேட்டுக்கங்கப்பா நேரத்துக்கு சோறு முக்கியம்)

ஒருத்தர் மளிகை கடையில் உட்கார்ந்துகிட்டு  கைப்பேசியில் " விழியிலே உன் விழியில் மௌனமொழி பேசும் அன்னம்னு " SPB பாடலை கவுண்டமணி குரலில் பாடிகிட்டு இருக்கும் போது ஒரு பெண் கடைக்கு வந்து " அண்ணாச்சி  ரெண்டு கிலோ அரிசி கொடுங்கனு பல முறை கேட்க, இவரும் பாட்டை பாதில விட்டுட்டு அரிசிய எடுத்துக் கொடுத்ததும்; "ஏம்ணாச்சி வீட்ல உலய வெச்சிட்டு அரிசி வாங்க வந்தா,கடய தொறந்து வெச்சிட்டு,பழய பாட்டப்பாடி  எந்தப் பாட்டிய கவுத்துட்டு இருக்கிய? காலக்கொடும சீக்கிரம் கல்யாணம் பண்ணுவே." என்று அந்தப்பெண் சொல்லி விட்டு  போன பின்,மீதி பாடலையும் பாடி வெக்கமே இல்லாம அதையும் தனது தளத்தில் வைத்துள்ளார் அந்த நண்பர்.!

எனக்குத் தெரிஞ்சி ஸ்மூலில் பாடுவதில் 90% காக்கா குரலில் தான் பாடுது.
ஒரு சிலருக்கு நல்ல குரல்வளமும், சங்கீத ஞானமும் இருந்தால் கூட தொடர்ந்து பல பாடல்களை, தொண்டைக் கட்டிக்கொண்ட பின்னும் பாடி பயமுறுத்துகிறார்கள்.

ஒரு சில பேர் மட்டும் மிகமிக சிறப்பாக பாடுகிறார்கள். அவர்களை கூர்ந்து கவனித்ததில் அவர்கள் மிக குறைவாக பாடுவதையும் ஒவ்வெரு பாடலைப் பாடுவதற்கு முன்பும் பலமுறை ஒத்திகை செய்து பாடுவதையும் உணர முடிகிறது.

நீங்கள் SMULE இல் விஐபி ஆக பணம் கட்ட வில்லை என்றால் உங்களால் தனிப்பாடல்களை பாட முடியாது என்பதோடு மற்றவர்களோடு சேர்ந்து பாடினாலும் பலப் பாடல்கள் பாதியிலேயே கட்டாகி விடும்.

இதில் vip ஆவதற்கு கிரெடிட் கார்டிலிருந்து தான் பணம் கட்ட முடியும். என்றிருப்பதால்  பலரால் அதை உடனே செய்ய முடிவதில்லை.
கைப்பேசி எண்ணில் இருந்து லாக்இன் செய்தால் மூன்று நாள் இலவச விஐபி இருக்கும்.
நான் இதுவரை மூன்று கணக்குகளை ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 பாடல்களை இதில் பாடி இருக்கிறேன்.!
எனது பாடலை கேட்பவர்கள் பலரும் ஏன் இந்த கொலை வெறி? என்று கண்ணை உருட்டுகிறார்கள்.!

ஆனால்,என்னோடு இணைந்து பாடும் தோழிகளோ என் குரலை ஆகா, ஓகோனு புகழ்கிறார்கள்.!

இல்லைனா,மீண்டும் அவங்களோட பாட மாட்டேன்னு நினச்சி இப்படி ஒரு பொய்யை அழகாக சொல்கிறார்கள் போல.!

இந்த செயலியில் பங்கேற்பாளராக உள்ள பலரும் ஸ்மூல் கம்பெனியில் பணிபுரிபவர்கள்.
குறிப்பாக தன் முகத்தை வீடியோவில்  காட்டாமல் பாடும் பலரும்,பல கணக்குகளை வைத்துக் கொண்டு இந்த செயலியை வேகப்படுத்த இயங்குகிறார்கள.

இப்பொழுது star maker போன்று  பாட்டுக்கு பல புதிய செயலிகளும் வந்து கொண்டே உள்ளன.! 

இவை எல்லாம் சேர்ந்து இன்னும் எவ்வளவு நேரம் கொல்லுமோ, எத்தனை மனிதர்களை பாட்டு பைத்தியங்களாகவும் செயலி பைத்தியங்களாகவும் மாற்றுமோ தெரியவில்லை.!

மனிதர்கள் தனக்கு தீங்கின்றி உதவும் செயலிகளை மட்டும் முறையாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.!
பல செயலிகள், மனிதனை செயல்படாமல்  முடக்குவதை
உணர வேண்டும்.!

www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...