I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மருந்தில்லா வைத்தியம்

Wednesday, 7 June 2017

மருந்தில்லா வைத்தியம்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

30.ஒரு மருத்துவம் எல்லோருக்கும்
ஒரே மாதிரியான குணத்தை தராது

" மனமது செம்மையானால்
கடவுளை துதிக்க வேண்டாம்.!
மனமது செம்மையானால்
மருந்ததை உண்ண வேண்டாம்.!
மனமது செம்மையானால்
உடலதை வளைக்க வேண்டாம்.!
மனமது செம்மையானால்
உணவதை போற்ற வேண்டாம்.!
மனமது செம்மையானால்
விதியதை காக்க வேண்டாம்.!
மனமது செம்மையானால்
வாழ்வெல்லாம் சுகமாமே.! "

மனம் வலிமை பெற்றுவிட்டால் உலகில் உள்ள எந்த மருத்துவ முறையும் யாருக்கும் தேவையில்லை.!
வலிமை என்பது  அனைத்து கொள்கைகளின் ஓட்டைகளையும் தெரிந்துகொண்டு சாமர்த்தியமாக  அவற்றை மீறுவதல்ல.  நன்மை என்று முன்னோர் வகுத்த உண்மையை  உள்வாங்கி அவற்றோடு இயைந்து வாழ்வது.!
இந்த வலிமையை இழந்த மக்களை
நாம் மேற்கூறிய கடவுள் முதல்
விதிமுறைகள் வரை உள்ள எதனாலும் காக்க முடியாது.!
பிறகு மருத்துவ முறைகளால்  மட்டும் என்ன செய்துவிட முடியும்.!
மருத்துவம் என்பது ஒரு நாட்டின் சிதேஷ்ண நிலை,உணவுமுறை தனி மனிதர்களின் உடல் இயங்குதிறன்,
நோயெதிர்ப்பு ஆற்றல், மனநிலை,பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்து செய்யப்படுவதாய் இருக்க வேண்டும்.!
ஆனால்,துரதிஷ்ட வசமாக  உடல் எடை, உயரம், கொழுப்பு,இரத்த அழுத்தம்,சக்கரை, போன்றவை அனைவருக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டும்.!  என்றே பல  மருத்துவ முறைகளும் கூறுகிறது.! அப்படியல்ல, என்று; இவற்றை மறுக்கின்ற மருத்துவ முறைகளோ கேன்சர்,சிறுநீரக செயலிழப்பு,இதய பலவீனம்,இரத்த குழாய் அடைப்பு போன்ற நோய்கள் இருந்தால் கூட
பயமில்லை.! அவற்றை உடல் தானே சரி செய்து கொள்ளும்  என்று நம்பிக்கையை தருவதோடு, உண்மையில் இதுபோன்ற நோய் களும் வைரஸால் பரவுவதாக சொல்லப்படும் திடீர் வியாதிகளும்,
எளிதாக குணமாகும்.!
வாழ்க்கை முறையை மாற்றினால் போதும் என்று கூறுவதோடு
நோயால் யாரும் இறப்பதில்லை ஆங்கில மருத்துவர்கள் விதைத்த பயத்தினாலேயே அனைவரும் இறக்கிறார்கள் என்கிறார்கள்.!
எனக்குத் தெரிந்த ஒரு 40 வயது மனிதருக்கு புற்றுநோய் வந்தது.!
ஆங்கில மருத்துவர்கள் அவரை கைவிட்ட நிலையில் உலகில் உள்ள அத்தனை முறைகளையும் கடைப்பிடித்து பார்த்துவிட்டு சிமோகாவில் மருந்துள்ளது,பன்னியோட்டில் மருந்து தருகிறார்கள், திராட்சையை தின்றால் சரியாகிவிடும் என்று இணையத்தில் வந்த
பல செய்திகளையும் நம்பி முயன்று பார்த்தும் எதுவும் பயனில்லாமல்
இறுதியில் போனவாரம் அவர் இறந்தே விட்டார்.!
