I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: 2017

Sunday, 31 December 2017

இப்படி வங்கியில் பணம் செலுத்தலாம்

நட்பாளர்கள் கவனத்திற்கு

மூலிகைப்பொருட்கள் மற்றும் நமது புத்தக தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த விரும்பும் நண்பர்கள் இணையதள சேவை மூலமாக - கைப்பேசியிலோ அல்லது ATM மூலமாகவோ பணம் செலுத்தலாம். இது முடியாத நட்பாளர்கள் கணிணியில் இரயில்,பேருந்து முன்பதிவு, மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை செய்து வரும் தனியார் மையங்களில்  பணம் கொடுத்து நமது வங்கிக் கணக்கில் எளிதாக செலுத்தலாம். ஏனெனில் வங்கியில் நேரடியாக பணத்தை செலுத்த செல்லும் போது சில வங்கியில் தேவையில்லாத விபரங்களை கேட்டு  நேரத்தை விரயம் செய்வதோடு, பலரையும் பணம் செலுத்த முடியாது என்று கூறி திரும்ப அனுப்பிவிடுகிறார்கள்.அது போலவே நமது வங்கிக்கணக்கு  AM YOGA TRUST என்று டிரஸ்ட் பெயரில் இருப்பதால் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதில் நேரடியாக பணம் செலுத்துவதை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதனால், வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது மற்றொரு வங்கிக்கணக்கு எண்ணை வாங்கி, அதில் பணம் செலுத்தி நேர விரயத்தை தவிர்க்குமாறு கனிவாய் கேட்டுக்கொள்கிறேன்.!

-ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

சர்வரோக நிவாரணி

உடல் சக்தி அதிகரிக்க எளியவழி

வாரத்திற்கு குறைந்தது 4 நாட்கள் 30 கிராம் வேர்க்கடலை, 4 நாட்டு வாழைப்பழம்,8 சின்ன வெங்காயம் (சமைக்காமல்)  சாப்பிட்டு வந்தால் உடல் சக்தி அதிகரிக்கும்,இரத்தம் சுத்தமாகும்,ஆண்மை அதிகரிக்கும்,கர்பப்பை நீர்க்கட்டி கரையும்,இரத்தக்குழாய் அடைப்பு சீராகும்,தொண்டை வீக்கம்,தூக்கமின்மை,மலச்சிக்கல் குணமாகும்.!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS 9629368389

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

Thursday, 28 December 2017

இலவச இயற்கை வாழ்வியல்

உங்கள் பகுதியில் ஆதி மருத்துவ முகாம் நடத்தி ஆரோக்கியம் பெறுங்கள் நட்பாளர்களே

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உங்கள் பகுதியில் இலவசமாக ஆதிமருத்துவ முகாம் நடத்திட  தொடர்புக்கொள்ளுங்கள். கைப்பேசி:9629368389 தமிழக மற்ற பகுதிகளில்,நமது போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு ,உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கலாம். வகுப்பை நீங்கள் இலவசமாகவோ அல்லது ஒரு நபருக்கு 150 ரூபாய் என்ற விதத்தில் குறைந்த கட்டணத்தில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த வகுப்பில் இயற்கை வாழ்வியல் கோட்பாடு,உடல் சுத்திகரிப்பு முறைகள்,இயற்கை வழி பிரசவ முறை,யோகா,தியானம்,பிராணசிகிட்சை,மூலிகை மருந்துகள் தயாரிப்பு,முக்கிய வர்ம நுட்பங்கள் கற்பிக்கப்படும். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருமே ஆரோக்கிய வாழ்வோடு ,தங்கள் வாழ்நாள் மருத்துவ செலவை தவிர்த்து நாள்ப்பட்ட நோய்களிலிருந்து இயற்கை வழியில் நிவாரணம் பெறலாம்.

