I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: March 2017

Friday, 31 March 2017

வேனல் கட்டி கரையும்

வேனல் கட்டி வரக் காரணங்கள்

வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஒரு உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன.

வேனல் கட்டி வராமல் தடுக்க தண்ணீர் மருந்து

வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மட்டுமாவது இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

வேனல் கட்டிக்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

வேனல் கட்டி போக சுண்ணாம்பு, தேன் மருந்து

வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

வேனல் கட்டிக்கு கற்றாளை மருந்து

கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி மறைய மஞ்சள் மருந்து

வேனல் கட்டி குணமாக மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

வேனல் கட்டி குணமாக சந்தனம், எலுமிச்சை சாறு மருந்து

சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சோப்பு, மஞ்சள், கல் உப்பு மருந்து

சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி ஏற்புடும் இடத்தில தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி சரியாக நல்லெண்ணெய் குளியல் மருந்து

சூட்டினால் ஏற்படும் கட்டி மறைய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

வேனல் கட்டி மறைய கடுகு மருந்து

கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி பழுத்து உடைய மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவு மருந்து

மஞ்சள் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவி போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.

வேனல் கட்டி குணமாக வெள்ளை பூண்டு மற்றும் சுண்ணாம்பு மருந்து

வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டு ஏற்பட்ட இடத்தில பத்து போடு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சுண்ணாம்பு, தேன், வெல்லம், வெற்றிலை மருந்து

வெயில் காலங்களில் வேனல் கட்டி நிறைய பேருக்கு வரும். வேனல் கட்டி வந்தால் அதன் வலி மிக அதிகமாக இருக்கும். வேனல் கட்டி குணமாக ஒரு சிறிய தட்டில் சிறிதளவு சுண்ணாம்பை சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும் பொது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.!

*இணையப்பகிர்வு*

Monday, 27 March 2017

பல வியாதிகளை குணப்படுத்தும் ஒரு மருத்துவம்

இரத்த சோகை மற்றும் பல்வேறு
நோய்களைப் போக்கும் எளிய மருந்து

ஒரு பழைய இரும்புச் சட்டியில் மூன்று டம்ளர் நீர்விட்டு  அதில் ஒரு எலுமிச்சைச்சாறு அல்லது சாத்துக்குடியின் சாறை பிழிந்து அதோடு பத்து வால்மிளகும் தட்டிப்போட்டு கலக்கி சிறிய தீயில் கொதிக்க வைத்து  அவை எல்லாம் சேர்ந்து இரண்டு டம்ளர் அளவானதும் இறக்கி வடிகட்டி இரண்டு வேளையாக உணவிற்கு  அரைமணி நேரத்திற்கு பின்  குடித்து வந்தால்
*இரத்தசோகை, பல் ஆடுதல், பல் பொடிதல்,  உடல் பருமன், தொப்பை,எலும்பு வலி,எலும்பின் அடர்த்திக்குறைவு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு,இரத்தத்தில் கிருமி, கைகால் வீக்கம்,உடல்வீக்கம், சிக்கன் குனியா, டெங்கு, உடல்வலி, சோர்வு, உடல் அரிப்பு, நரம்பு மண்டல பலவீனம், இழுப்பு, கால்கை வலிப்பு போன்றவை 12 முதல் 48 நாட்களில் குணமாகும்.!*
இதோடு தினமும் ஹூ க்ரியா என்ற யோகாப் பயிற்சியையும் 200 முறை வரை செய்துவர  விரைவான பயனைப் பெறலாம்.!

எந்த பக்கவிளைவும் இல்லாத மருந்து என்பதால் நோய்த்தன்மை இல்லாதவர்கள் கூட வாரத்தில் ஒரிருநாள் இதை தயாரித்து குடித்து நீண்ட ஆயுளையும் பிணியில்லாத வாழ்வையும் பெறலாம்.!

