I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நீடூழி வாழ்க

Thursday, 8 June 2017

நீடூழி வாழ்க

*தமிழ் ஞானம்*

வெண்பா : 7
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

விளக்கம்
எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.!
நோய்கள் எல்லாம் உள்ளே புகுந்து ஆட்டம்போட ஆரம்பித்துவிட்டன.  இதனால் அந்நோய்களின் மூலம் நாம் பல வகைகளில் மருத்துவரிடம் பணத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்.

நோய்கள் நமது உடலினுள் வரவிடாமல் தடுக்கவும், வந்த நோய்களை விரட்டவும் ஆரோக்கியமான மற்றும் ஊனமற்ற குழந்தைகளை இந்த சமுதாயத்திற்கு வழங்கவும், மற்றும் மனித ஆயுள் முழுமை 120 ஆண்டுகள் வாழவும் இந்த யோகப்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியப்படுகின்றன.

ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள், தற்பொழுது மனித ஆயுள் 60 -70 ஆக உள்ளது. இதையும் மீறி வாழும் மனிதர்களை மக்கள்  கண்டால் ஆச்சா்யமாக பார்க்கின்றனா்.

இதனை மாற்ற யோகசன பயிற்சியால் மட்டுமே முடியும்.!

-இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...