மனதோடு பேசுகிறேன்
4.காமம் சிதைந்தால் பாவம்
காமம் கடந்தால் ஞானம்
காமத்திலிருந்து கடவுளுக்கு என்று ஓஷோ பெயரில் ஒரு நூல் கடைகளில் கிடைக்கிறது. இந்த நூலை வாங்கினாலோ,படித்தாலோ கடவுளை அடையும் வாய்ப்பிருந்தால் நான்கூட முன்னமே இதைப்படித்து ஞானியாகி இருப்பேன். ஆனால்,உண்மை அப்படி எளிதாய் வாங்கும் கடைச்சரக்காய் இருக்கவில்லை என்பதோடு,அது படிப்பறிவால் வருவதும் இல்லை என்பதே, நிதர்சனம். காதலுக்கு கண்கள் உண்டு, காமத்திற்குதான் அது கிடையாது.சிறுமிகளை,சிறுவர்களை,மதகுருமார்களை,கன்னியாஸ்திரிகளை,வயதானவர்களை,துறவிகளை ஏன் புராணங்களில் கடவுள் என்று கூறப்படுவர்களை கூட இந்தக் காமநோய் சுழற்றி சுக்கலாக்கி இருக்கிறது. உன்னையும் என்னையும் விட்டு விடுமா என்ன?.
ஏட்டில் படித்தவன் சொல்வதையும் மனநல ஆராய்ச்சியாளன் சொல்வதையும் நாம் ஒரு போதும் கேட்க வேண்டியதே இல்லை.ஒவ்வெரு வீட்டிலும், மனித உடலிலும் கடவுளுக்கான கருவறையும் கழிவுக்கான கழிவறையும் சேர்ந்தே இருக்கிறது.
இவற்றையே நாம் படிக்க வேண்டும். காமநோயால் பிடிக்கப்பட்டு மாபாதக செயல்களை செய்பவர்களை மிருகம் என்கிறோமே ஏன் தெரியுமா? மிருகத்திற்கு உணர்ச்சி மட்டுமே உண்டு அறிவு கிடையாது. மனிதனுக்கு இரண்டுமே உள்ளது ஆனாலும், அறிவை செயல்படுத்தாது உணர்ச்சி வழி செல்வதாலேயே சில மனிதர்கள் கீழான மிருக நிலையை ஏய்துகிறார்கள். இப்படி எதையாவது எழுதிவிட்டு நம்மை அறிவாளியாய் நினைத்துக் கொள்வது எளிது.ஆனால்,கேட்க யாருமே இல்லாத சூழலில் கூட நெட்டில் வரும் பிட்டுப்படத்தை பார்க்காமல் தன்னை தற்காக்கும் வாலிபப் பருவம் அரிது.கடவுளை தொழும் ஆலயங்களில் கூட தன்னை உரசிச்செல்லும் எதிர்பாலின ஸ்பரிசத்தை வெறுப்பது கடினம்.இளமையில் மனைவிக்கோ கணவனிற்கோ உடல்நிலையோ மனநிலையோ சரியில்லாத போதுகூட மற்றவர் தனது தேக உந்துதலை அடக்குதல் அரிது. என்னதான் அறக்கோட்பாடுகளை படித்தவராய் இருந்தாலும் நியாய உணர்வு மிக்கவராய் இருந்தாலும் தனது கழிவறையை கருவறையாக மாற்றும் நுட்பம் பலருக்கும் கைவருவதில்லை.தனது தாயின் நடத்தையில் சந்தேகம் உள்ள ஆண்மகன் பிற்காலத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவான் என்கிறது ஒரு உளவியல் உண்மை,காமத்தை முறையான வழியில் முடிந்தவரை அனுபவித்து விடு காமம் கடந்து கடவுளாவாய் என்கிறது ஒரு தத்துவம், காம உணர்ச்சியை கடப்பது ஆகாத காரியம் அதனால் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள் ஆனால் வரம்புமீறி விடாதே என்கிறது ஒரு மதக்கொள்கை. யோகமும் ஒன்றை சொல்கிறது காமத்தை மட்டுமல்ல மனதின் அத்தனை ஆட்டத்தையும் நிறுத்த ஒரேஒரு வழியை ஓகம் உபதேசிக்கிறது. அந்த வழியை முயன்ற முதல் நாளே நான் தேவ நிலையை அடைந்துவிட்டேன். தேவநிலை என்றால் ஒன்றுக்கும் உதவாமல் கல்லாய் சமைந்திருக்கும் நிலையல்ல. படைத்தலும் காத்தலும் அழித்தலும் கொண்ட மஹாநிலை அது. சிறுமை கண்டு நான் சீறுவேன் ஆனால், என் மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ள மாட்டேன்,பார்ப்பதற்கு பாமரன் போல தோன்றுவேன் ஆனால்,படித்தவன் ஞானத்தின் மூலத்தையே நான் நடுங்க வைப்பேன்,எனக்கு பிசாசின் குணமும், தேவனின் குணமும் அத்துபடி … அதனால் நான் பிசாசை வெறுப்பதும் இல்லை தேவனை துதிப்பதும் இல்லை.
அந்த மஹா ஞானத்தை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டுமானால் காத்திருங்கள் அடுத்தப்பகுதி வரும்வரை …!
பேசுவோம் …
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment