பலம் தரும்
பற்ப சூரணம்
நாட்டு அமுக்குரா, சீமை அமுக்குரா,பால்மோதிக்கிழங்கு,நிலப்பனங்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு,சீந்தில் கொடி,பூனைக்காலி விதை,நெருஞ்சி முள்,தோல்நீக்கிய நெல்லிவத்தல்,அதிமதுரம்,
ஏலரிசி,சாதிக்காய்,கிராம்பு வகைக்கு 60 கிராம் சேகரித்து சுத்தம் செய்து பொடித்து லேசாக மண்சட்டியில் வறுத்து சல்லைடையில் மூன்றுமுறை சலித்து
இவற்றுடன் அயச்செந்தூரம்,சிருங்கி பற்பம்,ஆமையோட்டு பற்பம்,கற்பூர சிலாசத்து பற்பம்,சோழிபற்பம்,
சங்குபற்பம் வகைக்கு 30 கிராம் சேர்த்து
கூடவே அரைத்தெடுத்த 900 கிராம் நயம் பனங்கற்கண்டு, சேர்த்து கலக்கி சல்லடையால் சலித்து எடுத்து, கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு; ஒருத்தேக்கரண்டி பொடியை அதே அளவு பசுநெய்யோடு கலந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டுவர இரத்தக்குறைவு,
உடல் சூடு,சோர்வு,உடல் நடுக்கம்,ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும்.
இதே அளவு பொடியை மதிய உணவிற்கு பின் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவர சளி,இருமல், எலும்புருக்கி நோய்,காசநோய்,இழுப்பு,நுரையீரல் புண்,உடல் வெடிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
இதே அளவு பொடியை இரவு உணவிற்கு பின் சிறிது சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வுத்தொல்லை,மலச்சிக்கல்,உடல்வீக்கம்,அஜீரண ஏப்பம்,புளித்த ஏப்பம்,தூக்கமின்மை,மூட்டுவலி,குதிகால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.!
தொடர்ந்து 24 முதல் 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே பொடியை பயன்படுத்த வேண்டும்.!
அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்த்து, இரசாயண உணவுகளை முழுவதும் நீக்கிக் கொள்வதோடு உப்பு,புளி,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே சூரணத்தை கால்த்தேக்கரண்டி மேற்கண்ட துணை மருந்துடன் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு அரைத்தேக்கரண்டி பொடியை அதே அளவு நெய்,தேன்,சுடுநீர் போன்றவற்றில்கலந்து கொடுக்கலாம்.!
*🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*
AUM HERBALS
M&W:9629368389
9629131089
www.aumherbals.com
No comments:
Post a Comment