🌿 *100% இயற்கை மூலிகை*
*தயாரிப்புகளுக்கு*💥
Aum Herbals
Mobile & whatsapp
9629368389

amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
you tube- amyogatrust
yoga for all

Wednesday, 22 March 2017

உயிர் காக்கும் பற்பங்கள்

பற்பமும் பயன்களும்

வீரபஸ்பம் - காலரா <தேன்> வாய்வு,
வயிற்று வலி <கருப்பட்டி>

சிருங்கி பற்பம் - ஈளை,இருமல்,மார்புவலி,இரத்தவாந்தி,காமாலை,மேகம்,குடல்புண்,வாய்ப்புண்,கண்மங்கல், அதிக வியர்வை,அதிக கோபம் <நெய்/தேன்/திரிபலாசூரணம்>

நத்தை பற்பம் - இரத்தமூலம், மூலம் தள்ளல், ஆசனக்கடுப்பு,சீதபேதி <பசுவெண்ணைய்/கருணைக்கிழங்கு லேகியம்>

மேகநாத பற்பம் -
கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல்,குழந்தைகளுக்கு வரும் வெள்ளைப்போக்கு,நீர்தரிப்பு,கல்லடைப்பு,சதையடைப்பு,சிறுநீரில் இரத்தம் இறங்குதல்,இரத்தவாந்தி. <வெண்ணைய்/பசுநெய்>

பவளப்புற்று பற்பம் -கரப்பான்,சொறி,ஊரல்,தடுப்பு,செதிலாய் தோல் உறிதல்.<நெய்/தேன்/கடுக்காய்/திரிபலா>

உப்பு பற்பம் - வாய்வு,மாதாந்திர வலி,வயிற்றுக்கட்டி,ஈரல் வீக்கம்.<பழைய சோற்றுநீர்/மோர்>

மிர்தார்சிங்கி பற்பம் -சொறி,சிரங்கு,ஆறாதபுண்,மூலவியாதி <தேன்/பசுநெய்>

கருவங்க பற்பம் - மேகவெட்டை,பெரும்பாடு,மேகப்புண்,மேல்தடுப்பு,நீரழிவு,பிறப்புறுப்பில் வரும்புண்கள்.<வெண்ணைய்/தேன்/நெய்/அமுக்ரா லேகியம்>

சிலாசத்து பற்பம் - பித்தச்சூடு,காமாலை,நீரழிவால் வரும் நாவறட்சி, அதிமூத்திரம், நீரடைப்பு,கடும் இருமல். <பசுவெண்ணைய்/ ஆவாரம்பூ சூரணம்/திரிபலா சூரணம்>

அஞ்சனக்கல் பற்பம் - விக்கல்,வாந்தி,நாள் பட்டச் சளி,நெஞ்சுவலி,வாய்வு தீரும்.<தேன்>

தங்க பற்பம் - இதயநோய்,வயோதிக தன்மை,தாதுபலக்குறைவு,விந்தணுக்குறைபாடு,காசநோய், உடல் பலவீனம் மாறும்.<வாசாதிலேகியம்/உடும்புலேகியம்/ஆட்டுலேகியம்/அமுக்ராலேகியம்/நெல்லிக்காய் சூரணம்/நெல்லிக்காய் லேகியம்>

குறிப்பு: பற்பங்களை ஒரு வேளைக்கு 200  மில்லி கிராம்  முதல் 1 கிராம் வரை அல்லது ஒன்று முதல் மூன்று  சிட்டிகை வரை உணவிற்கு பின் அடைப்பு குறிக்குள் உள்ள ஏதேனும் ஒரு அனுபானத்தில் சிறு நெல்லிக்காயளவு  கலந்து காலை,மாலை இரண்டுவேளை  3 முதல் 12  நாட்கள் வரை மட்டுமே உண்டுவர மேற்கண்ட நோய்கள் தீரும்.! கல்லடைப்பு,சதையடைப்பு,நாள்ப்பட்ட மேகம் போன்ற நோய்களுக்கு மட்டும் வைத்தியர் ஆலோசனையுடன்  48 நாட்கள் பயன்படுத்தலாம்.
உப்பு,புளி,காரம்,வாய்வு பண்டங்களை நீக்கி, மாமிச, இரசாயண உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் விரைந்த பயன் கிடைக்கும்.!

