I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: 2021

Saturday, 23 October 2021

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம்

" உணர்வுநிலை உருவம்
உணர்வற்ற நிலை அருவம்
உணர்வு கடந்த உணர்வற்ற
நிலை தியானம் "

எப்பொழுதும் எதையாவது ஒன்றையோ பலதையோ
சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே மனதின் வேலை. மனம் என்பது எண்ணக்குவியல் தோன்றும்
இடத்தின் பெயர்.!
சூரியவெப்பம் விநாடிக்கு ஒரு லட்சத்து எம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமிக்கு வருவதாக
கண்டறிந்து விட்டனர். மனதின் வேகம் என்னவென்று இதுவரை
திட்டவட்டமாக கூற முடியவில்லை.!
மனதின் வேகம் மனிதனிற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே
இருப்பதாலேயே  அது
சாத்தியப்படவில்லை.!
நாம் உண்ணும் உணவில் உள்ள மிக நுண்ணிய சத்துப்பகுதிகளை மூளை தனது உணவாக எடுத்துக்கொண்டு எண்ணத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்கிவருகிறது.!
மனதில் தோன்றும் எண்ணம் ஒரு குரங்கிற்கு ஒப்பானது.! இந்த எண்ண அலைகளை நிறுத்திவிட்டால் இதற்காக உடல் இதுவரை செலவழித்து வந்த சக்தி உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்று உடலை, உள்ளுறுப்புகளை, நரம்புமண்டலங்களை பலப்படுத்தும்  வேலைக்கு பயன்படும்.!
எண்ணம் மூன்றுவிதமாக இடைவிடாது மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.! கடந்தகால நிகழ்வுகளின் தொடர்ச்சி, நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால
எதிர்ப்பார்ப்புகள் என்று இயங்கிக் கொண்டே இருக்கும்.! இதற்குள் ஏமாற்றம், பயம், அகங்காரம்,
நம்பிக்கை,  வெற்றி,உற்சாகம், சோர்வு போன்ற எண்ணற்ற உணர்வுகளின்  பதிவுகள் தொடர்ந்து மனதை ஏதோ ஒரு நிலையில் செலுத்திக் கொண்டே இருக்கும்.! விளைவு இரவில் உடல் உறங்கும்போது  ஏன் மனமே உறங்கும் போது கூட எண்ண அலைகள்  உறங்காது இடைவிடாது பணி செய்துகொண்டே இருக்கும்.!
இதனால் தான் தூக்கத்தில் உளறுதல், சிரித்தல். நாம் ஏதாவது பணியில் இருக்கும் போது எங்கோ கேட்ட பாடல் நமக்குள்ளே
ஒலித்துக் கொண்டிருத்தல், காரணமே இல்லாமல் தோன்றும் இனம் புரியாத பய உணர்வு, திடீர் மகிழ்ச்சி போன்ற பல்வேறு  உணர்வுகளும் எண்ணங்களும் நமக்குள் தோன்றுகின்றன.! இது போன்ற எண்ணங்களை முறைப்படுத்தி  எண்ணங்களை ஒரே இலக்கை நோக்கி செலுத்தவும், எண்ணம் கடந்த நிலையான ஒன்றுமில்லா ஒன்றில் நிலைக்க செய்யவும் நமக்கு இருக்கும் ஒரே வலிமையான கருவி தியானம் மட்டும் தான்.! பக்தி,
மந்திர உட்சாடனம்,சேவை செய்தல்,தனது கடமைகளை தவறாது செய்தல் போன்ற இன்னும் எண்ணற்ற வழிகள் மனதை ஒரே நேர்கோட்டில் செலுத்த உள்ளன. ஆனால், அவையாயும் தியானத்தை விட மிக கீழான நிலையில் உள்ள தந்திரங்களே.! ஏனெனில்,
