ஆயிரம் நோய் தரும்
அபூர்வ இயந்திரம் ⛹�
மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்கேட்டு சிக்கலாகும்.! பொதுவாக பெருங்குடலில் நீர் சத்து குறைவதாலும் பெருங்குடல் பலவீனத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் பெருங்குடலில் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.! ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ளுதல், பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், தினமும் யோகாசனம், உடற்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்களை கடைப்பிடித்தால் போதும், Mucin என்ற திரவம் சுரப்பதோடு பெருங்குடல் பலவீனமும் நீங்கி மலச்சிக்கல் சரியாகிவிடும்.! தினமும் திராட்சை பழம், பேரிச்சம் பழம், பப்பாளிப்பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.! அதை விடுத்து தினமும் மாத்திரைகளை போடுதல், கடுக்காய் சூரணங்களை சாப்பிடுவது, எனிமா எடுத்தல் போன்றவை அந்த நாளில் கழிவை வெளியேற்ற உதவுமே தவிர Regular-ராக மலச்சிக்கல் சரியாக உதவாது.! தினமும் எனிமா எடுக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது ஏதேனும் முற்றிய நோய் இருப்பவர்களுக்கு நோய் தீர்க்கும் ஒரு வழியாக அமையும். ஆனால், மலச்சிக்கலுக்காக மட்டுமே தினமும் எனிமா எடுத்துக்கொள்வது என்பது பெருங்குடலின் இயல்பான ஆற்றலை சிதைத்து பின் எப்பொழுதும் கழிவு முழுமையாக எனிமா இல்லாமல் வெளியேறாத அவஸ்தை ஏற்படும்.!மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் மூலநோய்,பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கும் இன்னொரு முக்கிய காரணம் வயிறு மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற சமிக்ஞையை வழங்கும் போது அதை அலட்சியம் செய்து வேறு பணிகளை கவனித்துவிட்டு, பிறகு மேலும் ஒன்றிரண்டு வேளை உணவையும் உண்டு விட்டு பிறகு அடுத்த வேளையோ அடுத்தநாளோ மலம் கழிக்க சென்றால் கண்டிப்பாக கழிவு வெளியேற சிரமாகிவிடுவதோடு ஆசனவாயில் எரிச்சல், கட்டி, மூலமுளை தோன்றுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, சொரியாஸிஸ், தேமல், அரிப்பு போன்ற பல்வேறு தோல் நோய்களும் ஏற்படும். இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவு 3 முதல் 5 மணிநேரத்தில் பெருங்குடலின் இறுதிப்பகுதியான மலவாயின் மேற்பகுதியில் Cecum என்ற கழிவை தேக்கி வைக்கும் பகுதிக்கு வருகிறது. இங்கு பல்வேறு இரசாயண மாற்றம் நடைபெற்று கழிவு முறையாக வெளியேறும். இந்த நேரத்தில் சீகத்தில் உள்ள கழிவுகள் உறுப்பின் பலவீனம் அல்லது மலம் கழிக்க சோம்பல் போன்ற காரணங்களால் கழிவு வெளியேறாது போனால் சீகம் மலத்தில் உள்ள கழிவுநீர்த்தன்மையை வெளியேற்றிவிட்டு மலத்தை சாறுபிழிந்த பழச்சக்கையைப் போல தன்னுள் சேமித்து வைத்து விடும். மலத்தில் இருந்து பிழியப்பட்ட கெட்ட விசமான நீர் மலவாயோடு வெளியேற வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இரத்த சுழற்சியோடு சேர்ந்து கலக்க ஆரம்பிக்கும். இந்தநிலையில் இதனால் இரத்தம் மாசுப்பட்டு உடலுக்குள் உள்ள எல்லா உறுப்புகளையும் கெடுக்கிறது. மேலும் வயிற்றில் கெட்டக்காற்று , இரத்தத்தில் கிருமி, கட்டி, புற்றுநோய், மஞ்சள்காமாலை,தோல்நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் உருவாக இதுவும் ஒரு முக்கிய காரணமாகி உடல் ஆரோக்கியத்தை முழுவதும் சிதைத்துவிடும்.!
தானாக தினமும் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும் ஒவ்வெரு மனிதனும் வருங்காலத்தில் பெரும் பெரும் நோய்களால் அவதிப்படுவது உறுதி.! ஆகவே குழந்தைப் பருவம் முதலே சரியான முறையில் உடல் கழிவை வெளியேற்ற அனைவரையும் பழக்கவேண்டும்.!
அதற்கு முறையான யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு முறை போன்றவையே முழுமையான தீர்வாக
அமைகிறது.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
No comments:
Post a Comment