*நல்ல சத்துணவு தாவர உணவு*
**************************************************
*ஒருமுறை நல்ல சத்துணவு நிபுணர் சமச்சீர் உணவு என்றால்? புரதமும் இரும்புச் சத்தும் உள்ள அசைவ உணவையும் சேர்த்துத்தான் சொல்லுவார்.*
*ஆனால் புலால் இல்லாத தாவர உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் அதில் ஏழு அற்புத நன்மைகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன*
*பிரிட்டடிஷ் மருத்துவப் பத்திரிகை 39 வயது முதல் 60 வயது வரை உள்ள 6000 சைவ உணவுக்காரர்களையும் 5000 அசைவ உணவுக்காரர்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்தது.*
*சைவ உணவுக்காரர்கள் 40க்கும் குறைவாகவே புற்றுநோயால் இறக்கும் அபாயம் இருந்தது.மற்ற வியாதிகளால் இறக்கும் அபாயம் 20 தான் இருந்தது*
*அசைவ உணவுக்காரர்கள் உடலில் இறப்பு அபாயம் அதிகம் இருந்தது. கொலாஸ்டிரல் புற்றுநோய் அறிகுறிகள் பரவலாகக் காணப்பட்டன.*
*அசைவ உணவுக்காரர்களைவிட சைவ உணவுக்காரர்களின் உடலில் வளர்ச்சி மாற்றம் பதினோரு சதவிகிதம் மெதுவாக நடைபெறுகிறது. குறைந்த அளவு கலோரி உணவு என்பதால் செல்களும் அழியாமல் இருக்கின்றன.*
*எனவே காலையில் நம்பிக்கையுடன் எழும் உத்தரவாதம் உண்டு. அசைவ உணவு திடீர் ஸ்டிரைக் செய்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.*
*ஆடு மாடு பன்றி முதலியவற்றில் அரைக்கிலோ கறி உருவாக 2500 கேலன் தண்ணீரும்இ 7-12 கிலோ தானியங்களும்இ விலங்குகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் பழங்கள் காய்கறிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இவ்வளவு செலவுகள் இல்லை.*
*சைவ உணவு மலிவானது. தினமும் அசைவம் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் கெடுவதுடன் ஏகப்பட்ட செலவு உணவிற்கே போய்விடும்.*
*கையில் மாத்திரை ரெடியாக வைத்திருக்க வேண்டாம். அடிக்கடி டாக்டரைச் சந்தித்து புதிய மருந்துகள் எழுதி வாங்க வேண்டாம்.*
*புலால் உணவு பதப்படுத்தப்பட்டோ அல்லது உயிர்வாழ்வுக்கு ஊறு செய்கிற நன்மைக் கொல்லிகளை கொல்வதற்காகச் செய்கிற சில மருந்துகளைக் கலந்துதான் விநியோகிக்கப்படுகிறது.*
*இந்த வகையில் பால் அருந்தும்போது கூட விஷ மருந்துகள் நம் உடலுக்குள் போய்விடுகின்றன. பழம் காய்கறிகளில் இப்படி இல்லை. காய்ச்சல் வருவதுபோல் இருந்தால் சாதாரணப் புடலங்காயைச் சாப்பிட்டால் போதும்.*
*இதில் எல்லாவகையான தாது உப்புக்களும் இருப்பதால் உடனடியாகக் காய்ச்சல் குறைகிறது. ஆக சைவ உணவு என்பது மருந்தைப் போல் செயல்படுகிறது.*
*துரித உணவகங்களில் விற்கப்படும் அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்டுவிட்டு வந்தவர்களிடம் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் ஞாபகசக்தி புலன் உணர்வு உள்ளத்தில் எச்சரிக்கை முதலியன மிகவும் சராசரியாக இருந்தன.*
*சுற்றுப்புற ஆரோக்கியம் என்ற இதழில் இந்த உண்மை வெளியானது. ஆராய்ச்சியாளர்கள்இ அசைவ உணவுகளில் போரன் என்ற உப்பு இல்லாததால் தான் இப்படி அசட்டையாக உள்ளனர் என்று கண்டுபிடித்தனர்.*
*தக்காளி பேரிக்காய் வேர்க்கடலை போன்றவற்றில் இந்த உப்பு இருக்கிறது. பழங்கள் காய்கறிகளிலும் இந்த உப்பு ஓரளவு கிடைப்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் புலால் உண்ணாத சைவ உணவுக்காரர்கள்.*
*கொழுப்பு அதிகம் கொண்ட விலங்குகளைச் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. மந்தப் புத்தியும் இயலாமையும் சேர்ந்து கொள்கின்றன. இரத்தக் குழாய்களில் தடை ஏற்படுகிறது.*
*தாம்பத்திய வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் ஆர்வமாக வாழக் கீரைகளில் உள்ள இரும்புச் சத்தும் வைட்டமின் "சி"யும் உதவுகின்றன. இதனால் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தமும் ஆக்ஸிஜனும் நன்கு செயல்படுகிறது.*
*ஆண்மைக்குறைவு இருதய அடைப்பு முதலியன ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நன்மைகள் பழங்கள் காய்கறிகளில்தான் தாராளமாகக்க கிடைக்கின்றன.*
*நாக்கு ருசியால் உடல் கொழுப்பதுண்டு. உடல் வேகமாகக் கொழுத்த பருத்த உடலாக மாற அசைவ உணவு காரணமாகிறது. ஆனால் சைவ உணவில் உள்ள கொண்டைக்கடலை சோளம் போன்ற தானியம் மற்றும் பருப்பு வகைகள்கூட இரத்தக் கொதிப்பு உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கின்றன.*
*இவற்றில் உள்ள பொட்டாசியம் மக்னீசியம் ஆகியவை இரத்தக்கொதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தேங்காய் சோளம் முதலியவற்றில் உள்ள துத்தநாக உப்பு உடலைக் கொழுக்கவிடாமல் இராணுவக் கட்டுப்பாட்டுன் பாதுகாக்கிறது.*
*இதுபோன்று அரிய உணவு மருந்தாக அசைவ உணவு வகைகளை ஒட்டுமொத்தமாகச் சிபாரிசு செய்யமுடியாது.* *கொழுத்த உடல் பலவியாதிகளுக்கு அடிப்படை. ஆக சைவ உணவுக்கு மாறினால்ஆரோக்கியமாக மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் தயவு இன்றி நீண்ட நாள் வாழலாம் என்பது உறுதி.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை* *திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
-இணையப்பகிர்வு
*வாழ்க வளமுடன்*
No comments:
Post a Comment