AM YOGA TRUST 461/2012 Ngl
சரோஜா டவர்,பார்வதிபுரம் ஜங்சன்,நாகர்கோவில்-3
கைப்பேசி 9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
E.mail herbalsaum@gmail.com

பல்வலி குணமாகும்

இரண்டுகிராம்பை பொடித்து வாயில் போட்டுக்கொண்டு ஒருத்தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 5 நிமிடம் கொப்பளிக்க பல்வலி குணமாகும்.

aumherbals.blogspot.com

Wednesday, 27 December 2017

ஆதிமருத்துவம்

#ஆதிமருத்துவம்

☘இயற்கை வாழ்வியல் முகாம்
& நூல் அறிமுகம்🌾

IN CHENNAI

💥இயற்கை வாழ்வியல் கோட்பாடு,
உடல் சுத்திகரிப்பு பயிற்சிகள்,
மூலிகை மருந்துகள் தயாரிப்பு,
இயற்கை பிரசவமுறை,
அவசரகால முதலுதவிகள்,
யோகா,தியானம்,வர்மநுட்பங்கள், பிராணசிகிட்சையின் மூலம்
ஆரோக்கிய வாழ்வு மற்றும் நாள்ப்பட்ட நோய்களிலிருந்து
விடுதலை🌅

பயிற்சியாளர்: ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் DYT

நன்கொடை: ரூ 150/-

நாள்: பிப்ரவரி 04/2018 ஞாயிறு
நேரம்: 9.30 am and 1.00 pm
இடம்: ஆரா யோகா மையம்,
No. 3. L. V. பிரசாத் சாலை,
[பிரசாத் லேப் அருகில்]
சாலிகிராமம்,சென்னை-93
முன்பதிவிற்கு 9500119568
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

உங்கள் மாவட்டத்திலும் இது போல் ஆதிமருத்துவம் இயற்கை வாழ்வியல் முகாம் நடத்திட தொடர்புக்கொள்ளுங்கள் 9629368389.

நலம் பெருகட்டும் …

மனம் சீராக இயங்க

தினமும் காலையில் எழுந்ததும் படுக்கையில் அமர்ந்தே 10முறை மூச்சை ஆழமாக இழுத்து விட்டுவிட்டு பிறகு எழுந்தால் உடல் மன இயக்கம் சீராக இருக்கும்

aumherbals.blogspot.com

Sunday, 24 December 2017

பதஞ்சலி யோகச்சூத்திரம்

மனதோடு பேசுகிறேன்

4 A. மனதை நிறுத்தும் கலை

இயற்கையின் ஆன்மாவான மூலப்பொருளில் ஏற்பட்ட நடுக்கத்தினாலேயே மனிதன் தோன்றினான், மனிதனின் செயல்களே வாழ்வை தோற்று வித்தது, வாழ்வின் மூலம் மனித ஆன்மாவில் பதிந்துள்ள பழைய பதிவுகளே, இவையே மீண்டும் மீண்டும் புதிய பிறவியைத் தருகின்றன, பிறவி மீண்டும்  செயல்களைத் தருகிறது, செயல்களே எண்ணங்களை தூண்டுகின்றன, எண்ணங்கள் மீண்டும் புதிய செயல்களுக்கு வழி கோலுகின்றன, செயல்கள் மீண்டும் மீண்டும் புதிய பதிவுகளை உருவாக்கும், பதிவுகள் மீண்டும் பிறவியைத் தருகிறது. இயற்கையின் மூல நிலையில் எண்ணம் செயல் எதுவுமே இல்லை, மனிதனின் மூலமோ எண்ணங்களால் நிரம்பியுள்ளது. இதுவே பரம்  பொருளான இயற்கை ஆன்மாவிற்கும் மனித ஆன்மாவிற்கும் இடையில் ஒரு திரையை உருவாக்கி உள்ளது. திரை விலக வேண்டும் அல்லது நமது முயற்சியால் திரையை விலக்க வேண்டும்.இது நடந்து விட்டால் மனிதன்  மீண்டும் தனது பூரண நிலையை அடைந்து விடுவான்.

