I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: June 2017

Friday, 30 June 2017

பூசணிச்சாறு வைத்தியம்

*பூசணிச்சாறு வைத்தியம்*

காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி வெண்பூசணிச்சாறுடன் ஒருத்தேக்கரண்டி தேன்கலந்து அருந்திவந்தால் மூளைச்சோர்வு, தூக்கமின்மை, நாவறட்சி நீங்கும்.!
30 மில்லி வெண்பூசணிச்சாற்றில் 90 மிலி இளநீர் சேர்த்து காலையில் குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி,குடல்புண்,உடல்சூடு குணமாகி தேகப்பொலிவு ஏற்படும்.!
அதிகமாக மசாலா செயற்கை  உணவு மற்றும் உணவக உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை மிகுந்து பல்வேறு வியாதிகள் வர ஏதுவாகும் அதை தவிர்க்க நிணைப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் 200 மில்லி வெண்பூசணிச்சாற்றை அருந்திவந்தால் காரத்தன்மை அதிகமாகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.!

🌴 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in

🐾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு💥
*AUM HERBALS*
Mobile & Whats app
*9629368389*

பெண்கள் பிரச்சனைக்கு

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.
இதற்கும் இதே சப்ஜா விதை தான்.
இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, , இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*

ஆரோக்கிய வாழ்விற்கு

*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய 30 தகவல்கள்*!!

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*

*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.!

*இணையப்பகிர்வு*

பழப்பலன்கள்

பழங்களின் பயன்கள்

1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.!

-இணையப்பகிர்வு

சக்கரை புண் ஆற

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும், தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை இதற்க்கு கண்கண்ட மருந்து ஆவாரம் இலை, இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும் இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். இது எனது தாயாருக்கு என்கையாலே செய்து,அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள் இதை அதிகம் பகிா்ந்து பலாின் கால்களை காப்பாற்றுவோம்.

Thursday, 29 June 2017

இயற்கை தயாரிப்புகள்

*இயற்கை மூலிகை தயாரிப்புகள்*
***********************
*மூலிகை பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து நமது  மூலிகை தயாரிப்புகளின்  விலை  உயர்ந்துள்ளது*

🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

950 கிராம் 600 ரூபாய்

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!

950 கிராம் 500 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

950 கிராம் 600 ரூபாய்

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 600 ரூபாய்

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுதேங்காய்,இயற்கை எள்ளு, வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
750 ரூபாய்

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 600 ரூபாய்

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம் 700 ரூபாய்

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

950 கிராம் 600 ரூபாய்

🍄அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*

100 மாத்திரை 300 ரூபாய்

🔰யோகா புத்தகம் & வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
❄இன்சுலின் ஆவணப்படம் 

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … 

*AUM HERBALS* தொடர்புக்கு:
*MOBILE & WHATSAPP* 9629368389
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in☘🍀☘🍀🌴☘🍀☘🍀

Wednesday, 28 June 2017

எளிய குறிப்புகள்

வீட்டுக்குறிப்புகள்!

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...