I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: சூப் குடிங்க பாஸ்

Friday, 26 February 2021

சூப் குடிங்க பாஸ்

பெரும்பாலான வயதுக்காரர்கள் சாப்பிட வேண்டிய சூப் வகைகள் பற்றிய தகவல்கள்

கொழுப்பைக்கரைக்கும் கொள்ளு_சூப்

தேவையானவை:

கொள்ளு – 4 டீஸ்பூன், மிளகுத் தூள், சீரகத் தூள் .தலா அரை டீஸ்பூன்,
பூண்டு பல் – 5,
தக்காளி – 2, பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :வெறும் கடாயில் கொள்ளைப் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு, அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதில், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள்,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

பயன்கள் :கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் தேவையற்ற நீர், நச்சுக்களை எடுத்துவிடும். புரதம் நிறைந்து இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும்.

நினைவுத்திறனுக்கு வல்லாரை_சூப்

தேவையானவை:

வெங்காயம் – 2 (பெரியது),
மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்,
பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள் :நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை_சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு,
சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3,
தேங்காய்ப் பால் - அரை கப்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள் :உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.

என்றும் ஆரோக்கியமான தகவல்கள் நமது முன்னோர்கள் வழி தகவல்கள் என்றும் ....

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...