இதுவே பதஞ்சலி யோகச்சூத்திரத்தின் சுருக்கம். இப்படி நாம் கூறுவதை சிலர் ஏற்க மறுக்கலாம். ஏனெனில், யோகச்சூத்திரத்தில் இப்படி அனைத்தையும் எளிதில் விளங்கும் வகையில் தமிழில் கூறாமல் பிரகிருதி,புருசன்,சம்ஸ்காரம்,விருத்தி,அபாவம்,கிரியை,பிரம்மம் என்று அதில் கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் சமஸ்கிருதத்திலேயே இருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தாலும் இந்த வார்த்தைகளை மட்டும்  தமிழில் மாற்றாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதன் காரணமாகவே தமிழரான பதஞ்சலியின் யோகச்சூத்திரம் பல தமிழர்களுக்கே இன்னும் விளங்காமல் உள்ளது. இது எப்படியெனில் Take என்ற ஆங்கில வார்த்தைக்கு  எப்படி - எடு,கொண்டு செல்,இரு என்று பல நிலைகளில் அதன் பொருள் மாறி மாறி விளங்குமோ, அது போலவே சமஸ்கிருதத்திலும் இடத்தை வைத்து பொருள் மாறுபடும். உதாரணமாக புருசன் என்பது மனிதனையும் குறிக்கும் மனித ஆன்மாவையும் குறிக்கும். இதற்கு கணவன் என்று இன்னொரு பொருளும் உண்டு. விருத்தி என்றால் சுத்தம்,தெளிவு,உயர்வு என்று பொருள். இன்னொரு பொருள் திரை என்பது. இது போன்ற குழப்பங்களாலேயே பதஞ்சலி யோகச்சூத்திரம் இன்னும் பலருக்கு பயனளிக்கவில்லை. சமஸ்கிருத புலமையோடு தமிழ் நிபுணத்துவமும் உள்ளவர்கள் பதஞ்சலி யோகச்சூத்திரத்தை முழுவதும் நவீன தமிழில் எழுதினால் அது யோகத்திற்கு செய்த பெருந்தொண்டாக அமையும் என்பதோடு மனித வாழ்விற்கும் மிக உதவியானதாய் இருக்கும். என்பது; அடியேனின் கனிவான வேண்டுகோள்.சரி நவீன மனிதனுக்கு பதஞ்சலி யோகச்சூத்திரத்தால் என்ன பயன் என்று கேட்டால் நலமான வாழ்க்கையோடு, மனமின்றி -அதாவது எண்ணமின்றி வாழும் கலையையும் பதஞ்சலி யோகச்சூத்திரமே மிகத் தெளிவாக விளக்கி உள்ளது.
மனதில் எழும் குழப்பமான எண்ணங்களே அமைதியின்மையையும் பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது, என்பதை அனைவரும் அறிவோம்.
எண்ணம் மனிதனுக்கு இரண்டு விதத்தில் வரும், ஒன்று மனதில் ஏற்கனவே உள்ள கடந்த கால பதிவின் மூலம் எண்ணங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், மற்றொன்று நமது கண்களால்,காதுகளால், உடலின் தொடு உணர்வால் நம்மை வந்தடையும் அனைத்தும் எண்ணங்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும்.பதஞ்சலியின் கூற்றுப்படி மனித மூலம் அதாவது மனித ஆன்மா மூலத்தின் மூலமான இயற்கை ஆன்மாவில் இருந்து பிரிந்து வந்தது முதல், அதன் மேல் ஒரு திரை இருக்கிறது.