💥 *100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு* 🍁
AUM HERBALS
Mobile & WhatsApp
9629368389

aumherbals.blogspot.in

Tuesday, 21 March 2017

சுடும் உண்மை

*எண்ணெய் vs சர்க்கரை! அம்பலமான உணவு அரசியல்*

எண்னெய் அதிகம் சேர்த்தா, கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு வழிவகுக்கும்' என்று மருத்துவ உலகம்  அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி வருகிறது. இந்நிலையில், 'உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். ஆனால், உலகளாவிய சர்க்கரைச் சந்தையும் அரசியலும் அந்த உண்மையை மறைக்க, 1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவப் பத்திரிகையில் 'இதய நோய்க்குக் காரணம் எண்ணையே' என்று பெரிய தொகையை 'செலவழித்து' எழுதவைத்து, பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது' என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது, அமெரிக்க மருத்துவ இதழானா ஜாமா (JAMA Journal of American Medical Association).

'ஜாமா' கூறுவது என்ன?


'1960-களில் 'Internal Sugar Industry - Sugar Research Foundation (இன்று இது 'சுகர் அசோஸியேஷன்' என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் (CVD Cardio Vascular Disease) ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான்' என்ற உண்மை, மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால், இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். மேலும், சர்க்கரை மீதான குற்றச்சாட்டை எண்ணெயின் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழில், ஆய்வின் உண்மையான முடிவுகள் மாற்றப்பட்டு, 'உடல் பருமனுக்கும் அது சம்பந்த்மான நோய்களுக்கும் பெரிதும் காரணம், எண்ணெய் பொருட்களே' என்று எழுதவைத்தனர். மேலும், இவ்வாறு முடிவுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.

இந்த அதிர்ச்சியான ஊழலைத்தான் சமீபத்தில் அம்பலமாக்கியிருக்கிறது 'ஜாமா' இதழ். வேதியலாளர் மற்றும்  'ஜாமா'வின் சர்க்கரை குறித்த அறிவியல் ஆலோசகர் க்ரிஸ் கெரன் என்ற பெண் அந்த இதழில் எழுதியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'சர்வதேச மக்கள் அமெரிக்க ஆய்வு முடிவுகளைச் சார்ந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, பணம் கொடுத்து, சர்க்கரையில் பொதிந்துள்ள ஆபத்தை உலகின் கவனத்துக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின் அன்றாட, தவிர்க்கமுடியாத உணவாக வளர்த்துவிட்டிருக்கிறது 'சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 சதவிகித சர்க்கரையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது. சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்?' என்று கேட்கிறார், கட்டுரையாளர் க்ரிஸ் கெரன்.

மருத்துவர்களின் சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்லும்போது, 'சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுக்கோஸ் (GLUCOSE) சமபங்கு கலவை. இதில் குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும். ஆனால், ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ்  கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும்.  இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது.

மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத  ஃபேட்டி லிவர் நோய் (NON ALCHOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படுகிறது. 
     
சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.   

சர்வதேச உணவுச் சந்தை, தனிமனிதப் பேராசை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை... இவர்கள் அனைவரும் மக்களைவைத்து ஆடும் ஆடு புலி ஆட்டத்தில், சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும் ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா எனற கேள்வி, தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது!

 எஸ்.எம்.கோமதி

இதயம் காக்கும் குறிப்புகள்

தினமும் மதியம் அல்லது இரவு உணவுடன் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் மூன்று பரல் வெள்ளைப்பூண்டு இவற்றை உணவோடு சேர்த்து பச்சையாக உண்டுவந்தால் இதயவலி,இரத்த அழுத்தம்,அஜீரணக்கோளாறு,இழுப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.!

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...