இந்த நோயாளிக்கு நோய் உள்ளது என்று கண்டறிந்த 9 வது மாதத்திலேயே அவர் இறந்துவிட்டார்.! அவரின் பெற்றோர்களும் துணைவியாரும்  நோய் முற்றிய நிலையில் இருப்பதை நோயாளியிடம் சொல்லவே இல்லை.!
நமக்கு கல்லீரல் வீக்கம் விரைவில் சரியாகும் என்றுதான் நோயாளியும் நம்பிவந்தார்.! ஆனால்,அந்த நம்பிக்கை பொய்த்துதான் போனது.!
இதுபோன்றே மற்றொரு பெரியவருக்கு இருபது வருடங்களாக சக்கரை வியாதி என்று ஆங்கில மருத்துவர் மாத்திரையை வழங்கி வந்த நிலையில் திடீரென்று ஒரு மாதம் வாழ்க்கை முறையை மாற்றியதால்
அவர் பூரண குணம் பெற்றார்.!
அவரோடு அதே முறைகளை பயன்படுத்திய இன்னொருவருக்கோ எதிர்ப்பார்த்த பயன் கிடைக்கவில்லை.!
இராண்டாவது நபர் சரியாக வாழ்க்கை முறையை மேற்கொள்ள வில்லை. அதனால் தான் குணம் கிடைக்கவில்லை, முதலாமானவர் சரியாக கடைப்பிடித்ததால் குணமானார்.என்று மட்டும் கூறமுடியாது.!
உண்மையில் நடப்பது என்னவெனில் ஒவ்வெரு உடலுக்கும் தனித்தனி உடல் இயக்கம் உள்ளது அதனால், எந்த முறையுமே ஒருவருக்கு குணமளித்தால் அனைவருக்கும் குணமளிக்கும் என்றோ அல்லது ஒருவர் நோய் முற்றிய நிலையில் 6 மாதத்தில் இறந்துவிட்டால் அதே நிலையில் உள்ள மற்றவர்கள் அனைவருமே  6 மாதத்தில் இறந்து விடுவார்கள் என்றோ  எந்த மருத்துவராலும் உறுதியாக கூற முடியாது.!
ஆனால், இன்றைக்கு விஞ்ஞான முறையில் சிகிட்சை அளிக்கிறோம் என்பவர்கள் இந்த உண்மையை உணராமல் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள எத்தகைய மனிதனுக்கு சிறுநீரகம் 70% பாதிப்படைந்தாலும் அவனுக்கு டயாலிஸிஸ் செய்ய வேண்டும், எப்படிப் பட்டவருக்கும் சக்கரை 300 இருந்தால் இன்சுலின் போட வேண்டும், எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இவ்வளவு உயரத்திற்கு இவ்வளவு எடைதான் இருக்க வேண்டும்,
புற்றுநோய் மூன்றாவது நிலை என்றால் காப்பாற்றவே முடியாது. என்றெல்லாம்  தவறான முடிவை எழுதி வைத்துள்ளனர்.!
இயற்கை முறைகளை கையாளுபவர்களோ …  நான் சுகர் 500 இருந்ததை இப்படி செய்து நார்மலுக்கு கொண்டு வந்தேன் நீயும் கொண்டு வரலாம். என்று; அனைவருக்கும் அதை பரிந்துரைத்து தவறிழைக்கிறார்.!
உண்மையில்  அனைவருக்கும் இது சாத்தியமல்ல.!
அந்த நோயை குணப்படுத்தினேன், இந்த நோயை குணப்படுத்தினேன் என்று விளம்பரம் செய்யும் மருத்துவர்களை நாடி
தினமும் 100 பேர் வருவார்கள். அதில் 10 பேர் குணமடைவது உறுதி. <மருத்துவமே செய்யாவிட்டாலும் சிலர் குணமடைவார்கள்>
அந்த பத்துபேரை வைத்து மருத்துவர் என் முறைதான் உயர்ந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.!
ஆனால், எந்த முறை வைத்தியம் செய்பவரும் இயற்கை உணவு முறை, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் வேகமாக குணமடையலாம்.!
இவை இரண்டும் எந்த மருத்துவரிடமும் இல்லை நோயாளியிடமே  உள்ளது.!
