வீட்டில் விளக்கேற்ற வேண்டியதின் அவசியம்
“விளக்கு எரியும் வீட்டில் எல்லா நலங்களும் பெருகும்” என்பது ஒரு பழமொழி.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(எதிர்மறை ஆற்றலை) ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கப்படும் எதிர் மறை ஆற்றலை தீப சுடர் எரித்து அழிக்கிறது.இதன் மூலம் நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
இருண்டது போல் தோன்றும்.
எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதன் மூலமே விளக்கேற்றுவதன் அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சூட்சும நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி அமைதியையும் குளுமையையும் தருகிறது.
சூட்சும நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுப்பதோடு பிரபஞ்ச ஆற்றலை கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சூட்சும நாடியை தூண்டிவிட உதவுகிறது.
வீட்டின் பின்கதவை மூடி விட்டு முன்கதவை திறந்து வைத்துக்கொண்டு விளக்கேற்ற வேண்டும்.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
கடலை எண்ணெயை மட்டும் விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது.
கிழக்கு முகமாக விளக்கேற்றினால் ஆனந்தம் பொங்கும்
மேற்கு முகமாக விளக்கேற்றினால் பணவரவு அதிகரிக்கும்
வடக்கு முகமாக விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் பெருகும்
தெற்கு முகமாக விளக்கேற்றக் கூடாது.
ஒற்றைப்படை எண்ணில் விளக்கேற்றுவதே மிகவும் நல்லது.
ஒரு திரி நினைத்த செயல்களில் வெற்றி.
மூன்று திரி அறிவார்ந்த,ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்கள்.
ஐந்து திரி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால் பொதுவாக அதிகாலை 4.30 முதல் 6.00 மணிக்குள்ளும் மாலை 4.00 மணி முதல் 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
விளக்கேற்றி பதினைந்து நிமிடம் முதல் ஒரிரு மணி நேரங்கள் தொடர்ந்து எரிய விடலாம். பிறகு விளக்கை வாயால் ஊதியோ கையால் தட்டியோ அணைக்கக்கூடாது. சிறிய மலர்,பித்தளை குச்சி போன்றவற்றை வைத்தே அணைக்க வேண்டும்.
குளித்து விளக்கேற்றிய இடத்தில் செய்யப்படும் பிராத்தனை எதுவானாலும் மிக விரைவில் நிறைவேறும்.
எந்த மதத்தை சேர்ந்தவர்களும் ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட விளக்கேற்றி வைக்கலாம்.
சூரியன் உதயமாகும் முன் வீட்டில் உள்ள கழிவு,கெட்ட எண்ணம்,துன்பம் போன்ற எதிர்மறை ஆற்றல் விலகவும், சூரியன் மறைந்ததும் வீட்டிற்குள் வரும் எதிர்மறை ஆற்றலை விலக்கிக்கொள்ளவும்
அந்தந்த நேரத்தில் விளக்கேற்றுவது உதவும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருந்த ஒரு தாய் …
மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.
இதைப்பார்த்த தாய் தன்மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் பற்றி கேட்க ”உனக்கு இதெல்லாம் புரியாதம்மா.
எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.
ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.
மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் இருவரும் வீட்டுக்கு வரவேண்டும் என்றும் கூறினார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக இருவரும் சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:-
மெழுகுவர்த்தி தீபம் எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.
ஆஸ்துமா, மார்புபுத்து நோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.
மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி குளித்து விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீட்டில் அமைதியும் ஆரோக்கியமும் வெற்றியும் ஒளிறும் என்பதோடு முன்னோர் ஞானம் பாதுகாப்பையும் தரும்.
அறிந்துணர்வோம் அறிவில் உயர்ந்துணர்வோம்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
நலம் பெருகட்டும் …
தொகுப்பு - aumherbals.blogspot.com
No comments:
Post a Comment