தியானத்தை தவிர மற்றவை அனைத்தும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணக்குவியல்களை மனதில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.!ஆனால், தியானத்தில் நிலைபெற்ற மனதில் எண்ணமே நின்று அதற்கடுத்த நிலையான சமாதிநிலை தோன்றும். சமாதி நிலையை கடக்கும் ஆற்றல் உள்ள மனமே சம்யமா என்னும் மறைபொருளை உணரும் உச்ச ஆற்றலை பெறுகிறது.!
தியானத்திற்கு பிறகு
சமாதி,சம்யமா என்ற இரண்டு நிலைகள் இருப்பது போலவே
தியானத்திற்கு முன்
பிரத்தியாகாரம், தாரனை என்ற இரண்டு நிலைகள் உள்ளன.!
அதாவது மனதை புலன்வழி செல்லாமல் தடுத்து அதை உள்முகமாக திருப்புதல் பிரத்தியாகாரம் எனப்படும்.
அப்படி உள்முகமாக திருப்பிய ஆற்றல் அதே நிலையில் 12 விநாடிகள் நிற்பது தாரனை.  12 தாரனையின் கால அளவு ஒரேப்பொருளை சிந்திப்பது தியானம். ஒரேப்பொருளை சிந்தித்த மனது, சிந்தனை இரண்டும் ஒன்றாகி ,லயித்து அப்படியே நின்றுவிடுவதே சமாதி. அப்படியே நின்றுவிட்ட ஆற்றல் பரம்பொருளான பிரபஞ்ச ஆற்றலுக்குள் நுழைந்து அதன் உண்மை தன்மையை கண்டறிவதே சம்யமம். இதுவே தியானத்தின் உச்சநிலை. இதுவே ஞானம்.! சிலர் இந்தநிலைக்கு செல்வதற்கான முயற்சியில் அரைகுறை ஞானத்துடன் மனப்பிரழ்வு ஏற்பட்டு மனநோயாளி ஆவதும் உண்டு.!
சரி நாம் அதற்குள் போக வேண்டாம். சிந்தனையை கடந்து
தியான நிலைக்கு போவதை மட்டும் பார்ப்போம்.! எந்த எண்ணம்
மனதில் உதித்தாலும் அதை 12 விநாடி நேரத்திற்குள் கடந்துவிட்டால் எண்ணம் நம்மை விட்டு போய்விடும். 12 விநாடிகள் கடந்தும் ஏமாற்றம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதை நாம் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்தாலும் அந்த எண்ணம் நமக்குள் ஆழமாக ஊடுருவி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிடும்.!
அதனால் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வெருவரும் வீணான எந்த
சிந்தனைகளையும் பனிரெண்டு 
விநாடிகளுக்குள் கடந்து  தங்களுக்கு பிடித்த கடவுள், இயற்கைகாட்சிகள்,மந்திரங்கள் போன்றவற்றையோ அல்லது மூக்கு நுனியையோ தொடர்ந்து  120 - 144 விநாடி முதல்  12 நிமிடம் வரை  மனக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தால் தியானநிலை உருவாகும்.! இப்படி ஒரேப் பொருளை நாம் நினைக்க
ஆரம்பிக்கும் போது இதுவரை பல எண்ணங்களில் செலவாகி வந்த நமது ஆற்றல் ஒரு முகமாவதால் 
பூரண ஓய்வு, உடல் ஆரோக்கியம், நரம்பு மண்டல ஆரோக்கியம், நாள்ப்பட்ட பிணியிலிருந்து விடுதலை எண்ணிய குறிக்கோளில் வெற்றி போன்றவற்றில் நாம்
விரும்பிய  எதையும் அடையலாம்.!   
இந்த உண்மையை உணர்ந்ததால் தான்  மகாகவி பாரதியார்
"தமிழா பலநாள் சாப்பிடாமல் இருந்தாலும் இரு. ஆனால், ஒருநாள் கூட தியானம் செய்யாமல் இருக்காதே "என்றார்;
வாருங்கள்,எண்ணங்களிலிருந்து விடுதலைப்பெற்று பூரண
அமைதி பெற சுகமாக தியானம்
செய்வோம்.!

