நான்_தனித்திருக்கிறேன் …
A என்பான் அயலகத்தில் இருந்து திரும்பியவன்
B என்பான் அவனின் தோரோட்டி அவனுக்கு எதையேனும்
விற்றவன் அவனோடு கடையில் உரசி நின்றவன்
C என்பான் அவன் உறவுகள் உடன் பிறவா நட்புகள்
D என்பான் நானேதான் தனித்திருப்பவன்
எனினும் மிக அவசியம் கருதி வெளியே வந்தால்
ஏயோடோ பியோடோ சியோடோ நெருங்குவேன்
எல்லோரும் பெருந்தொற்றின் கூட்டாளிகளே …
உயிர்க்காற்றிலும் பரவுகிறது என்பவன் சிலர்
வெயில் மூலம் பரவுகிறது என்றான் ஒரு மேதாவி
அவன்கள் தொட்ட இடமெல்லாம் துப்பிய எச்செல்லாம்
தும்மிய காற்றெல்லாம் வைரஸ் என்றொரு புரிதல்
ஏற்கனவே காய்ச்சலை தேட ஒரு குழு அமைத்து
வீதிவீதியாய் அலைந்து தண்ணீர் தொட்டியிலும்
சிரட்டையிலும் குளிர்பதன பெட்டியிலும்
கொசுவின் முட்டையை கண்டு ஒழிக்க
ஒப்பந்தம் செய்துகொண்ட அரசு
இது உயிர்க்கொல்லி என்று மரண பயம்
ஏற்றுகிறது வீதிக்கு செல்பவனை
இரும்புக்கரம் கொண்டு தூற்றுகிறது …
ஏ அயலகத்தில் இருந்து வந்த ஏயை தடுக்காமல்
ஒரு தேசத்தையே தடுக்கிறாயே என்கின் நோய்
உடனே தெரியாது பதினைந்து நாள் வரை கெடுவுண்டு
அதுவரை அவனை தனிமையில் இருக்கக்கூறி
அனுப்புவோம்.அவன் அவ்வாறு இருக்காமல்
நோயை பரப்பி வருகிறான் என்கிறார் …
இங்கிலாந்து சென்று வந்த கனிகாவின் விருந்தில்
இந்தியாவின் எம்பியும் முன்னாள் முதல்வரும்
பெரும்பெரும் தலைகளும் கலந்து கொண்டனரே
அவர்கள் பின்னால் பாராளுமன்றம் சென்றனரோ
அதன் மூலம் பாரெல்லாம் பரப்பினரோ?
தணிகாச்சலம் என்றொருவன் தனியாக
கதறுகிறான் மூன்றே நாளில் இந்நோயை
முழுதாக அகற்றுவாராம் அதையெல்லாம்
செவிமடுக்க அரசுக்கு வழியில்லை
நேயெதிர்ப்பு குறைவதல் நோய்த்தொற்றும்
என்றவனும் மூலிகையை தின்றால் நோய்
குறையும் என்றவனும் போலியாய் போனார்கள்
கைகழுவு என்றவனும் முகமூடி அணி என்றவனும்
மருத்துவ விஞ்ஞானியாய் ஆனார்கள்
கருப்புத்துண்டு போட்ட பெரியாரின் சீடனொருவன்
இங்கு இருபத்தஞ்சி கோடி பேருக்கு இந்நோய்
தொற்றுமென்றே ஆருடம் கூறுகிறான்
அவனவனுக்கு தெரிந்த அனைத்தையும்
கொட்டி விட்டார் இந்த குப்பையால்
என் மனம் பதைப்பதை எவருமே அறிகிலார்
ஏர் இந்தியாவை விற்ற நேரம்
ஏர்போட்டை மூடியிருந்தால்
ஏயால் பரவிய நோய் ஏமாந்து போயிருக்கும்
இதை உருவாக்கியவன் சீனா என்றவனும்
இஸ்ரேல் என்றவனும் ஏமாந்து போனார்கள்
உருவாக்கியவன் கூறுவதை கவனமாய் கேளுங்கள்
பெரியம்மையை ஒழித்தது போல் போலியோவை
அழித்தது போல் இந்த பெருந்தொற்றையும்
அழிக்க இந்திய உதவ வேண்டும் என்று
உலக ஆரோக்கிய கழகம் கூறுகிறது
அவ்வாறாயின் ஏற்கனவே ஒழிந்த அவ்வியாதிக்கு
இன்றும் நம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போல்
நாளை ஒழியப்போகும் covid 19 க்கும்
அவர்களுக்கு ஒரு தடுப்பூசி ஒன்று போட்டுக்கொள்கிறோம்
இருபதோடு இருபத்தொன்று அவ்வளவுதானே
இதற்காக ஏனய்யா இருபது நாள் தடைக்காலம்?
---ஏகப்பிரியன்-----