நோய் முற்றிய நிலையில் எந்த வைத்தியமும் பலிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் உடல் இயங்கு திறனில் ஏற்படும் கோளாறுகள் தான்.! இந்த இயங்கு திறன் பாதிக்கக் காரணம் தவறான செயற்கை இரசாயண உணவு முறை. இந்த உணவு முறைக்கு காரணம் பெரிய கம்பெனிகளில் தயாரிப்பது, விளம்பரம் வருவது, சுவையானது, அழகானது , எல்லாம் நல்லது என்று பலகாலமாக  நம்பிவந்த நமது மனநிலை.!
இன்னொரு காரணம் நாம் இதுவரைப் போட்ட தடுப்பூசிகளும் இன்றுவரை மிதமிஞ்சிப் பயன்படுத்தும் இரசாயண மருந்துகளும் தான்.!
இந்த இரண்டு தவறுகளையும் ஆரம்பத்திலேயே சரிப்படுத்திக் கொண்டு உடல் பயிற்சி, பிராணப் பயிற்சி போன்றவற்றை செய்து வந்தால்  எத்தகைய வைரஸ் நோயும் ஆட்கொல்லி நோயும் மனிதனுக்கு வரவே வராது.!
பிறகு இறுதியில் சங்கறுக்கும் எந்த மருத்துவ முறையும் நமக்குத் தேவையே இல்லையே.! அதைவிடுத்து
ருசிக்காக நன்றாக உண்டுவிட்டு பிறகு இடுப்பை குறைக்க வாந்தியெடுக்கும்  சில முட்டாள்  பெண்களைப்போல -
நாளெல்லாம் இரசாயண உணவு,இரசாயண மருந்து போன்றவற்றை கொடுத்து உடலை முற்றிலும் சீரழித்துக் கொண்டு பிறகு மருந்தை குடித்து ஓய்வெடுப்பதில் என்ன பலனை காணமுடியும்?
சிலர் கேட்கிறார்கள் குடிகாரன், பெருந்தீணிக்காரன், அயோக்கியர்கள் எல்லாம் ஆரோக்கியமாக உள்ளனரே ,அதோடு என்னைப் போலவே இரசாயண உணவையும் மருந்தையும்  உண்ணும் பலரும் ஆரோக்கியமாக உள்ளனரே?  அனைவருக்கும் நோய் வந்தால் அனைவருமே திருந்திவிடுவார்களே?
எனக்கு மட்டும் ஏன் நோய் வரவேண்டும்? என்று கேட்கிறார்கள்.!
இது எப்படி உள்ளது என்றால் - ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுவது தவறுதான். ஆனால்,அப்படிப் போன எல்லாரையும் பிடிக்காமல்  காவலரும்,காலனும் என்னை மட்டும் பிடித்தால் எப்படி.என்பதைப் போன்றது. இது; உங்களைப்போல சிலர் இன்று மாட்டுவார்கள்,சிலர் நாளை மாட்டுவார்கள், சிலர் வாழ்நாள் முழுவதும் மாட்டாமல் கூட போகலாம்.!
ஆனால், யாரும் சட்டமே போடாவிட்டால் கூட தலைக்கவசம் அணியாமல் போவது
ஆபத்தானது  என்பதை நாமே புரிந்து மனமுவந்து அதை  அணிந்து கொள்வதே பாதுகாப்பான பயணத்தை தரும்.!
அதுபோலவே இயற்கை முறைகளை கடைப்பிடித்தல் பாதுகாப்பான வாழ்க்கையை தரும்.!
<இறுதி நிலையில் உள்ள நோயாளிகள் யாரும் இயற்கை முறையில் குணமாக முடியாது. என நாம் கூறவில்லை.!
பலன் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்று மட்டுமே கூறுகிறேன்.>

*இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்*

-ஏகப்பிரியன் D.Y.T

தொடரும் …

🌾100 இயற்கை
மூலிகை🌿
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS

Mobile & Whats App
9629368389

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...