---ஏகப்பிரியன் DYT----

யோகா & இயற்கை
மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் 💐

சுத்தம் சுகம் தரும்

ஆயிரம் நோய் தரும்
அபூர்வ இயந்திரம் ⛹�

மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்கேட்டு சிக்கலாகும்.! பொதுவாக பெருங்குடலில் நீர் சத்து குறைவதாலும் பெருங்குடல் பலவீனத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் பெருங்குடலில் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.!  ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ளுதல்,  பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்,  தினமும் யோகாசனம், உடற்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்களை கடைப்பிடித்தால்  போதும், Mucin என்ற திரவம் சுரப்பதோடு பெருங்குடல் பலவீனமும் நீங்கி  மலச்சிக்கல்  சரியாகிவிடும்.! தினமும் திராட்சை பழம், பேரிச்சம் பழம், பப்பாளிப்பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.! அதை விடுத்து தினமும் மாத்திரைகளை போடுதல், கடுக்காய் சூரணங்களை சாப்பிடுவது, எனிமா எடுத்தல் போன்றவை அந்த நாளில் கழிவை வெளியேற்ற உதவுமே தவிர Regular-ராக மலச்சிக்கல் சரியாக உதவாது.!  தினமும் எனிமா எடுக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது ஏதேனும் முற்றிய நோய் இருப்பவர்களுக்கு நோய் தீர்க்கும் ஒரு வழியாக அமையும். ஆனால், மலச்சிக்கலுக்காக மட்டுமே தினமும் எனிமா எடுத்துக்கொள்வது என்பது பெருங்குடலின் இயல்பான ஆற்றலை சிதைத்து பின் எப்பொழுதும் கழிவு முழுமையாக  எனிமா இல்லாமல் வெளியேறாத  அவஸ்தை  ஏற்படும்.!மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் மூலநோய்,பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கும்  இன்னொரு முக்கிய காரணம் வயிறு மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற சமிக்ஞையை வழங்கும் போது அதை அலட்சியம் செய்து வேறு பணிகளை கவனித்துவிட்டு, பிறகு மேலும் ஒன்றிரண்டு வேளை உணவையும் உண்டு விட்டு பிறகு  அடுத்த வேளையோ அடுத்தநாளோ மலம் கழிக்க சென்றால்  கண்டிப்பாக கழிவு வெளியேற சிரமாகிவிடுவதோடு ஆசனவாயில் எரிச்சல், கட்டி, மூலமுளை தோன்றுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, சொரியாஸிஸ், தேமல், அரிப்பு  போன்ற பல்வேறு தோல் நோய்களும் ஏற்படும். இதற்கு காரணம் நாம் சாப்பிடும்  உணவு 3 முதல் 5 மணிநேரத்தில் பெருங்குடலின் இறுதிப்பகுதியான மலவாயின் மேற்பகுதியில்  Cecum  என்ற கழிவை தேக்கி வைக்கும் பகுதிக்கு வருகிறது. இங்கு பல்வேறு இரசாயண மாற்றம்  நடைபெற்று கழிவு முறையாக வெளியேறும். இந்த நேரத்தில் சீகத்தில் உள்ள கழிவுகள் உறுப்பின் பலவீனம் அல்லது மலம் கழிக்க சோம்பல் போன்ற காரணங்களால் கழிவு வெளியேறாது போனால் சீகம் மலத்தில் உள்ள கழிவுநீர்த்தன்மையை வெளியேற்றிவிட்டு மலத்தை சாறுபிழிந்த பழச்சக்கையைப் போல  தன்னுள் சேமித்து வைத்து விடும். மலத்தில் இருந்து பிழியப்பட்ட கெட்ட விசமான நீர் மலவாயோடு வெளியேற வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இரத்த சுழற்சியோடு சேர்ந்து கலக்க ஆரம்பிக்கும். இந்தநிலையில் இதனால் இரத்தம் மாசுப்பட்டு உடலுக்குள் உள்ள எல்லா உறுப்புகளையும் கெடுக்கிறது. மேலும் வயிற்றில் கெட்டக்காற்று , இரத்தத்தில் கிருமி, கட்டி, புற்றுநோய், மஞ்சள்காமாலை,தோல்நோய்கள்  போன்ற பல்வேறு  நோய்கள் உருவாக இதுவும் ஒரு முக்கிய காரணமாகி உடல் ஆரோக்கியத்தை முழுவதும் சிதைத்துவிடும்.!
தானாக தினமும் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும் ஒவ்வெரு மனிதனும் வருங்காலத்தில் பெரும் பெரும்  நோய்களால் அவதிப்படுவது உறுதி.! ஆகவே குழந்தைப் பருவம் முதலே சரியான முறையில் உடல் கழிவை வெளியேற்ற அனைவரையும் பழக்கவேண்டும்.!  
அதற்கு முறையான யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு முறை போன்றவையே  முழுமையான தீர்வாக
அமைகிறது.!

