I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மரமும் நானும்

Tuesday, 5 December 2017

மரமும் நானும்

மரங்களின் நடுவினிலே …

நீண்டு வளர்ந்த மரம்
ஒய்யார தென்னை மரம் 
ஆண்டுக்கு நாலு முறை
அழகாக காய்க்கும் மரம்
என் சுவாசம் சீராக்கும்
கிளை படர்ந்த வேப்ப மரம்
இலை கனி நரம்பெல்லாம்
மருந்தாகும் தெய்வ மரம்
இதமான காற்று தரும்
மன கலக்கம் மாற்றி விடும்
மரங்களின் வெளி மூச்சு
எனக்கது உள் மூச்சு
மரங்களின் உள் மூச்சு
நான் விடும் வெளி மூச்சு
உயிரோடு பிணைந்த சொந்தம்
மரம் உள்ள வரை வாழ்வு மிஞ்சும்
ஒகி புயல் வந்து தென்னை மரம்
சாய்த்த தென்று  கவலை யோடு
ஓடி வந்து கரம் பிடித்து தூக்கும் போது உறுதியாய் நின்ற வேம்பு
என் மீது விழுந்ததப்பா
மரங்களின் நடுவில் எனக்கு
மரணயோகம் வாய்த்ததப்பா …!

-ஏகப்பிரியன்

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...