அந்த திரையைத்தாண்டி மனித மூலம் மீண்டும் மூல மூலமான பரம்பொருளோடு சேர வேண்டுமானால், முதலில் எண்ணத்தை நிறுத்த வேண்டும் அடுத்து,செயல்களை நிறுத்த வேண்டும். நிறைவாக தனது பிறவிக்கு காரணமான விந்து சக்தியை தூயப்பொருளாக்கி ஆவியாக அல்லது கட்டியாக மாற்றிவிட வேண்டும். விந்தாற்றல் உள்ள வரை ஒருவனுக்கு ஆசையும் எண்ணமும் பிறவியும் வந்து கொண்டே இருக்கும்.அதாவது விதை நெல்லை வறுத்து விட்டால் அது மீண்டும் முளைக்காது என்பதைப்போல் தான் விந்தை ஆவியாக்குதல் அல்லது கல்லாக மாற்றுதல் போன்றவை.
இதனடிப்படையையில் பரம்பொருளை அடைவதற்கு உருவாக்கப்பட்டதே துறவு வாழ்க்கை. எல்லா மதங்களும் கொள்கைகளும் ஒப்புக்கொள்ளும் ஒரே விசயம் என்னவெனில் … மனிதன் முதலில் நிறைவான,பூரணமான ஒரு நிலையில் இருந்தான், பிறகு அங்கிருந்து வழுவி தற்போதைய மனித நிலைக்கு வந்துள்ளான், மீண்டும் முயன்றால் பழைய மூல நிலையை அடையலாம். என்பதே;எல்லா குருமார்களும் திரட்டிய கருத்து. சேருமிடம் ஒன்றுதான். வழிகளே; வேறுவேறாய் இருக்கின்றன.
இது பற்றி எழுதுவதானால் அது அந்தமில்லாமல் சென்று கொண்டே இருக்கும். அதனால், முதல் பகுதியில் கூறியபடி மனதை நிறுத்தும் வழியை மட்டும் கூறி இந்தப்பகுதியை நிறைவு செய்து விடலாம்.
' மனத்தில் முழுவதும் நீக்கப்படாத எண்ணங்களே மேலெழுந்து வந்து செயல்களைத் தூண்டுகிறது ' அதனால் மனம் சொல்வதை கவனிக்க மட்டுமே செய்யுங்கள்.மனம் சொல்லும் செயல்கள் ஒவ்வென்றையும் செய்யாமல் உங்களுக்கு மிகவும் அவசியமான,முறையான செயல்களை மட்டுமே செய்யுங்கள். இதனால்  அவற்றில் முழு வெற்றி கிடைக்கும்.
கண்ணில் பார்க்கும்,கேட்கும்,உணரும் எல்லா விசயத்தையும் மனதில் ஏற்றாதீர்கள். இதனால், மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் என்றும் நிறைந்திருக்கும்.மனதிலிருந்து மேலெழும் எண்ணங்களை வெறுமனே கவனிக்க கவனிக்க அவை விடைப்பெற்று விடும்.கண்களால்,காதுகளால்,புலன்களால்,தொடு உணர்வால் பார்க்கப்படும்,கேட்கப்படும், உணரப்படும் விசயத்தை 12 விநாடிகளுக்கு மேல் சிந்தனை செய்யாமல்,நீங்கள் வெறுமனே நிற்க நிற்க அவை மனதில் பதியாமல் இருக்கும். பிறகென்ன பூரண அமைதியும், அன்பும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், வெற்றியும், உங்களைத்தேடி வந்துவிடும்.! அப்படியானால் நாங்கள் ஒரு துறவியைப்போல மாற வேண்டுமா?  "இல்லை விழிப்புணர்வு மிக்க மனிதராய் மாறுங்கள் " நீங்கள் விரும்பினால் சிரியுங்கள்,நீங்கள் விரும்பினால் சிந்தியுங்கள்,நீங்கள் விரும்பினால் அன்பாகவோ, கோபமாகவோ இருங்கள் எதன் பொருட்டும் உங்கள் சுயமான நிதானத்தை இழக்காதீர்கள் …!
நலம் பெருகட்டும் …
இன்னும் பேசுவேன்  …

-ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

Friday, 22 December 2017

காவலுக்கு ஆறுமுகம்

#மனதோடுபேசுகிறேன்

5.காவலும் சேவையும்

" மனித உரிமைகளைக் காக்கும் மாபெரும் சக்தியாக காவல்துறை விளங்க வேண்டும்.அதை மீறும் பெரும் சக்தியாக அது மாறிவிடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. "

-கிரண்பேடி I.P.S [1985]

இரவு பதினொரு மணி இருக்கும் அப்பொழுது நான் எனது அறையில் ஒரு நண்பரின் குறும்படத்திற்காக வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் இருந்த, அந்த மூன்று மாடி கட்டிடத்தில் மொத்தம் ஏழு  அறைகளை கட்டி இளைஞர்களுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் அதன் உரிமையாளர். எனது அறையில் மொத்தம் மூன்று பேர் தங்கி இருந்தோம். மூன்றுபேருமே கலைத்துறை ஆர்வலர்கள். நாங்கள் இருந்தது தரைத்தளத்தின் முதல் அறையில், அந்த நேரத்தில் எனது நண்பர்கள் இரவு உணவு உண்பதற்காக வெளியே சென்றிருந்தனர். எங்கள் அறை வாசலில் " டேய் ஆர்வக்கோளாறு வெளில வாடா, உனக்கென்ன பெரிய ஜாக்கிஜான்னு நினைப்பா மாவனே பட்டர் ஜாமை வெளில எடுத்துருவோம் " என்று இரண்டு பேர் கத்திக்கொண்டிருந்தனர்; முதலில் யாரோ வெளியில் கதை  பேசிவிட்டு நிற்கிறார்கள் … என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்கள் என்னைத்தான் அழைத்தார்கள் என்பது. எழுதுவதை நிறுத்திவிட்டு வாசலில் வந்துப்பார்த்தால் இரண்டு குண்டர்கள் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர் …  இரண்டு பேருமே தெரிந்தவர்கள் தான் அதில் ஒருவன் இராமநாதபுரத்திலிருந்து வந்து திரைப்பட உதவி இயக்குனர் என்ற பெயரில் ஊர் சுற்றுபவன் மற்றொருவன் பக்கத்துச் சேரியில் உள்ள சூரப்புலி. எனக்கும் அவர்களுக்கும் எவ்வித பேச்சு வார்த்தையும் கிடையாது. ஆனாலும், இரவில் இப்படி எதற்காக வந்து மிரட்டுகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே சேரிப்புலி சென்னை பாசையில் மவனே உன்னை என்னப் பண்றேன் பாருனு கையில் இருந்த சிறிய கத்தியல் முகத்தை கீச்சி விடுவது போல் பாவலா காட்டினான். நான் பயந்தது போல் சற்று பின் வாங்கி கையில் இருந்த கைப்பேசியில் 112 நம்பரைப்போட்டு  காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விபரத்தை கூறினேன்.உடனே எதிர் முனையில் இருந்த காவலர்  முகவரி உள்ளிட்ட தகவலை வாங்கிவிட்டு 10 நிமிடத்தில் உங்கள் பகுதிக்கு காவல்துறை ரோந்து வாகனம்  வந்துவிடும் என்று கூறி துண்டித்துவிட்டார்.உடனே அருகில் நின்ற உதவி போர்வை ஆசாமி  போலீசுக்கு போன் போட்டா பயந்துடுவோமா … என்று இரண்டு மூன்று குத்துகளை எனது மூக்கைப் பார்த்து சரமாரியாக விட்டான் …அவனை தடுத்து அப்படியே பிடித்து சுற்றி எனது ரூமிற்கு தள்ளி விட்டுவிட்டு, கத்தி ஆசாமியின் கையைப்பிடித்து கத்தியை வாங்கி தூரப்போட்டு , பின்காலை தட்டிவிட அவனும் கீழே விழுந்தான். பிறகு சூதாரித்து எழுந்த இருவரும் சாலையை நோக்கி வேகமாக ஓட்டமெடுத்தனர் … அந்த நேரத்தில் சரியாக  கட்டுப்பாட்டு அறையில் தகவலைப் பெற்று  அங்கு வந்து சேர்ந்த ரோந்து வாகன  காவலர்களிடம் இரண்டாவது சென்றவன் மாட்டிவிட கையில் கத்தி வைத்திருந்த ஆசாமி ஓடி விட்டான். சுற்றிலும் குறுகலான தெருக்களாய் இருந்ததால் அவனை காவலர்களும் துரத்தாமல் விட்டுவிட்டனர். பிறகு பிடிபட்டவனின் முதுகில்  ஐந்தாறு  அடிகளைப் போட்டு வண்டியில் ஏற்றிவிட்டு என்னிடமும்  " ஏறுங்கள் வடபழனி காவல் நிலையம் கொண்டு செல்கிறோம் " என்றனர்; நான் எனது வண்டியில் வருகிறேன் என்று கூறி என் பைக்கை எடுத்து அவர்களை பின் தொடர்ந்தேன். காவல் நிலையம் போனதும் தான் எனக்குத்தெரிந்தது நமது கால்த் தடுக்கி ரௌடியை   காப்பாற்ற அந்த காவல் நிலையத்திலேயே ஒரு ஊழியர் இருக்கிறார் என்பது; அதாவது அந்த காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுனரும் ரௌடியும் ஒரே ஊர்க்காரர்கள். அதனால் அவர் சிபாரிசு செய்ததால் கைதானவனை விட்டுவிட காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் தீர்மானித்து விட்டனர். ஆனால்,ஏற்கனவே நான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து அவனைப் பிடித்ததால் என்னிடம் நாங்கள் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்தான், ஏதோ கோபத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.அவனை விட்டுவிடுங்கள் என்று எழுதி கையொப்பம் போடுமாறு கூறினார்கள்.
ஆனால்,இதை இப்படி நேரடியாக கேட்டால் நன்றாக இருக்காது என்பதற்காக காவல் நிலைய ஏட்டு ஒரு கீழான தந்திரத்தை கையாண்டார். நான் காவல் நிலையம் போன உடனேயே என்னை குற்றவாளியோடு தரையில் அமர கூறியதோடு, நீங்கள் இரண்டு பேரும் சினிமா உதவி இயக்குனர்கள் ஒயின்சாப்ல போதைல சண்டைப் போட்டுள்ளீர்கள். கத்தியை வைத்து மிரட்டியவனை இருவருக்குமே தெரியாது.அதனால் நாங்கள் இராசியாக போய்விட்டோம் என்று எழுதிகொடுத்து விட்டு சென்றுவிடு அல்லது இருவரையும் சிறையில் அடைத்து விடுவேன் என்று என்னை மிரட்டினார்.ஏட்டு எவ்வளவோ சொல்லியும் நான் இதற்கு உடன்படாமல் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முயன்றவுடன் ஏட்டு அந்தர் பல்டி அடித்து ' நீங்க எங்க வேணும்னாலும் உட்காருங்க,இல்லைன்னா வெளியே போய் நில்லுங்க " என்று கூறி முடித்துவிட்டார். வெளியே போய் நிக்கும் போது விசயத்தை கேள்விப்பட்டு நமது அறைத்தோழர்களும் சினிமா நண்பர்கள் சிலரும் காவல் நிலையத்தில் குமிந்து விட்டனர்.
அதே நேரத்தில் ஆய்வாளரின் வாகன ஓட்டுனர் என்னிடம் வந்து;
' வழக்கு ஒன்றும் இல்லாமல் முடிச்சிட்டுப்போங்க "
"ஏன்?"
'அவன் நல்லப்பையன், எங்க ஊர்க்காரன்தான்."
'நல்லப்பையன் எதுக்கு பதினொரு மணிக்கு கத்தியை எடுத்துட்டு எங்க ரூமிற்கு வரப்போறான். ரெண்டு பேரும் எதுக்கு வந்தாங்க,இப்ப அவனையும் பிடிச்சாதானே உண்மை தெரியும்? "
" ஒன்னும் காரணம் கிடையாதுனு சொல்றான்,அந்த அறையில இருக்குறவங்க எப்பவுமே நல்லா ஜாலியா இருக்குறாங்க,பைக்கு காரெல்லாம் வெச்சிருக்காங்க, அடிக்கடி மொபைலில் இயக்குனர் ஷங்கர்ட்ட பேசுறேன், விஜய்க்கு கதை சொல்றேன்னு கடுப்படிப்பாங்க அதான், கொஞ்சம் கலாய்ச்சி வைக்கலாம்னு போனோம்னு சொல்றான்"