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
Mobile & whatsapp
9629368389

Wednesday, 21 July 2021

மாஸ்க் அரசியல்

https://m.facebook.com/story.php?story_fbid=1254468951667563&id=100013134091933&sfnsn=wiwspmo&d=n&vh=i

Sunday, 11 July 2021

சர்வரோக நிவாரணி

https://m.facebook.com/story.php?story_fbid=1247305942383864&id=100013134091933&sfnsn=wiwspmo&d=n&vh=i

Tuesday, 9 March 2021

சர்வரோக நிவாரணி

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.,இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்.

Tuesday, 2 March 2021

மகிழ்ச்சியாய் இரு

குழந்தையின்மைக்கு:-

தே.பொருட்கள்..
ஆலம்விதை - 200 கிராம்
அரசம்விதை – 200 கிராம்
நெருஞ்சில் – 200 கிராம்
சந்தனம் – 200 கிராம்
கோரைக்கிழங்கு – 200 கிராம்
பறங்கிப் பட்டை – 200 கிராம்

ஆகியவற்றை எடுத்து, பசும்பால் விட்டு அவித்து உலர்த்தித் தூள் செய்து கொள்ளவும். இதைப் பாலுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் உண்டுவர உயிரணுக்கள் விருத்தியாகி, உங்கள் சந்ததியும் விருத்தியாகும்.

உறவின் பொருட்டு உணர்வை எழுப்ப, இத்தூளுடன் சம அளவு ஜாதிக்காய் தூள் சேர்த்துச் சாப்பிட, அளவில்லா இன்பம் சேர்க்கையில் உண்டாகும்.

Saturday, 27 February 2021

பூண்டு தேன்

#நீண்டநாள்
#ஆரோக்கியம்தரும்
#இரகசியஉணவு

*இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!

-இணையப்பகிர்வு

Friday, 26 February 2021

சூப் குடிங்க பாஸ்

பெரும்பாலான வயதுக்காரர்கள் சாப்பிட வேண்டிய சூப் வகைகள் பற்றிய தகவல்கள்

கொழுப்பைக்கரைக்கும் கொள்ளு_சூப்

தேவையானவை:

கொள்ளு – 4 டீஸ்பூன், மிளகுத் தூள், சீரகத் தூள் .தலா அரை டீஸ்பூன்,
பூண்டு பல் – 5,
தக்காளி – 2, பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :வெறும் கடாயில் கொள்ளைப் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு, அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதில், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள்,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

பயன்கள் :கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் தேவையற்ற நீர், நச்சுக்களை எடுத்துவிடும். புரதம் நிறைந்து இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும்.