" அதெல்லாம் சும்மா கதைங்க,கத்தியோட ரூமிற்கு வந்து குத்த வந்தவன எப்படிங்க விடுவீங்க? "
"நான்தான் சொல்றேனே "
"நீங்க யாருங்க எனக்கு சொல்றதுக்கு,ஒரு காவலரா இருந்துகிட்டு இப்படி குற்றவாளிக்கு பரிந்து பேசுற உங்கள மாதிரி ஆளுங்க காவல்துறைல இருக்கிறதுனால தாங்க ,இவனை மாதிரி இருக்கிறவங்களுக்கு இவ்வளவு தைரியும் வருது. "

இப்படி நான் கூறியதும் எனது நண்பர்கள் சிலரும் அவரிடம் நீங்கப் போங்க சார் நாங்கப் பாத்துக்கிறோம், இப்பவே கமிஷ்னரோட பர்சனல் நம்பருக்கு போன் பண்ணி
போலிஸ்காரரே கிருமினலுக்கு ஆதரவா பேசுறாருனு சொல்றோம்னு கூற. உடனே அவர் நான் போலிஸ் இல்லீங்க,இன்ஸ்பெக்டரின் தனிப்பட்ட வாகன ஓட்டுனர் அவ்வளவுதான். நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து இப்படி சீரழிஞ்சிப் போயிட்டான். அவனோட தங்கச்சிக்கு கூட அடுத்த வாரம் கல்யாணம் இருக்கு, ஏற்கனவே இது போல ஊர்ல ஒரு வழக்குல மாட்டி இப்ப ஜாமீன்ல இருக்கான். இப்ப இதுலயும் உள்ளே போனால் அவன் வாழ்க்கையே போய்விடும்.அதான் அவ்வளவு தூரம் சொன்னேன்,தவறாக நினைக்க வேண்டாம் என்று கலக்கமாக கூறிவிட்டு ஓட்டுனர் சென்றுவிட்டார்.
பிறகு எனது நண்பர்களில் பலரும்  வா உள்ளப்போயி என்ன நடக்குதுனு பார்ப்போம்னு போனால் … ரைட்டரின் இடது பக்கம் தரையில் அமர்ந்திருந்தவன் ஓடி வந்து என் கால்களை பிடித்து … தெரியாமல் செய்துவிட்டேன், நீங்களும் நானும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள், எனது தங்கச்சிக்கு கல்யாணம் வேறு இருக்கிறது,எல்லாம் போதையால் செய்த தவறு,என்னை மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம் கூறி; கதற, உடனே ஏட்டு குடிகாரனுக்கு மதத்தைப் பற்றி பேச அருகதையே கிடையாது ,பேசாமல் இரு, உன்ன மாதிரி ஆளுகளெல்லாம் ஜெயிலில் போய் இறைவனை தொழுதால் தான் உண்டு. நீயெல்லாம் ஒரு மனுசனா இருக்கியே, மானங்கெட்டவன என்று ஆரம்பித்து வண்டி வண்டியாக திட்ட எனது ஆத்திரமெல்லாம் அந்த வார்த்தையில் கரைந்து ஓடிவிட்டது.
தீமைக்கு பயந்து நன்மையை வெறுப்பதை விட அன்பிற்கு பணிந்து அதனால் நாளை தீமையே நிகழ்ந்தாலும் கூட அதை எதிர்கொள்வோம். என்று எண்ணி அவனை விடச்சொல்லி, கையெழுத்து
போட்டு விட்டு கிளம்பினேன். அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் பல சூழ்நிலைகளில் அவனைப்பார்த்துள்ளேன். என்னை பார்த்ததும் ஒன்று குனிந்து விடுவான் அல்லது திரும்பிக்கொள்வான் … குற்ற  உணர்ச்சியாய் இருக்கலாம்.
நான் கூறிய சம்பவத்தில் வந்துள்ள நான் உட்பட மூன்று பாத்திரங்களுமே தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவில்லை.ஆனால்,அதனால் தீமைகள் எதுவும் நிகழவில்லை. காவல் பணியில் இருப்பவர்களும் இப்படி பல நேரத்தில் சாதாரண மனிதர்களைப் போலவே செயல்படுகிறார்கள்.
போராட்டத்தை ஒடுக்கத் தானே ஆட்டோவை எரிக்கிறார்கள்.
ஆள்வோர்களின் ஆணைக்கேற்ப அப்பாவிகள் மேல் வழக்கையும் பதிகிறார்கள்.இன்னொரு மாநிலத்தில் இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அங்குள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்காமலே செல்கிறார்கள்.
பல காவல் நிலையங்களிலும் சில தனியார் இடங்களிலும் காவலர்கள் நடத்தும் மனிதவதை கூடங்கள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் இயங்குகிறது. உயரதிகாரியின் கட்டளை, உண்மையின் கடமை,தங்களின் மனசாட்சி, அரசியல் குறுக்கீடு, பணிச்சுமை என்று எத்தனையோ இன்னல்களை சந்தித்து வரும் காவல் பணியில் இருக்கும் ஒவ்வெருவரும் ஆறுச்சாமிகளாத்தான் வலம் வருகிறார்கள். இதன் காரணமாகவே நீதியை பல நேரங்களில் நிதியும் வன்முறையும் தீர்மானித்து விடுகிறது.

இன்னும் பேசுவேன் …

ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

Tuesday, 19 December 2017

பூப்பூவாய் பூரிப்பு

மனதோடு பேசுகிறேன்

4.காமம் சிதைந்தால் பாவம்
காமம் கடந்தால் ஞானம்

காமத்திலிருந்து கடவுளுக்கு என்று ஓஷோ பெயரில் ஒரு நூல் கடைகளில் கிடைக்கிறது. இந்த நூலை வாங்கினாலோ,படித்தாலோ கடவுளை அடையும் வாய்ப்பிருந்தால் நான்கூட முன்னமே இதைப்படித்து ஞானியாகி இருப்பேன். ஆனால்,உண்மை அப்படி எளிதாய் வாங்கும் கடைச்சரக்காய் இருக்கவில்லை என்பதோடு,அது படிப்பறிவால் வருவதும் இல்லை என்பதே, நிதர்சனம். காதலுக்கு கண்கள் உண்டு, காமத்திற்குதான் அது கிடையாது.சிறுமிகளை,சிறுவர்களை,மதகுருமார்களை,கன்னியாஸ்திரிகளை,வயதானவர்களை,துறவிகளை ஏன் புராணங்களில் கடவுள் என்று கூறப்படுவர்களை கூட இந்தக் காமநோய் சுழற்றி சுக்கலாக்கி இருக்கிறது. உன்னையும் என்னையும் விட்டு விடுமா என்ன?.
ஏட்டில் படித்தவன் சொல்வதையும் மனநல ஆராய்ச்சியாளன் சொல்வதையும் நாம் ஒரு போதும் கேட்க வேண்டியதே இல்லை.ஒவ்வெரு வீட்டிலும், மனித உடலிலும் கடவுளுக்கான கருவறையும்  கழிவுக்கான கழிவறையும் சேர்ந்தே இருக்கிறது.
இவற்றையே நாம் படிக்க வேண்டும்.  காமநோயால் பிடிக்கப்பட்டு மாபாதக செயல்களை செய்பவர்களை மிருகம் என்கிறோமே ஏன் தெரியுமா? மிருகத்திற்கு உணர்ச்சி மட்டுமே உண்டு அறிவு கிடையாது. மனிதனுக்கு இரண்டுமே உள்ளது ஆனாலும், அறிவை செயல்படுத்தாது உணர்ச்சி வழி செல்வதாலேயே சில மனிதர்கள் கீழான மிருக நிலையை ஏய்துகிறார்கள். இப்படி எதையாவது எழுதிவிட்டு நம்மை அறிவாளியாய் நினைத்துக் கொள்வது எளிது.ஆனால்,கேட்க யாருமே இல்லாத சூழலில் கூட நெட்டில் வரும் பிட்டுப்படத்தை பார்க்காமல் தன்னை தற்காக்கும் வாலிபப் பருவம் அரிது.கடவுளை தொழும் ஆலயங்களில் கூட தன்னை உரசிச்செல்லும் எதிர்பாலின ஸ்பரிசத்தை வெறுப்பது கடினம்.இளமையில் மனைவிக்கோ கணவனிற்கோ உடல்நிலையோ மனநிலையோ சரியில்லாத போதுகூட மற்றவர் தனது தேக உந்துதலை அடக்குதல் அரிது. என்னதான் அறக்கோட்பாடுகளை படித்தவராய் இருந்தாலும் நியாய உணர்வு மிக்கவராய் இருந்தாலும் தனது கழிவறையை கருவறையாக மாற்றும் நுட்பம் பலருக்கும்  கைவருவதில்லை.தனது தாயின் நடத்தையில் சந்தேகம் உள்ள ஆண்மகன் பிற்காலத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவான் என்கிறது ஒரு உளவியல் உண்மை,காமத்தை முறையான வழியில் முடிந்தவரை அனுபவித்து விடு காமம் கடந்து கடவுளாவாய் என்கிறது ஒரு தத்துவம், காம உணர்ச்சியை கடப்பது ஆகாத காரியம் அதனால் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள் ஆனால் வரம்புமீறி விடாதே என்கிறது ஒரு மதக்கொள்கை. யோகமும் ஒன்றை சொல்கிறது காமத்தை மட்டுமல்ல மனதின் அத்தனை ஆட்டத்தையும் நிறுத்த ஒரேஒரு வழியை ஓகம்  உபதேசிக்கிறது. அந்த வழியை முயன்ற முதல் நாளே நான் தேவ நிலையை அடைந்துவிட்டேன். தேவநிலை என்றால் ஒன்றுக்கும் உதவாமல் கல்லாய் சமைந்திருக்கும் நிலையல்ல. படைத்தலும் காத்தலும் அழித்தலும் கொண்ட மஹாநிலை அது. சிறுமை கண்டு நான் சீறுவேன் ஆனால், என் மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ள மாட்டேன்,பார்ப்பதற்கு பாமரன் போல தோன்றுவேன் ஆனால்,படித்தவன் ஞானத்தின் மூலத்தையே நான் நடுங்க வைப்பேன்,எனக்கு பிசாசின் குணமும், தேவனின் குணமும் அத்துபடி … அதனால் நான் பிசாசை வெறுப்பதும் இல்லை தேவனை துதிப்பதும் இல்லை.
அந்த மஹா ஞானத்தை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டுமானால் காத்திருங்கள் அடுத்தப்பகுதி வரும்வரை …!

பேசுவோம் …

-ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...