நினைவுத்திறனுக்கு வல்லாரை_சூப்

தேவையானவை:

வெங்காயம் – 2 (பெரியது),
மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்,
பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள் :நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை_சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு,
சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3,
தேங்காய்ப் பால் - அரை கப்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள் :உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.

என்றும் ஆரோக்கியமான தகவல்கள் நமது முன்னோர்கள் வழி தகவல்கள் என்றும் ....

Wednesday, 24 February 2021

தடுப்பூசி தேவையா?

தடுப்பூசிக் குறித்து நேரடி விவாதத்துக்குத் தயார் – மருத்துவர். புகழேந்தி அறிவிப்பு.

தடுப்பூசிகள் குறித்துத் தமிழகமெங்கும் வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றது. மக்கள் முன்னிலையிலோ, மருத்துவர்கள் முன்னிலையிலோ இதுக்குறித்துத் தான் நேரடி விவாதத்துக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்குமாறு இன்று தொலைப்பேசி உரையாடலின்போது மருத்துவர். புகழேந்தி தெரிவித்தார். தேதி இடம் குறித்து மருத்துவர். புகழேந்தியிடம் கலந்து முடிவு செய்யலாம். யார் இந்தப் புகழேந்தி என்று ஒரு மருத்துவர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். புகழேந்தியை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறுகுறிப்பு.

கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர். புகழேந்தி எம்பிபிஎஸ் படிக்கும்போது தங்கப்பதக்கம் பெற்றவர். சமூகநல அக்கறையோடு கல்பாக்க அணுக்கதிர் வீச்சுக் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருபவர். சிற்றூர் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கில் வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்தவர். மனசாட்சிக்கு விரோதமாகக் கோடிகளைச் சுருட்டும் மருத்துவர்கள் நடுவில் இவர் ஒரு ‘மக்கள் மருத்துவர்’. இன்றளவும் மருந்துகளையும் உள்ளடக்கி மக்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குபவர். சுருக்கமாகச் சொன்னால் ஐஏஎஸ் அதிகாரிகளுள் எப்படி ஒரு ‘சகாயமோ’, அப்படி மருத்துவர்களில் ‘புகழேந்தி’. இவரைப் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பாசு கூறிய கருத்து: “மருத்துவர் புகழேந்தி ஒரு முட்டாள். ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் இதுபோன்ற முட்டாள்கள் நமக்கு வேண்டும்”.

சிலர் தடுப்பூசிக்கு எதிரான கேள்விகளை ‘அறிவியலுக்கு முரண்பாடானதாக’ மாற்றியமைக்க முயலுகின்றனர். மக்களுக்கான மருத்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. மருந்து நிறுவனங்களின் செலவில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போகும் மருத்துவர்கள் வேண்டுமானால் இதுகுறித்துக் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் நாம் அனைத்து விதத்திலும் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. அய்யங்கள் அனைத்தையும் தெளிவுப்படுத்துங்கள் எனக் கேட்கிறோம். கர்நாடகாவில் பெற்றோர்கள் தடுப்பூசி திட்டத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வர் விருப்பப்பட்டவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார் என செய்திகள் வருகிறது.

சமூகநலம் குறித்து ஓர் அய்யம் ஏற்படும்போது அதுகுறித்துக் கேள்வி கேட்கும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. ஆனால் உடனே நீ ஒரு மருத்துவ அறிஞரா எனக் கேட்கிறார்கள். சமூகநீதியை குறித்துக் கேள்வி எழுப்பிய பெரியாரை ‘அரசியல் அறிவியல்’ படித்தவரா என்றும், கல்விக்கூடங்களைத் திறந்த காமராசரை ‘கல்வியியல்’ படித்தவரா என்றும் கேள்விக் கேட்பது போன்ற அபத்தம் இது. துறை சார்ந்தவர்கள் அமைதிக் காப்பதால் மற்றவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் ஒரு மருத்துவரே விவாதத்தைச் சந்திக்க முன்வந்திருக்கிறார். வரவேற்போம்!

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...